பதிவுகளுக்கு வெளியே...



தோழர்கள் அசுரன் - வரவணையான் சர்ச்சை தொடர்பான மய்யப்புள்ளி குறித்து வேறொரு பதிவில் விவாதித்திருக்கிறேன். இங்கே குறிப்பான சர்ச்சை தொடர்பாக எனது சில கருத்துக்கள்:

* திராவிடர்கழகத்தலைவர் தோழர்.வீரமணியை தோழர்.அசுரன் 'மாமா' என்று குறிப்பிட்டிருந்தது தொடர்பாக வரவணையான் ஒரு பதிவெழுதியிருந்தார். ஆனால் அந்தப் பதிவிலும் சரி, அதற்குப் பின் அவர் முன்வைத்த சில கருத்துக்களிலும் தகவல்ப்பிழைகள் அடங்கியிருந்தன.

குறிப்பாக 2000க்குப்பிறகுதான் புதியகலாச்சாரம் மற்றும் புதியஜனநாயகம் 'பார்ப்பனீயம்' என்னும் வார்த்தையைப் பயன்படுத்தியது என்று எழுதியிருந்தார். ஆனால் எனக்கு நினைவுதெரிந்து பு.க மற்றும் பு.ஜ 'பிராமணியம்', 'பிராமணர்' என்னும் வார்த்தைகளைக்கூட அவர்கள் பயன்படுத்தியதில்லை. 90களிலிருந்தே கருவறைநுழைவுப்போராட்டம், ஆடுகோழிபலி தடுப்புச்சட்டம் எதிர்ப்புப் போராட்டம், மற்றும் தமிழ்மக்கள் இசைவிழா உள்ளிட்ட பல நிகழ்வுகளிலும் அவர்களது வெளியீடுகளிலும் 'பார்ப்பனீயம்' என்னும் சொல்லாடலையே பயன்படுத்திவருகின்றனர்.

இந்தத் தவறைச் சுட்டிக்காட்டியபோது செந்தில் 'சிறுவயதிலேயே அம்புலிமாமாவிற்குப் பதிலாக புதியஜனநாயகம் படித்தவன்' என்று கிண்டலடித்திருந்தார். நான் அந்தளவிற்கு ஞானக்குழந்தை இல்லை. ஆனால் செந்தில் அம்புலிமாமா படிப்பதை விட்டுவிட்டு தரவுகளைச் சரிபார்த்துவிட்டுப் பதிவிடவேண்டும்.

அதேபோல 'மு.வ பார்ப்பனர்' என்று எழுதியிருந்தார் செந்தில். 'அது தவறு, வ.ராவைக் குறிப்பிடுகிறீர்களா' என்றவுடன், 'ஆமாம், எழுத்துப்பிழை' என்று 'அழகாகச்' சமாளித்தார். மு.வ திருக்குறளுக்கு உரையெழுதிய மற்றும் சில மொக்கைச் சிறுகதைகள் மற்றும் நாவல்கள் எழுதிய ஒரு பேராசிரியர். வ.ராவோ மணிக்கொடியில் குறிப்பிட்ட காலத்தில் ஆசிரியராக செயல்பட்டவர். ஒருசில தளங்களில் முற்போக்காக செயல்பட்ட பார்ப்பனர். ஆனால் காமெடி என்னவென்றால் மு.வவிற்கும் சரி, வ.ராவிற்கும் சரி திராவிட இயக்கத்தோடு எந்தத் தொடர்பும் கிடையாது. வேண்டுமானால் அண்ணா போன்றவர்களுக்குத் தனிப்பட்டமுறையில் நண்பர்களாக இருந்தவர்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். எனவே ஒருமுறைக்கு இருமுறை தகவல்களைச் சரிபார்த்து எழுதுவது நல்லது.

இங்கு இன்னொன்றையும் குறிப்பிடவேண்டும். ம.க.இ.கவில் பார்ப்பனத்தலைமை என்று செந்தில் எழுதியவுடன் தோழர்.குழலி, 'அப்படியா தல' என்கிறார். தான் இயங்கக்கூடிய (அ) ஆதரிக்கக்கூடிய அரசியல்கட்சிகளையும் தாண்டி வெளியிலுள்ள அரசியல்தளங்களை நண்பர்கள் தெரிந்துகொண்டு எழுதவேண்டும். இதில் பொட்டிக்கடை சத்யா அடித்த கூத்து தனிரகம். இதில் திராவிட இயக்க நண்பர்கள் கொஞ்சம் நிதானம் காத்திருக்கலாம்.

