பார்ப்பனர்களை ஆதரிக்கும் பாசிச 'உணர்வுகள்'.


மீபகாலமாக 'உணர்வுகள்' என்னும் ஈழத்தமிழர் ஒருவரின் பதிவுகளில் கேட்கும் பாசிசக்கூச்சல்களுக்கு அளவேயில்லாமல் போய்விட்டது. அவரது பதிவுகள் முழுக்க சைவம், முருகன், வேள்ளாளம் என விபூதிவாசனையே வீசுகிறது. அவசரமாக எழுதுவதால் விரிவாக எழுதமுடியவில்லையெனினும் ஒரு சில கருத்துக்கள் மட்டும்...

ஜடாயு என்னும் இந்துத்துவவாதிக்கு எழுதும் மறுப்பில் வேதம் என்னும் சொல் தமிழில் வேறு பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது என்கிறார். முதலில் வேதம் எப்படி 'மறை' யானது? மறைக்கப்படவேண்டியது என்னும் குறிப்பிலேயே மறை என்னும் சொல் உருவானது. கடைசியில் முஸ்லீம்களின் குர்-ஆன் கூட திருமறையாகிப்போனது. திருக்குறள் உலகப்பொதுமறையானது.

செந்தமிழ்-கொடுந்தமிழ் விவாதங்களில் ஜடாயும் உணர்வுகளும் போட்டுக்கொள்ளும் சண்டையோ சகிக்கமுடியாததாயிருக்கிறது. கொடுந்தமிழ் என்னும் பிரிப்பே கரையோரத்தில் வாழும் விளிம்புநிலைமக்களின் மொழியைக் குறிப்பிடுவதற்காக உருவானது. செந்தமிழ் என்பது செம்மையான மேன்மக்கள் பேசும் மொழி. ஜடாயுக்கும் உணர்வுகளுக்கும் எது செந்தமிழ் என்பதை 'நிறுவு'வதில்தான் போட்டியே தவிர விளிம்புநிலைமக்களின் மொழிகளைப் பற்றியதல்ல.

கடைசியாக பார்ப்பனர்களும் தமிழர்கள்தான் என்பதை நிரூபிக்க அவர் முயற்சிக்கும் வாதங்களோ அப்பட்டமான பார்ப்பனச்சார்பு கொண்டதாகவும் முஸ்லீம் மற்றும் கிறித்துவ விரோதமுடயதாகவுமிருக்கின்றன. சமஸ்கிருதத்தை மட்டும் ஏன் எதிர்க்கிறீர்கள்? அரபியை ஏன் எதிர்ப்பதிலை< லத்தினை ஏன் எதிர்க்கவில்லை? என்கிற புளித்துப்போன ஆர்.எஸ்.எஸ்காரர்கள் கேட்கும் கேள்விகளையே உணர்வுகளும் கேட்கிறார்.

