மணிரத்னம் ஒரு போஸ்ட்மாடர்னிஸ்டா?

அன்புள்ள அனானி,

உங்கள் பெயர் எனக்குத் தெரியவில்லை (முட்டாள், பெயர் தெரியாவிட்டால்தான் அனானி, cool down). அடிக்கடி என் பின்னூட்டங்களில் வந்து எனக்கு பின்நவீனம் தெரியாது, சினிமா தெரியாது என்றெல்லாம் 'அருளாசிகள்' வழங்கிப் போகிறீர்கள். நன்றி. இருக்கலாம்.
கார்ப்பரேசன் பள்ளியில் 12ம் வகுப்பு வரை சத்துணவு மட்டுமே சாப்பிட்டு வளர்ந்த என் அரைகுறை ஆங்கில அறிவின் விளைவாகப் பின்நவீனம் குறித்து நான் ஏதாவது அபத்தமாக உளறியிருக்கலாம். நான் பின்நவீனத்தில் டாக்டரேட் பண்ணியவன் இல்லை. நான் ஒரு பின்நவீனத்துவவாதி என்று எங்கேயும் சொன்னதாகவும் நினைவில்லை. (postmodern conditionதான் இருக்கிறது, postmodernistஎன்றெல்லாம் யாரும் இல்லை என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்)

மணிரத்னத்தின் சினிமா குறித்து நான் எழுதும்போது 'ஒரிஜினலாட்டி, காப்பி' குறித்து பி.ந என்ன சொல்கிறது என்று சட்டையைப் பிடித்து உலுக்கியிருந்தீர்கள். உண்மைதான் பின்நவீனம் 'ஒரிஜினல் என்ற ஒன்று கிடையாது' என்றுதான் சொல்கிறது. ஒரிஜினாலிட்டி என்ற பெயரால் ஏற்படும் அறிவின் அதிகாரத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது.

ஆனால் மணிரத்னத்தை விமர்சிக்கும்போது மட்டும் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது என்று தெரியவில்லை? தேவா டியூன்களைக் காப்பியடிக்கிறார் என்று குற்றம் சாட்டப்படும்போது கோபம் வருவதில்லை. ஆனால் மணிக்கு மட்டும் பின்நவீன உதவியோடு வந்துவிடுகிறீர்களே, ஏன்? தேவா ஏன் சாதாரணக் கானா இசையமைப்பாளராக அறியப்படுகிறார்? மணிரத்னம் எப்படிக் கலைஞ்ன் ஆனார்?

ஒரு படத்தைப் பார்த்து உந்துதல் பெறுவது, அதை நம் சூழலில் முயற்சித்துப் பார்ப்பது உலகமகா பாவமில்லை. ஆனால் எந்த பிரச்சினை குறித்து (அ) எந்த சூழல் குறித்துப் படமெடுக்கிறீர்களோ அது குறித்த அவதானிப்பு அவசியம் இல்லை என்று கருதுகிறீர்களா?

'புதுப்பேட்டை' யிலும், 'ஈ'யிலும் வரும் சேரியையும் பாருங்கள். 'ஆயுத எழுத்தில் வரும் சேரியைப் பாருங்கள். சென்னையில் எந்த சேரி அவ்வளவு சுத்தமாக இருக்கிறது? (மணிரத்னம் வகையறாக்கள் வந்து கூட்டிப் பெருக்கினால் ஒருவேளை அபப்டி மாறக்கூடும்)'ரோஜா' படம் காஷ்மீர்ப் பிரச்சினை பற்றிய எந்த உரையாடலைத் துவக்கி வைத்தது? மீண்டும் தேசியக் கற்பிதம் குறித்த உணர்ச்சி மேற்பரப்பில் மட்டும்தானே விளையாடியது?
மும்பை படத்தின் கிளைமாக்ஸில் ஏன் 4பக்க வசனம்? ஏன் மணிரத்னம் என்னும் கலைஞனால் அதைக் காட்சிப்படுத்த முடியவில்லை? ராமர் கோவில் பாபர் மசூதிப் பிரச்சினை குறித்து போகிற போக்கில் 'எல்லோரும் ஒற்றுமையா இருங்கள்' என்று சொல்வதற்குக் கலைஞன் தேவையா? ஏன் மிஸ்டர்&மிசஸ் அய்யர் ஏற்படுத்திய பாதிப்பை மும்பை உருவாக்கவில்லை?

திராவிட இயக்கம் குறித்து எந்த ஆழமான கல்வியும் இல்லாமல் எந்த தைரியத்தில் மணி 'இருவர்' படம் எடுத்தார்? ஒரு படத்தின் மூலம் தாக்கம் பெறுவது என்பது வேறு. தலையைச் சொரிவதிலிருந்து வாயைக் குதப்பிப் பேசுவது வரை காப்பியடிப்பது கலையா? இசை, ஒளிப்பதிவு, தொழில்நுட்பம் போன்ற ஒரு சில அம்சங்களைத் தூக்கிவிட்டால் உலக சினிமாவில் மணிரத்னத்தின் இடம் எது?

