உங்களுக்கு commonsense இல்லையா?


சமீபகாலமாக வலையுலகில் பொதுப்புத்தி குறித்து அதிகமும் பேசப்பட்டது, குறிப்பாக அப்சல் விவகாரத்தில். ஆனால் commonsense என்றழைக்கப்படும் பொதுப்புத்தி குறித்து ஆழமான புரிதலின்றி மேலோட்டமாகவே கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

பொதுவாகவே புத்தி என்பதே இயற்கையானதல்ல, மாறாகக் கட்டமைக்கப்பட்டதே. மொழி என்பது சொற்களாலானது, சொற்கள் அர்த்தங்களால் ஆனவை என்ற வழமையான மொழியியல் புரிதலிலிருந்து விலகி சொற்கள் அர்த்தங்களைப் பதிலீடு (subtitute) செய்வதில்லை, மாறாகக் குறியீடு (signify) மட்டுமே செய்கிறது என்னும் சிந்தனையின் அடிப்படையில் குறியீடு, குறிப்பான் ஆகிய கருத்தாக்கங்களை முன்வைத்தது பின்நவீனம்.

பொதுப்புத்தி என்பது சமூகத்தில் ஆதிக்கத்தைக் கைக்க்கொண்ட பெருங்கதையாடல்களால் கட்டமைக்கப்படுவது. நம்சூழலில் உதாரணம் சொல்லவேண்டுமென்றால் தமிழ்ச்சினிமாவில் கள்ளக்கடத்தல் வில்லன்களின் பெயர்கள் பீட்டராகவோ முஸ்தபாவாகவோ இருப்பது, தலித்துகள் உணர்வற்ற அடிமைகளாகச் சித்தரிக்கப்படுவது எனப் பலவற்றைச் சொல்லலாம். தலித்துகள், சிறுபான்மையினர், பெண்கள், பால்மீறிகள், நாடோடிகள், பழங்குடிகள் என விளிம்புநிலையினர் குறித்து பெருங்கதையாடல்கள் கட்டமைக்கும் பிம்பங்களே பொதுப்புத்தியாக உருமாற்றமடைகிறது.

இத்தகைய போக்கிற்கு எதிரான எதிர்வினைகளும் எழாமலிருப்பதில்லை. அத்தகைய மனநிலைகளைப் புரிந்துகொள்வதுதான் முக்கியம். உதாரணமாக நம் இளைஞர்களிடையே உலவும் பாலியல்கதைகளில் பெரும்பாலான கதைகளின் நாயகர்களாக எம்.ஜி.ஆரும் காந்தியும் இருப்பது. இவர்கள் இருவரும் திருஉரு(icon)க்களாக்கப்பட்டவர்கள். இந்த திரு உருக்களின் மீதான எரிச்சலே பாலியல்கதைகளாக மாறுகிறது. இன்னொரு உதாரணமாகக் கேரளச்சமூகத்தில் வழக்கத்திலுள்ள தெறிப்பாட்டைச் சொல்லலாம். நம் வலைப்பூக்களிலும் இத்தகைய உதாரணங்களைச் சொல்லமுடியும்

பார்ப்பனர்களே உயர்ந்தவர்கள், சாதி என்பது இயற்கையானதுதான், இந்துமதமே உண்மையான மதம், திராவிட இயக்கங்கள் ஆட்சிக்கு வந்தபிறகுதான் தமிழ்நாடே கெட்டுப்போனது அதற்கு முன் இங்கிருந்த ஒரே பிரச்சினை பாலாறும் தேனாறும் ஓடியதால் ஏற்பட்ட ஈ மற்றும் கொசுத்தொல்லைப் பிரச்சினை மட்டுமே என்பதாகவே பொதுப்புத்தியின் போக்கிலிருந்து பேசுபவைதான் ஹரிஹரனின் எழுத்துக்கள். இதுபோன்ற போக்குகளுக்கு எதிர்வினையாகவே விடாதுகருப்பு, டூண்டு(எ) போலிடோண்டு ஆகிய தோழர்களின் எழுத்துக்கள் அமைகின்றன.

இவர்களின் எழுத்துக்களில் 'கெட்ட'வார்த்தைகள் இருக்கின்றதா என்றால் 'ஆம்'. ஆனால் கெட்டவார்த்தை, நல்லவார்த்தை என்பதே பொதுப்புத்தியால் கட்டமைக்கப்பட்டதுதான். அவைகள் கெட்டவார்த்தைகள் என்றால் பார்ப்பனரல்லாத பெரும்பான்மை மக்களை தஸ்யூக்கள், சூத்திரர்கள், வேசிமக்கள் என்று குறிப்பிடும் இந்துமதப் பிரதிகளைக் கொளுத்தி விட பார்ப்பனர்கள் தயாராக இருக்கிறார்களா?


