பாலபாரதியின் இயலாமையும் பாலாவின் பார்ப்பன ஜல்லியும்
நண்பர் பாலபாரதி சமீபத்தில் ராமேசுவரம் கோயிலில் காணப்படும் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் பாகுபாட்டைப் பற்றியும் அதன் அடையாளமாய் ராமேசுவரம் மடப்பள்ளியில் பார்ப்பனரல்லாதார் இங்கே நுழையக்கூடாது என்னும் அறிவிப்புப் பலகையையும் புகைப்படம் எடுத்து வெளியிட்டிருந்தார்.
http://balabharathi.blogspot.com/2007_03_01_archive.html

ஆனால் இது தொடர்பான உரையாடல்களை வளர்த்தெடுத்துச்செல்ல வேண்டிய அவர் 'எதற்கு வம்பு' என்று நினைத்தாரோ என்னவோ, 'பொறுப்பாக' பின்னூட்டப் பெட்டியை மூடிவிட்டுப் போய்விட்டார். இதைத் தொடர்ந்து தோழர்.லக்கிலுக் 'செருப்பாலடி' என்று போட்ட பதிவு பல 'அப்பாவிப் பார்ப்பனர்க'ளின் மனதைப் புண்படுத்துகிறது என்று நினைத்தோ என்னவோ 'என்றும் அன்புடன் பாலா' என்ற நண்பர் தன்னுடைய பதிவில் இரண்டு கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.

http://balaji_ammu.blogspot.com/2007/04/321.html

1. ஆட்சியில் இருந்து கொண்டிருப்பது சமூக நீதி காக்கும் அரசு தானே, அதுவும் 40 வருடங்களுக்கு மேலாக.. கோவில் மற்றும் அதை நிர்வகிக்கும் அறநிலையத் துறை எல்லாம் இவர்கள் கையில் தானே இருக்கிறது.. அப்புறம் இந்த போர்டை அகற்றவோ அல்லது அப்படி எழுதி வைத்தவர் மீது நடவடிக்கை எடுக்கவோ ஏன் துப்பில்லை ?

2. இதை மெனக்கெட்டு போட்டோவெல்லாம் எடுத்து வந்து பிளாகில் பதிப்பித்து விவாதிக்கும் பதிவர் திலகங்கள், பின்னூட்டச் சக்ரவர்த்திகள் ஆகியோர் "உன் ஆள்" தான் அதை வைத்தான் என்று வெட்டிக் கூச்சல் போட்டு பிலிம் காட்டுவது தவிர அந்த மாதிரி துவேஷம் வளர்க்கும் போர்டை அகற்றவும், அதை வைத்தவரை அடையாளம் கண்டு தண்டிக்கவும், அதனால் சமூக நீதி காக்கவும் செய்ய ஏதேனும் துரும்பையாவது கிள்ளிப் போட்டார்களா ?


நாற்பது ஆண்டுகளாக ஆண்டுகொண்டிருப்பவை சமூகநீதி அரசுகளா என்கிற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும். கோயில் தொடர்பான விவகாரங்களில் அரசு தலையிடுவதற்கான வரம்புகள் என்ன? 'தீண்டாமை என்பது கிரிமினல் குற்றம்' என்று நமது பாடப்பொத்தகங்களில் முதல் பக்கத்தில் இருந்தாலும் சட்டமாகவே ஆக்கப்படாலும் 'பார்ப்பனர் தவிர வேறு யாரும் அர்ச்சகர்கள் ஆகக்கூடாது' என்பதுதானே சற்றுமுன் வரை இருந்த நடைமுறை நியதியாக இருந்தது?