அய்யா, தெளிவாகக் கேட்டுக்கொள்ளுங்கள். சமஸ்கிருதம் என்பது ஒரு மொழி என்பதால் மட்டும் நாங்கள் எதிர்க்கவில்லை, அதற்கு மாற்றாக தமிழ்வழிபாட்டை நிறுவ முயலவில்லை. சமஸ்கிருதம் என்பது எங்கள் உழைக்கும் மக்களை, பார்ப்பனரல்லாத திராவிட மக்களை அடக்கி ஒடுக்கும் பார்ப்பனீயத்திற்கன குறியீடு என்பதாலேயே எதிர்க்கிறோம். அரபிமொழியிலோ லத்தீன் மொழியிலோ எங்களை வேசிமகன் என்று சொல்லவில்லை அய்யா.
பார்ப்பனர்கள் பேசும் அவாள் இவாள் பாசைகளை வட்டாரவழக்குகளோடு ஒப்பிடுவதே அபத்தமானது. அடிபடையில் நீங்கள் முன்வைக்கும் செந்தமிழே வட்டாரவழக்குகளை மறுப்பது. பன்மைத்துவ அடையாளங்களை அழித்து ஒற்றைப்பாசிச அடையாளத்தை நிறுவ எத்தனிப்பது. சரி, அதுபோகட்டும். வட்டாரவழக்குகள் என்பதிலேயும் ஒவ்வொரு சாதிக்கும் கூட தனித்தனிப் பேச்சுவழக்குகள் உள்ளன. ஆனால் தமிழ்நாடு முழுவதும் பார்ப்பனர்கள் பேசும் தமிழ் ஒன்றே. எனவே அவை வட்டாரவழக்குக் கணக்கில் கொண்டுவரமுடியாது.
மேலும் மொழிசிறுபான்மையினரான தெலுங்கு, கன்னடம் பேசும் சாதிகள் பேசும் மொழியும் ஒரேபடித்தானவையல்ல. அருந்ததியர் பேசும் தெலுங்கிற்கும் நாயுடுகள் பேசும் தெலுங்கிற்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன. மேலும் மொழிச்சிறுபான்மையினர்கூட தன்னைப்போல வேற்றுமொழி பேசுபவர்களைச் சந்தித்தாலே பிறமொழி பேசத்தொடங்குகின்றனர். ஆனால் பார்ப்பனர்களோ கொஞ்சமும் கூச்சநாச்சமில்லாமல் பலரும் இருக்கும் அவையிலேயே ஆத்துப்பாசை பேசத்தொடங்குகிறார்கள். இதற்குப்பெயர் சிறுபான்மையினருக்கான அடையாளச்சிக்கலோ, தனித்துவத்தைக் காக்கும் வேட்கையோ அல்ல, சாதித்திமிர் மட்டுமே. (சன்டிவியில் உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியில் பேசும் உமாவின் மொழியை உதாரணமாகச்சொல்லலாம்).

ஈழத்தில் பார்ப்பன ஆதிக்கம் கிடையாது. உங்களுக்குப் பார்ப்பன எதிர்ப்பு தேவைப்படாமலிருக்கலாம். ஆனால் இங்கு எங்களுக்குப் பார்ப்பன் ஆதிக்கம் சுமையாயிருக்கிறது. எனவே பார்ப்ப்ன எதிர்ப்ப்பு மிகமிக அவசியம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

பார்ப்பன மற்றும் சிங்களை மரபிற்கு எதிராகக் கட்டமைக்கவிரும்பும் தமிழ்மரபிற்கு அடிநாதமாக இருக்கவேண்டியது இங்கு நீண்டகாலமாய்ச் செல்வாக்கு செலுத்திய பவுத்த சமண மரபே தவிர சைவ மரபு அல்ல.

தோழர்களுக்கு : ஏதோ சமஸ்கிருத எதிர்ப்பு, தனித்தமிழ், ஈழம் என்று பேசியவுடனே புல்லரித்து உணர்வுகள் போன்ற தூய்மைவாத அடிப்படைவாதப் பதிவாளர்களை ஆதரித்துவிடாதீர்கள். அடிப்படையில் இவர் பேசும் சைவத் தமிழ்த்தேசியத்திற்கும் இந்துப்பாசிசத்திற்கும் பெரிய வித்தியாசமில்லை. அவர் கட்டமைக்கவிரும்பும் தமிழ்த்தேசியம் என்பது தலித்விரோத, முஸ்லீம்விரோத தமிழ்ப்பாசிசக் கருத்துநிலைதான்.

33 உரையாட வந்தவர்கள்:

 1. மாசிலா said...

  எங்கே நிம்மதி?
  எங்கே நிம்மதி?
  அங்கே எனக்கோர் இடம் வேண்டும்!

 2. -/பெயரிலி. said...

  சோழ இளவரசரின் அட்டகாசம் ஆறுமுகநாவலரின் சாதி அட்டகாசத்தின் வழிவந்ததது. அந்தத்தடிப்பினைக் கரைக்க இன்னும் ஆயிரம் ஆண்டுகளானாலும் நேரம் போதாது.

 3. உடைப்பு.Sri Rangan said...

  ஏதோ சமஸ்கிருத எதிர்ப்பு, தனித்தமிழ், ஈழம் என்று பேசியவுடனே புல்லரித்து உணர்வுகள் போன்ற தூய்மைவாத அடிப்படைவாதப் பதிவாளர்களை ஆதரித்துவிடாதீர்கள். அடிப்படையில் இவர் பேசும் சைவத் தமிழ்த்தேசியத்திற்கும் இந்துப்பாசிசத்திற்கும் பெரிய வித்தியாசமில்லை. அவர் கட்டமைக்கவிரும்பும் தமிழ்த்தேசியம் என்பது தலித்விரோத, முஸ்லீம்விரோத தமிழ்ப்பாசிசக் கருத்துநிலைதான்.

