நண்பர்களே, நாகரீகமாக நடந்துகொள்ளுங்கள்!
வரவர தமிழ்மணத்தைப் படிப்பதற்கே வெறுப்பாக இருக்கிறது.'சாதுவான பிராமணர்களை'ப் பெரியாரிஸ்ட்களும், திராவிட இயக்க ஆதரவாளர்களும், நக்சல்பாரிகளும் கண்டமேனிக்கு வசைபாடுகிறார்கள். தாக்குதல் நடத்துகிறார்கள். சாதி தேவையா என்று 'அர்த்தமில்லாத' விவாதங்களைக் கிளப்புகிறார்கள். பலசமயங்களில் உண்மைகளையும் முன்வைத்துவிடுகிறார்கள்.

இதையெல்லாம் மறுக்க அரவிந்தன்நீலகண்டன் போன்ற 'சுயம்கரசேவை அறிவுஜீவிகள்' (கெட்டவார்த்தை ஏதும் இல்லீங்ண்ணா) ஆதாரங்களைக் 'கண்டுபிடிப்பதற்குள்' படாதபாடு பட்டுவிடுகிறார்கள். சமயங்களில் எந்த ஆதாரமும் கிடைக்காவிட்டால் தானாகவே ஆதாரங்களை 'உருவாக்கவேண்டியிருக்கிறது'. மேலும் இல்லாத சாதிக்கு இவர்கள் இட ஒதுக்கீடும் கேட்கிறார்கள். இந்த நியாயத்தைக் கேட்கப்போனால் அப்பாவிப்பிராமணர்களின் மீது தாக்குதல் தொடுக்கப்படுகிறது.

இதற்காகப் பார்ப்பனர்களை விட அதிகமும் சங்கடப்படுபவர்கள் நடுநிலைவாதிகள்தான். இந்த நடுநிலைவாதிகளில் பெரும்பாலோருக்கு அய்ம்பது வயதுக்கு மேல் ஆகிவிட்டது. எனவே இந்தக் கடுமையான தாக்குதலினால் அவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரவும் வாய்ப்பிருக்கிறது.

எனவே நான் மனம் திருந்திவிட்டேன். இந்த வசைகாரக் கும்பலில் சேர்ந்து நானும் பார்ப்பனர்களையும் இந்துமதத்தையும் வசைபாடியதால் ஏற்கனவே 'பிரமமஹத்தி தோஷம்' பிடித்திருக்கிறது. மேலும் பிரம்மத்தையே காப்பவர்களாகிய பிராமணர்களை வணங்குவதும் சேவைபுரிவதுமான என் சூத்திரக் கடமையிலிருந்து தவறிவிட்டதால் எனக்கு நரகத்திற்கு மட்டும்தான் அட்மிஷன் சீட் கிடைக்கும். அங்கேயும் எனக்கு முன்னால் அசுரன், வரவணை, ராஜ்வனஜ், கருப்பண்ணே, முத்துதமிழினி ஆகியோர் 'ஹிட்லிஸ்டில் இருப்பதால் அங்கேயும் எனக்கு வெயிட்டிங் லிஸ்ட்தான்.

சரி, இந்த வெங்காயத்தலைவன் ஈ.வெ.ராவிஸ்ட்களும், நக்சல்பாரி நாசகாரக்கும்பலும் திரா'விட'ப்பெத்தடின்களும் ஏன் பார்ப்பனர்களையும் இந்துமதத்தையும் தாக்குகிறார்கள். அதில் ஏதாவது அர்த்தமிருக்கிறதா?.

