பெண்கள் அர்ச்சகராக வேண்டாம்


"இந்து மதத்தில் ஏன் பெண்கள் அர்ச்சகராக நியமிக்கப்படவில்லை என்பது குறித்து விளக்கம்:பெண்களுக்கு இயற்கையான மாதவிடாய் நிகழ்வு நாட்களில் உடல் உபாதை கூடியிருக்கும் பெண்களில் பலருக்கு தாளமுடியாத வலி என்று சரியாக உட்காரக்கூட முடியாமல் வலியால் துடிப்பது என்பது சாதாரணமான பொதுஅறிவுடைய வெகுதியானவர்கள் அறிந்த உண்மை.கோவில்களில் கருவறையில் இறைவனைப் பூஜிக்கின்ற செயல் என்பது ஆறுகால பூஜை என்கிற இடைவிடாது நின்ற நிலையிலேயே இறைவன் உருவச்சிலைகளுக்கு அபிஷேக, அலங்காரம் என்கிற குனிந்து நிமிர்ந்து செய்யும் செயல்களைச் செய்யவேண்டிய கட்டாயம் உடையது.மேற்படியாக கடுமையான வலியில் இந்தக் காலகட்டத்தில் அவதியுறும் பெண்கள் குழந்தைகள், கணவன், குடும்பத்தார் மீதே எரிந்து விழுந்து, பொறுமையிழந்தவர்களாய் கிட்டத்தட்ட "ஸ்பிலிட் பெர்சனாலிட்டி" நபர்கள் மாதிரி நடந்து கொள்வார்கள்.மேலும் பண்டைய காலத்தில் இந்துக் கோவிலில் இறைவனுக்குச் சேவை செய்தபடியே வேதம் சொல்லித் தந்த ஆசிரியர்களாகவும் இருந்தவர்கள், அந்தந்த ஊர் வழக்குகளில் நீதியும் சொல்லியிருந்து இருக்கின்றார்கள்.நீதி சொல்லும் நபர் நிதானத்துடன் நியாய அநியாயம் உணர்ந்து சொல்லவேண்டியது கடமை ஆதலால், உடல் உபாதை, வலி காரணமாக மாதத்தில் சில நாள் நிதானம் இழக்கும் பெண்கள் ஆலய அர்ச்சகர்களாக இந்தப் பணிக்கு உகந்தவர்களாக கருதப்படாததில் சமூக அக்கறையே பிரதானம்."


ஹரிஹரனின் இந்த சமீபத்திய பதிவைப் படித்தபோது பிரபுதேவா நடித்த ஒரு படத்தின் நகைச்சுவைக்காட்சிதான் நினைவுக்கு வந்தது.


விவேக்கும் வடிவேலுவும் ஒரே பெண்ணைக் காதலிக்க முயற்சி செய்வார்கள். விவேக் கையில்லாதவரைப் போல நடித்துக்கொண்டிருப்பார். ஒருமுறை விவேக்கு அண்டர்வேர் மாட்டமுடியாது. அவரது காதலி மாட்டிவிட்டு விட்டு கைகளைத் தட்டிக்கொள்வார். விவேக் சொல்வார், "ஒரு லோடு மண்ணடிச்சமாதிரி கையைத் தட்டுறா பாரு"


ஏதோ மணியாட்டுவதும், தீபாராதனையும் உலகமகா உழைப்புப்போலவும் அதற்கு மாதவிடாய்தான் தடையாக இருப்பதுபோலவும் ஹரி பேசும்போது சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

ஹரி, நீங்கள் மாதவிடாய்க்காலங்களிலும் கொளுத்தும் வெயிலில் பட்டப்பகலில் வயல்வெளியில் 'பால்சுரந்த தனமிரண்டைப் பயிர்வருடத் தலைகுனிந்தே மகவு உறிஞ்சுதுன்னு மண்ணுறிஞ்சக் களையெடுக்கும்' உழைக்கும் பெண்களைக் கண்டதிலலையா? கல் சுமக்கும், ரோட்டோரங்களில் மதியவெயிலில் சாப்பாட்டுக்கடை போடும் சகோதரிகளைப் பார்த்ததிலலையா? அல்லது அவர்களுக்கெல்லாம் மாதவிடாய் வராது என்ற எண்ணமா?

ஒருவேளை நீங்கள் பார்ப்பனச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் உழைக்கும் பெண்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கலாம். பார்ப்பனச் சகோதரிகள் மாதவிடாய்க் காலங்களில் குனிந்து வளைந்து கோலம் போடுவதிலலையா? வீடு பெருக்குவதில்லையா? துணி துவைப்பதில்லையா? பாத்திரம் கழுவுவதில்லையா? ஆம்பளைகள் வக்கணையாய் வழித்துத் தின்ன வடித்துக்கொட்டுவதில்லையா?(என்ன, புணர்ச்சி இயந்திரமாகச் செயல்படுவதிலிருந்து மூன்றுநாட்கள் ஓய்வு கிடைக்கலாம்). அல்லது நீங்கள் சொல்வதைப் போல அவர்கள் 'ஸ்பிளிட் பெர்சனாலிட்டி' வந்து பார்ப்பன ஆண்களைக் கொலைசெய்துவிட்டார்களா?

சாதியையும் தாண்டி நீங்கள் ஆண் என்பதை உணர்த்திவிட்டீர்கள்.

முதலில் 'உடலைக்கொண்டாடிய பெரியார்' என்ற எனது பதிவில்தான் பின்னூட்டத்தில் இந்த அரிய 'அறிவியல் கருத்துக்களை வெளியிட்டீர்கள்'. நான் பெண்கள் அர்ச்சகர்களாவதைப் பற்றிக்கூட பேசவில்லை, பெண்கள் அந்த மா.வி.காலங்களில் கோயிலுக்குச் செல்லாதது ஏன் என்றே கேட்டிருந்தேன். ஒருவேளை சாமி சிலை முன்னால் கையெடுத்துக் கும்பிடுவதும் மாபெரும் உழைப்பு என்று கருதுகிறீர்களா?

அதென்ன நிதானம் தவறிப் பெண்கள் நீதி சொல்வார்கள்? நிதானத்தோடு ஆண்கள் சொன்ன நீதிகள் எல்லாம் பெண்களுக்கு அநீதிகளாகத்தானே இருந்தன.