மேலும் வியாசர்பாடியில் வசிக்கும் ஒரு தலித்துக்கு 'ஙோத்தாபாடு' என்பது சாதாரணமான வார்த்தை. நிச்சயமாக திருவல்லிக்கேணி பார்ப்பான் அந்த வார்த்தையை உச்சரிக்கமாட்டான். அதற்காக அந்த பார்ப்பான் நல்லவன் என்று சொல்லிவிட முடியுமா? கெட்டவார்த்தைகளை விட மோசமானவை சாதிய அதிகாரம் நிறைந்த வார்த்தைகள்.
(ஹரிஹரனின் எழுத்துக்கள் போலிடோண்டு மற்றும் விடாதுகருப்பு ஆகியவர்களின் எழுத்துக்களை விடவும் நாகரீகமானவை என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. உண்மையில் போலிடோண்டு, விடாதுகருப்பு ஆகியவர்களின் எழுத்துக்கள் தடைசெய்யப்படவேண்டியவை என்றால் நிச்சயமாக ஹரிஹரனின் எழுத்துகளும் தடைசெய்யப்படவேண்டியவைதான்.
டூண்டு, விடாதுகருப்பு எழுத்துக்களில் ஆணாதிக்க, ஆண்மய்ய மற்றும் ஆண்நோக்குப் பார்வைகள் இருக்கத்தான் செய்கின்றன. இதுகுறித்து எனக்கும் கடுமையான விமர்சனங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் நான் கருத்துமாறுபடுவதாலேயே அல்லது எனக்கு விமர்சனங்கள் இருக்கின்றன என்பதாலேயே ஒரு எழுத்தைத் தடை செய்யவோ தணிக்கை செய்யவோ கோருவது நியாயமாகாது. தணிக்கை, தடை, தண்டனை ஆகிய கருத்தாக்கங்களை மனித உரிமை ஆர்வலர்களும் நவீனச்சிந்தனையாளர்களும் கேள்விக்குள்ளாக்கிவரும் சூழலில் விடாதுகருப்பு, போலிடோண்டு, ஹரிஹரன் ஆகிய யாருடைய எழுத்துக்களாக இருந்தாலும் தடை செய்வதோ அல்லது தணிக்கை செய்வதோ நீதியாகாது. )

ஒரு வசதிக்காக ஹரிஹரனின் எழுத்துக்களைப் பெருங்கதையாடல்கள் என்றும் விடாதுகருப்பு, டூண்டு ஆகியோரின் எழுத்துக்களை சிறுகதையாடல்கள் என்றும் பிரித்துக்கொள்ளலாம்(ஒரு வசதிக்காக மட்டுமே). ஆனால் இத்தகைய இருவிதமான அணுகுமுறைகளுமே ஒரு ஆரோக்கியமான சூழலுக்கு உதவாது. இரு போக்குகளுமே பிடிவாதமான முன் தீர்மானங்களைக் கொண்டவை.

அப்படியானால் இந்த பிரச்சினையை எப்படி அணுகுவது? பொதுவாக நாம் ஒரு பிரதியை அணுகும்போது உடன்பாட்டு வாசிப்பு, எதிர்மறை வாசிப்பு என்கிற இருவிதமான வாசிப்புகள் வழியாகவே அணுகுகிறோம். இது முன் தீர்மானங்களின் அடிப்படையில் அணுகுவது. இது உங்களுக்கு எதையும் புதிதாக கற்றுத் தராது. அறிந்தவற்றிலிருந்து விலகும்போதுதான் நாம் புதிய அர்த்தங்களைச் சென்றடையமுடியும், மேலும் கண்டடைய முடியும்.

விவாதம் என்பது நீங்கள் ஏற்கனவே கொண்டிருக்கும் கருத்தை மறு உறுதி செய்வதுதான். 'என்னுடைய கருத்து மட்டுமே சரியானது" என்னும் புள்ளியிலிருந்தே இது தொடங்குகிறது. ஆனால் இதற்கு மாறாக உரையாடல் என்பது "என் கருத்திலும் தவறு இருக்கலாம்" என்னும் புள்ளியிலிருந்து தொடங்குகிறது.