இப்போது எங்கே சாதி இருக்கிறது? ஏதோ இட ஒதுக்கீடு என்னும் அநியாயம் இன்னும் நடந்துகொண்டிருப்பதால் சர்டிபிகேட்டில் மட்டும் சாதி இருக்கிறது. ஒரு தலித்தும் முஸ்லீமும் இந்தியாவின் முதல் குடிமகனாகவே வர முடிகிறது. ஏதோ கேவலம் சில பஞ்சாயத்துபோர்டுகளில் மட்டும்தான் தலைவராக வர முடியாது. தீண்டாமை என்பது பாவச்செயல் என்று பாடப்புத்தகத்திலேயே போட்டாகிவிட்டது. இப்போது எல்லாத் தொழிலையும் எல்லாரும் பார்க்கிறார்கள். நீங்கள் கொஞ்சம் குளிச்சு கிளிச்சு சுத்தபத்தமா இருந்தா பார்ப்பனர்கள் தங்கள் பெண்களைக் கூட மணம் முடித்துவைக்கத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் இன்னும் இந்த இருபதாம் நூற்றாண்டிலும் சாதி, பார்ப்பனீயம் என்று அலறுபவர்கள் நிச்சயம் மனநோயாளிகளாகத்தான் இருக்க முடியும்.

இந்துமதம்தான் எவ்வளவு உயர்ந்த மதம். இஸ்லாமிய மதம் தன் மதத்தை நம்பாதவர்களைக் 'காபீர்கள்' என்கிறது. கிறித்துவமோ கிறித்துவை நம்பாதவர்களைப் 'பாவிகள்' என்கிறது. இந்த ஆபிரகாமிய மதங்கள் தங்கள் மதங்களைச் சாராதவர்களைத்தான் கண்டமேனிக்குத் திட்டுகின்றன. ஆனால் பெருந்தன்மையுள்ள இந்துமதம் மட்டும்தான் தன்னுடைய மதத்தைச் சேர்ந்தவர்களில் ஒரு பெரும்பகுதியினரை 'வேசிமக்கள்' என்று பிரியத்துடன் திட்டுகிறது.

ஆர்.எஸ்.எஸ் ஒரு வன்முறை அமைப்பு என்று வாய்கூசாமல் பிரச்சாரம் செய்கிறார்கள் ஹிந்துவிரோதிகள். உண்மையில் ஆர்.எஸ்.எஸ் ஒரு மதவாத அமைப்போ வன்முறை இயக்கமோ அல்ல. பல 'ஹராம்'களை இழைத்துள்ள முஸ்லீம்களையும் பாவங்களைச் செய்து புழுங்கிக் கொண்டிருக்கும் கிறித்துவப் பாவிகளையும் கூண்டோடு அவரவர்களின் சுவனத்திற்கும், பரமண்டலத்திற்கும் அனுப்பும் தெய்வீகப்பணியையே தேசப்பணியாக ஆற்றிக்கொண்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ்.

ஆனால் இத்தனை விளக்கங்களைச் சொன்னபிறகும் தமிழர்மாமா ஈ.வெ.ராவின் அடிவருடிகளும் சர்வதேச மாமா மாவோவின் அடிவருடிகளும் திருந்துவார்களா என்றால் கிடையாது. அப்படியென்றால் இவர்களுக்கு தர்மம் கிடையாது என்றுதானே அர்த்தம்?. எனவே திராவிடசுண்டக்கஞ்சிகளே (சுதேசி சரக்கு), காட்டுக்குள் வாழும் நக்சல்பாரிகளே நீங்கள் விமர்சிப்பதாக இருந்தாலும் சாதியையும் பார்ப்பனீயத்தையும் பார்ப்பனர்களையும் இந்துமதத்தையும் 'மாமா', 'வெங்காயத்தலைவன்' 'நக்குவது' போன்ற ஆரோக்கியமான வார்த்தைகளால் விவாதங்களை எதிர்கொள்ளாமல் அநாகரீகமாகத் திட்டுவது உங்கள் அரிப்புத்தான். நீங்கள் திட்டுவதை அகண்டபாரதம் அமையும்வரை தடுக்கமுடியாது. ஆனால் அதுவரையிலாவது கொஞ்சம் கீழ்க்கண்டவாறு 'நாகரீகமாகவும்' 'மரியாதையாகவும்' திட்டுங்கள்.

மரியாதைக்குரிய பாப்பாரப் பன்னாடை.....அவர்களே!
அன்புள்ள நாதாரிநாயே,
கைபர்கோலன் கணவாய் வழியாக வந்த வணக்கத்துக்குரிய வந்தேறியே,
மகத்தான கழிசடை இந்துமதம்
உன்னதமான கொலைகார ஆர்.எஸ்.எஸ் இயக்கம்...

