இந்துத்துவவாதிகள்தான் இந்தியத்தேசியத்தின் காவலர்களா?
/9:42 PM
arunagiri said...
பூங்காவில் பொய் பூக்கத்தொடங்கி, கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாய் இன்று காழ்ப்புக் காடாக மாறி விட்டிருக்கின்றது.

இடதுசாரித்தனம் என்பது பற்றிய வரலாற்றுப்புரிதலும் சிந்தனை அறிவும் எள்ளளவும் இல்லாத கூட்டம் ஒன்று ஈவேராவின் வெறுப்புக் குப்பைகளை ஆசிரியர் குழு என்ற முகமூடியில் விதைத்து வருகிறது.

சிறுகுழுக் கலாசாரப்பாதுகாப்பு, சூழலியற்கண்ணோட்டம், மகளிர் மேம்பாடு போன்ற இடதுசாரி சிந்தனைகளை இயல்பாகவே கொண்டுள்ளது இந்து மரபு என்பதனை அடிக்கோடிட்டது இடதுசாரி இந்துத்துவம் என்ற எனது திண்ணைக் கட்டுரை.

இடதுசாரித்தனம் என்பது மார்க்ஸிஸ்டுகளின் வெற்று கோஷங்களிலும், மாவோயிஸ்டுகளின் வன்கொலைவெறியிலும், பொய்பூக்கும் பூங்காவின் பெரியாரிச மடைமையிலும் இல்லை.வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் பசுமையின் மீதான பரிவில் இருப்பது அது. மொழியையும் நாட்டையும் பெண்களாய் உருவகித்து உயர்விப்பது இடதுசாரிச் சிந்தனை.
எங்கோ உள்ள தீவின் கரும்புத்தோட்டத் தொழிலாளர்களின் கஷ்டங்களுக்காகக் கண்ணீர் சிந்தியது இடதுசாரி உள்ளம்.

முன்னும் பின்னும் முரண்படப்பேசி,
ஆதிக்க சக்திகளுக்கு அடிவருடிக்கொடுத்து, ஆங்கிலேயருக்கு கால் பிடித்து விட்டு, பொறுக்கித்தனமும் ரவுடித்தனமும் தினமும் செய்து 'நாயும் பிழைக்கும் இந்தப்பிழைப்பு' என்பதற்கேற்ப அரசியல் மைனர் வேலை நடத்தி வந்த பெரியாரிசத்துக்கு
தேசியம் கேவலமாகத்தான் தெரியும்.

இந்த மண்ணாங்கட்டிகளுக்கு வலதுசாரித்தனம் பற்றிய அறிவும் கிடையாது இடதுசாரித்தனம் குறித்த தெளிவும் கிடையாது. முள்ளமாரித்தனம் உண்டென்று சொல்லுங்கள், ஒப்புக்கொள்கிறேன்.

9:42 PM
Vajra said...
பூங்கா, அதன் தலை முதல் வால்வரை புரையோடிக்கிடக்கிறது இந்திய தேசிய எதிர்ப்பு. சே குவேரா போன்ற போதை மருந்துக்கு அடிமையானவனையெல்லாம் ஹீரோ வாக்கும் இந்த கூட்டம் மாவோயிஸ்டுகள் மற்றும் நக்ஸலைட்டுகளின் கூடாரம். அவர்கள் ஸ்டராடர்ஜி பட்டிக்காட்டில் வேலை செய்யாததால் வலையில் recruitment செய்துகொண்டிருக்கிறார்கள்.

தேசவிரோதம் என்று மொண்ணையாகச் சொன்னால் போதாது. மக்கள் விரோதம், இந்து மத விரோதம், இந்திய யூனியனுக்கு எதிரி என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

They are basically the mouth piece of Separatist groups and naxalites.

இந்திய தேசியத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் தயவு செய்து பூங்கா வலையிதழுக்கு தங்கள் படைப்புகளை வெளியிட சம்மதம் தெரிவிக்காமல் இருக்கும்படி கேட்டுக்கொள்வது தான் இப்போது நாம் செய்யக்கூடிய ஒன்று. கண்டிப்பதனால் ஒன்றும் நேரப்போவதில்லை.

10:18 PM
Hari said...
சே குவேரா, பிடல் காஸ்ட்ரோ, மார்க்ஸீயம், கம்யூனிஸம், பார்பனீய பண்பாட்டு ஆதிக்கம் இப்பிடி ஏதாவது ஒரு தலைப்பு வைத்தால் உடனே அது பூங்காவில் பூக்கும். சுத்த அடிவருடித்தனம். இந்திய தேசியம் பேசுவதை வெறுக்கும் இவர்கள் தங்கள் இந்திய பாஸ்போர்ட்டை எரிக்கட்டும்.

சீனாவிற்கோ, ரஷ்யாவிற்கோ, ஏன் பாகிஸ்தானிற்கோ செல்லட்டும்.

Jataayu, I stand with you

10:18 PM
Anonymous said...
தமிழ் திரட்டியின் நிர்வாகிகள்தானே இந்த நச்சு வனத்தையும் நடத்துகிறார்கள் ? இந்திய தேசியத்தில் அக்கறை உள்ள பதிவர்கள் எல்லோரும் ஏன் தங்களது கடுமையான கண்டனங்களை இந்த நிர்வாகிகளுக்குத் தெரிவிக்கக் கூடாது ? இவர்களது இழிவான நோக்கங்களை இனம் கண்டு அன்றே இவர்களைப் பற்றி பல பதிவர்களும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். எனினும் தங்கள் பதிவுகள் நீக்கப் படுமோ என்ற அச்சத்தில் பல பதிவர்களும் இவர்களது தேசத் துரோக போக்கைக் கண்டும் காணாதது போல் செல்கிறார்கள். துணிந்து கண்டித்த உங்களது துணிவிற்குப் பாராட்டுதல்கள். "எனி இந்தியன்" என்ற பெயர் இருப்பதால் அந்த இணைய புததகக் கடையையே புறக்கணிக்க வேண்டும் என்று எழுதிய தீவீர இந்திய வெறுப்புப் பிண்டங்கள்தான் இன்று இந்த நச்சுப் பூங்காவை நடத்துபவர்கள். இத்தனைக்கும் இந்தியாவின் கல்வி நிலையங்களில் படித்து விட்டு வந்து, இந்தியாவின் தலைச்சிறந்த கல்வியையை பெற்று விட்டு இன்று ஊண்ட வீட்டுக்கே துரோகம் செய்யும் நன்றி இல்லாத ஜென்மங்கள் இவர்கள். இன வெறுப்பு, இந்திய வெறுப்பு, இந்து வெறுப்பு இவை மூன்றுமே இவர்களின் தாரக மந்தீரங்கள். இவர்களை எதிர்த்து நான், பி கே சிவகுமார், லெப்டினட் வந்தியத்தேவன், முகமூடி போன்றோர் தொடர்ந்து போராடி வருகிறோம். நாங்கள் இத்தனை வருடங்கள் இந்தத் இந்திய தேசத் துரோகிகளை எதிர்த்து எழுதியதை இன்று நீங்களும் புரிந்து கொண்டது குறித்து மிக்க மகிழ்ச்சி, உங்களைப் போன்ற உணர்வு ஒவ்வொரு பதிவருக்கும் ஏற்பட்டு இவர்களுக்கு கடுமையான கண்டனங்கள்ளையும் எதிர்ப்பையும் தெரிவிக்க வேண்டும். இந்திய அரசு மற்றும் அமெரிக்க அரசிடம் இவர்களது தேசத் துரோக நடவடிக்கைகளை எடுத்துச் சென்று இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆவண செய்ய வேண்டியது நம் அனைவரது கடமையுமாகும்.

அன்புடன்
ச.திருமலை

11:02 PM
ஜடாயு said...
// குழலி / Kuzhali said...
பார்ப்பனிய எதிர்ப்பு என்பது இந்திய தேசிய எதிர்ப்பா? //

இப்படி நான் சொல்லவில்லை. நான் மேற்கோள் காட்டியிருக்கும் பதிவு தான் இப்படிச் சொல்லியது.

// அப்படியே இந்திய தேசியத்தை எதிர்த்தால் தான் என்ன தவறு... இந்திய தேசியத்தை எதிர்ப்பதற்கான நியாயங்கள் இருக்கத்தானே செய்கின்றன. //

இங்கே உங்கள் முகத்திரை கிழிகிறது. ஸோ, உண்மையில் இந்திய தேசியத்திற்கும், தேசத்திற்கும் நீங்கள் எதிரி. இதை நேரடியாகச் சொல்லாமல் பார்ப்பனீயம், அது இது என்று ஏன் ஜல்லியடிக்க வேண்டும்?

இந்தியர்களுக்கு தேசத்துராகிகளை இனம் காண வசதியாக இருக்கும் இல்லையா?

// .. இன்று அமெரிக்காவின் கீழுள்ள இந்த அரசில் தான் இந்தியர்கள் சகல உரிமைகளுடனும், வசதிகளுடனும், வாய்ப்புகளுடனும் திகழ்கிறார்கள், உலகில் வேறெங்கும் அல்ல. அமெரிக்க தேசியம் தான் உலகின் மிக //

நீங்கள் இந்திய தேசத்திற்கு எதிரானவர் என்று முதலிலேயே சொல்லிவிட்டதால் இந்த வாதமே அர்த்தமற்றது. இந்தியா நாசமாய்ப் போக வேண்டும் என்று நினைக்கும் உங்களிடம் அதன் ஒற்றுமை, முன்னேற்றம், இறையாண்மை இவை பற்றி மேலே சொன்னது போன்ற அபத்தங்களின் அடிப்படையில் நான் வாதம் புரிய விரும்பவில்லை.

11:17 PM
அரவிந்தன் நீலகண்டன் said...
தமிழ்மணத்திரட்டியின் சேவையை நாங்கள் பெறுகிறோம். அதே போல தமிழ்மணமும் எங்கள் பதிவுகளை பெறுகிறது. ஆனால் பூங்கா என்பதை பொறுத்தவரையில் அது கெட்ட நாற்றமடிக்கும் இடதுசாரி வெறியர்களின் தொழுவமே அன்றி வேறல்ல. அதனை நடத்துபவர்கள் மனிதகுல விரோதிகள். சக மனிதர்களை கொன்று தின்று இரத்தம் குடிக்கும் மார்க்சிய கொலைகாரர்களின் இரத்தம் இவர்கள் கைகளிலும் நாற்றமெடுக்கிறது. உக்ரைனிலும் சீனாவிலும் இறந்த குழந்தைகளின் இரத்தத்தையும் திபெத்தில் கொல்லப்பட்ட/படும் பௌத்தர்களின் இரத்ததையும், மேலும் பாரதத்தின் ஆந்திரா முதல் சட்டீஸ்கர் வரையிலும் கொல்லப்படும் வனவாசிகளுடைய இரத்தத்தையும் நக்கி சப்புகொட்டியபடி விகாரமாக இளிக்கும் மிருகங்களே பூங்காவின் ஆசிரியக்குழுவில் இருப்பதாக நான் கருதுகிறேன். அவர்களுக்கு குறைந்தபட்ச மனிதத்தன்மைகூட இல்லை என கூறுகிறேன்.

11:20 PM
Hari said...
வன்னிய நாடு கேட்காமல், தனி தமிழ் தேசம் கேட்குமளவுக்கு இறங்கி வந்திருப்பது ஒரு வகையில் மகிழ்ச்சிக்குறியது. யார் கண்டார், சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிப்பது என்பார்களே, அது போல தான் இதுவும் என்று நினைக்கிறேன்.

பிரிவினைவாதத்திற்க்கு இவர்கள் உடனே காரணமாக கொள்வது காவிரி. தனி தமிழ் தேசம் குடுத்துவிட்டால் மட்டும் இந்த பிரச்சனை தீர்ந்துவிடுமா? உங்கள் தலைவர்கள் தங்கள் சுயநலத்திற்க்கு செய்த காரியங்களின் பலனைத் தான் நாம் எல்லோரும் அனுபவிக்கிறோம். பிரச்சனை என்னவென்று தெளிவில்லையா இல்லை தெரிந்து கொள்ள விருப்பமில்லையா?

11:21 PM
அரவிந்தன் நீலகண்டன் said...
குழலி நீங்கள் இப்படிப்பட்ட மாங்கா மடையர் என நான் நினைக்கவில்லை. தெளிவுபடுத்தியமைக்கு நன்றி.11:25 PM
ஜடாயு said...


அரசியல், சமூகம், மதம் பற்றிய விஷயங்களில் கருத்து வேறுபாடு என்பது இருக்கலாம். ஆனால் இந்திய தேசத்தின் இறையாண்மையைக்கு ஊறு விளைவிக்கும் கருத்துக்களுக்குத் தொடர்ந்து ஊக்கம் அளித்தும், அவற்றைப் பரப்பியும் வருவது ஏன் என்று சொல்ல இந்தியர்களைப் பெரும்பான்மை படைப்பாளர்களாகவும், வாசகர்களாகவும் கொண்ட ஒரு ஊடகம் கடமைப் பட்டுள்ளது.

இங்கே நடக்கும் விவாதத்தின் அடிப்படையில் தமிழ்மணம் மற்றும் அதன் ஆசிரியர் குழுவுக்கு ஒரு கேள்வியை வைக்கிறேன் -


இந்திய தேசத்தின் இறையாண்மை, இந்திய அரசியல் அமைப்பு, இந்திய ஜனநாயகம் இவற்றுக்கு எதிரானதா தமிழ்மணம்?


தமிழ்மணம் என்ற வலைதிரட்டியில் தங்கள் பதிவுகளை இணைத்திருக்கும், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாழும் இந்தியப் பதிவர்கள் அனைவரும் கூட்டாகவோ அல்லது தங்கள் பதிவுகளிலோ தமிழ்மணத்திடம் இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும் என்று கோருகிறேன்.


11:31 PM
அரவிந்தன் நீலகண்டன் said...
ஓகோ அன்புமணிராமதாஸும் மாறனும் பாலுவும் ஒன்றுக்கும் உதவாத ரப்பர் ஸ்டாம்ப் பதவியில் தான் பின்புறத்தில் பெவிகால் போட்டு ஒட்டிக்கொண்டு இருக்கிறார்களோ? இப்படி பச்சையாக புளுக உங்களுக்கு வெட்கமாயில்லையா குழலி? அது எங்கே இருக்கப்போகிறது...ஈவெரா கும்பலுக்குதான் மானம் ரோசம் எல்லாம் கிடையாதே...கோவிலுக்கு போன பொண்டாட்டியை நண்பர்களிடம் 'ஊருக்கு புதிசா வந்த தாசி' என சொல்லுகிற கீழ்த்தர புத்தி உள்ளவனை பகுத்தறிவு தந்தை என்கிற ஆசாமிகளுக்கு இந்தியா மீது எப்படி பாசம் வரும்./தமிழ்மணப்பூங்கா தனது ஆசிரிய உரையில் சில இடதுசார்புக் கருத்துக்களை வெளியிட்டதால் அது இந்தியத் தேசியத்திற்கு எதிராகச் செயல்படுகிறது என்று பதிவெழுதியுள்ள ஜடாயு என்கிற இந்துப்பாசிஸ்டிற்கு ஆதரவாக பிற பாசிஸ்ட்கள் எழுதியுள்ள பின்னூட்டங்கள்.

இந்தப் பின்னூட்டங்களின் சாராம்சம் இதுதான். ' இந்தியத் தேசியம் என்பது புனிதமானது, அதைக் கேள்வியே கேட்கக்கூடாது. அதை விமர்சிக்கும் 'பிரிவினைவாதிகள்' அபாயமானவர்கள். தமிழ்த்தேசியவாதிகளும், மார்க்சியர்களும் பெரியாரியர்களும் ஜனநாயகத்திலும் மக்களின் நலனிலும் அக்கறையற்றவர்கள். வன்முறை விரும்பிகள். சரி, சில ஆதாரங்களைப் பார்ப்போம்...


இந்துத்துவவாதிகளின் தேசபக்தி யாருக்கானது?

"பிரிட்டிஷ் எதிர்ப்பு என்பதே தேசபக்தியாகவும் தேசியமாகவும் சொல்லப்பட்டது. இந்தப் பிற்போக்குத்தனமான பார்வை பல்வேறு அழிவை நோக்கிய விளைவுகளுக்கு வித்திட்டது"

- கோல்வால்கர் (கோல்வால்கரின் சிந்தனைக்கொத்துகள் பக்கம் 143)

"இந்துச்சமூகத்தை ஒழிக்கவிரும்புபவர்கள் சாதி, பெண்ணடிமை, கல்லாமை ஆகியவற்றைச் சாடுவர். தர்மன், அர்ஷன், புலிகேசி ஆகியோரது காலத்தில் இவையெல்லாம் (சாதி, பெண்ணடிமைத்தனம் முதலியன) இருக்கத்தான் செய்தன. ஆனாலும் அன்று நாம் வெற்றிகள் குவித்தோம். எனவே இன்றைய இழிவுகளுக்குக் காரணம் மேற்கூறியவையல்ல, தேசிய உணர்வு இல்லாததே இதற்கெல்லாம் காரணம்"

- மேற்குறித்த நூல்

"சனநாயகம், சமத்துவம் என்ற பெயர்களில் இங்கே திறமையின்மை தலைவிரித்தாடுகிறது. உதவி, மான்யம் என்ற பெயரில் தேசச்சொத்துக்கள் விரயமாக்கப்படுகின்றன. இந்துதர்மம் நிலைநாட்டப்படவேண்டும். இந்துதர்மத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இந்துதர்மத்தை ஏற்றுக்கொண்டு இந்துமயமாகவேண்டும்"

- அதேநூல்

இந்தியாவைத் துண்டாடியது யார்?

"இஸ்லாமியர் பெரும்பான்மையுள்ள சிந்துக்கு அப்பாலுள்ள பகுதிகளும் வடமேற்கு மாகாணமும் பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டு, அங்கு ஒரு முசல்மான் அரசு உருவாக்கப்படவேண்டும். அங்குள்ள இந்துக்கள் இங்கும் இங்குள்ள முஸ்லீம்கள் அங்கும் போய்விடவேண்டும்.

_ பரமானந்தர் (1933ல்...)

"இந்தியாவை ஒற்றைத் தேசமாகக் கருதவேண்டியதில்லை. இந்து - முஸ்லீம் என இருதேசங்கள் இந்தியாவிற்குள் உள்ளன"

- சாவார்க்கர் (1937ல்...)

ஆனால் இந்திய முஸ்லீம் லீக் பாகிஸ்தான் கோரிக்கையை முன்வைத்ததோ லாகூர்மாநாட்டில் 1940ல்தான்.


இந்துத்துவமும் சனநாயகமும்


"இன்றைய பசி, பட்டினி, பஞ்சம், அதர்மம் ஆகியவற்றிற்குக் காரணம் இந்திய அரசியல் சட்டத்திலுள்ள சனநாயக அம்சங்கள்தான்"

- முத்தானந்தா

"பிரிட்டிஷார் இந்திய ஆட்சியை நேபாளமன்னரிடம் கொடுத்துவிடுவது நல்லது"

- சாவர்க்கர்.

" உலகமெங்குமுள்ள இந்துக்களின் இதயத்தில் ஆட்சி செலுத்துபவர் நேபாளமனன்ர் வீரேந்திரர்"

- பாபர்மசூதி இடிக்கப்படட் 1992, டிசம்பர் 6ல் ஆர்.எஸ்.எஸ் இதழான பஞ்ச ஜன்யம் இதழின் புகழாரம்.

ஏகாதிபத்தியமும் இந்துத்துவமும்

பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து பாரதீயஜனதாக் கட்சியின் ராஜ்யசபைத்தலைவர் சிக்கந்தர்பகத் அமெரிக்கக் காங்கிரசில் பேசினார். அமெரிக்க வெளியுறவுக்கொள்கையை உருவாக்குவதில் பங்குவகிக்கும் 'சர்வதேச அமைதிக்கான கார்னெஜி அறக்கட்டளை' அவரை வரவேற்றது.

மேற்கண்ட கூற்றுக்கள் பேரா. அ.மார்க்சின் 'இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு' நூலிலிருந்து எடுக்கப்பட்டது. இனி எனது சில கருத்துக்கள்

இந்தியத்தேசியம் என்பதே அடிப்படையில் பார்ப்பனீயக் கருத்தியல், இந்தியத்தேசம் என்பது பார்ப்பனீயக் கட்டமைப்பு. எனவே இந்தியத்தேசியத்தை விமர்சிக்காமல் பார்ப்பனீயத்தை விமர்சிக்க முடியாது.

இந்தியா என்பது எந்த வரையறையின்படியும் ஒரு நாடு இல்லை. பல்வேறு தேசிய இனங்களின் கூட்டமைப்பே. அந்த கூட்டமைப்பு என்பதும் உரிமைகளை மதிக்கிற, அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்கிற புரிந்துணர்வுடன்கூடிய கூட்டமைப்பாக இருக்கவேண்டும். ஆனால் இந்திய அரசு, போலீசு, ராணுவம் ஆகியவை அந்தத் தன்மையில் அமையாததால் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை உள்ளிட்ட கோரிக்கைகளை ஆதரிக்கவேண்டியது சனநாயகச் சக்திகளின் கடமை.

தமிழ்த்தேசியம் உள்ளிட்ட தேசிய இனங்களின் தேசியம் இந்துமத ஒழிப்பு, சாதி எதிர்ப்பு பார்ப்பனீய எதிர்ப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தாதுபோனால் அதுவும் இந்தியத்தேசியம் பார்ப்பனீயத்தேசியமாக இருப்பதைப்போலவே ஒரு துணைப்பார்ப்பனீயமாகவே இருக்கும்.

தேசியம், தேசபக்தி என்பதை குறியீடுகள், போர்வெறி, கண்மூடித்தனமான விசுவாசம் ஆகியவற்றிலிருந்து பிரித்து மக்கள் நலன், உழைக்கும் மகக்ளின் வாழ்க்கை ஆகியவற்றோடு பொருத்திப்பார்க்கிறோமெனில் இந்துத்துவமும் இந்துத்துவ இயக்கங்களும் வெளியிலிருந்துவந்த ஏகாதிபத்தியச் சக்திகளுக்குச் சமயம் கிடைக்கும்போதெல்லாம் மகக்ளின் பொருளாதார மற்றும் அரசியல் நலன்களைக் காட்டிக்கொடுக்கிற தேசவிரோத இயக்கங்களே.

வீணாய்ப்போன வியர்டும் கொள்ளிக்கட்டையும்
வியர்டு என்பதற்கு விசித்திரமானது, வினோதமானது என்றெல்லாம் அர்த்தம் எடுத்துக்கொண்டால் வாழ்க்கையே வியர்டுதான். அது கிறுக்குத்தனமானது, எந்த விதிகளுக்கும் கட்டுப்படாமல் நடப்பது. புதிரானது.

எனக்கு எப்போதும் ஆழமாய் இருக்கும் கிறுக்கு அரசியல் கிறுக்கு. இதனால் நடைமுறையில் இழந்தவை ஏராளம். முக்கியமாய்க் காதல். நான் ஏற்கனவே லெனின் புத்தகத்தை எடுத்துக்கொண்டுபோய்க் காதலித்த 'லட்சணத்தை'ச் சொல்லியிருக்கிறேன்.

http://sugunadiwakar.blogspot.com/2007_01_01_archive.html

இயல்பிலேயே அது ஊறிப்போய்விட்டது. கல்லூரி படிக்கும்போது வகுப்பில் பெரியாரின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு முத்தமிட்டுக்கொண்டிருப்பேன். வகுப்புத்தோழிகள் பலர் தலையிலடித்துக்கொண்டே எழுந்துசென்றார்கள். பிறகு கல்லூரியெல்லாம் முடிந்து பல வருடங்களுகுப் பின் அந்தப் பெண்களில் இருவர் என்னைச் சீரியஸாய்க் காதலித்தாய் ஒரு நண்பன் சொன்னான்.

அவர்கள் பயந்துபோனதிலும் அர்த்தமிருக்கிறது. என்னைப் போலவே இருக்கும் பல ஜந்துக்களோடு பழகும்போது அந்த வியாதி அதிகமாகிக்கொண்டே வருகிறது. ஒரு பத்துநிமிடத்திற்கு மேல் எந்தப் பெண்ணிடமும் வேறுவிடயங்களைப் பேசிகொண்டிருக்கமுடியாது. அறிவுக்கொடுக்கு தலைகாட்ட ஆரம்பித்துவிடும். இவனுகளைக் காதலிக்க ஆரம்பித்தால் முதலிரவில் கூட முக்கால்மணிநேரம் 'முதலாளிவத்துவத்தை எதிர்க்க வேண்டியதன் அவசியம்' பற்றி
சிறப்புரை நிகழ்த்திவிடுவான்கள் என்று பெண்கள் பயப்பட்டிருக்கக்கூடும்.

இது பல சமயங்களில் வேலை பார்க்கும் இடங்களிலும் எதிரொலித்திருக்கிறது. நாம் பணிபுரியும் இடங்கள் எல்லாமே முஸ்லீம் விரோதமும் சாதிய மனோநிலையுமே நிரம்பியிருக்கிறது. எனவே அங்கேயும் பிரச்சினைதான்.

அதேபோல திருமணம். நமக்குக் காதல்தான் கொடுப்பினை இல்லை என்று ஆகிவிட்டது. நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றாலும் என்னவோ ஒரே பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு கடைசிவரை அதேபெண்ணோடு குடும்பம் நடத்துவது என்பது பயித்திகாரத்தனமாகத்தான் தோன்றுகிறது.

இன்னொன்று குறுக்கே நிற்பது சாதிமறுப்புத்திருமணம் என்னும் நிலைப்பாடு. அதனாலேயே என்னை உண்மையாகவே காதலித்த, எனக்கும் பிடித்துப்போன இரண்டு பெண்கள் நான் பிறந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் காதலையே உதறித்தள்ள நேர்ந்தது. இதை செந்திலிடம் சொன்னபோது 'காதலையும் திருமணத்தையும் அஜெண்டாகவே வைத்திருக்கிறீர்கள்' என்றார்.

இன்னும் சிலபேர் 'உங்களுக்குத்தான் சாதியில் நம்பிக்கையில்லையே, நீங்களே சாதியற்றவர்தானே. பிறகு இதில் சாதி என்ன தடை?' என்றும் கேட்கிறார்கள். இதற்கெல்லாம் தெளிவாகப் பதில்சொல்ல முடியாவிட்டாலும் ஏனோ அந்த கிறுக்குத்தனமான பிடிவாதமிருக்கிறது.

மற்ற சில்லறைத்தனமான விஷயங்கள் எவ்வளவோ சொல்ல்லாம். இந்த நக்கல் என்பது கூடவே பிறந்தது என்றே நினைக்கிறேன். கல்லூரிக்காலத்தின் போது டூர் போகலாம் என்று நண்பர்களிடம் பேச்சுவந்தது. என்னையும் ஒரு பெண் மனிதனாய் மதித்து "எங்கே போகலாம்?" என்று கேட்டார். நான் "யாழ்ப்பாணத்திற்குப் போகலாம்" என்றேன். அந்தப் பெண் படுபேஜாராகிவிட்டார். (அந்தப் பெண் அழகாக இருப்பார் என்பது முக்கியக் குறிப்பு). நேற்றுக்கூட உட்லேண்ட்ஸ் ஓட்டலில் ஒருநண்பருடன் சாப்பிடப்போனபோது 'ஆம்லேட் இருக்கா?' என்று கேட்டுவைத்தேன். பலபேர் இதைச் சீரியசாக எடுப்பதில்லையென்றாலும் சிலபேர் சீரியசாக எடுத்துக்கொண்டு உறவுகள் முறிந்ததுண்டு.

பெரும்பாலும் நான் வாழ்க்கையில் எதையும் சீரியசாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் எதையாவது சீரியசாக எடுத்துக்கொண்டால் 'உருகுதே, மருகுதே, எரியுதே, கருகுதே' என்று மூன்றுநாட்களுக்கு புலம்பிப் புழுங்கித் தவித்துவிடுவேன்.

மறதி என்பதும் என்னோடு பிறந்த இன்னொன்று. பலசமயங்களில் சைக்கிளில் எங்காவது போய் அங்கேயே வைத்துவிட்டு வீட்டிற்கு நடந்தே வந்திருக்கிறேன். பலபொருட்களைத் தொலைத்திருக்கிறேன். ஆனால் அதிலும் ஒரு ஆச்சரியம் நடக்கும். போனமுறை செந்திலைப் பார்ப்பதற்காக தூத்துக்குடி போயிருந்தேன்.

பஸ்ஸ்டாண்டில் இறங்கினால் செல்போனில் சுத்தமாக சார்ஜ் இறங்கியிருந்தது. எனக்குச் செந்திலின் நம்பரும் ஞாபகம் இல்லை. அவரை எப்படித் தொடர்புகொள்வதென்றும் தெரியவில்லை. கையில் லக்கானின் புத்தகம் ஒன்று வைத்திருந்தேன். ஆசுவாசப்படுத்துவதற்காக ஒரு கடையில் டீ சாப்பிட்டுவிட்டு பிறகு தெரிந்தவர்களிடமெல்லாம் போன் போட்டுக் கேட்டால் ஒருவருக்கும் செந்திலின் நம்பர் தெரியவில்லை.

அய்ந்துமணிநேரம் பயணம் செய்து வந்துவிட்டு செந்திலைப் பார்க்காமலும் ஊர் திரும்பமுடியாது. ஒருவழியாகக் கஷ்டப்பட்டு நம்பரைக் கண்டுபிடித்து செந்திலையும் வரச்சொல்லிவிட்டேன். ஆனால் அப்போதுதான் கவனித்தேன் கையிலிருந்த லக்கான் புத்தகத்தைக் காணவில்லை. பதறியடித்து நானும் செந்திலும் தேடிவந்தால் ஒருமணிநேரத்திற்கு முன்னால் எந்த டீக்கடையில் வைத்தேனோ அதே டீக்கடையில் பத்திரமாக இருந்தது புத்தகம். புத்தகங்களைத் திருடக்கூட யாருமில்லை என்று நானும் செந்திலும் சோகமானோம். ஆனால் இதுவரை நான் செல்போன்கள் எதையும் தொலைத்ததில்லை என்பது ஆச்சரியமானதுதான்.

சரி இந்த வியர்டு விளையாட்டு எல்லாம் எனக்கு உண்மையில் போரடிக்கிறது. ஏதோ செந்தழல் ரவி கூப்பிட்டார் என்றுதான் வந்தேன். இதிலும் ஒரு சூப்பர் காமெடி என்னவென்றால் என்னை வியர்டு ஆட்டத்திற்கு அவரது பதிவில் அழைத்த ரவி வழக்கம்போல என்னுடைய பதிவில் அனானியாக வந்து 'உங்களை வியர்டு ஆட்டத்திற்கு அழைத்திருக்கிறேன், வரவும்' என்று பின்னூட்டமும் போட்டுவிட்டார்.

நானாவது எப்போதாவதுதான் சிக்குகிறேன். ஆனால் செந்தில்தான் பாவம். யார் எந்த ஆட்டத்க்தை ஆரம்பித்தாலும் செந்திலையும் அழைத்துவிடுகிறார்கள். இதற்கான காரணம் எனக்கும் புரியவில்லை. செந்திலைக் கேட்டபோது அவருக்கும் புரியவில்லை. 'உங்கள் ஜட்டியின் கலர் என்ன?' போன்ற உபயோகமான கேள்விகளையும் 'கடைசியாக யாருக்கு முத்தம் கொடுத்தீர்கள்?' என்பது போன்ற வயிற்றெரிச்சல் எழுப்பும் கேள்விகளையும் (முத்தம்ன்னா என்ன..?) கேட்டு பாடாய்ப்படுத்திவிடுகிறார்கள்.

எனவே நானே ஒருமுடிவுக்கு வந்துவிட்டேன். அடுத்து இதுமாதிரி யாராவது கேள்விகள் கேட்கும் அபாயத்திலிருந்து தப்புவதற்காக நானே ஒருவிளையாட்டை ஆரம்பித்துவிட்டேன். விளையாட்டின் பெயர் 'கொள்ளிக்கட்டை'. நிபந்தனைகள் மூன்று.

1. கேள்விகள் பலதுறையைச் சேர்ந்தவையாக இருக்கலாம். ஆனால் 'அறிவுபூர்வமாக' இருக்கவேண்டும்.

2. பதிவின் தலைப்பில் 'கொள்ளி' என்கிற வார்த்தை அவசியம் இடம்பெறவேண்டும் உதாரணம் : கொள்ளிக்கட்டைத்தலையா, கொள்ளிவாய்ப்பிசாசு, கொள்ளிக்கட்டையை எடுத்து தலையைச் சொறிந்து...

3. மேற்கண்ட நிபந்தனைகளை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் மீறலாம்.

வழக்கம்போல கொள்ளிக்கட்டையை செந்திலிடமே கொடுக்கிறேன். இனிக் கேள்விகள்....


வரலாறு : 'ஏய் நீ ரொம்ப அழகாயிருக்கே...' என்று எந்தப் பெண்னிடமாவது சொல்லி அடிவாங்கியதுண்டா?

உடல்நலம் : நீங்கள் தினமும் போடும் சோப்பு எது? (இதெல்லாம் குளிக்கிறவங்ககிட்ட கேளுங்க என்று நீங்கள் சொன்னால் அடுத்த சாய்ஸ்)

'மருந்து' சாப்பிடும் பழக்கம் எப்போதிருந்து தொடங்கியது?

திறனாய்வு : பின்னூட்டம்பாலா போன்ற கே.கேக்களின் (கேணக்கிறுக்கர்கள்) பின்னூட்டங்களை மதிப்பீடு செய்க.

புலனாய்வு : மொக்கைவேந்தன் பாலபாரதி 36 வயதை 32 வயது என்று பொய்க்கணக்கு காட்டி விடுத்த பிறந்தநாள் அறிக்கையில் 'டைப் அடித்து அடித்து என் கைரேகைகள் தேய்ந்துவிட்டன..' என்றுசொன்னதில் உண்மை உண்டா?

அறிவியல் : மெத்தனால், எத்தனால் - பத்துவரிகளுக்குள் தடுமாறாமல் சிறுகுறிப்பு வரைக.

இலக்கியம் : நிலா, வண்ணத்துப்பூச்சி, பூ, இதயம், நீ, நான், முத்தம், அன்பே போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் 'சமையல்கட்டு' என்ற தலைப்பில் ஒரு காதல்கவிதை எழுதுக.

பொது அறிவு : தமிழீழத்தின் தலைநகரம் எது? (இந்தக் கேள்வியைப் 'பயன்படுத்தி' 'எங்கள் இதயம்' என்று உணர்ச்சிவசப்பட்டுப் பதில் சொல்லி யாரையாவது உணர்ச்சிவயப்படச்செய்து ரூட்போடவேண்டாம்)

நண்பர்களே, நாகரீகமாக நடந்துகொள்ளுங்கள்!
வரவர தமிழ்மணத்தைப் படிப்பதற்கே வெறுப்பாக இருக்கிறது.'சாதுவான பிராமணர்களை'ப் பெரியாரிஸ்ட்களும், திராவிட இயக்க ஆதரவாளர்களும், நக்சல்பாரிகளும் கண்டமேனிக்கு வசைபாடுகிறார்கள். தாக்குதல் நடத்துகிறார்கள். சாதி தேவையா என்று 'அர்த்தமில்லாத' விவாதங்களைக் கிளப்புகிறார்கள். பலசமயங்களில் உண்மைகளையும் முன்வைத்துவிடுகிறார்கள்.

இதையெல்லாம் மறுக்க அரவிந்தன்நீலகண்டன் போன்ற 'சுயம்கரசேவை அறிவுஜீவிகள்' (கெட்டவார்த்தை ஏதும் இல்லீங்ண்ணா) ஆதாரங்களைக் 'கண்டுபிடிப்பதற்குள்' படாதபாடு பட்டுவிடுகிறார்கள். சமயங்களில் எந்த ஆதாரமும் கிடைக்காவிட்டால் தானாகவே ஆதாரங்களை 'உருவாக்கவேண்டியிருக்கிறது'. மேலும் இல்லாத சாதிக்கு இவர்கள் இட ஒதுக்கீடும் கேட்கிறார்கள். இந்த நியாயத்தைக் கேட்கப்போனால் அப்பாவிப்பிராமணர்களின் மீது தாக்குதல் தொடுக்கப்படுகிறது.

இதற்காகப் பார்ப்பனர்களை விட அதிகமும் சங்கடப்படுபவர்கள் நடுநிலைவாதிகள்தான். இந்த நடுநிலைவாதிகளில் பெரும்பாலோருக்கு அய்ம்பது வயதுக்கு மேல் ஆகிவிட்டது. எனவே இந்தக் கடுமையான தாக்குதலினால் அவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரவும் வாய்ப்பிருக்கிறது.

எனவே நான் மனம் திருந்திவிட்டேன். இந்த வசைகாரக் கும்பலில் சேர்ந்து நானும் பார்ப்பனர்களையும் இந்துமதத்தையும் வசைபாடியதால் ஏற்கனவே 'பிரமமஹத்தி தோஷம்' பிடித்திருக்கிறது. மேலும் பிரம்மத்தையே காப்பவர்களாகிய பிராமணர்களை வணங்குவதும் சேவைபுரிவதுமான என் சூத்திரக் கடமையிலிருந்து தவறிவிட்டதால் எனக்கு நரகத்திற்கு மட்டும்தான் அட்மிஷன் சீட் கிடைக்கும். அங்கேயும் எனக்கு முன்னால் அசுரன், வரவணை, ராஜ்வனஜ், கருப்பண்ணே, முத்துதமிழினி ஆகியோர் 'ஹிட்லிஸ்டில் இருப்பதால் அங்கேயும் எனக்கு வெயிட்டிங் லிஸ்ட்தான்.

சரி, இந்த வெங்காயத்தலைவன் ஈ.வெ.ராவிஸ்ட்களும், நக்சல்பாரி நாசகாரக்கும்பலும் திரா'விட'ப்பெத்தடின்களும் ஏன் பார்ப்பனர்களையும் இந்துமதத்தையும் தாக்குகிறார்கள். அதில் ஏதாவது அர்த்தமிருக்கிறதா?.

இப்போது எங்கே சாதி இருக்கிறது? ஏதோ இட ஒதுக்கீடு என்னும் அநியாயம் இன்னும் நடந்துகொண்டிருப்பதால் சர்டிபிகேட்டில் மட்டும் சாதி இருக்கிறது. ஒரு தலித்தும் முஸ்லீமும் இந்தியாவின் முதல் குடிமகனாகவே வர முடிகிறது. ஏதோ கேவலம் சில பஞ்சாயத்துபோர்டுகளில் மட்டும்தான் தலைவராக வர முடியாது. தீண்டாமை என்பது பாவச்செயல் என்று பாடப்புத்தகத்திலேயே போட்டாகிவிட்டது. இப்போது எல்லாத் தொழிலையும் எல்லாரும் பார்க்கிறார்கள். நீங்கள் கொஞ்சம் குளிச்சு கிளிச்சு சுத்தபத்தமா இருந்தா பார்ப்பனர்கள் தங்கள் பெண்களைக் கூட மணம் முடித்துவைக்கத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் இன்னும் இந்த இருபதாம் நூற்றாண்டிலும் சாதி, பார்ப்பனீயம் என்று அலறுபவர்கள் நிச்சயம் மனநோயாளிகளாகத்தான் இருக்க முடியும்.

இந்துமதம்தான் எவ்வளவு உயர்ந்த மதம். இஸ்லாமிய மதம் தன் மதத்தை நம்பாதவர்களைக் 'காபீர்கள்' என்கிறது. கிறித்துவமோ கிறித்துவை நம்பாதவர்களைப் 'பாவிகள்' என்கிறது. இந்த ஆபிரகாமிய மதங்கள் தங்கள் மதங்களைச் சாராதவர்களைத்தான் கண்டமேனிக்குத் திட்டுகின்றன. ஆனால் பெருந்தன்மையுள்ள இந்துமதம் மட்டும்தான் தன்னுடைய மதத்தைச் சேர்ந்தவர்களில் ஒரு பெரும்பகுதியினரை 'வேசிமக்கள்' என்று பிரியத்துடன் திட்டுகிறது.

ஆர்.எஸ்.எஸ் ஒரு வன்முறை அமைப்பு என்று வாய்கூசாமல் பிரச்சாரம் செய்கிறார்கள் ஹிந்துவிரோதிகள். உண்மையில் ஆர்.எஸ்.எஸ் ஒரு மதவாத அமைப்போ வன்முறை இயக்கமோ அல்ல. பல 'ஹராம்'களை இழைத்துள்ள முஸ்லீம்களையும் பாவங்களைச் செய்து புழுங்கிக் கொண்டிருக்கும் கிறித்துவப் பாவிகளையும் கூண்டோடு அவரவர்களின் சுவனத்திற்கும், பரமண்டலத்திற்கும் அனுப்பும் தெய்வீகப்பணியையே தேசப்பணியாக ஆற்றிக்கொண்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ்.

ஆனால் இத்தனை விளக்கங்களைச் சொன்னபிறகும் தமிழர்மாமா ஈ.வெ.ராவின் அடிவருடிகளும் சர்வதேச மாமா மாவோவின் அடிவருடிகளும் திருந்துவார்களா என்றால் கிடையாது. அப்படியென்றால் இவர்களுக்கு தர்மம் கிடையாது என்றுதானே அர்த்தம்?. எனவே திராவிடசுண்டக்கஞ்சிகளே (சுதேசி சரக்கு), காட்டுக்குள் வாழும் நக்சல்பாரிகளே நீங்கள் விமர்சிப்பதாக இருந்தாலும் சாதியையும் பார்ப்பனீயத்தையும் பார்ப்பனர்களையும் இந்துமதத்தையும் 'மாமா', 'வெங்காயத்தலைவன்' 'நக்குவது' போன்ற ஆரோக்கியமான வார்த்தைகளால் விவாதங்களை எதிர்கொள்ளாமல் அநாகரீகமாகத் திட்டுவது உங்கள் அரிப்புத்தான். நீங்கள் திட்டுவதை அகண்டபாரதம் அமையும்வரை தடுக்கமுடியாது. ஆனால் அதுவரையிலாவது கொஞ்சம் கீழ்க்கண்டவாறு 'நாகரீகமாகவும்' 'மரியாதையாகவும்' திட்டுங்கள்.

மரியாதைக்குரிய பாப்பாரப் பன்னாடை.....அவர்களே!
அன்புள்ள நாதாரிநாயே,
கைபர்கோலன் கணவாய் வழியாக வந்த வணக்கத்துக்குரிய வந்தேறியே,
மகத்தான கழிசடை இந்துமதம்
உன்னதமான கொலைகார ஆர்.எஸ்.எஸ் இயக்கம்...

பருத்திவீரன் - சர்ச்சைகள் இரண்டு
முதலில் மேலோட்டமாக...


பருத்திவீரன் படம் ஆரம்பித்த அரைமணிநேரத்திற்குள்ளாகவே 'ஏண்டா இந்தப் படத்திற்கு வந்தோம்' என்றாகிவிட்டது. வழக்கம்போல கிராமத்துச் சின்னப்பசங்களின் காதல். இதையே அரைமணிநேரம் காட்ட 'ஆட்டோகிராப்' போல ஒரு கேவலமான சினிமாவாக இருக்கும்போல என்ற நினைப்பை விலக்கமுடியவில்லை. அதுவும் அந்தப் பெண்ணைச் சிறுவயதில் கிணற்றில் தவறிவிழுந்துவிட அந்தப் பையன் காப்பாற்ற அதுவே காதலாக மாறுகிறது என்பதும் நம்பமுடியாத லாஜிக்.

அதன்பிறகு ப்ரியாமணியின் நடிப்பு நம்மைக் கொஞ்சம் நிமிர வைக்கிறது. ஆனால் அவர் காதலில் உறுதியாக நிற்பதற்கும் வீட்டை விட்டு வெளியே வருவதற்கும் காதலுக்காகவே உயிரைத் துறப்பதற்கும் எந்த வலுவான காரணமுமில்லை. ஆனால் கதாநாயகியின் குரலிலிருந்து உடல்மொழி வரை பெண்மையின் சாயலே தெரியாமல் கம்பீரமாகப் படைத்ததற்காக இயக்குனரைப் பாராட்டியே ஆகவேண்டும்.

கார்த்தியைப் பொறுத்தவரை படத்தின் முதல்பாதிவரை அவரது உடல்மொழியும் வசன உச்சரிப்பும் கஞ்சாகருப்புவையே நினைவுபடுத்துகின்றன. (அந்த அலட்டல் உடல்மொழி). பிற்பகுதியில் தேறிவிடுகிறார். ஆனால் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ப்ரியாமணி அளவிற்கு கார்த்தியால் ஈடுகொடுத்து நடிக்கமுடியவில்லை. கிளைமாக்சில் சிவகுமாரை ஞாபகப்படுத்திவிடுகிறார்.

படத்தில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது இசை. குறிப்பாக மணற்பரப்பில் நடக்கும் சண்டைக்காட்சியில் ஒலிக்கும் பின்னணி இசை வேறு ஒரு பரிமாணததைத் தொட்டிருக்கிறது. பாடல்கள்தான் தேறவில்லை. வழக்கம்போல இளையராஜா 'அறியாத வயசு...' என்று ஆரம்பிக்கும்போது 'ஹய்யோ...' என்று தோன்றுகிறது.

சரவணன், பொன்வண்ணன் மற்றும் படத்தில் பாலியல் தொழிலாளியாக வருபவரிலிருந்து பச்சை குத்துபவர் வரை வரும் அசல் மனிதர்கள் நம்மை ஆச்சரியப்படுத்துகிறார்கள். இப்போது இந்தப் படம் குறித்து எழுப்பப்படும் இரு சர்ச்சைகள் குறித்து உரையாடுவோம்.

சர்ச்சை 1 :

14.03.2007 ஆனந்தவிகடனில் ஞானி, சுஜாதா உள்ளிட்ட பலர் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி கொடூரமானது, வன்முறையானது என்று கண்டனம் தெரிவிக்கின்றனர். சுஜாதாவோ இன்னும் ஒருபடி மேலே போய் இதற்காகவே 'பருத்திவீரன் படத்திற்கான நட்சத்திரங்களில் ஒன்றைப் பிடுங்கலாம் என்கிறார். (பிடுங்குவதில்தான் சுஜாதா எக்ஸ்பர்ட் ஆயிற்றே.)

இதற்கு மறுப்பு தெரிவித்து தினத்தந்தி பேட்டியில் கருத்து தெரிவித்துள்ள பருத்திவீரன் படத்தின் இயக்குனர் அமீர் 'சேகர்கபூருக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயமா' என்று சீறியுள்ளார். இந்தக் கேள்வியில் நியாயம் இருப்பதாகவே உணர்கிறேன். சேகர்கபூரின் 'பண்டிட் குயின்' படத்தில் பூலானைப் பலர் தொடர்ச்சியாகப் பாலியல் பலாத்காரம் செய்வதை வலியோடும் துயரத்தோடும் சித்தரித்திருப்பார் சேகர். அந்தளவிற்கான சித்தரிப்பின் நுட்பம் பருத்திவீரனில் இல்லையென்றாலும் ஓரளவிற்கு அந்த முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.

உண்மையில் வழக்கமாய்த் தமிழ்ச்சினிமாக்களில் வரும் கதாநாயகனால் காப்பற்றப்படுவதற்காகவே கதாநாயகி 'கற்பழிக்கப்படும்' காட்சிகளை விடவும் நாகரிகமாகவும் உண்மையாகவும்தானிருக்கிறது பருத்திவீரனின் உச்சகட்ட காட்சி.

ஆனால் இதுமாதிரியான காட்சிகளே இருக்கக்கூடாது என்று ஞானி போன்றவர்கள் வாதிடுவதின் காரணம் புரியவில்லை. ஒவ்வொரு இனக்கலவரத்தின்போதும் மதக்கலவரத்தின்போதும் பலியாவதென்னவோ பெண்ணுடல்தான். ஈழத்திலிருந்து வாச்சாத்தி, குஜராத் வரை இதுதான் நிலைமை. (சமீபத்தில் நந்திகிராமத்திலும் இத்தகையக் கொடுமைகள் நிகழ்ந்துள்ளதாய் செய்தித்தாள்கள் தெரிவிக்கின்றன).

குஷ்பு சர்ச்சையின்போது கலாச்சாரப் பாசிஸ்ட்களுக்கு எதிராய் நின்ற ஞானி, திருமணத்திற்கு முன்பான பாலுறவு குறித்த திறந்த விவாதத்தைத் தொடங்கிவைத்த ஞானி இந்தக் காட்சிக்கு மட்டும் ஏன் எதிராய் நிற்கிறார் என்பதை அவர்தான் விளக்கவேண்டும்.

சர்ச்சை 2 :

பருத்திவீரன் திரைப்படம் குறவர் இன மக்களை இழிவுபடுத்துவதாக அம்மக்களின் அமைப்புகள் போராடுகின்றன, வழக்கும் தொடுக்கப்படுகின்றன. புதியதமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் உண்மையில் குறவர் இனமக்கள் குறித்து நியாயமான சித்தரிப்புகளே படத்தில் இடம்பெற்றிருக்கின்றன. அதிலும் குறிப்பாக தேவர்களின் சாதிவெறி குறித்து காத்திரமான குரலை எழுப்பியிருக்கிறது 'பருத்திவீரன்' படம். குறிப்பாக அந்த குறவர் இனத்தைச் சேர்ந்த பெண்ணைத் தேவர்கள் கொலை செய்யும்போது ஒரு பன்றியை அடித்துக் கொலைசெய்யப்படுவதைப் போலவே கொலைசெய்கின்றனர். இத்தகைய நுட்பமான காட்சிகள் படத்தில் இடம்பெற்றிருக்கின்றன.

தேவருக்கும் குறவர் இனப்பெண் ஒருவருக்கும் பிறந்த ஒரு பையனை கடைசிவரை தேவர்கள் ஏற்றுக்கொள்ளாத சாதிவெறியையே படம் பேசுகிறது. தமிழ்த்திரைப்படத் துறையில் தேவர்களை விமர்சித்து ஒரு படம் வருவது என்பதே அரிதானதுதான். உண்மையில் தேவர்கள்தான் இந்த படத்திற்கு எதிராகக் கோபம் கொண்டிருக்கவேண்டும். ஆனால் நிலைமை தலைகீழாகத் திரும்புவது புரியாத புதிராக இருக்கிறது.

உண்மையில் நாம் பருத்திவீரனைக் கண்டிக்க வேண்டியதெல்லாம் ஒரு பாடல்காட்சியில் பால்மீறிகளை மிகக் கேவலமாகச் சித்தரித்திருப்பதற்குத்தான்.

சி.பி.எம்- இந்துத்துவம், ஒத்தநாகரிகம்.
கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் மனுதர்மா - c.p.m (நன்றி.கி.வீரமணி)யின் ஆதரவாளர் ஒருவர் சந்திப்பு என்ற பெயரில் ஒரு வலைப்பக்கத்தை நடத்திவருகிறார். அவரது சமீபத்திய அபத்தத்திற்குக் காண்க.

http://santhipu.blogspot.com/2006/05/blog-post_19.html

நந்திகிராமத்திலும் சிங்கூரிலும் உழைக்கும் மக்களின் துரோகியாக அம்பலப்படுத்தப்பட்டுள்ள சூழலில் அதைத் திசைதிருப்புவதற்காகவே வழக்கமான பார்ப்பனீயத் தந்திரத்தைக் கையிலெடுத்துக்கொண்டு இந்தப் பதிவை எழுதியிருக்கிறார்.

சாமிசிதம்பரனார் அடிப்படையில் ஒரு தமிழ்ப்புலவர். தமிழில் சில நல்ல நூற்களை எழுதியிருக்கிறார். அவர் எழுதிய 'தமிழர்தலைவர்' நூலுக்குப்பிறகு இதுவரை பெரியாரின் முழுமையான வாழ்க்கைவரலாறு வெளிவரவில்லை. அதேபோல சித்தர்கள் குறித்தும் முக்கியமான நூலொன்றை எழுதியிருக்கிறார். இதற்காகவெல்லாம் அவர் மிகவும் மதிக்கப்படவேண்டியவரே. ஆனால் அவர் சுயமரியாதை இயக்கத்தைவிட்டு வெளியேறி பொதுவுடைமை இயக்கத்தில் இணைந்ததற்கான காரணம் கம்யூனிசத்தின் மேல் கொண்ட காதலால் அல்ல. அடிப்படையில் புலவரான அவரால் கம்பராமாயணம் மற்றும் பெரியபுராணத்தின்மீதான பெரியாரின் கடுமையான விமர்சனங்களைத் தாங்கிக்கொள்ள இயலாமல்தான் வெளியேறினார்.

பெரியாரும் அண்ணாவும் கம்பராமாயணத்தையும் பெரியபுராணத்தையும் எரிக்கச்சொல்லிப் பிரச்சாரம் செய்துகொண்டிருந்த காலகட்டத்தில்தான் சாமிசிதம்பரனாரும் ஜீவாவும் கம்பராமாயணத்தின் இலக்கியக்கூறுகளை விதந்தோதிக்கொண்டிருந்தனர். மேலும் அவற்றில் ஒரு சில பாடல்களைப் பொறுக்கிக் கம்பராமாயணத்தில் 'கம்யூனிசக்கூறுகளை' விளக்கினர். இவர்களாவது பரவாயில்லை கம்பராமாயணத்தில்தான் கம்யூனிசத்தைக் கண்டுபிடித்தார்கள். ஆனால் இவர்களுக்கெல்லாம் அப்பன் நம்பூதிரி'பாடு' வேதங்களிலேயே 'புராதனப்பொதுவுடைமைச் சமூகத்தை' கண்டுபிடித்தார்.

சரி இனி சாமிசிதம்பரனாரின் கட்டுரையிலுள்ள அபத்தத்தைக் காண்போம்.

/“தொல்காப்பியர் காலத்திலேயே தமிழர்களிடையே இருந்த நாகரிகம் தமிழர் நாகரிகம் என்றுதான் எண்ண வேண்டும். அந்த நாகரிகம் ஆரியருக்கும், தமிழருக்கும் ஒத்த நாகரிகமாகத்தான் காணப்படுகின்றது. தொல்காப்பியத்தில் ஆரியர் என்ற பெயரோ, திராவிடர் என்ற பெயரோ காணப்படவில்லை/

ஆரியரோ திராவிடரோ காணப்படாதபோது இல்லாத ஆரியர்களுக்கும் இருந்த தமிழர்களுக்கும் இடையில் 'ஒத்த' நாகரீகம் எப்படி நிலவியிருக்கும்?

/“இந்தியாவின் அடிப்படை நாகரிகம் ஒன்றுதான் என்று கூறும் சரித்திராசிரியர்கள் உண்டு. 'இந்தியமக்கள் வணங்கும் தெய்வங்கள், பிறப்பு, இறப்பு பற்றிய நம்பிக்கைகள், நீதி, அநீதி இவைகளைப் பற்றிய முடிவுகள், பாவபுண்ணியம், மோட்சம், நரகம் பற்றிய கொள்கைகள் இவைகள் எல்லாம் ஒன்றாகவே இருக்கின்றன. இந்திய மக்கள் அனைவருக்கும் இவைகளைப் பற்றிய கருத்து ஒன்றுதான். இவைகள்தாம் பண்பாட்டுக்கு அடிப்படையானவை. அவரவர்கள் வாழும் இடத்தைப் பொறுத்து நடை, உடை, பாவனைகளும், மொழிகளும் வேறுபட்டிருக்கலாம். இதனால் இந்தியமக்களின் பண்பாடு வெவ்வேறு என்று சொல்லிவிட முடியாது ' என்பதே இச்சரித்திராசிரியர்களின் கொள்கை/

அடப்பாவிகளா இதைத்தானே ஆர்.எஸ்.எஸ்ஸும் சொல்கிறது ஒரே நாடு ஒரே சட்டம் ஒரே கலாச்சாரம் என்று. சாமிசிதம்பரனாரிடமும் சந்திப்புமிடமும் எந்தச் 'சரித்திர ஆசிரியர்கள்' அப்படி வந்துசொன்னார்கள்? இந்தியா முழுவதும் ஒரே கலாச்சாரம், ஒரே வழிபாடு, ஒரே தத்துவம் என்றால் பவுத்தம், சமணம், ஆசிர்வகம், சாங்கியம், உலகாயுதம் ஆகியவற்றில் ஆரம்பித்து சிறுதெய்வ வழிபாடு வரை இருப்பதற்குப் பெயர் என்ன?

சந்திப்பு, சாமிசிதம்பரனாரைப் படிப்பதற்கு முன்பு ராகுல்ஜி, டி.டி.கோசாம்பி, நா.வானமாமலை ஆகியவர்களைப் படிக்கட்டும்.இந்தலட்சணத்தில் பன்மைத்துவங்களை மறுத்து ஒற்றைத்தன்மையை வலியுறுத்தும் பாசிசப்போக்கிலிருக்கும் சந்திப்பு சமுத்ராவிற்கு அறிவுரை சொல்கிறார். ' இந்துத்துவா என்பது வேற்றுமையில் ஒற்றுமை என்பதை மறுக்க கூடியது. அது இந்திய பண்பாட்டை முற்றிலும் திரித்துக் கூறும் தத்துவம்' என்று. செய்வது தரகுப்பணி, உனக்கெதுக்கு சிகப்புக்கொடி என்றுதான் கேட்கவேண்டியிருக்கிறது.

/தொல்காப்பியர் 'அந்தணர் மறைத்தே ' என்று குறித்திருப்பதும், எட்டுவகை (கந்தருவம் உள்ளிட்ட) மணங்களைக் குறிப்பிட்டிருப்பதும் அவை (தொல்காப்பியர் சொல்லும் மறை என்பது) வடமொழி வேதங்கள்தாம் என்பதற்குப் போதுமான சான்றாகும். அவை தமிழ்வேதங்கள் என்பது பொருந்தாது/

அகப்பாடல்களான 136 மற்றும் 86 ஆகியவை கூறும் திருமண முறைகள் முழுக்க தமிழர்திருமண முறைகளே என்றும் இவை ஆரியமரபிலிருந்து மாறுபட்டவை என்றும் சொல்வது யார் தெரியுமா? பி.டி.சீனிவாச அய்யங்கார். (P.T.S, History of Tamils,page - 80 )உண்மையில் தமிழர் கலாச்சாரம் என்பதும் ஆரியர் கலாச்சாரம் என்பதும் சங்கப்பாடல்களிலேயே வேறுபடுத்திக்காட்டப்பட்டுள்ளது. 'ஆரியர்' என்கிற சொல் தமிழ் இலக்கியங்கள் முழுக்க 'மற்றமையை'(others)க்குறிக்கவே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஆரியப்படையை வென்ற நெடுஞ்செழியன் பற்றிப் புறநானூறு பேசுகிறது. தமிழின் மேன்மையை அறியாத ஆரியமன்னன் பிரகதத்தனுக்குத் தமிழின் சிறப்பை உணர்த்தவே குறிஞ்சிப்பாட்டு இயற்றப்பட்டது. 'பாடகச்சீறடி ஆரியப்பேடியோடு எஞ்சாமன்னர் இறைமொழிமறுக்கும்..' என்கிறது சிலப்பதிகாரம். ஆனால் சந்திப்பு ஆரியச்சோற்றில் தமிழ்ப்பூசணிக்காயை மறைக்கப்பார்ப்பது ஏன்?

உண்மையைச் சொல்வதானால் ஆரியருக்கும் திராவிடருக்கும் ஒத்த நாகரீகம் இல்லை. இந்துத்துமத்திற்கும் சி.பி.எம்மிற்கும்தான் ஒத்த நாகரிகமும் கலாச்சாரமும் இருக்கிறது. பார்ப்பன ஆதரவு, ஏகாதிபத்தியத்திற்குக் கைக்கூலி வேலை பார்ப்பது, மதவாதத்திற்காகவும் ஏகாதிபத்தியப் பகாசூரத்திற்காகவும் தான் ஆளும் மாநிலங்களின் மக்களின் மீது குண்டர்களை போலீசுரவுடிகளையும் ஏவிவிடுவது ஆகியற்றில் ஒத்த நாகரீகம்தான். ஆனால் இதையெல்லாம் செய்துவிட்டு குஜராத்தில் 3000 முஸ்லீம்களைக் கொன்ற இந்துத்துவமும் 50பேருக்கும் மேல் மேற்குவங்கத்தில் கொன்ற மனுதருமக் கம்யூனிஸ்ட்களும் (இப்போது போலீசு பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் பிணங்களை மறைக்க இழுத்துக்கொண்டுபோய் ஒரு இடத்தில் மொத்தமாய்ப் புதைத்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன) சட்டீஸ்கரில் அய்ம்பது கைக்கூலிகளைக் கொன்ற காரணத்திற்காக நக்சல்பாரிகளைக் 'கொலைகாரர்கள்' என்று குற்றம்சாட்டுவர்.

அதுபோக சந்திப்பு வழிப்போக்கனுக்குச் சொல்லும் பதிலில் 'பார்ப்பனர்களை எதிர்க்கவில்லை, பார்ப்பனீயத்தைத்தான் எதிர்க்கிறோம்' என்று 'விளக்கம்' வேறு கொடுக்கிறார். சரி, இவர்கள் 'பார்ப்பனீயத்தை' எதிர்த்த கதையைத்தான் பார்ப்போமே,

* இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தை தேர்தல் சகதியில் தள்ளிய நம்பூதிரிபாடு தன் பேரனுக்குப் பூணூல் கல்யாணம் செய்தது.

* மேற்குவங்கத்தில் கோயிலில் கையும் களவுமாக மாட்டிய மந்திரி 'நான் முதலில் பிராமணன், பிறகுதான் கம்யூனிஸ்ட்' என்று 'திருவாய்' மலர்ந்தது.

* இருள்நீக்கி சுப்பிரமணியத்திற்கும் அவனது கொடுக்கிற்கும் ஆதரவுக்கரம் நீட்ட 'மவுண்ட்ரோடு மார்க்சிஸ்ட்' ஹிந்து என்.ராம் ஓடோடிவந்தது.

* ஜெயேந்திரனை உள்ளூரிலேயே சீந்தக்கூட நாதியில்லாமல் நாயைவிடக் கேவலமாகப் பார்த்துக்கொண்டிருக்கும் சூழலில் கேரள முதல்வர் 'காம்ரேட்' அச்சுதானந்தன் அவனைச் சிறப்புவிருந்தினராக அழைத்தது.

* தீக்கதிர் தீபாவளிமலர் வெளியிடுவது.

* கம்யூனிஸ்ட்களை அவதூறு செய்யும் ஜெயமோகனின் 'பின் தொடரும் நிழலின் குரல் நாவலை த.மு.எ.ச பொறுப்பாளர் மறைந்த கந்தர்வன் வெளியிட்டது...

சொல்லிக்கொண்டே போனால் முஸ்லீம்விரோத 'பம்பாய்' படத்திற்குத் த.மு.எ.ச பாராட்டுவிழா எடுப்பதிலிருந்து உள்ளூரில் ஆயுதபூஜை கொண்டாடுவது வரைக்கும் இவர்களது 'பார்ப்பனீய எதிர்ப்பு'ப் பணிகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

/இணையத்தில் மலிவான எழுத்துக்களைப் பரப்பிவரும் ஈவேராவின் சீடர்கள்தான் இந்தக் கேள்விகளுக்குத் தக்க பதில்களைத் தேட வேண்டும்/ என்கிறார் சந்திப்பு. தினமலர் பாணியில் ஈ.வெ.ரா என்று வெறுப்பு பொங்கக் குறிப்பிடும் சந்திப்பின் பதிவுக்கு வஜ்ராசங்கர், அரவிந்தன்நீலகண்டன் போன்ற இந்துத்துவப் பாசிஸ்ட்கள் பாராட்டிப் பின்னூட்டமிடுவதில் ஆச்சரியம் இருக்கிறதா என்ன?

அசுரன் - அரவிந்தன் நீலகண்டன் - ஜடாயு...


அரவிந்தன் நீலகண்டன் என்னும் இந்துத்துவப் பதிவாளரைத் தோழர். அசுரன் மற்றும் கேடயம் வலைப்பதிவு மிகமோசமான முறையில் தாக்குவதாக காவி இருளாய் விரவிப் பறந்து சிறகு விரிக்கும் ஜடாயு என்பவர் ஆத்திரம் கொண்டு ஒரு பதிவையிட்டிருக்கிறார்.

அரவிந்தன்நீலகண்டன் ஒரு அறிவாளியாம். 'அசைக்கமுடியாத ஆதாரங்களை' முன்வைத்து இந்துத்துவத்திற்கு முட்டுக்கொடுப்பவராம். இவர்களின் அசைக்க முடியாத ஆதாரங்களின் யோக்கியதைதான் காளைமாட்டைக் குதிரையாக மாற்ற முனைந்து சிரிப்பாய்ச் சிரித்ததே!

சரி, அசுரன் எழுப்பும் ஆதாரமான கேள்விக்கு அரவிந்தன் இதுவரை என்ன பொறுப்பான பதில் கூறியிருக்கிறார்? வேதங்களின் பெருமை, இந்துமதத்தின் மகாத்மியமெல்லாம் இருக்கட்டும்? வருணாசிரமத்தையும் அதன் விளைபொருளான சாதியையும் தீண்டாமையையும் இந்துமதத்தை ஒழிக்காமல் எப்படி ஒழிப்பது? கேட்டால் எங்கள் 'பிராமண சுயம்சேவக்குகளும் சங்கக் கூட்டத்தில் மற்றவர்களின் காலனியை வாங்கிவைப்பார்கள்' என்கிறார். சரி, மாட்டுத்தோலை உரித்தற்காக இந்த சுயம்சேவக்குகள் தலித்துகளைக் கொளுத்தியது ஏன்? பதில்வராது. மனுதர்மத்தின்மேல் நம்பிக்கையில்லை என்பார். ஆனால் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலங்களில் மனுதர்மத்தை அலங்கரித்து எடுத்துப் போவது ஏன்? அதற்கும் பதில் இல்லை.

கோல்வால்கர் எழுதிய 'சிந்தனைக்கொத்'தில் ஒரு பார்ப்பனப் பியூனிற்கு ஒரு பார்ப்பனரல்லாத மேலதிகாரி 'சலாம்' போட்டதைச் சிலாகித்து அதுதான் 'இந்துதர்மம்' என்று புல்லரித்ததைப் பற்றிக் கேட்டால் அதற்கும் பதில் இல்லை.

மேலோட்டமாகப் பார்க்கும்போது அரவிந்தன் நெகிழ்வானவரைப் போலவும் ஜனநாயகமுடையவரைப் போலவும் தோற்றமளிக்கலாம். ஆனால் இது ஆதிசங்கரிலிலிருந்து ஆரியசமாஜிகள் வரை செய்த தந்திரம்தான். பெரியார் சொல்வார், 'சில பார்ப்பனர்கள் பார்த்தால் தீட்டு என்பார்கள், சிலர் தொட்டுவிட்டு வீட்டிற்குப் போய்க் குளிப்பார்கள். சிலசமயம் ராஜாஜி காந்தியின் மகனுக்கேப் பெண் தருவார். பலித்தவரை பார்ப்பனீயம்' என்று. இந்தப் 'பலித்தவரைப் பார்ப்பனீயம்'தான் அரவிந்தன் நீலகண்டனின் 'அகப்பயணம்'.

சரி அப்படியென்ன அரவிந்தன் நாகரீகமானவர் என்று பார்த்தால் தோழர்.அசுரனை அவன் இவன் என்று ஏகவிளிப்பில் விளிக்கக்கூடிய அளவிற்கும், பெரியாரை சிறியான் என்றும் இன்னும் கேவலமான கவிதையெல்லாம் போட்டுத் தன் அரிப்பைத் தணித்துக்கொள்ளுமளவிற்கும் நாகரீகமானவர்.

சரி இந்த ஜடாயுதான் நாகரீகம் பற்றி அலட்டிக்கொள்கிறாரே, அதையே திரும்பி ஏமாறாதவன், கருமூர்த்தி, 'பின்னூட்டம்' பாலா, ஹரிஹரன், கால்கரிசிவா போன்ற இந்துத்துவக்கொடுக்குகளுக்கும் சொல்வாரா? அரவிந்தன் நீலகண்டன் ஒரு புத்தகம் எழுதிவிட்டால் அவர் அறிவாளியென்றால் மறுகாலனியாதிக்கத்திற்கும் பார்ப்பனீயத்திற்குமெதிரான பல பதிவுகளை அதே அசைக்கமுடியாத ஆதாரங்களுடன் எழுதும் அசுரனை என்னவென்று சொல்வீர்கள்?

இதற்கு ஜடாயு நமக்குப் பரிந்துரைக்கும் நூல் ஜெயமோகனின் 'பின் தொடரும் நிழலின் குரல்'. அரவிந்தனின் நூலை வெளியிட்ட அதே தமிழினிப் பதிப்பகம்தான் ஜெயமோகனின் இந்தக் குப்பைப் புத்தகத்திலிருந்து பல புத்தகங்களை வெளியிட்டுக்கொண்டிருக்கிறது.

மார்க்சியம் பற்றி விமர்சனம் செய்யலாம், தவறில்லை. ஆனால் அதற்குக் குறைந்தபட்சம் யோக்கியதை வேண்டாமா? சுந்தரராமசாமி, 'வேதங்களில் மார்க்சியத்தைக் கண்டுபிடித்த' ஈ.எம்.எஸ் நம்பூதிரி'பாடு'டன் பழகியதாலேயே 'நான் கம்யூனிஸ்டாக இருந்தபோது..' என்று புருடா விட்டு அலைந்ததைப் போலவே அவரது சீடர் ஜெயமோகனும் 'கம்யூனிஸ்ட் கட்சிக்குத்தான் ஓட்டுப் போடுவேன், எனவே காரல்மார்க்சைப் பற்றி விமர்சிப்பேன்' என்று அடம்பிடித்தார்.

ஆனால் அது வெறும் கேனத்தனமான நாவலாகத்தான் இருந்தது. கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருந்தவன் அல்லது குறைந்தபட்சம் அதுபற்றித் தெரிந்தவன் எவனும் ஜெ.மோகனின் புத்தகத்தைப் பாராட்டமாட்டான். ஒப்பீட்டளவில் பார்த்தாலும் 'விஷ்ணுபுரம்' ஒரு மோசமான இந்துத்துவப் பிரதியாக இருந்தபோதும் அதில் இருந்த இலக்கியத் தன்மை கூட பி.தொ.நி.கு லில் கிடையாது. அதைத் தமிழ்நாட்டில் சு.ராவின் அடிப்பொடிகள் கூட சீந்தியதில்லை. பத்துப் பக்கத்திற்கு மேல் படிப்பதற்கு லாயக்கற்ற குப்பை. ஆர்.எஸ்.எஸ்காரர்கள் மட்டும்தான் அதைத் தங்கள் ஸ்டால்களில் வைத்து விற்றார்கள். அந்தப் பாசம்தான் ஜடாயுவை இப்படிப் பேசவைக்கிறது. ஜெயமோகனைப் படித்தால் எல்லாம் உங்களுக்கு அறிவு வளராது ஜடாயு. ஞானச்சூரியன், கைவல்யசாமியின் புத்தகங்கள், அம்பேத்கரைப் படியுங்கள். 'இந்து' மயக்கம் தெளியும்.

எத்தனை விமர்சனங்கள் இருந்தபோதும் இந்தியாவில் அர்ப்பணிப்பும் நேர்மையும் மிக்க ஒரே இயக்கம் நக்சல்பாரிகள் இயக்கம்தான். அது என்.ஆர்.அய்ப் பார்ப்பனர்களின் காசை வாங்கிச் சுரண்டிக்கொழுத்து ஏழை முஸ்லீம்கள் மீதும் பெண்கள் மீதும் வன்முறையை ஏவிவிடும் இயக்கமில்லை. பழங்குடிகள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்டவர்களுக்காகத் தன்னைப் பலிகொடுக்கும் இயக்கம்.

உலகின் ஒரே இந்துநாடான நேபாளத்திலும் நக்சல்பாரிகள் எழுச்சி கொண்டு 'அகண்ட பாரத'க் கனவைத் தகர்த்தார்கள். இமயத்தில் உயர்ந்த செங்கொடி இந்தியாவிலும் உயர அதிகநாள் ஆகாது என்னும் கிலியே ஜடாயுவைப் பிடித்து ஆட்டுகிறது. ஏனெனில் ஜடாயுவின் சிறகுகளும் அமெரிக்கக் கழுகு போட்ட பிச்சைதான். அது நாளை செந்தீயில் கருகும்.
இன்று இந்துத்துவ இயக்கம் நாடெங்கும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. காங்கிரசு அரசாங்கத்திற்கெதிராக பாராளுமன்றத்தில் கூட அவர்களால் கிளர்ச்சி நடத்தமுடியவில்லை. ஆனால் மறுகாலனியாதிக்கத்தின் கொடூரம் உழைக்கும் மக்களை நக்சல் எழுச்சியின் பக்கம் தள்ளிவருகிறது. இதை ஜீரணிக்க முடியாமல் ஜடாயு எடுத்திருக்கும் வாந்தியைப் பார்க்கும்போது ம.க.இ.க தோழர்களின் பாடலொன்றுதான் நினைவுக்கு வருகிறது.

மாட்டுக்கறி திங்குறான் துலுக்கன்கிறே
அட நானும்தான் திங்குறேன், இப்ப என்னங்கிறே?
அன்றுமுதல் இன்றுவரை மாறவில்லை - அந்த
ஆர்.எஸ்.எஸ்ஸும் பார்ப்பானும் வேற இல்லை
போனாப் போகட்டும்னு விட்டுவைச்சா
பூர்வகுடி நீதாங்கிற புழுகுமூட்டை
போதும் நிறுத்து, போதும் நிறுத்து, போதும் நிறுத்தடா
உன் வேஷம் இப்ப கலைஞ்சுபோச்சு பேச்சை நிறுத்தடா
செருப்பையெடு எடு, துடைப்பம் எடு, எடு ஓடடா ஓடு!

தலித்தா? ஆதிதிராவிடரா?'தள்' என்னும் மராத்தியச்சொல்லுக்கு மண் என்பது அர்த்தம் என்பர். தள்ளிலிருந்தே தலித் என்னும் சொல் உருவாகியது என்றும் அதற்கு மண்சார்ந்தவர்கள் என்றும் படுகுழியில் விழுந்தவர்கள் என்றும் பொருள் கூறுவர். பொதுவாக தலித் என்றால் ஒடுக்கப்பட்டவர்கள் என்னும் அடிப்படையிலேயே அதில் மலைவாழ்மக்கள், பெண்கள் போன்ற பல ஒடுக்கப்பட்டோரையும் சேர்த்தே ஒரு பொதுச்சொல்லாக வழங்கிவந்தனர். காலப்போக்கில் அது தாழ்த்தப்பட்ட சாதியினரைக் குறிப்பதற்காகவே பயனப்டுத்தப்பட்டு வருகிறது.

காந்தி தன் இறுதிக்காலத்தில் தனது 'யங் இந்தியா' இதழில் 'தலித்' என்னும் சொல்லைப் பயன்படுத்தியிருப்பதாக அ.மார்க்ஸ் கூறுகிறார். (ஆனந்தவிகடன் -14.03.2007). ஆனால் காந்தியால் முன்மொழியப்பட்ட அரிஜன் என்னும் வார்த்தையை அவமானமாகக் கருதிய தாழ்த்தப்பட்ட மக்கள் அதற்கு எதிராகவே 'தலித்' என்னும் சொல்லைப் பல இடங்களில் பயன்படுத்திவந்தனர்.

தலித் அரசியல் குறித்த ஒரு தொகுப்பில் புனிதப்பாண்டியன் 'தலித்மகக்ளா? தாசிமக்களா' என்னும் ஒரு கட்டுரை எழுதியிருப்பார். அதில் அவர் கூறும் விபரங்களின் அடிப்படையில் '1939ல் நார்சிமேத்தா என்னும் குஜராத்திக்கவிஞரே முதன்முதலில் தன் நாவலில் அரிஜன் என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறார்'.

அவர் கோவிலில் பொட்டுக்கட்டப்பட்ட தேவதாசிமக்களின் குழந்தைகளைக் குறிக்கவே அந்தச்சொல்லைப் பயன்படுத்துகிறார். த்கப்பன் பெயர்தெரியாத குழந்தைகள் இறைவனின் குழந்தைகள் - அரிஜன் என்ற அர்த்தத்திலேயே அவர் அதைப் பயன்படுத்தியிருப்பார். எனவே காந்தியின் கூற்றுப்படி தாழ்த்தப்பட்ட மக்கள் - அரிஜன் - தாசிமகன்கள் என்று அர்த்தம் ஆகிறது.

தமிழ்ச்சூழலில் நெடுங்காலம் தாழ்த்தப்படட் மகக்ள் 'பஞ்சமர்' என்றே அழைக்கப்பட்டார்கள். நான்கு வர்ணங்களிலும் சேர்த்துக்கொள்ளப்படாத அவர்ணர்கள், அய்ந்தாம் வர்ணத்தவர்கள் என்ற அடிப்படையிலேயே அவர்கள் பஞ்சமர்கள் (பஞ்சமம் - அய்ந்து) என்று அழைக்கப்பட்டனர். பேருந்து பயணச்சீட்டுகளிலும் நாடகக்கொட்டகைகளிலும் உணவகங்களிலும் 'பஞ்சமர்களுக்கு அனுமதி இல்லை' என்றே எழுதப்பட்டிருந்தது.

பெரியாரின் காலத்திலேயே ஆதிதிராவிடர் என்ற வார்த்தை உருவாகிறது. திராவிடர் என்னும் சொல்லாடலை வைத்து அரசியலை முதன்முதலில் தமிழ்ச்சூழலில் கட்டமைத்தவர்களே பறையர்கள்தான். எனவே ஆதிதிராவிடர் என்னும் சொல்லும் அவர்களாலேயே உருவாக்கப்பட்டிருக்கவேண்டும்.

'திராவிட நாடு கிடைத்துவிட்டால் இங்கு ஆதிதிராவிடர், மீதித்திராவிடர் என்னும் பிரிவே கிடையாது' என்கிறார் பெரியார் ஈ.வெ.ரா. ஒருவகையில் பார்த்தால் இது சமத்துவத்திற்கான விளிப்பாக இருந்தாலும் இன்னொருபுறம் தனித்துவங்களை அழிக்கும் ஆபத்தாகவே கருதவேண்டும்.

பாபாசாகேப் அம்பேத்கரைப் பொறுத்தவரை அவர் பெரும்பாலும் 'பட்டியலினத்தவர்'(scheduled caste) என்னும் சொல்லாடலையே தனது பிரதிகளில் பயன்படுத்துகிறார். பட்டியலினக் கூட்டமைப்பு (scheduled caste federation )என்னும் ஒரு அமைப்பையும் நடத்தியிருக்கிறார். ஆனால் ஒருமுறை ஒரு விவாத்த்தின்போது 'சாதியற்ற இந்துக்கள்'(non-caste Hindus) அல்லது 'எதிர் இந்துக்கள்'(Protestant Hindus)என்னும் வார்த்தையைப் பயன்படுத்தலாம் என்கிறார். இன்றளவும் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது 'பட்டியலினத்தவர்'(s.c) என்னும் சொல்லே.
இன்று 'தலித்' என்பது அனைத்துத் தாழ்த்தப்பட்ட மக்களையும் குறிக்கும் பொதுச்சொல்லாக மாறிவிட்டது. ஆனால் அது மராத்திச்சொல் என்பதால் தமிழ்த்தேசியம் பேசுவோரில் ஒரு சாராரும் 'பள்ளர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் கிடையாது, ஆண்டபரம்பரையினர்' எனும் குருசாமிச்சித்தர் போன்றோரின் போக்கினையொத்தவர்களும் தலித் என்னும் வார்த்தையை மறுக்கின்றனர்.

'தலித் உள்ளிட்ட வார்த்தைகள் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்துபவை. எனவே அவர்களை ஆதிதிராவிடர் என்றே அரசு ஆவணங்களில் குறிப்பிடவேண்டும்' என்று அரசு ஆணையிட்டிருக்கிறது. ஆனால் இதைப் பள்ளர் மற்றும் அருந்ததியச் சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள்.

'ஆதிதிராவிடர் என்பதே பறையரைக் குறிக்கும் வார்த்தைதான். அதை ஒட்டுமொத்தமாக எல்லா சாதிக்கும் பொதுவான பெயராக நீட்டிப்பது மோசடி' என்கிறார் புதியதமிழகம் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி. 'ஆதிதிராவிடர் நலத்துறை' என்பதையே 'சமூகநீத்துறை' என்று மாற்றவேண்டும் என்கிறார் ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் தோழர். அதியமான்.

மேலும் தலித் என்பது இழிவான சொல் என்னும் அரசின் வாதங்களில் கிஞ்சிற்றும் பொருத்தமில்லை. பள்ளிச்சான்றிதழ்களில் 'பள்ளன்', 'பறையன்' 'சக்கிலியன்' என்றே குறிப்பிடவேண்டும் என்பது அரசின் நடைமுறையாகவே இருந்தது. (மற்ற 'உயர்' சாதிக்காரர்களோ பிராமணர், முதலியார், செட்டியார் என்று குறிப்பிட்டுக்கொள்ளலாம்).
இதைச் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது டாக்டர்.கிருஷ்ணசாமி சட்டமன்றத்திலேயே கடுமையாக எதிர்த்துப்பேசினார். (அதன்பிறகு அது மாற்றப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை.) நிலைமை இப்படியிருக்க தலித் என்பதை இழிவு என்று சொல்வது என்ன நியாயம்?

மேலும் இன்று தலித் அரசியல் என்பதே பறையர் அரசியலாக மாறிவிட்டது. சிறுபத்திரிகைகளாக இருந்தாலும் மய்யப்பத்திரிகைகளாக இருந்தாலும் தலித் எழுத்தாளர்கள், தலித் தலைவர்கள் என்றால் பறையர்சமூகத்தைச் சேர்ந்தவர்களையே பிரதிநிதித்துவபப்டுத்துகின்றனர். எப்போதாவது ஆனந்தவிகடனிலோ குமுதத்திலோ அதியமான் (அ) எஸ்.டி.கல்யாணசுந்தரம் பேட்டியைக் காணமுடியுமா? மதிவன்ணன் போன்ற அருந்ததியச் சமூகத்தைச் சேர்ந்த தலித் எழுத்தாளர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். இந்நிலையில் ஆதிதிராவிடர் என்னும் பெயரை அனைத்துத் தலித்சாதிகளுக்கும் திணிப்பது அவர்களுக்கிடையில் பிரிவுகளை அதிகப்படுத்தவே உதவும். மேலும் 'தலித்' என்னும் பெயரில் இதழ்நடத்துபவரும் தலித் இலக்கியம் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டபோது அதற்கு பெரும் பங்களிப்புச் செய்தவருமான ரவிக்குமார் போன்றவர்கள் சடட்மன்ற உறுப்பினர்களாக இருக்கும்போது இதுகுறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருப்பது பல சந்தேகங்களையே கிளப்புகிறது.

மேலும் எப்படியிருந்தபோதும் 'தலித்' என்பது தாழ்த்தப்பட்ட மகக்ள் தாங்களாகவே தங்களுக்குச் சூட்டிக்கொண்டபெயர். அதைமறுப்பது என்பது அரவாணிகளை 'அலிகள்' என்றுதான் அழைக்கவேண்டும் என்று உத்திரவிடுவதைப்போன்ற முட்டாள்தனமாகும்.

ஈழப்போராட்டமும் இந்திய அரசியலும் - 2சரி, இப்போது ஜெயலலிதா, கருணாநிதி அரசியலுக்கு வருவோம். இங்கிருக்கும் பார்ப்பனர்களுக்கு ஒரு பைத்தியக்காரனத்தனமான பயம் இருக்கிறது. தமிழீழம் அமைந்துவிட்டால், தனித்தமிழ்நாடு அமைந்துவிடும், தங்கள் கருத்தியல் அடிப்படையான இந்தியத்தேசியம் காணாமல்போகும் என்பதுதான் அது. இப்படியெல்லாம் நடக்க ஒரு தர்க்கரீதியான நியாயமும் கிடையாது. ஆனாலும் அவர்களுக்கு இருண்டதெல்லாம் பேய்தான். ஜெயலலிதா ஒரு பக்கா பார்ப்பனர். எனவே அவர் ஈழத்திற்கு எதிராய் இருப்பதில் ஒரு ஆச்சரியமும் இல்லை.கருணாநிதியைப் பொருத்தவரை அவ்வளவு மோசமில்லையென்றாலும்கூட அவருக்கு அடிப்படையில் இரண்டு சிக்கல்கள் இருப்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
ஒன்று உளவியல்சிக்கல். அடிப்படையில் அவர் கோழை. ஒருவேளை சங்கராச்சாரியைக் கைது செய்து 'புரட்சி' செய்ததைப் போல ஜெயலலிதா நாளை பிரபாகரனை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தாலும் செய்யலாம். ஆனால் கருணாநிதி எப்போதும் அப்படி மாறமாட்டார். ஈழப்பிரச்சினை என்றில்லை, எல்லாப்பிரச்சினைகளுக்கும் அவரிடம் இருப்பது வழவழா கொழாகொழா தீர்வுகள்தான்.


இன்னொன்று அவர்க்கு இருக்கும் அரசியல் சிக்கல். அவர் ஒன்றும் அதிகாரத்தை மறுத்துவிட்டு மகக்ளுக்காக துப்பாக்கியேந்திப் போராடும் நக்சல்பாரியல்ல, சாதாரண ஓட்டுப்பொறுக்கும் அரசியல்வாதி. அவர் ஆட்சிக்கு வந்துவிட்டாலே 'விடுதலைப்புலிகள் ஊடுருவல்' என்று கூக்குரலிடுவதற்காகவே துக்ளக், தினமலர் போன்ற பார்ப்பனப் பத்திரிகைகள் இருக்கின்றன.


இன்னொன்று உளவுத்துறை மற்றும் காவல்துறையிலுள்ள பார்ப்பன அதிகாரிகள். நேற்று ஒரு ஈழத்தமிழ் நண்பர் சொன்னார், "பிரணாப் முகர்ஜி இந்தியாவிலுள்ள ஈழத்தமிழர்களுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்" என்று. நான் குழம்பிப்போனேன். காலையில் தினத்தந்தி பார்த்தபிறகுதான் தெரிந்தது அவர் பிரணாப்முகர்ஜியல்ல, போலிஸ் டி.ஜி.பி முகர்ஜி. ஆனால் எந்த முகர்ஜியாக இருந்தாலும் இதைத்தான் செய்வார்.

இத்தைகய நெருக்கடிகள் வெளியிலிருந்து வர வர கருணாநிதி ஒடுக்குமுறையைக் கடுமையாக்குவார். இது ஈழத்தமிழர்களுக்குத்தான் என்றில்லை. கோவையில் காவலர் செல்வராஜ் படுகொலை,அதன்பிறகு இந்துத்துவ வெறியர்களும் போலீசும் சேர்ந்து முஸ்லீம்களின்மீது நடத்திய தாக்குதல் ஆகியவைகளைத் தொடர்ந்து கருணாநிதி முஸ்லீம் மக்களைத்தான் கடுமையாக ஒடுக்கினார். எனவே கருணாநிதி ஈழப்போராட்டத்தை ஆதரிக்கவில்லை என்றோ ஈழ அகதிகளுக்கு ஒன்றும் செய்யவில்லை என்றோ கூறுவதும் எதிர்பார்ப்பதும் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் முட்டாள்தனமாகும்.

ஈழப்பிரச்சினையைப் பொறுத்தவரை காட்டப்படும் இன்னொரு பூச்சாண்டி ராஜிவ்காந்தி கொலைக்குப் பிறகு தமிழக மக்கள் ஈழத்தமிழர்களை வெறுக்கத் தொடங்கிவிட்டார்கள் என்பது.முதலில் ராஜிவ் இறந்து பல ஆண்டுகளாகியும் இன்னும் ஆண்டுதோறும் புலிகள் மீதான தடையை நீட்டித்துக்கொண்டிருப்பதே அபத்தமானது. காந்தியைக் கொன்ற வினாயக்நாதுராம்கோட்சே ஒரு ஆர்.எஸ்.எஸ்காரன். ஆர்.எஸ்.எஸ் அப்போது தடைசெய்யப்பட்டது. பிறகு அப்போது பாதுகாப்பு அமைச்சராயிருந்த வல்லபாய் படேல் என்னும் பார்ப்பனச் சர்வாதிகாரியின் முயற்சியால் அந்தத் தடை நீக்கப்பட்டது.

பாபர்மசூதி இடிப்புக்குப் பின்னும் தடைசெய்யப்பட்டது ஆர்.எஸ்.எஸ். பிறகு நீதிமன்றம் தடையை நீக்கியது. குஜராத்தில் 3000 முஸ்லீம்களைக் கொன்ற, கோவையில் நூற்றுக்கணக்கான முஸ்லீம்களைக் கொன்று வணிகநிறுவனங்களைச் சூறையாடிய ஆர்.எஸ்.எஸ்சிற்கே தடையில்லையென்னும்போது புலிகள் மீது மட்டும் தடை விதிப்பது பைத்தியக்காரத்தனம்.

'ஒரு சீக்கியர் இந்திராகாந்தியைக் கொன்றுவிட்டதால் சீக்கியர்களை வெறுத்துவிட்டீர்களா?' என்று கேட்கும் ஈழத்தமிழர்களின் கேள்வியில் நியாயமில்லாமல் இல்லை. இந்தக் கேள்வியை இன்னும் கொஞ்சம் நீட்டித்துப் பார்த்தால் இந்திராவின் கொலைக்குப் பிறகு தில்லியில் ஆயிரக்கணக்கான சீக்கியர்களைக் கொன்றுகுவித்தனர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குண்டர்கள்.
'ஒரு ஆலமரம் சரியும்போது நிலம் அதிரத்தான் செய்யும்' என்று அதை நியாயப்படுத்தினார் காங்கிரஸ் அமைச்சர் சவாண். பிறகு அந்த குற்றம் நீதிமன்றத்திலும் நிரூபிக்கப்பட்டது. நியாயப்படி பார்த்தால் காங்கிரஸ் கட்சியையும்தானே தடை செய்திருக்க வேண்டும்.

எனவே விடுதலைப்புலிகள் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தபோதும் புலிகள் மீதான தடையை நீக்கக் கோருவதும் அதற்காகப் போராடுவதுமே சரியாக இருக்கமுடியும்.

மேலும் காலகாலத்திற்கு நினைத்துக் கவலைப்பட ராஜிவ்காந்தியும் ஒன்றும் பெரிய தமிழினநலம்விரும்பியல்ல. போபர்ஸ் ஊழல், இந்துத்துவ பார்ப்பனீய ஆதரவு, மண்டல்கமிஷனைக் கொண்டுவந்ததால் பிஜேபி வி.பி.சிங் ஆட்சியை ரதயாத்திரையைக் காரணம் காட்டிக் கவிழ்க்க கொல்லைப்புற வேலைபார்த்தது, பிறகு நம்பிவந்த சந்திரசேகரையே நட்டாற்றில் கவிழ்த்துவிட்ட குள்ளநரித்தனம் இவையெல்லாம்தான் ராஜுவின் மொத்த உருவம்.


ராஜிவ் செத்துவிட்டதால் அவர் புனிதராகிவிட்டார். மேலும் இந்தியாவில் அரசு ஊழியர்கள் ரிட்டயராகும் வயதில்தான் அரசியல்வாதிகள் பிரதமர்களாகவும் குடியரசுத்தலைவர்களாகவும் வருவார்கள். இதனால் 40 வயது ராஜிவ்காந்தி 'இளம் தலைவராகி'விட்டார். தமிழர்கள் பொதுவாகவே உணர்ச்சிவசப்படுபவர்கள் என்பதால் ராஜீவ் இறந்த ஆரம்பத்தில் கொஞ்சம் கவலைப்பட்டிருப்பார்கள். அதற்குப்பிறகுதான் உள்ளூரிலேயே ஏகப்பட்ட இழவுகள் விழுந்திருக்குமே, அதற்குக் கவலைப்பட நேரம் ஒதுக்கியிருப்பார்கள்.

எனவே ஈழத்தமிழர்களையும் ஈழப்போராட்டத்தையும் பார்த்து தமிழகத் தமிழர்கள் பயப்படவும் விலகவும் ஒதுங்கவும் ராஜிவ் கொலை காரணமில்லை. அதற்கு வேறு ஒரு காரணம்தான் இருக்கிறது. அது அரசின் ஒடுக்குமுறை. அவர்களும்தான் என்ன செய்வார்கள்?


புலிகளை ஆதரிக்கும் 'மாவீரர்கள்' எல்லாம் ஜெயலலிதா காலத்தில் எங்கே போயிருந்தார்கள்?. அருணாச்சலம் என்னும் கள்ளர்சாதி வெறியர் தமிழ்த்தேசியப் போர்வையில் இருந்தார். ஜெயலலிதா தமிழினவாதிகள் மீது ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்தவுடனே தான் நடத்திக்கொண்டிருந்த 'நந்தன்' என்னும் ஒரு குப்பைப் பத்திரிகையையும் நிறுத்திவிட்டார். இது பெரும்பெரும் மாவீரர்கள் வரை பொருந்தும்.
இளிச்சவாயன் கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் மட்டும்தான் இவர்கள் முக்குக்கு முக்கு ஈழ ஆதரவு பேசி கருணாநிதியின் வயிற்றில் புளி(லி?)யைக்கரைப்பார்கள். ஜெ ஆட்சிக்காலத்திலும் புலிகள் ஆதரவை ஓரளவிற்கு வெளிப்படையாகவும் உறுதியாகவும் வைத்தவர் என்றால் வைகோவைத்தான் சொல்ல முடியும். 'தென்னகத்துப் பிரபாகரன்' திருமாவளவன் பொடா சட்டம் தன்மீது பாயும் என்பதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தவுடனே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் நல்லகண்னு தலைமையில் 'பொடா எதிர்ப்பு முன்னணி' என்று கூட்டமைப்பு ஆரம்பித்து சரண்டரானார். (இதில் வேடிக்கை என்னவென்றால் 'தமிழ் பேசும் சாதியினர் மட்டும்தான் தமிழர்கள்' என்பது திருமாவின் நிலைப்பாடு. ஆனால் புலியை ஆதரித்து நெடுநாட்கள் சிறையிலே இருந்தவர்கள் தெலுங்கு பேசும் சாதிகளைச் சேர்ந்த 'வடுக வந்தேறி'களான வைகோவும் தோழர் கோவை ராமகிருஷ்ணனும்)


இந்த 'மாவீரர்' புராணங்களைச் சொன்னால் அது நீண்டுகொண்டே போகும். இவர்கள் கட்சியின் அடிப்படை தமிழ்த்தேசிய விடுதலை அல்லது தமிழ்த்தேசிய சுயநிர்ணய உரிமை. ஆனால் எங்காவது அது பற்றிப் பிரச்சாரம் செய்திருக்கிறார்களா என்றால் இல்லை. புலிகளுக்கு அமெரிக்கா தடை விதித்தால் இங்கு அமெரிக்கக் கொடியை எரிப்பார்கள், சிங்களக் கொடியையும் எரிப்பார்கள். ஆனால் இவர்களின் எதிரியே இந்தியத் தேசியம்தான். ஆனால் இந்தியக் கொடியை எரிக்க மாட்டார்கள். ஏனென்றால் முந்தையக் 'குற்றங்களுக்கெல்லாம்' காலையில் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டுவிடுவார்கள். பின்னதிற்கோ பாயும் 'தேசியப் பாதுகாப்புச் சட்டம்.

ஒருமுறை தோழர் வ.கீதாவுடன் ஈழப்பிரச்சினை பற்ரிப் பேசிக்கொண்டிருக்கும்போது தமிழ்த்தேசியவாதிகளைப் பற்றிச் சொன்னார். 'இவர்கள் இங்கு பண்ண முடியாத புரட்சியை ஈழம் பற்றிப் பேசித் தணித்துக்கொள்கிறார்கள்' என்று.

சரி போகட்டும் தொப்புள்கொடி உறவு, ராஜராஜ சோழன் இலங்கையைக் கைப்பற்றிய தூசிபடிந்த வரலாறுகள், நரம்பு புடைக்க காசி ஆனந்தனின் 'பத்துதடவை பாடை வராது...' என்றெல்லாம் பாடியும் பேசியும் திரியும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள், அவர்கள் உணர்வின் அடிப்படையில் ஆதரிக்கும் வைகோவாக இருக்கட்டும், அலல்து பஞ்சத்திற்குக் கடைவிரிக்கும் திருமாவளவனாக இருக்கட்டும் இங்குள்ள ஈழத்தமிழ் அகதிகள் பற்றிப் பேசியிருப்பார்களா? அவர்களின் அடிப்படை உரிமைகளுக்காக் குரல் கொடுத்திருப்பார்களா?
ஈழப்பிரச்சினைகளுக்காக இங்கு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், உண்ணாவிரதங்களில் எத்தனை தமிழகத்தில் வதியும் ஈழத்தமிழர்களுக்கானது?


மணியரசன் என்று ஒரு தமிழ்தேசியத் தலைவர் இருக்கிறார். 'தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி' என்று ஒரு கம்பெனி நடத்திவருகிறார். அவரிடமிருந்து எழுத்தாளர் ராசேந்திரசோழன் (அஷ்வகோஷ் என்ற பெயரிலும் எழுதுவார்) உள்ளிட்ட சில தோழர்கள் வெளியேறினர். ஏதாவது சித்தாந்தப் பிரச்சினைதான் காரணம் என்று நினைத்தால் நீங்கள் இந்தப் 'புரட்சிகர'க் கட்சிகளைப் பற்றி தெரியாத அப்பாவி என்று அர்த்தம். அவர்கள் கட்சி உடைந்ததற்குக் காரணங்கள் இரண்டு. இதுபற்றி விலகிய ராசேந்திரசோழன் 'ததேபொகவிலிருந்து விலகியது ஏன்' என்று ஒரு சிறுநூலே எழுதியிருக்கிறார்.


ஒருகாரணம் இவர்கள் மயிலம் என்னும் ஊரில் நடத்திய சீட்டுக்கம்பெனியில் ஏற்பட்ட பிரச்சினை. (அடப்பாவிகளா, புரட்சி செய்யக் கட்சிகட்டப்போகிறீர்கள் என்று நினைத்தால் கடைசியில் சீட்டுக்கம்பெனிதான் நடத்தியிருக்கிறீர்களா என்று மறுபடியும் கேட்டால் நீங்கள் மீண்டும் அப்பாவிதான்)

இரண்டாவதுகாரணம் மாவீரர்நாளுக்கு உரையாற்றச் செல்லும்போது புலம்பெயர்ந்த தமிழர்கள் மணியரசனிடம் நிதியளிப்பார்கள். அதில் ஒரு பகுதியைக் கட்சிக்குக் கொடுத்துவிட்டு இன்னொரு பகுதியைத் தான் வைத்துக்கொண்டிருந்திருக்கிறார் தோழர் மணியரசன். கடைசியில் கட்சிக்கு அந்த நிதியைத் தருவதேயில்லை. ஏனென்று கேட்டதற்கு 'என் வீட்டிற்குக் கலர்டி.வி வாங்கிவிட்டேன்' என்றிருக்கிறார் தோழர் மணியரசன். இதைக் காரியக் கமிட்டியில் வைத்து வேறு விசாரித்திருக்கிறார்கள்.


சரி, இதெல்லாம் அவர்கள் உள்கட்சி விவகார இழவு. போகட்டும். ஆனால் புகலிடத்தமிழர்களிடம் வசூலித்த தொகையில் ஒருசிறு பகுதியையேனும் வீடிழந்து, நிலமிழந்து, சகோதரர்களைக் கொலைக்களத்தில் பலிகொடுத்து, தாயையும் சகோதரிகளையும் பாலியல் வல்லுறவில் பறிகொடுத்து தமிழகத்திற்கு ஒரு நாயை விடக் கேவலமான நிலையில் வந்துசேரும் ஒரு ஈழத்தமிழ் அகதிக்காவது நீங்கள் நிதியளித்திருப்பீர்களா?


தமிழ்வழிக்கல்விக்காகவும் இன்னபிற காரணங்களுக்கவும் நிதிவசூலித்திருக்கிறீர்களே. ஒருமுறையாவது ஈழ அகதிகளின் குறைந்தபட்ச பொருளாதார மேம்பாட்டிற்கு நிதி வசூலித்திருக்கிறீர்களா? ஓட்டுக்கட்சிகளுக்குத்தான் ஈழத்தமிழர்கள் வாக்குவங்கிகள் இல்லை என்பதால் புறககணிக்கின்றன. இந்தத் தமிழ்த்தேசியவாதிகள் ஈழ அகதிகளைப் புறக்கணிக்கக் காரணம் என்ன? வெறும் சாகசவாதப் படம் ஓட்டுவதைத் தாண்டி இவர்களால் தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் என்ன பிரயோஜனம்?


எனக்குத் தெரிந்து புலிகளை ஆதரிக்கும் கட்சிகளிலேயே விடுதலைச் சிறுத்தைகளின் சட்டமன்ற உறுப்பினர் எழுத்தாளர் ரவிக்குமார் மட்டும்தான் அகதிமுகாம் பற்றி ஆராய்ந்து ஒரு அறிக்கையை முதல்வரிடம் கொடுத்தார். அதேநேரத்தில் தந்திரமாக கருணாநிதியும் ஒரு அமைச்சரை அனுப்பி அறிக்கை தயாரிக்கச் சொன்னார். கடைசியில் இரண்டு அறிக்கையும் போய்ச்சேர்ந்த இடம் குப்பைத்தொட்டி.
ரவிக்குமார் அறிக்கை தயாரிக்கும்போது சிறுத்தைகள் அதிமுக அணியிலிருந்தனர். இப்போது திமுக அணிக்கு வந்தபிறகு ஒருபேச்சையும் காணோம்.


புலிகளை ஆதரிப்பது, ஆதரிக்காமல் இருப்பது என்பதையெல்லாம் தாண்டி ஈழ அகதிகளின் நலன்களில் அக்கறை செலுத்துவதும் கல்வி உள்ளிட்ட அவர்களின் அடிப்படை உரிமைகளுக்காய் அரசிடம் போராடுவதும் போலீஸால் திணிக்கப்படும் பொய்வழக்குகளுக்கு எதிராய்க் குரல்கொடுப்பதும்தான் பாதிக்கப்படுபவர்களும் தமிழர்கள் என்கிற உணர்வுகளையும் தாண்டி மனித உரிமையின் அடிப்படையும் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் அஸ்திவாரமுமாகும். அதுவே அறமுமாகும்.


எனவே தமிழக அரசோ, இந்திய அரசோ, தமிழ்த்தேசிய வீராதி வீரர், வீரபத்திரப் பேரன்களோ ஈழப்போராட்டத்திற்கும் ஈழவிடுதலைக்கும் ஒரு புல்லையும் புடுங்கவேண்டாம். அவர்கள் போராட்டத்தை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். அந்த்ப் போராட்டத்திலுள்ள பிரச்சினைகளைக் களைவதற்கும் ஜனநாயகபப்டுத்துவதற்குமான முயற்சிகளை அவர்கள் தேர்ந்துகொள்வார்கள். உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்றிருந்தால் இங்கு அகதியாய்த் தஞ்சமடைந்திருக்கும் ஈழத்தமிழர்களின் அடிப்படை உரிமைகள் குறித்தும் அவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு போன்ற அம்சங்களிலும் கவனம் செலுத்துங்கள். போலீஸ் பூச்சாண்டி போதும், நிறுத்துங்கள்.

ஈழப்போராட்டமும் இந்திய அரசியலும் - 1

ஈழப்போராட்டம் குறித்து எனக்கு மாறுபட்ட கருத்துக்கள் உண்டு. ஆனால் அதையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு வேறு சில விஷயங்களை அலசலாம். சமீபகாலமாக ஈழப்பிரச்சினையில் இரண்டு குரல்களை மீண்டும் மீண்டும் கேட்கநேர்கிறது.

குரல்1 : ஈழப்போராளிகள் திராவிட இயக்கங்களோடு கொண்ட தொடர்பால்தான் போராட்டம் திசைமாறிப்போனது.

'தமிழீழப் போராட்டத்தில் தந்தை பெரியாரின் தாக்கம்' என்ற பெயரில் ஒரு கட்டுரை 'திராவிடத்தமிழர்கள்' வலைத்தளத்தில் வெளியாகியிருந்தது.
http://dravidatamils.blogspot.com/2007_01_01_archive.html

ஆனால் தேசியத்தை மறுத்து பெரியார் பேசிய பேச்சுக்களை நீங்கள் இங்கே காணலாம்.

http://www.satiyakadatasi.com/?p=26

தேசியத்தை மறுத்து பெரியார் பேசிய பேச்சு 1932ல் அவர் இலங்கையில் ஆற்றிய உரை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே விடுதலைப்புலிகள் இயக்கம் பெரியாரின் ஆலோசனையின் பெயரில்தான் தொடங்கப்பட்டது என்பதில் எல்லாம் எவ்வளவு சரியான தரவுகள் அடங்கியிருக்கின்றன என்பது சந்தெகம்தான். அதேநேரத்தில் இல்லாத பெரியாரை வைத்து அனுமானங்களைத் தோற்றுவிப்பதிலும் அர்த்தமில்லை.

ஆனால் திராவிடக் கட்சிகளும் பெரியாரியக்கங்களும் ஈழப்போராட்டத்திற்கும் போராளிகளுக்கும் பலவகையில் உதவிப் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்திருக்கின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை. திமுகவின் முன்னாள் அமைச்சர் சுப்புலெட்சுமிஜெகதீசன், மதிமுக தலைவர் வைகோ ஆகியோர் புலி ஆதரவு என்பதற்காகவே சிறையில் வாடியவர்கள்.

பெரியாரியக்கங்களின் பங்கும் இதில் மகத்தானவை. ராஜீவ் கொலைவழக்கில் பாதிக்கப்படட்வர்களில் பாதிக்கும் மேற்படவர்கள் திராவிடர்கழகத்தோழர்களே. திராவிடர்கழகம் மட்டுமல்லாது தி.கவிலிருந்து வெளியேறிய பெரியாரியக்கங்களும் ஈழ ஆதரவினால் சந்தித்த இன்னல்கள் அளவிடற்கரியவை.

'பெரியார் மய்யம்' என்றும் 'திராவிடர் மனித உரிமை அமைப்பு' என்னும் பெயரிலும் இயங்கிவந்த அமைப்பு ஈழத்தில் போய் ஆயதப்பயிற்சி எடுத்துவந்ததால் அந்த அமைப்பு தமிழகத்தில் பல போலிஸ் நெருக்கடிகளைச் சந்தித்து இல்லாமலே போனது. பெரியார் திராவிடர்கழகப் பொதுச்செயலாளர் தோழர்.கோவை ராமகிருஷ்ணன் தடா, மிசா என்னும் இரு கருப்புச்சட்டங்களால் நெடுங்காலம் சிறையிலடைக்கப்பட்டார். ஈழ ஆதரவினால் தோழர் கொளத்தூர் மணி சந்தித்த இன்னல்களும் அதிகம்.

ஈழ ஆதரவு என்னும் நிலைப்பாட்டில் வேறுயாரையும்விட அதிகம் உறுதியுடன் நிற்பதும் அதற்காகப் பல இழப்புகளையும் சந்தித்தும் பெரியாரியக்கத்தோழர்கள் மட்டுமே. இப்போது ஈழத்தமிழர்கள் மற்றும் தமிழ்த்தேசிய ஆதரவாளர்கள் பலரின் ஆதர்சமாய் இருப்பவர்கள் நெடுமாறனும் திருமாவளவனும்.

நெடுமாறன் இந்தியத்தேசிய காங்கிரசின் தமிழாநாட்டு தலைவராக இருந்தவர். இந்திராகாந்தி மீதான 'கொலைமுயற்சி'யிலிருந்து அவரைக் காப்பாற்றிய 'பெருமை'யும் அவரையே சாரும். அவர் எப்படித் திடீர்த்தமிழ்த்தேசியவாதியானார் எனப்து அவர் நம்பிக்கை வைத்திருக்கும் 'முருகனுக்கே' வெளிச்சம்.

ஆரம்பத்தில் பிரபாகரனை வெள்ளாளர் என்று நினைத்து அவர் ஆதரித்திருக்கக்கூடும். பிறகு பிரபாகரன் கரையாளர் என்று தெரிந்ததும் 'பிரபாகரன் ஒரு தலித்' என்று தலித்முரசு நேர்காணலில் பேட்டிகொடுத்து அந்தர்பல்டி அடித்தார்.

மார்க்சியம், பெரியாரியம், தலித்தியம் என எந்தவித தத்துவங்களின் அடிபப்டையுமற்ற புண்ணாக்குக் கட்சிதான் அவரது 'தமிழர்தேசிய இயக்கம்'. அவர் கட்சியின் தேசிய உடை என்ன தெரியுமா? தைப்பூசத்திற்கு காவடிதூக்க முருகபக்தர்கள் அணிவார்களே அந்த மஞ்சளாடை. நெடுமாறன் எந்தளவிற்கு 'மாவீரன்' போராளி' என்றால் தனது தமிழர்தேசிய இயக்கம் ஜெயலிதா அரசால் தடைசெய்யப்பட்டபின்னும் அதற்கெதிராக மகக்ளைத் திரட்டவோ போராடவோ தைரியமில்லாத அளவிற்கு.

திருமாவளவன் ஈழ ஆதரவாளரான கதையைப் பார்ப்போம். தேர்தல் அரசியலுக்கு வருவதற்கு முன்புவரை ஈழப்பிரச்சினை குறித்து திருமாவிற்கு ஒரு கருத்தும் இருந்ததில்லை. இப்போது திடீரென்று அவரும் புலிவேஷம் ஆடுகிறார்.

ஆப்பிரிக்க நிலப்பகுதியில் கருப்பர்களின் உரிமைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் கருஞ்சிறுத்தைகள்(blackpanther) அமைப்பு. அதன் பாதிப்பில் மகாராட்டிரத்தில் தொடங்கப்படட்துதான் இந்திய விடுதலைச்சிறுத்தைகள் (dalit panther of india) அமைப்பு. அதன்கிளையாக தமிழகத்தில் தொடங்கப்பட்டதுதான் டி.பி.அய். மலைச்சாமிக்குப்பிறகு அந்தப் பொறுப்பிற்கு வந்தவர் திருமாவளவன். ஆனால் இப்போது திருமா தனது பேட்டிகளிலெல்லாம் 'விடுதலைப்புலிகளின் பாதிப்பால்தான் விடுதலைச்சிறுத்தைகள் என்று பெயர் வைத்தேன்' என்று சொல்லிவருகிறார்.

தேர்தல் அரசியலுக்கு வந்தபிறகு திருமாவுக்கு ஒருவிஷயம் தெளிவானது. தலித்துகளின் உரிமைகளுக்காக மட்டுமே போராடினால் சாதிக்கட்சி என்கிற பெயர்தான் தங்கும். மையநீரோட்ட அரசியலில் வெற்றிபெறவேண்டுமானால் 'தமிழ்' அரசியலைத் தூக்கிப்பிடிப்பது ஒன்றே சரியான வழி. அதற்கு ஏற்கனவே மருத்துவர் ராமதாஸ் முன்னுதாரணமாயிருந்தார். திமுக கைவிட்ட தமிழ் அரசியலைக் கையிலெடுத்துக்கொண்டார் திருமா. இப்படித்தான் திருமா ஈழ ஆதரவாளரானார். ஆனால் திராவிட இயகக்ங்களின் அர்ப்பணிப்பிலும் தியாகத்திலும் நூறில் ஒருபங்கு கூட திருமாவிடமோ நெடுவிடமோ காணமுடியாது.

திராவிட இயக்கங்களோடு போராளிகள் கொண்ட தொடர்பால் திராவிடக் கருத்தியல் அந்தப் போராளி இயக்கங்களைப் பாதித்ததா என்பது தெரியவில்லை. ஆனால் அதிகம் பாதிக்கப்பட்டதென்னவோ திராவிட இயக்கங்கள்தான். இப்போது திராவிட அரசியலைப் போராளிகள் கைவிடவேண்டும் (அப்படி எதுவும் இருக்கிறதா என்ன?) என்று குரல் கொடுப்பவர்களின் நோக்கம் போராளி இயக்கங்கள் முற்றுமுழுதாக இந்துத்துவ இயகக்ங்களாக மாறிவிடவேண்டும் என்னும் விருப்பமே.

ஈழப்போராட்டத்தால் தமிழ்மக்கள் மட்டுமில்லாது முஸ்லீம் மகக்ளும் கணிசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுமாதிரியான குரல்கள் அதிகரிப்பது என்பது முஸ்லீம்களை மேலும் மேலும் தனிமைப்படுத்தவும் தமிழ்-முஸ்லீம் முரண்பாடுகளை அதிகப்படுத்தவுமே உதவும். வேண்டுமானால் ஈழத்தமிழர்கள் எல்லாம் இந்துக்கள் என்றால் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தெருவில் இறங்கட்டும்.

குரல் 2 : ஈழப்பிரச்சினையில் இந்தியா தலையிடவேண்டும்.

இந்தக்குரலை தீவிர இந்தியத்தேசிய ஆதரவாளர்களும் முன்வைக்கிறார்கள் (இலங்கையையே இந்தியாவுடன் இணைக்கவேண்டும் என்று சுப்பிரமணியசாமி அவ்வப்போது காமெடி பண்ணுவதுண்டு) சமயத்தில் புலிகளும் புலி ஆதரவாளர்களும் கூட இப்படி அபத்தமாகக் குரல் எழுப்புவார்கள்.

ஏற்கனவே இந்தியா 'தலையிட்டு' ஏற்பட்ட குழப்பங்களும் படுகொலைகளும் பாலியல் பலாத்காரங்களும் போதாதா? ஈழப்பிரச்சினையில் இன்னொருநாடு தலையிடுவது என்பதே அந்த நாடுகளின் பொருளாதார மற்றும் ராணுவநலன்களைச் சார்ந்ததே.

இந்தியா என்பது ஒரு தெற்காசியப்பேட்டைரவுடி. அது ஈழவிடுதலைக்கு உதவினால் கூட ஈழத்தை தன் காலனிநாடாக்கவே முயலும். அதுவும் இப்போது உலகமயமாக்கல் காலத்திற்குப்பின் முற்றமுழுக்க அமெரிக்க அடிமையாய் மாறிப்போன இந்தியா ஈழப்பிரச்சினையில் தலையிட்டால் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் இந்தியத் தரகுமுதலாளிகளுக்கும் ஒரு புதிய சந்தை கிடைக்குமே தவிர அது ஈழப்போராட்டத்தின் தற்கொலையாகவே முடியும்.
(தொடரும்...)

கோப்பைகளின் உலகம்


நான் கொண்டாட்டத்தோடு வந்தேன்.
நீயோ துயரங்களோடு அமர்ந்திருந்தாய்.
மனித வாசனை ரத்தக்கவிச்சியாய் மாறிப்போனது.
அடையாளங்கள் சிலுவைகளாய்ப் போன பொழுதில்
புன்னகையையும் திருடக்கொடுத்துவிட்டு
மரணத்தின் இருள் கவிந்த உன் விழிகளில்
தரிசிக்கிறேன்
தென் திசையிலிருந்து சேதிசுமந்துவரும் கடலலைகள்
ரத்தக்குளம்பாய் மாறிவருவதையும்
தன் கர்ப்பத்தைக் கிழித்து
வெளித்தள்ளப்பட்ட சிசுவோடு
தெருக்களில் அலையும் பெண்ணையும்.
இப்போது என் கோப்பை உடைந்து நொறுங்குகிறது..
கணீங்

--------

சிகரெட்டைத் தட்டிய சாம்பல்கிண்ணத்தில்
வந்துவிழுந்தது இரண்டுகண்னீர்த்துளி.
இப்படித்தான் கடவுள் வந்துசேர்ந்தார்
தன் பெருத்த பிட்டங்களோடு.
இந்த இடத்தில் கடவுளைச் சந்திக்க
நான் விரும்பவில்லை.
தன் சுவாசத்தைப் போல
அழுகியமுட்டைநாற்றம் வீசும்
அந்த இடத்தை அவரும் விரும்பவில்லை.
மதுவருந்த அவர் மறுத்துவிட்டார்.
குடி கடவுளுக்கு விலக்கப்பட்டிருந்தது.
நான் கோப்பையை எடுத்துக்கொண்டேன்.
களைப்பும் அயர்ச்சியும் ஓங்க
நாற்காலியில் சாய்ந்த கடவுள்
விசும்பி அழத் தொடங்கினார்.
புணராமலே பிள்ளை பெற்றுக்கொண்டிருப்பதனால்
தன் குறி துருப்பிடித்திருப்பதாய்ப்
புலம்பத்தொடங்கினார்.
நான் கடவுளின் இடத்தில்
கோப்பையை வைத்தேன்.

விருந்தினர் பதிவு : ழான் பூத்ரியார் மறைவு


நண்பர்களுக்கு.
கீழ்வரும் சிறுகுறிப்பு தோழர் நாகார்ஜுனனுடையது. தமிழின் நவீனச்சிந்தனைகளை வாசித்துணர்ந்தவர்களுக்கும் சிறுபத்திரிகை அறிவு மரபு குறித்து சிறிதளவேனும் ஞானம் உடையவர்களுக்கும் மறக்கமுடியாத பெயர் நாகார்ஜுனன். தமிழின் அறிவுச்சூழல் என்பது அணிதிரட்டும் குழுவாதமாகவும் தனிநபர்களை மய்யப்படுத்திய 'நானை;க் கடக்காத அவலமாகவும் கெட்டுச்சீரழிந்துவிட்டதாலேயோ என்னவோ பல ஆண்டுகள் எழுதாமல் ஒதுங்கிக்கொண்டார் தோழர்.நாகார்ஜுனன்.

எனது ஒருபதிவுக்குத் தான் தனிப்பட்ட முறையில் புண்பட்டதாக
அவர் தெரிவித்து அதற்கு நான் மன்னிப்பும் கேட்ட ஒரு சங்கடமான சூழலில் அவருடனான என்னுடைய அறிமுகம் நிகழ்ந்தது. கடந்த இரண்டுநாட்களுக்கு முன் என் 'தமிழ்ச்சூழலும் பின்நவீனத்துவமும் - நிறப்பிரிகையை முன்வைத்து' என்னும் பதிவை வாசித்துவிட்டு தொடர்புகொண்டார். பின் நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். இப்போது எனது நூறாவது பதிவில் அவர் இட்ட பின்னூட்டத்தின் அடிப்படையில் சிந்தனையாளர் ழான்பூத்ரியாரின் மறைவையொட்டிய அவரது சிறுகுறிப்பை இங்கு வெளியிடுகிறேன்.

பின்நவீனத்துவம் குறித்து நெல்லை மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தொகுத்த ஒரு கட்டுரைத்தொகுப்பில் ழான்பூத்ரியார் பற்றி ரவிக்குமார் எழுதிப் ( 'வெளிகடக்கும் பாவனைகள்' என்பது தலைப்பு என்பது என் ஞாபகம்) படித்ததாக நினைவு. மார்க்சியத்தின் அடிப்படையான 'மூலதனக்குவிப்பு' என்பதை மறுத்து 'மூலதனச் சுழற்சி' என்னும் கருத்தாக்கத்தை பூத்ரியார் வைத்தார் என்பதாக ரவிக்குமார் எழுதியது என் மங்கிய நினைவுகளில் தெரிகிறது. பூத்ரியார் செப்டம்பர் 11 குறித்து எழுதிய நூல் தமிழிலேயே மொழிபெயர்த்து வந்துவிட்டது என்று நினைக்கிறேன். பூத்ரியாரை நினைப்போம்.

ழான் பூத்ரியாரின் ஆன்மா/பிம்பம் இனி நம்மைத் துரத்துமா?
- நாகார்ஜுனன்

postmodernism என்று அறியப்படும் பிறகான நவீனத்துவத்தின் அதிமுக்கியத் தத்துவவாதியும், காமிராக்கலை நிபுணருமாக இயங்கி வந்த பிரெஞ்சு ழான் பூத்ரியார், நேற்று இரவு தம்முடைய 77-ஆவது வயதில் பாரிஸ் நகரில் காலமானார்.

ஒரு சோஷலிச தத்துவவாதியாக தம்முடைய சிந்தனை வாழ்க்கையைத் தொடங்கிய பூத்ரியார், படிப்படியாக வளர்ச்சி கண்டு, “பொருட்களின் அமைப்பு”, “பிம்பங்களின் பெருக்கம்”, “நகல்களின் பரப்பு” என்று பல்வேறு ஆய்வுகளின் ஊடாக, சுமார் நாற்பது ஆண்டுக்காலம், நவீன உலகின் மாற்றங்களை அதிர்ச்சி தரும் வகையில் ஆராய்ந்துவந்திருக்கிறார். மிஷேல் பூக்கோ, ழில் டெல்யூஸ் ஆகிய சிந்தனையாளர்களுக்கு அடுத்த கட்ட பிரெஞ்சுசிந்தனை இவருடையது.

பிம்பங்களே இன்று நம் வாழ்வைக் கட்டமைக்கின்றன, இதில் சுதந்திரம் என்பது மாயை என்று கடுமையாக நம் உலகைச் சாடியவர் பூத்ரியார். நம் காலத்திய நிகழ்வுகளான – வளைகுடாப்போர்கள், செப்டம்பர் 2001 மற்றும் அதை அடுத்த தாக்குதல்கள் என்று பலதின் மீதும் இவருடைய ஆய்வுகள் தொடர்ந்தன.

நவீன சமுதாயம் மனித இனத்தின் ஆதிநிலை உணர்வுகளைக் காயடித்துவிடுகிறது என்ற இவருடைய கருத்து பிரெஞ்சுப்புரட்சி கண்ட ஒரு சமுதாயத்தின் காலகட்டத்திலிருந்து வந்த ஒன்று. தம்மை ஒரு விவசாயத் தொழிலாளியின் மகன் என்று அழைத்துக்கொள்வார் பூத்ரியார்.
இவர் எடுத்த புகைப்படங்களின் கண்காட்சிகள் மேற்குலகில் அவ்வப்போது நடைபெறுவதுண்டு. உதாரணத்துக்கு பாரிஸ் நகரில் அவர் எடுத்த புகைப்படம்தான் மேலே உள்ளது.

1998-ஆம் ஆண்டு, இந்திய அரசாங்கம் அணுகுண்டுப் பரிசோதனைகளை நடத்தியதை அடுத்து நான் எழுதிய 'சித்தார்த்தனுக்கு மீண்டும் துரோகம்' என்கிற ஆங்கிலக்கட்டுரை, பூத்ரியார் ஆசிரியர் குழுவில் இறுதிவரை இருந்த c-theory என்ற இணைய இதழில் வெளியானது.
பிம்பங்களின் பெருக்கத்தில் பரவிப்பாயும் நவீன சமுதாயத்தை பூத்ரியாரின் ஆன்மா/பிம்பம் இனியும் துரத்துமா?


வெற்றிகரமாய் நூறாவது பதிவு


ஏப்ரல் 14, 2006ல் ஆரம்பித்து இதோ மார்ச் 7, 2007 வரை ஆச்சு நூறுபதிவுகள்.

வலையுலகை அறிமுகப்படுத்திய செந்தில்
என் பதிவைப் படிக்கும் பாவத்திற்கு ஆளானவர்கள்
பொறுப்பாய்ப் படித்துப் பின்னூட்டமிடும் கருத்து கந்தசாமிகள் மற்றும் மாமிகள்
தமிழ்மணம்
ஆகியோர்க்கு
சியர்ஸ்!!!

தமிழ், தமிழர், திராவிடம்

தமிழர்கள் யார் என்ற கேள்வி அடிப்படையிலேயே சிக்கலான கேள்வி.


சங்ககாலத்திலேயே தமிழ், தமிழர், தமிழகம் என்ற சொற்களைக் காணலாம் . 'தமிழ்கெழு மூவர் காக்கு மொழிபெயர் தே எத்த பன்மலை யுறந்தே' என்கிறது அகம்(31).ஆனால் தமிழர் மற்றும் திராவிடர் என்கிற சொல்லாடலை அரசியல் சொல்லாடலாக மாற்றியவர்கள் தலித்துகளே, இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் பறையர்களே.


1881ல் அயோத்திதாசர் திராவிடமகாஜனசங்கம் என்னும் அமைப்பை ஏற்படுத்துகிறார். 'ஒருபைசா தமிழன்' என்னும் இதழை நடத்தியவரும் இவரே. அயோத்திதாசர் பறையர்களைப் பூர்வபவுத்தர்களாகக் காண்கிறார். இந்துமதத்தில் காணப்படும் பண்டிகைகளுக்கெல்லாம் பவுத்தரீதியான விளக்கங்கள் கொடுக்கிறார். ஆனால் அருந்ததியர்களை அவர் பவுத்தர்களாக ஏற்றுக்கொள்ளவில்லை. அருந்ததியர், விறலியர், தோட்டிகள், குறவர்கள் ஆகியோர் 'இயல்பிலேயே' தாழ்ந்தவர்கள்' என்னும் அவர், பஞ்சமர் பாடசாலைகளில் அருந்ததியர் குழந்தைகளை பறையச்சிறுவர்களோடு சேர்த்துப் பயிற்றுவிப்பதை 'குப்பைக்கூளங்களை வைரமணிகளோடு சேர்ப்பதுபோல' என்றுகூறி எதிர்க்கிறார்.


அதன்பிறகு மறைமலையடிகள், மனோன்மனீயம் சுந்தரனார் போன்றோர் ஆரியத்திற்கு எதிராக தமிழையும் திராவிடத்தையும் தூக்கிப்பிடித்தனர். ஆனால் இவர்களின் தமிழ்த்தேசியம் என்பது சைவத்தை அடிப்படையாகக் கொண்ட வெள்ளாளத்தேசியமே. அவர்கள் பார்ப்பனரின் அதிகாரத்தை மறுத்தார்களே தவிர வருணாசிரமத்தை மறுக்கவில்லை. 'மாட்டு மாமிசம் உண்ணாதார்தான் தமிழர்' என்று வரையறுக்கிறது சென்னைப் பல்கலைக்கழக தமிழகராதி. 'பறையரொழிந்தோர்தான் தமிழர்' என்கிறார் வெள்ளைக்கால் சுப்பிரமணியம்பிள்ளை. சிறுதெய்வங்களைத் துஷ்டதேவதைகள் என்று இகழ்கிறார் மறைமலையடிகள். அதேபோல அன்று நீதிக்கட்சியில் இருந்த பல தலைவர்களும் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் பார்ப்பனர்களின் அதிகாரத்தை மறுத்தார்களேயன்றி, பார்ப்பனீயைத்தோ இந்துமதத்தையோ மறுக்கவில்லை.


திராவிடர் என்ற சொல்லாடலை ஒரு பரந்த தளத்திற்குக் கொண்டுசென்றவர் பெரியார் ஈ.வெ.ரா ஒருவரே. அவர் திராவிடர் என்னும் கருத்தாக்கத்தை சாதியொழிப்பு, பார்ப்பன எதிர்ப்பு ஆகிய இங்கு காலங்காலமாய் நிலவிவந்த அவைதீகமரபுடனும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் நவீனக் கருத்தாக்கங்களுடனும் இணைத்தார்.


சாதியையும் அதற்குக் காரணமாயிருக்கும் இந்துமதத்தையும் எதிர்த்தன் மூலம் அவர் திராவிடர் என்னும் சொல்லுக்கு 'சாதியற்றவர்' என்னும் அர்த்தத்தைத் தந்தார். மேலும் பொதுவாக தேசியம் என்பதே மற்றமை (others) அல்லது எதிரிகளை அடிப்படையாகக் கொண்டே கட்டமைக்கப்படுவது. காந்தியின் இந்தியத்தேசியம் வெள்ளையரை மற்றமை என்றதென்றால் திலகர் போன்றோர்கள் முன்வைத்த இந்து-இந்தியத்தேசியம் முஸ்லீம்களை மற்றமையாக முன்வைத்தது.


ஆனால் பெரியார் பார்ப்பனர்களையே மற்றமையாக நிறுத்தினார். பார்ப்பனரல்லாதார் அனைவரும் திராவிடர்கள் என்றார். அதற்கு அவரைப் பொறுத்தவரை நிலப்பகுதி கூட தடையில்லை. 'பம்பாயிலும் வங்காளத்திலும் வசிக்கும் தாழ்த்தப்படட் தோழர்கள் கூட திராவிடர்கள்தான்' என்றார். பார்ப்பனரக்ளை மற்றமையாக அவர் நிறுத்தினாரே தவிர அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றவோ அல்லது வன்முறையை அவர்கள் மீது ஏவிவிடவோ அவர் முனையவில்லை. இந்தவகையில் பெரியாரின் திராவிடர் என்ற சொல்லாடல் ஜனநாயகத்தன்மை வாய்ந்தது.

ஆனால் பெரியாரிடமிருந்து அண்ணா பிரிந்தபோது திராவிட நிலப்பரப்பில் வாழும் அனைவரும் (பார்ப்பனர்கள் உட்பட) திராவிடர்கள் என்றார். அதனால்தான் அண்னாவின் இயக்கத்தில் 'திராவிடர்' என்பதிலுள்ள 'ர்' விகுதிகிடையாது.
திராவிடமுன்னேற்றக்கழகம்தான்.


அதுவரை பெரியாரின் இயக்கத்தில் பார்ப்பனர்கள் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டது கிடையாது. ஆனால் அண்ணா தனது இயக்கத்தில் அவர்களையும் இணைத்துக்கொண்டார். பிறகு திராவிடக்கட்சிக்கு ஒரு பார்ப்பனப் பெண்மணியே தலைவராக வந்தார். (பார்ப்பனர்களை உறுப்பினர்களாகச் சேர்த்துக்கொள்ளாத இன்னொரு கட்சி பா.ம.க)

ஆனால் பெரியார் முன்வைத்த 'திராவிடர்' என்னும் கருத்தாக்கமும் அண்னா முன்வைத்த 'திராவிடம்' என்னும் கருத்தாக்கமும் முஸ்லீம்கள் உள்ளிட்ட அனைத்துப் பார்ப்பனரல்லாதோரையும் இணைத்துக்கொள்ளும் ஜனநாயகமான, நெகிழ்வான கருத்தாக்கமாகவே இருந்தது. தேசியம் பாசிசமாக மாறுவதற்கான தடுப்பு அரணையும் அது உள்ளடக்கியிருந்தது.


ஆனால் பின்னால் வந்த தமிழ்த்தேசியர்கள் 'திராவிட அரசியல் தமிழ்த்தேசியத்தின் தனித்துவத்தைச் சிதைப்பதாக'க் குற்றம்சாட்டினர், சாட்டுகின்றனர். அதில் ஒரு பிரிவினர் தமிழகத்தில் வாழும் பிறமொழி பேசும் சாதிகளை எதிரியாகப் பாவிக்கின்றனர்.


இதற்கு அடிப்படை வகுத்தது 90களில் வெளிவந்த பெங்களூர் குணாவின் 'திராவிடத்தால் வீழ்ந்தோம்' என்னும் நூல். இவர் பெரியாரைக் கன்னடராகவே பார்க்கிறார். தமிழ்த்தேசியப் போராட்டம் வந்தேறிகளான மார்வாடிகளுக்கு எதிராகத் திரும்பாமலிருக்கவே பெரியார் பிராமணாள் பெயர் அழிப்புப் போராட்டம் நடத்தினார் என்றும் அதற்காக மார்வாடிகளிடம் காசு வாங்கினார் என்றும் குற்றம்சாட்டினார்.


மேலும் மனுதர்மம், நாயக்கர் காலத்திலேயே எழுதப்பட்டது என்னும் குணா பார்ப்பனீயம், ஆரியம் என்று இருவகையாகப் பிரிக்கிறார். பார்ப்பனீயம் நல்லது என்றும் வடக்கிலிருந்து வந்த ஆரியம்தான் தீது என்றும் பகர்கிறார். மேலும் புத்த, சமண மதங்கள்தான் ஆரியம் என்கிறார். தமிழ்பேசும் பார்ப்பனர்கள் தமிழர்தான் என்றும் ஆனால் தமிழர்களின் மலத்தைக் காலமெல்லாம் சுமந்தாலும் அருந்ததியரக்ள் தெலுங்கு வந்தேறிகள் என்றும் அவர்கள் தமிழ்நாட்டை விட்டுத் துரத்தியடிக்கப்பட வேண்டியவர்கள் என்றும் எழுதினார்.


இத்தகைய பாசிச அரசியலை எழுதிய குணா பறையர் என்னும் ஒடுக்கப்படும் சாதியில் பிறந்தவர் என்றால் இதே அரசியலுக்காக மள்ளர்மலர் என்னும் இதழை நடத்திவரும் குருசாமிசித்தர் என்பவர் இன்னொரு ஒடுக்கப்படும் சாதியான பள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது வரலாற்றின் முரண்நகைதான். குணாவின் அரசியலை நேரடியாக ஆதரிக்கவில்லையெனினும் விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பு மறைமுகமாக இந்த அரசியலை ஆதரிக்கிறது.


தமிழ்த்தேசியர்களில் ஒருபிரிவினர் இந்த அரசியல்போக்கை ஆதரிக்காதவர்கள்தான். ஆனால் தமிழகத்தின் பல உரிமைப்பிரச்சினைகளுக்கு 'திராவிடம்' என்னும் கருத்தாக்கம்தான் காரணம் என்று அவர்களும் குற்றம்சாட்டுகின்றனர். இப்போது திராவிடக்கட்சியினர் யாரும் கன்னடரையோ மலையாளியையோ தெலுங்கரையோ திராவிடர்களாகப் பார்ப்பதில்லை. பெரியார் மொழிவழிமாநிலங்கள் பிரிக்கப்பட்டபோதே திராவிடநாடு கோரிக்கையைக் கைவிட்டு தனித்தமிழ்நாடுக் கோரிக்கையை முன்நிறுத்தினார்.


அண்னாவோ 60களிலேயே திராவிடநாடு கோரிக்கையைக் கைவிட்டுவிட்டார். எனவே காவிரியில் தண்ணீர் வராததற்குத் திராவிட அரசியல்தான் காரணம் என்று சொல்வதை விடவும் அபத்தம் வேறில்லை. எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தின்போது திமுக மலையாளி எதிர்ப்பையும் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தின்போது கனன்ட எதிர்ப்பையும் முன்வைத்தது.


எனவே அண்னாவால் முன்வைக்கப்படட் 'தென்மாநிலத்தில் வசிப்பவர்கள் எல்லாம் திராவிடரகளே' என்னும் நிலைப்பாட்டை திமுக எப்போதோ மறுபரீசீலனை செய்துவிட்டது. எனவே இனியும் தமிழகத்தின் உரிமைப்பிரச்சினையின் போது திராவிடர்கள் காவிரிநீர் வாங்கித் தருவார்களா என்று கேட்பது அறியாமையின் பாற்பட்டதே.


இப்போது திராவிடர் என்னும் கருத்தாகக்த்திற்கு அவசியமில்லாமல் இருக்கலாம். ஆனால் அண்னா முன்வைத்த திராவிடத்தேசியம்தான் தமிழ்த்தேசியம் பாசிசமாகும் அபாயத்தைத் தடுத்தது என்பதை மறந்துவிடக்கூடாது. இன்னும் பெரியார் முன்வைத்த 'திராவிடர்' என்னும் கருத்தாக்கத்திற்கும் இன்றைக்குத் தேவை இருக்கிறதா என்ற கேள்வி எழலாம்.


ஆரியர் படையெடுப்பு குறித்துப் பல்வேறு வரலாற்றாய்வாளர்களும் பல முரண்பாடான கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர். ஆனால் அடிப்படையில் ஆரியர் வருகை என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் இந்த ஆராய்ச்சியையெல்லாம் தாண்டி பெரியார் முன்வைத்த 'திராவிடர்' என்னும் சொல்லாடல் சாதிக்கு எதிரான ஒரு குறியீடு. அதற்கு வேறு வார்த்தையைப் பயன்படுத்தலாமே தவிர அவற்றிற்கான கருத்தியல் மற்றும் அரசியல் தேவை இன்றளவும் தொடரத்தான் செய்கிறது.

நவீன எழுத்தும் வைதீக மனமும்


தமிழில் புதியவகை எழுத்துமுறை, மேற்கத்திய சிந்தனைமுறை, மொழிபெயர்ப்புகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட 'நவீன' இலக்கியம் என்பது ஆரம்பித்த ஆண்டு என்று 1959 அய்ச் சொல்லலாம்.
அப்போதுதான் சி.சு.செல்லப்பாவால் எழுத்து இதழ் தொடங்கப்பட்டது.
சிறுபத்திரிகை என்கிற வகையினம் அடையாளப்படுத்தப்பட்டதும் இதே எனலாம். அதற்கு முன்பே மணிக்கொடி பத்திரிகை வெளியாகியிருந்தாலும் அதைச் சிறுபத்திரிகைக் கணக்கில் சேர்க்கமுடியாது என்கிறார் பேராசிரியர்.வீ.அரசு (சிறுபத்திரிகை அரசியல் - கங்கு வெளியீடு பக் 10- 11).

தமிழில் வந்துசேர்ந்த இந்த நவீன எழுத்து இயக்கம் பல கொடைகளை வழங்கியிருக்கிறது. எழுத்தைத் தொடர்ந்து உள்வட்டம், பிரக்ஞை, கசடதபற, யாத்ரா, கொல்லிப்பாவை ஆகிய பல இதழ்கள் வரத்தொடங்கின. புதுமைப்பித்தன், கு.ப.ராசகோபாலன், கு.அழகிரிசாமி போன்ற இலக்கிய ஜாம்பவான்கள் இயங்கிக்கொண்டிருந்ததும் இக்காலத்தில்தான்.
தமிழின் எழுத்து முறையையும் சிறுகதை வடிவத்தையும் வேறொரு தளத்திற்குக் கொண்டு சென்ரவர்கள் என்ற வகையில் இவர்கள் மதிக்கப்படத்தகுந்தவர்களே. பரதநாட்டியம், நவீன ஓவியம் போன்றவை பற்றியும் தெருக்கூத்து போன்ற நுண்கலைகள் பற்றியும் அறிமுகப்படுத்தப்பட்டு விவாதிக்கப்பட்டன.

ஆனால் 1966ல் 'புதியதலைமுறை' இதழ் வரும்வரை இவர்களின் எழுத்து என்பது குண்டுச்சட்டிக்குள் குதிரைப்பந்தயம் நடத்துவதாகவே இருந்தது.சமகாலச்சூழல் தன் எழுத்தில் எங்கும் வராதவாறு பிரக்ஞைபூர்வமாகப் பார்த்துக்கொண்டனர். அரசியல் என்பதை தீண்டப்படாத ஒன்றாகவே இவர்கள் பாவித்தனர். ஆனால் இவர்களின் பிரதிகளில் செயற்பட்ட அரசியலைப் பின்னால் வந்த அமைப்பியல் மற்றும் பின்நவீன விமர்சனங்கள் வெளிக்கொணர்ந்தன.

புதுமைப்பித்தனின் கதைமாந்தர் பெரும்பாலும் திருநெல்வேலி சைவப்பிள்ளைமாராகவே இருந்தனர். அவர்களின் துயரம் பற்றியே பு.பி மீண்டும் மீண்டும் எழுதினார். என்பதைப் பறைநாய் என்று மொழிபெயர்த்தார். தலித்துகளுக்கும் கிறித்துவ மிஷனரிகளுக்கும் இடையிலான உறவை எதிர்மறையாகவே அணுகினார். அப்போதைய காலகட்டத்தில் மணிக்கொடி பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்களை 'சுயமரியாதைக் காலிகள்' என்றே எழுதியது குறிப்பிடத்தக்கது. திராவிட இயக்கத்துக்காரர்கள் குறிப்பிடத்தக்க சீர்திருத்தச் சினிமா எடுத்துக்கொண்டிருந்தபோது புதுமைப்பித்தனோ அவ்வையாரை ஒரு இந்துப் புராண மரபிற்குள் அடக்கும் ஜெமினி பிலிம்சின் 'அவ்வையார்' படத்திற்கு வசனம் எழுதப்போனார்.

சிறுகதையின் திருமூலர் என்றழைக்கப்படும் மௌனியின் நிலையோ இன்னும் மோசம். மௌனிக்கு ஒருபத்திகூடத் தமிழில் இலகக்ணப்பிழை இல்லாமல் எழுததெரியாது. ஆனால் இதை புதுவகை எழுத்து என்று அன்றைய 'நவீன' இலக்கியவாதிகள் கொண்டாடினர். மௌனி குறித்த விரிவான விமர்சனங்களுக்கு காவ்யா பதிப்பகத்தின் வெளியீடான 'மௌனி இலக்கியத்தடம்' நூலில் இடம்பெற்றுள்ள தமிழவன் மற்றும் அ.மார்க்ஸ் ஆகியோரின் கட்டுரைகளைப் படிக்கலாம்.

தமிழகம் மௌனியை உச்சி மீது வைத்துக் கொண்டாடிக்கொண்டிருந்த காலத்தில் மறைந்த ஈழத்து எழுத்தாளர் சு.வில்வரத்தினம் அவர்மீது காத்திரமான விமர்சனங்களை வைத்தார். மௌனியின் வைதீக மனோபாவத்திற்கு ஒரே ஒரு உதாரணம். 60களில் அவர் ஒரு பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில் 'திமுக ஆட்சிக்கு வந்தால் தான் எழுதுவதையே நிறுத்தப்போவதாக'க் கூறுகிறார்.

பார்ப்பனீய மதிப்பீடுகளைத் தாங்கிப்பிடிக்கும் காங்கிரஸ் என்னும் நிலப்பிரபுத்துவக்கட்சியின் சரிவையே தாங்கவோ ஜீரணிக்கவோ முடியாதளவிற்கு மௌனியிடம் சனாதன மனோபாவம் ஊறிப்போயிருந்தது. இத்தகைய மனோபாவம் 'நவீன' எழுத்தாளர்களாக இருந்த பல ஆதிக்கச்சாதி எழுத்தாளர்களுக்கு இருந்தது. இந்தவகைப்படட் அழகியலை அடிப்படையாகக் கொண்ட 'நவீன மேட்டுக்குடி' மனோபாவத்தின் கடைசிக்கொழுந்தாக சுந்தரராமசாமியைச் சொல்லலாம்.

தமிழில் புதிய சிந்தனைகளை அறிமுகப்படுத்துபவர்களை 'கண்டதைத் தின்று விட்டு வால்தூக்கிக் கழியும் பிறவிகள்' என்றே சு.ரா தீராநதியில் வந்த ஒரு கேள்வி பதிலில் கூறினார். 'தண்ணீர்' போன்ற படைப்புகளைத் தந்ததன் மூலம் அசோகமித்திரன் தமிழில் முக்கியமான படைப்பாளி என்பது மறுக்கப்பட முடியாதது. ஆனால் அவர் 'பார்ப்பனர்கள் தலித்துகளைப் போல கஷ்டப்படுகிறார்கள்' என்று அவுட்லுக் ஆங்கில இதழுக்கு அளித்த பேட்டி நம்மில் பலருக்கு நினைவிருக்கும்.

சமீபத்தில் ஜனவரி 2007 தீராநதி நேர்காணலிலும் அ.மி அதே வைதீக மனோபாவமுடையவராகவேயிருக்கிறார் என்பதை நிரூபித்திருக்கிறார். அந்தப் பேட்டி முழுவதிலுமே பார்ப்பன மிடில்கிளாஸ் மனோபாவமே தெரிகிறது. இன்னொரு 'நவீனக்' கவிஞரான ஞானக்கூத்தனின் நேர்காணல் தற்போதைய குமுதம் தீராநதி - மார்ச் 2007 இதழில் வெளியாகியிருக்கிறது.

திராவிட இயக்கங்கள் குறித்து மோசமான சித்திரங்களைத் தன் கவிதையில் தீட்டியவர் ஞா.கூ. அதுகுறித்த கேள்விக்குப் பதிலளிக்கும்போது அவர் 'பாரதிதாசன்கூடத்தான், "'நான் ஆரியன் இல்லை என்று சொல்லிக்கொள்வதிலே பெருமைப்படுகிறேன்' என்கிறார். இது மோசமான கருத்து இல்லையா?" என்கிறார்.
ஒரு பார்ப்பனன் தன்னைப் பார்ப்பனனாக அடையாளப்படுத்திக்கொள்ளும் சாதியப்-பெருமிதத்திற்கும் பார்ப்பன அல்லாதவன் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் எதிர் அரசியல் மனோபாவத்திற்கும் வித்தியாசம் தெரியாதவரா கூத்தன்?

இப்படியாகத்தான் தமிழின் 'நவீன' எழுத்தாளர்கள் 'வைதீக'வாதிகளாக இருந்துகொண்டே 'நவீன' இலக்கியங்களைப் படைத்தார்கள். மாற்றுச்சிந்தனைகளைக் குறித்துப் பேசுவோர் வடிவத்திற்கும் உள்ளடக்கத்திற்குமுள்ள தொடர்பு குறித்துப் பேசுவர். வடிவத்தை மாற்றாமல் வெறுமனே உள்ளடக்கத்தை மட்டும் மாற்றுவது மாற்று இல்லையென்பர். \
உதாரணமாக கல்விக்கூடங்களின் நிறுவனத்தன்மை, ஆசிரியர்களின் சட்டகமனப்பான்மை, ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையிலான அதிகாரப்படிநிலை இவற்றை மாற்றாமல் வெறுமனே 'ஆங்கிலக்கல்வி' என்னும் உள்ளடக்கத்தை எடுத்துவிட்டு 'தமிழ்வழிக்கல்வி' என்னும் உள்ளடக்கத்தை வைத்துவிடுவதாலேயே அது மாற்றுக்கல்வியாகிவிடாது.

ஆனால் இங்கு நிலைமையோ தலைகீழாக இருக்கிறது. இந்த 'நவீன எழுத்தளர்கள் புதிய வடிவங்களை அறிமுகப்படுத்தினார்கள். ஆனால் அவர்களது மனமோ வைதீகக்குட்டையில்தான் ஊறிக்கொண்டிருக்கிறது. ஒரு சனாதன மனம் எப்படி நவீன எழுத்தைப் படைக்கும் என்று நமக்கு விளங்கவில்லை. என்ன செய்வது? நவீன அறிவியலின் விளைபொருளான கம்ப்யூட்டருக்குப் பொட்டுவைத்து குங்குமம் பூசி ஆயுதபூஜை கொண்டாடி அழகுபார்க்கும் தேசமல்லவா இது?

தமிழ்ச்சூழலும் பின்நவீனத்துவமும் - நிறப்பிரிகையை முன்வைத்து...முன்னதாக...

நான் எழுதத் தொடங்கியபோது நினைத்த பல விஷயங்கள் எழுதி முடித்தபோது விடுபட்டிருக்கின்றன. என் தீர்மானங்களுக்கு அப்பால் பல விஷயங்கள் புதிதாகச் சேர்ந்திருக்கின்றன. ஆனால் இது மேலோட்டமான அறிமுகம்தானே தவிர ஆழமான அலசலோ முடிவான பார்வையோ அல்ல, சாத்தியப்பட்டவரை எளிமையாகவே எழுதமுயற்சித்திருக்கிறேன்.
- - - - - --------------------------------------------------------------
பின்நவீனத்துவம் குறித்த ஆழமான உரையாடல்கள் மற்றும் விமர்சனங்கள் குறித்து ஆராயாமல் பின்நவீனம் என்னும் கோட்பாடு தமிழ்ப்பெருவெளியில் ஏற்படுத்திய பாரிய தாக்கங்கள் குறித்துமட்டுமே இக்கட்டுரை ஆராய முயல்கிறது.
தமிழ்ச்சூழலில் புதியவகை எழுத்துமுறை, மேற்கத்தியச் சிந்தனைமுறை மற்றும் மேற்கத்திய படைப்பாளிகளின் மொழிபெயர்ப்பு ஆக்கங்கள் ஆகியவற்றை அடிப்படையாகவைத்து புதிய இலக்கியவகைமை 1959லிருந்துதான் தொடங்குகிறது.
'எழுத்து' இதழ் தொடங்கிவைத்த இந்த பாரம்பரியம் சமூக இருப்பு குறித்த எந்தக் கேள்வியுமற்று வைதீகக்கருத்தியலை உறுதிசெய்யும் மரபாகவே இருந்துவந்தது. இதிலிருந்து விலகி வைதீகநீக்கம் செய்யப்பட்ட நவீன இலக்கியமரபை 1967ல் 'புதிய தலைமுறை' என்னும் இடதுசாரிச்சிற்றிதழ் தொடங்கிவைக்கிறது. அதைத்தொடர்ந்து மார்க்சியம் இன்று, நிகழ், பரிணாமம், வெளிவட்டம் ஆகிய இடதுசாரி இதழ்மரபின் கடைசிக்கொழுந்து என்று நிறப்பிரிகை இதழைச் சொல்லலாம்.
1990 முதல் 2000 வரை இதழ்களைக் கொணர்ந்த நிறப்பிரிகைதான் பின்நவீனம் என்னும் சொல்லைத் தமிழில் விவாதப்பொருளாக மாற்றியது. குறிப்பாக அ.மார்க்ஸ் எழுதி விடியல் பதிப்பகத்தின் வெளியீடாக வந்த 'பின்நவீனத்துவம் இலக்கியம் அரசியல்' என்னும் நூல் பல்வேறுபட்ட இலக்கிய மற்றும் அரசியல் இயக்கங்களில் அதிர்வுகளை உண்டுபண்ணியது.
மார்க்சியம் : சோவியத் யூனியன் தகர்வுக்குப் பின் உலகமெங்கும் மார்க்சியம் மற்றும் சோசலிசம் குறித்த கேள்விகள் எழத்தொடங்கின. 'அரசு என்பது சோசலிசச்சமூகத்தில் உலர்ந்து உதிர்ந்துபோகும்' என்று காரல்மார்க்ஸ் சொன்னதற்கு மாறாக சோசலிசநாடுகளில் அரசு இறுக்கமடைந்தது குறித்து உரையாடல்கள் தொடங்கின. அதற்கு முன்பே இங்கு மாவோயிஸ்ட்கள் சோவியத்யூனியனை 'சமூக ஏகாதிபத்தியம்' என்று வரையறுத்து விமர்சிக்கத்தொடங்கினர்.
இந்தச்சூழலில் நிறப்பிரிகையின் முதல் இதழிலேயே சோசலிசக்கட்டுமானம் குறித்ததாக உரையாடல் அமைந்தது. ஒரு மனுசி/தனுக்கு மொழி, வர்க்கம், சாதி, பால், தேசியம் எனப் பல்வேறு அடையாளங்கள் உள்ளன. ஆனால் ஏதேனும் ஒற்றை அடையாளத்தை மட்டுமே அடிப்படையாக வைத்துக் கட்டமைக்கப்படுவதே அடையாள அரசியல்.(politics of identity) இந்த அரசியலை பின்நவீனம் மறுக்கிறது.
உதாரணமாக இந்தியச்சூழலில் ஒரு மனிதனுக்கு சாதி, மதம், மொழி, வர்க்கம், பால் என பல்வேறு அடையாளங்கள் உள்ளன.ஆனால் அடையாள அரசியல் ஏதேனும் ஒரு அடையாளத்தை மட்டுமே மய்யப்படுத்துகிறது. ஆனால் எல்லாவகையான அடையாளங்களையும் கணக்கிலெடுக்கவேண்டும். அதுவல்லாது ஒற்றை அடையாளத்தை மட்டும் வலியுறுத்துவது பன்மைத்துவத்தை மறுப்பதாகும் என்றது நி.பி. மேலும் அடையாள அரசியலால் மறுக்கப்பட்ட அல்லது கண்டுகொள்ளப்படாத நுண்ணிய அடையாளங்களை (பெண், தலித், பால்மீறி...) அடிப்படையாக வரையறுத்து வித்தியாசங்களின் அரசியல்(politics of differences), மிச்சங்களின் அரசியல்(politics of reminders) ஆகியவற்றை முன்வைத்தது நிறப்பிரிகை. மேலும் அவர்களுக்கிடையில் வித்தியாசங்களை அங்கீகரித்து ஒருங்கிணையும் ஒரு 'வானவில் கூட்டணி'யும் தேவை என்றது.
வட இந்தியாவில் ரணஜித்குகா போன்றவர்களால் முன்வைக்கப்பட்ட விளிம்புநிக்லை வரலாறை(subaltarn)யும் அது பயன்படுத்திக்கொண்டது. வரலாறு என்பதே கதைகூறல்(narrative)தான், மேலும் அது எழுதுபவர் அல்லது தொகுப்பவர் ஆகியோர்க்குச் சாதகமாகவே தொகுக்கப்படுகிறது (அ) எழுதப்படுகிறது. இந்த வகையிலேயே வரலாறு 'உருவாக்கப்படுகிறது'. இந்த வரலாற்றால் கண்டுகொள்ளப்படாத விளிம்புநிலை மக்களின் வரலாற்றையும் கணக்கிலெடுக்க வேண்டியது அவசியம். எழுதப்படாத வாய்மொழி வரலாறுகளும் (oral history)வரலாறே என்றது நி.பி.
மார்க்சிய அமைப்புகள் குறித்துப் பேசும்போது கட்சியில் அதிகாரம் மேலிருந்து கீழ்செலுத்தப்படுவதை அது விமர்சித்தது. அதற்கு மாறாக கீழிருந்து மேல்நோக்கியதான அதிகாரத்தை அது கோரியது. கட்சிக்குள் சனநாயகம், கருத்துப்பரவல், மய்யப்படுத்தப்படாத அதிகாரம் ஆகியவற்றை முன்வைத்தது. முதலாளித்துவம் என்னும் உள்ளடக்கத்தை மட்டும் எடுத்துவிட்டு சோசலிசம் என்னும் உள்ளடக்கத்தை வைத்துவிட்டால் போதாது. வடிவத்திலும் மாற்றம் வேண்டும் என்றது நி.பி. இதன் தொடர்ச்சியாக மருத்துவமனை, பள்ளி ஆகியவற்றில் செயற்பட்ட அதிகாரத்தையும் கணக்கிலெடுத்து மாற்றுக்கல்வி (பாவ்லோபிரேயரை முன்வைத்து...), மாற்றுமருத்துவம் ஆகியவை பற்றிப்பேசவேண்டும் என்றது.
ஆனால் இதை மார்க்சிய அமைப்புகள் கம்யூனிசத்தை அழிக்கவந்த ஏகாதிபத்தியச்சதியாகவே பார்த்தனர். அமைப்பை உடைப்பவர்கள் என சாடினர். சி.பி.எம் போன்ற பல மய்யநீரோட்டக் கம்யூனிஸ்ட் கட்சிகளிலிருந்து பல இளைஞர்கள் நிறப்பிரிகைப் போக்கினால் வெளியேறியதும் அதற்குகொரு காரணம்.
தேசியம் : இந்தியத்தேசியத்தை மறுத்த நிறப்பிரிகை 'தேசியம் ஒரு கற்பிதம்'(nationalism is an imaging), 'தேசம் என்பது கற்பிக்கப்பட்ட சமூகம்(nation is an imagined community)' என்னும் பெனடிக்ட் ஆண்டர்சனின் கூற்றின் அடிப்படையில் நமக்கான தமிழ்த்தேசியத்தைக் கற்பிக்க வேண்டியது அவசியம் என்று உரையாடலைத் தொடங்கினர்.
மேலும் தமிழ்க்கலாச்சரம் என்பது ஒரு படித்தானது அல்ல. இங்கு பல்வேறுவகையான கலாச்சாரங்கள் நிலவுகின்றன என்றனர்.பொதுவாக தேசிய இனப்பிரச்சினையில் ஸ்டாலினின் புகழ்பெற்ற வரையறையான 'தேசம் என்பது பொதுவான மொழி, பொதுவான எல்லை, பொதுவான எல்லை, பொதுவான பொருளாதாரம்,பொதுவான மனோநிலை' என்பதை மறுத்த நி.பி காஷ்மீர், பாலஸ்தீனம் ஆகியவற்றில் இதைத் தாண்டி மதம் போன்ற விஷயங்களின் அடிப்படையில் தேசியம் அமைவதைச் சுட்டிக்காட்டினர். மேலும் 'பொது' வானது என்பது ஒன்று கிடையாது என்றும் கூறினர்.
மொழியை வெறுமனே கருத்துப்பரிமாற்றத்திற்கான கருவியாகவோ அல்லது அதை வழிபாட்டுக்குரிய பொருளாகவோ பார்த்த இரண்டு நிலைப்பாட்டிலிருந்தும் மாறி மொழி என்பது அதிகாரத்தை நிலைநிறுத்தும் ஊடகமாகச் செயற்படுகிறது என்று நிறுவினர். இதற்கு இம்மானுவேல் காண்ட், சசூர், தெறிதா தொடங்கி பெரியார் தமிழ்மொழி மீது வைத்த விமர்சனங்கள் வரைப் பயன்படுத்தினர்.
ஆனால் இந்தியத்தேசியம் என்பது போலியானது என்ற தமிழ்த்தேசியவாதிகளால் தமிழ்த்தேசியமும் கற்பிதம்தான் என்பதை ஏற்றுக்கொள்ளவோ ஜீரணிக்கவோ முடியவில்லை. அவர்கள் நிறப்பிரிகை குழுவினரை 'தமிழ்த்தேசியத்தின் ஓர்மையைக் குலைக்கவந்தவர்கள்' என்றும் 'தமிழ்த்துரோகி' என்றும் விமர்சித்தனர்.
இலக்கியம் : நாம் முன்பே பார்த்தபடி எழுத்துப் பாரம்பரியத்தினரின் எழுத்துக்களில் நிலவிவந்த சாதிய அதிகாரம் குறித்துக் கேள்வியெழுப்பியது நி.பி. புதுமைப்பித்தன் போன்ற ஆதர்சங்களின் எழுத்துக்களில் இருந்த சாதிய உளவியலை அடையாளப்படுத்தினர். கட்டவிழ்ப்பு (deconstruction) என்னும் புதிய இலக்கியவகைக் கோட்பாடு அறிமுகப்படுத்தப்பட்டது.
எழுத்தாளன் என்பவன் உயர்ந்தவன் என்னும் பெருமிதமே இங்கு நிலவிவந்தது. ஆனால் பி.ந எழுதப்படும் எல்லாமும் பிரதிகள்தான். ஒரு படைப்பை எழுதியவுடனே அந்த படைப்பாளி இறந்துவிடுகிறான். பிறகு வாசிப்பதன் மூலம் வாசகன் தான் படைப்புக்கு அர்த்தத்தை ஏற்படுத்துகிறான் என்றது. அதுவும் ஒரு படைப்புக்கு ஒரேமாதிரியான வாசிப்பு கிடையாது. எனக்கு ஒரு படைப்பு ஒரு அர்த்ததைத் தரலாம், உனக்கு வேறொரு அர்த்தத்தைத் தரலாம் என்றது.
இதனால் படைப்பாளிக்குப் பின்னால் இருந்த ஒளிவட்டங்கள் தகர்க்கப்பட்டன. இலக்கியத்தில் அரசியல் இருந்தாலே அதைத் தீண்டதகாததாகப் பார்த்தனர் 'நவீன' இலக்கியவாதிகள். ஆனால் அரசியலற்ற இலக்கியம் என்று சொல்லப்படுவதிலும் அரசியல் இருக்கிறது என்று நி.பி கட்டவிழ்த்துக்காட்டியது. தமிழில் நவீன இலக்கியங்களோடு தொடர்புடையவர்களாக பார்ப்பன், வெள்ளாள மற்றும் உயர்சாதி எழுத்தாளர்களே இருந்தனர். ஆனால் நி.பி கையின் வரவிற்குப்பின்னால் ஏராளமான தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சார்ந்த இளைஞர்கள் எழுதத்தொடங்கினர்.
சாதி : மார்க்சிய மற்றும் தமிழ்த்தேசிய அமைப்புகள் கணக்கிலெடுக்காமலிருந்த சாதிய அம்சங்களை அரசியல் மற்றும் இலக்கியப்போக்குகளில் நி.பி வலியுறுத்திப்பேசியது. 1992 பாபாசாகேப் அம்பேத்கர் நூற்றாண்டு விழாவையொட்டி தலித் இலக்கியம், தலித் அரசியல் ஆகியவை குறித்த விவாதங்களை நி.பி தொடங்கிவைத்தது. 'தலித் அரசியல் அறிக்கை' என்னும் நூல் வெளியிடப்பட்டது.
'தலித்துகள் 'திருத்தப்படவேண்டியவர்கள்' என்னும் பார்வையை மறுத்து தலித்பண்பாடு என்பதும் குறிப்பிடத்தக்க பண்பாடுதான் என்றது நி.பி. இதனடிப்படையில் அழகியல், ஒழுக்கம், கலாச்சாரம் ஆகியவை குறித்துப் பலகேள்விகளை எழுப்பியது. நிறப்பிரிகையின் வரவுக்குப் பின்னரே இங்கு தலித் இலக்கியம் வீச்சுடன் வரத்தொடங்கியது.
பெண்ணியம் : பொதுவாகப் பெண்விடுதலை என்றால் அது பொருளாதார விடுதலையே என்று மார்க்சியர்கள் பேசிவந்த சூழலில் கலாச்சார விஷயங்களைப் பேசியது நி.பி. குறிப்பாக பாலியல் சுதந்திரம், குடும்பத்தின் வன்முறை, கற்பு ஆகியவை குறித்துப் பேசியது. இதை மரபான மார்க்சியர்கள் மற்றும் தேசியர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நி.பி குழுவினரைக் கலாச்சாரச் சீரழிவுவாதிகள் என்றும் ஓரினச்சேர்க்கை ஆதரவாளர்கள் என்றும் விமர்சித்தனர்.


இங்கு பின்நவீனத்துவம் அறிமுகப்படுத்தப்பட்டு விவாதிக்கப்பட்ட காலத்திலேயே அதை மறுக்கும் விமர்சனங்களும் எழுந்தன. குறிப்பாக மார்க்சியர்கள் இதுகுறித்துப் பல கண்டனங்களையும் மறுப்புகளையும் முன்வைத்தனர். அவற்றில் சிலவற்றிற்கு நியாயங்கள் இருந்தன என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால் நிறப்பிரிகையின் செயல்பாடு அவர்களுக்குள்ளும் பலமாற்றங்களை ஏற்படுத்தின என்பதையும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.
இலக்கியச்சூழலில் மாபெரும் மாறுபாடு ஏற்பட்டு தலித் இலக்கியம் என்பது இன்று அங்கீகரிக்கப்பட்ட இலக்கியமாக மாறிவிட்டது. எதார்த்த இலக்கியங்களைத் தாண்டிய அ-நேர்கோட்டு எழுத்து, மாய எதார்த்தவாத இலக்கியப் படைப்புகளும் அதிகமாக வரத்துவங்கிவிட்டன.
மார்க்சிய அமைப்புகளும் சாதி குறித்த அம்சங்களைக் கணக்கிலெடுக்கத் துவங்கியிருக்கின்றன. நிறப்பிரிகை, தான் முன்வைத்த பல கோட்பாடுகளின் அடிநாதமாகப் பெரியாரையே முன்வைத்தது. மேலும் பெரியார் என்றாலே கடவுள் மறுப்பாளர், பார்ப்பன எதிர்ப்பாளர், பிரிவினை கோரியவர், இட ஒதுக்கீட்டிற்காகப் போராடியவர் என்றே சொல்லப்பட்ட பல விஷயங்களைத் தாண்டி பெரியாரின் பன்முகப் பரிமாணங்களையும் வெளிக்கொணர்ந்து உரையாடினர்.
இப்போது சி.பி.அய், சி.பி.எம் போன்ற மய்யநீரோட்டக் கம்யூனிஸ்ட் கட்சிகளும் பெரியாரைப் பற்றிப் பேசத்தொடங்கியுள்ளனர். ம.க.இ.க போன்ற நக்சல்பாரி அரசியலாளர்கள் பெரியாரையும் அம்பேத்கரையும் கையிலெடுக்கின்றனர். 'பார்ப்பான்ப் பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு' போன்றவற்றை நடத்துகின்றனர். இப்படியாகப் பலமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
ஆனால் நிறப்பிரிகை முன்னெடுத்த தலித் அரசியல் என்பது வேறுதிசைக்கு மாறிவிட்டது. குறிப்பாக தலித்மகக்ளில் பெருந்திரளைக் கொண்ட விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பு தமிழ்த்தேசியத்தை முன்வைக்கும் குறுந்தேசிய அமைப்பாகவும் பெண் தலைமைகள் பற்றிய பிரக்ஞையற்றும் மறுபுறத்தில் கற்பு போன்ற நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளை வலியுறுத்தும் ஆணாதிக்க அமைப்பாகவும் மாறிவிட்டது. ஆனாலும் ஆதித்தமிழர்பேரவை போன்ற அருந்ததிய அமைப்புகள் திருப்தியளிக்கும் விதத்திலேயே செயல்படுகின்றன. தலித் அரசியல் என்பதே பறையர் அரசியலாக மாறிவிட்ட சூழலில் அருந்ததியர், புரதைவண்னார், பழங்குடிகள், நரிக்குறவர் ஆகியோரின் உரிமைகளைப் பேசவேண்டியது மிகமிக அவசியமானது.
நிறப்பிரிகை என்பது இதழாக மட்டுமில்லாது ஒரு இயக்கம் போலவே செயல்பட்டு வந்தது. நிறப்பிரிகைப்பள்ளியில் உருவான குமாரசெல்வா போன்ற பல எழுத்தாளர்கள் எழுதுவதைக் கைவிட்டுவிட்டனர். அல்லது சிலர் மாற்றுமுகாம்களில் தஞ்சமடைந்துவிட்டனர். நிறப்பிரிகையின் ஆசிரியர்குழுவில் இடம்பெற்ற ரவிக்குமார் காலச்சுவடு இதழின் ஆசிரியர்குழுவிலேயே இடம்பெற்றுவிட்டார்.மட்டுமில்லாது பெரியார், தலித் மகக்ளின் விரோதி என்றும் பெண்பித்தர் என்றும் காலச்சுவடுவில் மட்டுமில்லாது பல இதழ்களில் எழுததொடங்கினார். 'தெலுங்கு பேசும் மகக்ளை (அருந்ததியர் உட்பட) வெளியேற்ற வேண்டும்' என்னும் தமிழ் அடிப்படைவாதப் பத்திரிகையான 'வேர்கள்' போன்ற இதழ்களிலும் தொடர் எழுதுகிறார்.
நிறப்பிரிகையின் இன்னொரு ஆசிரியரான பொ.வேல்சாமியோ காலச்சுவடுவில் எழுதுவது மட்டுமில்லாது அவரது கட்டுரைகளின் தொகுப்பு 'பொற்காலங்களும் இருண்டகாலங்களும்' காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடாகவே வந்திருக்கிறது. நிறப்பிரிகையின் அரசியலை (விமர்சனத்தோடு) ஏற்றுக்கொண்ட இதழ்களாக கவிதாசார்ன், கேப்பியார், களம்புதிது, வேறுவேறு ஆகிய இதழ்கள் வெளிவந்தன. ஆனால் இப்போது 'கவிதாசரண்' மட்டுமே வெளிவருகிறது.
ஆனால் எல்லாவற்றையும் தாண்டி நிறப்பிரிகைக்குப் பிறகு அதனளவிற்கு காத்திரமான இதழ் தமிழில் வரவில்லையென்றுதான் சொல்லவேண்டும். அது ஏற்படுத்திய தாக்கங்கள் தமிழ்ச்சூழலில் பலமாற்றங்களை நிகழ்த்தியிருக்கிறது. நிறப்பிரிகை இதழின் கூட்டுவிவாதங்களிலும் கட்டுரைகளிலும் பல பங்களிப்புகளைச் செய்த சாருநிவேதிதா, ராஜன்குறை, ராஜ்கவுதமன், பேராசிரியர் பா.கல்யாணி,வளர்மதி, இன்குலாப் போன்ற பலரும் தங்களுக்கான பாதையைத் தேர்ந்தெடுத்து இயங்கிக்கொண்டிருக்கின்றனர் என்பது ஆறுதலானதுதான்.
ஆனால் காலச்சுவடு, உயிர்மை போன்ற இலக்கிய முதலாளிகளால் மட்டுமே சிறுபத்திரிகைகளை 'வெற்றிகரமாக' நடத்தமுடியும் என்னும் அவலச்சூழல் உருவாகியுள்ள நிலையில் நிறப்பிரிகையின் இழப்பும் வெற்றிடமும் இட்டு நிரப்பமுடியாததாகவும் துயரமானதாகவுமிருக்கிறது.