மதுவிலக்கை மறுத்த பெரியார்(பெரியார் என்றாலே நம் நினைவிற்கு வரும் பிம்பம் கள் ஒழிப்பிற்காக அய்ந்நூறு தென்னை மரங்களை வெட்டிச்சாய்த்தது. பாடப்பொத்தகத்திலும் இதுவே பதியவைக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரியார் காங்கிரசில் இருந்த காலத்தைத் தவிர மற்ற காலகட்டங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் மதுவிலக்கை எதிர்த்தே வந்துள்ளார் என்பதைக் கீழ்க்கண்ட அவரது கூற்றுகள் விளக்கும். இந்த மேற்கோள்கள் முனைவர்.மா.நன்னன் அவர்கள் தொகுத்த 'பெரியார்கணினி' நூலினின்று எடுக்கப்பட்டவை. மூலப்பிரதிகளை ஆராய்ந்து விரிவாக எழுதும் எண்ணமும் உண்டு. பொதுநீதி, பொது அறம், பொது ஒழுக்கம் என்னும் பெருங்கதையாடல்களிடிப்படையிலான பேரறங்களை அவர் எப்போதும் மறுத்தார் என்பதற்கு அவரது கீழ்க்காணும் வார்த்தைகளே சாட்சி.)

*மதுபானத்தால் பொருளாதாரக்கேடு ஏற்படுவதும் அறிவுக்கேடு ஏற்படுவதும் செயற்கையாலே ஒழிய இயற்கையால் அல்ல.
- கு. அ - 03.10.37*

பொதுவாக மது அருந்துவதையே குற்றமென்று சொல்லிவிடமுடியாது. கெடுதி உண்டாக்கும்படியானதும் பொருளாதாரத்திலும் அறிவிலும் கேடுவிளைவிக்கும்படியானதுமான மதுபானமே இன்று விலக்கப்படவேண்டியதாகும். அதைத்தான் நாம் மதுவிலக்கு என்பதே ஒழிய மதுவையே யாரும் எப்போதும் அடியோடு வெறுத்ததுமில்லை
- கு. அ - 03.10.37

* மதுவிலக்கு சர்க்காரின் மனதறிந்த ஒரு மோசடியாகவே இருந்துவருகிறது. இதனால் உழைப்பாளிமக்கள் உற்சாகம் குறைந்து சோம்பேறிகளாகவே ஆக்கப்படுவர்.

- வி - 29.11.62.
* பொதுவாக மதுவிலக்கு என்பது இயற்கையோடு போராடும் முட்டாள்தனமான போராட்டமேயாகும்.

- வி - 9.11.68

* மது அருந்துபவர்கள் எல்லோரும் யோக்கியப்பொறுப்பற்றவர்கள் என்றும் மது அருந்தாதவர்கள் எல்லோரும் யோக்கியப்பொறுப்புடையவர்கள் என்றும் கருதிவிடக்கூடாது.

- கு. அ - 16.02.69

* தீபாவளிக்கு லீவுவிடுவது எவ்வளவு முட்டாள்தனமோ அதைவிட இரண்டுபங்கு முட்டாள்தனம் மதுவிலக்கை எடுக்கமாட்டேன் என்று பிடிவாதமாக இருப்பதுமாகும்.

- வி - 21.10.69* மதுவிலக்கு என்பது ஒரு அதிகார ஆணவமே ஒழிய மனிதத்தன்மையில் சேர்ந்ததல்ல என்பதை எங்குவேண்டுமாலும் நிரூபிக்கத்தயார்.

- வி - 17.03.71

* பத்து கள்ளுக்கடைகள் மூடப்படுவது ஒரு கோயிலைத்திறப்பதற்குச் சமம். கோயிலை மட்டும் வைத்துக்கொண்டு கள்ளுக்கடைகளை மூடவேண்டுமா?

- வி - 20.06.1973

வி - விடுதலை, கு.அ - குடியரசு.

