பெற்றோர் பராமரிப்புச்சடட்ம் - ஒரு பிள்ளையின் பார்வையிலிருந்து


பொறுப்பின்மையைச் சமன்செய்தலும் கடமைகளை ஒழுங்குபடுத்தலும்

நேற்று இரவு எட்டுமணியளவில் சன்நியூஸ் பார்க்கும்போது அந்த கெட்டசெய்தி வந்துசேர்ந்தது. பெற்றோர்களைப் பராமரிக்காத குழந்தைகளுக்கு சிறைத்தண்டனை அல்லது அபராதம். அபராதம் சில லட்சங்களில் என்று கேட்டதாக நினைவு. ஆனால் காலையில் தினத்தந்தி படிக்கும்போதுதான் தெளிவானது மூன்றுமாதங்கள் சிறைத்தண்டனை அல்லது அய்யாயிரம் அபராதம்.
நினைவுகள் முன்னும் பின்னும் அலைவுறுகின்றன. 12ம் வகுப்புப் படிக்கும்வரை எல்லாம் சரியாகத்தான் இருந்தது. பள்ளியில் முதல் அல்லது இரண்டாம் மாணவன். பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி என பல போட்டிகளில் பரிசுகள். பெற்றோருக்கு ஆனந்தமாய்த்தானிருந்தது. ஆனால் பள்ளி இறுதியிலேயே கண்ட கண்ட தடிமனான புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்ததிலிருந்து படிப்பின் மீது மரியாதை போயிற்று.
பின் கல்லூரிக்காலம். காந்திகிராமம் என்னும் சனாதனக்கோட்டையில் முதல்முதலில் மாணவர் உரிமைகளுக்காக போராட்டம். காலையில் பிரேயரோடு ஆரம்பித்துக் கல்லூரி கேண்டீனில் ஆம்லேட் கூடப் போடாத வைதீக நிறுவனம். 16 ஆண்டுகளுக்கு முன்புதான் ஸ்டிரைக்கே நடந்தது. அதுவும் நான்டீச்சிங் ஸ்டாப்பின் போராட்டம். அதற்குபின் முதல் மாணவர் போராட்டம். அதுவும் முதலாமாண்டு படிக்கும்போதே. போராட்டம் என்னவோ வெற்றிபெற்றது. ஆனால் ஒரு செமஸ்டர் தவிர எல்லா செமஸ்டரிலும் அரியர் போட்டார்கள். அதுவும் பிஸிக்ஸ் டிபார்ட்மெண்ட். நான் கேள்விப்பட்ட வரை எல்லாப் பிசிக்ஸ் டிபார்ட்மெண்டும் இப்படித்தான் இருக்கிறது போலும். அங்கே மிருகங்களைப் பழக்குபவர்களே வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.
நான் லேபிற்குள் நுழையும்போதெல்லாம் 'வாய்யா பகத்சிங்' என்றுதான் அழைப்பார்கள். ஆனால் முட்டையே போடாத கேண்டீனை வெள்ளைச்சட்டை போட்டு தி.க தோழர்கள் தந்திரமாய் எடுத்து பிறகு கருப்புச்சட்டை போட்டு பெரியார் படங்களுடன் படுஜோராய் கேண்டினை நடத்த ஆரம்பித்தபிறகு இயக்கத்தில் சேர்ந்து தி.கவின் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஆனேன். அதற்குப் பிரகு என்ன பொதுக்கூட்டம், பிரச்சாரம், போராட்டம், போலிஸ் மிரட்டல்.. இந்த நிகழ்வுகளால் வீட்டில் பிரச்சினைகள் வரத்தொடங்கின. குடும்பம் என்பது நரகமாகிப் போனது.
ஆனால் பின்னால் கூடப் படித்தவர்கள் எம்.சி.ஏவெல்லாம் படித்து அமெரிக்காவில் செட்டிலானதைப் பார்க்கும்போது நம்மையெறியாமல் வயிற்றெரிச்சல் கிளம்பும். படித்துவிட்டு வேலையில்லாமல் அலைந்த தருணங்களில் இன்னும் திட்டுவிழும். இந்த கொள்கைப் புண்ணாக்கெல்லாம் சேர்ந்து அவர்களைக் கூடுதலாக கோபப்படுத்தும்.
நான் ஒருமுறை கவிதையே எழுதியிருந்தேன், 'சதா முணுமுணுக்கும் தகப்பனின் கழுத்தை நெறிக்க வேண்டும்'. செந்திலுக்கு மிகவும் பிடித்த கவிதை வரி. அவருடன் வாசு என்று ஒரு நண்பர் இருக்கிறார். அவர் தவமாய்த் தவமிருந்து படம் முடிந்து வெளியே வந்தவுடன் காறித்துப்பினாராம். சேரனின் முகத்தில் தெறித்த எச்சில். இந்திய மகன்களுக்கு அப்பன்கள் எப்போதும் எதிரிகள்தான் போலும்.
