ஈழப்போராட்டமும் இந்திய அரசியலும் - 2சரி, இப்போது ஜெயலலிதா, கருணாநிதி அரசியலுக்கு வருவோம். இங்கிருக்கும் பார்ப்பனர்களுக்கு ஒரு பைத்தியக்காரனத்தனமான பயம் இருக்கிறது. தமிழீழம் அமைந்துவிட்டால், தனித்தமிழ்நாடு அமைந்துவிடும், தங்கள் கருத்தியல் அடிப்படையான இந்தியத்தேசியம் காணாமல்போகும் என்பதுதான் அது. இப்படியெல்லாம் நடக்க ஒரு தர்க்கரீதியான நியாயமும் கிடையாது. ஆனாலும் அவர்களுக்கு இருண்டதெல்லாம் பேய்தான். ஜெயலலிதா ஒரு பக்கா பார்ப்பனர். எனவே அவர் ஈழத்திற்கு எதிராய் இருப்பதில் ஒரு ஆச்சரியமும் இல்லை.கருணாநிதியைப் பொருத்தவரை அவ்வளவு மோசமில்லையென்றாலும்கூட அவருக்கு அடிப்படையில் இரண்டு சிக்கல்கள் இருப்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
ஒன்று உளவியல்சிக்கல். அடிப்படையில் அவர் கோழை. ஒருவேளை சங்கராச்சாரியைக் கைது செய்து 'புரட்சி' செய்ததைப் போல ஜெயலலிதா நாளை பிரபாகரனை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தாலும் செய்யலாம். ஆனால் கருணாநிதி எப்போதும் அப்படி மாறமாட்டார். ஈழப்பிரச்சினை என்றில்லை, எல்லாப்பிரச்சினைகளுக்கும் அவரிடம் இருப்பது வழவழா கொழாகொழா தீர்வுகள்தான்.


இன்னொன்று அவர்க்கு இருக்கும் அரசியல் சிக்கல். அவர் ஒன்றும் அதிகாரத்தை மறுத்துவிட்டு மகக்ளுக்காக துப்பாக்கியேந்திப் போராடும் நக்சல்பாரியல்ல, சாதாரண ஓட்டுப்பொறுக்கும் அரசியல்வாதி. அவர் ஆட்சிக்கு வந்துவிட்டாலே 'விடுதலைப்புலிகள் ஊடுருவல்' என்று கூக்குரலிடுவதற்காகவே துக்ளக், தினமலர் போன்ற பார்ப்பனப் பத்திரிகைகள் இருக்கின்றன.


இன்னொன்று உளவுத்துறை மற்றும் காவல்துறையிலுள்ள பார்ப்பன அதிகாரிகள். நேற்று ஒரு ஈழத்தமிழ் நண்பர் சொன்னார், "பிரணாப் முகர்ஜி இந்தியாவிலுள்ள ஈழத்தமிழர்களுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்" என்று. நான் குழம்பிப்போனேன். காலையில் தினத்தந்தி பார்த்தபிறகுதான் தெரிந்தது அவர் பிரணாப்முகர்ஜியல்ல, போலிஸ் டி.ஜி.பி முகர்ஜி. ஆனால் எந்த முகர்ஜியாக இருந்தாலும் இதைத்தான் செய்வார்.

இத்தைகய நெருக்கடிகள் வெளியிலிருந்து வர வர கருணாநிதி ஒடுக்குமுறையைக் கடுமையாக்குவார். இது ஈழத்தமிழர்களுக்குத்தான் என்றில்லை. கோவையில் காவலர் செல்வராஜ் படுகொலை,அதன்பிறகு இந்துத்துவ வெறியர்களும் போலீசும் சேர்ந்து முஸ்லீம்களின்மீது நடத்திய தாக்குதல் ஆகியவைகளைத் தொடர்ந்து கருணாநிதி முஸ்லீம் மக்களைத்தான் கடுமையாக ஒடுக்கினார். எனவே கருணாநிதி ஈழப்போராட்டத்தை ஆதரிக்கவில்லை என்றோ ஈழ அகதிகளுக்கு ஒன்றும் செய்யவில்லை என்றோ கூறுவதும் எதிர்பார்ப்பதும் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் முட்டாள்தனமாகும்.

ஈழப்பிரச்சினையைப் பொறுத்தவரை காட்டப்படும் இன்னொரு பூச்சாண்டி ராஜிவ்காந்தி கொலைக்குப் பிறகு தமிழக மக்கள் ஈழத்தமிழர்களை வெறுக்கத் தொடங்கிவிட்டார்கள் என்பது.முதலில் ராஜிவ் இறந்து பல ஆண்டுகளாகியும் இன்னும் ஆண்டுதோறும் புலிகள் மீதான தடையை நீட்டித்துக்கொண்டிருப்பதே அபத்தமானது. காந்தியைக் கொன்ற வினாயக்நாதுராம்கோட்சே ஒரு ஆர்.எஸ்.எஸ்காரன். ஆர்.எஸ்.எஸ் அப்போது தடைசெய்யப்பட்டது. பிறகு அப்போது பாதுகாப்பு அமைச்சராயிருந்த வல்லபாய் படேல் என்னும் பார்ப்பனச் சர்வாதிகாரியின் முயற்சியால் அந்தத் தடை நீக்கப்பட்டது.

