நீங்களும் ஹீரோ/ஹீரோயின் தான்

து சாருநிவேதிதா ஆரம்பித்துவைத்த ஆட்டம்தான். ஒவ்வொரு எழுத்தாளரையும் ஏதாவதொரு சினிமா நட்சத்திரங்களோடு ஒப்பிடுவது. உதாரணத்திற்கு சுந்தரராமசாமி - 'மாயாபஜார்' எஸ்.வி.ரங்காராவ் (கல்யாண சமையல்சாதம்...)


சில பல வலைப்பதிவாளர் சந்திப்புகளில் வலைப்பதிவாளர்களைச் சந்தித்தபோது சில நட்சத்திரங்களை நினைவுபடுத்தினார்கள். எனவே இந்தப் பதிவு. இது தனிப்பட்டமுறையில் யாரையும் புண்படுத்தும் பதிவு அல்ல. எனவே யாரும் கோபிக்கவேண்டாம். (போதுமடா பில்டப், இதுவரை நீ செய்த அட்டூழியத்தையே நாங்கள் ஒன்றும் சொல்லவில்லை. இப்போது மட்டும் என்ன என்று நீங்கள் முனங்குவது கேட்கிறது. கூல்டவுன், கூல்டவுன்)


சிவஞானம்ஜி - சிவாஜிகணேசன்.

தருமி - ரகுவரன்

ஞானவெட்டியான் - 'பட்டினத்தார்' டி.எம்.எஸ். சௌந்தராஜன்.

ஜி.ராகவன் - ஜெமினிகணேசன்

முத்து தமிழினி - சரத்பாபு

லக்கிலுக் - (அந்தக்கால) சந்திரசேகர்

குழலி - முரளி

டோண்டு ராகவன் - வி.கே.ராமசாமி

மா.சிவகுமார் - விவேக்

யெஸ்.பாலபாரதி - கே.பாக்யராஜ்
(அப்பாடா ஒருவழியாப் பழிவாங்கியாச்சு)

பொன்ஸ் - அருணா

அகிலன் - தனுஷ்

ரோசாவசந்த் - ஜெய்சங்கர்

ஓகை - எஸ்.வி.சுப்பையா

(எஸ்.வி.சுப்பையா ஷில்பா செட்டியின் ரசிகரா என்று தெரியாது. ஆனால் ஓகை அம்மணியின் தீவிர ரசிகர். ஷில்பா அவமானப்படுத்தப்பட்டபோது வீட்டிலேயே மம்தாபானர்ஜி ரேஞ்சுக்கு உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். நேற்றுதான் ஷில்பா போட்டியில் வென்றவுடன் பழச்சாறு சாப்பிட்டு உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். என்ன, பழச்சாறு மூன்று வருடங்களுக்கு முன்பு பூமிக்கடியில் புதைக்கப்பட்டது)

'ஆலமரம்' திரு - விக்ரம்

ப்ரியன் - அஜித்குமார்

வரவணையான் செந்தில் - (லவ்டுடே) விஜய்

சுகுணாதிவாகர் - கமல்ஹாசன்
(சாரி கொஞ்சம் ஓவர்)

நீங்களும் பட்டியலைத் தொடரலாம்.

(பொன்ஸ்+பாலபாரதி)- செந்தில் = பாலா?

திகாலை 10 மணியிருக்கும், வலையுலகின் பிதாமகன் பாலபாரதியிடமிருந்து போன் வந்தது. நானாவது எழுந்து பத்துநிமிடமிருக்கும். ஆனால் தலயோ இன்னும் தூக்கக் கலக்கத்திலேயே பேசினார்.


"பெனாத்தல் சுரேஷ் அமீரகத்திலிருந்து வந்திருக்கார். உன்னைப் பார்க்கணுங்கிறார்"

"எதும் விசேசம் உண்டா?"

"அதெல்லாம் கிடையாது. மதியம் உட்லேண்ட்ஸில் சைவச் சாப்பாடு".

"சைவச்சாப்பாடா? அதுக்கு நான் தி.நகர் அக்கா கடையிலேயே சாப்பிட்டுக்குவேன். நான் வரலை".

"யோவ், உன்னையெல்லாம் ஒரு மனுசனா நினைச்சு ஒருத்தர் பார்க்கணுங்கிறாரு. வரமாட்டியா?"

அப்புறம் என்ன கேள்வி?

"சரி, எத்தனை மணிக்கு?"

"மதியம் 1 மணிக்கு"


தியம் ஒரு மணி. பாபா (அதுதான் பாலபாரதி) தான் வாக்களித்தபடி அந்த டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் இருந்தார். கூட இருந்தவர்கள் 'திராவிடத்துத் திருவிளக்கு' லக்கிலுக்கும் 'வலையுலகின் தங்கமங்கை' பொன்ஸும். ஒருவழியாகப் பெனாத்தல் சுரேசும் பெனாத்தாமல் வந்து சேர்ந்தார்.


ட்லேண்ட்ஸ் ஓட்டல். அங்குதான் பல அதிர்ச்சிகள் காத்திருந்தன.முதல் அதிர்ச்சியை ஆரம்பித்து வைத்தவர் பொன்ஸ்.

"முதல் முதலில் இங்குதான் வலைப்பதிவாளர் சந்திப்பு நடந்தது"

ஆகா அந்த துயரம் இங்கதான் ஆரம்பிச்சுச்சா?

லக்கிலுக்கும் தன் கணக்குக்கு ஒரு சரவெடியைக் கொளுத்திப் போட்டார்.

"அடித்தட்டு மக்களுக்காகத்தான் கலைஞர் ஆட்சிக்கே வர்றார்"

"இதைக் கலைஞர் கேட்டால் அவருக்கே ஹார்ட் அட்டாக் வந்திடும்" என்று ஈனக்குரலில் முணங்கினேன்.

ஒருவழியாக டிபன் அயிட்டங்கள் வந்துசேர சாப்பிட ஆரம்பித்தோம்.
திடீரென்று பொன்ஸின் கடைவாயிலிருந்து பற்களுக்குப் பதில் தந்தங்கள் முளைத்து 'யானைப்பசிக்கு சோளப்பொறியா' என்கிற ரீதியில் சாப்பிட ஆரம்பித்தார். (பொன்ஸ், நீங்கள் சாப்பிட்டது நாலு தோசை, ரெண்டு சோளாபூரி, மூன்றரை போண்டா (அந்த அரை போண்டா பக்கத்து அப்பாவி லக்கிலுக்கின் பிளேட்டில் சுட்டது) என்பதை யாருக்கும் சொல்லமாட்டேன்)

பிறகு பாபாவும் பொன்ஸும் சேர்ந்து மற்றவர்களைக் கலாய்க்க ஆரம்பித்தனர்.

நான் by birth நல்லவன் என்பதாலும் அமைதியான டைப், யாரையும் ஓட்டத் தெரியாது என்பதாலும் அமைதியாக இருந்தேன்.

இருவரும் ஓட்டிய ஓட்டில் லக்கிலுக் 'ஓடினேன் ஓடினேன் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினேன்' என்ற ரேஞ்சில் "வேலையிருக்கிறது" என்று சொல்லி எஸ்கேப் ஆனார்.

அந்த நேரத்தில் வந்து சேர்ந்தார் இன்னொரு அப்பாவி, புளியமரம் தங்கவேலு. பாவம் அவர் சுந்தரராமசாமியின் ரசிகர். தோசையின் 'விரிவும் ஆழமும் தேடி', 'சாம்பாரோடு ஒரு உரையாடல்' நடத்திக்கொண்டிருந்தார்.

இந்தக் கலாட்டாக்களுக்கு மத்தியில்தான் பொன்ஸும் பாபாவும் என் தலையில் அந்த எம்டன் குண்டைப் போட்டார்கள்.

"உங்க எழுத்துக்காகவெல்லாம் உங்கள் பதிவைப் படிக்கிறதில்லை (அது தெரிஞ்சதுதானே) பின்னால் வரும் பாலாவின் கமெண்டுகளுக்காகத்தான் படிக்கிறோம்" என்றார்கள். (அடப்பாவிகளா!)


சோகமாக ஆபிஸ் வந்து கம்ப்யூட்டரை ஆன் செய்தால் வந்தது செந்திலின் பிளாக். அங்கேதான் பாலாவுக்கு 'அந்த' கொடுமை நேர்ந்தது.

பாலாவின் பெயரில் போலி அனானி பின்னூட்டங்கள்.

முதலில் மூன்றுபேர்தான் ஆரம்பித்திருந்தார்கள். பிறகு பத்து, பதினைந்துபேர்கள். மூத்திரச்சந்திலெல்லாம் பாலாவைத் துரத்தி துரத்தி அடித்திருந்தார்கள்.

பாலா, பீலா, பேலா என்று ஆரம்பித்து பஃகலா வரை பகரவரிசையில் கிட்டத்தட்ட 125 போலி பாலாக்களின் பின்னூட்டங்கள்.

'பாலாவே ஒரு போலி. போலிக்கு இன்னொரு போலியா' என்று மற்றொரு போலி அனானி வந்து புலம்பியிருந்தார்.

கடைசியில் 'பொருதடக்கை வாளெங்கே, மணிமார்பெங்கே, போர்முகத்தில் எவர்வரினும் புறங்கொடாத பருவயிரத் தோளெங்கே, எங்கே' என்று உண்மையான பாலாவைத் தேடவேண்டியிருந்தது.

என்ன கொடுமை செந்தில் இது?

பாலா எவ்வளவு நல்லவர். இனிய நண்பர். நான் பதிவைப் போட்டு நானே படிக்கிறேனோ இல்லையோ முதல் ஆளாக வந்து படித்து கமெண்டும் போடுபவர். அவர் 'வெளியே மிதக்கும் அய்யா' என்று அழைத்தால் காதில் தேன் வந்து பாயாதா?


ஏன் செந்தில் ஏன்? என்னதானிருந்தாலும் பாலா ஒரு so called மனிதன் இல்லையா?

நானும் இந்த 'பிராணிவதை'யைத் தடுத்து நிறுத்த எவ்வளவோ முயன்றேன். ஆனால் முடியவில்லை. எல்லாம் எல்லை மீறிவிட்டது.


செந்திலும் by birth நல்லவர்தான். ஆனால் கடல்கடந்த பொட்டிக்கடை சத்யாவின் 'கூடாநட்புதான் அவரை இப்படி ஆக்கியிருக்க வேண்டும்.

கொலையாய் விரிந்த காவி இருள்
இன்று ஜனவரி30

சுஜாதா கற்றதும் விற்றதும்..

தோழர். அசுரன் உள்பட பலர் அயோத்தியாமண்டபம் சம்பவம் தொடர்பாக சுஜாதா குமுதத்தில் எழுதிய கதை தொடர்பாக விமர்சித்திருந்தார்கள். ஆனால் அதிர்ஷ்டவசமாகவோ துரதிர்ஷ்டவசமாகவோ நான் மூன்றுமாதமாக குமுதத்தைப் படிக்கவில்லை. ஆனால் சுஜாதா என்றவுடனே எனக்கு நினைவுக்கு வரும் சம்பவம்.


'நக்கீரன்' கோபால் பொடா என்னும் ஆள்தூக்கி கருப்புச்சட்டத்தால் கைது செய்யப்பட்டபோது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை ஏற்பாடு செய்து சுஜாதாவை பேச அழைத்திருந்தார்கள். ஆனால் அவர்களிடம் சுஜாதா சொன்னது, "பொடாவா? நேக்கு அதைப்பற்றி ஒண்ணும் தெரியாதே" என்று பேச மறுத்துவிட்டார்.


ஆனால் அதே சுஜாதாதான் 'பாய்ஸ்' படத்தில் பொடா பற்றி பக்கம் பக்கமாக எழுதிக்கீசியிருப்பார்.


அந்தப் படத்தில் அய்யப்பன் கேசட் போட்டு விற்கும் இளைஞர்களிடம் பாடல் இசையமைத்துத் தரும்படி நக்சல்பாரிகள் கேட்பதாக ஒரு காட்சியை எழுதியிருப்பார் சுஜாதா.


அய்யப்பன் பஜனைக் கோஷ்டியிடம் பாடல் எழுதிக்கேட்க அவர்கள் மார்கழி மாதப் பார்ப்பனப் பருப்புக் கோஷ்டியா என்ன? "இதி கொங்கணி ரஜம்..." (இது திருடர்களின் தேசம்) என்று தன் உரத்த குரலால் காற்றையும் மலைகளையும் கானகங்களையும் தன் வயப்படுத்திய கத்தார் என்னும் மண்ணின் கலைஞனைத் தந்தது நக்சல்பாரிப் பாரம்பரியம்.


தமிழகத்திலும் "ஆயிரம் காலம் அடிமையென்றாயே, அரிசனுன்னு பேரு வைக்க யாரடா நாயே?" என்று சட்டையைப் பிடித்துக் கேட்டு இசையில் நெருப்பைக் கொட்டியது மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் 'அசுரகானம்'.


இதெல்லாம் தெரியாத, தேங்காய்முடிக் கச்சேரிகளை மட்டுமே கேட்டுப் பழகிய சுஜாதாவிற்கு நக்சல்பாரிகளைப் பற்றி எழுத என்ன யோக்கியதை இருக்கிறது?


'பாய்ஸ்' படத்தில் பொடாக் கொடுமையின் உச்சமாக சுஜாதாவிற்குத் தெரிவதெல்லாம், கைது செய்யப்பட்ட இளைஞர்கள் பொதுக் கழிப்பறையில் கக்கூஸ் போக முடியாமல் அவதிப்படுவது மட்டுமே. கக்கூஸ் கழுவுவதெல்லாம் சிரமமில்லை இந்த 'அய்யங்கார் வீட்டு அசிங்கத்திற்கு", கக்கூஸ் போவதுதான் சிரமம். இருக்கட்டும்.


'அந்நியன்' படத்தில் கருடபுராணம் என்றபெயரில் புருடாபுராணம் எழுதிப் பார்ப்பனரல்லாதவர்களுக்கு விதவிதமாய்த் தண்டனைகள் வழங்கித் தன் வக்கிரத்தைத் தீர்த்திருப்பார் சுஜாதா.


நாளை புதிய ஜனநாயகப் புரட்சி நடந்தால் சுஜாதா (எ) ரெங்கராஜன் அய்யங்காருக்குத் தண்டனையாகவும் அவர் கக்கூஸ் போகமுடியாமல் அவதிப்படும் பிரசினைக்குப் பரிகாரமாகவும் ஆசனவாயில் டைனமெட் வைத்து வெடிக்கலாம்.

உழவன் வடித்திட்ட கண்ணீரில் தோன்றி
உயிருக்கு நிகரான செங்கொடியை ஏந்தி
திமிரில் கொழுத்த சுரண்டலின் மார்பில்
இடியாய்ப் பிளந்ததே நக்சல்பரி!
மக்கள் இசையாய்ப் பொழிந்ததே நக்சல்பரி!

வேதம் புதிது - வேறு சில கேள்விகள்
"பாலுங்கிறது பேரு, தேவர்ங்கிறது எங்க வாங்கின பட்டம்?"
- கேள்வியை முன்வைத்து சில கேள்விகள்


"பூணூலை அறுப்பது தனிநபரின் உரிமையையும் மத உரிமையும் பறிக்கிறது" என்று அலறுகிறது பாரதிய ஜனதாக் கும்பல். ஆனால் அறுப்பதும் எரிப்பதும் எதிர்வன்முறைதான். பூணூல் அணிவதுதான் முதல் வன்முறை

- புதியஜனநாயம் ஜனவரி 2007 (பக் - 6)


'வேதம் புதிது' திராவிடர் கழகத்தினராலும் இடதுசாரிகளாலும் கொண்டாடப்பட்ட படம்.