6 உரையாட வந்தவர்கள்:

 1. Anonymous said...

  இந்த மாதிரி உளறின கிழத்துக்கு பெரியார்,தமிழர் தந்தை என்று பட்டம் சூட்டி மகிழும் திராவிட தமிழ் கும்பல்,உண்மையிலேயே காட்டுமிராண்டி கும்பல் தான்.பேசாம இந்த திராவிட தமிழ் கும்பலை, ஓ பி ஸி யிலிருந்து மிகவும் பாக்வேர்டான எஸ் டி ரகத்துக்கு மாற்றி, அரசே அறிக்கை விட்டுடலாம்.இது நியாயம்னு உலகமே ஒப்புக்கொள்ளும்.

 2. Anonymous said...

  நீங்க எங்க பிறந்து வளர்ந்தீங்க?
  திலகவதி:

  திடீர் நகர் பள்ளத்துல தான் நான் பொறந்து வளந்தது. நான் படிக்கல. 14 வயசுல என் சொந்தக்காரு மகேஷை காதலிச்சு கல்யாணம் செஞ்சுக்கிட்டேன். 15 வயசுல தாயானேன். இப்போ 15 வயசுல தேவி என்ற பொண்ணும் முருகா, மூர்த்தின்னு 11 வயசுல இரட்டபோரு ஆம்பளப்பசங்க இருக்காங்க. தேவியை நாலாவது வரை மட்டுந்தான் படிக்க வைக்க முடிஞ்சுது. பசங்க ரெண்டுபேரும் இப்போ ஐஞ்சாவது படிக்கிறாங்க.

  உங்க கணவர் என்ன செய்றார்?
  திலகவதி:

  மீன் பிடிக்கத்தான் போவாரு. வூட்டுக்கு ஒழுங்கா காசு கொடுக்க மாட்டாரு. எல்லாத்தையும் குடிச்சிட்டு வந்துடுவாரு. அவரு குடிச்சி குடிச்சே செத்தாரு. 2000த்துல குடியிலேயே தூக்குப் போட்டுகினாரு. 24 வயசிலேயே விதவை யாயிட்டேன். மூனு புள்ளைவுள வைச்சிகினு குடும்பம் நடத்த ரொம்ப கஷ்டப்பட்டேன்.

  குடும்பத்தை எப்படி பாத்துக்கிட்டிங்க?
  திலகவதி:

  கடலுக்குப் போய் மீனு வாங்கினு போயி தெரு மேல விப்பேன். நூறு அம்பது கிடைக்கும். சில நாளுள ஒன்னும் கெடைக்காது. நட்டமா போயிடும். இப்படியே தான் காலம் போவுது.

  கிட்னியை விற்க எப்படி துணிஞ்சிங்க?
  திலகவதி:

  கடன் அதிகமாயிடுத்து. என் பொண்ணு வயசுக்கு வர்ற மாறி இருந்தா. அவளுக்கு மஞ்சாதண்ணி நடத்த பணம் வேணுமேன்னு கவல வந்துடுத்து; யான் வீட்டுக்குப் பக்கத்தில இருக்குற லஷ்மிக்கிட்ட (இவருக்கு முன் கிட்னி கொடுத்தவர்- தற்போது உயிருடன் இல்லை ஒரு விபத்தில் மரண மடைந்துவிட்டார்) என் பொண்ணு வயசுக்கு வந்துவிட்டா சடங்கு செய்ய பணம் வேணும், அதனால எனக்கும் ஒரு வழிகாட்டுன்னேன். லஷ்மிக்கு ஒரு பொண்ணும், ஒரு புள்ளையும் இருக்கு. லஷ்மிதான் புரோக்கர்கிட்ட பேசிவுட்டாங்க. புரோக்கர் கொருக்குப்பேட்டை கருப்பையாவும் பிரகாஷும் பென்சில் பேக்டரி கிட்ட வந்து பேசனாங்க. பேசும் போது 1.5 லட்சம் தர்றதா சொன்னவங்க டெஸ்ட்டுக்கெல்லாம் போய்வந்த பொறவு 80 ஆயிரம்தான் கிடைக்கும்னு சொல்லிவிட்டாங்க. என் குடும்ப நெலமை ஏதாவது கிடைச்சா போதும்னு சம்மதிக்க வைச்சுது. என் அம்மா புள்ளைவக்கிட்ட வீட்டு வேலைக்குப் போறதா சொல்லிட்டு யாருக்கும் தெரியாம மதுரைக்கு கருப்பையா கூட போனன்.

  மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பித்திரிக்கு இட்டுக்கினு போன கருப்பையா, அங்க டாக்டர் கேள்வி கேட்டா எப்படி எப்படி பதில் சொல்லனு முன்னு சொல்லிக்கொடுத்துச்சி. நான் கிட்னி கொடுக்கப்போற முதலாளியோட மில்லில் என் புருஷன் வேலச் செய்றதாவும், முதலாளியின் குடும்பத்துல இருக்கவுங்க கிட்னி அவருக்கு பொருந்தலன்னு, இவ்வளவு காலம் என் குடும்பத்கு சோறு போட்ட முதலாளி உசுரு பொழைக்க வேணுன்னு அன்பால விருப்பப்பட்டு நான் தானம் கொடுக்க வந்தன்னு சொல்லச் சொன்னான். நானும் அப்படியே சொன்னேன். எங்கிட்ட ரேஷன் கார்டு இல்லை. கருப்பையா அவனுடைய ரேஷன் கார்டை கொடுத்து என்னுடைய புருஷன்னு டாக்டர் கிட்டச் சொன்னான். ஆஸ்பத்திரியில அவன் பொண் டாட்டிப் பேர என் பேரச் சொல்லச் சொன்னான். கணவன்னு சொல்லி கருப்பையாவே ஒப்புதல் கையெழுத்துப் போட்டான். நானும் டாக்டர் காட்ன எல்லாப் பேப்பர்லியும் ஒப்புதல் கையெழுத்துப் போட்டன்.

  http://www.keetru.com/anangu/dec06/thilagavathy.html

 3. Anonymous said...

  மேலே அனானியாக உளறிய பாப்பான் போல பொண்டாட்டியை கூட்டு கொடுத்துகூட்டிகொடுத்து எப்சியாக இருப்பதை காட்டிலும் திராவிட கும்பல் எஸ்சி எஸ்டியாக இருப்பதே நலம்

 4. Anonymous said...

  பெரியார் கஞ்சா,அபின்,பிரவுன் சுகர் போன்றவற்றையும் தடை செய்யக்கூடாது, தடை செய்வது மனித இயற்கைக்கு விரோதமானது என்று கூறியிருப்பார்.தேடி
  எடுத்துப் போட்டால் டாஸ்மாக் கடைகளில் அவைகளையும் விற்க வேண்டும் என்று கோரிக்கை
  வைக்கலாம்.

 5. Thangamani said...

  //பொதுநீதி, பொது அறம், பொது ஒழுக்கம் என்னும் பெருங்கதையாடல்களிடிப்படையிலான பேரறங்களை அவர் எப்போதும் மறுத்தார்//

  பதிவின் பேசுபொருள் இது என்று நீங்கள் கொட்டை எழுத்தில் போட்டிருக்கிறீர்களே!

 6. Anonymous said...

  பின்னூட்டத்தில் ரவி சிரிநிவாஸ் என்பதன் மீது மெளசை வைத்தால் திராவிடர் ஒர்க் என்று வருகிறதே. அதர் ஆப்சனை பயன்படுத்தி வேறு யாரோ இட்டிருக்கிறார்களா இல்லை திராவிடர் ஒர்க் இணையதளத்தில் அவருக்கு தொடர்பிருக்கிரதா?பிளாக்கரில் கணக்கு வைத்திருப்பவர்கள்
  அதர் ஆப்சனை பயன்படுத்த வேண்டியதில்லையே.