பாபர்மசூதி இடிப்புக்குப் பின்னும் தடைசெய்யப்பட்டது ஆர்.எஸ்.எஸ். பிறகு நீதிமன்றம் தடையை நீக்கியது. குஜராத்தில் 3000 முஸ்லீம்களைக் கொன்ற, கோவையில் நூற்றுக்கணக்கான முஸ்லீம்களைக் கொன்று வணிகநிறுவனங்களைச் சூறையாடிய ஆர்.எஸ்.எஸ்சிற்கே தடையில்லையென்னும்போது புலிகள் மீது மட்டும் தடை விதிப்பது பைத்தியக்காரத்தனம்.

'ஒரு சீக்கியர் இந்திராகாந்தியைக் கொன்றுவிட்டதால் சீக்கியர்களை வெறுத்துவிட்டீர்களா?' என்று கேட்கும் ஈழத்தமிழர்களின் கேள்வியில் நியாயமில்லாமல் இல்லை. இந்தக் கேள்வியை இன்னும் கொஞ்சம் நீட்டித்துப் பார்த்தால் இந்திராவின் கொலைக்குப் பிறகு தில்லியில் ஆயிரக்கணக்கான சீக்கியர்களைக் கொன்றுகுவித்தனர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குண்டர்கள்.
'ஒரு ஆலமரம் சரியும்போது நிலம் அதிரத்தான் செய்யும்' என்று அதை நியாயப்படுத்தினார் காங்கிரஸ் அமைச்சர் சவாண். பிறகு அந்த குற்றம் நீதிமன்றத்திலும் நிரூபிக்கப்பட்டது. நியாயப்படி பார்த்தால் காங்கிரஸ் கட்சியையும்தானே தடை செய்திருக்க வேண்டும்.

எனவே விடுதலைப்புலிகள் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தபோதும் புலிகள் மீதான தடையை நீக்கக் கோருவதும் அதற்காகப் போராடுவதுமே சரியாக இருக்கமுடியும்.

மேலும் காலகாலத்திற்கு நினைத்துக் கவலைப்பட ராஜிவ்காந்தியும் ஒன்றும் பெரிய தமிழினநலம்விரும்பியல்ல. போபர்ஸ் ஊழல், இந்துத்துவ பார்ப்பனீய ஆதரவு, மண்டல்கமிஷனைக் கொண்டுவந்ததால் பிஜேபி வி.பி.சிங் ஆட்சியை ரதயாத்திரையைக் காரணம் காட்டிக் கவிழ்க்க கொல்லைப்புற வேலைபார்த்தது, பிறகு நம்பிவந்த சந்திரசேகரையே நட்டாற்றில் கவிழ்த்துவிட்ட குள்ளநரித்தனம் இவையெல்லாம்தான் ராஜுவின் மொத்த உருவம்.


ராஜிவ் செத்துவிட்டதால் அவர் புனிதராகிவிட்டார். மேலும் இந்தியாவில் அரசு ஊழியர்கள் ரிட்டயராகும் வயதில்தான் அரசியல்வாதிகள் பிரதமர்களாகவும் குடியரசுத்தலைவர்களாகவும் வருவார்கள். இதனால் 40 வயது ராஜிவ்காந்தி 'இளம் தலைவராகி'விட்டார். தமிழர்கள் பொதுவாகவே உணர்ச்சிவசப்படுபவர்கள் என்பதால் ராஜீவ் இறந்த ஆரம்பத்தில் கொஞ்சம் கவலைப்பட்டிருப்பார்கள். அதற்குப்பிறகுதான் உள்ளூரிலேயே ஏகப்பட்ட இழவுகள் விழுந்திருக்குமே, அதற்குக் கவலைப்பட நேரம் ஒதுக்கியிருப்பார்கள்.

எனவே ஈழத்தமிழர்களையும் ஈழப்போராட்டத்தையும் பார்த்து தமிழகத் தமிழர்கள் பயப்படவும் விலகவும் ஒதுங்கவும் ராஜிவ் கொலை காரணமில்லை. அதற்கு வேறு ஒரு காரணம்தான் இருக்கிறது. அது அரசின் ஒடுக்குமுறை. அவர்களும்தான் என்ன செய்வார்கள்?


