சென்னைப் புத்தக்கண்காட்சி சில சுவாரசியங்கள்


* கண்காட்சியின் வாயிலிலேயே கருணாநிதி கோட்சூட்டோடு ஜம்மென்று காட்சியளிக்கிறார். (லக்கிலுக் அந்த கட் அவுட் அருகிலேயே நீண்டநேரம் கண்கலங்கி நின்றிருந்தார்)

*. கிழக்கு பதிப்பகம் ஸ்டாலில் மார்க்சிஸ்ட்களுக்கும் புத்தகம் கிடைக்கிறது. ஆர்.எஸ்.எஸ் காரர்களுக்கும் புத்தகம் கிடைக்கிறது. ஒருமுறை அ.மார்க்சிடம் பேசிக்கொண்டிருக்கும்போது சொன்னார், "இந்த என்.ஜி.ஓக்காரர்களுக்கு பின்நவீனம் என்றால் என்னவென்று தெரியாது.தெரிந்தால் அதையும் ஒரு புரோஜெக்ட் போட்டு சம்பாதித்திருப்பார்கள்" என்று. தொண்டுநிறுவனங்களுக்கு புரோஜெக்ட், கிழக்கு பதிப்பகத்திற்கோ புத்தகங்கள். சேகுவாரா, பிடல்காஸ்ட்ரோ, சதாம் உசேன் என அனைவரையும் 'விற்று'க்கொண்டிருந்தார்கள்.

* கீழைக்காற்று பதிப்பகத்தில் இம்முறை பெரியார் சிலை, மார்க்ஸ், எங்கெல்ஸ் சாவிக்கொத்துகளை ஏனோ விற்கவில்லை. கீழைக்காற்றை விட்டு வெளியே வந்தால் அதிர்ச்சியாக இருந்தது. எதிரிலிருந்த பதிப்பகத்தின் பெயர் 'செட்டியார் பதிப்பகம்'. ஸ்டால் வாசலில் இருந்த தோழர்.துரை. சண்முகம் சொன்னார் "ஊர்ப்பக்கம் செட்டியார்&கோ பலசரக்குக்கடை ஆரம்பிப்பதைப்போல பதிப்பகம் ஆரம்பித்திருக்கிறார்கள்" என்று.
* வழக்கமாய்ப் புத்தகக் கண்காட்சியில் காணப்படும் குடிகாரக் கலைஞர்கள் லட்சுமி மணிவண்ணன், விக்கிரமாதித்யன் ஆகியோரைக் காணவில்லை.
* எப்போதும் 'தீம்தரிகிட' ஞானிதான் தன் ஸ்டாலில் தேர்தல் நடத்துவார். ஆனால் இந்தமுறை மக்கள் தொலைக்காட்சி சார்பில் 'பெண்களுக்கு இட ஒடுக்கீடு வேண்டுமா, வேண்டாமா' என்று ஓட்டுப்பெட்டி வைத்திருந்தார்கள். ஞானி தன் பேவரைட் பெரியகண்ணாடி இல்லாமல் அலைந்துகொண்டிருந்தார்.

* காலச்சுவடு வழக்கம்போல புத்தககண்காட்சியோடு எழுத்தாளர் கண்காட்சியும் நடத்துகிறது. நான் வந்த அன்றின் மறுநாள் ஏதோ புத்தக வெளியீட்டுவிழா. மாலதிமைத்ரி வெளியிடுவதாக அறிவிப்பு. (ஸ்டாலுக்குள் போகவில்லை)


*'உயிர்மை' ஸ்டாலுக்குள்ளும் நுழையவில்லை. ஆனால் ஸ்டால் முழுக்க ஏதோ சுஜாதாவே நிறைந்திருந்ததைப்போல ஒரு பிரமை.


