மன்னிக்க வேண்டுகிறேன்.

எனது 'ஈ.வெ.ராவின் வெங்காயமும் கட்டவிழ்ப்பும்' என்னும் பதிவில் நண்பர் பொட்டிக்கடை இட்ட பின்னூட்டத்திற்கு பதில் தெரிவிக்கும் முகமாய் நான் இட்டிருந்த இன்னொரு பின்னூட்டத்தில்,

"தமிழில் நவீன சிந்தனைகளை அறிமுகப்படுத்தியவர்களில் நாகார்ஜுனன், ராஜன்குறை என்ற இரண்டு பார்ப்பனர்களைத் தவிர வேறு யாருமில்லை"
என்று குறிப்பிட்டிருந்தேன்.

எனக்கு தனியாக அனுப்பிய ஒரு மின்னஞ்சலில் தோழர்.நாகார்ஜுனன் "நான் நீண்ட வருடங்களுக்கு முன்பே நான் பிறந்த பார்ப்பனச் சாதியை உதறிவிட்டே. சாதியத்தை எதிர்த்த சமூக சீர்திருத்தப் பணிகளில் என்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறேன். குறிப்பாக விளிம்புநிலை மக்களின் மீது கவனம் செலுத்தி வருகிறேன். எனவே என்னைப் பார்ப்பனர் என்று குறிப்பிட வேண்டாம்' என்று தெரிவித்திருக்கிறார்.


உண்மையில் தோழர்.நாகார்ஜுனனை இழிவுபடுத்துவது என் நோக்கமில்லை. நாகார்ஜுனன் தமிழின் முக்கியமான புத்திஜீவி, நவீனச் சிந்தனைகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் என்ற அடிப்படையில்தான் அந்தக் கருத்தை வெளியிட்டிருந்தேன்.

முதன்முதலில் தமிழில் பல புதிய விஷயங்கள் குறித்த உரையாடலைத் தொடங்கிவைத்தவர் என்ற முறையிலும் 'கலாச்சாரம், அ-கலாச்சாரம், எதிர்கலாச்சாரம்' என்னும் முக்கியமான நூலைத் தமிழுக்குத் தந்தவர் என்ற முறையிலும் நான் நாகார்ஜுனனை மிகவும் மதிக்கிறேன்.


எனவே என் வார்த்தைகளால் நாகார்ஜுனன் மனம் புண்பட்டிருந்தால் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.

9 உரையாட வந்தவர்கள்:

  1. bala said...

    //எனக்கு தனியாக அனுப்பிய ஒரு மின்னஞ்சலில் தோழர்.நாகார்ஜுனன் "நான் நீண்ட வருடங்களுக்கு முன்பே நான் பிறந்த பார்ப்பனச் சாதியை உதறிவிட்டே//

    வெளியே மிதக்கும் அய்யா,

    இப்படி அனேகர் சாதியை உதறி விட்ட நிலையில், இன்னும் உங்களைப் போன்றவர்கள்,சாதி வெறி பிடித்து பெரியாரியம்,திராவிடீயம் போன்ற நவபார்ப்பனீய அழுக்கு மூட்டைகளை சுமந்து கொண்டு திரிவது ஏன்?

    பாலா

  2. மிதக்கும்வெளி said...

    நாகார்ஜுனன் உண்மையிலேயே சாதிய அடையாளங்களை உதறித்தள்ளியவர். அத்தகைய பார்ப்பனர்களின் மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. அவர் உங்களைப் போல வருணாசிரமத்திற்கும் பார்ப்பனீயச் சாதியத்திற்கும் வக்காலத்து வாங்கிக் கொண்டிருப்பவர் அல்ல. நாகார்ஜுனனையும் உங்களையும் ஒரே வரிசையில் வைத்து சுய இன்பம் காண முயற்சிக்காதீர்கள்.

  3. Anonymous said...

    தமிழில் நவீன சிந்தனைகளை அறிமுகப்படுத்தியவர்களில் நாகார்ஜுனன், ராஜன்குறை என்ற இரண்டு பார்ப்பனர்களைத் தவிர வேறு யாருமில்லை

    What do you want to convey by this.
    If your intention to say that among brahmins only two have
    introduced modern thought in tamil
    then your sentence fails to convey that.It conveys a very different
    meaning- None other than two brahmins (x and y) introduced modern thought into tamil.
    Perhaps you wanted to make it clear that the brahmin's contribution to tamil thought
    was minimal.But the result was
    very different.
    Let me honestly ask one question
    Apart from some essays what has been the contribution of Rajan
    Kurai.
    And what is your definition of
    modernity and modern thought
    in the context of Tamil.
    If you think in terms of style
    and narration Sujatha is miles
    ahead of many writers when it comes to introduction modernity in style and narration.Someone like Kaa.Naa.Su translated many novels
    and introduced modern literary criticism in Tamil.Chellappa did
    a yeoman service through Ezuthu and
    his writings.Your understanding
    is so shallow that even a frog in a well knows much better than you :).