பார்ப்பன எதிர்ப்பை வெளிப்படையாக முன்வைத்தது, அதனாலேயே பார்ப்பனர்களின் எதிர்ப்பைச் சம்பாதித்தது, பிறகு எம்.ஜி.ஆரின் முன்முயற்சியால் (அக்கிரகாரத்தில் கழுதையைத் தடை செய்த அதே எம்.ஜி.ஆர் ஆட்சிதான்) வெளிவந்தது என்று பல பெருமைகளை உள்ளடக்கிய படம். குறிப்பாக அந்த 'பாலுங்கிறது பேரு, தேவர்ங்கிறது எங்க வாங்குன பட்டம்?"- கேள்வி. சரி, இந்தக் கேள்வியை வேறு சில வாசிப்புகளுக்கு உட்படுத்துவோம்.


படத்தின் முதன்மைக் கதாபாத்திரம் பாலுத்தேவர் (சத்யராஜ்) ஒரு நாத்திகர். அவர் பெரியாரியரா, அல்லது மார்க்சியரா என்பது சுட்டப்படவில்லை. ஆனால் அவர் படத்தில் ஓரிடத்தில் பேசும் வசனம் " அன்பே சிவமென்றால் அவன் கையில் சூலாயுதம் எதுக்கு?".


இந்த வாசகம் தமிழகத்தில் தி.கவினரால் சுவரெழுத்து செய்து பரப்பப்பட்ட வாக்கியம். அவர் பெரியாரிய அனுதாபி. ஆனாலும் சாதிப் பட்டத்தைத் தாங்கிச் சுமக்கிறார். இருக்கலாம், எனக்குத் தெரிந்து ஒரு பெரியவர், பெரியார் காலத்திலிருந்து இயக்கத்தில் இருப்பவர், பெரியாரின் சிந்தனைகளைத் தொகுத்தவர் இன்னும் வன்னிய சாதி உணர்விலேயே வாழ்கிறார். இப்படியாக வன்னியப் பெரியாரிஸ்ட், தேவர் பெரியாரிஸ்ட், வெள்ளாளப் பெரியாரிஸ்ட் ஆகிய பெரியாரிஸ்ட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், கம்யூனிஸ்ட் கட்சிகளிலும் கூட. ஆனால் தமிழ்நாட்டில் அவர்கள் யாரும் சாதியைத் தன் பெயருக்குப் பின்னால் போட்டுக் கொள்வதில்லை.


தாய், தந்தையை இழந்த பார்ப்பன அனாதைச் சிறுவன் பாலுத்தேவரின் வீட்டில் சரணடைகிறான். அங்குள்ள பஞ்சாரத்தில் அடைக்கப்பட்டிருக்கும் கோழிகளையும், பட்டியில் அடைக்கப்பட்டிருக்கும் ஆடுகளையும் பார்த்து முகம் சுழிக்கிறான். உடனே ஆடுகளும் கோழிகளும் அங்கிருந்து மறைகின்றன. இதற்குப் பெயர்தான் தமிழ்நாட்டில் 'பார்ப்பன எதிர்ப்புப்படம்'.
இதைத்தான் உயர்குடியாக்கம் என்கிறோம், உட்செரித்தல் என்றும் சொல்கிறோம். பார்ப்பனப் பண்பாடு பிற பண்பாட்டுக் கூறுகளை உட்செரித்து அழிப்பது.


சரி, படத்தின் மய்யமான கேள்விக்கு வருவோம். "பாலுங்கிறது பேரு, தேவர்ங்கிறது எங்க வாங்கின பட்டம்?" - இந்தக்கேள்வியை பாலுவிடம் கேட்பது யார்?


தன் சாதிய அடையாளமான சம்பிரதாயமான பூணூலைக் கூடக் கழற்றாத பாப்பாரக் குஞ்சுதான் கேட்கிறது, "தேவர்ங்கிறது எங்க வாங்கின பட்டம்?"தேவர் என்பது எங்கேயும் வாங்கின பட்டம் இல்லைதான், ஆனால் அதேநேரத்தில் பூணூலும் யேல் பல்களைக் கழகம் வழங்கிய டாக்டர் பட்டம் இல்லையே?


தன்னுடைய சாதிய அடையாளத்தைத் துறக்காத எவனும்/வளும் சாதி சமத்துவம் பற்றி பேசத் தகுதியில்லாதவர்கள். இப்போதும் கூட இதேமாதிரியாக சில பார்ப்பனக்குஞ்சுகள் பூணூலைப் போட்டுக்கொண்டே கேட்டுக்கொண்டுதானிருக்கிறார்கள், "காலம் மாறிப் போச்சு ,ரிசர்வேஷனெல்லாம் எதுக்கு?, சாதி பற்றி ஏன் சார் பேசறீங்க?, நீங்கதான் சார் சாதி பற்றியெல்லாம் நினைக்கிறீங்க, இப்பெல்லாம் யாருசார் சாதி பார்க்கிறது" "பார்ப்பனர்களிடம் சாதிவெறி இல்லை, பி.சிக்கள்தான் எஸ்.சிக்களைக் கொடுமைப்படுத்துகிறார்கள்"....இப்படியாக.


சரி, பாரதிராஜாவிடம் வருவோம். இந்தக் 'பட்டம்' கேள்வி உளப்பூர்வமாகவே கேட்கப்பட்ட கேள்வி என்றால் உங்களிடம் ஒரு கேள்வி.

அந்தக் கேள்வியை பார்ப்பனச் சிறுவன் கேட்டபிறகு பாலுத்தேவரிடம் அந்த சிறுவன் சொல்வான், "நான் கரையேறிட்டேன், நீங்க எப்ப ஏறப்போறேள்". உடனே யாரும் அடிக்காமலே காற்றில் பாலுத்தேவரின் கன்னத்தில் அறை விழும்.

பசும்பொன் என்று ஒரு படம் எடுத்தீர்கள். அதன் கதை வசனம் உங்கள் சாதிக்காரரான சீமான். நடித்தவரும் கள்ளர் சாதிக்காரரான சிவாஜிகணேசன். அப்படத்தில் 'தேவரய்யா' என்று ஒரு பாடல் வருகிறது. அதை எழுதியவரும் கள்ளரான கவிப்பேரரசு வைரமுத்து.


இதற்காக யாரை எங்கே எதைக்கொண்டு அடிப்பது?

இங்கே பழைய பருப்புச் சாம்பார் வாங்கப்படும்

நைட் ஈகிளுக்கு டாஸ்மாக் சிரப்பு அடிச்ச சென்னைச் சிரப்பு ரிப்போர்டர் அனுப்பிய செய்தி மூலம் சென்னையில் பருப்புச் சாம்பார் வாங்கும் இடம் அறிந்துகொண்டேன்.


இருள்நீக்கி சுப்பிரமணியம் என்னும் கைநாட்டு அக்கூஸ்ட் ஜெயேந்திரன் ஏற்கனவே ஒரு பெண்ணைக் கூப்பிட்டு கேரளாவோ நேபாளமோ ஓடியவன் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி. ஆனால் இயற்கையான இந்தப் பாலியல் உணர்வைப் புரிந்துகொள்ளாத ஒரு கிழட்டுப் பார்ப்பன ஜந்து சந்திரசேகரன் தன் பார்ப்பன அரசியல் பரிவாரங்களின் உதவியுடன் ஜெயேந்திரனை அழைத்து வந்து அவன் கையில் தண்டத்தைக் கொடுத்ததையும் அனைவரும் அறிவர்.


கனகாபிகேஷம் என்கிற பெயரால் பகுத்தறிவு இல்லாத பார்ப்பனக் கும்பல் சந்திரசேகரப் பருப்புவின் தலையில் தங்கக் காசுகளைக் கொட்ட இந்த 'தங்கவேட்டை'யில் பெரிசு மண்டையைப் போட்டதும் தெரிந்த கதைதான்.
அதற்குப் பிறகு அதிகாரத்திற்கு வந்த ஊத்தைவாயன் ஜெயேந்திரன் (நன்றி புதியகலாச்சாரம்) ஓடிப் போகும்போது என்ன வேலையைச் செய்ய நினைத்தானோ அதையே மடத்திற்குள்ளேயே செய்துவந்ததும் அதை அம்பலப்படுத்துவதாய் மிரட்டிய தன் சாதியைச் சார்ந்த பார்ப்பனப் பெரியவர் சங்கரராமனையே போட்டுத் தள்ளி லோககுரு லோக்கல் தாதாவான கதையும் திருடனுக்குத் தேள்கொட்டிய கதையாய்ப் பார்ப்பன ஜெயலலிதாவாலேயே கைது செய்யப்பட்டதும் பழைய கதை.இபோது சூத்திரன் கருணாநிதியிடம் சரணடைந்திருக்கும் ஊத்தை மடாதிபதி தனது தமிழ்நாடு ஆஸ்பிடலைக் கருணாநிதி குடும்பத்திடம் விற்கத் தயாராக இருப்பதாகவும் எனவே தன்னை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டுமென்றும் கெஞ்சிக்கொண்டிருக்கிறானாம்.

இதுவும் இன்னொரு இரவுக் கழுகார் சொன்னது.


தீபாவளிக்கு தீபாவளி ஆசி வழங்குகிறேன் பேர்வழி என்று தனது ஊத்தை வாயைத் திறந்து குழந்தைகளையும் இதயநோயாளிகளையும் பயமுறுத்திக் கொண்டிருந்த ஜெயேந்திரனின் பார்ப்பனப் பருப்பு திராவிடச் சூத்திரன் கருணாநிதியிடம் வேகாததால் பழைய, 'ஆறிய'ப் பருப்புகளை வாங்கத் தயாராயிருப்பவர்கள் நேரடியாகவோ அல்லது பருப்பு வினியோகஸ்தர்கள் ஹரிஹரன், ஜடாயு மற்றும் பருப்பு புரோக்கர் பாலா ஆகியோர் மூலமோ தொடர்பு கொள்ளலாம்.


உங்ககிட்ட ஏதானும் பழைய பருப்புமூடை இருந்தா, "இங்கே பழைய பருப்பு வாங்கப்படும்" என போர்டு போட்டு புதுயாவாரம் ஆரம்பித்திருக்கும் ஊத்தைவாயன் ஐயாகிட்ட மூட்டை கட்டிக் கொண்டுபோய் எடைக்கு எடை போட்டு அதை பருப்புச் சாம்பார், பருப்பு போண்டா, பருப்புத்துவையலாக மாற்றிக்கொள்ள காஞ்சிபுரத்திலுள்ள 'காம'கோடி மடத்திடம் கொண்டுபோய்க் கொடுத்தா உங்க ஆசை நிறைவேறும்ங்கோ!


அன்புடன்,
பருப்பு வினியோகஸ்தர்கள் மற்றும் புரோக்கர்கள் சங்கம்விலகிமிதக்கிறேன் goodbyeஆயிற்று வலையுலகில் எழுத வந்து ஆறுமாதகாலத்திற்கும் மேலாகிவிட்டது.ஏப்ரல் 2006ல் தொடங்கியது ஜனவரி 2007ல் வந்து நிற்கிறது. எழுதத்தோன்றியதை எழுதுவதல்லாது வேறு நோக்கம் ஏதுமில்லை. வலையுலகின் மூலம் பல புதிய நண்பர்களை சம்பாதித்திருக்கிறேன். சில பல எதிரிகளையும்.


சமீபமாக ஒருமாதகாலம் தொடர்ந்து நிறைய எழுதிவிட்டேன். ஜெயமோகனைப்போல எழுதிக்கொண்டிருக்கிறோமோ என்று ஒரு பயம். ஜெயமோகனே எழுதுவதை நிறுத்திவிட்டார். (காகிதங்களும் அழிவிலிருந்து மரங்களும் தப்பித்தன.)'சதா முணுமுணுத்துக்கொண்டிருக்கும் வயதான தகப்பனைப்போல' (செந்திலுக்குப் பிடித்த கவிதைவரி) மாறிவிட்டதாக ஒரு பிரமை.


கொஞ்சகாலம் நிறுத்திப்பார்ப்போம். இதற்கு யார் வலை என்று பெயர் வைத்தார்களோ, வலையில் எழுதுவது ஒரு வியாதி போலவே ஆகிவிட்டது. நேரங்களை இரக்கமற்று விழுங்குகிறது வலை. தீவிரமாய் எதையும் வாசிக்க முடியவில்லை. வெட்கத்தைவிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் வலையில் அடுத்தவர் பதிவையும் கூட வாசிக்க முடிவதோ தோன்றுவதோ இல்லை. நமக்குப் பின்னூட்டம் வந்திருக்கிறதா, பதில் எழுதுவோமா என்றே அலைகிறது மனம்.


புறங்கையை நக்கிச் சுவைக்கும் சுயமோகியாகிப் போவேனோ என்ற அச்சம் வியாபிக்கிறது. அதனால் தற்காலிகமாக ஒரு முடிவு. குறைந்தபட்சம் பிப்ரவரி 14 காதலர் தினம் வரையாவது எழுதாமல் இருக்க வேண்டும் என்ற முடிவு. (நண்பர்கள் தப்பித்தார்கள்). கொஞ்சம் தீவிரமாக வாசிக்க வேண்டியிருக்கிறது, நூல்களையும் நண்பர்கள் வலையில் எழுதுவதையும். சாத்தியப்பட்டால் பின்னூட்டமும் இடலாம்.


என்ன, நான் 1+1=2 என்று எழுதினால் கூட "வெளியே மிதக்கும் அய்யா, தமிழர் மாமா கணக்கைக் கூடக் கட்டவிழ்த்துவிட்டாரா?" என்று பின்னூட்டமிடுகிற பாலா போன்ற நண்பர்களுக்கு போரடிக்கலாம். எனக்கும் பாலா இல்லாமல் போரடிக்கத்தான் செய்யும்.


பார்ப்போம்.

தோழமையுடன்

சுகுணாதிவாகர்.

கருணாநிதி என்னும் இலக்கியவாதி
(அல்லது)

திராவிட இயக்க இலக்கியம் - சில பார்வைகள்
பொதுவாக திராவிட இயக்க இலக்கியங்கள் குறித்து இரண்டு விதமான பார்வைகள் நிலவுகின்றன. ஒன்று திராவிட இயக்க இலக்கியங்கள் இலக்கியங்களே இல்லை என்று நிராகரிப்பது. இதற்கும் இரண்டுவித மனநிலைகள் காரணமாகின்றன. ஒன்று திராவிட இயக்கங்கள் மீதான அசூயை மற்றும் அருவெறுப்பான பார்ப்பன மற்றும் பார்ப்பன ஆதரவு மனநிலை. மற்றொன்று இலக்கியத்தில் அரசியல் கூடாது, பிரச்சாரம் கூடாது எனும் மேட்டுக்குடி 'உள்ளொளித் தரிசன' உளறல்கள்.