32 உரையாட வந்தவர்கள்:

 1. மிதக்கும்வெளி said...

  அய்யாமார்களே, அம்மாமார்களே, என் பழைய வார்ப்புரு (என்ன தமிழடா இது?)கண்ணை உறுத்துகிறது என்று பலரும் தெரிவித்ததால் அதை மாற்றியுள்ளேன். இதாவது உறுத்தாமலிருக்கிறதா என்று தெரியப்படுத்துங்கள்.

 2. Anonymous said...

  அடங்கமாட்டீரா நீர் ? குலுங்கி சிரித்து கூப்பாடு போடுமளவுக்கு போனது.

 3. லக்கிலுக் said...

  என்னவோய்!

  எகத்தாளமா பேசுறீர்!
  நரகத்துக்கு முன்பதிவு செய்கிறீரோ?

  நீர் செய்யும் பாவத்தைப் போக்க
  ஒரு அந்தணனுக்கு பசுதானம் கொடுக்கவும்.

  இப்படிக்கு
  லக்கிலுக் அய்யர்

 4. வெங்காயம் said...

  வார்ப்புரு அருமை!

  வஞ்சப் புகழ்ச்சியும்தான்!:)

 5. பொன்ஸ்~~Poorna said...

  இந்த டெப்ளேட் நல்லாக் கீதுபா.. இப்டியே ரீஜண்டா வச்சிக்க.. ;)

  //அங்கேயும் எனக்கு முன்னால் அசுரன், வரவணை, ராஜ்வனஜ், கருப்பண்ணே, முத்துதமிழினி ஆகியோர் 'ஹிட்லிஸ்டில் இருப்பதால்//
  எங்க யெஸ்.பா லிஸ்டில் காணமே? ஆர்.ஏ.சிக்கு "முன்னேறி"ட்டாரா?!

 6. குழலி / Kuzhali said...

  //எனக்கு நரகத்திற்கு மட்டும்தான் அட்மிஷன் சீட் கிடைக்கும். அங்கேயும் எனக்கு முன்னால் அசுரன், வரவணை, ராஜ்வனஜ், கருப்பண்ணே, முத்துதமிழினி ஆகியோர் 'ஹிட்லிஸ்டில் இருப்பதால் அங்கேயும் எனக்கு வெயிட்டிங் லிஸ்ட்தான்.
  //
  லிஸ்ட்ல என் பெயரில்லையே, ஹைய்யா அப்போ நான் சொர்கத்துலயா? :-)

 7. முத்துகுமரன் said...

  //எனக்கு நரகத்திற்கு மட்டும்தான் அட்மிஷன் சீட் கிடைக்கும். அங்கேயும் எனக்கு முன்னால் அசுரன், வரவணை, ராஜ்வனஜ், கருப்பண்ணே, முத்துதமிழினி ஆகியோர் 'ஹிட்லிஸ்டில் இருப்பதால் அங்கேயும் எனக்கு வெயிட்டிங் லிஸ்ட்தான்.//

  நம்ம பேரும் லிஸ்ட்ல இருக்கானு செத்த பாத்து சொல்லுங்க சாமியோவ்!

 8. thiru said...

  சூடா தான் இருக்கீங்க. :) சில சுடும் உண்மைகளை எழுதியிருக்கீங்க திவாகர்.

  'வர்ணம், சாதி எல்லாம் இருக்குங்களா? அதெல்லாம் குணத்தின் அடிப்படையில் வருவது தானே?' இப்படியும் கேட்க ஆட்கள் இருக்காங்க.

 9. சிறில் அலெக்ஸ் said...

  வார்ப்புருவெல்லாம் நல்லாத்தான் இருக்குது...

 10. மீ.அருட்செல்வம்,மாநில செயலாளர்,தமிழ்நாடு மாநில அஞ்சாநெஞ்சன் அழகிரியார் அமைப்பு சாரா தொழிலாளர் முன்னேற்ற சங்கம், மதுரை. said...