  100% right.

 4. குழலி / Kuzhali said...

  //ஆனால் தமிழ்நாடு முழுவதும் பார்ப்பனர்கள் பேசும் தமிழ் ஒன்றே. எனவே அவை வட்டாரவழக்குக் கணக்கில் கொண்டுவரமுடியாது.
  //திருத்திக்கொள்ளும்மய்யா தமிழ்நாடு முழுவதுமல்ல.... உலகம் முழுவதுமென திருத்திக்கொள்ளும்....

 5. Anonymous said...

  உணர்வுகளின் உணர்வுகள் யாழ்ப்பாண வைச வேளார்களின் உணர்வகள்தான். இவை ஈழத்தமிழரின் உணர்வுகளை பிரதிபலிக்கவில்லை

 6. அப்துல் குத்தூஸ் said...

  // அவர் கட்டமைக்கவிரும்பும் தமிழ்த்தேசியம் என்பது தலித்விரோத, முஸ்லீம்விரோத தமிழ்ப்பாசிசக் கருத்துநிலைதான். //


  அவருடைய முகத்திரையை கிழித்தெரிந்ததற்கு நன்றி ஐயா.

 7. Anonymous said...

  அவர் கட்டமைக்கவிரும்பும் தமிழ்த்தேசியம் என்பது தலித்விரோத, முஸ்லீம்விரோத தமிழ்ப்பாசிசக் கருத்துநிலைதான்.

  ஆனால் ஈழத்தமிழர் விரும்பும் தமிழ்த்தேசியம் அதுவல்ல.
  அவர் தனது வேளாளத் தடிப்பினை பதிவுகளில் காட்டுகிறார். புலம் பெயர்ந்தும் தமிழன் திருந்தவில்லை..

 8. Anonymous said...

  ///அப்துல் குத்தூஸ் said...
  // அவர் கட்டமைக்கவிரும்பும் தமிழ்த்தேசியம் என்பது தலித்விரோத, முஸ்லீம்விரோத தமிழ்ப்பாசிசக் கருத்துநிலைதான். //


  அவருடைய முகத்திரையை கிழித்தெரிந்ததற்கு நன்றி ஐயா.///

  இங்கே இந்த இரு வரிகளை மட்டும் எடுத்து கருத்து தெரிவிப்பதன் மூலம் அப்துல் குத்தூஸ் தன் முகத்திரையை கிழித்து விட்டார்.

 9. Anonymous said...

  யார் தமிழர்கள் என்பதை யார் வரையரை செய்வது?பாசிசம் , பாசிசம் என்று புலம்பும் உங்கள் சிந்தனையில்தான் பாசிசத்தின் கூறுகள் அதிகமாக இருக்கின்றன. அ.மார்க்ஸ் என்கிற மத அடிப்படைவாதியின் சிந்தனையில் இல்லாத பாசிசமா?. விளிம்பு நிலை, பின் நவீனத்துவம் போன்ற சொற்களை வைத்து பம்மாத்து பண்ணினால் அதை எல்லோரும் ஏற்றுக் கொண்டுவிடுவார்களா என்ன.உங்களுக்கு ஜால்ரா போட ஒரு கூட்டம் இங்கு இருக்கிறது.
  பா.ம.கவின் ஜாதியத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் குழலி முதல் தலிபான் ஆதரவாளர்களான வலைப்பதிவாளர்கள் உங்களுக்கு ஆதரவு
  தருவதில் வியப்பில்லை.

  காரணம் அந்தக் கூட்டத்தின்
  சிந்தனைகளிலும் பாசிசத்தின் கூறுகள் இருப்பதுதான்.

 10. Anonymous said...

  "ஆனால் தமிழ்நாடு முழுவதும் பார்ப்பனர்கள் பேசும் தமிழ் ஒன்றே. எனவே அவை வட்டாரவழக்குக் கணக்கில் கொண்டுவரமுடியாது. "

  என்ன ஜாதியினரானாலும் அவர் பேச்சு அந்த வட்டார மொழியின் பாதிப்பிலாமல் இராது. இது பார்ப்பனருக்கும் பொருந்தும், வன்னியருக்கும் பொருந்தும்.