மறுபுறத்திலோ திராவிட இயக்க இலக்கியங்களைக் கொண்டாடுபவர்களுக்கு வேறு இலக்கியங்கள் பற்றிய அறிவு கிடையாது. அவர்களைப் பொறுத்தவரை ஆகச்சிறந்த படைப்பாளிகள் அண்ணாதுரை, கருணாநிதி, மிஞ்சிப்போனால் வைரமுத்து, அப்துல்ரகுமான்.


ஆனால் இவ்விரு பார்வைகளுக்கு அப்பால் வேறு சில அணுகுமுறைகள் தேவையென்றே கருதுகிறேன்.


1930கள் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தமிழில் பல புதிய சிந்தனைகளை அறிமுகம் செய்யும் அறிவுசார்க் காலமாக விளங்கியது. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் பெரியார் என்பது நமக்குத் தெரியும். அதேபோல் ஏங்கெல்சின் முக்கியமான நூலாகிய priciples of communism நூலை தமிழுக்கு மொழிபெயர்த்ததும் பெரியாரின் இயக்கம்தான்.


மார்க்சியம், கம்யூனிசம் மட்டுமல்லாது தாராளவாதக் கருத்துக்கள், பெண்ணியச் சிந்தனைகள் குறித்தும் பெரியாரியக்க ஏடுகளில் தொடர்ந்து எழுதப்பட்டன. தமிழுக்குப் புதிய சிந்தனைகளை அறிமுகப்படுத்தும் தேடல் கொண்டவர்களாக குத்தூசி குருசாமி, ராகவன், நீலாம்பிகை அம்மையார் போன்றவர்களைச் சொல்லலாம். கர்ப்பத்தைத் தடுப்பதற்கான மாற்றுப் புணர்ச்சி முறைகள் பற்றி குத்தூசி குருசாமி 30களிலேயே பேசுகிறார் என்பது ஆச்சரியமான ஒன்று. தமிழில் நாட்டார் ஆராச்சியைத் தொடங்கிவைத்த மயிலை.சீனி வேங்கடசாமி நாட்டார், சாத்தான்குளம் ராகவன் ஆகியோர் சு.ம இயகக்த் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


பாரதி பற்றித் தமிழ்ச்சூழலில் பேசப்பட்ட அளவிற்கு பாரதிதாசன் பேசப்படவில்லை. அவரது கவிதைகளில் ஆணாதிக்கம், மொழிப்பெருமிதம், தமிழ்த்தேசிய வெள்ளாளப் பெருங்கதையாடல்கள் இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால் அழகியல் ரீதியாகப் பார்த்தால் பாரதிதாசன் ஒரு நல்ல கவிஞர்..


அவரது 'அழகின் சிரிப்பு' தமிழில் நல்ல அழகியல் பிரதி.

'காதலும் வாழ்வும்' என்னும அவரது கவிதையில் காதலன் காதலியைப் பார்த்துச் சொல்கிறான்.

"நாயின் நாக்குப்போன்ற சிவந்த மெல்லடியைத் தூக்கிவை குடிசையில்"

என்ன ஒரு அழகான படிமம்!


அவரது கவிதைத் தொகுப்புகளில் வெளியாகாத தனிப்பாடல் ஒன்று அவர் நடத்திய 'குயில்' ஏட்டில் வெளியாகியிருக்கிறது. அது ஒரு கதைப்பாடல்.
ஒரு ரயில்வே கம்பார்ட்மெண்டில் ஒரு ஆணும் பெண்ணும் மட்டும் தனித்திருக்கிறார்கள். ஆண் நெடுநேரமாய்த் தன் வயிற்றைத் தடவிகொண்டேயிருக்கிறான். பெண்ணோ தன் மார்பைத் தடவிகொண்டிருக்கிறாள். ரயில் போய்க்கொண்டேயிருக்கிறது.


ஒரு கட்டத்தில் ஆண் அந்தப் பெண்ணிடம் கேட்கிறான், "உனக்கு என்ன பிரச்சினை?"

அவள் சொல்கிறாள், "எனக்குப் பால்கட்டிக்கொண்டுவிட்டது. மார்பு வலிக்கிறது, உனக்கு என்ன பிரச்சினை?"

ஆண் சொல்கிறான், "நான் சாப்பிட்டு நான்குநாட்களாகின்றன, வயிறு பசிக்கிறது"

அப்போதுதான் அந்த கவித்துவக் கணம் நிகழ்கிறது. யாரென்று தெரியாத அந்த ஆணுக்குத் தன் முலைப்பாலைப் பருகத் தருகிறாள் அந்தப் பெண். இருவரின் பிரச்சினையும் தீர்கிறது.உலகு தழுவிய அன்பும் மானுட விழுமியமும் அங்குப் புன்னகைக்கிறது.


இதேகாட்சியையொத்த ஓவியம் ஒன்று ரஷ்யாவில் இருப்பதாகப் படித்திருக்கிறேன். ஜார்மன்னனின் கொடுங்கோலாட்சியின்கீழ் போல்ஷ்விக் வீரர்கள் சிறைப்பட்டிருக்கிறார்கள். அவர்களைக் காண அவர்களது மனைவிமார்கள் வருகிறார்கள்.. புரட்சிவீரர்கள் தாகம் தாங்காது "தண்ணீர் தண்ணீர்" என்று அலறுகிறார்கள். ஆனால் அவர்களுக்குத் தண்ணீர் வழங்கப்படவில்லை.


அப்போது யார்யாருடைய மனைவிகளோ யாராருடைய கணவன்களுக்கோ முலைப்பால் தந்து தாகம் தணிக்கிறார்கள்.


சிந்தனை சார்ந்த சுயமரியாதை இயக்க அறிதலை உணர்ச்சித் தளத்தில் திசைதிருப்பி விட்ட 'பெருமை' அண்ணாதுரையையே சேரும். அவர் ஒரு சிறந்த ஒரு மேடைப்பேச்சாளர். ஆனால் திரைக்கதை வசனம் எழுதுவதில் கருணாநிதி அண்ணாவை வென்றுவிட்டார் என்றே கருதுகிறேன். கருணாநிதியின் வசனங்களில் இருக்கும், கூர்மையும் அரசியல் நையாண்டியும் அண்ணாவின் வசனங்களில் இல்லை.


ஆனால் அண்ணா ஒரு சிறந்த நாடகாசிரியர். அவரது 'நீதிதேவன் மயக்கம்' இன்றளவும் ஒரு சிறந்த நாடகப் பிரதி. ராவணனைக் குறிக்கும் 'இரக்கம் எனும் ஒரு பொருளிலா அரக்கன்' என்னும் கம்பனின் ஒரு சொல்லாடலை எடுத்துக்கொண்டு அண்ணா அந்த நாடகத்தில் பல தர்க்கங்களை அடுக்குவார். இன்றும் சில அம்சங்களை மாற்றி நவீன நாடகமாகப் போடக்கூடிய தகுதி 'நீதிதேவன் மயக்கத்திற்கு உண்டு. ('தீம்தரிகிட' ஞாநி அண்ணாவின் 'சந்திரமோகன் (அ) சிவாஜி கண்ட இந்துசாம்ராஜ்ஜியம்' நாடகத்தை நவீன நாடகமாக நிகழ்த்தியிருக்கிறார். ஆனால் அதைவிடவும் நீதிதேவன் மயக்கமே நல்ல பிரதி என்று கருதுகிறேன்.)


அண்ணாவிற்கும் 'நவீன' இலக்கிய உலகத்திற்கும் சம்பந்தமில்லையென்றே பலர் நினைக்கின்றனர். ஆனால் புதுமைப்பித்தன் இறந்தபோது ஒரு நல்ல இரங்கல் உரையை அண்ணா எழுதியிருக்கிறார்.'நவீன எழுத்தாளர் என்று சொல்லப்படும் புதுமைப்பித்தன் 'அவ்வையார்' படத்திற்கு வசனம் எழுதினார். ஆனால் அண்ணாவோ "சங்ககாலத்தில் 40க்கும் மேற்பட்ட அவ்வையார்கள் உண்டு. ஆனால் நீங்கள் அவர்கள் அனைவரையும் ஒரு டெஸ்ட் டியூபில் போட்டுக் குலுக்கி ஒரே அவ்வையாராகப் படம் எடுத்திருக்கிறீர்களே என்ன நியாயம்?" என்று விமர்சனம் எழுதினார்.


ண்ணாவின் சிறுகதையைப் போல கருணாநிதியின் சிறுகதைகள் சோபிக்கவில்லையென்றாலும்கூட அவரது 'குப்பைத்தொட்டி' சிறுகதை முக்கியமான ஒன்று. குப்பைத்தொட்டி என்னும் விலக்கப்படட் பொருள் ஒன்று தன் கதையைக் கூறும் மரபு அதற்குமுன் கிடையாது.


கருணாநிதியின் கவிதைகள் இன்றைய நவீன கவிதைகளோடு ஒப்பிடும்போது ஒன்றுமே கிடையாது என்றாலும் அவரது 'வசனகவிதை'களில் சில கவித்தெறிப்புகளும் இல்லாமல் இல்லை. ஆனால் அண்ணாதுரை கவிதையில் பரிதாபமாய்த் தோற்றுப்போனார். ("காதுகொடுத்துக்கேள் தம்பி, கருணாநிதி என்னுமரிய கழகக்கம்பி, ஏதுமறியாத் தமிழர்தூய வாழ்வை எனக்குப்பின் சீர்படுத்தும் மறவன் நீதான் " என்னும் கலைஞரைப் பற்றிய அண்ணாவின் கவிதை வரிகள் எத்தனை உடன்பிறப்புகளுக்குத் தெரியும் என்று தெரியவில்லை)


கருணாநிதியின் நவீனச்சிந்தனைக்கும் இலக்கிய மேதமைக்கும் ஒரே ஒரு சான்று.


"தெய்வந்தொழாள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை"
இந்த குறளுக்குப் பலவிதமான உரைகள் எழுதப்பட்டிருக்கின்றன.


"தெய்வத்தைக்கூடத் தொழாமல் கணவனைத் தொழும் மனைவி பெய் என்று ஆணையிட்டால் மழை பெய்யும்" இதுதான் பலராலும் சொல்லப்பட்ட மரபான உரை.


ஆனால் பாரதிதாசன் தனது கவிதையில் இதற்கு வேறு பொருள் தருகிறார்.

தலைவனும் தலைவியும் இருக்கிறார்கள். தலைவி தெய்வத்தைக் கூட தொழாமல் கணவனைத் தொழும் மனித எந்திரம். ( இத்தகைய 'கற்புசால் அடிமைகளை' அவரது குடும்பவிளக்கு, இருண்டவீடு போன்ற நூல்களில் சாதாரணமாகக் காணலாம்). வாசலில் புலவர்களும் பாணர்களும் பரிசிலுக்காகக் காத்துக்கிடக்கிறார்கள். அப்போது தலைவி, தலைவனிடம் "பெய்" என்கிறாள். தலைவன் கொடைமழை பெய்கிறான்.


ஆனால் இந்தக் குறளுக்குக் கலைஞர் தரும் உரையே அலாதியானது.


'மழை என்பது தன்னியல்பானது, சுதந்திரமானது. அது யார் சொல்லியாவது பெய்தால் அப்போது அது தன் தன்னியல்பையும் சுதந்திரத்தையும் இழக்கிறது. அப்படிப் பெய்தால் அது மழையே அல்ல, அது ஒரு அடிமை அவ்வளவுதான். தெய்வத்தைக் கூடத் தொழாமல் கணவனை மட்டும் தொழுபவள், யாருடைய கட்டளைக்கோ கட்டுப்பட்டுப் பெய்யும் மழை போன்ற அடிமைதான்' என்கிறார் கலைஞர்.


தெய்வந் தொழாதாள் கொழுநன் தொழுதெழுவாள் - தெய்வத்தைக் கூடத் தொழாமல் கணவனையே தெய்வமெனத் தொழுபவள், பெய்யெனப் பெய்யும் மழை - பெய்யென்றவுடனே ஆணைக்கிணங்கிப் பெய்யும் (அடிமை) மழை போன்றவள்.

இறுதியாக திராவிட இயக்க இலக்கியங்கள் அனைத்தும் சிறந்தவை என்றோ விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை என்பதோ என்பதல்ல என் கருத்து. அண்ணா, கலைஞர் ஆகியோரின் பிரதிகளில் ஆண்மய்ய மற்றும் ஆண் வக்கிரப்பார்வைகளும் பழமைவாதப் பார்வைகளும் நிறைந்திருக்கின்றன. ஆனால் அந்தக் காலப்பின்னணியின் அடிப்படையிலும் இலக்கியங்கள் என்கிற அங்கீகாரத்தின் அடிப்படையிலும் அணுகும்போது வேறு சில புதிய புரிதல்கள் தென்படலாம் என்பதே என் கருத்து.

ஜான் ஆபிரகாம்- ஒரு அசல் கலைஞன்'அக்கிரகாரத்தில் கழுதை' படத்தில் ஒரு காட்சிஜான் ஆபிரகாம் கிழித்துப்போடப்பட்ட நெருப்புக்குச்சியைப்போல இருந்தான் எப்போதும். காற்றைப்போல அலைந்தான். மனிதர்களிடம் முரண்டு பிடித்தான், முரண்பட்டான். சண்டை போட்டான். ஆனால் எப்போதும் மனிதர்களை நேசித்தான்.


1937- கேரளமாநிலம் குன்னங்குளம்தான் அந்த அக்கினிக்குஞ்சை ஈன்றது. அவனது தந்தை தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த கம்யூனிஸ்ட். ஆனாலும் அவனது குடும்பம் சனாதன கத்தோலிக்கக் குடும்பமாகவே இருந்தது. 1965ல் பூனா திரைப்படக் கல்லூரியில் படித்துத் தங்கப்பதக்கம் பெற்றான் ஜான்.
இந்தியச்சினிமாவில் இரண்டுவிதப் பள்ளிகள் இயங்குகின்றன. ஒன்று சத்யஜித்ரேவுடையது. மற்றொன்று ரித்விக் கட்டக்குடையது. கட்டக்கின் தலைமாணாக்கனாக ஜான் திகழ்ந்தான். வாழ்க்கை முழுதும் சினிமா எடுக்கும் தாகத்தோடு அலைந்தான். வணிகச்சினிமாக்காரர்கள், அரசியல்வாதிகள், குடியை வெறுப்பவர்கள் அனைவராலும் விலக்கப்பட்டவனாகவும் வெறுக்கப்பட்டவனாகவும் விளங்கினான் ஜான்.


1969ல்தான் அவனது முதல்படம் 'வித்யார்த்திகளே இதிலே இதிலே' வெளியானது. சில குழந்தைகள் விளையாண்டுகொண்டிருக்கிறார்கள். அவர்களது விளையாட்டில் பங்களாவின் காம்பவுண்டில் இருந்த பிள்ளையார் சிலை உடைந்துபோகிறது. பிறகு அந்த குழந்தைகள் தங்களுகுள் காசு பங்கிட்டு மீண்டும் அந்த பிள்ளையார் சிலையை நிறுவுகிறார்கள். ஆனால் படம் அதோடு முடியவில்லை. மீண்டும் குழந்தைகள் விளையாட ஆரம்பிக்கிறார்கள். மீண்டும் உடைந்து சிதறுகிறது சிலை.