"தீண்டாமை என்பது ஷேமகரமானது" என்று எழுதிய கிழட்டு ஜந்துதானே 'இங்கு காஞ்சி பரமாச்சார்யாவாகவும் நடமாடும் தெய்வமாகவு'மிருந்தது? கொலைக்குற்றவாளியாக இருந்தபோதும் போலீஸ் அதிகாரி பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்ததால்தானே ஜெயேந்திரன் அரசு வாகனத்தில் ஏற மறுத்தான்? ஒரு கிரிமினல் வாழை இலையில் பேள்வதிலிருந்து அவனது பார்ப்பன நடவடிக்கைகள் அனைத்தையும் தமிழக அரசும் நீதிமன்றமும் போலீசும் அனுமதிக்கத்தானே செய்தன? இந்த லட்சணத்தில் 'ஜெயேந்திரனை தமிழக அரசு மரியாதையாக நடத்த வேண்டும்' என்றுதானே மன்மோகன்சிங்கும் 'காம்ரேட்' சீதாராம் யெச்சூரியும் கூறினார்கள்? இங்கேயெல்லாம் அரசு 'தலையிடுவதற்கான' வரம்பு என்னவாக இருந்தது? இங்கே அரசு வலிமையானதா, இல்லை பார்ப்பனீயமா?

இந்த 'அனைத்துச் சாதியினர் அர்ச்சகராகும்' விவகாரத்தையே எடுத்துக்கொள்வோம். 1972ல் கருணாநிதியின் தி.மு.க அரசு சட்டத்தைக் கொண்டுவந்ததும் பார்ப்பனர்கள் அமைதியாகத்தான் இருந்தார்களா? அன்றாயிருந்தாலும் இன்றைய 2006 ஆக இருந்தாலும் பார்ப்பனர்கள் அரசாணையை எதிர்த்து நீதிமன்றம் செல்லவில்லையா?

பெரியார் தான் சாகும் காலத்தில் 'தமிழர் இழிவு ஒழிப்பு மாநாடு நடத்தி கருவறை நுழைவுப் போராட்டத்தை அறிவித்தார். ஆனால் அதற்குள் இறந்துபோனார். ஆனால் பின்னாளில் மக்கள் கலை இலக்கியக் கழகம் கருவறை நுழைவுப் போராட்டத்தை அறிவித்து சிறீரங்கம் கோயிலில் வெற்றிகரமாக நடத்தியும் காட்டியது. அப்போது தினமலர், துக்ளக் என்ன எழுதியது என்பதை பாலா பழைய இதழ்களை எடுத்துப் பார்க்கட்டும். அல்லது சிரமப்பட்டால், கோ.கேசவன் எழுதிய 'கோவில் நுழைவுப் போராட்டம்' என்னும் நூலையாவது படிக்கட்டும்.

ஆனால் இதில் தெளிவாக உள்ள விஷயம். ராமேசுவரம் கோவில் அறிவுப்புப் பலகை என்பது ஒரு குறியீடுதான். கோயில் என்பதே பார்ப்பன அதிகார மய்யமாகத்தானிருக்கிறது. குமரிமாவட்டத்திலுள்ள கோவில்களில் நீங்கள் நுழைந்தால் சட்டையைக் கழற்றச் சொல்வார்கள். எதற்கு மாடலிங் செய்யவா, அல்லது பேஷன் ஷோ நடத்தவா?

குமரிமாவட்டத்தில் பனையேறிய சாணார்கள் 'பார்க்க்கத்தகாத சாதி'(unseeable)யாக நடத்தப்பட்டனர். சட்டையைக் கழற்றினால் பனைமரத்தில் ஏறிய தழும்புகள் உடலில் இருந்தால் அவர்கள் 'சாணார்கள்' என்று அடையாளம் காணப்பட்டுக் கோயிலில் நுழையாமல் விரட்டப்பட்டார்கள். இப்போது அந்த வழக்கமில்லையென்றாலும் பார்ப்பனீயத்தின் எச்சமாகத்தான் சட்டையைக் கழற்றும் பழக்கம் எஞ்சி நிற்கிறது. ஆனால் இப்படி அவமானம் இழைக்கப்பட்ட சாதியிலிருந்து வந்த அரவிந்தன் நீலகண்டன் போன்றவர்கள்தான் இந்துமதத்திற்கு கொடிதூக்குகிறார்கள்.