ம.க.இ.க தோழர்களுக்கு : ம.க.இ.கவில் பார்ப்பனத்தலைமை என்பது ஏதோ வரவணையான் புதிதாகக் 'கண்டுபிடித்துச்' சொன்னதல்ல. ஏற்கனவே பத்தாண்டுகளுக்கு முன்பு புதியகலாச்சாரம் இதழில் 'பெரியாரை வீரமணியிடமிருந்து விடுதலை செய்வோம் வாரீர்' என்னும் தொடர் வெளிவந்தது. அப்போதே உண்மை இதழ் பார்ப்பனத்தலைமை என்று விமர்சித்திருந்தது. அதேபோல பெரியார்மய்யம் என்னும் அமைப்பும் விமர்சித்திருந்தது. ஆனால் அதேகருத்தைச் சொன்னதற்காக வரவணையானைப் போன்போட்டு மிரட்டியது என்பது ஜனநாயகத்தின்பாற்பட்டதல்ல. எல்லாவிதமான விமர்சனங்களை திறந்த மனதோடும் உரையாடுவதற்கான மனோநிலையோடும் அணுகுவதுமே சரி. அதற்கு மாறாக வரவணையானை மிரட்டியதைக் கண்டிக்கிறேன். இந்த 'பங்காளிச்சண்டையில்' சில அனானி ஆட்டங்கள் நடந்தன என்றாலும் இடையிலே புகுந்து கொண்டாட முயன்ற (பார்ப்பனக்) கூத்தாடிகளை இருதரப்புமே பெருமளவு தடுத்தது பாராட்டத்தக்கது.

பின்தொடரும் பிசாசின்குரல் :

பொதுவாக என் பதிவிற்கு வரும் பின்னூட்டங்களுக்குப் பதில் எழுதுவது குறைந்துவிட்டது. அலுவலகத்தில் இணையம் செயல்படாததால் தனியார் இணைய மய்யங்களுக்கு வந்து எழுதவேண்டியிருப்பதால் அதற்கு ஆகும் நேரம் மற்றும் பணம் ஆகியவற்றைக் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது எஸ்.வி.ஆர் கட்டுரை குறித்து தோழர்.ஸ்டாலின் எழுப்பிய வினா போன்ற பல முக்கிய வினாக்களுக்குப் பதில் எழுதாமலே போய்விடுகிறது. நேரம் கிடைக்கும்போது விரிவாக எழுதுகிறேன். இந்த 'சுந்தரராமசாமி சர்ச்சை' தொடர்பாக மட்டும் சில வார்த்தைகள்.

சு.ராவை விமர்சித்தது தொடர்பாக சித்தார்த், தமிழ்நதி மற்றும் அய்யனார் ஆகியோர் 'போர்க்கொடி' எழுப்பியிருந்தார்கள். சு.ரா இறந்தபிறகு ஜெயமோகன் எழுதிய நூலை ஆசிப்மீரான் 'அண்ணன் எப்ப சாவான், திண்னை எப்பக் காலியாகும்' என்கிற ரீதியான நூல் என்று விமர்சித்திருந்தார். ஆனால் சித்தார்த் அதை மறுத்து 'அது இருவருக்குமான உறவுநிலை தொடர்பானது' என்று கருத்து தெரிவித்திருந்தார்.

மற்ற சு.ரா ரசிகர்கள் கூட அவர் காலையில் எழுந்தார், பல்துலக்கினார், லக்ஸ்சோப் போட்டுக் குளித்தார் என்கிற ரீதியிலேதான் எழுதியிருந்தார்கள். ஆனால் ஜெயமோகனின் கட்டுரையைப் படித்தால் 'தான் சு.ராவை விட மிகப்பெரிய அறிவாளி, இலக்கியவாதி' என்பதை 'நிரூபிப்பதற்கான' உந்துதல் கட்டுரை முழுதும் விரவியிருக்கும்.(உயிர்மை இதழ் ஏற்பாடு செய்திருந்த அஞ்சலிக்கூட்டத்தில் உரையாற்றிய ஜெயகாந்தன் 'சு.ரா இறப்பதற்கு முன்பே ஜெயமோகன் அஞ்சலிக்கட்டுரை எழுத பேனா பிடித்துவிட்டார்' என்றார். பல விமர்சனங்கள் இருந்தபோதும்,சில விசயங்களை ஜெயகாந்தனால்தான் துணிச்சலோடு சொல்லமுடிகிறது.) உண்மையைச் சொல்லப்போனால் சு.ரா இறந்தபிறகு ஜெயமோகன் அளவிற்கு அவரைக் கேவலப்படுத்தியவர்கள் யாரும் கிடையாது.

