அது ஆச்சு ஒரு வருசம்..




எழுத்து என்பது ரத்தமாக இருக்கவேண்டும். - நீட்ஷே.


அன்பின் இனிய நண்பர்களே,வலையுலகில் எழுத ஆரம்பித்து ஓராண்டாகிவிட்டது. வலையுலகை எனக்கு அறிமுகம் செய்துவைத்த செந்திலுக்கு மீண்டும் நன்றிகள். பொதுவாக என்னுடைய பதிவுகள் குறித்து மீண்டும் மீண்டும் இரு கேள்விகள் எழுப்பப்படுகின்றன.ஏன் மிதக்கும்வெளி என்று உங்கள் வலைப்பக்கத்திற்குப் பெயர்வைத்தீர்கள் என்பது அதிலொன்று..

மிதக்கும்வெளி என்றால் மப்படித்து மல்லாந்துவிடுவதென்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் அது அப்படியில்லை. அர்த்தங்கள் சூழலில் மிதந்துகொண்டிருக்கின்றன. சொற்கள் அவையோடு இணைந்துகொள்கின்றன என்கிறது பின்நவீனம். சொற்களும் அர்த்தங்களும் மட்டுமில்லை, சமயங்களில் நாமும் இணைந்தும் விலகியும் பயணிக்கிறோம், உடன்பட்டும் முரண்பட்டும். அதனால்தான் மிதக்கும்வெளி.

இன்னொரு கேள்வி சீரியசான பதிவுகள், நக்கலடிகும் கிண்டல்கள், வலையுலக குழாயடிச்சண்டைகள், கவிதைகள் என அனைத்தையும் ஏன் ஒரே பிளாக்கில் பதிவிடுகிறீர்கள், அதற்கென தனித்தனியாக பிளாக்குகளை ஆரம்பித்துக்கொள்ளலாமே என்றும் கேள்விகள் வருகின்றன.

ஆனால் ஒரே விதமான அடையாளத்தில் உறைந்துபோவதை நான் மறுக்கிறேன். அது வெறுமனே ஒற்றைத் தன்மையையும் ஒற்றை அடையாளத்தையும் மட்டுமே கையளிக்கும். ஆனால் நான் அந்த இறுகிய அடையாளத்தை மறுதலிக்கிறேன். எனக்கென்று ஒரு அரசியல் இருகிறது. ஆனால் அது ராணுவத்தின் விறைப்பான அரசியல் அல்ல, அப்படியிருந்தால் அது வெறுமனே பிணங்களின் அரசியல். வலியும் கொண்டாட்டமும் போராட்டமும் இணைந்த அரசியலே என் அரசியல். கொண்டாட்டங்களும் புன்னகையுமற்றுப் போனால் உயிர்ப்பித்திருக்கமுடியுமென்று தோன்றவில்லை.

வேறென்ன சொல்லவிருக்கிறது, தெரிந்தோ தெரியாமலோ ஒடுக்கப்பட்ட மக்களின் ஏக்கப்பெருமூச்சு டாக்டர்.பாபாசாகேப் அம்பேத்கரின் பிறந்தநாளிலிருந்து என் வலைப்பயணத்தைத் தொடங்கியிருக்கிறேன். ஏதோ சில உருப்படியான விடயங்களையும் என் அறிவு மற்றும் புரிதலின் சாத்தியங்களுக்குட்பட்டு எழுதியிருக்கிறேன் என்று கருதுகிறேன்.

ஓராண்டு நிறைவு பெற்றுவிட்டதற்காய் வாழ்த்தவிருக்கும் நண்பர்களுக்கு.. வாழ்த்துக்களை மட்டும் பதியாமல் என் எழுத்துக்கள் குறித்த் கருத்துக்களையும் பதிவிட்டால் சில பயனுள்ளதாகவிருக்குமென்று கருதுகிறேன். சமீபகாலங்களாக குடிப்பதில்லையென்பதால் அனைவருக்கும் சியர்ஸ் சொல்லமுடியாத அவலத்தில் இருக்கிறேன். அனைவருக்கும் நேசமான முத்தங்கள்.

பிரியங்களுடன்
சுகுணாதிவாகர்.

10 உரையாட வந்தவர்கள்:

  1. உண்மைத்தமிழன் said...

    வலைப்பதிவில் ஓராண்டை நிறைவு செய்துவிட்டமைக்கு எனது வாழ்த்துக்கள் சுகுணா.

    தங்களின் அறிமுகம் மிக சமீபத்தில் என்றாலும் சமயத்தில் பின்னூட்டமிட்டாலும் அவ்வப்போது சும்மாவாச்சும் உள்ளே நுழைந்து படித்தேன்.

    மேலும் தங்களைப் பற்றி ஒரு வலைத்தளத்தில் 'பின்நவீனத்துவ நாயகன்' என்ற பட்டப் பெயருடன் அழைப்பதையும் பார்த்தேன்.

    நீங்கள் இந்தப் பதிவிலேயே எழுதியிருக்கும் கீழ்க்கண்ட வார்த்தைகள் உங்களுக்கு அந்தப் பட்டம் பொருத்தம்தான் என்பதை உணர்த்துகிறது. கிண்டலடிக்கவில்லை. Be Series..