அரசு என்ன செய்தது என்று பாலா கேட்கிறாரே, அரசு ஏதோ தன் வரம்பிற்குட்பட்ட வகையில் செய்கிறது. ஆனால் ஆர்.எஸ்.எஸ்ஸும் இந்துமுன்னணியும் இதையும் ஒழித்துக்கடட் அறநிலையத்துறையிலிருந்து அரசை வெளியேறச் சொல்கிறது.

ராமேசுவரம் கோவிலிலாவது 'பார்ப்பனர்கள் நுழையக்கூடாது' என்று போர்டுதான் வைக்கிறார்கள். அய்.அய்.டியிலும் அய்.அய்.எம்.எஸ்ஸிலும் போராட்டமே நடத்துகிறார்கள்.அய்.அய்.டியில் நிலவும் பார்ப்பன ஆதிக்கத்தைத் தெரிந்துகொள்ள பாருங்கள் (ஓசை செல்லாவிற்கு நன்றி)
http://oomai.wordpress.com

உச்சநீதிமன்றமும் ராமேசுவரம் கோயில்போலவேதான் செயல்படுகிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பில் இரண்டு அம்சங்கள் இருக்கின்றன.

1. 1931ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி ஓபிசியை வரையறுக்கக்கூடாது.
2. இட ஒதுக்கீடு என்பது சமூகத்தைப் பிளவுபடுத்தவே உதவும். உலகில் எங்கும் சாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு இல்லை.

இப்போது ஓபிசியைத் தெளிவாகக் கணக்கிடவேண்டுமென்றால் சாதிவாரியான மக்கள்தொகைக் கணக்கெடுப்பை அரசு நடத்தவேண்டும். 'கிரிமிலேயர், கிரிமிலேயர்' என்று ஆதிக்கச்சாதி வெறியர்கL கூப்பாடு போடுகிறார்களே, கிரிமிலேயரைக் கண்டறிவதற்கும் சாதிவாரியான மக்கள்தொகைக் கணக்கெடுப்புதான் எடுத்தாக வேண்டும். ஆனால் அதையும் நீதிமன்றம் ஒத்துக்கொள்ளுமா? அப்போதும் நீதிமன்றம் 'அரசு சமூகத்தைப் பிளவுபடுத்துகிறது' என்று கூக்குரலிடத்தான் செய்யும்.

மேலும் மிகத்திறமையாக ஜெயலலிதாவிலிருந்து இணையப்பார்ப்பனர்கள் வரை பந்தின்போது ஒரு சாமர்த்தியமான வாதத்தை முன்வைத்தார்கள். "அரசு நீதிமன்றத்தில் திறமையாக வாதாடவில்லை. எனவே தன் தவறை மூடிமறைக்கவே மத்தியக் கூட்டணியிலுள்ள திமுக பந்தை நடத்துகிறது'.

ஆனால் மத்திய அரசு எவ்வளவுதான் 'திறமையாக' வாதாடினாலும் உச்சநீதிமன்றம் இதையேதான் சொல்லும். அதற்கான தெளிவான நீரூபணம்தான் மேற்கண்ட இரண்டாவது அம்சத்தில் உள்ளது. 'உலகில் எங்கும் சாதியடிப்படையில் இட ஒதுக்கீடு இல்லை' என்று நீ.ம காரணம் காட்டுவதே அபத்தமாக இருக்கிறது. உலகில் எங்கும் சாதி இல்லாதபோது சாதியடிப்படையிலான இட ஒதுக்கீடு மட்டும் எப்படி இருக்கும்? அமெரிக்காவில் டெக்சாஸ் போன்ற மாகாணங்களில் கருப்பர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் காவல்நிலையங்களில் கருப்பர்களையே நியமிக்கின்றனர். இது ஒருவகையான இட ஒதுக்கீடுதான். அங்கு நிறப்பாகுபாடு இருக்கிறது. இங்கோ சாதிப்பாகுபாடு இருக்கிறது. இதற்கு மூன்று தீர்வுகள் இருக்கின்றன என்று கருதுகிறேன்.