  பழைய அயிட்டம் ரத்தக்களரியா
  இருந்துச்சு.இது சூப்பரா இருக்குண்ணே.

 11. rajavanaj said...

  //இதற்காகப் பார்ப்பனர்களை விட அதிகமும் சங்கடப்படுபவர்கள் நடுநிலைவாதிகள்தான். இந்த நடுநிலைவாதிகளில் பெரும்பாலோருக்கு அய்ம்பது வயதுக்கு மேல் ஆகிவிட்டது. எனவே இந்தக் கடுமையான தாக்குதலினால் அவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரவும் வாய்ப்பிருக்கிறது.//

  //எனவே நான் மனம் திருந்திவிட்டேன்//


  //இந்துமதம்தான் எவ்வளவு உயர்ந்த மதம். இஸ்லாமிய மதம் தன் மதத்தை நம்பாதவர்களைக் 'காபீர்கள்' என்கிறது. கிறித்துவமோ கிறித்துவை நம்பாதவர்களைப் 'பாவிகள்' என்கிறது. இந்த ஆபிரகாமிய மதங்கள் தங்கள் மதங்களைச் சாராதவர்களைத்தான் கண்டமேனிக்குத் திட்டுகின்றன. ஆனால் பெருந்தன்மையுள்ள இந்துமதம் மட்டும்தான் தன்னுடைய மதத்தைச் சேர்ந்தவர்களில் ஒரு பெரும்பகுதியினரை 'வேசிமக்கள்' என்று பிரியத்துடன் திட்டுகிறது.//

  //மரியாதைக்குரிய பாப்பாரப் பன்னாடை.....அவர்களே!
  அன்புள்ள நாதாரிநாயே,
  கைபர்கோலன் கணவாய் வழியாக வந்த வணக்கத்துக்குரிய வந்தேறியே,
  மகத்தான கழிசடை இந்துமதம்
  உன்னதமான கொலைகார ஆர்.எஸ்.எஸ் இயக்கம்...//

  என்னே மரியாதை! என்னே மரியாதை!?

  நீங்க சொல்லாட்டியும் தெரியுமே அவிங்க ரொம்ப நல்லவங்க! பாத்தீங்களா பிஞ்ச சீமாத்துல அடிச்சும் ஒன்னுமே ஆகாத மாதிரி தொடச்சுப் போட்டுட்டு போயிட்டே இருக்காங்க!

  நம்ம நீலகண்டன் கைப்புள்ள மாதிரி - அவங்களே ஏத்திவுட்டு ஏத்திவுட்டு இப்ப ரணகளமா அலையறாரு

 12. மிதக்கும்வெளி said...

  அடப்பாவிகளா! நரகத்திற்குப் போக இவ்வளவு போட்டியா? பேசாம ஒரு நுழைவுத்தேர்வுப் பயிற்சி மய்யம் ஆரம்பிச்சுடவேண்டியதுதான்.

 13. மிதக்கும்வெளி said...

  / இப்டியே ரீஜண்டா வச்சிக்க.. ;)
  /

  அப்ப இதுக்கு முன்னால மொள்ளமாறித்தனமா இருந்ததுங்கிறீங்களா?

 14. மிதக்கும்வெளி said...

  /வார்ப்புருவெல்லாம் நல்லாத்தான் இருக்குது/

  அப்படின்னா..?

 15. அருண்மொழி said...

  எத்தனை mg திராவிட பெத்தடின் ஏற்றி இருக்கின்றீர்? :-)

 16. nagoreismail said...