எங்கள் ஊர்ப்பக்கம் மாதவிடாய்க்காலங்களில் பெண்கள் ஊறுகாய்ப்பாட்டிலைக்கூட தொடமாட்டார்கள். ஊறுகாய் கெட்டுவிடும் என்பது நம்பிக்கை. இது தீட்டு, அசிங்கம் என்னும் தூய்மைவாத உளவியல் பெண்களிடம் ஆழக் கட்டப்பட்டிருக்கிறது.

நிச்சயமாக ஆண்களால் மாதவிடாய், பிரசவம் என்னும் உடல் உபாதைகளை உணரமுடியாது. அதை மிகுந்த பொறுப்போடும் புரிந்துணர்வோடும், மானுட நேசத்தோடும்தான் அணுகவேண்டும். 'நீ பலவீனமானவள், எனவே கீழிறக்கப்பட வேண்டியவள்' என்னும் அதிகார மனோபாவத்தோடு அல்ல.

இவ்வளவு சொல்லியும் நீங்களோ உங்கள் அரங்கநாதரோ, சிதம்பரம் நடராஜரோ முடியாது, கிடியாது என்றால் ரொம்பவே சங்கடப்பட்டால், வேண்டாம் பெண்கள் அர்ச்சகராகவே வேண்டாம்.

மதியவேளையிலும்
பொறுப்பற்றுத் தூங்கும்
அரங்கனும் ஆடியபாதத்தை
இறக்கமுடியாது விழிக்கும்
நடராஜனும் வெளியேறட்டும்.
புழுக்கம் நிறைந்த கருவறை வெளிகள்
எம் பெண்கள்
நாப்கின் உலர்த்தப் பயன்படட்டும்


கேள்வி 1 : பகுத்தறிவின் துணைகொண்டு உண்மையை விடுதலை செய்வதாகச் சொல்லிக்கொள்ளும் ஹரிஹரன் குறைந்தபட்ச அறிவையும் பலசந்தர்ப்பங்களில் தன்னிலிருந்து விடுதலை செய்துவிடுகிறார்.

சார்வாகத்தை இந்துமதம் உட்செரித்துக்கொண்டது பரிணாமமாம். அப்படியானால் வேத நெறிகளுக்குப் பின் தோன்றிய ஆசிர்வகம், சாங்கியம், லோகாயுதம், பவுத்தம், சமணத்தை என்ன சொல்வீர்கள்? அது பரிணாம வளர்ச்சி என்றால் தஞ்சாவூரில் 'கோலம் போடும் பெருமைமிகு' இந்து மரபை உதறித்தள்ளிவிட்டு இஸ்லாம் கொடிகட்டிப் பறந்தால் அதுமட்டும் பரிணாமம் ஆகாதோ?

கேள்வி 2 : கால்கள்தான் இறைவனின் படைப்பில் உயர்ந்ததாம், பெருமாளின் பாதம்தான் சேவிக்கபப்டுகிறதாம். எனவே சூத்திரர்கள் காலில் பிறந்தது இழிவாகாதாம். நல்லது. அப்படியானால் அத்தகைய சேவிக்கத்தக்க உயர்ந்த பாதங்களில் அணிந்திருக்கும் செருப்பு தைக்க பார்ப்பனர்கள் தயாரா? (மேலும் பகவான ராமபிரானின் செருப்பு ஆண்ட புண்னிய பூமியாயிற்றே இது?)கால் கழுவபப்டும் கழிப்பறையைக் கழுவ பார்ப்பனர்கள் தயாரா?இதேபோல சூத்திரர்களை தஸ்யூக்கள், வேசிமகக்ள், அடிமைகள் என்று வேதங்கள் ஏன் குறிப்பிடுகின்றன என்ற அறிவார்ந்த உண்மைகளையும் ஹரி விரைவில் வெளியிடுவார் என்று நம்புகிறேன்.

36 உரையாட வந்தவர்கள்:

 1. கார்மேகராஜா said...

  //மதியவேளையிலும்
  பொறுப்பற்றுத் தூங்கும்
  அரங்கனும் ஆடியபாதத்தை
  இறக்கமுடியாது விழிக்கும்
  நடராஜனும் வெளியேறட்டும்.
  புழுக்கம் நிறைந்த கருவறை வெளிகள்
  எம் பெண்கள்
  நாப்கின் உலர்த்தப் பயன்படட்டும்//

  மிக அருமை!

 2. Unknown said...

  கடவுளின் சன்னிதானத்திலேயே (சனாதனம்..?) பெண்களால் குனிந்து நிமிந்து மணியாட்ட முடியாது என்றால் எப்படி அய்யா நாள் பூரா குனிந்து களையெடுக்கவோ,சித்தாள் வேலை செய்யவோ முடியும். என்ன தமசா? சும்மா பொய் சொல்றீங்க.


  ***

  ஹரிஹரன் நீங்கள் சொல்வதுதான் சிறந்தது.

  அப்படியே பெண் போலீஸ்,பெண் நீதிபதி,பெண் ஆசிரியர்,பெண் புரோகிராமர்...எல்லாருக்கும் ஓய்வு வாங்க்கிக் கொடுங்கள். இவர்களின் ஸ்பிலிட் பெர்சனாலிட்டியால் சட்டம்/ஒழுங்கு/நீதி/கல்வி/ப்ரொகிராம் கோடு எல்லாம் பாதிக்கப்படுகிறது.

  கீதையை வெளிநாட்டில் பாடமாக படிக்கிறார்கள் என்று யாரோ சொன்னார்கள். அப்படியே இந்த பிராமணீய மரபுகளையும் படிக்கட்டும்.அந்த ஊர் பெண்களுக்கும் லீவு கிடைக்கும்.அப்படியே வேலைக்குப் போகும் பெண்கள் பற்றிய காஞ்சியார் உரையையும் உலகம் பூரா பரப்புங்கள்.

  மலக்குடலுடன் இறைவனைத் தரிசிக்கலாமா?
  http://kalvetu.blogspot.com/2006/07/blog-post.html

 3. rajavanaj said...

  சூப்பர் சுகுனாதிவாகர்,

  எதற்குமே பதில் வராது அங்கிருந்து.. வேணும்னா பாருங்க அடுத்து 'வேத நெறியில்' இருந்து அடுத்த துண்டு 'பீ'க்கு பூச்சுற்றி இன்னொரு பதிவு வேண்ணா வரும்..

  நடுவுல அவுங்க இனைய தாம்பிராஸ் செயலாளர் 'பீலா' அய்யா வந்து உளரிக் கொட்டுவார்.. 'ஆறிய' கஞ்சாவின் தத்துவ அடிப்படையில்

 4. மிதக்கும்வெளி said...