 11. Anonymous said...

  நான் சாதி அமைப்பை ஏற்கவில்லை. அதற்காக இந்து மற்றும் சைவ நிலையை உங்கள் வரட்டு வாதங்களுக்குக் பயன்படுத்துவது சுத்த அபத்தம்.
  உங்கள் மனதை ஏதோ பாதித்திருப்பது தெரிகின்றது. அதற்காக சாதியையும்
  இந்து மதத்தையும் போட்டுக் குழப்புவதில் அர்த்தமில்லை.

  புள்ளிராஜா

 12. ஜோ/Joe said...

  யாராவது சொல்வார்களா என எதிர்பார்த்திருந்தேன் .நீங்கள் மிகச்சரியாக சொல்லியிருக்கிறீர்கள் .'உணர்வுகள்' எனபார் பக்கம் பக்கமாக எழுதுகிறாரே தவிர பாதிக்கு மேல் அறியாமையும் அரைவேக்காட்டுத்தனமான வாதங்களுமே.

 13. அற்புதன் said...

  வணக்கம் மிதக்கும் வெளி,

  ஈழத் தமிழர்களின் தேசிய விடுதலைப்போரால் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள சைவ வேளாள சாதித் திமிரின் வடிவம் தான் இந்த உணர்வுகள்.இவர்கள் ஈழத் தமிழ்த் தேசியத்தின் மையம் அல்ல.

  அது சரி உங்கள் பின் நவீனத்துவம் இந்த விழிம்பு நிலை மனிதர்களையும் பாதுகாக்கத் தானே போர்க் கொடி தூக்கி உள்ளது?;-)

  பாலபாரதியின் மற்றும் டிசேயின் பின் நவீனத்துவம் பற்றிய பதிவுகளைப் படித்தேன்.

  எனக்கு இது ஒருவகை போதை போலவே தெரிகிறது.சமூகத்தின் சுரண்டல்களுக்கு ஏற்றத் தாழ்வுகளுக்குத் தீர்வுகள் எதுவும் அற்று, ஒருவகை 'அறிவு ஜீவி ' என்று ஒருவர் தன்னை அடயாளம் காட்டிக் கொள்ளக்கூடிய கவர்ச்சிகரமன போதை மருந்தாகத் தெரிகிறது. நம்ம காலேஜ் பசங்க சென்னையில கிரோ கொண்டா பைக்கில பொண்ணுங்க முன்னாடி வீலி போடுறது மாதிரி இருக்கு.(இது நொன் லீனியரா இருக்குதில்லை):-)

  பின் நவீனத்துவம் என்பது ஒரு வகை fad ஆகத் தான் எனக்குத் தெரிகிறது.வெறும் கவர்ச்சியில் அலையுண்டு விடாதீர்கள்.

 14. Sundar Padmanaban said...

  //ஆனால் தமிழ்நாடு முழுவதும் பார்ப்பனர்கள் பேசும் தமிழ் ஒன்றே. எனவே அவை வட்டாரவழக்குக் கணக்கில் கொண்டுவரமுடியாது. //

  உங்களைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது.

  //திருத்திக்கொள்ளும்மய்யா தமிழ்நாடு முழுவதுமல்ல.... உலகம் முழுவதுமென திருத்திக்கொள்ளும்....//

  ஏன் இதோடு நிறுத்திக்கொண்டீர்கள் குழலி. அண்டசராசரம் முழுவதும் எனத் திருத்திக்கொள்ளச் சொல்லவேண்டியதுதானே.

  எல்லாரையும் முத்திரை குத்தி எல்லாவற்றையும் முத்திரை மனபாவத்துடன் மட்டும் அணுகும் உங்களைப் போன்றோரின் மனோபாவம் மாறட்டும் என்று பிரார்த்திப்பதைத் தவிர வேறுவழியிருப்பதாகத் தோன்றவில்லை.

  என்னமோ போங்க!

 15. மிதக்கும்வெளி said...

