மணிரத்னம் நீங்கள் கலைஞனா, திருடனா?'இயக்குனர் அசிங்கம்' பாலச்சந்தர், 'பார்த்தாலே பரவசம்' வரை நூறு நாடகங்கள் எடுத்திருக்கிறார். 101வது நாடகமாக 'பொய்' ஓடிக்(?)கொண்டிருக்கிறது. பாரதிராஜா என்னும் கலைஞன் பல கிளிஷேக்களை எடுத்து ஓய்ந்துவிட்டார். இவர்கள் இருவருக்கும் அடுத்து இருப்பது மணிரத்னம்தான்.

அவர் மௌனராகம், இதயக்கோயில், பகல்நிலவு என்று எடுத்துக்கொண்டிருந்த வரை ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால் அரசியல் சினிமா எடுக்கிறேன் என்று ஆரம்பித்து வாந்திதான் எடுத்தார். காஷ்மீர்ப்பிரச்சினை, வடகிழக்கு மாநிலங்களின் தேசிய இனப்பிரச்சினைகள் என ஒரு இழவும் தெரியாது ஏதாவதொன்றை எடுத்துத் தள்ளி விமர்சகர்களிடம் நார்நாராய்க் கிழிபட்டார்.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க மணிரத்னம் ஏதாவது சொந்தமாய் யோசித்துப் படமெடுத்திருக்கிறாரா என்றால் அதுவும் கிடையாது. அவர் சுட்ட இடங்கள்.

நாயகன் - காட்பாதர்
திருடா திருடா - கிளிப்ஹேங்கர்
ரோஜா - ஒருமாதிரியாக ராமாயணத்தை உல்டா செய்தது.
தளபதி - மகாபாரத உல்டா
பம்பாய் - ஓட்டல் ருவாண்டாவை மோசமாக உல்டா அடித்தது.
ஆயத எழுத்து - அகிரோ குரோஷாவைக் கேவலப்படுத்தியது.

நாயகனில் 'காட்பாதர்' படத்தில் மார்லின்பிராண்டோ தலையைச் சொறிவதைக்கூட காப்பியடித்து கமல் சொறிவார். அனேகமாக மணியின் படங்களிலேயே தேறுவது 'அஞ்சலி' மட்டும்தான். (ஒருவேளை அது திருடப்பட்ட படத்தை நான் பார்க்காமல் கூட இருந்திருக்கலாம்)

இப்போது மணிரத்னம் 'குரு' என்று ஒரு படம் எடுத்துக்கொண்டிருக்கிறார். அதனுடைய கதையைச் சமீபத்தில் (2006ல்தான்) ஒரு பத்திரிகையில் படிக்க நேர்ந்தது. அந்த கதை வேறு ஒன்றுமில்லை. ஆர்சன் வெல்ஸ் என்னும் இயக்குனரால் எடுக்கப்பட்ட 'சிட்டிசன் கேன்' என்னும் படத்தின் அதே கதைதான்.முடிந்தால் அந்த படத்தின் டி.வி.டியைப் பாருங்கள். மணிரத்னம் அதைச் சுடமாட்டார் என்று (தைரியம் இருந்தால்) பந்தயம் கட்டுங்கள். குரு வெளியாகும்வரை பொறுத்திருங்கள்.ஒருவேளை அப்படி இல்லாமல் இருந்தால் பந்தயம் கட்டுபவர்களுக்கு மணிரத்னத்தால் காப்பியடிக்கப்பட்ட மேற்கத்தியப்படங்களின் டி.வி.டிக்கள் இலவசமாக வழங்கப்படும்.

இந்தியாவில் காப்பியடிப்பவன் தான் கலைஞன் என்றால் கலைஞனை என்ன சொல்வார்கள்?

43 உரையாட வந்தவர்கள்:

 1. நாடோடி said...

  சார் காப்பி அடிக்குறது என்ன புதுசா..