எந்த புரிதலும் இல்லாமல் எல்லாவற்றையும் வியாபாராமாக்கி விடும் ஒருவரைக் குறித்து விமர்சித்தால் ஏன் ஆத்திரப்படுகிறீர்கள்?

நீங்கள் பின்நவீனப் பண்டிதர் என்பதால் அடையாள அரசியல்(politics of identity), வித்தியாசங்களின் அரசியல்(politics of differences) (அ) மிச்சங்களின் அரசியல்(politics of reminders) பற்றி அறிந்திருப்பீர்கள். சபல்டர்ன் ஆய்வுகள் அடிப்படையிலான வாசிப்புகளின் அவசியத்தையும் அறிந்திருப்பீர்கள். இத்தகைய ஆய்வுகளின் அடிப்படையில் அணுகினால் மணியின் சினிமாக்கள் யாருக்கு ஆதரவாக நிற்கின்றன?

மணியின் படங்களில் பெண்களின் இடங்கள் எவை? காதலனின் உயிர் உருக்கும் பாட்டைக் கேட்டு தன் பர்தாவைத் தடுக்கும் நங்கூரத்தை உதறிவிட்டு ஓடி வரும் பெண்ணின் குலுங்கும் மார்புகளைக் குளோசப்பில் காட்டிய கலைஞன் தானே மணி? ஆயுத எழுத்தில் சேரிப்பெண்ணாக வரும் மீராஜாஸ்மினின் பிரதானப் பணிகள் எவை? மாதவனோடு சரசமாடுவதும், கணவனிடம் அடிக்கடி அறை வாங்குவதும்.

இங்கு மார்க்சியம் தெரிந்த பல பார்ப்பனர்கள் மார்க்சிஸ்ட்களாக இருந்ததை விடப் பார்ப்பனர்களாகவே இருந்தார்கள். (எல்லாப் பார்ப்பனர்களையும் சொல்லவில்லை. எம்.என்.ராய், ராகுல்ஜி, ஏ.எஸ்.கே போன்றோர் மீது எனக்கு மரியாதை உண்டு). இப்போது பின்நவீனம் தெரிந்தும் பார்ப்பனர்களாகவே இருக்கிறீர்கள்.

என்னைப் பார்ப்பன வெறுப்பாளன் என்று அடையாளப்படுத்தியிருந்தீர்கள். நான் பார்ப்பன எதிர்ப்பாளனே தவிர பார்ப்பன வெறுப்பாளன் இல்லை. எனக்குத் தமிழ்ச்சூழலில் பின்நவீனத்தை அறிமுகப்படுத்தியவர்களும் பார்ப்பன எதிர்ப்பாளர்களாகவும் இந்துத்துவ எதிர்ப்பாளர்கவுமே இருந்தார்கள். நான் கொண்டிருப்பது பார்ப்பன வெறுப்பு என்றால், 'இருவர்' படம் (முழுவதும்) 'ஆயுத எழுத்தில்' வில்லனாக வரும் கதாபாத்திரம் கருப்புச்சட்டை அணிந்திருப்பது, 'வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது' என்று வசனம பேசுவது ஆகியவைகளைக் கொண்டு மணிரத்னம் என்ன வகையான உணர்வுகளைக் கொண்டிருக்கிறார் என்று தயவு செய்து எனக்கு விளக்குங்களேன்.

நன்றி.
சுகுணாதிவாகர்.

9 உரையாட வந்தவர்கள்:

  1. bala said...

    //பின்நவீனம் தெரியாது//

    வெளியே மிதக்கும் அய்யா,

    அந்த அனானி உங்க ஃபோட்டோவை பார்க்கவில்லை. அதனால அப்படி சொல்லிட்டாரு.அவரை மன்னிச்சுடுங்க.
    ஃபோட்டோவில உங்க பின்(ன) நவீனமா ஏதோ இருக்கிறதே.அதனால நீங்க அடக்கத்தோட இல்லை என்றாலும் நீங்க கண்டிப்பாக பின்(ன) நவீனம் தான்.கவலை வேண்டாம்.

    பாலா

  2. அமர்நாத் said...

    'புதுப்பேட்டை' யிலும், 'ஈ'யிலும் வரும் சேரியையும் பாருங்கள். 'ஆயுத எழுத்தில் வரும் சேரியைப் பாருங்கள். சென்னையில் எந்த சேரி அவ்வளவு சுத்தமாக இருக்கிறது?

    No one said madhavan and meera were living in 'cheri' in that movie.
    'E' and 'Pudupettai' they will specifically say that is a 'cheri'

    sari vidunga...ippo ...ayudha elluthu leyum E matturm pudupettai madhiri 'cheri' katti irrundha ongaluku Mani mela mariyadhai vandhirukuma???

    See, padam paarthuttu thappu kandupudikiradhu veraa...padam parkuradhey thappu kanndupudikiradhukuna adhu veru...

    Deva, mani...see goverment employees pathi kevalama pesuna...yaarum sandaiku poga mudiyadhu...example: cinema vula, police a pathi, pathi pathiya vasanam pesinaalum yaarum onnum panna mudiyadhu...aana, enga appa police pathi kevalma pesuna kovam varum saaar...
    Adhu poola dhan...naam mariyadhai vaithirukum orudhar mela yaravadhu kuttram sonnalum kovam varum.