அய்யனாரோ இன்னும் மோசமாக எனக்கு சு.ரா, ஜெயமோகனை விமர்சிப்பதைத் தவிர வேறு வேலையே கிடையாது என்றும் அப்படி விமர்சித்து என்னை எழுத்தாளனைப் போலக் காட்டிக்கொள்கிறேன் என்கிற ரீதியிலும் எழுதியிருந்தார். சு.ரா சர்ச்சை தவிர நான் எழுதிய கட்டுரைகள் மற்றும் கவிதைகளின் தரம் மற்றும் படைப்பாளுமை ஆகியவை குறித்த விசயங்களை அய்யனாரின் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன்.

தமிழ்நதியைப் பொருத்தவரை பிரியமிக்க தோழி மற்றும் நல்ல படைப்பாளி. ஆனால் இலக்கிய அரசியலைப் பொறுத்தவரை அவர் ஒரு குழந்தை. அரசியல் விவாதங்களில் தலையைக் கொடுத்து மாட்டிக்கொள்ள விரும்பாதவர். அரசியலற்ற இலக்கியம் என்று ஒன்று இல்லையென்றபோதிலும் வெளிப்படையாக அரசியலைப் பேசும் அரசியல் படைப்புகளை மிகக்குறைவாகவே எழுதியிருக்கிறார். உதாரணமாக 'பேசப்படாதவள்' போன்ற கவிதைகளைச் சொல்லலாம் (அதுவும்கூட கவித்துவமற்று வெறுமனே அரசியல் ஸ்டேட்மெண்டாகவே முடிந்துவிடுகிறது என்பது எனது கருத்து.) ஈழத்தமிழராயிருப்பதால் தமிழகச் சிறுபத்திரிகை அரசியல் குறித்துப் பரிச்சயமற்றிருக்கலாம். ஆனாலும் தொடர்ச்சியாக சிறுபத்திரிகைகளைக் கவனித்துவந்தாலே அவற்றை உய்த்துணரமுடியும். தமிழ்நதி சு.ரா குறித்த மற்றொரு புரிதலுக்குக் கீழ்க்கண்ட சுட்டிவழி சென்று படிக்கலாம்.

http://keetru.com/literature/essays/sundararamasamy_5.html



the boss- இன் அடிமைகள் :

பொதுவாக என்னுடைய பதிவுகளுக்கு அதிகபட்சம் 20 அல்லது 30 பின்னூட்டங்கள் வரையே வரும். நான் பெரும்பாலானவற்றைத் தணிக்கை செய்யாமல் அனுமதித்தாலும்கூட வெளியிடுவதற்குத் தாமதமாகும் என்பதால் கும்மிப்பின்னூட்டங்கள் கூட அதிகம் வருவதுகிடையாது.

ஆனால் சிவாஜி திரைப்படம் குறித்த விமர்சனப் பதிவிற்கு 60 பின்னூட்டங்கள் வரை வந்திருக்கின்றன. இன்னும் ஒரு 20 பின்னூட்டங்களை நான் நிராகரித்திருக்கிறேன். அதுபோக மட்டுறுத்தலுக்காக காத்திருக்கும் பின்னூட்டங்களின் எண்ணிக்கை அதிகம். எப்படி இவ்வளவு வந்தது?

வேறெப்படி? ரஜினிரசிகர்கள் கோபப்பட்டுத்தான். 'நீ பெரிய புடுங்கியா' 'படத்தைப் பார்த்தா பொத்திக்கிட்டு இருக்கமாட்டியா' என்கிற ரீதியில் பின்னூட்டங்கள். இதிலே பல பின்னூட்டங்கள் சிவாஜி படத்தைப் போல நல்ல காமெடியானவை.

ஒருநண்பர் நான் நிறையக் கருப்புப்பணம் வைத்திருப்பதால்தான் சிவாஜியை எதிர்க்கிறேன் என்கிறார் (பணமே இல்லையே ராசா, கருப்புப்பணத்திற்கு எங்கே போவது?). இன்னொருவரோ சிவாஜி நன்றாக ஓடுவதால் எனக்கு வயிற்றெரிச்சல் என்கிறார். ஆண்கள்தான் இப்படி இருக்கிறார்கள் என்றால் மகாலெட்சுமி என்ற ஒரு பெண்மணி நான் 'காவேரி ஆறும் கைக்குத்தல் அரிசியும் மறந்துபோகுமா' என்ற சிவாஜி படப்பாடலை விமர்சித்ததற்கு 'நதிநீர் இணைப்பிற்காகக் கோடிகோடியாய்க் கொட்டிக்கொடுத்தவர் ரஜினி' என்று ஜோக்கடித்ததோடு மட்டுமல்லாது, 'மொழிப்பிரச்சினையையும் மாநிலப்பிரச்சினையையும் தூண்டிவிடாதீர்கள்' என்றுவேறு விமர்சித்திருந்தார். நான்கூட ஒருகணம் பயந்துபோனேன், என்னுடைய பதிவைப்படித்துவிட்டு முத்துதமிழினி போன்ற கர்நாடகம்வாழ்தமிழர்கள் வட்டாள்நாகராஜை 'அழித்தொழிப்பு' செய்துவிடுவார்களோ என்று.