புலிகளை ஆதரிக்கும் 'மாவீரர்கள்' எல்லாம் ஜெயலலிதா காலத்தில் எங்கே போயிருந்தார்கள்?. அருணாச்சலம் என்னும் கள்ளர்சாதி வெறியர் தமிழ்த்தேசியப் போர்வையில் இருந்தார். ஜெயலலிதா தமிழினவாதிகள் மீது ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்தவுடனே தான் நடத்திக்கொண்டிருந்த 'நந்தன்' என்னும் ஒரு குப்பைப் பத்திரிகையையும் நிறுத்திவிட்டார். இது பெரும்பெரும் மாவீரர்கள் வரை பொருந்தும்.
இளிச்சவாயன் கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் மட்டும்தான் இவர்கள் முக்குக்கு முக்கு ஈழ ஆதரவு பேசி கருணாநிதியின் வயிற்றில் புளி(லி?)யைக்கரைப்பார்கள். ஜெ ஆட்சிக்காலத்திலும் புலிகள் ஆதரவை ஓரளவிற்கு வெளிப்படையாகவும் உறுதியாகவும் வைத்தவர் என்றால் வைகோவைத்தான் சொல்ல முடியும். 'தென்னகத்துப் பிரபாகரன்' திருமாவளவன் பொடா சட்டம் தன்மீது பாயும் என்பதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தவுடனே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் நல்லகண்னு தலைமையில் 'பொடா எதிர்ப்பு முன்னணி' என்று கூட்டமைப்பு ஆரம்பித்து சரண்டரானார். (இதில் வேடிக்கை என்னவென்றால் 'தமிழ் பேசும் சாதியினர் மட்டும்தான் தமிழர்கள்' என்பது திருமாவின் நிலைப்பாடு. ஆனால் புலியை ஆதரித்து நெடுநாட்கள் சிறையிலே இருந்தவர்கள் தெலுங்கு பேசும் சாதிகளைச் சேர்ந்த 'வடுக வந்தேறி'களான வைகோவும் தோழர் கோவை ராமகிருஷ்ணனும்)


இந்த 'மாவீரர்' புராணங்களைச் சொன்னால் அது நீண்டுகொண்டே போகும். இவர்கள் கட்சியின் அடிப்படை தமிழ்த்தேசிய விடுதலை அல்லது தமிழ்த்தேசிய சுயநிர்ணய உரிமை. ஆனால் எங்காவது அது பற்றிப் பிரச்சாரம் செய்திருக்கிறார்களா என்றால் இல்லை. புலிகளுக்கு அமெரிக்கா தடை விதித்தால் இங்கு அமெரிக்கக் கொடியை எரிப்பார்கள், சிங்களக் கொடியையும் எரிப்பார்கள். ஆனால் இவர்களின் எதிரியே இந்தியத் தேசியம்தான். ஆனால் இந்தியக் கொடியை எரிக்க மாட்டார்கள். ஏனென்றால் முந்தையக் 'குற்றங்களுக்கெல்லாம்' காலையில் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டுவிடுவார்கள். பின்னதிற்கோ பாயும் 'தேசியப் பாதுகாப்புச் சட்டம்.

ஒருமுறை தோழர் வ.கீதாவுடன் ஈழப்பிரச்சினை பற்ரிப் பேசிக்கொண்டிருக்கும்போது தமிழ்த்தேசியவாதிகளைப் பற்றிச் சொன்னார். 'இவர்கள் இங்கு பண்ண முடியாத புரட்சியை ஈழம் பற்றிப் பேசித் தணித்துக்கொள்கிறார்கள்' என்று.

சரி போகட்டும் தொப்புள்கொடி உறவு, ராஜராஜ சோழன் இலங்கையைக் கைப்பற்றிய தூசிபடிந்த வரலாறுகள், நரம்பு புடைக்க காசி ஆனந்தனின் 'பத்துதடவை பாடை வராது...' என்றெல்லாம் பாடியும் பேசியும் திரியும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள், அவர்கள் உணர்வின் அடிப்படையில் ஆதரிக்கும் வைகோவாக இருக்கட்டும், அலல்து பஞ்சத்திற்குக் கடைவிரிக்கும் திருமாவளவனாக இருக்கட்டும் இங்குள்ள ஈழத்தமிழ் அகதிகள் பற்றிப் பேசியிருப்பார்களா? அவர்களின் அடிப்படை உரிமைகளுக்காக் குரல் கொடுத்திருப்பார்களா?
ஈழப்பிரச்சினைகளுக்காக இங்கு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், உண்ணாவிரதங்களில் எத்தனை தமிழகத்தில் வதியும் ஈழத்தமிழர்களுக்கானது?


மணியரசன் என்று ஒரு தமிழ்தேசியத் தலைவர் இருக்கிறார். 'தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி' என்று ஒரு கம்பெனி நடத்திவருகிறார். அவரிடமிருந்து எழுத்தாளர் ராசேந்திரசோழன் (அஷ்வகோஷ் என்ற பெயரிலும் எழுதுவார்) உள்ளிட்ட சில தோழர்கள் வெளியேறினர். ஏதாவது சித்தாந்தப் பிரச்சினைதான் காரணம் என்று நினைத்தால் நீங்கள் இந்தப் 'புரட்சிகர'க் கட்சிகளைப் பற்றி தெரியாத அப்பாவி என்று அர்த்தம். அவர்கள் கட்சி உடைந்ததற்குக் காரணங்கள் இரண்டு. இதுபற்றி விலகிய ராசேந்திரசோழன் 'ததேபொகவிலிருந்து விலகியது ஏன்' என்று ஒரு சிறுநூலே எழுதியிருக்கிறார்.