1978ல்தான் அவனது புகழ்பெற்ற தமிழ்ப்படம் 'அக்கிரகாரத்தில் கழுதை' வெளியானது. ஒரு பார்ப்பனப் பேராசிரியர் ஓய்வுபெற்றுத் தன்கிராமத்திற்கு ஒரு கழுதைக்குட்டியோடு வருகிறார். அதனால் அவருக்கும் அக்கிரகாரத்துப் பார்ப்பனர்களுக்கும் இடையில் தகராறு வருகிறது. ஆனால் பேராசிரியர் வீட்டில் வேலைபார்க்கும் தலித்பெண் லட்சுமி கழுதை மீது மிகுந்த பிரியத்தோடு இருக்கிறாள். பேராசிரியர் ஊரில் இலாதபோது கழுதை கோயிலில் கட்டப்படுகிறது. இந்த இடைவெளியில் லட்சுமி யாராலோ 'கெடுக்கப்பட்டு' கர்ப்பமாகிறாள்.


லட்சுமியின் குழந்தை இறந்து பிறக்கிறது. அதற்குக் காரணம் கழுதைதான் என்று பார்ப்பனச் சனாதன மிருகங்கள் முடிவுகட்டிக் கழுதையைக் கொன்றுவிடுகின்றன. ஊர் திரும்பிய பேராசிரியர் சுடுகாடு சென்று கழுதையின் மண்டையோட்டை லட்சுமியிடம் கொடுக்கிறார். லட்சுமி ஒரு மரண நடனம் ஆடி அதை அங்கிருக்கும் தலித்துகளிடம் கொடுக்கிறாள். மண்டையோட்டில் தீ பற்றியெரிகிறது, அந்த தீ அக்கிரகாரத்திற்கும் பரவுகிறது.


1980ல் வெளியான ஜானின் 'செறியச்சண்டே க்ரூர கிருத்தியங்கள்' நிலவுடைமையின் உட்சபட்ச கொடூரத்தைச் சொல்கிறது. செறியச்சன் ஒரு குறுவிவசாயி. அந்த ஊரிலுள்ள நிலப்பிரபுவின் கொடுமைகளைக் கண்டு புத்தி பேதலித்துப் போகிறான். பிறகு அந்தக் கொடுமைகளையெல்லாம் தானே இழைத்தவன் என்று நினைக்கத்தொடங்குகிறான். போலிஸ் கலவரத்தை முன்னிட்டு ஊருக்கு வரும்போது ஓடிப்போய்மரத்தில் ஏறிக்கொள்கிறான். இன்றளவும் உலகமயமாகல் யுகம் வரை முதலாளித்துவத்தின் இரக்கமற்ற மனசாட்சி மனநோயாளிகளை உற்பத்தி செய்வதை ஜான் நெகிழ்வாய்ச் சொல்லிச்செல்கிறான்.


பிறகு ஜானும் அவனது நண்பர்களும் சேர்ந்து 'ஒடேசா' சினிமா இயக்கத்தை ஆரம்பிக்கின்றனர். மக்களிடமிருந்து பணம் வசூல் செய்து வினியோகஸ்தர்களையும் தயாரிப்பாளர்களையும் புறக்கணித்து மக்களிடமே படம் போட்டுக்காண்பிக்கிறான் ஜான்.


'அம்ம அறியான்' என்கிற அந்தப் படம் அம்மாவின் மீதுள்ள பாசத்தையும் ஒரு நக்சல்பாரி இளைஞனின் தற்கொலையயும் சொல்லிச்செல்கிறது. இசையில் ஈடுபாடுமிக்க ஒரு இளைஞன் அதே சாகச உணர்வோடும் கலைஞனுக்கே உரிய மெல்லிய மனசோடும் இயகக்த்திற்கு வருகிறான். ஆனால் தற்கொலை செய்துகொள்கிறான். டெல்லிக்குப் பயணம் செய்யும் புருஷன் என்கிற இளைஞன் வழியில் அந்த பிணத்தைப் பார்க்கிறான். எப்படியாவது அவனது தாயிடம் அவன் இறந்துவிட்ட செய்தியைச் சொல்லிவிட வேண்டும் என்கிற அவனது முயற்சியே 'அம்ம அறியான்'.


'அம்மாக்கள் நல்லவர்கள். புரிந்துகொள்ளக்கூடியவர்கள். அம்மாவிடம் சொல்லிவிட்டே புரட்சி செய்யப்போகலாம், தப்பில்லை' என்கிறான் ஜான்.


சினிமா பற்றிய அவனது ஒரு சில கருத்துக்கள்.

"நான் குட்டநாட்டுப் புலையனோடு பிரெக்ட் பற்றியோ மாசேதுங் பற்றியோ பேசமுடியாது. யார் எனக்குப் பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்குப் புரியும்படி படம் எடுக்கவேண்டும்"


"படங்களுக்கு சிம்பாலிக் ஷாட் தேவையில்லை. நான் ஒரு கழுதையைக் காட்டுகிறேன் என்றால் அது கழுதைதான். உது உங்களுக்குப் போப்பாகத் தெரிந்தால் அது உங்களது சுதந்திரம்"


"ஸ்டார் ஓட்டலில் தங்கிப் பதினைந்தாயிரம் சம்பளம் வாங்கும் நடிகையை ஏழையாக நடிக்க வைக்க கம்யூனிஸ்ட்கள் படாத பாடு படுகிறார்கள். உணர்வுகளைத் தூண்டிப் படம் எடுத்துக் காசு பறிப்பதில் இங்கே பூர்ஷ்வா சினிமாக்காரர்களும் கம்யூனிஸ்ட் சினிமாக்காரர்களும் ஒன்றுதான்"


" ஒரு சினிமா என்பது இயக்குனரின் சினிமாதான். ஜான் ஆபிரகாமின் சினிமா ஜானின் சினிமாதான். நிச்சயம் எம்.டி.வாசுதேவன்நாயரின் சினிமா அல்ல. ஒரு இயக்குனர் மடையனாக இருந்தால் மட்டுமே சினிமா திரைக்கதையாசிரியனின் சினிமாவாக இருக்க முடியும்"


"நடிகருக்கு சிறந்த நடிகர் என்று அவார்டு கொடுப்பது முட்டாள்தனமானது. உண்மையில் அந்த விருதை இயக்குனருக்குத்தான் கொடுக்க வேண்டும்"


"திராவிடப் பழங்குடி மக்களின் இயல்புகளையே என் சினிமாவில் பிரதிபலிக்க விரும்புகிறேன்".


ஜானிடம் கடைசிவரை இருந்த வேண்டுகோள் ஒன்றே ஒன்றுதான்.

" எனக்கு சினிமாவின் மூலம் ஒரு சல்லிக்காசு கூட லாபம் வேண்டாம். நான் பசியை ஜெயித்தவன். எனக்கு மேற்கூரை தேவையில்லை. ஆகாயத்தின் கீழ் படுத்துறங்குபவன் நான். நான் இயற்கையின் மைந்தன். புழுதியே எனக்கு இதம். எனக்குத் தேவையெல்லாம் என்னைச் சினிமா எடுக்க அனுமதியுங்கள்"


சாகும்வரை 'நான் ஒரு கம்யூனிஸ்ட்' என்று பெருமையாய்ச் சொல்லித் திரிந்த அந்தக் கலைஞன் சந்தித்த இன்னல்கள் சொல்லி மாளாது.

அவனது 'அக்கிரகாரத்தில் கழுதை' படத்திற்கு சிறந்த மாநிலப்படத்திற்கான தேசிய விருது கிடைத்தது. ஆனால் அப்போதைய எம்.ஜி.ஆர் அரசில் செய்தி விளம்பரத்துறை அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பன் 'அந்தப் படம் பார்ப்பனர்களின் மனதைப் புண்படுத்துவதாகக்' கூறி தமிழகத்தில் அந்தப் படத்தைத் தடை செய்தார். "முட்டாள் அமைச்சர், மோசமான சினிமாத் தயாரிப்பாளர்" என்று ஆர்.எம்.வீயை வருணிக்கிறான் ஜான்.


ஒருமுறை மலையாளத்தில் சிறந்த படத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான குழுவில் புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் சக்கரியாவும் இருக்கிறார். சக்கரியாவும் ஜானும் நண்பர்கள். ஜானின் 'அம்ம அறியானும்' விருதுக்கான போட்டிப் பட்டியலில் இருக்கிறது. சக்கரியா தங்கியிருந்த ஓட்டலில் அவரைச் சந்திக்க ஜான் பலமுறை முயற்சி செய்கிறான். ஆனாலும் அது சரியான காரியமில்லை என்பதால் சந்திப்பதைத் தவிர்க்கிறார் சக்கரியா.


கடைசியாக ஜான் ஒரு டீக்கடையில் காத்திருப்பதாக ஒரு ஆள் மூலம் சக்கரியாவுக்குத் தகவல் அனுப்புகிறான். சக்கரியா எரிச்சலோடு ஜானைச் சந்திக்கச் செல்கிறார். அதற்குள் இந்த விசயத்தை எப்படியோ மோப்பம் பிடித்துவிட்ட ஒரு சினிமா நிருபரும் அங்கே அமர்ந்திருக்கிறார். சக்கரியா கோபத்தோடு ஜானிடம் கேட்கிறார், "என்ன வேண்டும்?"
ஜான் சொன்னானாம், "எனக்கு ஒரு இருபத்தைந்து ரூபாய் கிடைக்குமா?" (இந்த இடத்தில் கண்ணீர் திரையிடுவதைத் தடுக்கமுடியவில்லை ஜான்)


ஜான், ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட்டைப் பற்றி ஒரு ஆவணப் படம் எடுத்துப் பாதியிலேயே நிறுத்திவிட்டான். 'கோவலனின் கதையை'த் தமிழில் சினிமாவாக எடுக்க வேண்டும் என்பதும் அவனது ஆசை.


எனக்கு அவன் வாழ்க்கையில் மிகப்பெரிய ஆச்சரியம் அவன் கடைசியாக எடுத்தது பெரியார் நூற்றாண்டு விழாவையொட்டி திராவிடர் கழகத்திற்காக பெரியார் பற்றிய ஒரு விவரணப் படம். ஒரு கலகக்காரன் மற்றொரு கலகக்காரன் பற்றிக் கடைசியாகப் படம் எடுத்துவிட்டுச் செத்துப்போனான்.

ஆம், 1987ல் தன் அய்ம்பதாவது வயதில் நண்பர்களோடு மொட்டை மாடியில் குடித்துக்கொண்டிருக்கும்போது கால்தவறிக்கீழே விழுந்து செத்துப்போனான் ஜான்.


ஜான், நீ உயிரோடிருந்தால் உன்னோடு மதுவருந்தி உனை முத்தமிட்டிருக்கலாம் ஜான். ஆனால் இப்போது நீயோ ஒரு புத்தகமாகச் சுருங்கிவிட்டாய். இப்போது மிஞ்சுவதெல்லாம் கண்ணீரும் உன் மீதான இனம் புரியாத பிரியமும், பெருமூச்சும், உன் 'அக்கிரகாரத்தில் கழுதை' என்கிற மாபெரும் கலைப்படைப்பு வெளியான அதே 1978ம் ஆண்டில்தான் நான் பிறந்தேன் என்கிற மகிழ்ச்சிப் பெருமிதமும்தான், ஜான்.

சென்னைப் புத்தக்கண்காட்சி சில சுவாரசியங்கள்


* கண்காட்சியின் வாயிலிலேயே கருணாநிதி கோட்சூட்டோடு ஜம்மென்று காட்சியளிக்கிறார். (லக்கிலுக் அந்த கட் அவுட் அருகிலேயே நீண்டநேரம் கண்கலங்கி நின்றிருந்தார்)

*. கிழக்கு பதிப்பகம் ஸ்டாலில் மார்க்சிஸ்ட்களுக்கும் புத்தகம் கிடைக்கிறது. ஆர்.எஸ்.எஸ் காரர்களுக்கும் புத்தகம் கிடைக்கிறது. ஒருமுறை அ.மார்க்சிடம் பேசிக்கொண்டிருக்கும்போது சொன்னார், "இந்த என்.ஜி.ஓக்காரர்களுக்கு பின்நவீனம் என்றால் என்னவென்று தெரியாது.தெரிந்தால் அதையும் ஒரு புரோஜெக்ட் போட்டு சம்பாதித்திருப்பார்கள்" என்று. தொண்டுநிறுவனங்களுக்கு புரோஜெக்ட், கிழக்கு பதிப்பகத்திற்கோ புத்தகங்கள். சேகுவாரா, பிடல்காஸ்ட்ரோ, சதாம் உசேன் என அனைவரையும் 'விற்று'க்கொண்டிருந்தார்கள்.

* கீழைக்காற்று பதிப்பகத்தில் இம்முறை பெரியார் சிலை, மார்க்ஸ், எங்கெல்ஸ் சாவிக்கொத்துகளை ஏனோ விற்கவில்லை. கீழைக்காற்றை விட்டு வெளியே வந்தால் அதிர்ச்சியாக இருந்தது. எதிரிலிருந்த பதிப்பகத்தின் பெயர் 'செட்டியார் பதிப்பகம்'. ஸ்டால் வாசலில் இருந்த தோழர்.துரை. சண்முகம் சொன்னார் "ஊர்ப்பக்கம் செட்டியார்&கோ பலசரக்குக்கடை ஆரம்பிப்பதைப்போல பதிப்பகம் ஆரம்பித்திருக்கிறார்கள்" என்று.
* வழக்கமாய்ப் புத்தகக் கண்காட்சியில் காணப்படும் குடிகாரக் கலைஞர்கள் லட்சுமி மணிவண்ணன், விக்கிரமாதித்யன் ஆகியோரைக் காணவில்லை.
* எப்போதும் 'தீம்தரிகிட' ஞானிதான் தன் ஸ்டாலில் தேர்தல் நடத்துவார். ஆனால் இந்தமுறை மக்கள் தொலைக்காட்சி சார்பில் 'பெண்களுக்கு இட ஒடுக்கீடு வேண்டுமா, வேண்டாமா' என்று ஓட்டுப்பெட்டி வைத்திருந்தார்கள். ஞானி தன் பேவரைட் பெரியகண்ணாடி இல்லாமல் அலைந்துகொண்டிருந்தார்.

* காலச்சுவடு வழக்கம்போல புத்தககண்காட்சியோடு எழுத்தாளர் கண்காட்சியும் நடத்துகிறது. நான் வந்த அன்றின் மறுநாள் ஏதோ புத்தக வெளியீட்டுவிழா. மாலதிமைத்ரி வெளியிடுவதாக அறிவிப்பு. (ஸ்டாலுக்குள் போகவில்லை)


*'உயிர்மை' ஸ்டாலுக்குள்ளும் நுழையவில்லை. ஆனால் ஸ்டால் முழுக்க ஏதோ சுஜாதாவே நிறைந்திருந்ததைப்போல ஒரு பிரமை.


* எப்போதும் நான் தவறாமல் செல்லும் ஸ்டால் 'விஜயபாரதம் ஸ்டால். அங்கேபோய் வழக்கமாய் அவர்கள் முஸ்லீம்கள், போப், கம்யூனிஸ்ட்கள், தி.க ஆகியோரைத் திட்டும் புத்தகங்கள் வாங்கினேன். தப்பித்தவறி அன்று கருப்புச்சட்டை போட்டுப் போயிருந்ததால் சுயம்சேவக்குகள் ஏற இறங்கப் பார்த்தனர். மணிமேகலைப் பிரசுர ஸ்டாலில் மார்க்கெட் இழந்த நடிகர் ராஜேஷ் இருந்தார் என்றால் விஜயபாரதம் ஸ்டாலில் இல.கணேசன் இருந்தார். இந்தமுறை இலவச இணைப்பாக பாரதமாதா படம் தந்தார்கள். (சூப்பர் பிகர்). நமக்குத்தான் அதைப்பார்த்தாலே பற்றிக்கொள்ளுமே, வழக்கம்போல கடாசிவிட்டு வந்தேன்.