உரையாடல் மட்டுமே நமக்குப் புதிய புரிதல்களை உருவாக்க உதவும். பொதுப்புத்தியிலிருந்து விலகுவதுமட்டுமே இதற்கான வழி.
எனவே, இனி யாராவது "உனக்கு commonsense இருக்கிறதா?" என்று கேட்டால் தயங்காமல் "எனக்கு commonsense இல்லை" என்று பெருமிதத்தோடு கூறுங்கள்.

அறிந்தவற்றிலிருந்து விலகுங்கள், அறியாமையிலிருந்து தொடங்குங்கள், உரையாடப் பழகுங்கள். உரையாடுவோம்.

9 உரையாட வந்தவர்கள்:

  1. கருப்பு said...

    என்னைய வெச்சி காமெடி கீமெடி ஒன்னும் பன்னலியே?

  2. Anonymous said...

    ஆண்டிகள் கூடிய மடல் படிச்சு பாருங்க.

    http://anaanymous.blogspot.com/2006/12/3.html

  3. Anonymous said...

    //விவாதம் என்பது நீங்கள் ஏற்கனவே கொண்டிருக்கும் கருத்தை மறு உறுதி செய்வதுதான். 'என்னுடைய கருத்து மட்டுமே சரியானது" என்னும் புள்ளியிலிருந்தே இது தொடங்குகிறது. ஆனால் இதற்கு மாறாக உரையாடல் என்பது "என் கருத்திலும் தவறு இருக்கலாம்" என்னும் புள்ளியிலிருந்து தொடங்குகிறது.//

    நல்ல ஆழமான பதிவு.நன்றி

  4. மிதக்கும்வெளி said...

    கருப்பு உங்களை வச்சு காமெடி பண்ணமுடியுமா, என்ன? உங்கள் பூனை படத்தைப் பார்க்கும்போதே 'சிவப்பு ரோஜாக்கள்' பூனைதான் ஞாபகம் வருது. பயம்ம்ம்மாயிருக்கு.

  5. மிதக்கும்வெளி said...

    அனானி, 'ஆண்டிகள் கூடிய மடம்' படித்தேன். வித்தியாசமான குறியீட்டு ரீதியான பதிவு. பஞ்சர்தான் யார் என்று தெரியவில்லை.

  6. வரவனையான் said...

    //மிதக்கும் வெளி said...
    அனானி, 'ஆண்டிகள் கூடிய மடம்' படித்தேன். வித்தியாசமான குறியீட்டு ரீதியான பதிவு. பஞ்சர்தான் யார் என்று தெரியவில்லை. //



    கொஞ்சமாவது தமிழ்மண அரசியல் வார்த்தைகள் தெரியவில்லை என்றால் இப்படித்தான். அது பற்றிய அறிவு வேண்டுமாயின் மீட்டர் முருகேச்ண்ணாட்ட போய் பாடம் படியுங்கள்.

    வாரமலர் சினிமா பொன்னையா ,வின் குறீயிடுதான் இங்கும், பஞ்சர் = சங்கர் என்று படிக்க வேண்டும்.

  7. Anonymous said...

    விவாதம் என்பது நீங்கள் ஏற்கனவே கொண்டிருக்கும் கருத்தை மறு உறுதி செய்வதுதான். 'என்னுடைய கருத்து மட்டுமே சரியானது" என்னும் புள்ளியிலிருந்தே இது தொடங்குகிறது. ஆனால் இதற்கு மாறாக உரையாடல் என்பது "என் கருத்திலும் தவறு இருக்கலாம்" என்னும் புள்ளியிலிருந்து தொடங்குகிறது

    It is just a bad joke when you
    say this.Dont be bad carbon copy
    of A.Marx and others.Think for
    yourself.

  8. bala said...

    வெளியே மிதக்கும் அய்யா,

    படத்துல உங்களுக்கு பின்புறத்திலே நவீனமா ஏதோ முளைச்சிருக்குதே? இதைத்தான் பின் நவீனம் பின் நவீனம்னு சொல்றாங்களோ?
    யார், யாரை கட்டவிழ்த்தாங்களோ என்னவோ தெரியாது..ஆனா உங்க ஜட்டியை அவிழ்த்துட்டாங்க..

    பாலா

  9. bala said...

    //என்னைய வெச்சி காமெடி கீமெடி ஒன்னும் பன்னலியே//

    கருப்பய்யா,

    உங்களை வச்சிக்கிறது காமெடியா? கேவலம்.ஆனா கட்டவிழ்ந்து வெளியே மிதக்கும் அய்யா, இந்த கேவலத்தையும் செய்யக்கூடியவர் தான்.

    பாலா