  நான் போன சனிக்கிழமை சன் டீவில "ஆணை"னு ஒரு படம் பாத்தேன். ரொம்ப விளங்கின படம் "MAN ON THE FIRE" அப்படியே காப்பி அடிச்சு இல்ல தமிழ் டயலாக் மட்டும்தான்.தமிழ்நாட்டுக்காக கொஞ்சம் மசாலா கிளைமேக்ஸ்ல மாற்றம் அவ்வளவுதான்.

  அவ்வளவு ஏன் கலைஞர் கருணாநிதி கதை எழுதின "பாச பறவைகள்" ரொம்ப சுத்தம். ஏற்கனவே DDல வந்த நாடகத்தை நவீனமா கொடுத்து இருந்தாங்க அவ்வளவுதான். என்ன DD அது அரசர் காலத்து கதை.

 2. Anonymous said...

  சிட்டிசன் கேன் படம் திரைப்படத் துறையின் பொக்கிசம்.
  அப்படத்தையோ அதன் உத்திகளையோ கேவலப்படுத்தாமலிருந்தால் சரி.

 3. கார்மேகராஜா said...

  நீங்க நல்லவரா? கெட்டவரா?

 4. மிதக்கும்வெளி said...

  நாடோடி, 'ஆணை, கருணாநிதியின் 'பாசப்பறவைகள்' எல்லாம் படம்ன்னு ஒத்துக்கொள்றீங்களா?

 5. மிதக்கும்வெளி said...

  கார்மேகராஜா, தெரியலையேப்பா!

 6. Anonymous said...

  அக்னி நட்சத்திரம் படத்தில் மகன்கள் அப்பாவை கட்டிலோடு இடம் மாற்றுவது கூட ஃகாட்பாதரில் இருந்து சுட சுட சுட்டது தான். மணி ரத்னத்தை விட கேவலமான காப்பியடிச்சானை நான் பார்த்ததே இல்லை. இவரெல்லாம் பெரிய மேதை என்று காட்டப்படுவதை தான் சகித்துக் கொள்ள முடியவில்லை

 7. Anonymous said...

  http://en.wikipedia.org/wiki/Guru_(2007_film)
  My earlier comment has not been published.

 8. லொடுக்கு said...

  உங்கள் பார்வையில் தமிழில் நல்ல இயக்குனர்கள் யார் யார் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?

 9. Anonymous said...

  Anjali is an inspiration from E.T. the Extra-Terrestrial ;-)

  --
  Jagan

 10. மிதக்கும்வெளி said...

  அனானி நண்பரே. நீங்கள் எந்த பின்னூட்டத்தைக் குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லை. நான் எந்தப் பின்னூட்டத்தையும் நிராகரிப்பவன் அல்ல.

 11. மிதக்கும்வெளி said...

  லொடுக்கு, யார் நல்ல இயக்குனர்கள் என்பது குறித்து நான் எதுவும் பேசவில்லையே, குறிப்பாக மணிரத்னத்தின் படங்களைப் பற்றித்தானே பேசினேன்.

 12. மிதக்கும்வெளி said...

  ஈ.டி படம் பற்றிய தகவலுக்கு நன்றி

 13. Anonymous said...

  nanbare, ayutha ezluthu - amores peroes'n thaluval

 14. வெங்கட்ராமன் said...

  The Film - BOMBAY
  shows the real pain.

  The Kannathil Muthamittal also.

  According to me Manirathnam is the best.

  What about
  Kamba Ramayanam - Valmiki Ramayanam
  (Ithuvum Kaappi than)


  (Please wath Dharmapuri, Sivakasi . . )

 15. Pot"tea" kadai said...

  சுகுணா,

  மணி சார் சுட்டதுல "உயிரே"வை விட்டுட்டீங்களே...சந்தோஷ் சிவனிடம் கேட்டுப்பாருங்கள் கதை கதையா சொல்லுவார். கதையை படமாக எடுக்கலாம் என்றிருக்கிறேன் என்று மணியிடம் சொன்ன ஒரே வாரத்தில் 'உயிரே" படம் துவக்கப்பட்டது. அந்த வெறுப்பிலேயே சந்தோஷ் சிவன் "டெர்ரரிஸ்ட்" படம் எடுக்க வேண்டியிருந்தது.