  சகோதரர் மிதக்கும் வெளி அவர்களே, கருத்து மிக்க எழுத்துக்கள் வழக்கம் போல் செம்மையாக உள்ளது,
  இந்த வார்ப்புரு (அப்படி என்றால் என்ன?) கண்களை உறுத்த வில்லை, கண்களை கவருகிறது.
  'காபிர்கள்' என்றால் நிராகரிப்பவர்கள் என்று அர்த்தம். எதை நிராகரிப்பவர்கள்? இறைவனை நிராகரிப்பவர்கள் அல்ல உண்மையில் இறைவனின் தன்மைகள் என்று எதையெல்லாம் இஸ்லாம் கூறுகிறதோ அதை நிராகரிப்பவர்கள். அதாவது 'கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்' என்று கூறுவார்கள். இறைவனை யாரும் பார்த்ததில்லை. உதாரணமாக நாம் வெளிநாட்டிற்கு செல்ல பயன்படுத்தும் கடவுச்சீட்டில் நம்முடைய புகைப்படத்தை எடுத்து விட்டு வேறு ஒரு நபருடைய புகைப்படத்தை ஒட்டி ஒருவர் வெளிநாடு செல்கிறார் என்று வையுங்கள், இது குற்றம் இல்லையா? இதையே தான் இறைவனும் கேட்கிறான், இறைவனுக்கு என்று எந்த உருவமும் இல்லாத போது கண்ட உருவத்தையும் வரைந்து இது தான் கடவுள் என்று கூறுவது ஏமாற்றுத்தனம் இல்லையா? இத்தகைய குற்றத்தை செய்கிறவர்களை இறைவன் என்ன அழகாக நிராகரிப்பவர்கள் என்று மட்டும் கூறி ஒரு வகையில் கவுரவப்படுத்தியிருக்கிறான் பாருங்கள் - 'காபிர்கள்' என்ற வார்த்தையை படிக்கும் போது இதை எழுத வேண்டும் என்று தோன்றியது, அதனால் எழுதினேன், பதிவிற்கு சம்மந்தம் இல்லாமல் இருந்தால் நீக்கி விடவும். -நாகூர் இஸ்மாயில்

 17. Anonymous said...

  ஏண்டா அம்பிகளா, திருந்தமாட்டேளா ?

 18. புதியவன் said...

  படிக்க ஆரம்பிக்கசொல்ல பயந்தே போயிட்டேனுங்க!

  நம்ம பின்னூட்ட புகழ் பாலாமாமா உங்க வலையை ஹேக் பண்ணிட்டாரோன்னு :D

  வார்ப்புரு மாற்றத்திற்கு நன்றி - இப்பத்தான் நெருப்பு நரில படிக்கமுடியுது. :)

 19. Anonymous said...

  //பேசாம ஒரு நுழைவுத்தேர்வு //
  அதில் இட ஒதுக்கீடு உண்டா? ;)

 20. செல்வநாயகி said...

  வார்ப்புரு நல்லாக் கீது.

  //அடப்பாவிகளா! நரகத்திற்குப் போக இவ்வளவு போட்டியா? பேசாம ஒரு நுழைவுத்தேர்வுப் பயிற்சி மய்யம் ஆரம்பிச்சுடவேண்டியதுதான்///

  :))

 21. நல்லடியார் said...

  //இந்துமதம்தான் எவ்வளவு உயர்ந்த மதம். இஸ்லாமிய மதம் தன் மதத்தை நம்பாதவர்களைக் 'காபீர்கள்' என்கிறது. கிறித்துவமோ கிறித்துவை நம்பாதவர்களைப் 'பாவிகள்' என்கிறது. இந்த ஆபிரகாமிய மதங்கள் தங்கள் மதங்களைச் சாராதவர்களைத்தான் கண்டமேனிக்குத் திட்டுகின்றன. ஆனால் பெருந்தன்மையுள்ள இந்துமதம் மட்டும்தான் தன்னுடைய மதத்தைச் சேர்ந்தவர்களில் ஒரு பெரும்பகுதியினரை 'வேசிமக்கள்' என்று பிரியத்துடன் திட்டுகிறது.//

  வெளியில் மிதந்து கொண்டிருப்பவரே! (புகழாரம் உபயம்: சாது.அரவிந்தன் நீலகண்டன்:)

  காஃபீர் என்றால் ஓரிறையை ஏற்காதவர்களைக் குறிக்கும் அரபுச் சொல். மற்றபடி பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. இதுபற்றி காஃபீர் என்றால் கேவலமா? என்ற என்பதிவில் விளக்கியிருக்கிறேன்.