ஒருகாரணம் இவர்கள் மயிலம் என்னும் ஊரில் நடத்திய சீட்டுக்கம்பெனியில் ஏற்பட்ட பிரச்சினை. (அடப்பாவிகளா, புரட்சி செய்யக் கட்சிகட்டப்போகிறீர்கள் என்று நினைத்தால் கடைசியில் சீட்டுக்கம்பெனிதான் நடத்தியிருக்கிறீர்களா என்று மறுபடியும் கேட்டால் நீங்கள் மீண்டும் அப்பாவிதான்)

இரண்டாவதுகாரணம் மாவீரர்நாளுக்கு உரையாற்றச் செல்லும்போது புலம்பெயர்ந்த தமிழர்கள் மணியரசனிடம் நிதியளிப்பார்கள். அதில் ஒரு பகுதியைக் கட்சிக்குக் கொடுத்துவிட்டு இன்னொரு பகுதியைத் தான் வைத்துக்கொண்டிருந்திருக்கிறார் தோழர் மணியரசன். கடைசியில் கட்சிக்கு அந்த நிதியைத் தருவதேயில்லை. ஏனென்று கேட்டதற்கு 'என் வீட்டிற்குக் கலர்டி.வி வாங்கிவிட்டேன்' என்றிருக்கிறார் தோழர் மணியரசன். இதைக் காரியக் கமிட்டியில் வைத்து வேறு விசாரித்திருக்கிறார்கள்.


சரி, இதெல்லாம் அவர்கள் உள்கட்சி விவகார இழவு. போகட்டும். ஆனால் புகலிடத்தமிழர்களிடம் வசூலித்த தொகையில் ஒருசிறு பகுதியையேனும் வீடிழந்து, நிலமிழந்து, சகோதரர்களைக் கொலைக்களத்தில் பலிகொடுத்து, தாயையும் சகோதரிகளையும் பாலியல் வல்லுறவில் பறிகொடுத்து தமிழகத்திற்கு ஒரு நாயை விடக் கேவலமான நிலையில் வந்துசேரும் ஒரு ஈழத்தமிழ் அகதிக்காவது நீங்கள் நிதியளித்திருப்பீர்களா?


தமிழ்வழிக்கல்விக்காகவும் இன்னபிற காரணங்களுக்கவும் நிதிவசூலித்திருக்கிறீர்களே. ஒருமுறையாவது ஈழ அகதிகளின் குறைந்தபட்ச பொருளாதார மேம்பாட்டிற்கு நிதி வசூலித்திருக்கிறீர்களா? ஓட்டுக்கட்சிகளுக்குத்தான் ஈழத்தமிழர்கள் வாக்குவங்கிகள் இல்லை என்பதால் புறககணிக்கின்றன. இந்தத் தமிழ்த்தேசியவாதிகள் ஈழ அகதிகளைப் புறக்கணிக்கக் காரணம் என்ன? வெறும் சாகசவாதப் படம் ஓட்டுவதைத் தாண்டி இவர்களால் தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் என்ன பிரயோஜனம்?


எனக்குத் தெரிந்து புலிகளை ஆதரிக்கும் கட்சிகளிலேயே விடுதலைச் சிறுத்தைகளின் சட்டமன்ற உறுப்பினர் எழுத்தாளர் ரவிக்குமார் மட்டும்தான் அகதிமுகாம் பற்றி ஆராய்ந்து ஒரு அறிக்கையை முதல்வரிடம் கொடுத்தார். அதேநேரத்தில் தந்திரமாக கருணாநிதியும் ஒரு அமைச்சரை அனுப்பி அறிக்கை தயாரிக்கச் சொன்னார். கடைசியில் இரண்டு அறிக்கையும் போய்ச்சேர்ந்த இடம் குப்பைத்தொட்டி.
ரவிக்குமார் அறிக்கை தயாரிக்கும்போது சிறுத்தைகள் அதிமுக அணியிலிருந்தனர். இப்போது திமுக அணிக்கு வந்தபிறகு ஒருபேச்சையும் காணோம்.


புலிகளை ஆதரிப்பது, ஆதரிக்காமல் இருப்பது என்பதையெல்லாம் தாண்டி ஈழ அகதிகளின் நலன்களில் அக்கறை செலுத்துவதும் கல்வி உள்ளிட்ட அவர்களின் அடிப்படை உரிமைகளுக்காய் அரசிடம் போராடுவதும் போலீஸால் திணிக்கப்படும் பொய்வழக்குகளுக்கு எதிராய்க் குரல்கொடுப்பதும்தான் பாதிக்கப்படுபவர்களும் தமிழர்கள் என்கிற உணர்வுகளையும் தாண்டி மனித உரிமையின் அடிப்படையும் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் அஸ்திவாரமுமாகும். அதுவே அறமுமாகும்.