1. அரசு சாதிவாரியான மக்கள்தொகைக் கணக்கெடுப்பை எடுப்பது.

2. உச்சநீதிமன்றத்தில் பார்ப்பன ஆதிக்கத்தைக் குறைக்க நீதித்துறையில் இட ஒதுக்கீடு கொண்டுவருவது.

3. இப்போதைய உச்சநீதிமன்றத்தின் தடையாணையைத் தூக்கிக் கிடப்பில் போடுவது.

ஆனால் அப்படி நடந்தாலும் 'என்றும் வம்புடன்' பாலாவோ அல்லது அவரது ஒண்ணுவிட்ட, ரெண்டுவிடாத தூரத்துச் சொந்தங்களோ அனானியாகவோ அநாமதேயங்களாகவோ வந்துகேள்வி கேட்டுக்கொண்டுதான் இருப்பார்கள். நாம் என்ன செய்யவேண்டும்? டோண்டுராகவன் அவர்களைப் போல 'போடா பாப்பார ஜாட்டான்' என்று போகவேண்டியதுதான்.

18 உரையாட வந்தவர்கள்:

 1. Anonymous said...

  ஐயா வெளியே மிதப்பவரே,

  கொஞ்சம் மிதக்காமல் தரையில் வாருங்கள். பேசலாம்.

  தங்கள் மாய்ந்து மாய்ந்து எழுதிய இந்த ஜல்லி பதிவில் கொஞ்சம் நம்பகமான தகவல்களை கொடுத்தால் பதிலளிக்க வசதியாக இருக்கும். தீண்டாமை சேஷகரம், ஜயேந்திரன் காரில் ஏற மறுத்தான், பேண்டான் என்று வழக்கமான குப்பைகளையே திருப்பி திருப்பி சொல்கிறீர்களே. இவற்றின் ஆதாரம் காட்டமுடியுமா. இல்லை என்றால் தங்கள் பதிவு ஒரு புரட்டுக்கதைதான்.

  திராவிட கட்சிகளை விட பார்ப்பனீயம் வலிது என்றால் எல்லா திராவிட கட்சிகளும் அரசியலை விட்டு ஓடட்டும். ஏன் ஓட்டு கேட்க மீண்டும் மஞ்சள் துண்டு போட்டுக்கொண்டு வருகிறார்கள். அதே பார்ப்பனீய யச்சூரி, மன்மோகனிடம் ஏன் அமைச்சரவை கேட்டு தன் பேராண்டியை குந்த வைக்கிறார்கள். வெட்கங்கெட்டத்தனம் இது.

  ஆயில்ய நட்சத்திரத்தில் தேரோட்டம் நடத்துவது ஆகம விதி இல்லை என்று பிஜெபி காரர்களுக்காக வரிந்துகட்டிக்கொண்டு ஆகம விதிகளை நாட்டாமை செய்யும் இந்த அரசு அந்த சுவற்றில் ஒரு சுண்ணாம்பு அடித்து அந்த வரிகளை மறைக்க முடியவில்லையா. என்னய்யா பிதற்றல்...

  தங்கள் பதிவை குறித்து மேலே யோசிக்க ஒன்றுமில்லை. வெத்துவேட்டு...

 2. பாலராஜன்கீதா said...

  //ராமேசுவரம் கோவிலிலாவது 'பார்ப்பனர்கள் நுழையக்கூடாது' என்று போர்டுதான் வைக்கிறார்கள். //

  ???

 3. குழலி / Kuzhali said...