  மணி ஒரு சுட்டான்குருவி என்பதில் சந்தேகமேயில்லை.

 16. Anonymous said...

  நாயகன் காட்பாதரை தழுவி எடுக்கப்பட்டிருந்தும் உலகின் தலைசிறந்த படங்களில் ஒன்றாக டைம் இதழ் தேர்ந்தெடுத்தது.

 17. Anonymous said...

  கன்னத்தில் முத்தமிட்டால் கதை
  "stuart little" கதையை ஒத்து இருக்கும்.

  கொசுறு தகவல்.
  சங்கரின் அந்நியன் "colour of night"
  என்ற bruce willis நடித்த படத்தின் தழுவல்.

 18. மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

  பம்பாய், ஹோட்டர் ர்வாண்டாவுக்கு முன்பு வந்தது. சிற்சில காட்சிகள் வேறேதோவொரு படத்திலிருந்து சுட்டது என்று படித்த நினைவு.

  ரோஜா படத்திலிருந்து சமூக நிகழ்வுகளைக் கருவேப்பிலையாகத் தொட்டுக்கொண்டு காசு பண்ணுவது அவருடைய வேலை. முக்கியமாக கன்னத்தில் முத்தமிட்டால்! எத்தனை சொதப்பல்கள் அந்தப் படத்தில்.. வலைப்பதிவுகளில் பலரும் பலமுறை இதுபற்றி எழுதியிருக்கிறார்கள்...

  நல்ல பதிவு. விரிவாக எழுதியிருக்கலாம்.

 19. Anonymous said...

  Bombay was released in 1996
  Hotel Rwanda in 2004.
  Just because you know names
  of some films dont think you
  can write any nonsense.Guru seems
  to be based on life of Dhirubai Ambani and it has nothing to do
  with Citizen Kane.I think you
  hate him because he is a brahmin.
  When i see brahim haters writing
  comments in your blog as if he has
  done nothing original my suspicion is confirmed.btb do you know what
  post-modernism says about 'original' and 'copy'.
  Try to grow up man.

 20. மிதக்கும்வெளி said...

  ஆகா இன்னாமா தகவல்கள் குவியுது. தமிழ்ப் படங்கள் பெரும்பாலும் சுட்ட பழங்கள்தான் போலும் அனானி நண்பரே. நீங்கள் சுட்டிக்காட்டியது சரிதான். மும்பை, ருவாண்டாவுக்கு முன்னர் வந்ததுதான். தவறுக்கு வருந்துகிறேன். ஆனால் மணிரத்னத்தின் மற்ற படங்கள் பற்றி என்ன சொல்கிறீர்கள்? மணி ஒரு பார்ப்பனர் என்பதால் மட்டுமே நான் விமர்சிக்கவில்லை. சத்யஜித்ரேவும் கூட பார்ப்பனர்தான். ரேயை விட எனக்கு ரித்விக் கட்டாக்கைத்தான் பிடிக்கும் என்றாலும் ரேயை நான் மதிக்கிறேன். பின் நவீனம் திருட்டுக்கும் காப்பிக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்குகிறது. உங்கள் பின்நவீன அறிவு மணிரத்னம், பார்ப்பனீயம், இந்துத்துவத்தைக் காப்பாற்றத்தானா பயன்படவேண்டும்?