ஒருநண்பருக்கு நாகரீக உணர்ச்சி அதிகமாயிருக்கும்போல '....k**a k**thi....mudikittu velaya paaru....'
என்று போட்டிருந்தார். திட்டுவது என்று முடிவெடுத்தாகிவிட்டது. நேரடியாக கிறுக்குக்கூதி என்று திட்டவேண்டியதுதானே. அதிலென்ன சுயதணிக்கை? ஆனால் இன்னொருநண்பர் மிகவும் நேர்மையானவர் ங்கோத்தாபாடு, தேவடியாபையா என்றெல்லாம் கூலாகத்திட்டியிருந்தார். இந்தமாதிரி வெளிப்படையான ஆட்களைத்தான் நமக்குப் பிடிக்கிறது.

இதில் ஆகச்சிறந்த நகைச்சுவை என்னவென்றால் இவர்கள் சிவாஜி பதிவோடு நின்றுவிடவில்லை. சுந்தரராமசாமியைப் பற்றிய பதிவாக இருந்தாலும் தி.க, ம.க.இ.க. பற்றிய பதிவாக இருந்தாலும் அங்கேயும் வந்து 'நீ என்ன பெரிய புடுங்கியா? இதைச் சொல்ல நீ யார்?' என்று 'வாழ்த்தினார்கள்'.

ஆகமொத்தம் ரஜினியைப் பற்றியும் எழுதக்கூடாது, சுந்தரராமசாமியைப் பற்றியும் எழுதக்கூடாது, பெரியாரைப் பற்றியும் எழுதக்கூடாது, ம.க.இ.கவைப் பற்றியும் எழுதக்கூடாது. எனக்கு மாயோ- சிங்-காய் என்று சீனாவில் ஒரு நண்பர் இருக்கிறார். அவரைப் பற்றியாவது எழுதலாமா, அல்லது மாயோ-சிங்-காயைப் பற்றி எழுத நீ என்ன பெரிய பிடுங்கியா, கி.கூ என்று வந்து திட்டுவீர்களா, நண்பர்களே?

30 உரையாட வந்தவர்கள்:

  1. nagoreismail said...

    உங்கள் சிவாஜி விமர்சனம் படித்து அதிர்ந்து போய் ஏன் தகாத வார்த்தைகளால் வசை பாட வேண்டும், இத்தனைக்கும் நீங்கள் ரஜினியை பற்றி அவர் செய்யும் சேட்டைகள் பிடிக்கும் என்பது போல தானே இருந்தீர்கள், படம் சரியில்லை என்று விமர்சனம் எழுதினால் எதுக்கு எரிந்து விழுவானேன்..? - நாகூர் இஸ்மாயில்

  2. நாமக்கல் சிபி said...

    //எனக்கு மாயோ- சிங்-காய் என்று சீனாவில் ஒரு நண்பர் இருக்கிறார். அவரைப் பற்றியாவது எழுதலாமா, அல்லது மாயோ-சிங்-காயைப் பற்றி எழுத நீ என்ன பெரிய பிடுங்கியா, கி.கூ என்று வந்து திட்டுவீர்களா, நண்பர்களே?
    //

    :))

    Cool

  3. மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

    :) இந்த இடுகை பிடித்திருக்கிறது. :)

    -மதி

  4. Ayyanar Viswanath said...

    திவாகர்

    என்னுடைய பின்னோட்டத்தை மீண்டும் ஒருமுறை படிக்கவும் உங்களின் தேர்ந்த எழுத்து படைப்பாளியை விமர்சிக்க மட்டும் பயன்படட்டும் என பின்னூட்டமிட்டிருந்தேன்.சேறடிப்பது வருத்தமளிக்கிறது என என் வருத்ததை பதிவு செய்திருந்தேனே தவிர உங்களின் எழுத்து குறித்த விமர்சனமெதுவும் நான் எழுப்பவில்லை என் வலையுலக முன்மாதிரிகளில் ஒருவராக,என் நேசத்திற்க்குரிய எழுத்திற்க்கு சொந்தக்காரனாக, சில புரிதல்களில் என் மதிப்பிற்குரிய எதிரியாக நிறையகுடித்தால் வெகு நேரம் பேசும் ஒரு ஆளுமையாக சுகுணா திவாகர் என்னிடமிருக்கிறார்.

