இசையால் நிரம்பிய அறை

நௌபல்,
உனை விடவும் காதல் இனிதில்லை.
மதுவில் நனைத்த உன் முத்தங்கள்
தேங்கிப்புழுத்த கவிதைகளைவிடவும்
பிரியமிக்கவை.
பீடிப்புகையும் சாராயநாற்றமும்
உன் இசையுமாய் நிரம்புகிறது அறை.
புகைகளுக்குள் ஊருருவும்
லாவகமானதுன் இசை.
கைவிடப்பட்ட கணங்களிலும்
ஆறுதலுக்காய் முந்தும் வார்த்தைகளின்முன்
என்னைப் பிரித்துப் போட்டுவிடமுடியாதபடி
தடுக்குமென் வெட்கம் ரகசிய அறைகளைத்
தேடித்தவிக்கிறபோதும்
உன் மடியையே சரணடைகிறது.
நீ எப்படி எப்போதும்
நண்பனாயிருக்கிறாய் என்பது
ஆச்சரியமானதுதான்.
(என்னால் முடியாது அது.)
இப்போது குளித்த குழந்தை
ஈரத்தோடு கட்டிக்கொள்வதைப் போலவே
அணைக்குமுன் நேசம்
நீ கம்யூனிஸ்டாயிருந்ததால் இருக்கலாம்.
நௌபல்,
நடுத்தெருவில் செத்துநாறும் நாயைப்போலவேயான
இந்த கவிதையைப் புறக்கணித்துவிட்டு
இப்போது இந்த அறையை இசையால்நிரப்பு.
ஒரே ஒரு சிகரெட்டை முடித்துக்கொள்கிறேன்.
இதோ கம்பளி விலக்கி எழுகிறான் கத்தார்.
'இதி கொங்கணி ரஜம்..."

7 உரையாட வந்தவர்கள்:

  1. காயத்ரி சித்தார்த் said...

    //ஆறுதலுக்காய் முந்தும் வார்த்தைகளின்முன்
    என்னைப் பிரித்துப் போட்டுவிடமுடியாதபடி
    தடுக்குமென் வெட்கம் ரகசிய அறைகளைத்
    தேடித்தவிக்கிறபோதும்
    உன் மடியையே சரணடைகிறது//

    intha varikal enakku mikavum pidithathu suguna.. sorry veliyil irunthu ezhuthuvathal tamil fonts payanbadutha mudiyavillai.

  2. காயத்ரி சித்தார்த் said...

    //ஆறுதலுக்காய் முந்தும் வார்த்தைகளின்முன்
    என்னைப் பிரித்துப் போட்டுவிடமுடியாதபடி
    தடுக்குமென் வெட்கம் ரகசிய அறைகளைத்
    தேடித்தவிக்கிறபோதும்
    உன் மடியையே சரணடைகிறது//

    intha varikal enakku mikavum pidithathu suguna.. sorry veliyil irunthu ezhuthuvathal tamil fonts payanbadutha mudiyavillai.

  3. மிதக்கும்வெளி said...

    இரண்டு முறை பிடித்ததற்கு நன்றி காயத்ரி. எல்லாமே வெளியிலிருந்து எழுதுவதுதான்.

  4. Pot"tea" kadai said...

    // எல்லாமே வெளியிலிருந்து எழுதுவதுதான்//

    அவ்வ்வ்வ்வ்

    அவ்வ்வ்வ்வ்

  5. thiagu1973 said...

    //ஆறுதலுக்காய் முந்தும் வார்த்தைகளின்முன்
    என்னைப் பிரித்துப் போட்டுவிடமுடியாதபடி
    தடுக்குமென் வெட்கம் ரகசிய அறைகளைத்
    தேடித்தவிக்கிறபோதும்
    உன் மடியையே சரணடைகிறது.
    நீ எப்படி எப்போதும்
    நண்பனாயிருக்கிறாய் என்பது
    ஆச்சரியமானதுதான்.
    (என்னால் முடியாது அது.)
    //

    ஆமாம் யோசிப்பவனும் கேள்வி கேட்பவனும் எப்போதும் நண்பனாய் இருக்க முடியாது

  6. Anonymous said...

    Sathiyama puriyavillai iyya.

    -enbee

  7. G.Ganapathi said...

    பலம் மிக்க வார்த்தைகள்