  ஒரு காஃபீர்,ஓரிறையை ஒப்புக் கொண்டு அடுத்த நிமிடமே முஸ்லிமாகி விடலாம்.பாவம் சூத்திரர்கள் பாடுதான் திண்டாட்டம்! சாகும்வரை சூத்திரனாகவே சாகவேண்டும்.வேதம் படித்தால் 'காதில் மட்டும்' ஈயம் காய்ச்சி ஊற்றப்படும். 'காதில் மட்டும்' என்ற வார்த்தையைக் கவனித்தால் மநுநீதி எவ்வளவு மனிதாபிமானது என்பது புலப்படும்.(:-)

  வார்ப்புரு நல்லாயிருக்குன்னு சொல்ல வந்தேன். வாய்குழறி என்னென்னமோ சொல்லிட்டேன். :-)))

 22. kadalai said...

  hi,

  I like your blog. I like the girl in your website too...

  I like kadalai!

  R u brahmin? why do u want to go to hell? marry a brahmin girl u can live in heaven.

  kadal alai

 23. Anonymous said...

  அம்பி,நன்னா கிண்டலாத்தான் இருக்கு.ஆனா இதெல்லாம் எங்களாவுக்கு உறைக்காது.எங்க விஷ(ய)மே வேறையோன்னா!
  கெஞ்சினால் மிஞ்சுவோம்
  மிஞ்சினால் கெஞ்சுவோம்!
  டாக்டர் நாயர் சொன்ன மாதிரி
  நாங்க நல்ல வேலையாள்
  கொடுமையா வேலைவாங்குவோம்
  கூட இருந்தே கழுத்தை அறுப்போம்.

  எங்க அம்மாவையே போடி வாடின்னுதான் சொல்வோம்.
  ஏதோ எடக்கா பொன்னுங்கோ நடந்திண்டா வெளியே தெரியாமா ஒரு சொம்பு ஜல்த்தைத் தெளித்து உள்ளே இட்டுண்டுவோம்.
  சாமி கோவில்லாம் சும்மா வருமாந்த்துக்குத்தான்.நாளைக்கு சூத்ராளா கோயில்லாம் வந்துட்டா சாமியாவது பூதமாவதுன்னு சொல்லிடுவோம்.
  எங்க பொம்மனாட்டிகள் அம்பேத்கர்லருந்து,பாதி தமிழ்நடிகர்கள் வரை எல்லோரையுங் கட்டிண்டு நன்னா வாழ்ரா!அதுல சில ஜடங்கள் மண்ணல்லிப் போடப்பாக்குறா!பாவம் அந்தப் பொம்மனாட்டிக்கெல்லாம் எந்த ஜடம் வரதட்சனைத்தர ரெடியா இருக்கா?
  அந்தக் கால்த்து வெள்ளைக்காரன் முதல் இந்தக் கால்த்துக் கொள்ளைக்காரன் வரை எங்களவா எப்படி வேலை,புரமோசன் எல்லாம் வங்குறதுன்னு நன்னா தெரிஞ்சு வைச்சுருக்கா.
  சும்மா திட்டாதேங்கோ.எங்களவா மாறமாட்டா.நீங்க தான் அடிச்சுண்டு சாவேள்.

 24. கருப்பு said...

  //இதையெல்லாம் மறுக்க அரவிந்தன்நீலகண்டன் போன்ற 'சுயம்கரசேவை அறிவுஜீவிகள்' (கெட்டவார்த்தை ஏதும் இல்லீங்ண்ணா) ஆதாரங்களைக் 'கண்டுபிடிப்பதற்குள்' படாதபாடு பட்டுவிடுகிறார்கள்.//

  பாவம்யா அரைவிந்தன். இப்படியா போட்டு தாக்குவது? செத்து கித்து போய்டப் போறான்!!!