* அய்ந்நூறுகளுக்கும் அதிகமான ஸ்டால் இருந்ததால் கிடட்த்தட்ட மூன்று மணிநேரம் நடக்க வேண்டியிருந்தது. மதியம் 12 மணிக்குச் சாப்பிட்டிருந்த இரண்டு சாமபார்வடையும் ஒரு பூரியும் கரைந்துபோய்ப் பசிக்க ஆரம்பித்திருந்தது. நேராக கேண்டினுக்குள் நுழைய என்னுடன் வந்த நண்பர் மெதுவடையும் சமோசாவும் வாங்கித்தந்தார். வடையோடு ஒரு யுத்தம் நடத்த வேண்டியிருந்தது.சமோசாவோ வாங்கித்தந்த நண்பரின் மனசு போல மென்மையாக இருந்தது. ( சமோசாவிற்குள் வெறும் மாவுதானே இருந்தது. அப்புறம் அப்படித்தானே இருக்கும்?)


* புத்தககண்காட்சியைப் பார்த்துவிட்டு அப்படியே பொங்கல் விடுமுறைக்கு ஊருக்குச் செல்லத்திட்டம் போட்டிருந்ததால் பிரான்சிலிருந்து வந்திருந்த ஷோபாசக்தி மற்றும் நண்பர்களோடு எஸ்கேப் ஆனோம்.வெளியே தென்கச்சி சுவாமிநாதனும் அன்று பல தகவல்களைக் கூறி முடித்திருந்தார்.
கண்காட்சி முடிவதற்குள் சென்னை திரும்பிவரவேண்டும். புத்தகம் வாங்குவதற்கல்ல, அதைக் கீழைக்காற்று போன்ற கடைகளிலேயே வாங்கிக்கொள்ளலாம். ஆனால் நான் போயிருந்தது தொடங்கிய மறுநாள் என்பதால் கூட்டமும் அவ்வளவாக இல்லை, பிகர்களும் அவ்வளவாக இல்லை.


(மற்றபடி புத்தகக கண்காட்சியின் வரலாறு, சிறப்பு எல்லாம் எழுதி உங்களையும் (என்னையும்தான்) போரடிக்க விரும்பவில்லை. என்னென்ன புத்தகங்களை வாங்கினேன் என்று சொல்ல ஆசைதான். ஆனால் இரண்டாயிரத்திற்கும் மேல் புத்தகங்களைத் தன் கைக்காசைப் போட்டு கூட வந்த என் பிரியத்திற்கும் மரியாதைக்குமுரிய நண்பர் வாங்கிக்கொடுத்து என்னை நெகிழ வைத்துவிட்டதால் ஓசிப் பணத்தில் பிலிம் ஓட்ட விரும்பவில்லை).

வைகோ எனது மதிப்பீடு

வைகோவைப்பற்றி அவர்களது கட்சிக்காரர்கள் பேசுகிறார்களோ இல்லையோ, வலைப்பதிவுகளில் ஆளாளுக்குப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். விவாதக்களம் வேறு ஆரம்பித்துவிட்டது.(எல்லாம் செந்திலால் வந்த வினை).


வைகோவின் பேச்சு எப்போதும் என்னை ஈர்த்ததில்லை. அவரது கூட்டங்கள் சகோ.தினகரனைத்தான் நினைவுபடுத்துகின்றன. எனக்குத் திமுகவில் பிடித்தபேச்சாளர் கருணாநிதிதான். அவரிடம் எப்போதும் சூழலைக் கலகலப்பாக்கி விடும் இயல்பு இருக்கும். வைகோவின் பேச்சுகளில் இருப்பதெல்லாம் நாடகப்பாணி மட்டுமே.


என்னுடைய குடும்பம் திமுக குடும்பம் என்பதால் பல திமுக மாநாடுகள், பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு இருந்தது. அப்போதெல்லாம் கருணாநிதி 'என் உயிரினும் மேலான உடன்பிறப்பே' என்றால் ஒரு சிலிர்ப்பிருக்கும். ஆனால் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு சென்னை சிந்தாதிரிப்பேடையில் நடந்த திமுக கூட்டத்திற்குப் போயிருந்தேன். கலைஞர் உடன்பிறப்புகளை அழைத்தவுடன் கைதட்டிவிட்டு உடன்பிறப்புகள் குவார்ட்டர் அடிக்கப்போய்விட்டார்கள். இப்போது திமுக என்பது வெறுமனே கார்பரேட் நிறுவனம்தான் என்பது கடைசித்தொண்டனுக்கும் தெரிந்திருகிறது.


இல்லையென்றால் மு.க கைதுசெய்யப்பட்டபோது ஒரே ஒருநாள் அமைதிக்குப் பிறகு தமிழகம் தன்னியல்புக்குத் திரும்பியிருக்காது. அவரது கைது சம்பவத்தையொட்டி நடந்த ஊர்வலத்தில் இரண்டு மூன்று பேர் கொல்லப்பட்டபோதும் திமுகவில் பெரிய சலனங்கள் இல்லை.


ஆனால் இப்படிப் பணியாளர்களாக இல்லாமல் கொள்கைப்பிடிப்புள்ள, தலைவன்மேல் தனிப்பட்ட அபிமானம் கொண்ட சிலராவது இருப்பதுதான் மதிமுகவின் பலம். ஆனால் திமுகவில் இருந்தால் சம்பாதிக்கலாம். மதிமுக தொண்டர்களுக்கு அந்த வாய்ப்பும் கிடையாது. அத்தகைய தொண்டர்களுக்குத் தலைமை தாங்கும் பெரும்பாரத்தைச் சுமக்கும் அளவிற்கு வைகோவிற்கோ பெருந்தோள்கள் இல்லை.


ஒரு தலைவன் அடிக்கடி உணர்ச்சிவசப்படக்கூடாது, உணர்ச்சிவசப்படுவதுபோல நடிக்கலாம். திண்டுக்கல் மாநாட்டில் கருணாநிதி "தம்பி கண்ணீரை என் கூலிங்கிளாஸ் மறைத்துவிட்டது. நான் அழுததை நீ பார்த்திருக்க முடியாது" என்றுதான் சொன்னார். ஆனால் வைகோவோ குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்துவிட்டார். கருணாநிதியின் சாமர்த்தியம் வைகோவிற்கு நூறில் ஒரு பங்குகூடக் கிடையாது. (கருணாநிதி போன்ற ஆற்றல்மிக்க தலைவன் நேர்வழியில் சிந்தித்திருந்தால் தமிழ்ச்சமூகம் எங்கேயோ போயிருக்கும் என்பது வேறு விஷயம்)


வைகோவிடம் கைவசம் இருக்கும் ஒரே துருப்புச்சீட்டு புலி ஆதரவு அரசியல். அதையும் இப்போது திருமாவளவன் கைப்பற்றிக்கொண்டார். கருணாநிதியைப்போலவே திருமாவுக்கும் புலி பாலிடிக்ஸ் என்பது அரசியல் மூலதனமே. ஆனால் வைகோவிற்கு அதையும் தாண்டிய உணர்வுபூர்வமான விஷயம். ஆனால் இனி ஒன்றும் செய்ய ஏலாது.


செஞ்சி ராமச்சந்திரனும் எல்.ஜியும் வெளியேறுவதால் மதிமுகவில் பெரிய பாதிப்பு இருக்காதுதான். ஆனால் பாதிப்பு ஏற்படுத்த மதிமுகவில் என்ன இருக்கிறது?


எனக்கு வைகோவிடம் தனிப்பட்ட முறையில் சொல்ல இரண்டே இரண்டு ஆலோசனைகள்தான் இருக்கின்றன.

1. அவர் ராமதாஸ், திருமாவைப்போல சினிமாவில் நடிக்கலாம். நிச்சயம் அவர்களை விட வைகோவால் நன்றாக நடிகக் முடியும். ஆனால் இப்போதுள்ள தமிழ்ச்சினிமாவுக்கு வைகோ போன்ற மிகைநடிகர்கள் தேவையில்லை என்பதால் அவர் சீரியல்களில் நடிக்கலாம்.

2. அல்லது வைகோ ஜெயாடிவியில் வேலைக்குச் சேரலாம்.


இந்த இரண்டில் எது நடந்தாலும் வைகோ ஆசைப்பட்டபடி அவரது முகம் டிவியில் வரும். ஆனால் இந்த இரண்டில் ஏதாவது ஒன்று நடக்க வேண்டுமென்றாலும் வைகோ அவரது கட்சியைக் கலைக்க வேண்டும்.

பெண்களிடம் தோற்ற கதை
டுத்தவர் காதல் அனுபவங்களைப் படிப்பது நாகரிகமில்லை என்ற உறுத்தல் உங்களிடம் இருந்தால் இந்த பதிவை மூடிவிட்டு நீங்கள் வேறு பதிவிற்குச் சென்றுவிடலாம்.


னக்கு முதல் காதல் அரும்பியபோது வயது பத்து. தீபா என் அய்ந்தாம் வகுப்புத் தோழி. காரணம் தெரியாமலே நான் பத்துவயதில் நாத்திகனானதைப் போலவே பத்துவயதில் தீபா என்னை ஈர்த்தாள். அப்போது எனக்கிருந்த எண்ணமெல்லாம், 'பெரியவனானபிறகு அப்பா அம்மாவைக் கூட்டி வந்து பெண்கேட்கவேண்டும்' என்பதே. அது காதல்தானா என்பது எனக்குப் புரியவில்லை. (இந்தவயதுவரை எது காதல் என்பதும் எனக்கு விளங்கவில்லை.)


அதற்குப் பின் பல பெண்கள் என்னைக் கடந்துபோனார்கள். ஒவ்வொரு காலத்திலும் ஏதாவதொரு பெண் சிலிர்ப்பூட்டினாள். ஆனால் நான் காதலித்ததாக நம்பிய எந்த பெண்ணும் என்னைக் காதலிக்கவில்லை. என்னைக் காதலித்த எந்த பெண்ணையும் நான் காதலித்ததில்லை. எதிரெதிர் துருவங்களின் ஈர்ப்பினால் உண்டாகும் அந்த மின்சாரத்தைக் காலம் எனக்கு வழங்கவேயில்லை.

எத்தனையோ பெண்கள் சிலிர்ப்பூட்டியபோதும் இரண்டே இரண்டு பெண்கள் மட்டும் மனதில் தங்கிப்போனார்கள்.


த்தாம் வகுப்பு டியூஷன். பானுமதி எப்போதும் சைக்கிளில் வந்தாள். பஸ்ஸ்டாண்ட் அருகேயுள்ள டியூஷனுக்கு நானும் அக்தரும்(அக்தர் உசேன்) நடந்துதான் போவோம். பானுமதி அழகாயிருந்தாள், அந்தக்கால ராதிகாவைப் போல. எப்படியாவது அவளது வீட்டைக் கண்டுபிடித்துவிடுவதென்று தீர்மானித்தோம். நாங்கள் அவளை எப்படிப் பின் தொடர்வது?.


ஒருநாள் டியுஷன் முடிவதற்கு சற்றுமுன்பு காம்பஸால் அவளது சைக்கிளைப் பஞ்சராக்கினோம். பிறகென்ன பானுமதி தள்ளிக்கொண்டு போக நாங்கள் பின் தொடர்ந்தோம். கடைசியில்தான் தெரிந்தது. அவள் எங்கள் தெருவின் கடைசியிலிருக்கும் சலவைத்தொழிலாளர் குடியிருப்பில்தான் குடியிருந்தாள் என்பது.


ஆனால் மறுநாள் நடந்ததுதான் வேடிக்கை. பானுமதி, சாரிடம் புகார் செய்தாள். "சார், என்னுடைய சைக்கிளில் 35 பஞ்சர் இருக்கிறது' என்று. அடப்பாவிகளா, நாங்கள் ஒரே ஒரு பஞ்சர்தானே போட்டோம். மீதி பஞ்சர் போட்டது யார்? ஒரு ஊர்வலமே நடந்திருக்கும்போல. அதைவிட இன்னொரு கொடுமை யாரோ ஒரு 'நல்லவன்' வாத்தியாரின் சைக்கிளையும் சேர்த்துப் பஞ்சராக்கியிருந்தான்.


ல்லூரிக்காலம். ஜெய்சிறீ. அழகாயிருந்தாள். மலர்ந்த பூக்களில் அவள் ஒரு வளர்ந்த பூவாயிருந்தாள். அவளது புன்னகை, நடையசைவு, பின்னல் எல்லாம் இம்சைப்படுத்தின.


கல்லூரி தொடங்கும்போது அவளுக்காகக் காத்திருப்பதும், கல்லூரி முடிந்தபிறகு வழியனுப்புவதும் வாடிக்கையானது. ஆனால் ஒரு சொல்லும் பேசமுடியவில்லை. 3000 பேர் கூடியிருக்கும் மேடைகளில் முழங்கமுடிகிறது. 'ஈஸ்வர அல்லா தேரா நாம் என்ற காந்தி ஏன் சாகும்போதுமட்டும் ராம் ராம் என்றார், யேசுவையோ அல்லாவையோ ஏன் துணைக்கழைக்கவில்லை' என்று கேட்டு கைதட்டல் பெறமுடிகிறது. ஆனால் ஒரு பெண்ணிடம் பேசமுடியவிலலையே!.


அப்போது நான் தீவிர மார்க்சிய ஆதரவாளன். பூமியைப் புரட்டிப் போடும் நெம்புகோல் கவிதைகளுக்காய் மெனக்கெட்டவன். 'வாருங்கள் இளைஞர்களே' என்றுதான் கவிதைகள் ஆரம்பிக்கும். அவ்வப்போது ஜார்ஜ்தாம்சனின் 'புரட்சிகர இயங்கியலின் வரலாறு மார்க்ஸ் முதல் மாவோ வரை' போன்ற புத்தகங்களைக் கையில் வைத்துப் புரட்சிகரப் படம் வேறு ஓட்டவேண்டியிருந்தது.

ஆனால் காதலுக்கும் புரட்சிகரப் பிலிம்களுக்கும் அதிகதூரம் என்பது எனக்கு உறைத்தபோது காலம் மோசமாய் என்னைக் கடந்து போயிருந்தது.


ல்லூரியின் இறுதி நாட்கள். அவளிடம் எபடியாவது பேசிவிட வேண்டும். "நான் அய்.லவ்.யுவெல்லாம் சொல்ல மாட்டேன். நீங்க அழகாயிருக்கீங்க. இவ்வளவுநாள் உங்களை சைட் அடிச்சேன், அதுக்கு தேங்க்ஸ், அவ்வளவுதான் சொல்வேன்" என்று நண்பர்களிடம் சொல்லியிருந்தேன். (வீம்பு!)


ஆனால் ஒவ்வொருநாளும் அந்த நாளை ஒத்திபோட்டுக்கொண்டே வந்தேன். ஒவ்வொரு ஒத்திவைத்தலுக்கும் ஒவ்வொரு காரணங்கள். "கூடவர்ற பொண்ணு ரவுடி மாதிரி. எனக்குப் பயமாயிருக்கு" இப்படியாக.