இப்போது நிலைமை கொஞ்சம் மாறியிருக்கிறது. ஏதோ ஓரளவிற்குச் சம்பாதிப்பதனால் பழைய பிரச்சினைகள் இல்லை. தகப்பனின் முணுமுணுப்பைக் கேட்கமுடியாவிட்டாலும் நிராகரிக்காமல் இருக்க முடிகிறது. என்னதானிருந்தாலும் அவரும் சக உயிரிதானே. ஊருக்கெல்லாம் மனிதநேயத்தையும் அன்பையும் உபதேசித்துவிட்டு நம்முடன் வாழும் சக உயிரை வெறுப்பது எவ்வளவு சரி?
என்ன, அவ்வப்போது 'நம் சாதிக்குள்தான் திருமணம் செய்யவேண்டும்' என்கிற அரிப்புகள் மற்றும் இன்னபிற நுட்பமாய்த் தொழிற்படும் சாதிய மனநிலை, முஸ்லீம் விரோதப் போக்கு ஆகியவைக்ளில் எல்லாம் முட்டிக்கொள்ளும்
ஆனால் 'கடைசிக்காலத்தில் காப்பாற்ற வேண்டும்' என்பதைக் கேட்கும்போது எரிச்சல்தான் வருகிறது. நீங்கள் பிராய்லருக்குக் கறிக்கோழியா வளர்த்தீர்கள் என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. ஆனால் மேலைச்சமூகங்களைப் போல சிறுவயதிலேயே சம்பாதித்துப் பழகியசமூகமில்லை நம் சமூகம். இருபத்தைந்து வயது வரை அப்பன்காசில்தான் சோறு சாப்பிட்டு வளரும் பிள்ளைகள் தன் பெற்றோருக்கு சோறுபோட மறுப்பது அறவியல் அநீதிதான்.
ஆனால் இந்தச் சட்டத்தின் மூலம் குடிமகன்களுக்கான கடமைகளை ஒழுங்குபடுத்தியிருக்கிறது, உறுதி செய்திருக்கிறது அரசு. அதன் வேலையே அதுதான். பொது இடத்தில் புகை பிடிக்காதே, ஹெல்மெட் மாட்டிக்கொள் என்பதுபோலத்தான் இது. ஆனால் அரசு மட்டும் தன் கடமைகளை நிறைவேற்றுகிறதா என்ன?
மக்கள்நல அரசு (welfare state) என்பது முதலளித்துவக் கருத்தாக்கம்தான் என்பார் பேராசான் காரல்மார்க்ஸ். இருந்தபோதும் மக்கள் நல அரசு சில கடமைகளையாவது செய்தது. மக்களின் சில அடிப்படை உரிமைகளையாவது நிறைவேற்றியது. ஆனால் உலகமயமாக்கலுக்குப் பிறகு அரசு தன் கடமைகளைத் தட்டிக்கழிப்பதிலேயே கருத்தாயிருக்கிறது. மானியங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன அல்லது நீக்கப்பட்டிருக்கின்றன.
பன்னாட்டு நிறுவனங்களின் வருகையால் உள்நாட்டுத் தொழில்கள் நசிகின்றன. இனி 'கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்' என்றெல்லாம் கதை சொல்ல முடியாது. பன்னாட்டு நிறுவனங்களின் அடிமைகள் மட்டுமே தன் உடல்நலத்தையும் மனநலத்தையும் இழந்து கைநிறையச் சம்பாதிக்கமுடியும் என்னும் நிலை உருவாகியிருக்கிறது. 'கால் காசு உத்தியோகமானாலும் கவர்மெண்ட் உத்தியோகம்' என்னும் பழம்பெருமையும் புண்ணியவதி ஜெயலலிதாவின் தயவால் தகர்ந்துவிட்டது. முதல்வன் படத்தில் போகிற இடமெல்லாம் டைப்ரைட்டர் மிஷினோடு சென்று எல்லோருக்கும் டிஸ்மிஸ் ஆர்டர் வழங்கிய அர்ஜூனை ரசித்து நூறுநாட்கள் ஓடவைத்த தமிழக மக்கள்தான் அதேவேலையை ஜெயலலிதா செய்தபோது விக்கித்துநின்றார்கள்.
தனிநபர் வருமானமே இல்லாத அல்லது நுகர்வுக் கலாச்சாரத்தில் தனது வருமானத்தையும் இழந்து மேலும் கடன்வாங்கிக் குவிக்கும் பரிதாப மகன்கள் என்ன செய்ய ஏலும் என்று தெரியவில்லை. நினைத்துப்பார்க்கிறேன். நாளை நானும் பெற்றோர்களைப் பராமரிக்காத குற்றத்திற்காக சிறையிலடைக்கப்படலாம். அங்கே உட்கார்ந்து வாரமலர் பாணியில் இப்படிக் கவிதை எழுதலாம்.
"அம்மா
பத்துமாதம் என்னைக்
கருவறையில் சுமந்த
உனக்காக
நான் மூன்றுமாதம்
சிறையில்
இருக்கக் கூடாதா என்ன?"

