மின்புலத்தீவுகள்மணம்- கூடு - வெளி - சுடர் - அலையம் - குவியம் - இணையம் - மய்யம் - மய்யம் என்பது அதிகார உற்பத்தி - அதிகாரம் ஒரு காற்றைப் போல விரிந்து பாவுவதாய்ப் போலத் தோன்றுகிறதெனினும் அது வலையாய் விரிகிறது - வலையில் இரைகளும் சிறுபூச்சிகளும் மாட்டுமெனினும் சிலந்தியும் அதே வலையில் உள்ளதென அறிக - "நாபல புணர்ந்த எச்சில்வார்த்தைகளே எனக்கும் பரிமாறப்பட்டிருக்கின்றன. பறவைகள் கூடுதிரும்பும் சாயங்காலப் பொழுதென்றில் எவராலும் அழைக்கப்படாத பெயரை எனக்கு நானே சூட்டிக்கொள்வேன்" - பெயர் - இலி- பெயர் : மொழியின் மலம், காலத்தின் எச்சம்- வாயில் திணிக்கப்பட்ட அடையாளத்தின் துவக்கு - வெடித்துச்சாகலாம் அல்லது நுரைகொப்புளிக்க உமிழலாம் - பாம்பின் முட்டையில் ஆம்லேட் வார்க்கும் தூயாவிண்ட சமையல்கட்டு - சமையல்கட்டில் ஒலிக்கும் சன்னதமான சங்கீதம் புலியின் உறுமலாய்ப் பரவித் தெறிக்கிறது - "யோக்கியவான்கள் முதல் கல்லை எடுக்கட்டும்" - வரவணையானின் பொன்மொழி - "சொன்னவர் யோக்கியவான் இல்லையா? - கல்யாண் ஆவியின் கேள்வி - அய்யா, சின்ன அய்யா, தினமலர் தாக்குதல் - "உடன்பிறப்புகளுக்கு வெட்கமுமில்லை, வேதனையுமில்லை" - குழலி - உடன்பிறப்பே கழக உடன்பிறப்பே, அண்ணாவின் வழியில் அயராது உழைக்கும் பொன்னான கலைஞரைக் கண்ணாகப் போற்றும் உடன்பிறப்பே" -லக்கிலுக் - "உடன்பிறப்புகளுக்கு வெட்கமும் உண்டு வேதனையும் உண்டு" (கலைஞருக்கு மட்டும் கிடையாதா? - சாகரனின் ஆவியின் கேள்வி) - அலையாய்ப் பரவுகிறது வலை - வலையில் தெறிக்கிறது நுரை - கடைசியில் மிஞ்சும் கேள்வி - மேற்கண்ட இருவாக்கியங்களும் நவீன இலக்கியமா, விஜய டி. ஆரின் அடுத்த படத்திற்கான வசனமா? - உடை - சிலைகளை உடைத்து குழந்தைகளிடம் கையளி - முடிந்தால் அதற்கான பொம்மையை அது தயாரித்துக்கொள்ளும்

1 உரையாட வந்தவர்கள்:

  1. Anonymous said...

    extrodinary view superb!!!