கடைசியில் ஒருநாள். அவளும் அவளது (ஆபத்தில்லாத) தோழியும் மட்டும் தனியாகப் போய்க்கொண்டிருந்தார்கள். பேசிவிட வேண்டும் என்று தீர்மானித்தேன்.


தைரியம் வர வேண்டுமல்லவா. லெனினின் 'சர்வதேசியமும் தேசிய இனப்பிரச்சினைகளும்' புத்தகத்தை எடுத்துக்கொண்டேன்.


அவள் முன்னால் போய்க்கொண்டிருக்கிறாள். நான் பின்னால். தூரம் அதிகமாகிக்கொண்டேயிருக்கிறது. எங்கள் காந்திகிராமக் கல்லூரியை பொறுத்தவரை பேருந்திலிருந்து கல்லூரி செல்ல இருபது நிமிடம் நடக்க வேண்டும். நாங்கள் 16 வருடங்களுக்குப் பிறகு போராட்டமெல்லாம் நடத்தி யூனியன் வாங்கினோம். இனும் பல கோரிக்கைகளையும் முன்வைத்து வெற்றி பெற்றோம். ஆனால் கல்லூரி நிர்வாகமே முன்வந்து ஒரு கோரிக்கையை நிறைவேற்ற முன்வந்தபோது நாங்கள் மறுத்துவிட்டோம். அது பேருந்துநிறுத்தத்திலிருந்து கல்லூரிக்கு பேருந்து கொண்டுவருகிறோம் என்பது. இருபது நிமிடம் கடலை போடுவதைக் கெடுக்கும் பஸ் யாருக்குத் தேவை?.


ரயில்வே கிராஸிங்கில் திரும்பும்போது ஜெய்சிறீ திரும்பி என்னைப் பார்த்தாள். எனக்குப் பதட்டமானது. வியர்க்கத்தொடங்கியது. உடலில் மெல்லிய நடுக்கம் பரவியது. புத்தகத்தைப் பிரித்து 32ம் பக்கத்தைப் படிக்கத்தொடங்கினேன்.


"தேசியம் என்பது முதலாளித்துவக் கருத்தாக்கம்தான் என்றாலும் தேசிய இனங்களின் பிரிந்துபோவதற்கான சுயநிர்ணய உரிமையைப் பாட்டாளிவர்க்கம் அங்கீகரிக்க வேண்டும்"


அப்போது என்னைப் பின் தொடர்ந்து அவசரமாக சைக்கிளில் வந்த என்நண்பர்கள் 'என்ன தோழர் பேசிட்டியா?" என்றார்கள். (பொதுவாகக் கல்லுரியில் மாமா, மச்சி என்று கூப்பிடுவதே வழக்கம். ஆனால் 'தோழர்' என்றழைக்கும் கெட்ட பழக்கம் என்னிடமிருந்து மற்றவர்களுக்கும் பரவியிருந்தது)


எங்கே சொல்வது? ஜெய்சிறீ போயிருந்தாள். இப்போது என் கைகளில் லெனின் கனத்துக்கிடந்தார்.

ஒரு அபாய அறிவிப்பு


பொங்கல் விடுமுறையை முன்னிட்டு நிறையபேர் வெளிநாடுகளிலிருந்து சென்னை வருவதாக லக்கிலுக், பாலபாரதி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே வலைப்பதிவாளர் சந்திப்பு என்னும் ஆபத்து ஏற்படும் அறிகுறிகள் தெரிகின்றன. சென்னையில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (நான் ஊருக்கு எஸ்கே...ப்)

கருத்துரிமைக்கு கல்தா

பொதுவாக நான் தணிக்கையில் நம்பிக்கையற்றவன். கருத்துரிமையிலும் ஜனநாயகத்திலும் நம்பிக்கை உடையவன் என்று பலமுறை வலியுறுத்தி வந்திருக்கிறேன். அந்த வகையில்தான் பாலா உள்ளிட்ட பலரது பின்னூட்டங்களையும் அனுமதித்து வந்திருக்கிறேன்.


நான் சாதி, இந்துத்துவம், ஆணாதிக்கம், முதலாளியம் ஆகியவற்றிற்கு எதிரானவன். அத்தகைய போக்குகளையே என் எழுத்துக்களில் கண்டிருப்பீர்கள். ஆனால் இதற்கு மாறுபட்ட கருத்துள்ளவர்களோடும் சாத்தியப்பட்டவரை உரையாடியே வந்திருக்கிறேன்.


குறிப்பாக எனது 'பார்ப்பனர்களைப் பாதுகாத்த பெரியார்' பதிவில் இந்த அணுகுமுறையையே கையாண்டிருக்கிறேன். ஆனால் ஒரு உரையாடலும் நடக்கிறபாடாய்த் தெரியவில்லை. மாறாக முன் தீர்மானங்களும் சாதியப்பிடிவாதங்களுமே மீண்டும் மீண்டும் பல்லிளிக்கிறது.


பாலாவைப்பொறுத்தவரை அவர் எந்த பதிவையும் அறிவார்ந்த விவாதங்களோடு எதிர்கொள்வதில்லை. ஒருமுறை ஒரு நண்பர் கேட்டார், "விடாது கருப்பையெல்லாம் நீக்குகிறார்களே, பாலாவை நீக்கமாட்டார்களா? என்று. நான் சொன்னேன். "பிளாக்கே இல்லாதவரை எப்படி நீக்குவது?".


பாலாவின் நோக்கம் உண்மையிலேயே எழுதுவதாயிருந்தால் அவர் தனி வலைப்பதிவை ஆரம்பித்து எழுதலாம். ஆனால் அவர் கழிப்பறைகளில் எழுதிதள்ளுவதைப்போலவே என் பிளாக்கைப் பயன்படுத்துகிறார். பாலாவின் இத்தகைய மனநோயைப் புரிந்துகொள்கிறேன்.மேலும் உலகத்தில் ஆகக்கொடிய மனநோய் சாதிதான் என்பதையும் அந்த மனநோய் பாலாவிடம் அளவிற்கு அதிகமாகவே இருக்கிறது என்பதையும் புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனாலும் பாலா எழுதுவதற்காக நான் கழிப்பறைகள் கட்டிக்கொண்டிருக்கமுடியாதே?.


மேலும் என் மரணத்தின் ருசி என்ற பதிவில் ஒரு நண்பர் 'எரோடிக் பிளாக்' என்று பின்னூட்டம் போடுகிறார். அந்த சுட்டியைத் தொடர்ந்து சென்றால் நிர்வாணப்படங்கள் காட்சியளிக்கின்றன. எரோட்டிக் பிளாக் பார்ப்பதெல்லாம் நல்லவிஷயம்தான். ஆனால் அதை விளம்பரம் செய்வதற்கு என் பிளாக்தானா கிடைத்தது? பாலா போன்றவர்கள் தனியாக பிளாக் ஆரம்பித்து இத்தகைய நற்பணிகளைத் தொடரலாமே.


ஆகவே நண்பர்களே வேறுவழியேயில்லாமல் இனி வரும் பின்னூட்டங்களை மட்டுறுத்தல் செய்யலாம் என்றெருக்கிறேன். இதில் எனக்கு சம்மதமில்லை என்றபோதும் இதைச் செய்ய நேர்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.. கொள்கைகளைச் சிலகாலம் நடைமுறைக்காக தளர்த்திக்கொள்ளலாம் என்பதை சமூக இயங்கியல் எப்போதும் நிரூபித்தே வந்திருகிறது.

இது தற்காலிகமான முடிவுதான் என்றாலும் இந்த முடிவு எடுத்ததற்காக வருந்துகிறேன்.

வெயில் மற்றுமொரு தேவர் படம்?பலரும் பத்திரிகைகளும் பாராட்டியதால் 'வெயில்' படத்தைப் பார்க்க நேர்ந்தது (டி.வி.டியில்தான்). ஆனால் நான்கு சீன்களுக்குள் எழுந்து வரும்படியாகிவிட்டது.


முதல் எரிச்சல் 'வெயிலோடு விளையாட்டி வெயிலோடு உறவாடி..' என்னும் முதல் பாடல். பாடலாசிரியர் என்ன வரிகளை எழுதியிருக்கிறாரோ அதை அப்படியே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இதற்கு கலைஞன் தேவையில்லை. கார்பன் பேப்பர் போதும்.

கௌதமிடமும் இந்தப் பிரச்சினை இருக்கிறது. 'காலை எழுந்ததும் என் கண்கள் முதலில் தேடித்திரிவதுந்தன் முகமே..' என்று தாமரை எழுதினால், கௌதம் காலையில் எழுவது, படுக்கை, காதலனைத் தேடுவது என்று காட்டிக்கொண்டிருப்பார், எதோ பிராக்டிகல் கிளாஸ் டெமான்ஸ்டிரேசனைப்போல. வெயிலிலும் 'அண்ணாச்சி கடையில் எண்ணையில் குளித்த புரோட்டா" என்றால் புரோட்டாக் கடையைக் காட்டுகிறார்கள்.


அதேபோல 'அழகி'யில் ஆரம்பித்து இந்த சின்னவயது கிராமத்துக் காதலை சலிக்கச்சலிக்க காட்டுகிறார்கள். சின்னவயதில் காதலிக்கக்கூடாது என்றில்லை, (என் முதல்காதலின் போது வயது பத்து). ஆனால் அதை எதோ சக்சஸ் பார்முலாவாக ஆக்கும்போதுதான் எரிச்சல் வருகிறது.


படத்தில் முக்கியமான எரிச்சல் வேறு. பரத் தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் ஒரு விளம்பரக் கம்பெனி நடத்துகிறார்.அதில் பொறாமைப் படுகிறவர்கள் இன்னொரு தேவர் கட்டைப்பஞ்சாயத்துக்காரரான போஸ் என்பவரிடம் முறையிடுகின்றனர். போஸ் கூப்பிட்டு பரத்தை எச்சரிக்கிறார். அப்போது பரத் சொல்கிறார், "அண்ணே தைரியம் இல்லாட்டி இந்த தொழிலில் பிழைக்க முடியாது. பீயள்ளத்தான் போகணும்".
தேவர்கள் பீயள்ளக்கூடாதா என்ன? நான் எழுந்துவந்துவிட்டேன்.

மன்னிக்க வேண்டுகிறேன்.

எனது 'ஈ.வெ.ராவின் வெங்காயமும் கட்டவிழ்ப்பும்' என்னும் பதிவில் நண்பர் பொட்டிக்கடை இட்ட பின்னூட்டத்திற்கு பதில் தெரிவிக்கும் முகமாய் நான் இட்டிருந்த இன்னொரு பின்னூட்டத்தில்,

"தமிழில் நவீன சிந்தனைகளை அறிமுகப்படுத்தியவர்களில் நாகார்ஜுனன், ராஜன்குறை என்ற இரண்டு பார்ப்பனர்களைத் தவிர வேறு யாருமில்லை"
என்று குறிப்பிட்டிருந்தேன்.

எனக்கு தனியாக அனுப்பிய ஒரு மின்னஞ்சலில் தோழர்.நாகார்ஜுனன் "நான் நீண்ட வருடங்களுக்கு முன்பே நான் பிறந்த பார்ப்பனச் சாதியை உதறிவிட்டே. சாதியத்தை எதிர்த்த சமூக சீர்திருத்தப் பணிகளில் என்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறேன். குறிப்பாக விளிம்புநிலை மக்களின் மீது கவனம் செலுத்தி வருகிறேன். எனவே என்னைப் பார்ப்பனர் என்று குறிப்பிட வேண்டாம்' என்று தெரிவித்திருக்கிறார்.


உண்மையில் தோழர்.நாகார்ஜுனனை இழிவுபடுத்துவது என் நோக்கமில்லை. நாகார்ஜுனன் தமிழின் முக்கியமான புத்திஜீவி, நவீனச் சிந்தனைகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் என்ற அடிப்படையில்தான் அந்தக் கருத்தை வெளியிட்டிருந்தேன்.

முதன்முதலில் தமிழில் பல புதிய விஷயங்கள் குறித்த உரையாடலைத் தொடங்கிவைத்தவர் என்ற முறையிலும் 'கலாச்சாரம், அ-கலாச்சாரம், எதிர்கலாச்சாரம்' என்னும் முக்கியமான நூலைத் தமிழுக்குத் தந்தவர் என்ற முறையிலும் நான் நாகார்ஜுனனை மிகவும் மதிக்கிறேன்.


எனவே என் வார்த்தைகளால் நாகார்ஜுனன் மனம் புண்பட்டிருந்தால் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.

மண்- ஈழத்துத் தமிழ்ச்சினிமா - விமர்சனம்மண்ணில் ஒரு ரத்தத்துளி தெறித்துவிழுவதிலிருந்து படம் தொடங்குகிறது.


கனகராயன்பாளையம் என்பது இலங்கையிலுள்ள ஒரு அழகிய கிராமம். இங்கு பெரும்பாலும் வெள்ளாளர்களும் பிற ஆதிக்கச்சாதியினருமே நில உடைமையாளர்களாக இருக்கிறார்கள்.தலித்துகளும் மலையகத்தமிழர்களும் விவசாயக்கூலிகளாக இருக்கிறார்கள்.

பாடசாலைகளிலும் வெள்ளாள ஆதிக்கமே நிலவுகிறது. 'ஆறுமுகநாவலர் தமிழுக்கும் சைவத்துக்கும் தொண்டாற்றினார்' என்னும் பாடத்தை ஒப்பிக்க முடியாத தலித் மாணவன் கனகரத்னம்(எ) கணேசனை பரமசிவம்பிள்ளை என்னும் வெள்ளாள வாத்தி தண்டிக்கிறார்.

அங்குள்ள ஒரு வெள்ளாள நில உடைமையாளரின் மகன் பொன்னம்பலம்(எ)பொன்ராசு. பள்ளியில் சகமாணவ்ர்களுடன் விடலைப்பருவலூட்டியில் திளைக்கிறான். அப்போது வவுனியாவில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட ஒருமலையகத்தமிழர் குடும்பம் அங்கு குடியேறுகிறது. அந்த குடும்பத்திலிருந்து லட்சுமி என்னும் மாணவி பள்ளியில் சேர்கிறாள்.


அவளைத் தன் அருகில் அமரவைக்க அனுமதிக்கவும் மறுக்கிறாள் கேலீஸ் என்கிற வெள்ளாளச்சிறுமி. விளையாட்டிலும் அவளைச் சேர்த்துக்கொள்வதில்லை. அங்கு வேலைபார்க்கும் குணசீலன் என்னும் தலித் அவர்களுக்கு அறிவுரை கூறி லட்சுமியை அவர்களோடு விளையாடச்செய்கிறார்.

இதற்கிடையில் பொன்ராசுவுக்கும் லட்சுமிக்கும் இடையில் காதல் அரும்புகிறது. குணசீலனும் லட்சுமியை விரும்பினாலும் லட்சுமி விரும்புவதென்னவோ பொன்ராசுவைத்தான். லட்சுமியின் தந்தை ஒரு வெள்ளாள பண்ணையாரால் திருட்டுப்பட்டம் சுமத்தப்பட்டு வேலையிலிருந்து நீக்கப்படுகிறார். லட்சுமியின் தாய்மாமன் ராஜா இதயநோய் உள்ளவன். இன்னொரு வெள்ளாள நில உடைமையாளரின் பண்ணையில் வேலைசெய்யும்போது பாதிக்கப்பட்டு தகுந்த சிகிச்சையின்றி இறக்கிறான்.