  4. Anonymous said...

    //சுய இன்பம் காண //
    :-))))))

  5. bala said...

    //சாதி வெறி பிடித்து பெரியாரியம்,திராவிடீயம் போன்ற நவபார்ப்பனீய அழுக்கு மூட்டைகளை சுமந்து கொண்டு திரிவது ஏன்?//

    வெளியே மிதக்கும் அய்யா,

    கேள்வியை திரும்ப படிக்கவும்.
    கேள்வி..நீங்கள் ஏன் சாதி வெறி கொண்டு அழுக்கு மூட்டைகளை சுமந்து கொண்டு திரிவது ஏன்?..
    இதி என்ன சுய இன்பம் உங்களுக்கு?

    பாலா

  6. மிதக்கும்வெளி said...

    இந்தப் பதிவிற்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பிய தோழர்.நாகார்ஜுனன், "நீங்கள் வெளிப்படையாக மன்னிப்பு தெரிவித்ததற்கு நன்றி. இத்தகைய மனிதர்களைக் காண்பது அரிது. ஆனால் மீண்டும் நீங்கள் பாலாவிற்கு எழுதியுள்ள பின்னூட்டத்தில் என்னைப் பார்ப்பனர் என்றே அர்த்தப்படுத்தியுள்ளீர்கள். என்னை மனிதன் என்று குறிப்பிடுங்கள்" என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் எனக்குத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டும் அதை வலியுறித்தினார். எனவே நான் மீண்டும் வருந்துகிறேன். அத்தகைய பார்ப்பனர்களை என்பதை அத்தகைய மனிதர்களை என்று பொருள் கொள்ளவும்.

  7. மிதக்கும்வெளி said...

    இது நான் மரியாதை கொண்டிருக்கும் நாகார்ஜுனன் மனம் புண்படுத்தியதற்காக நான் கோரும் மன்னிப்புப் பதிவு. மற்றபடி மற்றைய உரையாடல்களை வேறு பதிவில் தொடரலாம். (ஒரு அனானி நண்பர் கேட்டதைப்போல சுஜாதாவையும் நவீன எழுத்தாளர் என்று சொன்னால் எங்குபோய் முட்டிக்கொள்வது என்று தெரியவில்லை.)

  8. bala said...

    //அவர் உங்களைப் போல வருணாசிரமத்திற்கும் பார்ப்பனீயச் சாதியத்திற்கும் வக்காலத்து வாங்கிக் கொண்டிருப்பவர் அல்ல//

    வெளியே மிதக்கும் அய்யா,

    நான் எப்போது,எங்கே வருணாசிரமத்திற்கும் ,பார்ப்பனீயச் சாதியத்திற்கும் வக்காலத்து வாங்கினேன் என்று விளக்க கடைப்பட்டுள்ளீர்கள்.
    இஷ்டத்துக்கு எழுத வேண்டியது,யாராவது கேள்வி கேட்டா, பார்ப்பனீயம்னு திசை திருப்ப வேண்டியது.இதைத் தான் கடைந்தெடுத்த அயோக்யத்தனம் என்பது. இந்த அழகில், தங்களைத் தானே உத்தமன்,கொள்கை வீரன்னு சிலாகித்து வர்ணித்து கொள்ளும் கேவலம் வேறு.

    பாலா

    பாலா

  9. மிதக்கும்வெளி said...

    /நான் எப்போது,எங்கே வருணாசிரமத்திற்கும் ,பார்ப்பனீயச் சாதியத்திற்கும் வக்காலத்து வாங்கினேன் என்று விளக்க கடைப்பட்டுள்ளீர்கள்/


    அப்படியா, நீங்கள் சாதியொழிப்புப் போராளி என்று எனக்குத் தெரியாது. தகவலுக்கு நன்றி.


    /இந்த அழகில், தங்களைத் தானே உத்தமன்,கொள்கை வீரன்னு சிலாகித்து வர்ணித்து கொள்ளும் கேவலம் வேறு./
    எனக்கும் தோழர்.நாகார்ஜுனனுக்கும் தனிப்படட் முறையில் நடந்த மின்னஞ்சல் உரையாடல்களை நாகார்ஜுனன் அனுமதிக்காத வரை வெளியிடமுடியாது. மற்றபடி சுயதம்பட்டம் அடித்துக்கொள்ளும் அரிப்பு எல்லோருக்கும் இருப்பதைப் போலவே எனக்கும் இருக்கிறது. ஆனால் அது இந்த விசயத்தில் அல்ல.
    இனியும் உங்கள் உளறலை அனுமதிக்கமுடியாது.