வா


மார்க்ஸ், அ.மார்க்ஸ்
கட்டவிழ்ப்பு, கோணங்கி
தெறிதா, பின்நவீனத்துவம்
தேசிய இனம், பெரியார்
என் வாசிப்புகளின் முடிச்சவிழ்ந்து
உன் கழுத்தில் சுருக்கிற்று.
அதிகாரமறுப்புப் பேசும்
என்னெதிரிலமர்ந்திருக்கும் உன்கண்களில்
நிழலாடுகிறது
என் சிரசில் முளைத்தகொம்புகள்.
விபத்தாய்க் கற்பிழந்த பெண்
வாழ்க்கையில் சோரம்போனதாய்
வசனம் பேசும் ஏதேனும்
அபத்தமான சினிமா போவோம் வா.

8 உரையாட வந்தவர்கள்:

 1. Anonymous said...

  :-)

  இது கவிதைக்கும் கருத்துரைப்புக்கும் இடைப்பட்ட/டு அவசரப்புணர்ச்சியிலே பிறந்து "வா" என வந்திருப்பதை விட்டுவிடுவோம். ஆனால், வரிக்கு வரி பிடித்திருக்கிறது

 2. Ayyanar Viswanath said...

  தல இந்த படத்தையெல்லாம் எங்க புடிக்கிறீங்க!

 3. லக்கிலுக் said...

  :-(

  வர வர ரொம்பவும் தாவூ தீருது உங்க வலைப்பூ பக்கம் வந்தா...

 4. Arasu Balraj said...

  :)

 5. Anonymous said...

  சந்திப்பு ரொம்ப ஒளராத;

  நாட்டை விற்க்கும் காங்கிரசு துரேகிகளுக்கு கோவனமும் நீங்கள் தான்,
  ஜட்டியும் நீங்கள் தான் என்பது ஊரெ நாறி நாற்றமெடுக்கும்
  விசயம் அப்புறம்
  என்ன வெங்காயத்துக்கு தனியார்மய எதிர்ப்பு வேசம் போடுற நீ.

  தனியார்மய தாசர்கள்.
  ------------------------
  சாதி ஒடுக்குமுறையை பற்றி பேச சந்திப்பு உனக்கு துளி கூட
  அருகதையே இல்லை ஏன்னென்றால் உன்னுடைய கட்சியில் சாதி
  வெறியன்களும்,கட்டப்பஞ்சாயத்து ரவுடிகளும் இல்லை என்று சொல்ல முடியுமா
  உன்னால் ?

  உதாரனத்திற்கு நான் ஒரு அண்னனை சொல்கிறேன் அவர் KK நகர் DYF1
  தலைவர் காமராஜ்,அவ்ருடைய வேலையே கட்டப்பஞ்சாயத்து செய்வது தான்.

  அப்புறம் நம்ம மேற்கு வங்க "தோழர்",
  அதான் நான்
  முதலில் பாப்பான் அப்புறம் தான் கம்யூனிஸ்டுனு சொன்னாரில்ல
  அந்த "தோழர்"

  எனவே சந்திப்பு ஒன் கட்சி இருக்கிற லட்சணத்தில் நீ சாதி பற்றியெல்லாம்
  பேசவே கூடாது.

  லும்ப்பன் பார்ட்டி ஆப் இந்தியா
  ----------------------------

  ம.க.இ.க இடஒதுக்கீட்டை எதிர்க்கிறது என்று சொன்னாயே உன்னிடம்
  எந்த முட்டாள் அப்படி சொன்னான்?
  சரிசரி CPM முட்டாளாகத்தானிருக்க வேண்டுமென்பதில்லையே!

  அறிவு கெட்ட சந்திப்பே ஆளும் கும்பலுக்கு தரகு வேலை செய்யும்
  உன்னுடைய கட்சி தான் இடஒதுக்கீட்டை எதிர்க்கிறது,
  உன்னுடைய
  கட்சி எடுத்திருப்பது ஒரு நிலைப்பாடு அந்த கேடுகெட்ட நிலைப்பாட்டை
  விளக்க உன் தலைவர்களுக்கு அறிக்கை ஒரு கேடு?