    //ஆனால் ஒரே விதமான அடையாளத்தில் உறைந்துபோவதை நான் மறுக்கிறேன். அது வெறுமனே ஒற்றைத் தன்மையையும் ஒற்றை அடையாளத்தையும் மட்டுமே கையளிக்கும். ஆனால் நான் அந்த இறுகிய அடையாளத்தை மறுதலிக்கிறேன். எனக்கென்று ஒரு அரசியல் இருகிறது. ஆனால் அது ராணுவத்தின் விறைப்பான அரசியல் அல்ல, அப்படியிருந்தால் அது வெறுமனே பிணங்களின் அரசியல். வலியும் கொண்டாட்டமும் போராட்டமும் இணைந்த அரசியலே என் அரசியல். கொண்டாட்டங்களும் புன்னகையுமற்றுப் போனால் உயிர்ப்பித்திருக்கமுடியுமென்று தோன்றவில்லை.//

    இப்படியொரு தமிழில் எழுதினால் என்னைப் போன்ற பாமரனுக்கு எப்படி முழு அர்த்தம் புரியும்..?

    சுகுணா திவாகரின் கருத்துக்கள் எளிமையான தமிழில் இருந்தால்தான் என்னைப் போன்ற அவரைப் புரிந்து கொள்ள முயற்சிக்கும் நண்பர்களுக்கு பேருதவியாக இருக்கும்..

    மீண்டும் வாழ்த்துக்களுடன் விடைபெறுகிறேன்.

  2. மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

    சியர்ஸ் சுகுணா! ;)

    -மதி

  3. Anonymous said...

    போய் தொலையுது...வெச்சிக்கோ...
    வாழ்த்துக்கள்...

    இது மற்றுமொரு செல்ஃப் சொம்பு பதிவாக தான் எனக்குப்படுகிறது.

    மிதக்கும்வெளி எண்டால் யூனிவெர்ஸ் இல்லியா?

    அமுக
    அவு

  4. Hariharan # 03985177737685368452 said...

    ஓராண்டு வலைப்பயணத்திற்கு என் வாழ்த்த்துக்கள் திவாகர்!

  5. தமிழ்நதி said...

    அன்பு திவாகர்,

    உங்கள் பதிவுகளில் கடும் அரசியல் கலந்த பதிவுகள் அன்றி வேறெந்தப் பதிவையும் நான் தவறவிட்டதில்லை. அந்தக் கலகக்குரல்,விமர்சனத்துக்கு அஞ்சாத அச்சமற்ற எழுத்துக்கள்,மரபார்ந்த, அடிப்படையான, புகுத்தப்பட்ட சிந்தனைகளில் மாற்றத்தை வேண்டி நிற்கும் பண்பு இவை பிடித்திருக்கின்றன. ஆனால்,நீங்கள் எழுதும் தளத்தின் பரவலான வாசகர்கள் யார், எத்தன்மையர் என்பதையும் கவனத்திற்கொள்ளவேண்டும் என்பதே எனது வேண்டுகோள். 'எனக்குப் பிடித்ததை நான் எழுதுகிறேன்... விரும்பினால் வாசியுங்கள்'என்று சொல்வீர்களாயின் அது உங்கள் தெரிவு. புத்தாண்டு, பிறந்தநாள்...என வாழ்த்துக்கள் தெரிவிப்பதெல்லாம்... ம் சம்பிரதாயமாகத்தானிருக்கின்றன. என்றாலும் சில சம்பிரதாயங்கள் மகிழ்வு அளிக்குமெனில், வாழ்த்துக்கள் நண்பரே!

  6. Anonymous said...

    வணக்கம் திவா, ஒருவருடம் ஆகிவிட்டதா அதற்குள்!!! அப்படியென்றால் நான் வலைப்பூவில் எழுத தொடங்கியும் ஒருவருடம் வருமென நினைக்கின்றேன்.

    உங்களையும் செந்திதானா இங்கு இழுத்து வந்தது???

    வாழ்த்துக்கள்..தொடர்ந்து எழுதுங்கள் எனக்கும் புரிவது போல..

  7. nagoreismail said...

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் -
    "சமீபகாலங்களாக குடிப்பதில்லையென்பதால் .." - மிக்க மகிழ்ச்சி, இதற்கும் சேர்த்து என் மனமார்ந்த வாழ்த்துக்கள் - உங்கள் எழுத்துக்களின் ரசிகன் -
    நாகூர் இஸ்மாயில்

  8. Anonymous said...

    //சமீபகாலங்களாக குடிப்பதில்லையென்பதால் அனைவருக்கும் சியர்ஸ் சொல்லமுடியாத அவலத்தில் இருக்கிறேன்.//

    அண்ணாத்த சரக்கடிக்கறத வுட்டீயா?

  9. லிவிங் ஸ்மைல் said...

    வாழ்த்துக்கள்!!

  10. வரவனையான் said...

    //சமீபகாலங்களாக குடிப்பதில்லையென்பதால் அனைவருக்கும் சியர்ஸ் சொல்லமுடியாத அவலத்தில் இருக்கிறேன்.//

    அடப்பாவி நண்பா , பொய் பேசாத என் நண்பர்களில் ஒருவனாய் இருந்தாயே.

    யாருக்கு ரூட் போட இந்த கோலம் :))))))))))))


    வாழ்த்துகள் நண்பா, "வசவாளர்கள் வாழ்க" என்று உன் கருத்துகளால் நிரம்பட்டும் தமிழ் வலைச்சுழல்