எனவே தமிழக அரசோ, இந்திய அரசோ, தமிழ்த்தேசிய வீராதி வீரர், வீரபத்திரப் பேரன்களோ ஈழப்போராட்டத்திற்கும் ஈழவிடுதலைக்கும் ஒரு புல்லையும் புடுங்கவேண்டாம். அவர்கள் போராட்டத்தை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். அந்த்ப் போராட்டத்திலுள்ள பிரச்சினைகளைக் களைவதற்கும் ஜனநாயகபப்டுத்துவதற்குமான முயற்சிகளை அவர்கள் தேர்ந்துகொள்வார்கள். உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்றிருந்தால் இங்கு அகதியாய்த் தஞ்சமடைந்திருக்கும் ஈழத்தமிழர்களின் அடிப்படை உரிமைகள் குறித்தும் அவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு போன்ற அம்சங்களிலும் கவனம் செலுத்துங்கள். போலீஸ் பூச்சாண்டி போதும், நிறுத்துங்கள்.

22 உரையாட வந்தவர்கள்:

 1. தமிழ்நதி said...

  உங்கள் பதிவிலிருந்து பல வாய்ச்சொல் வீரர்களைப் பற்றிய விஷயங்களை அறிந்துகொண்டேன். மேலும், உண்மையில் உண்மையை உண்மையாகவும் துணிச்சலுடனும் எழுதியிருக்கிறீர்கள். ஈழத்தமிழர்கள் குறித்த தமிழக மக்களின் நிலைப்பாட்டில் உங்களைப் போன்றவர்களின் எழுதுகோல்கள்தான் மாறுதலைக் கொண்டுவர வேண்டும்.

 2. Jayaprakash Sampath said...

  இந்த விவகாரம் குறித்து இது நாள் வரை இப்படி ஒரு தெளிவான கட்டுரையைப் படித்ததில்லை.

  நன்றி.

 3. Anonymous said...

  மெண்டல் உனக்கு சுத்தமா கிழண்டு போச்சு போல.படு காமடியான பதிவு

 4. தமிழ்பித்தன் said...

  நல்ல ஆராச்சி நல்ல சாடசியங்கள் நல்ல முயற்சி தொடர்ந்து எழுதுங்கள்

 5. Anonymous said...

  வாங்க மிதக்கும் வெளி ஐயா,,, தேன் கூட்டில் கல் எறிந்திருக்கிறீர்கள், தமிழகத்தில் இருந்து கொண்டு இந்தியர்களைப் பற்றி தரக்குறைவாகப் பேசியிருக்கிறீர்கள், தமிழர்கள் என்றாலும் இந்தியர்கள் என்ற ரீதியில்தான் இந்தப் பிரச்சினையை அலசமுடியும், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தருவதைப் பற்றித்தானே நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். இலங்கையிலிருந்து தோணி மூலமாக பாஸ்போர்ட் இல்லாமல் தப்பித்து வரும் மக்களுக்கு அடைக்கலம் மனிதாபிமான அடிப்படையில் கொடுக்கப்படுகிறது. உதவிக்கு வந்த மாட்டைப் பிடித்துப் பல்லைப் பதம் பார்க்கக்கூடாது, ஈழப் பிரச்சினையை இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்குட்பட்டுத்தான் அணுக முடியும், தொப்புள் கொடி உறவு என்று உணர்ச்சி வசப்பட்ட காலம் எல்லாம் முடிந்து விட்டது,

  ஒன்று மட்டும் துல்லியமாகத் தெரிகிறது.

  பார்ப்பன எதிர்ப்பாளர்கள். புலிகள் ஆதரவாளர்கள், கடவுள் மறுப்பாளர்கள் மற்றும் பின் நவீனத்துவ வாதிகள் இவர்கள் எல்லாருக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது என்று மட்டும் ஐயந்திரிபறத் தெரிகிறது,

 6. bala said...

  வெளியே மிதக்கும் அய்யா,
  இவ்வளவு கூப்பாடு போடும் நீங்கள்,ஈழ அகதிகளுக்கு என்ன செஞ்சி கிழிச்சீங்கன்னு சொல்லவே இல்லயே.என்ன பண்ணியிருப்பீங்க?பணம் வசூல் பண்ணி தண்ணி அடிச்சி கும்மாளம் போட்டிருப்பீங்க,வேற என்ன செய்ய முடியும் உங்களைப் போன்றவர்களால்?காலணாவுக்கு லாயக்கில்லாத ,வெரும் கூச்சல் போடும் திராவிட கும்பலைச் சேர்ந்தவர் தானே நீங்களும்?ரோஷம்னு ஒண்ணு இருந்தா இப்படி கேவலமா நடந்துப்பீங்களா?