லட்சுமிக்கும் பொன்ராசுவுக்கும் ஒருகட்டத்தில் உறவு ஏற்பட கர்ப்பமாகிறாள். பொன்ராசுவின் தந்தையோ இருவருக்கும் திருமணம் செய்துவைக்க மறுக்கிறார். குணசீலனின் ஆலோசனையின் பேரில் தங்கையா போலிசை நாட வெள்ளாள பண்ணையாரின் பணபலத்திற்கு முன்னால் போலீஸ் வாயடைத்துப்போகிறது.

பொன்ராசுவும் 'கீழ்சாதி நாயைக் கட்டிக்க' விருப்பமில்லாமல் லண்டன் சென்றுவிடுகிறான். லட்சுமியின் வீட்டில் ஒவ்வொருவராக இறந்துவிடுகிறார்கள்.

18 வருடங்களுக்குப் பிறகு கனகராயன் பாளையம் பற்றி ஆவணப்படம் எடுக்க கனகராயன்பாளையம் வருகிறான் பொன்ராசு. அவனது உதவிக்கு இரு இளைஞர்கள் வருகிறார்கள்.
முடிவில்தான் தெரிகிறது, அந்த இளைஞர்களில் ஒருவன் பொன்ராசுவால் ஏமாற்றப்பட்ட லட்சுமியின் மகன். அவன் பொன்ராசுவை மரத்தில் கட்டிப்போட்டு துப்பாக்கியால் சுட்டு வீழ்த்துகிறான்.

படம் இப்படியாக முடிகிறது, ' இதுவரை வணங்குவதற்காக மட்டுமே குனிந்த கைகளில் முதன்முதலாக துப்பாக்கி ஏந்தப்பட்டது' .

படத்தில் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டிய விஷயங்கள்.
கதாநாயகியாக வரும் ஷானாவின் நடிப்பு. கண்களில் விளையாடியிருக்கிறார். கதாநாயகனின் விடலைப்பருவக்குறும்புகள். பாடசாலையில் நிலவும் தீண்டாமை வேறுபாடுகளைத் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டுவது.
இன்னொன்று கேமராவில் கொள்ளை கொண்ட ஈழத்து நிலப்பிரதேசத்தின் அழகு. அடப்பாவிகளா இந்த அழகுப்பூமியிலா இவ்வளவு கொலைகள் நடக்கின்றன, பிணங்கள் விழுகின்றன என்று கதறத்தோன்றுகிறது. உண்மையில் ஈழத்தின் பசுமை பாய்ந்த வயல்வெளிகளை முத்தமிடத்தோன்றுகிறது (நிச்சயம் மொழிப்பற்றாலோ, தமிழீழப் பாசத்தாலோ அல்ல). ஈழத்துத் தமிழ்தான் உண்மையிலேயே பாரதி சொன்னதுபோல 'இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே'தான்
.
அதேபோல பாராட்டப்பட வேண்டிய முக்கியமான விஷயம், 18 வருடங்களுக்குப் பிறகு தாயகம் திரும்பும் பொன்ராசு காதலியைக் கைவிட்டதற்காக மனம் வருந்தவில்லை, ஆனால் போரினாலும் கலவரங்களாலும் சிதைக்கப்பட்ட வீடுகளையும் பாடசாலைகளையும் இழந்த உறவுகளையும் நினைத்தே கண்ணீர்விடுகிறான். தாயகப்பெருமிதம், இழந்த மண் குறித்த ஏக்கம் இவற்றின்பின் ஒளிந்திருப்பது நிலப்பிரத்துவ மதிப்பீடுகளும், குறுகிய சாதிய வெறியும்தான் என்பதைக் கோடிட்டுக் காட்டியதற்காக 'மண்' படத்தைப் பாராட்டலாம்.


அதேபோல பொன்ராசுவின் நண்பன் ஒருவன் இயக்கத்திற்குச் சென்றுவிடுகிறான். 18 வருடங்களுக்குப் பிறகு லண்டனிலிருந்து திரும்பி கும்மாளமாய்க் குடித்து பார்ட்டி கொண்டாடும் பொன்ராசுவைப் துப்பாக்கி ஏந்திய இயக்கப் பாதுகாவலர்கள் சகிதம் பார்க்க வரும் அந்த நண்பனிடமும் (போராளி?) பொன்ராசுவின் சாதிய உணர்வுகுறித்தோ, ஒரு பெண்ணுக்கு இழைக்கப்படட் அநீதி குறித்தோ எந்த கேள்விகளும், விமர்சனங்களும் இல்லை. இத்தகைய மெல்லிய நுணுக்கங்களைப் படம் தொட்டுக்காட்டியிருக்கிறது.


எல்லாவற்றிற்கும் மேலாக ஈழத்தில் நிலவும் சாதியப் பிரச்சினைகள் குறித்துப் பேசிய முதல் தமிழ்ப்படம் என்பதால் 'மண்' படத்தை நிறையவே பாராட்டலாம்.


அதேபோல படத்தில் பல பிரச்சினைகளும் இருக்கின்றன.

குறிப்பாக மலையகத்தமிழர்களாக வரும் வாகைசந்திரசேகரும் 'காதல்'சுகுமாரும் ஈழத்துத்தமிழ் பேசாமல் தமிழகத்தமிழே பேசுகிறார்கள். உண்மையில் மலையகத் தமிழர்களின் உச்சரிப்பு எப்படியிருக்கும்? ஈழத்து நண்பர்கள்தான் பதில் சொல்லவேண்டும்.


அழகியல் உணர்வென்று பார்த்தால் சாதாரண தமிழ்ச்சினிமாவின் தரத்தைத் தாண்டவில்லை 'மண்'. இதிலேயும் விரகப்பாடல், குத்துப்பாடல், பிரச்சாரப்ப்பாடல் சம்பந்தமில்லாமல் ஒலித்து இம்சைப்படுத்துகிறது. இசை சுமார் ரகம்தான்.

இளமைக்காலங்களில் உடல்மொழியில் விளையாடிய சந்திரசேகருக்கு என்ன ஆனதோ தெரியவில்லை, படம் முழுக்க நடிக்கவே தெரியாதவர் போல இருக்கிறார். 'காதல்' சுகுமாரும் அப்படியே.

அதேபோல படத்தில் சில கேள்விகளும் எழுகின்றன.
என்னதான் சாதியப்பிரச்சினைகள் ஈழத்தில் இருந்தாலும் இனப்பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் படத்தில் ஒரு காட்சியைத் தவிர எந்தக் காட்சியிலும் இயக்கங்களே வரவில்லை. எந்த கலவரமோ இனப்பிரச்சினையோ காட்டப்படவில்லை. தமிழ்த்தேசியவாதிகள் இனப்பிரச்சினையைக் காட்டி சாதியப்பிரச்சினை குறித்து விவாதிக்காமலே இருப்பதைப் போலத்தானே இதுவும்? மேலும் இயக்கங்களுக்குள் இருக்கும் சாதிய உணர்வுகள் குறித்தும் காத்திரமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதேபோல வெளியில் மட்டுமில்லாது இயக்கங்களுக்குல் நிலவும் சாதிய உணர்வுகளையும் சொல்வதற்கும் வாய்ப்பாக இருந்திருக்குமே?


என்னதான் ஆதிக்கச்சாதி இளைஞனாக இருந்தாலும் தன் காதலியை விட்டுவிட்டு வெளிநாடு சென்றுவிடுவான் என்பது செயற்கையாகத் திணிக்கப்பட்டது போல இருக்கிறது. ஒருவேளை அந்தப் பெண்ணை 'அனுபவிப்பதுதான்' அவனது நோக்கம் என்றால் அதைத் தெளிவாகக் காட்சிப்படுத்தியிருக்கலாமே? உண்மையாகவே இருவரும் மனமொத்துக் காதலிப்பதுபோலத்தானே காட்சிகள் அமைந்திருக்கின்றன?

எப்படியோ மாவீரர் கதையாடல்களும் சாகசப் பெருமிதங்களும் நிறைந்த ஈழத்துப் பூமியில் நிலவும் சாதியக் கொடூரங்களையும் வெள்ளாள ஆதிக்க வெறியையும் அரைகுறையாகவேனும் சொல்லத்துணிந்ததற்காக 'மண்' திரைப்படத்திற்கு ஒரு ரெட்சல்யூட்.

கதை, வசனம், பாடல்கள், இயக்கம் : புதியவன்.
திரைக்கதை : ராஜ் கஜேந்திரா
ஒளிப்பதிவு : எஸ்.எல்.பாலாஜி
இசை : ஜெர்மன் பாலாஜி

மரணத்தின் ருசி
அனேகமாக நீங்கள் இந்த பதிவைப் படிக்கும்போது நான் இறந்துபோயிருக்கலாம்.

பூக்களை நிரப்பிக்கொண்ட
கவிதைகள் மனசாட்சியற்றவை
எவரேனும் எழுதுங்களேன்
தலைகுப்புற வீழ்ந்து
தலைமோதிச்சிதறும்
மரணத்தின் அழகினை

மரணத்தின் தித்திப்பை ருசித்திருக்கிறீர்களா? வழவழப்பான அதன் கரங்கள் பற்றிக்குலுக்கியிருக்கிறீர்களா? அல்லது மரணத்தின் மெல்லிய இடுக்குகளில் கசியும் வெளிச்சக்கீற்றுகளைத் தரிசித்திருக்கிறீர்களா?
இல்லையென்றால் நீங்கள் பொய் சொல்கிறீர்கள். காதல், வீட்டை விட்டு ஓடிப்போகும் எண்ணம், தற்கொலைமுயற்சி மூன்றுமில்லாத மானிட வாழ்க்கை பொய்யால் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறது.
தற்கொலை என்பது கோழைத்தனம் என்று சிலர் சொல்லக்கூடும் (பலராகவுமிருக்கலாம்). அது தைரியமற்றவர்களின் வார்த்தை. மரணம் என்பது மாவீரம்.
அறிவின் சேகரம், சிலிர்க்க வைத்த பெண்கள்/ஆண்கள், வாசிப்பின் திமிர், ரகசிய சுயமைதுனம், மாவீரர் கல்லறையில் முகம்புதைத்து அழத்தோன்றும் ஏக்கம், தேசத்தை காட்டிக்கொடுக்கத்துணியும் தீரம், கண்ணீரின் வாதை,வன்மத்தின் வீரியம்,துரோகத்தின் சம்பளம், நட்பின் சுமை, கலவியின் உச்சம் இவையெல்லாம் அற்று ஒரு புள்ளியாய்ப் புள்ளியாய்ப் போய்விடத் தைரியமற்றதே வாழ்வின் மீதான நேசம்.

மரணத்தின் கரிய நிழனினின்று தப்புவதற்காகவே வாழ்க்கையின் மடியில் போய் விழுகிறீர்கள் என்று நம்ப வைக்கப்பட்டிருக்கிறீர்கள். உண்மையில் வாழ்க்கையின் கண்கூச வைக்கும் பிரகாசத்தினின்று தப்புவதற்காகவே சென்று சேர்கிறோம் மரணத்தின் மெல்லிய அணைப்பில்.

மரணத்தின் சுவைகண்டு மீண்டிராவிட்டால் தேவகுமாரனின் விவிலியத்தில் கவித்துவம் பாய்ந்திராது.

சாம்பல்கிண்ணத்தில் உதிரும் சாம்பல்களிலிருந்து விருட்டென்று பறக்கின்றன வவ்வால்கள்.

அனேகமாக இந்த பதிவை நீங்கள் படிக்கும்போது நான் இறந்துபோயிருக்கலாம், அல்லது உயிருடனும்.

பாலா

பாலாவை நீங்கள் பார்த்திருக்காவிட்டாலும் பாலாவைப்போன்ற பலரைப் பார்த்திருப்பீர்கள். மழைத்துளிகளைப் போல திடுமென வீழ்ந்து பூமியெங்கும் ஒன்றாய், பத்தாய், நூறாய்ப் பல்கிப் பெருகியிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து பீதியூட்டப்படட் வசவுகளை நீங்கள் எதிர்கொண்டிருக்கக்கூடும். எதிர்மொழி பற்றிய கவலையற்ற அவர்களது உரையாடலில் நீங்கள் பங்குபெறாததுகூடப் பிரச்சினையில்லை. ஆனால் நீங்கள் ஆரோக்கியமான மனநிலையிலிருப்பதாய்க் கற்பித்து அவர்களை மனநோயாளிகள் என்று அழைக்கத்தொடங்கினீர்கள். அப்படி மனநோயாளி என்று அழைக்கப்பட்டவன் தான் பாலா.


பதிமூன்று வயது வரை பாலாவின் வாழ்க்கை இயல்பாகத்தான் இருந்தது. தாயும் தந்தையுமற்ற அவனை மாமாதான் வளர்த்தார். அவனுக்கு எல்லாமே மாமாதான். அவர் அன்புப்பிழம்பாய் இருந்தார். ஆனால் அந்த மாமா ஒருநாள் தன்னைவிட வயது குறைந்த பக்கத்து தெரு ஜெயாவைத் திருமணம் செய்துகொண்டதுதான் அவனால் தாங்கமுடியவில்லை. அது ஜெயாவிற்கும் மாமாவிற்குமான விவகாரம் என்றும் சிந்திக்க முடியவில்லை அவனால்.


சுற்றிக்கொண்டிருந்த பூமி அவன கால்களுக்கடியில் நழுவிக்கொண்டிருந்தது. என்ன உலகம் இது, துயரங்களின் விளைநிலமாய் மாறியிருக்கிறது.


அன்றிலிருந்து பாலா மாமாவைப் பார்ப்பதில்லை.பக்கத்து தெருவான சங்கரன் தெருவில் தனியாக வீடு எடுத்து தங்கினான். பெண்களையும் காதலையும் வெறுக்க முயன்றான். எப்போதும் காவிவேட்டியே அணிந்திருந்தான்.


அவன் வசிக்கும் சங்கரன் தெருவிலுள்ள கழிப்பறையில் எதார்த்தமாய்த்தான் அதைத் தொடங்கினான். மாமாவை இழந்த சுய இரக்கம் உடலெங்கும் தகித்தது. கழிப்பறையில் எழுதினான், "மாமா ஏன் இப்படிச் செய்தாய், ஏன் என்னைக் கைவிட்டாய்?".

சிறிதுநேரத்தில் சுய இரக்கம் கோபமாய் மாறியது. 'மாமா நீ ஒரு தே....பையன்" என்று எழுதினான். அப்படியும் அவனது ஆத்திரம் அடங்கவில்லை. இந்த வயதில் உனக்கு சுகம் கேட்குதா? 'மாமா ஜெயாவை...' என்று ஆரம்பித்து அவர்களுக்கிடையிலான அத்தனை சரசங்களையும் கற்பனையிலும் கழிவறையிலும் எழுதித்தீர்த்தான்.


இப்படியே தொடர்ந்தது. கொஞ்சநாட்களில் மாமாவைத் திட்டுவதை நிறுத்திவிட்டான். மாமா இப்போது அவனது மனதில் இல்லை. ஜெயாதான் இருந்தாள். எழுதத்துவங்கினான், 'நான் ஜெயாவை...'