 21. Cable சங்கர் said...

  அன்பார்ந்த மிதக்கும் வெளி அவர்களே...உலகத்தில் நீங்களாக உருவாக்கியது எது?. எல்லாமே ஏதோ ஒன்றிலிருந்து மருவி உருவாவதுதான்.இதை நான் தான் உருவாக்கினேன் என்ற ஓன்றே கிடையாது என்றே கருதுகிறேன். மணிரத்னம், பாலசந்த்ர், பாரதிராஜா போன்றவர்கள் தமிழ் சினிமாவில் சாதித்தது நிஜம். மணிரத்னத்தின் நாயகன் காட்பாதரின் காப்பியாகவே இருக்கட்டும் அப்படி இருந்தும் அது உலகின் சிறந்த 100 படங்களில் ஒன்றாக எப்படி தேர்தெடுக்கபடும். பம்பாய் ஓன்றும் காப்பி அடிக்கப்ட்ட் படம்ல்ல.உங்களுக்கு அடிப்படையில் யார் தான் காப்பி அடிக்காமல் படமெடுப்பவர் என்று சொல்ல முடியுமா? சமீபத்தில் ஹாலிவுட்டில் வெளீவந்த the departed என்கிற ஆங்கில படம் எல்லா உலக மொழியிலும் வெளிவந்த கதைதான். ஓரு படத்தில் காதலை பெற்றவர்கள் எதிர்பதாக காட்டினால், பின்னால் படமெடுப்பவர்கள் அதை போல் சொல்லக்கூடாது என்று சட்டமா? உலகில் மொத்தமாக சினிமாவிற்காக மிகச்சில கதைகருவே உள்ளது. எனவே கதை அதை பார்த்து எடுத்தது, இதைப்பார்த்து எடுத்தது என்று கூறுவதை விட்டு அதை இவர்கள் எப்படி சொல்லியிருக்கிறார்கள் என்று பாருங்கள். மேலும் எதற்காக இங்கே ஜாதி பிரச்சனை? அப்படி நீங்கள் ஓரு குறிபிட்ட ஜாதியை எதிர்பவராக உங்களை காட்டிக் கொள்ள நினைத்தால் உங்கள் கருத்துக்கள் எவ்வளவு உண்மையாய் இருப்பினும் ஏறாது.
  www.shortfilmindia.com

 22. கோபிநாத் said...

  வணக்கம் மிதக்கும் வெளி
  அருமையாக ஆராய்ந்து பதிவு சொய்திருக்கிறிர்கள்.
  ஆனால் நிங்கள் சொல்லும் விஷயத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. உலகத்தில் யார் தான் காப்பியடிக்கவில்லை. நிங்கள் நினைக்கும் ஒரு விஷயத்தை வேறு ஒருவர் செய்து முடியிருத்திருந்தால். அவர் உங்களிடம் இருந்து காப்பியடிக்கிறர் என்று நினைத்தால் அது தவறு. மணிரத்திம் கலைஞன் தான் திருடன் இல்லை

  \\எல்லாமே ஏதோ ஒன்றிலிருந்து மருவி உருவாவதுதான்.இதை நான் தான் உருவாக்கினேன் என்ற ஓன்றே கிடையாது என்றே கருதுகிறேன்.\\

  என் தாழ்மையான கருத்தும் இதான்.

 23. மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

  http://dystocia.blogspot.com/2004/10/blog-post_07.html

  இங்கே இன்னுங்கொஞ்சம்

  -மதி

 24. Anonymous said...

  Times இதழ் தேர்ந்த்தெடுத்தாலே அது சிறந்த படந்தான் என்று தோசையை திருப்பி போடாமல்,
  மணி அவரது தனித்தன்மையாக தழுவல் இல்லாமல் எடுத்த ஒரு கலைஞானா என்பதே கேள்வி,
  மட்டை அடிக்கமால் பதில் சொல்லுங்கள் கேபிள் சங்கர்.

 25. மிதக்கும்வெளி said...

  சுட்டிக்கு நன்றி மதி. ஆயுத எழுத்து பற்றி எஸ்.ராவைப் போலவே சாருநிவேதிதாவும் 'கவிதாசரண்' இதழில் ஒரு விமர்சனம் எழுதியிருந்தார்.

 26. கார்மேகராஜா said...