  பாலா

 7. Anonymous said...

  //padhotti said...
  வாங்க மிதக்கும் வெளி ஐயா,,, தேன் கூட்டில் கல் எறிந்திருக்கிறீர்கள்,

  //  யார்யா அது தேன்கூடு , தமிழ்மணம்னுகிட்டு . தமிழ்நாட்டில் இருந்து கொண்டு இந்தியாவை காறித்துப்ப கூடாதுன்னு எப்படி சொல்லுறிங்க. இந்தியர் என்ற ரீதியில் தான் இப்பிரச்சினையை அலச முடியும் என்றாலது பார்ப்பனர் ஒருவரால் மட்டுமே இருக்க முடியும் என்பது டைலிட்டிக்கல் மெட்டிரியலிச அடைப்படையிலான உண்மை.

  இந்தியா முதலில் காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு ஒரு யூனிட் மின்சாரம் 10 பைசாவுக்கும் ஒரு கிலோ சீனியை 2 ரூபாய்க்கு தருவதை இந்தியா முழுவதும் பரவலாக்கட்டும் அப்புறம் இந்த பிரச்சினையை நாங்க ஒரு இந்தியனா இருந்து "உக்காந்து" யோசிக்கிறோம்.

  எது உதவிக்கு வந்த மாடு, கொஞ்சம் மனசாட்சியோடு பேஉங்கள். இந்திய ராணுவத்தின் கொழுத்த சு*** களீன் தினவடக்க எங்க பெண்கள் தாம் கிடைத்தனரா.

  தொப்புள்கொடி காலம் முடிந்து விட்டது என்று புலம்பியபடி இன்னும் இப்பிரச்சினையை கண்டும் காணாமல் இருப்பதாக சொல்லிக்கொண்டு "அங்கும்" தூண்டிவிடும் போக்கு தொடர்ந்தால் உங்காத்து அம்பிகள் பயப்பட்டது போலவே "எல்லாமே" நடந்்துடும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

  ஆம் பார்ப்பனிய எதிர்ப்பாளர்கள், புலிகளின் ஆதரவாளார்கள் பெரியாரிய வாதிகள், பின்னவீனத்துவாதிகள் ஆகியோருக்கான ஒற்றுமை மனிதனின் துயரற்ற வாழ்க்கை பற்றி ஒற்றுமையான கருதது கொண்டுள்ளனர்

 8. Anonymous said...

  good work. keep it up.
  it is nice to see that still some suppporters there in tamil nadu.
  those people soughting aginst your post , are not a human beings since lot of people still suffering every day at eelam .
  - eela nanpan

 9. மிதக்கும்வெளி said...

  /ஈழத்தமிழர்கள் குறித்த தமிழக மக்களின் நிலைப்பாட்டில் உங்களைப் போன்றவர்களின் எழுதுகோல்கள்தான் மாறுதலைக் கொண்டுவர வேண்டும்.
  /

  அப்படியெல்லாம் வருமா என்று தெரியவில்லை. ஏதோ என் ஆதங்கம். எழுதினேன்.

 10. லக்கிலுக் said...

  //எல்லாப்பிரச்சினைகளுக்கும் அவரிடம் இருப்பது வழவழா கொழாகொழா தீர்வுகள்தான்.//

  உண்மை :-(

 11. nagoreismail said...

  "இன்னும் கொஞ்சம் அறிய" எனும் எழுத்தில் இருக்கும் சிகப்பு நிறம் கண்களை பாதிக்கும், வேறு நிறத்திற்கு மாற்ற இயலுமா? எந்த விஷயத்தையும் அலசி ஆராய்ந்து எழுதுவதில் நீங்களும் லக்கிலுக்கும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல- அக்கு வேறு ஆணி வேறு தான் - நாகூர் இஸ்மாயில்

 12. பொன்ஸ்~~Poorna said...

  நல்லா தெளிவா எழுதி இருக்கீங்க சுகுணா...

  இந்த வார்ப்புருவை எங்க பிடிச்சீங்க? கண்ணக் கட்டுது.. வேற ஏதாவது வார்ப்புரு ப்ளீஸ்.. குறைந்த பட்சம் நடுவில் இருக்கும் சிகப்புக் கோடை எடுத்தால் கூட நல்லா இருக்கும்.. :)

 13. அற்புதன் said...

  சுகுணா,

  உங்கள் பதிவுக்கு நன்றி,பல உண்மைகளைப் பேசி உள்ளீர்கள்.
  இதைப் பேச இந்த வெளியாவது இருக்கிறதே.இந்தியா என்றால் என்ன என்பதை மிக அருகில் இருந்து பார்த்தவன்,இந்தியா ஒரு ஜன நாயக நாடு என்பது எவ்வளவு பெரிய பொய் என்பது தெரியும்.உங்கள் ஒரு சிலரின் குரல்கள் நம்பிக்கை தந்தாலும் ,அங்கிருந்து ஒரு உதவியும் வராது என்பதை பல வருடங்களின் முன்னமே உணர்ந்தவன்,பலரின் பேச்சுக்கள் வெறும் பிழைப்புக்கானது என்பதையும் அறிவேன்.