  நன்றி கார்மேகராஜா. நீங்கல் சுட்டிக்காட்டிய சுட்டியின்வழி கமல் பற்றிய பின்னூட்டங்களைப் படித்தேன். கேவலமாக இருந்தது. நடிப்பு என்ற வகையில் எனக்கு கமலை விட ரஜினியைத்தான் பிடிக்கும். ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் கமல் ஒரு ஜெம். திருமணம், கலாச்சாரம் குறித்த விஷயங்களில் சத்தமில்லாமல் கலகம் செய்பவர். மேலும் இதுவரை அவரிடமிருந்து பிரிந்த பெண்களைப் பற்றி தவறான அப்பிராயங்களைக் கூறாதவர்.

 5. மிதக்கும்வெளி said...

  நன்றி ராஜ்வனஜ். கல்வெட்டு, உங்களின் கமெண்டைப் படித்ததும் என்னையறியாமல் சிரித்துவிட்டேன்.

 6. bala said...

  //'பீலா' அய்யா வந்து உளரிக் கொட்டுவார்.. 'ஆறிய' கஞ்சாவின் தத்துவ அடிப்படையில் //

  ராஜ் வனஜ் அய்யா,

  யாருங்க அது "பீலா"? நம்ம கட்சியா? எதிர் கட்சியா?சொல்லுங்கய்யா. நானே அவர் வீட்டுக்கு போய் புதிய கலாசாரம் லேட்டஸ்ட் இதழ் கொடுத்துட்டு வாரேன்.

  பாலா

 7. பொன்ஸ்~~Poorna said...

  சுகுணா, என்ன இன்னிக்கு ஒரேடியா அடிச்சுக் கிளப்புறீங்க?

  //அப்படியே பெண் போலீஸ்,பெண் நீதிபதி,பெண் ஆசிரியர்,பெண் புரோகிராமர்...எல்லாருக்கும் ஓய்வு வாங்கிக் கொடுங்கள். இவர்களின் ஸ்பிலிட் பெர்சனாலிட்டியால் சட்டம்/ஒழுங்கு/நீதி/கல்வி/ப்ரொகிராம் கோடு எல்லாம் பாதிக்கப்படுகிறது.//
  கல்வெட்டு.. என்னாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை :)

 8. மிதக்கும்வெளி said...

  ஆகா பொன்ஸ், பொழுது போகாமல் எழுதுகிறேன் என்றுதானே சொல்லப்போகிறீர்கள்? நீங்கள்தான் 'நான் கவிதை, கட்டுரை எழுதுவதாகச் சொல்லிக்கொண்டார்' என்று எழுதினீர்கள்?

 9. bala said...

  //எம் பெண்கள்
  நாப்கின் உலர்த்தப் பயன்படட்டும்//

  வெளியே மிதக்கும் அய்யா,

  நல்லதுங்கய்யா..எம் ஆண்கள் ஜட்டியெல்லாம் வெளியேவே உலர்த்திடலாம். எப்பவும் லேடீஸ் ஃபர்ஸ்ட் என்ற உங்கள் கொள்கையில் எனக்கும் உடன்பாடு தான்.

  ஆனா ஒண்ணு. ஜட்டீன்னு சொன்ன உடனே, "நீங்கள், கொளுத்தும் வெயிலில் பட்டப்பகலில் வயல்வெளியில் எம் மக்கள் கோமணம் அவிழ்வது கூட தெரியாமல் கலப்பயால் உழுவதை பார்த்ததில்லையா "ன்னு கேக்கக் கூடாது.

  பாலா

 10. மிதக்கும்வெளி said...

  /ஆனா ஒண்ணு. ஜட்டீன்னு சொன்ன உடனே, "நீங்கள், கொளுத்தும் வெயிலில் பட்டப்பகலில் வயல்வெளியில் எம் மக்கள் கோமணம் அவிழ்வது கூட தெரியாமல் கலப்பயால் உழுவதை பார்த்ததில்லையா "ன்னு கேக்கக் கூடாது.

  பாலா /


  அதுசரி, பார்ப்பனத் தினவெடுத்துத் திமிர் கொழுத்த உங்கள் உடல், வயல் வெளிகளில் கருகிச்சாகும் எம் மக்களின் உழைப்பு பற்றி அறியாது அல்லவா? எல்லாம் இருக்கட்டும் இருள்நீக்கி சுப்பிரமணி தன் தண்டத்தில் சுமந்து திரியும் காவித்துணி அவன் சம்போகம் முடித்துக் கழற்றிப் போட்ட கோவணத்துணி என்பது உங்களுக்குத் தெரியும்தானே?

 11. Kasi Arumugam said...

  மிதக்கும் வெளி,
  சொன்ன கருத்துக்களுக்கும், அதற்கும் மேலாக கண்ணியத்துடன் நறுக்குத் தெறித்தாற்போல் சொன்ன விதத்துக்கும் பாராட்டுக்கள்.

  கல்வெட்டின் மறுமொழியும் சிறப்பு!

 12. bala said...

  //கழற்றிப் போட்ட கோவணத்துணி என்பது உங்களுக்குத் தெரியும்தானே//

  வெளியே மிதக்கும் அய்யா,

  சத்தியமா தெரியாது..ஆனா ஒண்ணு மட்டும் தெரியும். கோமணம்,நாப்கின் விஷயத்துலே நீங்க ஆராய்ச்சி பண்ணிட்டிருக்கீங்கன்னு தெரியும். அதனால் நீங்க சொன்னா சரியாகத் தான் இருக்கும்.

  பாலா

 13. Anonymous said...

  //ஆம்பளைகள் வக்கணையாய் வழித்துத் தின்ன வடித்துக்கொட்டுவதில்லையா?//

  elite people இதுக்கு பதில் சொல்லுங்க.

  கவிஞரே கடவுள்களை இந்த வாங்கு வாங்குறீங்க.சாமி கண்ண நோண்டிரும்.பாத்து இருங்க.

 14. லக்கிலுக் said...

  அடடா.... என்ன அருமையான பதிவு....

  பீலா மாதிரி பார்ட்டிகள் தின்னு தினவெடுத்தவர்கள்னு நீங்க சொல்லி தான் நாங்க தெரிஞ்சுக்கணுமா?

  :-)))))

  சூப்பர்!!!!!!!!

 15. டண்டணக்கா said...