11 உரையாட வந்தவர்கள்:

 1. Anonymous said...

  Allah also says the same thing.Through prophet he has told
  that heaven could be found at the feet of the mother.So if you dont care for parents you cant be a good muslim.So choose which is
  worse - islam or government.Islam is worse than Indian government
  in every way.

 2. லக்கிலுக் said...

  மிக மிக அருமையான பதிவு மிதக்கும் வெளி அய்யா...

  இப்படி சொன்னதுமே புரிஞ்சிருக்குமே, "எனக்கும், என் அப்பனுக்கும் ஏழாம் பொருத்தம்"னு :-)

 3. Anonymous said...

  வெளியே மிதக்கும் அய்யா,

  உங்கள் பின்நவீனத்துவ கவிதைகளை உங்கள் பெற்றோர்கள் படிப்பார்களா அய்யா?

  பாலா

 4. வரவனையான் said...

  மிக நல்ல பதிவு சுகுணா , ஆனால் எல்லா முனுமுனுப்புகளுக்கு பிறகும் மனம் இவ்விடயத்தில் ஒரு கன்செர்வேடிவ் நிலையே எடுக்கிறது. ஒரு வேளை முன்னம் போதித்த போதனைகள் ஒரு குற்றவுணர்ச்சியை மனதுள் உருவாக்க முயல்கிறதோ....

  இது பற்றி தருமி ஒரு நல்ல பதிவிட்டுள்ளார்

 5. bala said...

  வெளியே மிதக்கும் அய்யா, நான் உங்கள் அன்பான பாலாவின் போலி அய்யா, பாலா வரவனையானிலும் இருக்கிறார், மிதக்கும் வெளியிலும் இருக்கிறார் அல்லது லக்கியாகவும் இருக்கிறார் அல்லது பாலாவாகவே இருக்கிறார் என்கிற தத்துவார்த்த குழப்பங்கள் உங்களுக்கு ஏற்படா வண்ணம் ஒரு நேர்மையான "போலியாக" பாலா வின் அனைத்து செயல்களையும் மறுத்து இம்மை மறுமை பேதம் தள்ளி ஒரு இனிமையான தமிழ்மணம் கமழ உங்கள்டன் உடன் வருவேன் என்று கூறிக்கொள்கிறேன்.


  பாலா

 6. bala said...

  //நான் ஒருமுறை கவிதையே எழுதியிருந்தேன், 'சதா முணுமுணுக்கும் தகப்பனின் கழுத்தை நெறிக்க வேண்டும்'. செந்திலுக்கு மிகவும் பிடித்த கவிதை வரி. //

  வெளியே மிதக்கும் அய்யா,

  அடப்பாவிகளா,இப்பதான் புரியுது இந்த கருப்பு சட்டை கும்பல்,ஏன் கன்னட தாடிக்காரரை "தந்தை"ன்னு கூப்பிடறாங்கன்னு.உண்மையான தந்தையோட டூ விட்டுட்டாங்க.எல்லாம், ஒரு மாதிரி பாதிக்கப்பட்டு வெறி பிடித்து அலையும் கும்பல்.