    மனசாட்சி என்ற வார்த்தையை பயன்படுத்த சொன்னதால் என் புரிதல்களை அன்பை இது போன்று வெட்ட வெளிச்சமாக்கியது ஒரு அசூசை உணர்வைத் தருகிறது.

  5. மிதக்கும்வெளி said...

    /என்னுடைய பின்னோட்டத்தை மீண்டும் ஒருமுறை படிக்கவும் /

    பின்னோட்டமா, பின்னூட்டமா தல?
    /என் வலையுலக முன்மாதிரிகளில் ஒருவராக,என் நேசத்திற்க்குரிய எழுத்திற்க்கு சொந்தக்காரனாக, சில புரிதல்களில் என் மதிப்பிற்குரிய எதிரியாக நிறையகுடித்தால் வெகு நேரம் பேசும் ஒரு ஆளுமையாக சுகுணா திவாகர் என்னிடமிருக்கிறார்/

    நான் நிறைய குடிச்சிட்டு உங்ககிட்ட எங்கங்க பேசுனேன்? ஆனால் நீங்க இப்படியெல்லாம் புகழ்றதைப் பார்த்தால் உணமையிலேயே போதை ஏறத்தான் செய்கிறது.

  6. Anonymous said...

    Jus as a info, your Sivaji review(in a pdf doc) is on circulation as forward mail among some s/w company employees.

  7. Anonymous said...

    naanga kooththu adikkarathukku thaane poranthirukkom

    kooththu kummi kondaattam....

    meendum varuven...

    thamizhil ezhuthuven...

    pot"tea"

  8. Arasu Balraj said...

    வரவணையானுக்கு போன் செய்து ம.க.இ.க தோழர்கள் / ஆதரவாளர்கள் சிலர், அவரை மிரட்டியிருக்கிறார்கள் என்ற செய்தி வருத்தத்திற்குரியது. அவ்வாறு செய்த நபர்களை நானும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.தோழர்கள் இவ்வாறு மட்டுமீறி, அனாவசியமாக உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்க வேண்டும்.

  9. லக்கிலுக் said...

    இந்தப் பதிவு செமையான சரவெடி!

  10. Pot"tea" kadai said...

    வெளியே மிதக்கும் அய்யா, நான் இப்போதெல்லாம் புகைப்பதில்லை மேலும் சில மூலிகைகளை நுகர்வதுண்டு. அதனால் என்னுடைய மூளைக்கு அதிகமாக வேலை கொடுத்து பின்னூட்டங்கள் போடுவதில்லை அப்படியே போட்டாலும் லாக் இன் செய்வதில்லை அனானிமஸ் காமெண்ட் மட்டும் தான். இதில் நான் அடித்த கூத்து எந்த கூத்து என்று கண்டு பிடித்தீர்கள்...:))

    கொண்டைய மறைக்கலியேடா பொட்"டீ" என்று நீங்களும் தோழர் வரவணை அய்யா போலவே தவறாகவெதுவும் எண்ணி என்னுடைய் ஆறிய கூத்துகளை இன்னபிற அய்க்கிய அயோக்கிய கூத்துகளோடு ஒப்பிட வேண்டாமென தயை கூர்ந்து கேட்டுக் கொள்கிறேன்.

    ஒரே ஒரு அனானி காமெண்ட் போட்டேன் ஆனால் அது நீங்கள் நினைக்கும் புடுங்கி காமெண்ட் இல்லை அய்யா.

    இப்போதெல்லாம் கூத்தடித்து ரெம்ப நாளாச்சி...லாங் வீக்கெண்ட் வேற நைட்டு "மேட் கவ்" போய் தான் எதாச்சும் பண்ணனும்

    :))))))))))))))

  11. Anonymous said...

    //எனக்கு மாயோ- சிங்-காய் என்று சீனாவில் ஒரு நண்பர் இருக்கிறார். அவரைப் பற்றியாவது எழுதலாமா, அல்லது மாயோ-சிங்-காயைப் பற்றி எழுத நீ என்ன பெரிய பிடுங்கியா, கி.கூ என்று வந்து திட்டுவீர்களா, நண்பர்களே?//

    அப்படியே என்னுடைய மயன்மர் நண்பர் ஆங்-பாங்-சுகாய் பற்றியும் கதையுங்களேன்!!