  //நாம் என்ன செய்யவேண்டும்? டோண்டுராகவன் அவர்களைப் போல 'போடா பாப்பார ஜாட்டான்' என்று போகவேண்டியதுதான்.
  //
  :-)))))))))

 4. உண்மைத்தமிழன் said...

  அன்புள்ள நண்பர் மிதக்கும் வெளி அவர்களுக்கு 'என்றும் வம்புடன்' பாலாவின் ஒண்ணுவிட்ட மச்சான் எழுதுவது.. இது பற்றிய எனது கருத்தை அதே தளத்தில் பின்னூட்டமாக இட்டிருந்தேன். அதே கருத்தையே இங்கும் எனது கருத்தாக இட விரும்புகிறேன். நீங்கள் விரும்பினால் அனுமதிக்கலாம்.

  //அண்ணன் பாலா அவர்களுக்கு,

  அந்த போர்டு இருக்கும் தோற்றத்தைப் பார்த்தால் நீண்ட பல வருடங்களாகவே அங்கு மாட்டப்பட்டிருக்கும் போலத் தெரிகிறது. இராமேஸ்வரம் கோவில் இந்து அற நிலையத்துறைக்குச் சொந்தமானதுதான், நிர்வாகத்திற்குட்பட்டதுதான் என்று நினைக்கிறேன். இன்றுவரை அது அப்படியே இருக்கிறது என்றால் இது கண்டிப்பாக திராவிடத்தின் பெயரால் ஆளுவோரின் இரட்டை வேடப் போக்கைக் காட்டும் ஒரு சிறிய எடுத்துக்காட்டுதான். பெரிய எடுத்துக்காட்டு 1968-ல் அண்ணா அவர்களின் ஆட்சிக் காலத்தில் இந்து அற நிலையத்துறைக்கான மான்ய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசும்போது கோவில்கள் இருக்கும்வரை எந்த ஒரு அரசும் அவற்றைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளை செய்துதான் தீர வேண்டும் என்றார். இதற்கு பத்திரிகை நண்பர்கள் தந்தை பெரியாரிடம் கேள்வி கேட்க அவர் சொன்ன பதிலும் இராமேஸ்வரம் கோவிலைப் போலவே பிரசித்தி பெற்றதுதான் "மாமியாருக்குத் தொடைல புண்ணாம். மருமகன்தான்யா ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்ன்னாங்கலாம்.." கரெக்டுதானே..

  ஆகம விதிகளைச் சுட்டிக்காட்டி ஆள்வோரை அங்கிருப்பவர்கள் அடக்கி வைத்திருக்கலாம். ஆகம விதிகள் இப்படி மனிதருக்குள் பேதங்களைப் பிரித்துச் சொல்வதால்தான் ஜாதி, மதப் பிரச்சினைகளை அனைவருமே எழுப்புகிறார்கள். இது தவிர்க்க முடியாதது. அரசு நினைத்து இந்த மூடத்தனத்தை ஒழித்து அனைவரும் மனிதர்களே என்று கோவிலிலிருந்தே ஆரம்பித்தால் மட்டுமே இம்மாதிரி பிற்போக்குத்தனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். ஆனால் இந்த திராவிடத்தின் பெயரால் ஆட்சிக்கு வந்தவர்கள் கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை.. நான் அடிப்பது போல் நடிக்கிறேன்.. நீ வலிப்பது போல் நடி.. என்று நடந்து கொண்டால் இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் சரி.. சாதிப் பூசல்கள் தமிழ்நாட்டில் இப்படியேதான் இருக்கும்.//