  பாலா

 7. தமிழ்நதி said...

  சட்டமோ என்னவோ போங்கள்... தெருவில் பிச்சையெடுக்கும் வயதானவர்களைப் பார்க்கும்போதெல்லாம் "இவர்களுக்குப் பிள்ளைகளே கிடையாதா...?"என்ற நினைப்பு எழுவதைத் தவிர்க்க முடிவதில்லை. இயல்பிலேயே முதுமை தனிமையில் தள்ளிவிடும் என்றிருக்க பசியும் சேர்ந்துகொண்டால்... இந்த உலகம் ஏனிப்படி இருக்கிறது...? புத்தர் செய்ததுதான் சரி. அவருக்காவது துறப்பதற்கு ஏதாவது இருந்தது. எங்களுக்கு?

 8. Santhosh said...

  மிதக்கும் வெளி அய்யா, இங்கே தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று சரியாக புரியவில்லை. பெற்றோரை பராமரிப்பது பிள்ளையின் கடமை இல்லை என்றா சொல்கிறீர்கள்? இல்ல எங்கப்பா என்ன திட்டினாரு, அடிச்சாரு நான் ஏன் அவரை பாதுகாக்க வேண்டும் என்று கேட்கிறீர்களா? அவர் ஏதோ உங்களின் மீது உங்களை கொல்ல வேண்டும் என்ற கொலை வெறியோடு அடித்த மாதிரி இல்ல சொல்றீங்க. 7G படத்துல ஒரு அருமையான வசனம் வரும் "ஏண்டா முன்ன பின்ன தெரியாத ஒரு பொண்ணு செருப்பால அடிச்சா வாங்கிட்டு அதை துடைச்சி போட்டுட்டு அவ பின்னாடி மறுபடியும் போறீங்க ஆனா பெத்த அப்பா உங்களை உங்க நல்லதுக்கு ரொண்டு அடி அடிச்சா தப்பா? வேலைகிடைச்ச உடனே அப்பன் ஆத்தா வேணாமுன்னு வீட்டை விட்டு கிளம்புற அதை ஏன் வேலைகிடைப்பதற்கு முன்னாடி செய்யலை. வெளியே போனா சோத்துக்கு லாட்டரி அடிக்கணும் அதனால தானே?" இது மாதிரி ஒரு வசனம் வரும் அதுல வருவது அவ்வுளவும் உண்மை.

 9. naan naathigan said...

  I agree that one should take care of their parents.

  But then, whats purpose of the state.

  what it will do to me ?

  questios without answers goes on

  balathandayutham

 10. bala said...

  //"ஏண்டா முன்ன பின்ன தெரியாத ஒரு பொண்ணு செருப்பால அடிச்சா வாங்கிட்டு அதை துடைச்சி போட்டுட்டு அவ பின்னாடி மறுபடியும் போறீங்க ஆனா பெத்த அப்பா உங்களை உங்க நல்லதுக்கு ரொண்டு அடி அடிச்சா தப்பா?//

  சந்தோஷ் அய்யா,
  நல்லா நச்சுன்னு கேட்டீங்கய்யா.ஆனா இந்த கருப்பு சட்டை கும்பல்,இப்போ ம க இ க ன்னு அலையற கும்பல் இதெல்லாம் ஒண்ணுக்கும் உதவாத பசங்க.இவங்களுக்கு தெரிந்ததெல்லாம்,
  சந்தா கலெக்ட் செய்யவேண்டியது,விழா நடத்த வேண்டியது,ஓசில சில்லி பீஃப்,சாராயம் சாப்பிடவேண்டியது.அப்படியே உடம்பை வளர்த்த கும்பல்.இவங்களாவது,பெற்றோர்களை பராமரிக்கிறதாவது?இந்த கொல்டிங்க தங்களை முதல்ல பராமரிக்கட்டும்.

  பாலா

 11. சோமி said...

  இப்போது சென்னைய்ல் பிச்சையெடுக்கும் சிறுவர்கள் பற்றிய ஆவணப்படம் எடுத்து வருகிறேன் அவர்கள் வாழ்கை...எவ்வளவு கொடுமை தெரியுமா.....நல்ல பதிவு