  12. Anonymous said...

    //எனக்கு மாயோ- சிங்-காய் என்று சீனாவில் ஒரு நண்பர் இருக்கிறார். அவரைப் பற்றியாவது எழுதலாமா, அல்லது மாயோ-சிங்-காயைப் பற்றி எழுத நீ என்ன பெரிய பிடுங்கியா, கி.கூ என்று வந்து திட்டுவீர்களா, நண்பர்களே? //

    யோவ் திவாகரு! என் மச்சான திட்டின டோண்டுவ விட்டு உனக்கு போலி பேர்ல பின்னால ஊட்டம் போடுவேன்!:-))

  13. Arasu Balraj said...

    பின்னூட்ட மட்டுறுத்தல் இருந்தால் எடுத்து விடுங்கள். ஏனென்றால், அது இருப்பது போலவே தெரியவில்லை. ஏனென்றால் செந்தழல் ரவியின் பொறுக்கி சவடால் அனுமதிக்கப்படுவதற்கான அவசியம் எனக்கு புரியவில்லை.

    @செந்தழல் ரவி
    டேய் மரியாத தெரிஞ்ச மேதாவி, முடிஞ்சா செஞ்சு பாரேன், எதுக்காக வீணா வாய்ச்சவடால்?

  14. மிதக்கும்வெளி said...

    ரவி ஏன் இப்படி ஒரு கமெண்டைப் போட்டார் என்று தெரியவில்லை. அது போலி கமெண்ட் போலவும் தெரியவில்லை. கிளிக் செய்தால் அவருடைய வலைத்தளத்திற்குத்தான் போகிறது. ரவிதான் பதில் சொல்லவேண்டும்.

    பாவெல்,

    விரைவில் எழுதுகிறேன்.

  15. Arasu Balraj said...

    இந்த கருத்துச் சுதந்திரத்தின் சூட்சுமம் எனக்குப் புரியவில்லை.யார் வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் இங்கு வசை பாடி விட்டு, பதில் சொல்லிக் கொள்ளலாமா?

  16. ஸ்டாலின் said...

    அய்யா வெளியே மிதப்பவரே நீங்க ரொம்ப நடுநிலையானவருங்க... செந்தழல் பின்னூட்டத்த ஏன் அனுமதிச்சீங்கனு தெரியல...டேய் செந்தழல் உனக்கு என்ன பிரச்சனை, எதுக்கு இப்ப திடீர்னு எகிர்ற.. ஏண்டா உனக்கு எந்த அடிப்படையில கோபம் வருதுன்னாச்சும் சொல்லேண்டா.. உன்னோட கருத்துக்காச்சும் நீ உண்மையா இருக்கியானு தெரிஞ்சுக்குவோம்....

    ஸ்டாலின்

  17. Anonymous said...

    தல.. ரவி பேரில் வந்திருக்கும் கமெண்ட்.. அவர் போட்டது இல்லை. அதர் ஆப்சன் வழி போடப்பட்டிருக்கிறது. இது "அவங்க" வேலையாக கூட இருக்கலாம். அதை அழித்து விடலாம்.

  18. We The People said...

    சுகுணா,

    அசத்தல்! நல்ல அலசல்!

    நன்றி,


    நா ஜெயசங்கர்

    பி.கு: ரவியின் பின்னூட்டம் போல் வந்திருப்பது போலி என்று நினைக்கிறேன். கிளிக் செய்தால் அவர் பதிவுக்கு போகக்கூடாது, அவருடைய ப்ரோபைல்லுக்கில்ல போகனும்!!!

  19. Anonymous said...

    \\செருப்பைக் கழட்டி அடித்தால் அசுரன் திருந்துவான்//

    செந்தழல் துரைக்கு ஏன் இப்படி கோபம்
    பொத்துக்கொண்டு வந்துவிட்டது,அதுவும்
    செருப்பைக்கழட்டி அடிக்கிற அளவுக்கு
    நெடு நாளைய
    கோபமோ ?

    அசுரன் மீது அவருக்கு கோபம் வருகிறது
    என்றால் ஒன்று அவர் பார்ப்பனியத்திற்க்கு
    ஆதரவானவராக இருக்க வேண்டும்,ஆனால்
    அவ்வாறு தெரியவில்லை,
    அல்லது அவர் மறுகாலனியத்திற்க்கு முன்
    மண்டியிடும் அடிமையாக இருக்க வேண்டும்
    அதையும் நாம் உறுதியாக கூற முடியாது.

    நான் என்ன நினைக்கிறேன் என்றால்
    முட்டாளும்,அற்ப்பவாதியுமான
    நடுத்தரவர்க்கம் வெளியே வந்து விட்டான்
    என்று கருதுகிறேன்.

    அப்படியும் இல்லை இப்படியும் இல்லை
    என்றால் செந்தழல் ரவி யோக்கியமான
    காரணத்தை நேர்மையோடும், நெஞ்சுரத்தோடும்
    கூற வேண்டும் இல்லையெனில் அவரை நான்
    அற்ப்பவாதியாகவும்,முட்டளாகவும்,கோழையாகவும்
    கருத வேண்டியிருக்கும்.