  இந்த பதிவில் பார்ப்பினியம் பார்த்தவுடன் நினைவுக்கு வந்தது இந்த பதிவுதான்.

  இதில் பதிவை விட பின்னூட்டங்களே முக்கியம்.

  http://www.tamiloviam.com/nesamudan/page.asp?ID=110&fldrID=1

 27. சயந்தன் said...

  பம்பாய் - ஓட்டல் ருவாண்டாவை மோசமாக உல்டா அடித்தது.

  இது மாறி வந்திருக்க வேண்டும்.

 28. Anonymous said...

  இவ்வளவு பேசுகிறீர்களே, உங்களால் ஒரு பக்கத்திற்கு ஒரு கதையை சுமாராகவேனும் எழுத முடியுமா.மணிரத்னம் காப்பி அடிக்கிறாரோ இல்லையோ. தமிழ் சினிமா வை இந்திய அளவில் கொண்டு சென்றது அவர்தான்.

  Krishna

 29. பிச்சைப்பாத்திரம் said...

  "உலக சினிமா" என்கிற தலைப்பில் செழியன், ஆனந்தவிகடனில் எழுதி வரும் தொடரில் ரித்விக் கட்டக் இயக்கிய "மேகதாரா" (1962 என்று ஞாபகம்) என்கிற படத்தைப் படித்த போது தூக்கிவாரிப் போட்டது.

  பாலச்சந்தர் இயக்கிய "அவள் ஒரு தொடர்கதை"யின் கதையும் (இது பின்னர் வந்தது) காட்சியமைப்புகளும் மேற்சொன்ன படத்தை பெருவாரியாக ஒத்திருந்ததது.

  உலகசினிமாவைப் பற்றிய அறிவோ, தகவல்கள் கிடைப்பதோ பத்திருபது ஆண்டுகளுக்கு முன்னாலே வேண்டுமானால் அரிதாக இருந்த காலகட்டத்தில் இவ்வாறான திருட்டு முயற்சிகள் வெளிவராமல் வேண்டுமானால் போயிருக்கலாம். இணையம் பல்கிப் பெருகியிருக்கிற இன்றைய தேதியில் எந்தவொரு சர்வதேச சினிமாவைப் பற்றின நுணுக்கமான தகவல்களைக் கூட நிமிடங்களில் பெற்றுவிடக்கூடிய நிலையிலும் நம் இயக்குநர்கள் தைரியமாக "கைவரிசையை" காண்பிப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அப்படியே கண்டுபிடிக்கப்பட்டாலும், சில பேருக்குத்தானே தெரியப்போகிறது என்கிற அலட்சியம்தான் இதற்கு காரணமாக இருக்கக்கூடும்.

  சில நண்பர்களின் பின்னூட்டங்கள் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கிறது. எக்காலத்திலும் கதையின் மையங்களும் அடிப்படைகளும் குறிப்பிட்ட மாதிரியாக வகைப்படுத்துவது மாதிரிதானிருக்கும் ஆனால் அப்படியான கதையின் மையம், இயக்குநரின் அனுபவமும் பார்வையும் இணையும் போதுதான் வித்தியாசமான வண்ணம் கிடைக்கிறது. அதை பெரும்பாலும் ஒத்திருக்கிறமாதிரி இன்னொரு திரைப்படம் வரும் போது அது "தந்திரமாக திருடப்பட்டது" என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகத்தான் வேண்டியிருக்கும். "நம் ஆட்கள்" என்பதால் இதை எவ்வளவு நியாயப்படுத்தினாலும் எடுபடாது.

 30. bala said...

  //கலைஞனை என்ன சொல்வார்கள்//

  வெளியே மிதக்கும் அய்யா,

  என்ன சொல்வார்கள் என்று தெரியாது. ஆனால் திருமா அவர்கள் கலைஞரை சமத்து(வ) பெரிய மாமா என்று சொல்லுவார்.

  பாலா

 31. senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

  பாஸ் பயங்கர தப்பு தப்பா எழுதி இருக்கீங்களே?