  பாசிச உணர்வுகளெக்கெதிரான தங்கள் உணர்வுகளைப் பதிவு செய்த பெயரிலி, அப்துல்குத்தூஸ், ஈழத்தவன், அனானி முதலிய நண்பர்களுக்கு நன்றி. உங்களைப் போன்ற ஈழத்தோழர்களின் கருத்துக்களைக் கேட்கும்போது ஈழத்தேசியத்தை இந்துசைவ வெள்ளாளக் கருத்தியலிலிருந்து விடுதலை செய்ய இயலுமென்று சிறிதளவேனும் நம்பிக்கை வருகிறது. நன்றி.

 16. மிதக்கும்வெளி said...

  /அ.மார்க்ஸ் என்கிற மத அடிப்படைவாதியின் சிந்தனையில் இல்லாத பாசிசமா?/

  அ.மார்க்ஸ் பிறப்பால் ஒரு கிறித்துவர். அவரது தந்தை அந்தோணிசாமி (எ) ராமதாஸ் மலேசியாவில் கம்யூனிஸ்ட் கட்சியில் செயல்பட்டதால் நாடுகடத்தப்பட்டவர். மார்க்ஸ் என்று பெயர் சூட்டப்பட்டதாலேயே குழந்தையாக இருந்த அவருக்குச் சர்ச்சில் ஞானஸ்தானம் செய்யும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. அவரது மகள்கள் இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள். இருவரின் கணவன்களுமே மார்க்சின் சொந்த சாதியையோ மதத்தையோ சார்ந்தவர்கள் அல்லர். எந்த அடிப்படையில் அவரை மத அடிப்படைவாதி என்று குறிப்பிடுகிறீர்கள்?

 17. மிதக்கும்வெளி said...

  /பா.ம.கவின் ஜாதியத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் குழலி முதல் தலிபான் ஆதரவாளர்களான வலைப்பதிவாளர்கள் உங்களுக்கு ஆதரவு
  தருவதில் வியப்பில்லை/

  குழலி என்னை ஆதரிக்கிறாரா, நான் குழலியை ஆதரிக்கிறேனா என்பது பிரச்சினையின் அடிப்படையைப் பொறுத்தது. நான் எங்கும் பா.ம.கவை ஆதரித்ததில்லை. இன்னும் சொல்லப்போனால் பா.ம.க, தமிழ்ப்பாதுகாப்பு இயக்கம் ஆகியவை முன்வைக்கும் தமிழ்த்தேசியத்தையும் கூட கடுமையாக விமர்சிக்கவே செய்திருக்கிறேன். ஆனால் வன்னியர்களின் நியாயமான போராட்டங்களையும் 'மரம்வெட்டி' என்று கூறி இழிவுபடுத்தும் மேல்சாதி உளவியலையும் எதிர்க்கிறேன்.

 18. மிதக்கும்வெளி said...

  /நான் சாதி அமைப்பை ஏற்கவில்லை. அதற்காக இந்து மற்றும் சைவ நிலையை உங்கள் வரட்டு வாதங்களுக்குக் பயன்படுத்துவது சுத்த அபத்தம்.
  உங்கள் மனதை ஏதோ பாதித்திருப்பது தெரிகின்றது. அதற்காக சாதியையும்
  இந்து மதத்தையும் போட்டுக் குழப்புவதில் அர்த்தமில்லை.
  /

  சாதியத்தைக் கழித்துவிட்ட இந்துமதத்தின் சிறப்புகளை நீங்கள்தான் சொல்லுங்களேன். மேலும் சாதியத்தின் அடிப்படை இந்துமதம் அல்ல என்பதையாவது நிறுவங்களேன்.

 19. மிதக்கும்வெளி said...

  / நம்ம காலேஜ் பசங்க சென்னையில கிரோ கொண்டா பைக்கில பொண்ணுங்க முன்னாடி வீலி போடுறது மாதிரி இருக்கு.(இது நொன் லீனியரா இருக்குதில்லை):-)
  /

  நினைத்துப்பார்க்க நல்லாத்தானிருக்கு உங்கள் உதாரணம். ஆனால் பின்நவீனத்துவ ஆதரவாளர்களாக முத்திரை குத்தப்பட்டுள்ள நான், வரவணையான், ஆழியூரான் ஆகியோர் காதலிப்பதற்கு ஒரு காதலியும் இல்லாமல் புலம்பிய புலம்பல்களைப் படித்திருப்பீர்கள்தானே?