  /*
  சொன்ன கருத்துக்களுக்கும், அதற்கும் மேலாக கண்ணியத்துடன் நறுக்குத் தெறித்தாற்போல் சொன்ன விதத்துக்கும் பாராட்டுக்கள்.
  */
  வழிமொழிகிறேன். இவையனைத்தையும் தவிர சுடும் உண்மையை கொண்ட பதிவு.

 16. அமலசிங் said...

  சூப்பரோ சூப்பர்.

 17. Anonymous said...

  நல்ல கேள்விகளுடன் பதிவு.

  சம்பந்தமில்லாத ஒன்று.
  உங்கள் பதிவுகள் "ஈழம்" என்ற குறிசொற்களுடன் வகைப்படுத்தப்படுகின்றனவே? இதுமட்டுமன்றி வேறு பதிவுகளும். தற்செயலாகவா?

 18. அருண்மொழி said...

  //இருள்நீக்கி சுப்பிரமணி தன் தண்டத்தில் சுமந்து திரியும் காவித்துணி அவன் சம்போகம் முடித்துக் கழற்றிப் போட்ட கோவணத்துணி என்பது உங்களுக்குத் தெரியும்தானே?//

  சுப்பிரமணி கோவணத்தை சாஸ்திரத்திற்காக கட்டியிருக்கிறான் என்று நினைத்தேன். ஆனால் அடிக்கடி அவிழ்த்து காட்சி தர வசதியாக இருந்தது என்பது அனுராதா ரமணன் பேட்டியில்தான் தெரிந்தது.

 19. கருப்பு said...

  அருமையான கட்டுரை சுகுனா திவாகர். உழைக்கும் வர்க்கமான நமக்கு ஆண்டவன் மேல் இருக்கும் பக்திகூட உறிஞ்சிப் பிழைக்கும் பார்ப்பனர்களுக்கு இல்லை. நாம் பெண்களை சம உரிமை கொடுத்து நடத்தினாலும் பார்ப்பனர்கள் கொடுக்க மறுக்கிறார்கள்.

  மொட்டைப்பாப்பாத்திகளின் கதை தெரியும்தானே?

  என் பதிவில் மிதமிஞ்சிய காரத்துடன் எழுதி இருக்கிறேன்.

 20. ஜடாயு said...

  சுகுணா அவர்களே,

  ஹரிஹரன் என்ற ஒரு பதிவர் எழுதியது இந்து தர்மத்தின் நிலைப்பாடு அல்ல (ஆனால் அப்படித்தான் என்று நீங்கள் சாதித்து முரண்டு பிடிக்கத் துடிப்பது புரிகிறது!). இத்தனைக்கும் அவர் எந்த சமய நூல்களையும் கூட ஆதாரமாகக் காட்டவில்லை. புழக்கடை நம்பிக்கைகளை அறிவியல் என்பதாகத் தனக்குத் தோன்றிய விதத்தில் எழுதியிருக்கிறார்.

  ஆனால், இதைச் சாக்கிட்டு, தமிழகத்தின் சமயப் பண்பாட்டின் உருவகங்களான தில்லை ஆடல் அரசையும், அரங்கனையும் இழித்துரைக்கும் விதத்தில் பாடல் எழுதியிருப்பது நீங்கள் தூக்கிப் பிடிக்க விரும்புவது பெண்ணுரிமையை அல்ல, இந்து மத வெறுப்பைத் தான் என்பதை மிகத் தெளிவாக உனர்த்தி விட்டது!

  திரு. நீலகண்டனின் இந்தப் பதிவைப் பாருங்கள்:
  http://arvindneela.blogspot.com/2006/12/blog-post_28.html

  பெண்கள் பூசை செய்யும் பல கோயில்கள் பற்றிய விவரங்களை அதில் அளித்துள்ளார். தயவு செய்து அதைப் படியுங்கள்.

  அதில் பின்னூட்டத்தில் அவர் கேட்டிருக்கும் ஒரு கேள்வியை அப்படியே தருகிறேன். இந்தக் கேள்விக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா சுகுணா?

  // இந்து தருமம் பலவித சுரண்டல்களுக்கு ஆளாகி தேங்கிப்போன சமுதாயம் என கூறியுள்ளேன். ஆனால் இந்த வளரும் நாட்டின் தருமத்தில் இந்த அளவு பெண் இறையியல் விடுதலை அடைந்துள்ளாள். ஆனால் சுரண்டல்களின் உபரியில் வளர்ந்து நிற்கும் கத்தோலிக்க கிறிஸ்தவத்தில் ஒரு சர்ச்சிலாவது பெண் திருப்பலி நடத்தமுடியுமா? இன்றைக்கு தமிழ்நாட்டில் கத்தோலிக்க சர்ச் ஒரு முக்கிய சக்தியாகவே (அரசியல் ரீதியாகவும் சமுதாய ரீதியாகவும்) விளங்குகிறது. ஆனால் இந்து சமுதாயத்தில்நடந்து வரும் இத்தனை முன்னோக்கிய நிகழ்வுகளையும் புறந்தள்ளி இந்து தருமத்தை தாக்குவதற்கு ஒரு கருவியாக மட்டுமே பெண்விடுதலை சார்ந்த வெற்றுக்கூச்சலை பின்வரும் வரிகளில்
  "மதியவேளையிலும்
  பொறுப்பற்றுத் தூங்கும்
  அரங்கனும் ஆடியபாதத்தை
  இறக்கமுடியாது விழிக்கும்
  நடராஜனும் வெளியேறட்டும்.
  புழுக்கம் நிறைந்த கருவறை வெளிகள்
  எம் பெண்கள்
  நாப்கின் உலர்த்தப் பயன்படட்டும்"
  ±ýÚ ±Øи¢È Í̽¡ ¾¢Å¡¸ÕìÌ (http://sugunadiwakar.blogspot.com/2006/12/blog-post_116730497264410580.html)

  "ஏசு சிலுவையில் அறையப்பட்ட போது ஓடி ஒளித்தனர்
  ஆண் சீடர்கள்
  அங்கு நின்றதோ பெண்கள்
  எனினும்
  பொறுக்கி (no pun intended) எடுத்த
  அப்போஸ்தலர்களோ
  அனைவரும் ஆண்கள்!
  இன்றும் திருப்பலி நடத்துவதற்கு
  ஆண்களுக்கு மட்டும்தான் ஆகும் என்றால்
  பெண்களுக்கு திருப்பலி வேண்டாம்.
  திருப்பலி பீடத்தில்
  எங்கள் பெண்கள் உலர்த்தட்டும்
  அவர்கள் நாப்கின்களை"

  என எழுத முதுகெலும்பு இருக்கும் என நினைக்கிறீர்களா? //

 21. bala said...