    ஏனெனில் அவர் செருப்பைக்கழட்டி அடிப்பேன்
    என்று கூறியுள்ளார், செருப்பைக்கழட்டி அடிப்பதை நான்
    தவறு என்று கூற வில்லை,சிலருக்கு அதில்
    அடிவாங்கினால் தான் உரைக்கும்,
    ஆனால் அடிப்பதற்கு முன் வீரனாக இருந்தால்
    காரணத்தை சொல்லிவிட்டு அடிப்பான்,காரணத்தை
    சொல்லி சொல்லியே அடிப்பான்,
    தொடை நடுங்கிகள் சொல்ல மாட்டார்கள்
    எனவே அவர் வீரனாகவே வருவார் என்று கருதுகிறேன்.

    பாவெல்.

  20. Anonymous said...

    அய்யா மிதக்கும் வெளி
    ரவி பெயரில் பின்னோட்டம் போட்டது மலெசியா மூர்த்தி..இப்படி உங்கள் பதிவி மட்டும் இல்லை பல பதிவில் இப்படி தான் அந்த இழிபிறவி பின்னோட்டம் இட்டு வருகிறது

    -காரணம் ரவி நேற்று மலேசியா இழிபிறவிக்கு விடுத்த எச்சரிக்கை பதிவு.

  21. அசுரன் said...

    வணக்கம் மிதக்கும் வெளி,

    வரவணையானுக்கு வந்ததாக அவர் எழுதியிருந்த தொலைபேசி அழைப்பு குறித்த கட்டுரையிலேயே அது மக இக விடமிருந்து வந்ததாக இருககாது என்றே தெரிவித்திருந்தா. உங்களுக்கும் கூட அந்த விசயத்தில் சந்தேகம் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் உங்களது கட்டுரை வரிகள் ஏதோ மக இக தோழர்களிடமிருந்து தொலை பேசி வந்ததாக ஒரு கருத்தை விட்டுச் செல்கிறது.

    வரவனையானுடைய அந்த குறிப்பிட்ட கட்டுரையின் தலைப்பு பொதுவாக விவாதத்தை திசை திருப்பி மடை மாற்ற ஏதுவாக மக இக மீது தவறான கருத்தை ஏற்படுத்துவதாக் இருந்தது(கட்டுரை தலைப்பு). கட்டுரையின் உள்ளே அதன் கடைசிப் பகுதியில் தற்காப்பு யுத்தியை கையாண்டிருந்தார்.


    மற்றபடி உங்களது முந்தைய கட்டுரையில் தோழர் குரல்கள் என்பவரினுடைய எதிர்வினை எதிர்பாராதது. அதனை விமர்சித்து பின்னூட்டமிடுகிறேன்.

    அசுரன்

  22. அசுரன் said...

    செந்தழல் ரவி பெயரில் ஒரு போலி பின்னுட்டம் உள்ளது. ரவியை எனக்கு அவரது எழுத்தின் மூலம் தெரியும். திட்டுவதாய் இருந்தால் எனது தளத்திலேயெ பின்னூட்டமிடுவார் அவர். எனவே அதனை நீக்கவது நலம் என்று கருதுகிறேன்.

    அசுரன்

  23. அசுரன் said...

    வர்வனையான் அவர்கள் கிளப்பிய வதந்தியை உறுதிப்படுத்தும் விதமாக நிலை நிறுத்தும் விதமாக தொலைபேசி குறித்த சம்ப்வத்தை நீங்கள் உறுதிப்படுத்தி போட்டுள்ளது வருந்தத்தக்கதே. எனவே மீண்டும் எனது வருத்தத்தை பதிவு செய்து கொள்கிறேன்.

    ம க இக தோழர்களின் கட்டுபாடு குறித்து உங்களுக்கு போதிய அறிமுகம் இருக்கும் என்றே கருதுகிறேன். அப்படியிருந்தும் கூட வரவனையானே உறுதியாக சொல்லாத ஒரு தகவலை நீங்கள் உறுதிப்படுத்தி விமர்சித்தது வருத்தமளிக்கிறது.

    அசுரன்

  24. மிதக்கும்வெளி said...

    சொல்வதைப் போல புரொபைல் போட்டோ வராததால் அனேகமாக அது போலி கமெண்டாக இருக்கலாம். செந்தழல் ரவி இப்படிப் பின்னூட்டம் போடுகிற ஆள் இல்லை என்று நான் நம்புவதால் இப்போதைக்கு அந்தப் பின்னூட்டத்தை அழித்துவிடுகிறேன். ஆனால் ஏன் ரவி வந்து பதில் சொல்லவில்லை என்று தெரியவில்லை. இத்தனைக்கும் ரவி என்னுடைய பக்கத்தைத் தொடர்ந்து படிப்பவர்.

