பாலா

பாலாவை நீங்கள் பார்த்திருக்காவிட்டாலும் பாலாவைப்போன்ற பலரைப் பார்த்திருப்பீர்கள். மழைத்துளிகளைப் போல திடுமென வீழ்ந்து பூமியெங்கும் ஒன்றாய், பத்தாய், நூறாய்ப் பல்கிப் பெருகியிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து பீதியூட்டப்படட் வசவுகளை நீங்கள் எதிர்கொண்டிருக்கக்கூடும். எதிர்மொழி பற்றிய கவலையற்ற அவர்களது உரையாடலில் நீங்கள் பங்குபெறாததுகூடப் பிரச்சினையில்லை. ஆனால் நீங்கள் ஆரோக்கியமான மனநிலையிலிருப்பதாய்க் கற்பித்து அவர்களை மனநோயாளிகள் என்று அழைக்கத்தொடங்கினீர்கள். அப்படி மனநோயாளி என்று அழைக்கப்பட்டவன் தான் பாலா.


பதிமூன்று வயது வரை பாலாவின் வாழ்க்கை இயல்பாகத்தான் இருந்தது. தாயும் தந்தையுமற்ற அவனை மாமாதான் வளர்த்தார். அவனுக்கு எல்லாமே மாமாதான். அவர் அன்புப்பிழம்பாய் இருந்தார். ஆனால் அந்த மாமா ஒருநாள் தன்னைவிட வயது குறைந்த பக்கத்து தெரு ஜெயாவைத் திருமணம் செய்துகொண்டதுதான் அவனால் தாங்கமுடியவில்லை. அது ஜெயாவிற்கும் மாமாவிற்குமான விவகாரம் என்றும் சிந்திக்க முடியவில்லை அவனால்.


சுற்றிக்கொண்டிருந்த பூமி அவன கால்களுக்கடியில் நழுவிக்கொண்டிருந்தது. என்ன உலகம் இது, துயரங்களின் விளைநிலமாய் மாறியிருக்கிறது.


அன்றிலிருந்து பாலா மாமாவைப் பார்ப்பதில்லை.பக்கத்து தெருவான சங்கரன் தெருவில் தனியாக வீடு எடுத்து தங்கினான். பெண்களையும் காதலையும் வெறுக்க முயன்றான். எப்போதும் காவிவேட்டியே அணிந்திருந்தான்.


அவன் வசிக்கும் சங்கரன் தெருவிலுள்ள கழிப்பறையில் எதார்த்தமாய்த்தான் அதைத் தொடங்கினான். மாமாவை இழந்த சுய இரக்கம் உடலெங்கும் தகித்தது. கழிப்பறையில் எழுதினான், "மாமா ஏன் இப்படிச் செய்தாய், ஏன் என்னைக் கைவிட்டாய்?".

சிறிதுநேரத்தில் சுய இரக்கம் கோபமாய் மாறியது. 'மாமா நீ ஒரு தே....பையன்" என்று எழுதினான். அப்படியும் அவனது ஆத்திரம் அடங்கவில்லை. இந்த வயதில் உனக்கு சுகம் கேட்குதா? 'மாமா ஜெயாவை...' என்று ஆரம்பித்து அவர்களுக்கிடையிலான அத்தனை சரசங்களையும் கற்பனையிலும் கழிவறையிலும் எழுதித்தீர்த்தான்.


இப்படியே தொடர்ந்தது. கொஞ்சநாட்களில் மாமாவைத் திட்டுவதை நிறுத்திவிட்டான். மாமா இப்போது அவனது மனதில் இல்லை. ஜெயாதான் இருந்தாள். எழுதத்துவங்கினான், 'நான் ஜெயாவை...'

மாமாவின் இடத்தில் தன்னை இருத்திக்கொண்ட பாலா போகப்போக ஜெயாவின் இடத்தில் வேறுபல பெண்களையும் இருத்தத்தொடங்கினான். கோயில் குருக்களின் மனைவி, பக்கத்துவீட்டு விமலா, 8ம் வகுப்புப் படிக்கும் ஆனந்தி, பால்கார புவனா என்று பலரோடும் தன்னை இணைத்து தானே எழுத ஆரம்பித்தான்.

இப்போது கழிவறையில் எழுதுவதே அவனது பணியாகிப்போனது. விளையாட்டாய், யுத்தமாய், சவாலாய், தவமாய் எழுத ஆரம்பித்தான், எழுதினான். இப்போது வீட்டிலிருக்கும் நேரத்தைவிட கழிவறையில்தான் அதிகநேரம் இருந்தான். முன்பு காலை ஒருமுறை, இரவு ஒருமுறை என்று போனவன் இப்போது உணவுக்கு முன், உணவுக்குப் பின் என்று பாலா கழிபப்றை போய்வந்தான்.

ஆனால் காலம் மனசாட்சியற்றதுதானே. அவனது இன்னொரு உலகமும் இடிந்து விழுந்தது. அந்த கொடிய காலையில் அவன் பார்க்கும்போதே நகராட்சி வாகனம் கழிப்பறையை இடிக்க ஆரம்பித்திருந்தது.

பாலாவின் உடல் நடுங்கியது. நெஞ்சில் பாரம் அதிகரித்தது. இப்போது அவன் உலகங்கள் ஏதுமற்றவன். ஆவேசம்வந்தவனாய்த் தரையில் குத்தவைத்து காற்றில் எழுததுவங்கினான், 'நான் லலிதாவை...'

16 உரையாட வந்தவர்கள்:

 1. கரு.மூர்த்தி said...