  //எனக்கு நரகத்திற்கு மட்டும்தான் அட்மிஷன் சீட் கிடைக்கும். அங்கேயும் எனக்கு முன்னால் அசுரன், வரவணை, ராஜ்வனஜ், கருப்பண்ணே, முத்துதமிழினி ஆகியோர் 'ஹிட்லிஸ்டில் இருப்பதால் அங்கேயும் எனக்கு வெயிட்டிங் லிஸ்ட்தான்.
  //

  கருப்பு அண்ணாவையும் நரகத்துக்கு அனுப்பப் போறானுங்களா? பேஷா அனுப்பட்டும். அங்கும்போய் நம்ம பெரியாரியக் கொள்கைகளைப் பேசுவோம். எனக்கு முன்னே அங்கே காஞ்சி காமகேடி ஊத்திவாயன் சுப்ரமணி இருப்பானேய்யா!

  நோண்டு, சைபர்பிராமனா கிச்சு, அரைவிந்தன், மூசு, மடராமன், மாங்காமரத்தான், கால்மாரி இந்த கும்பல் எல்லாம் டிராபிக் ஜாம்ல மாட்டாம ஸ்ரெயிட்டா சொர்க்கத்துக்கு போறாய்ங்களா?

 25. said...

  //இதையெல்லாம் மறுக்க அரவிந்தன்நீலகண்டன் போன்ற 'சுயம்கரசேவை அறிவுஜீவிகள்' (கெட்டவார்த்தை ஏதும் இல்லீங்ண்ணா) ஆதாரங்களைக் 'கண்டுபிடிப்பதற்குள்' படாதபாடு பட்டுவிடுகிறார்கள். சமயங்களில் எந்த ஆதாரமும் கிடைக்காவிட்டால் தானாகவே ஆதாரங்களை 'உருவாக்கவேண்டியிருக்கிறது'//

  :-))))))))))))

  //இதற்காகப் பார்ப்பனர்களை விட அதிகமும் சங்கடப்படுபவர்கள் நடுநிலைவாதிகள்தான். இந்த நடுநிலைவாதிகளில் பெரும்பாலோருக்கு அய்ம்பது வயதுக்கு மேல் ஆகிவிட்டது. எனவே இந்தக் கடுமையான தாக்குதலினால் அவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரவும் வாய்ப்பிருக்கிறது.//

  //எனவே நான் மனம் திருந்திவிட்டேன். இந்த வசைகாரக் கும்பலில் சேர்ந்து நானும் பார்ப்பனர்களையும் இந்துமதத்தையும் வசைபாடியதால் ஏற்கனவே 'பிரமமஹத்தி தோஷம்' பிடித்திருக்கிறது. மேலும் பிரம்மத்தையே காப்பவர்களாகிய பிராமணர்களை வணங்குவதும் சேவைபுரிவதுமான என் சூத்திரக் கடமையிலிருந்து தவறிவிட்டதால் எனக்கு நரகத்திற்கு மட்டும்தான் அட்மிஷன் சீட் கிடைக்கும். அங்கேயும் எனக்கு முன்னால் அசுரன், வரவணை, ராஜ்வனஜ், கருப்பண்ணே, முத்துதமிழினி ஆகியோர் 'ஹிட்லிஸ்டில் இருப்பதால் அங்கேயும் எனக்கு வெயிட்டிங் லிஸ்ட்தான்.//

  அப்ப நானு எனக்கும் இடமில்லையா?

  //இப்போது எங்கே சாதி இருக்கிறது? ஏதோ இட ஒதுக்கீடு என்னும் அநியாயம் இன்னும் நடந்துகொண்டிருப்பதால் சர்டிபிகேட்டில் மட்டும் சாதி இருக்கிறது. ஒரு தலித்தும் முஸ்லீமும் இந்தியாவின் முதல் குடிமகனாகவே வர முடிகிறது. ஏதோ கேவலம் சில பஞ்சாயத்துபோர்டுகளில் மட்டும்தான் தலைவராக வர முடியாது.//