  25. Anonymous said...

    உங்கள் பதிவில் நான் பின்னூட்டம் இடவில்லை...

    சிலகாலம்..இனிவரும் பின்னூட்டங்களையும் அனுமதிக்கவேண்டாம்...

    கோபம் கொண்ட அரசுபால்ராஜுக்கும் அறிந்து ஆதரவளித்த அசுரனுக்கும் நன்றிகள்....

    நீக்கிய உமக்கும் நன்றி...

    - இந்த பின்னூட்டமும் Other Option la தான் போடுறேன்...பப்ளிஷ் செய்யவும்...!!!

  26. Arasu Balraj said...

    இப்படியான பதிவுப் பகடிகளில் எனக்கு அறிமுகம் இல்லாததால், இத்தவறு நிகழ்ந்து விட்டது.தவறுக்கு வருந்துகிறேன் செந்தழல் ரவி. ஆயினும், இன்னமும் சுகுணா திவாகர் அப்பின்னூட்டத்தை அனுமதித்ததை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்கான பொறுப்பான பதில் தருவது அவருக்கு அவசியமாகப் படவில்லை போலிருக்கிறது.
    வாழ்க ஜனநாயகம்!

  27. அசுரன் said...

    ///வர்வனையான் அவர்கள் கிளப்பிய வதந்தியை உறுதிப்படுத்தும் விதமாக நிலை நிறுத்தும் விதமாக தொலைபேசி குறித்த சம்ப்வத்தை நீங்கள் உறுதிப்படுத்தி போட்டுள்ளது வருந்தத்தக்கதே. எனவே மீண்டும் எனது வருத்தத்தை பதிவு செய்து கொள்கிறேன்.

    ம க இக தோழர்களின் கட்டுபாடு குறித்து உங்களுக்கு போதிய அறிமுகம் இருக்கும் என்றே கருதுகிறேன். அப்படியிருந்தும் கூட வரவனையானே உறுதியாக சொல்லாத ஒரு தகவலை நீங்கள் உறுதிப்படுத்தி விமர்சித்தது வருத்தமளிக்கிறது.
    ///

    Mithakkum Veli, Don't you have anything to comment about this?

    I become curious on yur Silence.. Dont mistake me.

    Ausran

  28. மிதக்கும்வெளி said...

    தோழர்.அசுரன்,

    த்னது 'ம.க'இ'க தோழர்களுக்கு' என்ற பதிவில் தன்னைச் சிலர் மிரட்டுவதாகவும் ஆனால் அவர்கல் ம.க.இ.கவாக இருக்காது என்றும் எழுதியிருந்தார் என்பது உண்மைதான். ஆனால் தனிப்பட்ட முறையிலும் அதற்குப் பின் அவர் எழுதிய 'டிரிங்..டிரிங்' பதிவில் மறைமுகமாகவும் தன்னை மிரட்டியது ம.க.இ.க தோழர்கள்தான் என்று தெரிவித்தார். தனிப்பட்டமுறையில் உங்களிடம் தெரிவித்ததைவைத்து நீங்கள் பொதுவெளியில் ம.க.இ.கவைக் கண்டிப்பது என்ன நியாயம் என்று நீங்கள் கேட்டால் நீங்கள் கேட்கும் கேள்வியில் நியாயம் இருக்கிறதுதான். ஆனால் இதற்கு நான் செந்திலைத்தான் சாட்சிக்கு அழைக்கவேண்டும். உண்மையில் தன்னை யார் போனில் மிரட்டியது யார் என்பதைச் செந்தில்தான் வெளிப்படையாகப் பேசவேண்டும்.

  29. முரளிகண்ணன் said...

    பின்னூட்டங்களை பற்றி கவலை இன்றி தங்கள் பணியை தொடருங்கள்

  30. Anonymous said...

    இப்படி எல்லாம் கேவலமாக எழுதி, cheap publicity க்கு ஆசைப்படும் பேடியே, நீ பெரிய புத்திசாலி என்று நினைப்பா? தமிழ் நாட்டில் வெளியாகும் 90% படங்களில் லாஜிக் கிடையாது.

    அது சரி, பெரிய எழுத்தாளன் என்று நினைத்துக்கொண்டு இப்படி எதையாவது உளறுவதை விட, வேறு ஏதாவது வேலை இருந்தால் பார்.

    நீ உண்மையிலேயே விமர்சனங்களை வரவேற்பவனாக இருந்தால், இந்த பின்னூட்டத்தைப் போடு. ஒரு நல்ல எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய அடிப்படை தகுதி கூட உனக்கு இல்லை என்பதால், உனக்கு மரியாதை அவ்வளவுதான்.