  ஈழத்தின் விடியல் தான் உபகண்டத்துக்கே உண்மையான ஜன நாயகத்தைக் கொண்டு வரக்கூடியது என்பதால் தானோ என்னவோ இவர்கள் எல்லாம் இவ்வளவு நூதனமாக அதனை நசுக்க முற்படுகிறார்கள்.இருந்தும் எல்லாத் தடைகளையும் தாண்டி மீள் வோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

 14. Anonymous said...

  வெளியே மிதக்கும் அய்யா,

  இந்திய நாய்களைச் செருப்பால் அடித்துள்ளீர்கள் அய்யா. இந்தியநாய்கள் பதில் சொல்லுமா அய்யா?

 15. வசந்தன்(Vasanthan) said...

  இராசேந்திர சோழனும் அஸ்வகோஷும் ஒருவரா?

 16. மிதக்கும்வெளி said...

  /இராசேந்திர சோழனும் அஸ்வகோஷும் ஒருவரா? /

  ஆமாம். தமிழ்த்தேசியப்பொதுவுடைமைக் கட்சியிலிருந்து வெளியேறிய அவர் இப்போது தமிழ்த்தேசியம் மார்க்சிஸ்ட்கட்சி என்ற ஒரு அமைப்பையும் மண்மொழி என்ற இதழையும் நடத்திவருகிறார்.

 17. மிதக்கும்வெளி said...

  /எல்லாத் தடைகளையும் தாண்டி மீள் வோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
  /


  hmmmm.

 18. Anonymous said...

  தோழர் சு.ப. வீரபாண்டியன் பற்றிய தங்கள் மதிப்பீடு என்னவோ?

 19. Thangamani said...

  கருணாநிதி, ஜெயலலிதா பற்றிய உங்கள் பதிவோடு பெருமளவில் ஒத்துபோகும் போது நீங்கள் குறிப்பிட்ட மாவீரர்கள் பற்றிய வர்ணனையோடு பல இடங்களில் முரண்படுகிறேன். அருணாசலம் கள்ளர்சாதி வெறியர் என்று எழுந்தமானத்துக்கு குறிப்பிட்டிருக்கிறீர்கள் (அவர் கள்ளர் ஜாதியில்லை என்று நினைக்கிறேன்). ஆரம்பகால 90களில் அவர் முழுமையாக செயல்பட்டபோது உலகத் தமிழர் பேரவை என்ற குடையில் கீழ், தாய் மொழி வழிக்கல்வியையும், ஈழப்பிரச்சனையையும் முன்வைத்து தமிழ்நாட்டில் உள்ள எல்லா தமிழ் அமைப்புகள், இயக்கங்கள், சங்கங்கள் (அவைகள் எந்த நோக்கங்களைக் கொண்டிருந்த போதும்) அனைத்தையும் ஒன்று திரட்டுவதில் அவர் கணிசமான வெற்றியைப்பெற்றிருந்தார். அப்படியான ஒரு ஒற்றுமையை சாதிக்க தமிழ்சூழலில் (தமிழர்களிடம்) எவ்வளவு உழைக்கவேண்டும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். தமிழ்வழிக்கல்வியை ஆரம்பப் பள்ளிகளில் கட்டாயப்பாடமாக்க உலகத் தமிழர் பேரவை எடுத்த முயற்சிகள் (100 தமிழறிஞர்களின் சாகும் வரை உண்ணாவிரத போர்) தமிழ்க்குடிமகன் அமைச்சராக இருக்கும் போது, எப்படி கருணாநிதியால் கலைக்கப்பட்டன; ஏமாற்றப்பட்டன என்பதை அப்போது அவ்விதயங்களைக் கவனித்து, பங்கேற்று வந்தவர்கள் அறிவர்.

