வெயில் மற்றுமொரு தேவர் படம்?



பலரும் பத்திரிகைகளும் பாராட்டியதால் 'வெயில்' படத்தைப் பார்க்க நேர்ந்தது (டி.வி.டியில்தான்). ஆனால் நான்கு சீன்களுக்குள் எழுந்து வரும்படியாகிவிட்டது.


முதல் எரிச்சல் 'வெயிலோடு விளையாட்டி வெயிலோடு உறவாடி..' என்னும் முதல் பாடல். பாடலாசிரியர் என்ன வரிகளை எழுதியிருக்கிறாரோ அதை அப்படியே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இதற்கு கலைஞன் தேவையில்லை. கார்பன் பேப்பர் போதும்.

கௌதமிடமும் இந்தப் பிரச்சினை இருக்கிறது. 'காலை எழுந்ததும் என் கண்கள் முதலில் தேடித்திரிவதுந்தன் முகமே..' என்று தாமரை எழுதினால், கௌதம் காலையில் எழுவது, படுக்கை, காதலனைத் தேடுவது என்று காட்டிக்கொண்டிருப்பார், எதோ பிராக்டிகல் கிளாஸ் டெமான்ஸ்டிரேசனைப்போல. வெயிலிலும் 'அண்ணாச்சி கடையில் எண்ணையில் குளித்த புரோட்டா" என்றால் புரோட்டாக் கடையைக் காட்டுகிறார்கள்.


அதேபோல 'அழகி'யில் ஆரம்பித்து இந்த சின்னவயது கிராமத்துக் காதலை சலிக்கச்சலிக்க காட்டுகிறார்கள். சின்னவயதில் காதலிக்கக்கூடாது என்றில்லை, (என் முதல்காதலின் போது வயது பத்து). ஆனால் அதை எதோ சக்சஸ் பார்முலாவாக ஆக்கும்போதுதான் எரிச்சல் வருகிறது.


படத்தில் முக்கியமான எரிச்சல் வேறு. பரத் தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் ஒரு விளம்பரக் கம்பெனி நடத்துகிறார்.அதில் பொறாமைப் படுகிறவர்கள் இன்னொரு தேவர் கட்டைப்பஞ்சாயத்துக்காரரான போஸ் என்பவரிடம் முறையிடுகின்றனர். போஸ் கூப்பிட்டு பரத்தை எச்சரிக்கிறார். அப்போது பரத் சொல்கிறார், "அண்ணே தைரியம் இல்லாட்டி இந்த தொழிலில் பிழைக்க முடியாது. பீயள்ளத்தான் போகணும்".
தேவர்கள் பீயள்ளக்கூடாதா என்ன? நான் எழுந்துவந்துவிட்டேன்.

11 உரையாட வந்தவர்கள்:

  1. hai said...

    \\சின்னவயதில் காதலிக்கக்கூடாது என்றில்லை, (என் முதல்காதலின் போது வயது பத்து). ஆனால் அதை எதோ சக்சஸ் பார்முலாவாக ஆக்கும்போதுதான் எரிச்சல் வருகிறது.//
    உண்மை. 'தித்திக்குதே' என்ற படமும் .'வானத்தைப்போல'படமும்இப்படித்தான்.சினிமாவுக்கு வேண்டுமானால் இது சக்சஸ் பார்முலாவாக இருக்கலாம்.ஆனால் நிஜத்தில் பல இளம்வயது குற்றங்களுக்கு இது காரணமாகிறது.இதை எதோ தெய்வீகம் போல் சாதனை போல் காட்டுவது பிஞ்சிகளை வெம்பச் செய்வதன்றி வேறு பிரயோசன்மில்லை.

  2. கொழுவி said...

    அது தானே.. பாடல் காட்சிகளின் போது வரிகளை ஒலிக்க விட்டு ஏதாவது டிஸ்கவரி சனலில் இருந்து காட்சிகளை ஒளிபரப்பினார்கள் எனில் சுவாரசியமாக இருக்கும்

  3. Anonymous said...

    என்னார் தேவன் வந்து பதில் சொல்வானா?

  4. Anonymous said...

    "அப்போது பரத் சொல்கிறார், "அண்ணே தைரியம் இல்லாட்டி இந்த தொழிலில் பிழைக்க முடியாது. பீயள்ளத்தான் போகணும்".
    தேவர்கள் பீயள்ளக்கூடாதா என்ன? நான் எழுந்துவந்துவிட்டேன்."

    சரியாத்தான் செஞ்சுரிக்கீங்க அப்பு.

  5. மாசிலா said...