 20. Anonymous said...

  அ.மார்க்ஸ் என்கிற மத அடிப்படைவாதியின் சிந்தனையில் இல்லாத பாசிசமா?

  நபிகள் குறித்த கேலிச்சித்திரங்களால் எழுந்த சர்ச்சையில் அவர் எடுத்த நிலைப்பாடு (காண்க சமரசத்தில் அவர் எழுதிய கட்டுரை), இம்ரானா பாலியல் வன்முறை சர்ச்சையில் அவர் எடுத்த நிலைப்பாடு (காண்க அனிச்ச இதழில் வெளியான கட்டுரை) உட்பட பலவற்றில் அவரது அடிப்படைவாத சிந்தனை வெளிப்படுகிறது. இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கமான
  த.மு.மு.க விற்கு அவர் ஆதரவு, குழந்தைகள் திருமண தடுப்புச் சட்டத்திலிருந்து முஸ்லீம்களுக்கு விலக்கு வேண்டும், தஸ்லீம நஸ்ரீனை இந்தியாவை விட்டு துரத்த வேண்டும்
  என்று கோரும் முஸ்லீம் தனி நபர் சட்ட வாரியம் அவருக்கு மதிப்பிற்குரிய அமைப்பு.

  கன்னியாகுமரி மாவட்டத்தில் தஸ்லீமா நஸ்ரீன் வந்த போது அவர் பொது நிகழச்சியில்
  பேசினால் கருப்புக் கொடி காட்டுவோம் என்று தமுமுகவினர் மிரட்டியதால் காவல்துறை அவரை
  கேரளத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தியது. வேறு வழியின்றி அவரும் சென்றார். இதை பெருமையாகக் எழுதியது தமுமுக தன் இணையதளத்தில். டாவின்சி கோடு திரைப்படம் தடை செய்யப்பட வேண்டும் என்று கோரின இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள்.அதை அவர் விமர்சிக்கவில்லை, கேலிச் சித்திரங்கள் விவகாரத்தில் அவர்களை முழுமையாக ஆதரித்து கருத்து சுதந்திரத்திற்கு எதிராக எழுதினார்.

  அப்படிப்பட்டவர் அடிப்படைவாதியல்லாமல் வேறு என்னவாம். சுஜாதாவின் மகன்கள் கலப்புத் திருமணம் செய்து கொண்டதால் சுஜாதா உங்களுக்கு முற்போக்காளராகிவிடுவாரா?.

 21. bala said...

  //அது சரி உங்கள் பின் நவீனத்துவம் இந்த விழிம்பு நிலை மனிதர்களையும் பாதுகாக்கத் தானே போர்க் கொடி தூக்கி உள்ளது?//

  அடப்பாவிகளா?ஏற்கெனவே அவர் பின்னாடி நவீனமாத் தானே இருந்தது?இந்த அழகுல, அதுல கொடியை வேற கட்டி கேவலம் செய்யணுமா?தொடப்பக்கட்டைக்கு பட்டுக் குஞ்சலம் கட்டுவது மாதிரி, இது என்ன விபரீத ஆசை?

  பாலா

 22. Anonymous said...

  // முதலில் வேதம் எப்படி 'மறை' யானது? மறைக்கப்படவேண்டியது என்னும் குறிப்பிலேயே மறை என்னும் சொல் உருவானது. கடைசியில் முஸ்லீம்களின் குர்-ஆன் கூட திருமறையாகிப்போனது. திருக்குறள் உலகப்பொதுமறையானது//

  இந்த ஆளோட அறிவு சுடர் தாங்கமுடியலையே. ஏன்யா? நீங்களெல்லாம் முட்டாள்களா இல்ல முட்டாள் மாதிரி நடிக்கிறீங்களா?
  செத்துப் போன பொணத்தைப் பற்றியே சிந்தனை, சொல், செயல் எல்லாம் இருந்தால், வாழ்வது மன மலக் கும்பலோடு மட்டுமே. உங்க பாசறை, பாசிச, பாசாங்கு கண்ணாடிகள் உங்கள் குருட்டுத் தன்மையை அதிகப் படுத்துமே தவிர உங்கள் பார்வைக் கோளாறு தீர வழி காண்பிக்காது.

