நிசப்தம் குலைக்கும் நடுநிசி
தனிமையின் நாவுகள்
தீண்டித்தகித்தவேளை
நண்பர்கள் உள்ளாடைகளையும்
களவாடிப்போயிருந்தார்கள்.
தோழிகளோ
தேவதைகளாகும் பெருவிருப்பத்தில்
இறக்கைகளின் விலைவிசாரிக்கப்
போயிருக்கிறார்கள்.
நடுத்தெருவில் தேம்புகிறது கவிதை.
சாய்ந்து அழலாமெனில்
மடிகளெங்கும் காத்திருக்கின்றன
துருத்திநிற்கும் கொலைவாள்கள்.

1 உரையாட வந்தவர்கள்:

  1. Ayyanar Viswanath said...

    கழிவிரக்கமும் வன்மமும் சரியா வெளிப்பட்டிருக்கு திவாகர்
    நான்கு வரியில் ஒரு சுயத்தை சாகடிப்பது படைப்பின் வெற்றியா படைப்பாளியின் குரூரமா?