  எங்கள் தங்கம் கருப்பு கதை போலவே உள்ளதே , சுயசரிட்தை எழுத காப்பிரைட் வாங்கிவிட்டீர்களா ?

 2. bala said...

  //அவர் அன்புப்பிழம்பாய் இருந்தார். ஆனால் அந்த மாமா ஒருநாள் தன்னைவிட வயது குறைந்த பக்கத்து தெரு ஜெயாவைத் திருமணம்//
  கழிப்பறையில் எழுதினான், "மாமா ஏன் இப்படிச் செய்தாய், ஏன் என்னைக் கைவிட்டாய்
  //

  வெளியே மிதக்கும் அய்யா,
  நீங்க மணிரத்தினத்தை ஒரு பிடி பிடித்து விட்டு, தமிழர் பெரிய மாமா,அறிஞர் அண்ணா கதையை தழுவி இப்படி எழுதியிருக்க வேண்டாம்.

  பாலா

  PS நீங்க பின் நவீனமா எழுதறாதா நினைத்து இப்படி எழுதியிருக்கீங்க.இது புரியாத குஞ்சுங்க கொலை வெறியோடு அலையப்போவதுங்க..சாக்கிரதையா இருங்கய்யா.

 3. லக்கிலுக் said...

  அருமையான கதை.

  பாலாவைப் போன்ற பலரை சந்தித்திருக்கிறேன். கழிவறைகளில் இரண்டெழுத்து கெட்டவார்த்தைகளை அதிகமாக எழுதுவார்கள். அந்த இரண்டெழுத்திலேயே வார்த்தைப் பிழை இருக்கும்.

  உதாரணத்துக்கு : "புல்" "குதி" என எழுதுவார்கள்.

 4. மிதக்கும்வெளி said...

  பாலா

  அடப்பாவி யாருக்கு கதை எழுதியிருக்கேன்னே தெரியாம எழுதியிருக்கீங்களே. இவ்வளவு அப்பாவியாப்பா நீங்கள்?

 5. மிதக்கும்வெளி said...

  கருமூர்த்தி, இன்னொரு அப்பாவி

 6. மிதக்கும்வெளி said...

  /உதாரணத்துக்கு : "புல்" "குதி" என எழுதுவார்கள். /

  யோவ் இதெல்லாம் கேட்டேனாய்யா நானு?

 7. Anonymous said...

  //அடப்பாவி யாருக்கு கதை எழுதியிருக்கேன்னே தெரியாம எழுதியிருக்கீங்களே. இவ்வளவு அப்பாவியாப்பா நீங்கள்?//

  யோவ் ஆனாலும் இது ரொம்ப ஓவர்யா
  :(

  எங்க பீலா கொஞ்சம் உளருவாயர் தான் அதுக்காக இப்படிக் கேவலப்படுத்தியிருக்கக் கூடாதுயா..

  போ உங்கூட 'கா'

 8. bala said...

  // "புல்" "குதி" என எழுதுவார்கள்.//

  லக்கி அய்யா,

  "புல்", "குதி" என்று நல்ல வார்த்தைகளாக எழுதிய குஞ்சுகளை நீங்க கெட்ட வார்த்தைகளை தவறாக எழுதியதாக கருதியது ஏனோ?உங்களுக்கும்/வெளியே மிதக்கும் அய்யாவுக்கும் காணுமிடமெல்லாம் sigmund freud சமாசாரமாகத் தான் தெரியுமா?

  பாலா

 9. Anonymous said...

  பாலா எழுதும் பின்னூட்டங்கள் கக்கூஸ் வாக்கியங்களை விட உசத்தியல்ல என்பதைத்தான் தெளிவாகக்கூறியிருக்கிறீர்களே, இதுகூட தெரியாத மரமண்டையா பாலா?

  - திராவிடக்குஞ்சு

 10. Anonymous said...

  என்னண்ணா பண்றது, பாலா, காவிவேட்டி, சங்கரன் தெரு, ஜெயா, லலிதா அப்பிடின்னெல்லாம் தெளிவாத்தான் எழுதியிருக்கா, ஆனா இந்த அபிஷ்டுக்கு தெரியுணும்மே, பிராமணாளோல்லியோ? அப்படித்தான் இருப்பா
  - ஆரிய நஞ்சு

 11. மிதக்கும்வெளி said...

  பாலா ஹய்யோ ஹய்யோ உங்களைப் பாத்தா ஒரே சிர்ப்பு சிர்ப்பா வருது

 12. Anonymous said...

  //முன்பு காலை ஒருமுறை, இரவு ஒருமுறை என்று போனவன் இப்போது உணவுக்கு முன், உணவுக்குப் பின் என்று பாலா கழிபப்றை போய்வந்தான்.
  //
  ம்.ஹூம்.
  உணவும் அங்கேயேதான்.

 13. Anony said...

  பாலா ரொம்ப ரொம்ப மட்டவானவனா? இனிமே கொஞ்சம் ஜாக்ரதையா இருக்கனும் அவன்கிட்டே. என்ன பன்றது நங்கநல்லூர் வளர்ப்பாச்சே இவனுங்க எல்லாம்!

 14. Anonymous said...

  //பாலா ஹய்யோ ஹய்யோ உங்களைப் பாத்தா ஒரே சிர்ப்பு சிர்ப்பா வருது//

  எனக்கு அளுவாச்சி அளுவாச்சியா வர்து...

  பின்னோட்டம் பீலா வாழ்க!
  அவர் புகழ் ஓங்குக!

 15. bala said...
  This comment has been removed by a blog administrator.
 16. கரு.மூர்த்தி said...
  This comment has been removed by a blog administrator.