  பம்பாயைப் பார்த்து ஹோட்டல் ருவாண்டா காப்பி அடிச்சதா சொல்லறீங்க. டைம் டிராவல் பண்ணி 2005க்கு வந்து ஹோட்டல் ருவாண்டா பார்த்து பம்பாயை அது எடுக்கறதுக்கு முன்னாடி எடுத்துத்தாரோ?

  cliff hanger ஒரு விமானத்தை கொள்ளையடிக்கப் போய் அந்த விமானம் ஒரு இடத்தில விழுந்துடும் அதை mountain climber ஆன slivester stallone எப்படி எடுக்கப் போறாருன்னு கதை திருடா திருடால பிரசாந்த் mountain climbera?

  ராமாயணத்தையும் ரோஜாவையும் ஒப்பிட்டு பார்க்க முடிந்த உங்களுடைய கற்பனைக்கு ஒரு சபாஷ்.

  அஞ்சலியும், ETயுமா? ஐயா என்னைய்யா சொல்லறீங்க? ET வேற்றுகிரக உயிரினம் ஒன்றைப் பற்றிய படமய்யா.

 32. மிதக்கும்வெளி said...

  பாலா, நீங்க இல்லாமல்தான் போரடிச்சது, வந்துட்டீங்களா? நல்லா இருக்கீங்களா?

 33. மிதக்கும்வெளி said...

  சுரேஷ்கண்ணனின் கருத்துக்கள் நெருக்கமாக இருக்கின்றன

 34. மிதக்கும்வெளி said...

  சுரேஷ்கண்ணனின் கருத்துக்கள் நெருக்கமாக இருக்கின்றன

 35. Anonymous said...

  sir/madam

  hotel rwanda - 2004
  bombay - 1995

  roja - ramayanam ..nothing similar other than kadathal

  thrda thiruda -cliff hanger..someone has informed u wrongly!

  first check for the right details before writing!...u are a journalist...dont u know it!

 36. Anonymous said...

  One thing is certain.Suguna Diwakar will write any nonsense.
  He wont even get facts right but will try to judge Mani Ratnam
  based on wrong information.
  He wont even have the decency
  to apologise for writing based
  on wrong information.
  பாலச்சந்தர் இயக்கிய "அவள் ஒரு தொடர்கதை"யின் கதையும் (இது பின்னர் வந்தது) காட்சியமைப்புகளும் மேற்சொன்ன படத்தை பெருவாரியாக ஒத்திருந்ததது.
  Perhaps Suresh Kannan has not seen Aval Oru Thodarkathai.Just because the protoganist in both films was a
  working woman AOT would not become
  a copy of or inspired by Ghatak's
  work. AOT on its own has many positive features.Mani Ratnam and
  Balachandar can be criticised for
  their shortcomings and failures
  but cannot be dismissed so easily.

  Suguna Diwakar will be supported the brahmin haters in the blog world.So I wont be surprised if he
  comes up another blog post writing
  nonsense about another brahmin.

 37. Anonymous said...

  u are a journalist...dont u know it!

  Perhaps he is doing yellow journalism

 38. Anonymous said...

  Has anyone seen the movie "Dirty Rotten Scoundrels" ? The movie is taken from the Tamil movie with Nagesh, Cho, Gemini Ganesan, KR Vijaya ... தேன் மழை.

  Also, Have you seen CID Shankar ... in the first scene, a suicide bomber kills a politician with bomb strapped to her. Same thing happened with Rajiv Gandhi. ...hmm ..

 39. bala said...

  //u are a journalist...dont u know it!