 23. Anonymous said...

  அடப்பாவிகளா?ஏற்கெனவே இருள்நீக்கி பின்னாடி நவீனமாத் தானே இருந்தது?இந்த அழகுல, அதுல சுவர்ணமால்யாவை வேற கட்டி கேவலம் செய்யணுமா?தொடப்பக்கட்டைக்கு பட்டுக் குஞ்சலம் கட்டுவது மாதிரி, இது என்ன விபரீத ஆசை?

  பாலா

 24. Anonymous said...

  //அடப்பாவிகளா?ஏற்கெனவே அவர் பின்னாடி நவீனமாத் தானே இருந்தது?இந்த அழகுல, அதுல கொடியை வேற கட்டி கேவலம் செய்யணுமா?தொடப்பக்கட்டைக்கு பட்டுக் குஞ்சலம் கட்டுவது மாதிரி, இது என்ன விபரீத ஆசை?

  பாலா//

  இந்த பின்னூட்டத்தை எவனோ கம்முனாட்டி பயல் என் பெயரில் போட்டிருக்கிறான்.

  வெளியே மிதக்கும் அய்யா!

  இதை தயவுசெய்து நீக்குங்கள். இல்லையென்றால் நீங்கள் போலி பின்னூட்டங்களை பிரசுரிப்பதாக தமிழ்மணத்தில் புகார் செய்வேன்.

 25. bala said...

  //அடப்பாவிகளா?ஏற்கெனவே இருள்நீக்கி பின்னாடி நவீனமாத் தானே இருந்தது?இந்த அழகுல, அதுல சுவர்ணமால்யாவை வேற கட்டி கேவலம் செய்யணுமா?தொடப்பக்கட்டைக்கு பட்டுக் குஞ்சலம் கட்டுவது மாதிரி, இது என்ன விபரீத ஆசை//

  பாலா அய்யா,

  தப்புங்கய்யா..ரெண்டு விஷயம் தப்பா சொல்லியிருக்கீங்க.ஓண்ணு,இருள்நீக்கிக்கு முன்ன தான் கொஞ்சம் நவீனமா இருக்கும்.தப்பா, பின்ன நவீனம்னு சொல்லியிருக்கீங்க.
  ரெண்டு,சொர்ணமால்யாவை பட்டு குஞ்சலம்னு சொல்லியிருக்கீங்க.இது ஓவர்.அந்த அம்மா வெயிட் ஒரு அரை டன் இருக்கும்.என்ன தான் இருள்நீக்கியா இருந்தாலும், சொர்ணமால்யா அம்மாவைக் கட்டுவது கொடிய தண்டனை.வேற மாதிரி யோசியுங்கய்யா.

  பாலா

 26. Anonymous said...

  கடவுளே.
  ஏன்டா தமிழ்மணப்பக்கம் வந்தோம் என்றாகிவிடுகிறது.
  உங்கள் தலைப்பே நகைப்பிற்கிடமானது.
  உணர்வுகளின் முன்னைய பதிவுகளை வாசித்துப் பாருங்கள், எவ்வளவு பார்ப்பன எதிர்ப்பு என்று கண்டபடி எழுதித்தள்ளியிருக்கிறார் என்று(ஒரு ஈழத்தவருக்கு முற்றிலும் அவசியமற்றதெனினும்)..

  வெளிநாட்டுக்கு ஓடிப்போய் தஞ்சம் வாங்கிக்கொண்டு பிறகு பியர் அடிச்சு பொப்கோனும் கொறிச்சுக்கொண்டு மணிக்கணக்கா கம்பியூட்டரில் எழுதித்தள்ளலாம்.
  நாட்டிலிருக்கும் ஈழத்தமிழர் படும் பாடு இவர்களெங்கே அறியப்போகிறார்கள்?
  பிராமணர்களிடமிருந்து விடுதலை வேண்டும் என்று அவர்கள் ஏதும் கேட்டார்களா? இவர் என்னவெனில் தேவையற்ற விடயங்களில் மூக்கை நுழைத்து மூக்கை உடைத்துக் கொண்டிருக்கிறார்..