* எப்போதும் நான் தவறாமல் செல்லும் ஸ்டால் 'விஜயபாரதம் ஸ்டால். அங்கேபோய் வழக்கமாய் அவர்கள் முஸ்லீம்கள், போப், கம்யூனிஸ்ட்கள், தி.க ஆகியோரைத் திட்டும் புத்தகங்கள் வாங்கினேன். தப்பித்தவறி அன்று கருப்புச்சட்டை போட்டுப் போயிருந்ததால் சுயம்சேவக்குகள் ஏற இறங்கப் பார்த்தனர். மணிமேகலைப் பிரசுர ஸ்டாலில் மார்க்கெட் இழந்த நடிகர் ராஜேஷ் இருந்தார் என்றால் விஜயபாரதம் ஸ்டாலில் இல.கணேசன் இருந்தார். இந்தமுறை இலவச இணைப்பாக பாரதமாதா படம் தந்தார்கள். (சூப்பர் பிகர்). நமக்குத்தான் அதைப்பார்த்தாலே பற்றிக்கொள்ளுமே, வழக்கம்போல கடாசிவிட்டு வந்தேன்.


* அய்ந்நூறுகளுக்கும் அதிகமான ஸ்டால் இருந்ததால் கிடட்த்தட்ட மூன்று மணிநேரம் நடக்க வேண்டியிருந்தது. மதியம் 12 மணிக்குச் சாப்பிட்டிருந்த இரண்டு சாமபார்வடையும் ஒரு பூரியும் கரைந்துபோய்ப் பசிக்க ஆரம்பித்திருந்தது. நேராக கேண்டினுக்குள் நுழைய என்னுடன் வந்த நண்பர் மெதுவடையும் சமோசாவும் வாங்கித்தந்தார். வடையோடு ஒரு யுத்தம் நடத்த வேண்டியிருந்தது.சமோசாவோ வாங்கித்தந்த நண்பரின் மனசு போல மென்மையாக இருந்தது. ( சமோசாவிற்குள் வெறும் மாவுதானே இருந்தது. அப்புறம் அப்படித்தானே இருக்கும்?)


* புத்தககண்காட்சியைப் பார்த்துவிட்டு அப்படியே பொங்கல் விடுமுறைக்கு ஊருக்குச் செல்லத்திட்டம் போட்டிருந்ததால் பிரான்சிலிருந்து வந்திருந்த ஷோபாசக்தி மற்றும் நண்பர்களோடு எஸ்கேப் ஆனோம்.வெளியே தென்கச்சி சுவாமிநாதனும் அன்று பல தகவல்களைக் கூறி முடித்திருந்தார்.
கண்காட்சி முடிவதற்குள் சென்னை திரும்பிவரவேண்டும். புத்தகம் வாங்குவதற்கல்ல, அதைக் கீழைக்காற்று போன்ற கடைகளிலேயே வாங்கிக்கொள்ளலாம். ஆனால் நான் போயிருந்தது தொடங்கிய மறுநாள் என்பதால் கூட்டமும் அவ்வளவாக இல்லை, பிகர்களும் அவ்வளவாக இல்லை.


(மற்றபடி புத்தகக கண்காட்சியின் வரலாறு, சிறப்பு எல்லாம் எழுதி உங்களையும் (என்னையும்தான்) போரடிக்க விரும்பவில்லை. என்னென்ன புத்தகங்களை வாங்கினேன் என்று சொல்ல ஆசைதான். ஆனால் இரண்டாயிரத்திற்கும் மேல் புத்தகங்களைத் தன் கைக்காசைப் போட்டு கூட வந்த என் பிரியத்திற்கும் மரியாதைக்குமுரிய நண்பர் வாங்கிக்கொடுத்து என்னை நெகிழ வைத்துவிட்டதால் ஓசிப் பணத்தில் பிலிம் ஓட்ட விரும்பவில்லை).

8 உரையாட வந்தவர்கள்:

 1. Anonymous said...

  கோணல் பக்கங்களைப் படிச்சது போன்ற உணர்வு. ஆமா, ஷோபாசக்தி இங்க வந்திருக்கும்போது சாரு அய்ரோப்பா போயிருக்காரே. ரெண்டு பேருக்கும் புட்டுகிச்சா?

 2. தமிழ்நதி said...