  Perhaps he is doing yellow journalism //

  அனானி அய்யா,

  நேற்றைய தினம் வரை நீங்க சொன்னபடி மஞ்ச எழுத்து எழுதிதான் பிழைப்பை நடத்தி வந்தார். ஆனால் இவரும்,வாலறுந்த கருப்பையாவும் இனிமே yellow journalism செய்வதில்லைன்னு மனம் திருந்தி மனிதர்களாக வாழ ஆசைப்பட்டு, உழைக்கும் வர்க்கத்திலே இணைந்து விட்டார்கள்.இந்த செய்தி கூட கரப்பய்யா சொல்லி தான் தெரிஞ்சுது.
  வெளியே மிதக்கும் அய்யாவின் "பெண்கள் அர்ச்சகராக வேண்டாம்" பதிவை பாருங்க.கரப்பய்யா is breaking the news.
  இனியும் அவரையும்,கரப்பய்யாவையும் yellow journalists என்று ஏளனம் செய்ய வேண்டாம்.இவர்களும் மனிதர்களாக வாழ வகை செய்வேம்.

  பாலா

 40. Anonymous said...

  அஞ்சலி- ஈடி யிலிருந்து நிறைய காப்பி அடித்திருப்பார்.

  நாயகன் - ஒரு பத்து பதினைந்து நிமிட sequence அப்படியே
  காட்பாதரில் சுட்டது. காட்பாதரின் மகனை எதிராளிகள் கொன்றுவிடுவார்கள்.
  பேரனின் பேப்டிசம் நடக்கும்போது இந்த கும்பல் சென்று பழிவாங்கும்.
  தமிழில் பேப்டிசத்துக்கு பதிலாக திவசம். அவ்வளவுதான்.
  ஆங்கில படத்தில் கதவில் எட்டி பார்ப்பவரின் கண்ணில்
  சுடுவார்கள். தமிழிலும் அதே. கொஞ்சமாவது மாற்ற வேண்டுமென்று
  கூட கவலைப்படாமல் சுடுபவர்.

  தமிழில் வேறு சுட்ட படங்கள் உள்ளன. ஆனால் ஷாட் பை
  ஷாட் சுடுவது ஒவர்.

 41. Anonymous said...

  ManiRatnam is a good director and some of his movies are really good. Many of them have a very tight script and compelling to watch. Those are his strong points and his weak point is his tendency to copy other stories. May be Mani is insecure about the success of his movies that he wants to bet only on proven stories.

  To his credit he never claimed he is a great director and nor his stories are original. Give him some slack.

  Almost everyone in Tamil Film Industry relies on Hollywood movies for stories (exception in recent times-Bala/ three consecutive originals). It will stop only when Hollywood companies sue them. That is not far away and then we are going to see lot of original tamil stories.

 42. Anonymous said...

  காட்ஃபாதர் படத்தில் மர்லன் பிராண்டோ காட்ஃபாதராக இருப்பார். அவர் சுடப்பட்டு பின் அவருடைய மகனான அல்சீனோ ஒரு போலீஸ்காரரை கொன்றுவிட்டு தந்தையின் இடத்தை பிடித்து காட்ஃபாதர் ஆகிவிடுவார். நாயகனிலும் கமல் ஒரு போலீஸ்காரரை கொன்றுவிட்டு தான் தாதாவாக உருவெடுப்பார்

  காட்ஃபாதரில் மர்லண் பிராண்டோவின் முதல் மகனை எதிர்கள் சுட்டுக் கொன்றுவிடுவார்கள். அதைப் பார்த்து பிராண்டோ அழுவதாக காட்சி இருக்கும். நாயகனிலும் கமலின் மகனாக வரும் நிழல்கள் இரவியை எதிரிகள் கொன்றுவிடுவார்கள். அதைப் பார்த்து தந்தை கமல் அழும் காட்சி வரும்

  இதெல்லாம் திருட்டு இல்லாமல் வேறு என்னவாம். மணிரதனம் ஒரு அக்மார்க் திருட்டுப்பயலே

 43. Anonymous said...

  மணிரத்னம் சுட்டுப் படம் எடுப்பவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இது பற்றிய என் பதிவொன்றிற்கு http://intellectualaltruists.wordpress.com/2007/03/28/sir-mani-sir/
  பதில் சொல்லியே என் தாவு தீர்ந்து போனது.