  வெளியே மிதக்கும் அய்யா,

  யோசித்துப் பார்க்கையில்,நீங்கள் சொல்லியபடி, 40 ஆண்டுகள், தமிழர் பெரிய மாமா காட்டிய வழியில் செய்யப்படும் திராவிட ஆட்சி, எம் பெண்களை,மாதவிடாய்க்காலங்களிலும் கொளுத்தும் வெயிலில் பட்டப்பகலில் வயல்வெளியில் 'பால்சுரந்த தனமிரண்டைப் பயிர்வருடத் தலைகுனிந்தே களையெடுக்கும் நிலையில் தான் வைத்திருக்கிறது.எம் ஆண்களையும் கோவணம் அவிழ்ந்தது தெரியாமல் வெய்யிலில், வயலில் கலப்பையால் உழும் நிலையில் தான் வைத்திருக்கிறது.கோவணத்தை கட்டவிழ்த்ததே தமிழர் பெரிய மாமா தான் என்ற உண்மையைக் கூட உணர முடியாத நிலையில் மறு காலனி ஆதிக்க மயக்கத்தில் உழைக்கின்றனர் எம் ஆண்கள்,எம் பெண்கள்.
  இந்நிலையில் வஞ்சக குள்ளநரி திராவிடம் செய்வது என்ன? கலர் டிவி கொடுப்பாங்களாம்.முதலில் எம் பெண்களுக்கு பிரா கொடுக்கட்டும்;எம் ஆண்களுக்கு ஜட்டி கொடுக்கட்டும்.இதைச் செய்யாமல், கலர் டிவி என்று பம்மாத்து பண்ணுவது உண்டு கொழுத்த திராவிடத் திமிர் அல்லாமல் வேறு என்ன?
  மேலும், கோவில்களுக்கு முன்னால் 128 சிலைகள் வைக்கப்போகிறார்களாம்.கேட்டால் பகுத்தறிவு என்று பொது புத்தியுடன் பேசுகிறார்கள்.போகட்டும், எம் மக்கள் கோமணம் உலர்த்தவாது அந்த சிலைகள் பயன் படட்டும்.பிராவே இல்லாதவர்கள் நாப்கினுக்கு எஙகே போவார்கள்.ஆகவே, எம் பெண்கள் தூரத்துணியை உலர்த்தும் இடமாக இந்த சிலைகள் இருக்கட்டும்.கண்ணிர் சிந்தியபடி எம் மக்கள் இந்நிலையில் கையை ஏந்தினால் கொழுப்பு பிடுத்த திராவிடம், எம் மக்கள் கையில் கொடுப்பது என்ன ? "மலம்".
  ஒரே ஒருநாள் கூட கழிப்பறையை கழுவி யிருக்குமா, இந்த புழுத்துப்போன திராவிடம்?கழிப்பறைகள் இல்லாத நிலையில் வாடு(ழு)ம் எம் மக்கள் இந்த சிலைகளின் மீது சிறுநீர் கழித்து தங்கள் சினத்தை தணித்துக் கொள்ளட்டும்.

  வெளியே மிதக்கும் அய்யா,

  ஒரு சிறு விண்ணப்பம். பொது(வா) புத்தி இல்லாமல் எழுதும் நீங்கள்,கொழுப்பெடுத்து கொக்கரிக்கும் திராவிடத்தை "நச்" என்று குட்டும் முறையில்ம பின் நவீன முறையில் ஒரு பதிவு போட்டுடங்கய்யா.

  பாலா

 22. bala said...

  //சுகுனா திவாகர். உழைக்கும் வர்க்கமான நமக்கு ஆண்டவன்//

  கருப்பு அய்யா,

  நீங்களும்,மிதப்பவரும் எப்போது எங்களை மாதிரி உழைக்கும் வர்க்கமா மாறினீங்க?
  நேத்து வரைக்கும், அதுமாதிரி எதுவும் தெரியலையே.

  பாலா

 23. மிதக்கும்வெளி said...

  அனானி, தமிழ்மணத்தைத் திறந்தவுடனே குறிச்சொற்களில் 'ஈழம்' என்பதுதான் கொட்டை எழுத்தில் இருக்கிறது. எப்படியாவது அதைக் 'கிளிக்'க எல்லோருக்கும் தோன்றும். அப்படியே நம்ம பதிவையும் பார்த்துடுவாங்க என்ற ஒரு அல்ப ஆசைதான். மற்றபடி ஈழத்துக்கும் எனக்கும் சத்தியமா எந்த சம்பந்தமும் இல்லீங்க>

 24. மிதக்கும்வெளி said...

  அன்பின் இனிய ஜடாயு

  பெண்கள் வழிபாடு நடத்துவதற்கு நீலகண்டனைப் போல எங்கேயோ உள்ள வடநாட்டுக்கோயில்களுக்குப் போகவேண்டாம். சென்னைக்குப் பகக்த்திலுள்ள மேல்மருவத்தூருக்குப் போங்கள். அதேபோல பார்ப்பனரல்லாத அர்ச்சகர்கள் இருக்கும் வழிபாட்டுமுறைகளும் நம்நாட்டில் உள்ளன. ஆனால் என் கேள்வி இவையெல்லாம் எப்போது 'இந்துமதம்' ஆனது என்பதுதான். நாட்டார் சமயங்களையும் உள்ளிழுத்துக்கொண்டு இந்துமதத்தில் அது இல்லையா, இது இல்லையா என்று கேட்பது என்ன நியாயம்? நான் அரங்கன், நடராஜனின் கருவறையில்தான் நாப்கின் உலர்த்தச்சொன்னேனே தவிர மதுரைவீரன் கோயிலில் அல்ல. தோழர் பெரியார் போட்டுடைத்ததும் ராமன், பிள்ளையார் சிலைகளையே தவிர கருப்பணசாமி சிலைகளை அல்ல. எனவே முதலில் 'இந்துமதம்' என்பதற்கான வரையறையை வரையறுத்துவிட்டு வாருங்கள். காத்திருக்கிறேன்.

  மேலும் நீங்கள் யேசுவைப் பற்றி எழுதிய 'கவிதை'யை விடவும் ஹெஜ்.சி.ரசூல் இஸ்லாத் குறித்து எழுதியிருக்கிறார்.