  ஈழத்தமிழரைப் பொறுத்தவரை பார்ப்பன எதிர்ப்பு என்பதோ, திராவிடக்கொள்கை என்பதோ, அல்லது பெரியாரின் கொள்கைகளோ முற்றிலும் அறியப்படாத விடயங்களாகும், அது தேவையும் இல்லை.

  தேவையற்ற விவாதங்கள் எங்கே சென்று முடியுமோ தெரியவில்லை.

  இன்று கூட ஒரு நண்பனிடம் கேட்டேன் "திராவிடம்" என்றால் என்னவென்று,,இதுவரை நான் கேட்டவர்களில் யாருக்கும் பதில் தெரியாது.( நண்பர்கள் எல்லோரும் பல்கலைக்கழக மாணவர்கள்)

  நான் தான் தேவையில்லாமல் இதற்குள் தலையை விட்டு உடைத்துக்கொண்டிருக்கிறேன் போல் தெரிகிறது.

  இத்தகைய விவாதங்களிலிருந்து விலகுவது நன்றென்பது எனது முடிவு.

  நான் ஏலவே உணர்வுகள் பக்கத்தை தவிர்க்க தொடங்கி பல காலமாகிவிட்டது.

  கூட்டத்தில ஒருத்தன் அடிவாங்கினா போற வாற ஒவ்வொருத்தரும் ஒரு குத்து விட்டிட்டு போறமாதிரி இங்கையும் சும்மா வந்தன்,ஒண்டு குடுக்கிறதுக்கு,

 27. Anonymous said...

  வெளியே மிதக்கும் அய்யா...,

  நானே பதிவு எழுதாத போலி.

  எனக்கே போலியா? ஐந்து அடுக்குமா?

 28. Anonymous said...

  வெளியே மிதக்கும் அய்யா,

  நீங்க எப்போ உள்ளே மிதப்பீர்கள்.. சொல்லுங்கள் அய்யா!

 29. Anonymous said...

  வெளியே மிதக்கும் அய்யா,

  உங்கள காலைகாட்டுங்கள்.. விழுந்து கேட்டுக்கிறேன்.(அடிபட்டா ஆஸ்பத்திரிக்கு தூக்கீட்டுப் போங்க)

  நான் அவனில்லை.

  நான் அவனில்லை.

  நான் அவனில்லை.

 30. நெடுங்குழைகாதன் said...

  அடப்போங்கய்யா

  unarvukaL யாரோட உணர்வுகள் பூனைக்குட்டி வெளியே வந்துடுச்சோய்ய்..

  இப்போல்லாம் நான் கொஞ்சம் ரெஸ்ற் எடுக்குறன். இவ்ளோ நாள ஒரு ஆள் பிசியாக்கிட்டார் என்ன.

 31. Anonymous said...

  பாசிசம் பாசிசம் என்கிறீர்களே பாசிசம் என்றால் என்ன?????? 8-)

 32. Anonymous said...

  //ஈழத்தமிழரைப் பொறுத்தவரை பார்ப்பன எதிர்ப்பு என்பதோ, திராவிடக்கொள்கை என்பதோ, அல்லது பெரியாரின் கொள்கைகளோ முற்றிலும் அறியப்படாத விடயங்களாகும், அது தேவையும் இல்லை//

  ஆம்..உயர் சைவ வேளாளர்க்கு எதிரான எதிர்ப்பே எமக்குத் தேவை.

  //இன்று கூட ஒரு நண்பனிடம் கேட்டேன் "திராவிடம்" என்றால் என்னவென்று,,இதுவரை நான் கேட்டவர்களில் யாருக்கும் பதில் தெரியாது.( நண்பர்கள் எல்லோரும் பல்கலைக்கழக மாணவர்கள்)//

  சுத்தம்.. முதலில் அவர்களைப் பல்கலைக் கழகத்தை விட்டுப்போட்டு பாலர் பாடத்தைப் படிக்கச் சொல்லுங்கள்.

 33. Anonymous said...

  அதிகாரத்தை, அதன் மொழியை உடைக்கும் உங்கள் எழுத்து தொடர வேண்டும்.

  எனக்குப் பிடித்த கவிதையொன்றை உங்களுக்காக எனது பதிவில் தருகிறேன்.