  அப்படியானால் நீங்கள் புத்தகம் பார்க்க, வாங்கப் போகவில்லையா...? ம்... உங்களுக்கு வாய்த்ததைப்போல ஒரு நண்பர் (சமோசா மனசு) எனக்கும் வாய்த்திருந்தால் நான் இன்னும் கொஞ்சம் அள்ளி வந்திருப்பேன். இன்றைக்குப் போயிருக்க வேண்டும் நீங்கள். திருவிழா என்றால் அதுதான்.

 3. நியோ / neo said...

  >> இந்தமுறை இலவச இணைப்பாக பாரதமாதா படம் தந்தார்கள். (சூப்பர் பிகர்). நமக்குத்தான் அதைப்பார்த்தாலே பற்றிக்கொள்ளுமே, வழக்கம்போல கடாசிவிட்டு வந்தேன். >>

  inga sila "jai Hind" partyinga irukkanga! avanga ithai pAthA udanE BP ekiri heart attack vanthurumya avangalukku! pAthu seinga! ;)

 4. லக்கிலுக் said...

  //கண்காட்சியின் வாயிலிலேயே கருணாநிதி கோட்சூட்டோடு ஜம்மென்று காட்சியளிக்கிறார். (லக்கிலுக் அந்த கட் அவுட் அருகிலேயே நீண்டநேரம் கண்கலங்கி நின்றிருந்தார்)//

  தலைவர் கலைஞரின் அந்த கெட்டப் சூப்பர் :-)

 5. Anonymous said...

  Neengallaam Yendha naattukkaarangadaaa???? Ungala paaththa Heart Attack varadhu.. peththa Ammava paaththu super figurennu solravana paakumpodhu evvalavu arauvaruppu varumo appadidhan varum... Nalla irngada...

 6. மிதக்கும்வெளி said...

  /Nalla irngada.../  நன்றி


  /Neengallaam Yendha naattukkaarangadaaa???? Ungala paaththa Heart Attack varadhu.. peththa Ammava paaththu super figurennu solravana paakumpodhu evvalavu arauvaruppu varumo appadidhan varum.../

  சாரி, நான் பாரதமாதாவுக்குப் பிறக்கவில்லை.

 7. Anonymous said...

  பகிர்வுக்கு நன்றி.

  இந்த முறை புத்தக கண்காட்சியில் ... அதிகமான ..
  ஈழம் சார்ந்த புத்தகங்களும் ,
  பாலியல் சம்மந்தமான புத்தகங்கள் அதிகமாக ... அணிவகுத்திருந்ததாக உணர்ந்தேன்

 8. முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

  வழக்கம் போல நிறைய சமையல் புத்தகங்கள், ஆன்மீகம், ஜோதிடம் அப்புறம் டெக்னாலஜி புத்தங்கள் நிறைய இருந்தது. பாலியல் புத்தங்களை அட்டை பிரித்து பார்த்து விட்டு (படம் பார்த்து விட்டு) நகர்ந்தவர்கள் நிறையபேர்.. ஜெயமோகனும், சுந்தரராமசாமியும் கொட்டி கிடந்தார்கள். எஸ்.ராமகிருஷ்ணனும் ஆனந்தவிகடன் புண்ணியத்தில் விற்று கொண்டிருந்தார். அப்புறம் சாரு நிவேதா - புரியாமலேயே படம் பார்த்தவர்கள் சிலர். லேணா தமிழ்வாணம் கையெழுத்து போட்டு கொண்டு இருந்தார் - வழக்கமான புன்னகைகளுடன்... காந்தியும் அப்துல்கலாமும் 69 ரூபாய்க்கு விற்கபட்டார்கள்... அம்பானி அமிதாப் மிட்டல் என்று கிழக்கு கூவி கொண்டு இருந்தது.. அப்புறம் வடை, மசாலா சோடா.. வந்திருந்த கூட்டம் சுமார்தான்.. (யாராவது பொது இடத்தில் தூண்டாமல் துணி போட வகுப்பு எடுத்தால் பரவாயில்லை..) மற்றபடி.. பேருந்துகளில் கூட்டம் இருந்தது...