  மீண்டும் உண்மைத் தமிழன். இந்த இட ஒதுக்கீடு உள்ளவரை சாதி பாகுபாடுகள் கண்டிப்பாக இருக்கத்தான் செய்யும். முதலில் சாதியை ஒழிப்பதா அல்லது இட ஒதுக்கீட்டை ஒழிப்பதா என்பதை அரசுகள்தான் முடிவு செய்ய வேண்டும். அப்படிப்பட்ட மக்களுக்காக, மக்களை மட்டுமே மனதில் கொண்ட அரசுகள் இனிமேலும் இந்தியாவில் அல்லது தமிழ்நாட்டில் உருவாகாது என்பது எனது கருத்து. ஒருவேளை சாதிகளே இல்லை. அனைவரும் இந்தியர்கள், மொழியால் தமிழர்கள் என்ற சட்டமோ அல்லது ஆணையோ வந்துவிட்டால் இந்த மாதிரி அரைவேக்காட்டுத்தனமான போர்டுகளும், முட்டாள்தனமான இட ஒதுக்கீடுகளும் காணாமல் போய் விடும். அதுவரும் வரையிலும் நாம் உயிருடன் இருந்தாலும் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்..

  இந்தப் பிரச்சினையில் எனக்குப் புரியாதது.. நண்பர் பாலபாரதி எதற்காக அவருடைய தளத்தில் பின்னூட்டப் பெட்டியை பூட்டினார் என்பதுதான்.. "சொல்லிச் சொல்லி மாய்ஞ்சு போச்சு.. எவனும் திருந்த மாட்டேங்குறாங்கய்யா.." என்ற நினைப்பில் செய்திருப்பாரோ..

 5. லிவிங் ஸ்மைல் said...

  present sir,

 6. Anonymous said...

  டெம்ப்ளேட் எங்கே பிடித்தீர்கள் ?

  செந்தழல் :)

 7. Anonymous said...

  நான் ஒரு இந்து. தாழ்த்தப்பட்ட ஹரிஜன வகுப்பை சேர்ந்தவன். என்னையும் உயர்ஜாதி என்று ஏற்றுக் கொள்வார்களா பார்ப்பனர்கள்? அவர்கள் போட்டுக் கொள்ளும் பூனூலை நானும் போட்டுக்கலாமா? நான் அவர்கள் வீட்டு திண்ணையில் கொஞ்ச நேரம் அமர்ந்தால் திண்ணையை கழுவாமல் இருப்பார்களா பார்ப்பனர்? எனக்கு பார்ப்பனர் பெண் கட்டித்தருவார்களா?

 8. மிதக்கும்வெளி said...

  /தீண்டாமை சேஷகரம், ஜயேந்திரன் காரில் ஏற மறுத்தான், பேண்டான் என்று வழக்கமான குப்பைகளையே திருப்பி திருப்பி சொல்கிறீர்களே. இவற்றின் ஆதாரம் காட்டமுடியுமா/

  அய்யா, எத்தனை ஆதாரம் காட்டினாலும் நீங்கள் ஒத்துக்கொள்ளவா போகிறீர்கள்? தீண்டாமை ஷேமகரமானது பெரிய சங்கரன் சொன்னது அவன் எழுதிய 'தெய்வத்தின் குரல்' நூலிலேயே இருக்கிறது. மற்றவற்றிற்கு நடுத்தடியன் கைதானபோது வெளிவந்த தினத்தந்தி இதழ்களைப் பார்த்தாலே தெரியும்.

 9. மிதக்கும்வெளி said...

  உண்மைத்தமிழன்,
  உங்கள் கருத்துக்கள் பாதி அரைவேக்காடாக இருக்கிறது. மனிதர்களுக்குள் பேதம் வேண்டாம் என்னும் உங்களின் நல்ல உள்ளம் புரிகிறது. அதற்கான வழி நீங்கள் சொல்வது அல்ல.

 10. மிதக்கும்வெளி said...

  /டெம்ப்ளேட் எங்கே பிடித்தீர்கள் ?/

  தூத்துக்குடி பக்கம் துபாய்லதான்.

 11. உண்மைத்தமிழன் said...