    //அண்ணே தைரியம் இல்லாட்டி இந்த தொழிலில் பிழைக்க முடியாது. பீயள்ளத்தான் போகணும்"//

    பீயள்ரவங்களுக்கு தைரியம் இருக்குதோ இல்லையோ ஆனால் நெஞ்சில நெறைய ஈரம், மனிதம் இருக்கு. இல்லைன்ன இதுமாதிரி வெலையெல்லம் செய்தாவது தன் குடுமபத்தை எப்படியாவது காப்பாதனும் என்ற துணிச்சல மனசாற பாராட்டனும்.

    வரவர தமிழ் கலாச்சாரம் என வந்தாலே தேவரு, கீவரு அப்படின்னு ஆய்போச்சு. என்ன இவங்க எல்லாம் தமிழ் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் ஆயுள் குத்தகைக்கு எடுத்துகொண்டார்களா? நாதாரிங்க!

  6. மிதக்கும்வெளி said...

    /அது தானே.. பாடல் காட்சிகளின் போது வரிகளை ஒலிக்க விட்டு ஏதாவது டிஸ்கவரி சனலில் இருந்து காட்சிகளை ஒளிபரப்பினார்கள் எனில் சுவாரசியமாக இருக்கும் /


    உங்கள் கிண்டலை ரசித்தேன். ஆனால் நான் சொல்ல வந்தது வேறு. தங்கமகன் படத்தில் ('ஆபாசமான' பாடல்தான் என்றாலும்)'வாழையிலை நீர்தெளித்துப் போடடி என் கண்ணே' என்று வருகிறது. உடனே கதாநாயகி மார்க்கெட்டுக்குப் போய் 2 ரூபாய்க்கு வாழையிலை வாங்கிவந்து சொம்புநிறையத் தண்ணீர்கொண்டுவந்து தெளிக்க வெண்டுமா என்ன?

  7. மிதக்கும்வெளி said...

    /என்னார் தேவன் வந்து பதில் சொல்வானா? /

    என்னார் தேவரா? (ஒருமையில் அழைக்க வேண்டாமே ப்ளீஸ்) அவர் தேவர் சாதிய உணர்வுகளை ஆதரித்து எழுதுகிறாரா. நான் படித்தது இல்லை.

  8. மிதக்கும்வெளி said...

    /சரியாத்தான் செஞ்சுரிக்கீங்க அப்பு. /


    அப்புவா? ஆப்புவா?

  9. வசந்த் said...

    சுகுனாதிவாகர் அவர்களே,

    இந்த படம் பார்க்கும் போது சில இடங்களில் எனக்கு தோன்றியதை நீங்களும் கோறி உள்ளீர்கள்.

    // பீயள்ரவங்களுக்கு தைரியம் இருக்குதோ இல்லையோ ஆனால் நெஞ்சில நெறைய ஈரம், மனிதம் இருக்கு //

    மாசிலாவின் இந்த கருத்துகள் முற்றிலும் உண்மை.

    நன்றி
    வசந்த்

  10. அமர்நாத் said...

    ஏதோ ஒரு இயக்குநர் அல்லது எழுத்தாளர் எண்னத்தில் உருவாகும் ஒரு வார்த்தைக்காக, தேவர் சமுதாயத்தை "நாத ரி" என்று சொல்ல யாருக்கு உரிமை இருக்கிறது.

    பிடிக்கவில்லை என்றாள் வஸந்த பாலனை சொல்லுங்கள், அல்லது ஷங்கரை சொல்லுங்கள்.
    அதெய் விட்டு விட்டு ஒரு ஜாதியினரை ஏன் குற்றம் சொல்ல வேண்டும்

    யாரும், வஸந்த பாலானிடமோ அல்லது ஷங்கரிடமோ போய் இந்த படத்தை தயாரிக்கவோ அல்லது இயக்க சொல்ல வில்லை.

  11. நியோ / neo said...

    உங்கள் கோபத்தில் நியாயம் உள்ளது. இன்றைய தேதியில் தமிழ்சினிமா "படைப்பாளிகளில்" பலர் இந்த தேவர் பெருமை பாட விரும்புவோராக இருப்பது கவலைக்குரியது.

    சோழமன்னனை எதிர்ப்பதற்காக 'மாலிக் கபூரிடம்" தமிழ்நாட்டைக் காட்டிக் கொடுத்தவர்களும், கிருஷ்ணதேவராயனின் ஆட்சியதிகாரத்தை தென் தமிழ்நாடு வரை கொண்டுவந்து அதை ஏற்றுக் கொண்டவர்களும், நாயக்க மன்னர்களிடம் சேவை செய்த்தை பெருமையாக நினைப்பவர்களும் கூட - இதே காட்டுமிராண்டி மடப்பயல்கள்தான் என்பதை வரலாறு மறந்துவிடாது.