  அதேபோல ஈழத்தமிழர் பிரச்சனைகளில் இராஜீவ் கொலைக்குப்பின்னான கடுமையான காலகட்டங்களில், மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களின் பேரில் நியாயமான போராட்டங்களை கோரி போராடுவது இந்தியச்சூழலில் எவ்வளவு கடுமையானது என்பதும் உணரமுடியாதது அல்ல. அச்சமயத்தில் அவர் தீவிர பங்காற்றிவந்தார். அரசு அடக்குமுறைகளின் தீவிரத்தன்மையை நீங்கள் அறியாதவரா அல்லது அப்படி தோற்றமளிக்கிறீர்களா என்று தெரியவில்லை. நெடுமாறன் இதய அறுவைச்சிகிச்சைக்கு பின் பொடாவில் கைது செய்யப்பட்டு வேண்டுமென்றே கடலுக்குக்கும் சென்னைக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டு கொல்லப்படவேண்டுமென்பதற்காகவே அலைக்கழிக்கப்பட்டார். நீங்கள் குறிப்பிடும் நந்தன் பத்திரிக்கை சுஜாதாவின் வசவுகளையும் சாபங்களையும் வாங்கிக்கொண்டதுடன், தமிழ் இயக்கங்களை ஒன்றிணைப்பதில், பெருவாரியாரியான தமிழ்ப்பற்றாளர்களைச் சென்று சேர்வதில் கணிசமான வெற்றி பெற்றிருந்தது. அதன் முதலாம் ஆண்டுவிழா (இன்று துக்ளக்கிற்கு பெருமைப் படுகிறார்களே) காமராஜர் அரங்கம் நிரம்பிவழிய நடந்தது. இன்றுவெகுஜன பத்திரிக்கைகள் (ஆவி, குமுதம்) போன்றவைகள் நடிகைகள், பரிசுகள், இலவசங்கள் போன்றவற்றை வைத்து சேர்க்கப்பட்ட கூட்டம் போல அல்லாமல் பத்திரிக்கையின் வாசகர்களால் அவ்வரங்கு நிறைந்தது.
  மருத்துவக் காரணங்கள், பெரும் பொருளிழப்பு போன்றவைகளால் முடக்கப்படும்போது பொடாவின் அழுத்தத்தை உங்களைப்போன்றவர்களால் வேண்டுமானால் எளிதாக தாங்கிக்கொள்ள முடியுமாயிருக்கலாம். அதை அவர் நந்தனை நிறுத்தி தவிர்த்துக்கொண்டார்.

  கவனமாகவும், முழுமையான புரிதலுக்கும் பரிசீலனைக்கும் ஆட்படுத்தி (ஆட்பட்டு) எழுதுதல் நீண்டகால நோக்கிலும், நம்பிக்கையை உண்டாக்குவதிலும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.
  நன்றி.

 20. மிதக்கும்வெளி said...

  /தோழர் சு.ப. வீரபாண்டியன் பற்றிய தங்கள் மதிப்பீடு என்னவோ?/

  நேர்மையும் அர்ப்பணிப்பும் உள்ள தமிழ்த்தேசியத்தோழர்.

 21. அமிர்தா said...

  ஒரு வேண்டுகோள் - தமிழ்மணம் விவாதக் களத்தில் - "என் பெயர் ஆர்.ஆர்.எஸ்." இணைத்துவிட்டேன்.

  கொஞ்சம் அந்த பக்கம் கவனம் வைத்துக்கொள்ளுங்கள்

 22. அமிர்தா said...

  என் பெயர் R.S.S.

  பிறக்கும் பொழுது
  எல்லா குழந்தைகளும்
  நல்ல குழந்தைகள்.
  நான் அந்த ரகம் இல்லை.
  நஞ்சு கொண்டு
  நான் பிறந்தேன்.

  27 செம்டம்பர் 1925 -
  விஜயதசமியன்று
  வீர சிவாஜி பிறந்த மண்ணில்
  நான் பிறந்தேன்.
  சித்பவன பார்ப்பனர்கள்
  என் பெற்றோர்.

  'பரந்துபட்ட இந்து ராஜ்யமே
  எனது கொள்கை.
  காந்தியைக் கொன்ற
  நாதுராம் கோட்சே
  என்னைத் தூக்கி வளர்த்தவர்.

  எனக்கு உணவு ரத்தம்.
  ரத்தம் குடிக்காமல்
  என்னால்
  உயிர் வாழமுடியாது.
  இள ரத்தமெனில்
  இன்னும் ருசி.

  நான் வளர்ந்து வந்த
  பாதையெல்லாம்
  கலவரக்காடானது.

  எனக்கு மறதி அதிகம்.
  நான் குடித்த
  உயிர்கள்
  கணக்கிடலங்காது.

  கடந்த 82 ஆண்டுகளில்
  மண்ணில்
  ஆலமரமாய் விரிந்து
  பரந்து இருக்கிறேன்.
  எனது விழுதுகள்
  பாரதீய ஜனதா,
  பஜ்ரங்தள்,
  இந்து முன்ணணி,
  A.B.V.P.,
  விஸ்வ இந்து பரிசத்.

  எனக்கு விரோதிகள் உண்டு.
  முதல் விரோதி - நக்சல்பாரிகள்.
  2வது விரோதி - முஸ்லீம்.
  3வது விரோதி - கிறித்துவன்.
  4வது விரோதி - ஜனநாயகவாதி.

  எனக்கு பசிக்கிறது.
  ரத்தம் வேண்டும்.
  இளரத்தம் வேண்டும்
  என் படை பரிவாரங்களோடு
  புறப்பட்டுவிட்டேன்.
  என்னை
  வேரோடு அழிக்கும் சக்தி
  நக்சல்பாரிகளுக்கு மட்டுமே உண்டு