மாமாவின் இடத்தில் தன்னை இருத்திக்கொண்ட பாலா போகப்போக ஜெயாவின் இடத்தில் வேறுபல பெண்களையும் இருத்தத்தொடங்கினான். கோயில் குருக்களின் மனைவி, பக்கத்துவீட்டு விமலா, 8ம் வகுப்புப் படிக்கும் ஆனந்தி, பால்கார புவனா என்று பலரோடும் தன்னை இணைத்து தானே எழுத ஆரம்பித்தான்.

இப்போது கழிவறையில் எழுதுவதே அவனது பணியாகிப்போனது. விளையாட்டாய், யுத்தமாய், சவாலாய், தவமாய் எழுத ஆரம்பித்தான், எழுதினான். இப்போது வீட்டிலிருக்கும் நேரத்தைவிட கழிவறையில்தான் அதிகநேரம் இருந்தான். முன்பு காலை ஒருமுறை, இரவு ஒருமுறை என்று போனவன் இப்போது உணவுக்கு முன், உணவுக்குப் பின் என்று பாலா கழிபப்றை போய்வந்தான்.

ஆனால் காலம் மனசாட்சியற்றதுதானே. அவனது இன்னொரு உலகமும் இடிந்து விழுந்தது. அந்த கொடிய காலையில் அவன் பார்க்கும்போதே நகராட்சி வாகனம் கழிப்பறையை இடிக்க ஆரம்பித்திருந்தது.

பாலாவின் உடல் நடுங்கியது. நெஞ்சில் பாரம் அதிகரித்தது. இப்போது அவன் உலகங்கள் ஏதுமற்றவன். ஆவேசம்வந்தவனாய்த் தரையில் குத்தவைத்து காற்றில் எழுததுவங்கினான், 'நான் லலிதாவை...'

கேட்கக்கூடாத கேள்விகள்

எனக்கு ராஜா என்று ஒரு நண்பன் இருந்தான். கல்லூரி நண்பன். சைவப்பிள்ளைமார்த்தனத்துக்கேயுரிய பிள்ளைப்பூச்சிக் குணத்தோடு இருந்தான். தினமும் காலையில் பிள்ளையார் கோயிலுக்குத் தண்ணீர் ஊற்றிவிட்டுத்தான் காலேஜுக்கே வருவான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். காலேஜ் விட்டவுடனே மணியடித்தவுடன் வீட்டிற்கு ஓடி விடும் டைப். (நாங்கள் அவரவர் ஆளை வழியனுப்பிவிட்டுத்தான் வீட்டிற்குப் போவோம்)

ஆனால் அவனிடம் நான் ஒருநாள் கேட்ட கேள்வி அவன் சுபாவத்தையே புரட்டிப்போட்டது. தன் தலைப்பிரட்டை வாழ்க்கையிலிருந்து வெளியேறினான்.


அவனிடம் எப்போதும் ஒரு சைக்கிள் இருக்கும். அது எப்போதும் பளபளப்பாக இருக்கும். ஒருநாள் பேருந்துநிலையம் வரை செல்ல வேண்டுமென்று அவன் சைக்கிளை இரவல் கேட்டேன். ஆனால் அவன் தரமறுத்தான்.

"எங்கப்பா காலையில எழுந்திருச்சி சைக்கிளை துடைச்சு வைப்பார். நான் சைக்கிளெல்லாம் தரமுடியாது"

"பஸ்டாண்ட் வரைக்கும்தாண்டா. போய்ட்டு வந்திடுறேன்"

"இல்லை. எங்கப்பா காலையில எழுந்திருச்சி சைக்கிளைத் துடைச்சி வச்சிருக்கிறார்"

"பத்து நிமிஷத்தில வந்திருவேன்"

"இல்லை. எங்கப்பா காலையில..."

"உங்கப்பா சைக்கிளைத் தினம் துடைச்சுவைப்பாரா?"

"ஆமாம்"

"துடைச்சு வைப்பார். ஆனா ஓட்ட மாட்டாரா?"

"ஆமாம்"

"அப்புறம் எப்படிடா நீ பொறந்தே?"


நாங்கள் திண்டுக்கல்லில் தலைகீழ் இலக்கிய அமைப்பு என்று ஒரு இலக்கிய அமைப்பு நடத்திவந்தோம். அப்போது பெரியார் பற்றிய ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தோம். தலைமை அ.மார்க்ஸ். அப்போதுதான் மார்க்ஸ் முதன்முதலில் அறிமுகம்.
கூட்டத்திற்கு முன்பு நண்பர்கள் உரையாடிக்கொண்டிருந்தோம். அப்போதுதான் வந்தார் ஒரு தமிழ்த்தேசியத் தோழர். தமிழ்நாடு மார்க்சிய லெனினியக் கட்சியில் இருந்தார்.வந்தவுடனேயே மார்க்ஸை நோக்கி, "நீங்கள் நாட்டு விடுதலையில் நாட்டங்கொண்டவர்தானே தோழர்?" என்று ஆரம்பித்தார். அப்போதே மார்க்ஸ் எங்களை ஒருமாதிரியாகப் பார்த்தார்.


நாங்கள் 'டீ குடிக்கப்போகிறோம்" என்று ஒவ்வொருவராய்த் தப்பித்து வெளியே வந்துவிட்டோம். ஆனால் தமிழ்த்தேசியத் தோழரோ 'டீ குடிக்கமாட்டேன், தேனீர்தான் குடிப்பேன்' என்று பிடிவாதமாய் மார்க்சுடன் அமர்ந்துவிட்டார்.


கிட்டத்தட்ட அரைமணி நேரம் தனித்தமிழில் தமிழ்த்தேசிய வீரவுரைகளை ஆற்றியிருக்கிறார். ஒருகட்டத்தில் மார்க்ஸ் அவரிடம் கேட்டாராம்.

"உங்கள் பெயர் என்ன தோழர்?"
"என்னுடைய உண்மையான பெயர் ஆரோக்கியதாஸ். ஆனால் தமிழில் தமிழ்மன்னன் என்று மாற்றிக்கொண்டேன்"

மார்க்ஸ் சொன்னாராம், "நியாயப்படி பார்த்தால் நீங்கள் உடல்நல அடிமை என்றல்லவா வைத்திருக்க வேண்டும்?"

பொதுவுடைமை இயக்கத்தோழர் ஜீவாவை உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவர் சுயமரியாதை இயக்கம், சுயமரியாதை சமதருமக்கட்சி என்று ஆரம்பித்து கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு வந்தவர். சு.ம.இயக்கத்திற்கு முன்பு அவர் தனித்தமிழ்ப்பற்றாளராக இருந்தார். தனித்தமிழிலேயே பேசுவார், எழுதுவார்.
ஒருநாள் மறைமலையடிகளைப் பார்க்க அவரது வீட்டிற்குச் சென்றாராம். அடிகளாரின் வாயிற்கதவைத் திறந்து உள்ளே நுழைந்தபோது மறைமலை அடிகள் கேட்டாராம், "யாரு போஸ்ட்மேனா?"

அன்றிலிருந்து ஜீவா தனித்தமிழில் பேசுவதை நிறுத்திவிட்டார் (ஆதாரம் பொன்னீலன் எழுதிய 'ஜீவா என்றொரு மானுடன்)


'தென்மொழி' என்ற இதழை எத்தனை பேர் படித்திருப்பீர்கள் என்று தெரியாது. பெருஞ்சித்தனாரின் இதழ். அந்த இதழ் முழுக்க தனித்தமிழில்தான் இருக்கும்.

தனித்தமிழ் என்றால் நீங்களும் நானும் நினைக்கும் அளவிற்கல்ல, தனித்தமிழோ தனித்தமிழில் இருக்கும்.உதாரணமாக அவர்கள் நடத்தும் மாநாட்டிற்கு கருணாநிதி வருகிறார் என்றால் 'கருணாநிதி' என்று அழைப்பிதழில் போடமாட்டார்கள். கருணை என்பது வடமொழி. 'அருள்நிதி என்றுதான் எழுதுவார்கள்.

எம்.ஜி.ஆர் - ம.கோ.இரா, ராமதாஸ் - மாலடிமை (மால்_ திருமால், ராமன் திருமாலின் அவதாரம், தாஸ் - தாசன் - அடிமை)

இப்படித் தமிழ்ப்'படுத்துவது' எனக்கு என்னவோ போலிருக்கும். உங்கள் பெயரை தனித்தமிழில் மாற்றிக்கொள்வது சரி. ஊரான் பெயரை மாற்றுவது சரியா? 'பாட்ஷா' படத்தில் 'ஆட்டோக்காரன்' பாட்டில் ரஜினி பாடுவாரே "பிரசவத்துக்கு இலவசமா வர்றேம்மா, உண் பிள்ளைக்கொரு பேருவச்சுத் தர்றேம்மா"பிரசவத்திற்கு இலவசமாக வந்தால் ஆட்டோக்காரர் பிள்ளைக்கு பேர் வைப்பாரா என்ன?
குழப்பமாக இருந்தது.

நான் ஒருமுறை தென்மொழிப்பற்றாளரிடம் கேட்டேன்.
"அய்யா, பொள்ளச்சி மகாலிங்கம் தமிழ்த்தேசிய முதலாளிதானே?"
"ஆம் அதிலென்ன அய்யம்?"
"மகாலிங்கத்தை மாநாட்டிற்குக் கூப்பிடுவதில் தவறில்லையே?"
"தவறொன்றுமில்லை அய்யா"
" பொள்ளாச்சி மகாலிங்கத்தின் பெயரை தனித்தமிழில் எப்படிப் போடுவீர்கள்?"

பொன்வண்டு பிரியாணி
ஆறாவது விரல்

"பொன்வண்டுபிரியாணி சாப்பிடுகிறாயா??"

இசை இப்படிக்கேட்டபோது அதிர்ந்துதான் போனேன்.

பொன்வண்டைப் பிரியாணி செய்வதா? பொன்வண்டு என்பது சதையாலான வானவில் இல்லையா? அதைக் கறிசமைக்க மனம் வருமா? அதுவும் இசை போன்ற அழகிய பெண்ணால் .

உண்மையில் இசை நிரம்ப அழகானவள். யாரையும் புன்னகைக்க வைக்கும் முகம். அதுவும் அவளின் ஆறாவது விரல் மிகவும் அழகானது. பொதுவாக யாருக்கும் ஆறாவது விரல் கருச்சிதைவான சதைப்பிணடத்தைப் போல் தொங்கிக்கொண்டிருக்கும். ஆனால் இசைக்கோ அது செடியின் பக்காவாட்டில் பூத்த பூ போல அவ்வளவு ரம்மியமாக இருக்கும்.அதுசரி அழகான பெண் கொலை செய்யக்கூடாதா என்ன?

" இது என் பிறந்தநாள் ட்ரீட்" என்றாள் இசை.

ஆமாம். இன்று அவளது பிறந்தநாள். ஆடு சமைத்துப் பிரியாணி செய்யலாம், மாடு கறி சமைக்கலாம்.பொன்வண்டை மட்டும் சமைக்கக்கூடாதா?

சிலரது உலகம் ரொட்டித்துண்டுகளானது, சிலரது உலகம் மதுக்குடுவைகளானது, சிலருக்குக் கலவியால். அவரவர் உலகத்தை அவரவர்தானே சிருஷ்டித்துக்கொள்கிறோம். அவரவர் உலகத்தை நியாயப்படுத்துவதற்கான காரணங்களயும். அடுத்தவர் உலகத்தின் மீதான குற்றப்பட்டியல்களையும். உண்மையில் உலகம் எதாலானது? உலகம் எதாலுமானதில்லை, எதாதாலோ ஆனது.குழம்பிப்போனேன்.

இசை மீண்டும் அந்த கேள்வியை எழுப்பினாள்.

" இல்லை. நான் பக்கத்து அறையில் மது அருந்தப்போகிறேன். நீ உணவருந்திவிட்டு வா"

இப்போது என் உலகம் மதுவால் நிரப்பப்பட்டிருக்கிறது. மதுவின் மெல்லிய மிதவை மீண்டும் அந்த கேள்விகளை எழுப்பியது. தலை வலிப்பது போலிருந்தது.

உணவருந்திவிட்டு வந்த இசை என் உதடுகளில் முத்தமிட்டாள். எனக்கெனவோ அருவெறுப்பாகவிருந்தது. ஏதோ பொண்வண்டின் ரத்தக் கவுச்சி அடிப்பதைப் போல.

"ஒரு நிமிடம். நான் இன்னும் கொஞ்சம் மது அருந்திக்கொள்கிறேன்".

இசை என்னை இறுக்க அணைத்துக்கொண்டாள். நான் விலகிவிட முயன்றேன். ஆனால் அவள் ஒரு பசித்த சிறுத்தையைப் போல இருந்தாள். நான் நடந்த விளையாட்டிற்கு வெறும் சாட்சியாக மட்டும் இருந்தேன். அவள் அடிவயிற்றிலிருந்து கனன்ற தீ மெல்ல மெல்லத் தன் சுவாலையைப் பரப்பியது. உக்கிரமாய்ப் பெய்த பெருமழையின் முடிவில் சொட்டுச்சொட்டாய் நீர் வழிந்து தீ அணைந்தது.இப்போது இரை முடித்த சிறுத்தை தன் நாக்கைச் சுழற்றிக்கொண்டது.

நான் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து ஆசுவாசப்படுத்திக்கொண்டேன்.இசை என்னை மீண்டும் இறுக்க அணைத்தாள். அந்த அணைப்பில் அழுத்தம் இருந்தது. அழைப்பின் மிச்சங்களும்.

"இல்லை, வேண்டாம்" என்றேன்.
" ஏன்?" இசை
" எனக்குக் களைப்பாக இருக்கிறது"
அவள் உரக்கச் சிரித்தாள்.
அவளது சிரிப்பு என் ஆண்மையின் மீது வீசப்பட்ட கல் போலத் தோன்றியது
."இல்லை முடியும். ஆனால் தூக்கம் வருகிறது"
" போடா தூங்குமூஞ்சி, தூங்குவதற்காப் பிறந்தாய்?"

அதுசரி உலகம் தூக்கங்களாலுமானது என்பது அவளுக்கென்ன தெரியும்? நான் படுக்கையில் அவசரமாக சரிந்தபோது உலுக்கினாள்."சிகரெட் பாக்கெட்டை எங்கே வைத்திருக்கிறாய்?"
"உன் ஹேண்ட்பேகில்தான் வைத்திருக்கிறேன்"
சொல்லிவிட்டுத் தூங்கிப்போனேன்.

திகாலை நான்கு மணியிருக்கும். சிறுநீர் உந்துதல் என்னை எழுப்பியது.சிறுநீர் கழித்துவிட்டு தண்ணீர் குடித்துவிட்டு வந்தேன்.சிகரெட் குடிக்கவேண்டும் போலிருந்தது.

அவளது ஹேண்ட்பேகைத் திறந்து சிகரெட் பாக்கெட்டை எடுத்தேன். பாக்கெட்டிற்குள் ஏதோ ஊர்வதைப் போல இருந்தது. என்ன இது? பாக்கெட்டைத் திறந்தால் ஒரு அழகிய பொண்வண்டு என்னைப் பார்த்து மிரண்டு குறுகுறுவென்று ஓடியது.

எனக்கு ஒன்றும் விளங்கவில்லை.
இசையை நோக்கிக் குனிந்தேன்
அதிர்ச்சியாக இருந்தது.

இப்போது இசையின் கைகளில் அய்ந்துவிரல்கள் மட்டுமே இருந்தன.