காற்றில் நடுங்கிக்கொண்டிருக்கிறது சுடர்இப்போது மழைபெய்துகொண்டிருக்கிறது. மழையோடு பேச யாருமில்லை. தனியாக பெய்துகொண்டிருக்கிறது மழை. நேரம் செல்லச் செல்ல அதன் கூச்சல் அதிகரிக்கிறது. மீன்கள் செத்து மிதக்கும் குளமொன்றில் கால்பதித்து நீ நடந்துவந்த பாதையெங்கும் ரத்தச்சுவடுகள். வார்த்தைகள் மாமிசமாகும்போது தேவன் பிறக்கிறார். மாமிசம் வார்த்தைகளாக முயலும்போது தேவன் மரிக்கிறார். பறவைகளின் சிறகசைப்பில் பொங்கித் தெறிக்கிறது கடல். உடல்கள் மொழிபெயர்க்கப்படும் பின்னிரவு வேளை. ஒரு திரவகணத்தில் கடவுள் கால் தடுமாறிவிழுகிறார். சாக்கடையில் தத்தளிக்கின்றன பெங்குவின்கள். முத்தமிடக்குவியும் டால்பினின் உதடுகளில் ரத்தத்துளிகள். இருள் உதிக்கிறது. ஒளி நசிகிறது. காலம் கரைகிறது. காத்திருப்பின் தனிமை தகிக்கிறது. உன் தொடைகளில் வழியும் உதிரத்தின் மொழியில் ஒரு சொல் எடு. கன்றிச்சிவக்குமொரு அடிவானத்தின் மடியில் உதிர்வதற்குத் தயாராயிருக்கிறது என் பெயர் சூட்டிக்கொண்ட நட்சத்திரம். சன்னல்களில் துருப்பிடித்துக்கிடக்கிறது காலம். கோப்பை நிறைய ததும்பி வழிகிறது மரணம். எனக்கு அழவேண்டும்போல இருக்கிறது. ஒரு குழந்தையின் சிறுநீர்ச்சூட்டின் கதகதப்பு எனக்குள் மெல்ல இறங்குகிறது. வெடித்துச் சிதறுகிறேன் நான். இப்போது என் முகத்தில் வெதுவெதுப்பாய் வழிவது குழந்தையினுடையதா?...மழை முகத்தில் அறைகிறது. கண்ணீர் கன்னங்களில் வழிந்துகொண்டிருக்கிறது. நீ அழும்போதெல்லாம் மழைவந்துவிடுவதாய்ச் சொல்லியிருந்தாய். இப்போது மழைபெய்துகொண்டிருக்கிறது.

4 உரையாட வந்தவர்கள்:

 1. இளங்கோ-டிசே said...

  நடை நன்றாக பிடித்திருந்தது.

 2. bala said...

  //இப்போது என் முகத்தில் வெதுவெதுப்பாய் வழிவது குழந்தையினுடையதா?...//

  வெளியே மிதக்கும் அய்யா,

  ஆமாம் அய்யா.குழந்தையினுடையது தான்.குழந்தை பெயர் லக்கி.உங்களைப் பார்க்க வந்தவர், நீங்க மிதந்து கொண்டு இந்த மாதிரி அலறி புலம்புவதைக் கண்டு குழந்தை பயந்து விட்டது.
  முதல்ல குழந்தைய டயப்ப்ர் போட்டு வெளியே அழைச்சுட்டு போங்க.

  பாலா

 3. Anonymous said...

  எந்த பாப்பார பன்னாடையோ இந்த நல்ல பதிவை நகைச்சுவை என்று வகைப்படுத்தி இருக்கிறது!

 4. bala said...

  //எந்த பாப்பார பன்னாடையோ இந்த நல்ல பதிவை நகைச்சுவை என்று வகைப்படுத்தி இருக்கிறது//

  எந்த க்ரீமி லேயர் OBC முண்டமோ இதை நல்ல பதிவுன்னு சொல்லி தன்னோட மேதாவிலாசத்தை தெரிவித்து போயிருக்கிறது.

  பாலா