    காதலனின் உயிர் உருக்கும் பாட்டைக் கேட்டு தன் பர்தாவைத் தடுக்கும் நங்கூரத்தை உதறிவிட்டு ஓடி வரும் பெண்ணின் குலுங்கும் மார்புகளைக் குளோசப்பில் காட்டிய கலைஞன் தானே மணி
    hello....neenga partha visayatha mattum dhan kaatinanga nu sonna ...eppdi sir.
    Oru ponnu odi vandha...(Adhuvum mainsa madhri oru ponnu) adhu aada dhan seiyum. Andha 5 nimisa paattule ore 3 second varra anda scene mattum dhan onga kannuku therinjudha?

    ஆயுத எழுத்தில் சேரிப்பெண்ணாக வரும் மீராஜாஸ்மினின் பிரதானப் பணிகள் எவை? மாதவனோடு சரசமாடுவதும், கணவனிடம் அடிக்கடி அறை வாங்குவதும்.

    Story appedi sir, madhavan character appedi, meera character appedi...Nalla padiya kaattanumnu meera, velaiku poi purusana kappathura madhiri kadhai venumna onga padathula vainga.
    FYI: Meera andha padathula housewife. veetuku purusan vandha enna seivaanu adhule kaati irruku.

    'ஆயுத எழுத்தில்' வில்லனாக வரும் கதாபாத்திரம் கருப்புச்சட்டை அணிந்திருப்பது, 'வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது' என்று வசனம பேசுவது ஆகியவைகளைக் கொண்டு மணிரத்னம்

    Karuppu oru nalla color sir, alai payuthey le kooda dhan madavan num ajit wife um karuppu color dress pooturukkannga???
    adhu naala...alai payuthey le nallavara irrundha mani, aiutha eluthu le kettavar agittaraa..

    Yoov, mani edavadhu arasiyal iyakathil irrukarra? illa yengayavadhu paarpaniyam illa thiravidam pathi pesurana???
    Neeyum naanum dhan adhey pathi pesi, adhe perusaak, vettiya neratha pookikitu irrukoom. Matha padi jananga ....padam paarpanga ...nallla irrundha 2 or 3 thadavai paarpanga...illaina ....vimarsanam nu solli, kathai ye pooram solli...oruthaniym theatre pakkam annpa maattanga.

    ok va...Makkalukku arivrai sollradhuku naama yaaruppa??? avanga namala vida nalla yocippanga.

    Naama namma velaiya paarpoooma...

  3. அமர்நாத் said...

  4. மிதக்கும்வெளி said...

    ரொம்பத் தமாஷா இருக்கு. அமர் உங்களை நினைச்சா ரொம்ம்ம்பப் பெருமையா இருக்கு

  5. மிதக்கும்வெளி said...

    சினேகிதன் சரிதான் நீங்கள் சொல்வது.

  6. bala said...

    //சென்னையில் எந்த சேரி அவ்வளவு சுத்தமாக இருக்கிறது//

    வெளியே மிதக்கும் அய்யா,

    நீங்க சொல்றது கரெக்ட். அதே மாதிரி எந்த சேரியிலே மனிஷா கொயிராலா இருக்காங்க?எல்லாம் புளுகு.

    பாலா

  7. Anonymous said...

    என்னைப்பொருத்தவரை மணிரத்னம் ஒரு நல்ல டெக்னீஸியன்களை வேலை வாங்கத்தெரிந்த டெக்னீஸியன அவ்வளவே.!

    That is better.How many directors know this.How about Rama.Narayanan
    or Bhagyaraj.The dravidian films
    were full of noise and sound with
    no sense of film aesthetics.Mani's
    films are different from them.
    Even now Karunanidhi writes in
    the style he used in 50s and 60s.
    Whereas Mani and Sujata write crisp and to the point dialogs.
    So his films are more realistic
    compared to dravidian films and
    films by directors like Rama.
    Narayanan.All said and done
    Mani Rathnam is a talented guy
    and is well recognised for his
    films. He is one of the few directors who can make films
    that have impact in the Indian
    film industry as a whole.Has the
    Dravidian movement produced any
    such director whose work has
    influenced the Indian film
    making.Not at all.So despite
    all his flaws and shortcomings
    he is a cut above the rest.
    To acknowledge this is not
    possible for people who have
    a narrow prespective.

  8. Anonymous said...

    சென்னையில் எந்த சேரி அவ்வளவு சுத்தமாக இருக்கிறது.

    I thought Stalin had made Chennai a
    Singara Chennai, was it not so ?:).

  9. Unknown said...

    Nalla aesthetics Mani-kku:

    agni natchatram paathu kannu ponathu thaan michcham
    anjali-la kolanthaga pesarathum love letter kudukarathum romba nall aesthetics

    God Father, E.T., Cliffhanger, Amores Perros intha pada director-llam Manikitta
    irunthu thaan aesthetics pathi therinjukittanga