  உன் கட்சியிலுள்ள மீசை முறுக்கும் வீரருக்கும் [தோழருக்கு] இட ஒதுக்கீடு
  கீழ் வெண்மனியை சாம்லாக்கியவர்களுக்கும்,
  லீலாவதியை கூறு போட்டவர்களுக்கும் கூட இட ஒதுக்கீடு வேண்டுமோ ?

  ஆனால் நீ அதற்கும் மேலே போய்
  வறலாற்றில் என்னுடைய பாட்டன் முப்பாட்டனுடைய
  நாக்கை அறுத்தவனுக்கும்,காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியவனுக்கும்
  கூட இட ஒதுக்கீடு தர வேண்டும் என்கிறாய்.

  இட ஒதுக்கீட்டில் இப்படிப்பட்ட ஒரு அயோக்கியத்தனமான
  நிலைப்பட்டை வைத்துக்கொண்டுள்ள நீ
  ம.க.இ.க வை பார்த்து பேசுகிறாயா ?

  போ,போய் ஒழுங்கா இட ஒதுக்கீடு பற்றிய ம.க.இ.க வின்
  வெளியீடை
  மறுபடியும் ஒரு முறை தெளிவாக படிச்சுட்டு வந்து பேசு.


  அப்புறம் எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் சந்திப்பு ?

  நீ ஆறறிவுள்ள மனிதனா இல்லை கிளியா !

  காடு,துப்பாக்கின்னு சொன்னதையே சொல்லிக்கிட்ருக்கியே
  அதான் கேட்டேன்,

  ஒன்னு பன்னலாம் ஒன் செல் நம்பரை போடு நான்
  வந்து ஒன்னையெ எங்க ஆபிசுக்கே
  கூட்டிட்டு போய் காட்டுறேன்.

  அதே போல அவதூறு சேற்றை வாரியிரைக்கிறார்கள்
  என்பதும் கூட உனக்கு
  மனப்பாடமாகிவிட்ட ஒரு சொற்றொடர்.

  நீயும் உன் கட்சியும் அவதூறு
  செய்யுமளவுக்கு யோக்கிய
  சிகாமனிகள் என்கிற நினைப்பா உனக்கு ?

  கோமாளி சந்திப்பே கேட்டுக்கொள்

  உன்னுடைய கட்சியையும்,திரிபுவாத ஆளும் வர்க சித்தாந்தத்தையும்
  சுக்கு நூறாக உடைத்தெறிவது தான் புரட்சிகர சக்திகளின் முதல் வேலை,
  நீயும் பார்க்கத்தானே போகிறாய்,
  பார்ப்பது மட்டுமின்றி
  பேசவும் செய்வாய் கைகூலியின் குரலில்,
  நாங்களும் பார்ப்போம்
  ஆனால் பேசிக்கொண்டிருக்கமாட்டோம்
  கைக்கூலிகளிடம்.

 6. Anonymous said...

  நிவேதனா
  என் நேசத்தை
  நிராகரித்து
  விட கூடுமென
  நினைத்து சொல்லாமற்
  போனாலும்,
  உன் நினைவுகளுடன்
  நீடிக்கிறேன்...
  பின் ஒரு
  பொழுதில் பூக்குமென
  சுவாசிக்கிறேன்...

 7. said...

  திரு.சுகுணா,

  தன்னைத் தானே கட்டவிழ்க்கும் இந்த கவிதை ரசிக்கத்தக்கதாய் இருக்கிறது

  ஸ்டாலின்

 8. அய்யனார் said...

  சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பதி சுகுணா..

  புரிகின்ற மாதிரி எப்போ எழுதுவீங்க! :)