  "ஏன் வாப்பா / நபிகளில்/ ஒரு நபி கூட / பெண் நபி இல்லை?/" என்பதாக. அதை தஸ்லிமாவும் ரசூலும் எழுதட்டும். ரஸ்ஸல் போன்றவர்கள் கிறித்துவத்தைக் கேள்விகேட்கட்டும். என்னுடைய வேலை அது அல்ல.
  நீங்கள் சொல்வதைப் போல எல்லா மதங்களிலும் பென்ணடிமைத்தனம் இருக்கிறதுதான். ஆனால் எந்த மதமும் மாதவிடாயைக் காரணம் காட்டி விலக்குவதில்லையே?
  உலகில் உள்ள எல்லா நாத்திகங்களும் மதங்களையும் திருச்சபைகளையும் கேள்விகேட்பவை. ஆனால் இங்கு புத்தர் முதல் பெரியார் வரை கூடுதலாக சாதியாதிக்கத்தை எதிர்த்துக் கேள்விகேட்க வேண்டியிருக்கிறது. எனவே நான் தெளிவாகவே சொல்கிறேன்.
  எனக்கு மற்ற மதங்களை விமர்சிப்பதை விடவும் இந்துமதத்தை ஒழிப்பதுதான் முக்கியம். நான் ஒரு இந்துமத எதிர்ப்பாளன் தான். சாதியும் இந்துமதமும் ஒழியுமென்றால் கடவுளைக் கூட ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறவன் தான்.

 25. மிதக்கும்வெளி said...

  பாலா உங்களுக்குள்ள ஏகப்பட்ட 'பிரா'ப்ளம இருக்கிறது போல. நீங்கள் உளறியதைப் பார்த்ததும் பயந்துவிட்டேன். ஹரிஹரன் சொன்ன 'ஸ்பிளிட் ப்ர்சனாலிட்டி' உங்களுக்கு வந்துவிட்டதோ என்று. எந்த ஊரில் இருக்கிறீர்கள். வெயில் அதிகமோ?

 26. அசுரன் said...

  //மதியவேளையிலும்
  பொறுப்பற்றுத் தூங்கும்
  அரங்கனும் ஆடியபாதத்தை
  இறக்கமுடியாது விழிக்கும்
  நடராஜனும் வெளியேறட்டும்.
  புழுக்கம் நிறைந்த கருவறை வெளிகள்
  எம் பெண்கள்
  நாப்கின் உலர்த்தப் பயன்படட்டும்
  //

  வெகு அருமையான கவிதை.....

  இந்த மண்டூகங்கள் இந்தியாவின் அனைத்து மரபுகளையும் பிறரை ஏமாற்ருவதற்க்காக தங்களுடையது என்று திரித்துக் கூறும் அதே வேளையில் பார்ப்பினிய நலன் காக்கும் அம்சங்களில் மட்டும் ஒரிசினல் இந்துத்துவ மரபுகளான மக்கள் விரோத அம்சங்களை முன்னிறுத்துவார்கள்...

  வெகு அருமையான பதிவு... நல்ல கேள்விகள்... நீலகண்ட சா'ஸ்திரி'களே வந்து பதில் சொல்ல்ட்டும். ஏன்னாக்க இடதுசாரி இந்துத்துவம் போல அறிவியல் இந்துத்துவம் என்று உலகமாகா ஆராய்ச்சியில் விற்ப்பன்னர் அவர்.


  பிறப்பின் அடிப்படையில் குணத்தையும் அதன் கடமைகளையும் நாந்தான் தீர்மானிக்கீறேன் ஒரு மொள்ளமாறி மொளகா அரைச்சான் அதைத்தான் இவர்களின் அடிப்படை தத்துவமாக கொண்டுள்ளனர்.

  இதுவரை எங்குமே இந்துமதம் என்றல் என்னவென்ற வறையறை செய் என்ற கேள்விக்கு இவர்கள் பதில் சொல்லக் கானோமே?

  அசுரன்

 27. Anonymous said...

  வணக்கம் திவாகர்,

  //பார்ப்பனச் சகோதரிகள் மாதவிடாய்க் காலங்களில் குனிந்து வளைந்து கோலம் போடுவதிலலையா? வீடு பெருக்குவதில்லையா? துணி துவைப்பதில்லையா? பாத்திரம் கழுவுவதில்லையா? ஆம்பளைகள் வக்கணையாய் வழித்துத் தின்ன வடித்துக்கொட்டுவதில்லையா?//

  ரொம்ப கரெக்ட் சார், சரியான கேள்விகள்.

  //இவ்வளவு சொல்லியும் நீங்களோ உங்கள் அரங்கநாதரோ, சிதம்பரம் நடராஜரோ முடியாது, கிடியாது என்றால் ரொம்பவே சங்கடப்பட்டால், வேண்டாம் பெண்கள் அர்ச்சகராகவே வேண்டாம்.//

  நியாயந்தான!?, அவிய்ங்களே சங்கடப்பட்டால் வேண்டாம்தான் :-)

  அடிச்சி கெளப்புங்க, முதல் தரமான பதிவு.

 28. Anonymous said...

  மிகவும் தெளிவாக எழுத்துக்கள். பா...ன வளர்ப்புக்களின் பதில்களை காணோம்.

  சிவா

 29. ஜடாயு said...

  அன்பிற்கினிய மி.வெ,

  // சென்னைக்குப் பகக்த்திலுள்ள மேல்மருவத்தூருக்குப் போங்கள். //

  ஆதிபராசக்தி சித்தர் பீடம் இந்துக்கோவில் இல்லை என்கிறீர்களா? அந்தக் கோவிலில் பிள்ளையார், மகாலட்சுமி எல்லாரும் இருக்கிறார்கள்.
  நானும் அந்தக் கோயிலுக்கு பலமுறை சென்று வணங்கியிருக்கிறேன்! அடிகளார் அவர்களே அது இந்துக் கோவில் என்று தான் சொல்லுகிறார் !

  // அதேபோல பார்ப்பனரல்லாத அர்ச்சகர்கள் இருக்கும் வழிபாட்டுமுறைகளும் நம்நாட்டில் உள்ளன. ஆனால் என் கேள்வி இவையெல்லாம் எப்போது 'இந்துமதம்' ஆனது என்பதுதான். //

  இது என்ன கூத்து? இதெல்லாம் இந்து மதம் இல்லையென்றால், பின்னர் ஆப்பிரிக்க பழங்குடி மதமா இல்லை எகிப்திய மதமா இல்லை ஜப்பானிய மதமா?