  அன்பு மிதக்கும்வெளி அவர்களே.. என் எழுத்தில் எந்தப் பாதி 'அரைவேக்காட்டுத்தனம்' என்பதைச் சொன்னால் நன்றாக இருக்கும். நீங்கள் எழுதிய பிறகு நான் மீண்டும் படித்துப் பார்த்தேன். எந்த 'இடத்தை' நீங்கள் சொல்கிறீர்கள் என்பது புரியவில்லை.

 12. Anonymous said...

  FYKI- of the 2 judges who gave the stay order on OBC quota in IITs etc one (Ajit Prasyait) is a
  tribal(ST) and other is a Sikh.Both are not from upper castes.
  K.G.Balakrishnan favors
  limits on reservations and exclusion of creamy layer.He was
  member of a bench that affirmed these principles.
  So only if you fill the court with Veeramanis, Karunanidhis and Ramadosses you will get the 'social justice' you want.

 13. Anonymous said...

  உண்மைத்தமிழன் சொன்ன பாதி அல்ல முழுவதுமே அரைவேக்காடாக தான் இருக்கிறது :-)

 14. Anonymous said...

  கேரளாவிலும், குமரி மாவட்டத்திலும் ஆண்கள் சட்டையுடன் கோயிலுக்குள் செல்ல அனுமதியில்லை. வேட்டி மட்டும்மே அணிய வேண்டும்,கால்சராய்க்கும் அனுமதி
  இல்லை.வேட்டி,இடுப்பில் துண்டு அணிய வேண்டும்.அதே போல் பெண்கள் சுடிதார்
  அணிந்து உள்ளே செல்ல முடியாது. சேலை அணிய வேண்டும். இதிலெல்லாம் சாதி
  வேறுபாடு இல்லை. பல கோயில்களில் இங்கு(கேரளாவிலும், குமரி மாவட்டத்திலும்) பூசாரி பார்ப்பனர் அல்ல.

 15. Anonymous said...

  //இப்படி அவமானம் இழைக்கப்பட்ட சாதியிலிருந்து வந்த அரவிந்தன் நீலகண்டன்//

  உறுதியாகத் தெரியுமா? அல்லது அவர் அவிழ்த்து விட்ட பொய்மூட்டைகளில் இதுவும் ஒன்றா? மற்ற பொய்களை நம்பாமல் இதை மட்டும் நம்பிவிட்டீர்களா?

 16. Anonymous said...

  பதிவை விடுங்க.இந்த உண்மைதமிழன் யாருங்க? கிறுக்கனா இருக்கான்.

 17. Anonymous said...

  அரசு அறிவிப்புக்கே கோர்ட்டுக்கு போய் பாப்பானுங்க தடை உத்தரவு வாங்கறானுங்க.அவனுங்களுக்கு வால் புடிக்கற உண்மை தமிழன் மாதிரி நாதாரிங்க ஆடு நனையுதேன்னு அழுவுறானுங்க.

 18. Anonymous said...

  //இந்த இட ஒதுக்கீடு இருக்கும்வரை சாதி பாகுபாடுகள்
  கண்டிப்பாக இருக்கத்தான் செய்யும் //

  சூப்பர். இட ஒதுக்கீட்டை ஒழித்துவிட்டால் ராமேஸ்வரம்
  போர்டு காணாமல் போய்விடும். என்ன லாஜிக்கு?
  என்ன லாஜிக்கு?

  //அனைவரும் இந்தியர்கள், மொழியால் தமிழர்கள் என்ற
  சட்டமோ அல்லது ஆணையோ வந்துவிட்டால் இந்த மாதிரியான
  அரைவேக்காட்டுத்தனமான போர்டுகளும் காணாமல் போய்விடும். //

  இந்த சட்டம் இல்லாததால்தான் இரண்டாயிரம் வருடமாக
  நாங்கள் மட்டுமே கோயிலில் பூசை செய்கிறோம்.

  அபாரம்! அபாரம்!சே இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே!