சி.பி.எம்- இந்துத்துவம், ஒத்தநாகரிகம்.
கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் மனுதர்மா - c.p.m (நன்றி.கி.வீரமணி)யின் ஆதரவாளர் ஒருவர் சந்திப்பு என்ற பெயரில் ஒரு வலைப்பக்கத்தை நடத்திவருகிறார். அவரது சமீபத்திய அபத்தத்திற்குக் காண்க.

http://santhipu.blogspot.com/2006/05/blog-post_19.html

நந்திகிராமத்திலும் சிங்கூரிலும் உழைக்கும் மக்களின் துரோகியாக அம்பலப்படுத்தப்பட்டுள்ள சூழலில் அதைத் திசைதிருப்புவதற்காகவே வழக்கமான பார்ப்பனீயத் தந்திரத்தைக் கையிலெடுத்துக்கொண்டு இந்தப் பதிவை எழுதியிருக்கிறார்.

சாமிசிதம்பரனார் அடிப்படையில் ஒரு தமிழ்ப்புலவர். தமிழில் சில நல்ல நூற்களை எழுதியிருக்கிறார். அவர் எழுதிய 'தமிழர்தலைவர்' நூலுக்குப்பிறகு இதுவரை பெரியாரின் முழுமையான வாழ்க்கைவரலாறு வெளிவரவில்லை. அதேபோல சித்தர்கள் குறித்தும் முக்கியமான நூலொன்றை எழுதியிருக்கிறார். இதற்காகவெல்லாம் அவர் மிகவும் மதிக்கப்படவேண்டியவரே. ஆனால் அவர் சுயமரியாதை இயக்கத்தைவிட்டு வெளியேறி பொதுவுடைமை இயக்கத்தில் இணைந்ததற்கான காரணம் கம்யூனிசத்தின் மேல் கொண்ட காதலால் அல்ல. அடிப்படையில் புலவரான அவரால் கம்பராமாயணம் மற்றும் பெரியபுராணத்தின்மீதான பெரியாரின் கடுமையான விமர்சனங்களைத் தாங்கிக்கொள்ள இயலாமல்தான் வெளியேறினார்.

பெரியாரும் அண்ணாவும் கம்பராமாயணத்தையும் பெரியபுராணத்தையும் எரிக்கச்சொல்லிப் பிரச்சாரம் செய்துகொண்டிருந்த காலகட்டத்தில்தான் சாமிசிதம்பரனாரும் ஜீவாவும் கம்பராமாயணத்தின் இலக்கியக்கூறுகளை விதந்தோதிக்கொண்டிருந்தனர். மேலும் அவற்றில் ஒரு சில பாடல்களைப் பொறுக்கிக் கம்பராமாயணத்தில் 'கம்யூனிசக்கூறுகளை' விளக்கினர். இவர்களாவது பரவாயில்லை கம்பராமாயணத்தில்தான் கம்யூனிசத்தைக் கண்டுபிடித்தார்கள். ஆனால் இவர்களுக்கெல்லாம் அப்பன் நம்பூதிரி'பாடு' வேதங்களிலேயே 'புராதனப்பொதுவுடைமைச் சமூகத்தை' கண்டுபிடித்தார்.

சரி இனி சாமிசிதம்பரனாரின் கட்டுரையிலுள்ள அபத்தத்தைக் காண்போம்.

/“தொல்காப்பியர் காலத்திலேயே தமிழர்களிடையே இருந்த நாகரிகம் தமிழர் நாகரிகம் என்றுதான் எண்ண வேண்டும். அந்த நாகரிகம் ஆரியருக்கும், தமிழருக்கும் ஒத்த நாகரிகமாகத்தான் காணப்படுகின்றது. தொல்காப்பியத்தில் ஆரியர் என்ற பெயரோ, திராவிடர் என்ற பெயரோ காணப்படவில்லை/

ஆரியரோ திராவிடரோ காணப்படாதபோது இல்லாத ஆரியர்களுக்கும் இருந்த தமிழர்களுக்கும் இடையில் 'ஒத்த' நாகரீகம் எப்படி நிலவியிருக்கும்?

/“இந்தியாவின் அடிப்படை நாகரிகம் ஒன்றுதான் என்று கூறும் சரித்திராசிரியர்கள் உண்டு. 'இந்தியமக்கள் வணங்கும் தெய்வங்கள், பிறப்பு, இறப்பு பற்றிய நம்பிக்கைகள், நீதி, அநீதி இவைகளைப் பற்றிய முடிவுகள், பாவபுண்ணியம், மோட்சம், நரகம் பற்றிய கொள்கைகள் இவைகள் எல்லாம் ஒன்றாகவே இருக்கின்றன. இந்திய மக்கள் அனைவருக்கும் இவைகளைப் பற்றிய கருத்து ஒன்றுதான். இவைகள்தாம் பண்பாட்டுக்கு அடிப்படையானவை. அவரவர்கள் வாழும் இடத்தைப் பொறுத்து நடை, உடை, பாவனைகளும், மொழிகளும் வேறுபட்டிருக்கலாம். இதனால் இந்தியமக்களின் பண்பாடு வெவ்வேறு என்று சொல்லிவிட முடியாது ' என்பதே இச்சரித்திராசிரியர்களின் கொள்கை/

அடப்பாவிகளா இதைத்தானே ஆர்.எஸ்.எஸ்ஸும் சொல்கிறது ஒரே நாடு ஒரே சட்டம் ஒரே கலாச்சாரம் என்று. சாமிசிதம்பரனாரிடமும் சந்திப்புமிடமும் எந்தச் 'சரித்திர ஆசிரியர்கள்' அப்படி வந்துசொன்னார்கள்? இந்தியா முழுவதும் ஒரே கலாச்சாரம், ஒரே வழிபாடு, ஒரே தத்துவம் என்றால் பவுத்தம், சமணம், ஆசிர்வகம், சாங்கியம், உலகாயுதம் ஆகியவற்றில் ஆரம்பித்து சிறுதெய்வ வழிபாடு வரை இருப்பதற்குப் பெயர் என்ன?

சந்திப்பு, சாமிசிதம்பரனாரைப் படிப்பதற்கு முன்பு ராகுல்ஜி, டி.டி.கோசாம்பி, நா.வானமாமலை ஆகியவர்களைப் படிக்கட்டும்.இந்தலட்சணத்தில் பன்மைத்துவங்களை மறுத்து ஒற்றைத்தன்மையை வலியுறுத்தும் பாசிசப்போக்கிலிருக்கும் சந்திப்பு சமுத்ராவிற்கு அறிவுரை சொல்கிறார். ' இந்துத்துவா என்பது வேற்றுமையில் ஒற்றுமை என்பதை மறுக்க கூடியது. அது இந்திய பண்பாட்டை முற்றிலும் திரித்துக் கூறும் தத்துவம்' என்று. செய்வது தரகுப்பணி, உனக்கெதுக்கு சிகப்புக்கொடி என்றுதான் கேட்கவேண்டியிருக்கிறது.

/தொல்காப்பியர் 'அந்தணர் மறைத்தே ' என்று குறித்திருப்பதும், எட்டுவகை (கந்தருவம் உள்ளிட்ட) மணங்களைக் குறிப்பிட்டிருப்பதும் அவை (தொல்காப்பியர் சொல்லும் மறை என்பது) வடமொழி வேதங்கள்தாம் என்பதற்குப் போதுமான சான்றாகும். அவை தமிழ்வேதங்கள் என்பது பொருந்தாது/

அகப்பாடல்களான 136 மற்றும் 86 ஆகியவை கூறும் திருமண முறைகள் முழுக்க தமிழர்திருமண முறைகளே என்றும் இவை ஆரியமரபிலிருந்து மாறுபட்டவை என்றும் சொல்வது யார் தெரியுமா? பி.டி.சீனிவாச அய்யங்கார். (P.T.S, History of Tamils,page - 80 )உண்மையில் தமிழர் கலாச்சாரம் என்பதும் ஆரியர் கலாச்சாரம் என்பதும் சங்கப்பாடல்களிலேயே வேறுபடுத்திக்காட்டப்பட்டுள்ளது. 'ஆரியர்' என்கிற சொல் தமிழ் இலக்கியங்கள் முழுக்க 'மற்றமையை'(others)க்குறிக்கவே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஆரியப்படையை வென்ற நெடுஞ்செழியன் பற்றிப் புறநானூறு பேசுகிறது. தமிழின் மேன்மையை அறியாத ஆரியமன்னன் பிரகதத்தனுக்குத் தமிழின் சிறப்பை உணர்த்தவே குறிஞ்சிப்பாட்டு இயற்றப்பட்டது. 'பாடகச்சீறடி ஆரியப்பேடியோடு எஞ்சாமன்னர் இறைமொழிமறுக்கும்..' என்கிறது சிலப்பதிகாரம். ஆனால் சந்திப்பு ஆரியச்சோற்றில் தமிழ்ப்பூசணிக்காயை மறைக்கப்பார்ப்பது ஏன்?

உண்மையைச் சொல்வதானால் ஆரியருக்கும் திராவிடருக்கும் ஒத்த நாகரீகம் இல்லை. இந்துத்துமத்திற்கும் சி.பி.எம்மிற்கும்தான் ஒத்த நாகரிகமும் கலாச்சாரமும் இருக்கிறது. பார்ப்பன ஆதரவு, ஏகாதிபத்தியத்திற்குக் கைக்கூலி வேலை பார்ப்பது, மதவாதத்திற்காகவும் ஏகாதிபத்தியப் பகாசூரத்திற்காகவும் தான் ஆளும் மாநிலங்களின் மக்களின் மீது குண்டர்களை போலீசுரவுடிகளையும் ஏவிவிடுவது ஆகியற்றில் ஒத்த நாகரீகம்தான். ஆனால் இதையெல்லாம் செய்துவிட்டு குஜராத்தில் 3000 முஸ்லீம்களைக் கொன்ற இந்துத்துவமும் 50பேருக்கும் மேல் மேற்குவங்கத்தில் கொன்ற மனுதருமக் கம்யூனிஸ்ட்களும் (இப்போது போலீசு பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் பிணங்களை மறைக்க இழுத்துக்கொண்டுபோய் ஒரு இடத்தில் மொத்தமாய்ப் புதைத்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன) சட்டீஸ்கரில் அய்ம்பது கைக்கூலிகளைக் கொன்ற காரணத்திற்காக நக்சல்பாரிகளைக் 'கொலைகாரர்கள்' என்று குற்றம்சாட்டுவர்.

அதுபோக சந்திப்பு வழிப்போக்கனுக்குச் சொல்லும் பதிலில் 'பார்ப்பனர்களை எதிர்க்கவில்லை, பார்ப்பனீயத்தைத்தான் எதிர்க்கிறோம்' என்று 'விளக்கம்' வேறு கொடுக்கிறார். சரி, இவர்கள் 'பார்ப்பனீயத்தை' எதிர்த்த கதையைத்தான் பார்ப்போமே,

* இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தை தேர்தல் சகதியில் தள்ளிய நம்பூதிரிபாடு தன் பேரனுக்குப் பூணூல் கல்யாணம் செய்தது.

* மேற்குவங்கத்தில் கோயிலில் கையும் களவுமாக மாட்டிய மந்திரி 'நான் முதலில் பிராமணன், பிறகுதான் கம்யூனிஸ்ட்' என்று 'திருவாய்' மலர்ந்தது.

* இருள்நீக்கி சுப்பிரமணியத்திற்கும் அவனது கொடுக்கிற்கும் ஆதரவுக்கரம் நீட்ட 'மவுண்ட்ரோடு மார்க்சிஸ்ட்' ஹிந்து என்.ராம் ஓடோடிவந்தது.

* ஜெயேந்திரனை உள்ளூரிலேயே சீந்தக்கூட நாதியில்லாமல் நாயைவிடக் கேவலமாகப் பார்த்துக்கொண்டிருக்கும் சூழலில் கேரள முதல்வர் 'காம்ரேட்' அச்சுதானந்தன் அவனைச் சிறப்புவிருந்தினராக அழைத்தது.

* தீக்கதிர் தீபாவளிமலர் வெளியிடுவது.

* கம்யூனிஸ்ட்களை அவதூறு செய்யும் ஜெயமோகனின் 'பின் தொடரும் நிழலின் குரல் நாவலை த.மு.எ.ச பொறுப்பாளர் மறைந்த கந்தர்வன் வெளியிட்டது...

சொல்லிக்கொண்டே போனால் முஸ்லீம்விரோத 'பம்பாய்' படத்திற்குத் த.மு.எ.ச பாராட்டுவிழா எடுப்பதிலிருந்து உள்ளூரில் ஆயுதபூஜை கொண்டாடுவது வரைக்கும் இவர்களது 'பார்ப்பனீய எதிர்ப்பு'ப் பணிகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

/இணையத்தில் மலிவான எழுத்துக்களைப் பரப்பிவரும் ஈவேராவின் சீடர்கள்தான் இந்தக் கேள்விகளுக்குத் தக்க பதில்களைத் தேட வேண்டும்/ என்கிறார் சந்திப்பு. தினமலர் பாணியில் ஈ.வெ.ரா என்று வெறுப்பு பொங்கக் குறிப்பிடும் சந்திப்பின் பதிவுக்கு வஜ்ராசங்கர், அரவிந்தன்நீலகண்டன் போன்ற இந்துத்துவப் பாசிஸ்ட்கள் பாராட்டிப் பின்னூட்டமிடுவதில் ஆச்சரியம் இருக்கிறதா என்ன?

13 உரையாட வந்தவர்கள்:

 1. வரவனையான் said...

  சரியான கட்டுரை சுகுணா, இவர்கள் இன்னும் மேலே போய் "கீழை மார்ச்சியம் என்பது தென்கலை வைணவமே" என்று பேண்டு தொலைத்தார்கள்.

  இன்னும் மார்க்சீயர்களை அம்பலபடுத்த வேண்டுமானால், பிஜெபி போட்டியிடாத இடங்களில் பார்ப்பனர்கள் சிபிஎம் க்கு வாக்களிப்பதை பார்க்கலாம்.

  ஜோதிபாசுவின் பெயர்த்தி பிரிட்டன் குடும்பத்தில் மணமாகியுள்ளார்

  சோம்நாத் சட்டர்ஜி பெயரனுக்கு பூனூல் கல்யானத்திற்கு எம்பி களுக்கு நாடளுமன்ற அவையினுள்ளே அழைப்பு என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

 2. Anonymous said...

  சந்திப்பு இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் தரவேண்டும். திராவிட இயக்கங்களை போகிற போக்கில் குற்றஞ்சாட்ட போலி கம்யூனிஸ்டுகளுக்கு என்ன தகுதி உள்ளது?

 3. Anonymous said...

  தேவனுக்கும் பாப்பானுக்கும் அமெரிக்காவுக்கும் என்ன சம்பந்தம்? ஆனால் நாளைக் காலையில் கோயம்புத்தூர் தேவன் டாலர் நாய் ஒரு பெரிய கும்பியாக பேண்டு போடுவான் பாருங்கள்.

  அவனுக்கு கம்யூனிசத்தினை எதிர்க்க வேண்டும்,

  இந்தியாவை தூற்றி அமெரிக்காவை புகழ வேண்டும்,

  பாப்பானை புகழ வேண்டும்.

  அதற்காக எதுவும் செய்வான் அந்த நாதாறி.

 4. rajavanaj said...

  புதிதாக சில தகவல்கள் தந்த பதிவு. நல்லதொரு பதிலடி.

  வாழ்த்துக்கள்

 5. சந்திப்பு said...

  சுகுனா பார்ப்பனீயத் தந்திரத்தோடு எழுதும் நான் எப்படி பார்ப்பனீயத்தை ஆதரிப்பேன்! முரண்பாடாக இல்லையோ? அல்லது திராவிட இன மோகம் கண்ணை மறைக்கிறேதா? மேலும், நந்திகிராமம், சிங்கூரில் அம்பலப்பட்டதற்காகவே இதை எழுதுவதாக குறிப்பிட்டுள்ளீர்களே இதில் உண்மை உண்டா? இந்தப் பதிவினை 2006 மே மாதம் 19 ஆம் பதிவிடப்பட்டுள்ளது. அதுவும் இவையனைத்தும் பெரும் புலவர் தமிழறிஞர் பெரியார் போற்றிய திருவாளர் சாமிசிதம்பரனாரின் கருத்து. இந்த கருத்தோடு நான் ஒன்றிப் போகிறேன். பெரியார் காலத்திலேயே இதுபோன்ற விவாதங்கள் நடைபெற்றதுண்டு. ஆனால், உங்களைப் போல் பொய்யையும், அவதூறையும் அப்போது பெரியார் பரப்பவில்லை. இந்த இடத்தில் எழும் பிரச்சினை என்ன? இன்றைய காலத்தில், குறிப்பாக வறுமை, வேலையின்மை, ஏகாதிபத்திய மேலாதிக்கம், உலகமயத்தாக்கம் போன்ற பல்வேறு தாக்குதல்களுக்கு எதிராக ஒன்றுபடவேண்டிய உழைக்கும் வர்க்கம் ஜாதி, இனத்தின் பெயரால் பிளவுபடுவதை எதிர்க்க வேண்டும் என்பதுதானேயொழிய வேறொன்றும் இல்லை. அதேபோல், இனம் என்ற கருத்தாக்கமே ஏகாதிபத்திய விஞ்ஞானிகளால் கட்டமைக்கப்பட்ட ஒன்றுதான். அது அவர்களின் அன்றைய தேவை! அதே சமயம், இனத்தின் பெயராலோ, ஜாதியின் பெயராலோ ஒரு பிரிவு மற்றொரு பிரிவினை ஒடுக்குவதை ஏற்க முடியாது. இது எந்தக் காலத்திற்கும் பொருந்தும். இந்த யுகத்தில் ஒடுக்குபவர்கள் ஏகாதிபத்தியவாதிகள்... ஒடுக்கப்படுபவர்கள் உழைக்கும் வர்க்கத்தினர். (உடனே... நந்திகிராமத்திற்கு போய் விடாதிர்கள்... அது குறித்த என்னுடைய கண்ணோட்டத்தை சந்திப்பில் வெளியிட்டுள்ளேன்.) எனவே, இவ்வாறு ஒரு பிரிவினருக்கு எதிராக நீங்கள் ஆவேசமாக எழுதுவதை பலரும் கொஞ்சலாம். இதில் நீங்களும் மகிழலாம். அது தற்கால கடமையை ஆற்றுவதற்கு உதாவாது. மேலும், திராவிட இயக்கத்தின் அவுட் புட் வேலைப்பில்லைக்காரி என்று ஒரு பதிவினை சந்திப்பில் போட்டுள்ளேன். இன்றைய திராவிட இயக்கங்கள் குறிப்பாக, திமுக, திக., மதிமுக, அதிமுக, இவைகள் எல்லாம் நீங்கள் கடுமையாக எதிர்க்கும் சுளுளு மடியில் கொஞ்சிக் குலாவியதெல்லாம் மறந்து விட்டதா? எனவே, இன்றைக்கும் சரி, கடந்த காலத்திலும் சரி, இந்த இனவாதத்திற்கு ஒரு வர்க்க அடிப்படை உண்டு. அது தொழிலாளி வர்க்கத்தை மையப்படுத்திய அரசியலை அடிப்படையாக கொண்டதில்லை. இதனை விமர்சன ரீதியாக அணுகினால் விவாதம் சிறப்பாக இருக்கும், நம்பூதிரிபாட்டை, பாடு என்று எழுதுவதால் உங்களுக்கு சந்தோஷம் கிடைக்கலாம். நானும் பதிலுக்கு கருநாய்நிதி என்று எழுத முடியும், அல்லது ஈ.வே.ராம(சாமி)நாயக்கர் என்று எழுத முடியும். நோக்கம் குதர்க்கமல்ல. இன்றைய சூழலில் உழைக்கும் மக்களுக்கான விடுதலைக்கு பரந்துப்பட்ட மக்களைத் திரட்டுவதே! மற்றபடி உங்களது எழுத்து நடை சிறப்பாக உள்ளது. இந்த எழுத்தினை வர்க்க எதிரிகள் மீது காட்டினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

 6. சந்திப்பு said...


  //நந்திகிராமத்திலும் சிங்கூரிலும் உழைக்கும் மக்களின் துரோகியாக அம்பலப்படுத்தப்பட்டுள்ள சூழலில் அதைத் திசைதிருப்புவதற்காகவே வழக்கமான பார்ப்பனீயத் தந்திரத்தைக் கையிலெடுத்துக்கொண்டு இந்தப் பதிவை எழுதியிருக்கிறார்.//

  http://santhipu.blogspot.com/2006/05/blog-post_19.html


  //சந்திப்பு வழிப்போக்கனுக்குச் சொல்லும் பதிலில் 'பார்ப்பனர்களை எதிர்க்கவில்லை, பார்ப்பனீயத்தைத்தான் எதிர்க்கிறோம்' என்று 'விளக்கம்' வேறு கொடுக்கிறார்.//
  சுகுனா பார்ப்பனீயத் தந்திரத்தோடு எழுதும் நான் எப்படி பார்ப்பனீயத்தை ஆதரிப்பேன்! முரண்பாடாக இல்லையோ? அல்லது திராவிட இன மோகம் கண்ணை மறைக்கிறேதா? மேலும், நந்திகிராமம், சிங்கூரில் அம்பலப்பட்டதற்காகவே இதை எழுதுவதாக குறிப்பிட்டுள்ளீர்களே இதில் உண்மை உண்டா? இந்தப் பதிவினை 2006 மே மாதம் 19 ஆம் பதிவிடப்பட்டுள்ளது. அதுவும் இவையனைத்தும் பெரும் புலவர் தமிழறிஞர் பெரியார் போற்றிய திருவாளர் சாமிசிதம்பரனாரின் கருத்து. இந்த கருத்தோடு நான் ஒன்றிப் போகிறேன். பெரியார் காலத்திலேயே இதுபோன்ற விவாதங்கள் நடைபெற்றதுண்டு. ஆனால், உங்களைப் போல் பொய்யையும், அவதூறையும் அப்போது பெரியார் பரப்பவில்லை. இந்த இடத்தில் எழும் பிரச்சினை என்ன? இன்றைய காலத்தில், குறிப்பாக வறுமை, வேலையின்மை, ஏகாதிபத்திய மேலாதிக்கம், உலகமயத்தாக்கம் போன்ற பல்வேறு தாக்குதல்களுக்கு எதிராக ஒன்றுபடவேண்டிய உழைக்கும் வர்க்கம் ஜாதி, இனத்தின் பெயரால் பிளவுபடுவதை எதிர்க்க வேண்டும் என்பதுதானேயொழிய வேறொன்றும் இல்லை. அதேபோல், இனம் என்ற கருத்தாக்கமே ஏகாதிபத்திய விஞ்ஞானிகளால் கட்டமைக்கப்பட்ட ஒன்றுதான். அது அவர்களின் அன்றைய தேவை! அதே சமயம், இனத்தின் பெயராலோ, ஜாதியின் பெயராலோ ஒரு பிரிவு மற்றொரு பிரிவினை ஒடுக்குவதை ஏற்க முடியாது. இது எந்தக் காலத்திற்கும் பொருந்தும். இந்த யுகத்தில் ஒடுக்குபவர்கள் ஏகாதிபத்தியவாதிகள்... ஒடுக்கப்படுபவர்கள் உழைக்கும் வர்க்கத்தினர். (உடனே... நந்திகிராமத்திற்கு போய் விடாதிர்கள்... அது குறித்த என்னுடைய கண்ணோட்டத்தை சந்திப்பில் வெளியிட்டுள்ளேன்.) எனவே, இவ்வாறு ஒரு பிரிவினருக்கு எதிராக நீங்கள் ஆவேசமாக எழுதுவதை பலரும் கொஞ்சலாம். இதில் நீங்களும் மகிழலாம். அது தற்கால கடமையை ஆற்றுவதற்கு உதாவாது. மேலும், திராவிட இயக்கத்தின் அவுட் புட் வேலைப்பில்லைக்காரி என்று ஒரு பதிவினை சந்திப்பில் போட்டுள்ளேன். இன்றைய திராவிட இயக்கங்கள் குறிப்பாக, திமுக, திக., மதிமுக, அதிமுக, இவைகள் எல்லாம் நீங்கள் கடுமையாக எதிர்க்கும் RSS மடியில் கொஞ்சிக் குலாவியதெல்லாம் மறந்து விட்டதா? எனவே, இன்றைக்கும் சரி, கடந்த காலத்திலும் சரி, இந்த இனவாதத்திற்கு ஒரு வர்க்க அடிப்படை உண்டு. அது தொழிலாளி வர்க்கத்தை மையப்படுத்திய அரசியலை அடிப்படையாக கொண்டதில்லை. இதனை விமர்சன ரீதியாக அணுகினால் விவாதம் சிறப்பாக இருக்கும், நம்பூதிரிபாட்டை, பாடு என்று எழுதுவதால் உங்களுக்கு சந்தோஷம் கிடைக்கலாம். நானும் பதிலுக்கு கருநாய்நிதி என்று எழுத முடியும், அல்லது ஈ.வே.ராம(சாமி)நாயக்கர் என்று எழுத முடியும். நோக்கம் குதர்க்கமல்ல. இன்றைய சூழலில் உழைக்கும் மக்களுக்கான விடுதலைக்கு பரந்துப்பட்ட மக்களைத் திரட்டுவதே! மற்றபடி உங்களது எழுத்து நடை சிறப்பாக உள்ளது. இந்த எழுத்தினை வர்க்க எதிரிகள் மீது காட்டினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

 7. சந்திப்பு said...


  சுகுனா பார்ப்பனீயத் தந்திரத்தோடு எழுதும் நான் எப்படி பார்ப்பனீயத்தை ஆதரிப்பேன்! முரண்பாடாக இல்லையோ? அல்லது திராவிட இன மோகம் கண்ணை மறைக்கிறேதா? மேலும், நந்திகிராமம், சிங்கூரில் அம்பலப்பட்டதற்காகவே இதை எழுதுவதாக குறிப்பிட்டுள்ளீர்களே இதில் உண்மை உண்டா? இந்தப் பதிவினை 2006 மே மாதம் 19 ஆம் பதிவிடப்பட்டுள்ளது. அதுவும் இவையனைத்தும் பெரும் புலவர் தமிழறிஞர் பெரியார் போற்றிய திருவாளர் சாமிசிதம்பரனாரின் கருத்து. இந்த கருத்தோடு நான் ஒன்றிப் போகிறேன். பெரியார் காலத்திலேயே இதுபோன்ற விவாதங்கள் நடைபெற்றதுண்டு. ஆனால், உங்களைப் போல் பொய்யையும், அவதூறையும் அப்போது பெரியார் பரப்பவில்லை. இந்த இடத்தில் எழும் பிரச்சினை என்ன? இன்றைய காலத்தில், குறிப்பாக வறுமை, வேலையின்மை, ஏகாதிபத்திய மேலாதிக்கம், உலகமயத்தாக்கம் போன்ற பல்வேறு தாக்குதல்களுக்கு எதிராக ஒன்றுபடவேண்டிய உழைக்கும் வர்க்கம் ஜாதி, இனத்தின் பெயரால் பிளவுபடுவதை எதிர்க்க வேண்டும் என்பதுதானேயொழிய வேறொன்றும் இல்லை. அதேபோல், இனம் என்ற கருத்தாக்கமே ஏகாதிபத்திய விஞ்ஞானிகளால் கட்டமைக்கப்பட்ட ஒன்றுதான். அது அவர்களின் அன்றைய தேவை! அதே சமயம், இனத்தின் பெயராலோ, ஜாதியின் பெயராலோ ஒரு பிரிவு மற்றொரு பிரிவினை ஒடுக்குவதை ஏற்க முடியாது. இது எந்தக் காலத்திற்கும் பொருந்தும். இந்த யுகத்தில் ஒடுக்குபவர்கள் ஏகாதிபத்தியவாதிகள்... ஒடுக்கப்படுபவர்கள் உழைக்கும் வர்க்கத்தினர். (உடனே... நந்திகிராமத்திற்கு போய் விடாதிர்கள்... அது குறித்த என்னுடைய கண்ணோட்டத்தை சந்திப்பில் வெளியிட்டுள்ளேன்.) எனவே, இவ்வாறு ஒரு பிரிவினருக்கு எதிராக நீங்கள் ஆவேசமாக எழுதுவதை பலரும் கொஞ்சலாம். இதில் நீங்களும் மகிழலாம். அது தற்கால கடமையை ஆற்றுவதற்கு உதாவாது. மேலும், திராவிட இயக்கத்தின் அவுட் புட் வேலைப்பில்லைக்காரி என்று ஒரு பதிவினை சந்திப்பில் போட்டுள்ளேன். இன்றைய திராவிட இயக்கங்கள் குறிப்பாக, திமுக, திக., மதிமுக, அதிமுக, இவைகள் எல்லாம் நீங்கள் கடுமையாக எதிர்க்கும் சுளுளு மடியில் கொஞ்சிக் குலாவியதெல்லாம் மறந்து விட்டதா? எனவே, இன்றைக்கும் சரி, கடந்த காலத்திலும் சரி, இந்த இனவாதத்திற்கு ஒரு வர்க்க அடிப்படை உண்டு. அது தொழிலாளி வர்க்கத்தை மையப்படுத்திய அரசியலை அடிப்படையாக கொண்டதில்லை. இதனை விமர்சன ரீதியாக அணுகினால் விவாதம் சிறப்பாக இருக்கும், நம்பூதிரிபாட்டை, பாடு என்று எழுதுவதால் உங்களுக்கு சந்தோஷம் கிடைக்கலாம். நானும் பதிலுக்கு கருநாய்நிதி என்று எழுத முடியும், அல்லது ஈ.வே.ராம(சாமி)நாயக்கர் என்று எழுத முடியும். நோக்கம் குதர்க்கமல்ல. இன்றைய சூழலில் உழைக்கும் மக்களுக்கான விடுதலைக்கு பரந்துப்பட்ட மக்களைத் திரட்டுவதே! மற்றபடி உங்களது எழுத்து நடை சிறப்பாக உள்ளது. இந்த எழுத்தினை வர்க்க எதிரிகள் மீது காட்டினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

 8. சந்திப்பு said...


  வரனையான் உங்களுக்கு கீழை மார்க்சியம், மேலை மார்க்சீயம், உள்நாட்டு மார்க்சீயம் எல்லாம் தெரியும் என்பதை இணையவாசிகள் அறிவர். அதைவிட சி.பி.எம். தலைவர்கள் என்ன செய்கிறார்கள் என்று நன்றாக மோப்பம் பிடிப்பதையும் அறிந்து கொண்டுள்ளனார். இந்த சமூகத்துக்காக நீ என்னப்பா பண்ண போறே............. பேசிக்குனே காலத்தை ஓட்டாதே.... வாயாடின்னு கூப்பிட ஆரம்பித்துடுவாங்க...

 9. மிதக்கும்வெளி said...

  /பார்ப்பனீயத் தந்திரத்தோடு எழுதும் நான் எப்படி பார்ப்பனீயத்தை ஆதரிப்பேன்/

  நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று உங்களுக்காவது புரிகிறதா?

  /பெரியார் காலத்திலேயே இதுபோன்ற விவாதங்கள் நடைபெற்றதுண்டு. ஆனால், உங்களைப் போல் பொய்யையும், அவதூறையும் அப்போது பெரியார் பரப்பவில்லை/

  நான் என்ன பொய்யையும் அவதூறையும் பரப்பினேன் என்று சொல்லுங்களேன்.

  / வறுமை, வேலையின்மை, ஏகாதிபத்திய மேலாதிக்கம், உலகமயத்தாக்கம் போன்ற பல்வேறு தாக்குதல்களுக்கு எதிராக ஒன்றுபடவேண்டிய உழைக்கும் வர்க்கம் ஜாதி, இனத்தின் பெயரால் பிளவுபடுவதை எதிர்க்க வேண்டும் என்பதுதானேயொழிய வேறொன்றும் இல்லை/

  அய்யா, அது ஏற்கனவே பிளவுபட்டிருக்கிறதய்யா, அதை எதிர்க்காமல் நீங்கள் எதை எதிர்க்கப்போகிறீர்கள்? மற்றபடி பெருமளவும் உங்களது வழக்கமான சால்ஜாப்புகளையே சொல்லியிருக்கிறீர்கள். சி.பி.எம் தலைவர்களின் பார்ப்பனீய நடவடிக்கைகள் குறித்து நான் எழுப்பிய கேள்விகள் எதற்கும் நீங்கள் பதில் சொல்லவில்லை. என் எழுத்து நடை குறித்த பாராட்டுக்கு நன்றி. நீங்களும் உங்கள் எழுத்தை பார்ப்பனீயம், இந்துத்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக செலுத்துங்கள் தோழர். திராவிட இயக்கங்களைத் திட்டுவதில் அல்ல.

 10. சந்திப்பு said...


  திராவிட இயக்கங்களைத் திட்டுவதில் அல்ல


  திராவிட இயக்கங்கள் பாசிச சங்பரிவாரத்திற்கு காவடி எடுத்தது குறித்து கண்டும், காணாமல் இருப்பதேன். உண்மையை ஒத்துக்கொள்ள மரத்துப்போன திராவிட சிந்தனை இடம் கொடுக்கவில்லையோ!

 11. மிதக்கும்வெளி said...

  நான் திராவிட இயக்க ஆதரவாளனில்லை. ஆனால் திராவிட இயக்கம் தோன்றுவதற்கான வரலாற்றுத்தேவை இருந்தது என்பதைத்தான் வலியுறுத்துகிறேன். திராவிட இயக்கம் சாதித்த, ஆனால் தமிழகப் பொதுவுடைமை இயக்கம் கோட்டைவிட்ட விடயங்கள் குறித்து சிந்தியுங்கள்.

 12. கரு.மூர்த்தி said...

  //இந்தலட்சணத்தில் பன்மைத்துவங்களை மறுத்து ஒற்றைத்தன்மையை வலியுறுத்தும் பாசிசப்போக்கிலிருக்கும்//

  காசையும் வாங்கீட்டு இப்படி துபாய்க்கு துரோகம் பண்ணலாமா ? ஒற்றைதன்மையை வலியுறுத்தும் பாசிட்ஸ்ட் என்று நீங்களும் கொடபோல்ட்டுகளை இழிவு படுத்தலாமா அண்ணே ?

  ( எங்க பாலாவை எங்கடா காணோம் ?)

 13. Anonymous said...

  dsanthipukku
  -----------
  இன்னா தலிவா யாரு இன்னா கேட்டாலும் ஒரே
  மாரி சொல்லிகினே கீர அரசு பால்ராஜ் கேட்ட
  கேள்விக்கு பதிலே சொல்லாம எஸ்கேப்பு ஆயிட்ட.

  அப்பால
  நான் தான் உண்மையான
  கம்னிஸ்டு,கம்னிஸ்டுனு வாயி வலிக்க
  நீயே கத்திகினுருக்க,
  அங்க இன்னாடானா
  ஒரு r s s அரை டவுசரு கம்யூனிச்டுகளயும்,
  மர்க்சையும் திட்டிக்கினுருக்கான்,
  வேலைக்காகாதுன்ரான்,
  ஒன்னான்ட இத்த
  அன்னிக்கே லெனின் தோழரும் சொல்லிக்கினாரு
  ஆனாலும் நீ இத்த கண்டுக்கவே இல்லியே
  இன்னா தலிவா மேட்டரு.
  ஒன் வாய கொஜ்சம் தொரயேன்
  யெல்லாரும் காத்திகினுருக்காங்க