  வைதீக, வேள்வி சார்ந்த வழிபாடு இந்து மதத்தின் ஒரு பிரிவு. அது "கர்ம காண்டம்" என்ற பிரிவு, அவ்வளவு தான். சங்கரர் முதல் விவேகானந்தர் வரை கிழிகிழியென்று கிழித்த சமயப் பிரிவு அது.

  விட்டால் நாயன்மார்கள், ஆழ்வார்கள் கூட இந்து மதமா என்று கேட்பீர்கள் போலிருக்கிறதே??

  // நாட்டார் சமயங்களையும் உள்ளிழுத்துக்கொண்டு இந்துமதத்தில் அது இல்லையா, இது இல்லையா என்று கேட்பது என்ன நியாயம்? //

  இதில் "உள்ளிழுப்பு" எங்கே வந்தது? திருநீறு, திரிசூலம், நாமம், காளி எல்லாம் நாட்டார் வழிபாட்டின் குறியீடுகளில் சைவ, வைணவ சமயங்களின் அதே அர்த்தத்துடன் தானே உணரப் படுகின்றன? வணங்கப் படுகின்றன? இந்து மதம் என்பது பல சமய வழிபாட்டு முறைகளை உள்ளடக்கியது.

  // தோழர் பெரியார் போட்டுடைத்ததும் ராமன், பிள்ளையார் சிலைகளையே தவிர கருப்பணசாமி சிலைகளை அல்ல.//

  அப்படியானால், பெரியார் கடவுள் உண்டு, அவர் பெயர் கருப்பண்ணசாமி என்பதை ஒத்துக் கொண்டாரா? இது ரொம்ப புதிய செய்தியாக இருக்கிறதே!
  கருப்பண்ணசுவாமி விபூதி அல்லவா அணிந்திருக்கிறார்? ஒருவேளை 'கருப்பு' என்று வந்ததால் அவரும் தி.க. தொண்டர் என்று ஈவேரா நினைத்து விட்டாரோ? :)))

  பை தி வே, கருப்பண்ணசுவாமியை வணங்கும், குலதெய்வமாகக் கொண்ட பார்ப்பனர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். கருப்பண்ண சுவாமி பேரில் வடமொழி சுலோகங்களும் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? வேண்டுமென்றால் ஸ்ரீகருப்ப சுவாமி அஷ்டோத்தரம் பிரின்ட் அவுட் அனுப்புகிறேன்.

  // எனவே முதலில் 'இந்துமதம்' என்பதற்கான வரையறையை வரையறுத்துவிட்டு வாருங்கள். காத்திருக்கிறேன். //

  வாழ்க்கை என்பது கருப்பு-வெள்ளை, மதம் என்பது கடவுள்-சாத்தான் அல்லது முஸ்லீம்-காஃபிர் என்பது மாதிரியான கேனத்தனமான "வரையறை"கள் வேண்டுமென்றால் இந்து மதத்தை வரையறுக்க முடியாது தான்! ஆனால், மதம் என்பது அதைப் பின்பற்றுபவர்களின் வாழ்வியல், ஆன்மீக அனுபவம் என்ற குறைந்த பட்ச உணர்வாவது இருந்தால் இப்படிக் கேட்க மாட்டீர்கள்! இசையை வரையறை செய் என்று கேட்பது போன்றது இது!

  // எனக்கு மற்ற மதங்களை விமர்சிப்பதை விடவும் இந்துமதத்தை ஒழிப்பதுதான் முக்கியம். நான் ஒரு இந்துமத எதிர்ப்பாளன் தான்.//

  கொஞ்சம் முன்பு தான் இந்து மதத்திற்கு வரையறை உண்டா என்று கேட்டீர்கள்? இப்போது இந்துமதத்தை ஒழிப்பது தான் முக்கியம் என்கிறீர்கள். ஸோ, உங்களுக்கு இந்து மதம் என்றால் என்ன என்று தெரியும் என்று கொள்ளலாமா?

  எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், நீங்கள் வெறுக்கும் இந்திய சமூகச் சீர்கேடுகள் எல்லாவற்றையும் உள்நோக்கத்தோடு "இந்து மதம்" என்று லேபிள் குத்துகிறீர்கள்! இதையே மற்ற மதங்களுக்கு செய்வீர்களா? யூத ஒழிப்பு கிறித்தவ மதத்தின் கொள்கையே தான் என்று சொல்வீர்களா?

  விவேகானந்தர், பாரதி, அரவிந்தர், காந்தி (மற்றும் இவர்களோடு நான்) எல்லாம் இந்தியப் பண்பாட்டின் அற்புதமான படிமங்கள், கலாசாரம், சமயம் இவை எல்லாம் தான் இந்து மதம் என்று கருதி, சமூகச் சீர்கேடுகளை அடையாளம் கண்டு அதை எதிர்க்கிறோம்!

  // சாதியும் இந்துமதமும் ஒழியுமென்றால் கடவுளைக் கூட ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறவன் தான். //

  மேலே சொன்னதையும், கண்ணன் எந்தக் குலம் என்ற என் பதிவையும் படிக்கவும்.

 30. மிதக்கும்வெளி said...

  அன்பின் இனிய ஜடாயு.

