என் உள்ளங்கை கதகதப்பன்றி தருவதற்கு என்னிடம் என்ன இருக்கிறது?

அழுந்திப் பதிந்த தடங்களின் வழி
பொசியும் நீரின்
கதைகேட்டுக் குமைந்து
பிணங்களோடு படுத்துறங்கி
கனவின் மார்பில் கால் உதைத்து எழுந்து
நள்ளிரவின் சுவர்களில்
அலறி அடிந்து
நகங்களில் கசியும்
குருதியை அடக்கி கீழுதட்டைக் கடித்துக வலி மறைக்கும் வித்தைகளைக் கற்றதெல்லாம் உன்னிடமிருந்து
என்று நான் சொல்லும்
மொழி புரியுமா எனத் திகைத்துச்சொல்லும்
வார்த்தைகளின் நிணத்தில்
தோய்த்தெடுத்த இதம்.
மின்னலை விழுங்கி
உயிர்த்த குழந்தை நீ.

3 உரையாட வந்தவர்கள்:

 1. Jayaprakash Sampath said...

  என்னமோ பண்ணுது.. என்னன்னு சொல்லத் தெரியலை

 2. செல்வநாயகி said...

  அருமை திவாகர்.

  கடந்த ஒருமாதமாக உங்கள் எழுத்துக்களைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். அங்கங்கு உள்ளே ஒட்டிக்கொண்டிருக்கும் போலிகளை அடித்துத் துவைத்தும், காணப் பயந்துகொண்டு தவிர்த்துவந்த இருட்டுக்குள் ஆழம்வரை இழுத்து இங்கிருக்கும் உலகத்தையும் உன் வெளிச்சத்தைக் கழட்டிவைத்துவிட்டு வந்துபார் என உணர்த்தியும் கூட்டிக்கொண்டு போகின்றன அவை. இனித் தொடர்ந்து படிப்பேனாயிருக்கும். நன்றி.

 3. bala said...

  //என் உள்ளங்கை கதகதப்பன்றி தருவதற்கு என்னிடம் என்ன இருக்கிறது//

  வெளியே மிதக்கும் அய்யா,

  ஆமா, நீங்க பெரிய கர்ண மகா பிரபு பாருங்க.கொடுத்து கொடுத்து உள்ளங்கை சிவந்து சூடாகிப் போச்சுது.உங்க கிட்ட கொடுக்க என்ன இருக்கு? நிறைய கொழுப்பு,வெறுப்பு,காழ்ப்பு;அவ்வளவு தான்.உங்க கை கொடுத்து சிவந்த கை இல்லை,ஓசியில் வாங்கியே புண்ணான கை.பிணத்தை கூட விட மாட்டீங்க.என்னமோ செய்ங்க.

  பாலா