  //இந்துமதம்தான் எவ்வளவு உயர்ந்த மதம். இஸ்லாமிய மதம் தன் மதத்தை நம்பாதவர்களைக் 'காபீர்கள்' என்கிறது. கிறித்துவமோ கிறித்துவை நம்பாதவர்களைப் 'பாவிகள்' என்கிறது. இந்த ஆபிரகாமிய மதங்கள் தங்கள் மதங்களைச் சாராதவர்களைத்தான் கண்டமேனிக்குத் திட்டுகின்றன. ஆனால் பெருந்தன்மையுள்ள இந்துமதம் மட்டும்தான் தன்னுடைய மதத்தைச் சேர்ந்தவர்களில் ஒரு பெரும்பகுதியினரை 'வேசிமக்கள்' என்று பிரியத்துடன் திட்டுகிறது.//

  //முஸ்லீம்களையும் பாவங்களைச் செய்து புழுங்கிக் கொண்டிருக்கும் கிறித்துவப் பாவிகளையும் கூண்டோடு அவரவர்களின் சுவனத்திற்கும், பரமண்டலத்திற்கும் அனுப்பும் தெய்வீகப்பணியையே தேசப்பணியாக ஆற்றிக்கொண்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ்.//

  //மரியாதைக்குரிய பாப்பாரப் பன்னாடை.....அவர்களே!
  அன்புள்ள நாதாரிநாயே,
  கைபர்கோலன் கணவாய் வழியாக வந்த வணக்கத்துக்குரிய வந்தேறியே,
  மகத்தான கழிசடை இந்துமதம்
  உன்னதமான கொலைகார ஆர்.எஸ்.எஸ் இயக்கம்...//

  கலக்கிபுட்டீங்க....

  தோழமையுடன்
  ஸ்டாலின்

 26. கார்மேகராஜா said...

  என்னுடையது வெயிட்டிங் லிஸ்ட் 48.

 27. லிவிங் ஸ்மைல் said...

  //எனக்கு நரகத்திற்கு மட்டும்தான் அட்மிஷன் சீட் கிடைக்கும். அங்கேயும் எனக்கு முன்னால் அசுரன், வரவணை, ராஜ்வனஜ், கருப்பண்ணே, முத்துதமிழினி ஆகியோர் 'ஹிட்லிஸ்டில் இருப்பதால் அங்கேயும் எனக்கு வெயிட்டிங் லிஸ்ட்தான். //

  வூடே சொப்தானு, எவருக்கு எடுமு உந்தோ லேதொ நங்கு எடுமு காவல

  ம்ஹூம்...

  ஆந்த்ரா மாலி சார்பாக, லிவிங் ஸ்மைல் (எனக்கும் தான்)

 28. சென்ஷி said...

  நான் சைடு கேப்ல சொர்க்கத்துக்கு வழி காட்டுறேன்.
  யாரெல்லாம் வர்றீங்க.. வரவனை கூட லைன் கட்டுங்க.
  தலைக்கு ஃப்ரீ (அதான் நம்ம பாலாபாய்)

  சென்ஷி

 29. - யெஸ்.பாலபாரதி said...

  //நான் சைடு கேப்ல சொர்க்கத்துக்கு வழி காட்டுறேன்.
  யாரெல்லாம் வர்றீங்க.. வரவனை கூட லைன் கட்டுங்க.
  தலைக்கு ஃப்ரீ (அதான் நம்ம பாலாபாய்)

  சென்ஷி

  //

  ஆஹா... தம்பி உள் உள்ளம் கண்டு வெம்புது மனம். ஆனா என்ன பன்றது...?

  நான் ஏற்கனவே ரிசர்வேசன் பண்ணி, அது கன்பார்ம் வேற ஆகிடுச்சேப்பா.
  நீங்க எல்லாம் ரொப்ப லேட்டு. :)

 30. Anonymous said...

  உங்களை வியர்டு ஆட்டத்துக்கு அழைத்திருக்கேன், வரவும்.

 31. பாரதி தம்பி said...

  //வூடே சொப்தானு, எவருக்கு எடுமு உந்தோ லேதொ நங்கு எடுமு காவல //

  நேக்கு ஒண்ணும் வெளங்கல சாமி..கொஞ்சம் டீட்டெய்லா ஷொல்றேளா..?

 32. கரு.மூர்த்தி said...

  பாருங்க , துலுக்கனுக தூக்கீட்டு வந்துட்டாங்க எங்கப்பன் குதிருக்குள்ள இல்லைன்னு