  பங்காரு அடிகளார் இந்துமதத்தை ஒத்துக்கொள்கிறார் என்பது உண்மைதான். நான் சொன்னது பெண்கள் அர்ச்சகராவதற்கு ஏன் வடநாட்டு உதாரணங்களைத் தேடிச்செல்ல வேண்டும் என்பதற்குத்தான். அவர் வழிபாட்டுமுறையில் மாதவிலக்கு விவகாரம் வரவில்லையே என்பதற்காகத்தான்.
  பல்வேறு வழிபாட்டுமுறைகளையும் சேர்த்து இந்துமதம் என்கிற ஒற்றை அடையாளம் உருவாக்கப்பட்டது எப்போது என்பதுதான் என் கேள்வி. இந்தியாவிலுள்ள எல்லா வழிபாட்டுமுறைகளையும் இந்துமதம் என்று சொல்லிவிடலாமா?
  தெய்வத்தின் குரல் நூலில் சந்திரசேகர் (பெரிய சங்கராச்சாரியார்) "வெள்ளைக்காரன் வந்ததால் நாம் பிழைத்தோம். இல்லையென்றால் இந்துமதம் என்ற ஒன்று இருக்காது" என்று சொன்னது எந்த அடிப்படையில்?
  சிறுதெய்வங்கள், பெருந்தெய்வங்கள் என்கிற வகைப்பாட்டை இன்றைய நாட்டார் ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்தானே? எந்த நாயன்மார், ஆழ்வார் பாடல்களில் கருப்பணசாமி பற்றி வந்திருக்கிறது என்று சொல்லுங்களேன்.
  நான் பெரியார் கடவுளை ஒத்துக்கொண்டார் என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை. பெரியாரின் நாத்திகம் என்பது சாதிஎதிர்ப்பின் அடிபப்டையிலானது. கருப்பணசாமி, மதுரைவீரன் எல்லாம் சாதிஒழிப்பில், சாதிமறுப்புத்திருமணத்தில் கொலை செய்யப்பட்டவர்கள்தானே? பெரியாரின் நாத்திகம் என்பது பார்ப்பனிய சாதியமுறைக்கான எதிர்ப்பு. இது குறித்து தயவுசெய்து பெரியாரின் பிரதிகளைப் படியுங்களேன்.
  உங்களது 'கண்ணன் எந்த குலம்' என்ற பதிவைப் படித்தேன்.
  "சாதுர் வர்ணயம் மயாசிருஷ்டம் குணகர்ம விபாகச தஸ்யகர்த்தராமபி விதயாம்பரத" என்கிற பகவத்கீதையின் சுலோகத்திற்கு அர்த்தம் சொல்லுங்களேன்.
  நந்தனார் சரித்திரம், ஏகலைவன் கதை, சம்புகன் கதை இவற்றிற்கெல்லாம் என்ன அர்த்தம்?

 31. மிதக்கும்வெளி said...

  அன்பின் இனிய ஜடாயு.

  2006ம் ஆண்டின் இறுதியில் கடைசியாகப் படிக்கும் கமெண்ட் உங்களுடையது. புத்தாண்டு வாழ்த்துக்கள்

 32. Anonymous said...

  //ஆனால் எந்த மதமும் மாதவிடாயைக் காரணம் காட்டி விலக்குவதில்லையே?//

  இதைச் சரிபார்க்கவும்.
  -வசந்தன்.

 33. Anonymous said...

  கவிதை அருமையிலும் அருமை.

  மேல்மருவத்தூரில்தான் பெண்கள் பூசை செய்கிறார்களே.
  எங்கே திருப்பதியிலும் சிதம்பரத்திலும் பெண்கள் பூசை செய்ய
  அனுமதிப்பார்களா?

  பெண்கள் நாத்து மட்டுமா நடுகிறார்கள்? போருக்கு போகிறார்கள்.
  விண்வெளிக்கும் போகிறார்கள். விடுதலை போராளிகளாகக்கூட
  இருக்கிறார்கள்.இவர்கள் இன்னும் வயித்துவலி, தலைவலி
  என்று உளறிக்கொண்டிருக்கிறார்கள்.

 34. Hariharan # 03985177737685368452 said...

  //கால்கள்தான் இறைவனின் படைப்பில் உயர்ந்ததாம், பெருமாளின் பாதம்தான் சேவிக்கபப்டுகிறதாம். எனவே சூத்திரர்கள் காலில் பிறந்தது இழிவாகாதாம். நல்லது. அப்படியானால் அத்தகைய சேவிக்கத்தக்க உயர்ந்த பாதங்களில் அணிந்திருக்கும் செருப்பு தைக்க பார்ப்பனர்கள் தயாரா? (மேலும் பகவான ராமபிரானின் செருப்பு ஆண்ட புண்னிய பூமியாயிற்றே இது?)கால் கழுவபப்டும் கழிப்பறையைக் கழுவ பார்ப்பனர்கள் தயாரா?//

  மிதக்கும் வெளி,

  புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  முதலில் விஸ்வரூப நாராயண ரூபத்துடன் வருணனையாக வர்ணாஸ்ரமம் வருணனை செய்யப்பட்டது என்பதை வருணனையாகப் பார்க்கும் பகுத்தறிவில்லாமல் இருக்கின்ற நிலையில் குரோதம் மிஞ்சுவது இயல்பே!

  ஒளிமிக்க சமுதாயத்தின ஏற்படுத்துவதில் சமூகத்தில் ஆசிரியர்கள் என்றுமே உயர்ந்தவர்களே. அதனாலேயே முகத்திலிருந்து பிராமணர்கள் வந்ததாக வருணனை (இங்கு பிராமணர்கள் என்பது குணாதிசயம் சார்ந்த வார்த்தை சாதியால் அல்ல) அடுத்ததாக சமூகத்தினைப் பாதுகாக்கும் ஷத்திரியன் நெஞ்சில் இருந்தும், வைசியன் தொடையினில் இருந்தும், சூத்திரன் கால்களில் இருந்தும் தோன்றியதாக வருணனை.

  இறைவனின் முகம், நெஞ்சு, தொடை, கால் என்பதில் எந்த வித்தியாசமும் கிடையாது ஆத்திகனுக்கு. நிஷ்டையிலிருந்த கிருஷ்ணனின் தலைப்பக்கம் அமர்ந்த துரியோதனனை விட, கால்மாட்டில் இருந்த பாண்டவர்களையே பகவான் முதலில் ஏறெடுத்துப் பார்த்தார். பகவானிடம் சரணடைய பக்தர்கள் பாதங்களில் தான் விழுந்து தொழுவர். ஆத்திகனுக்கு இதில் பேதமில்லை.

  அரசியல் பிழைப்புவாதிகளுக்கு இந்த வர்ணாசிரம வர்ணனை அறியாமையிலிருக்கும் அடித்தட்டு மக்களை திசைதிருப்பக்கிட்டிய பகுத்தறிவு, சுயமரியாதை ஜாக்பாட்!


  //சார்வாகத்தை இந்துமதம் உட்செரித்துக்கொண்டது பரிணாமமாம். அப்படியானால் வேத நெறிகளுக்குப் பின் தோன்றிய ஆசிர்வகம், சாங்கியம், லோகாயுதம், பவுத்தம், சமணத்தை என்ன சொல்வீர்கள்? அது பரிணாம வளர்ச்சி என்றால் தஞ்சாவூரில் 'கோலம் போடும் பெருமைமிகு' இந்து மரபை உதறித்தள்ளிவிட்டு இஸ்லாம் கொடிகட்டிப் பறந்தால் அதுமட்டும் பரிணாமம் ஆகாதோ?//

  அய்யா மிதக்கும் வெளி,

  சார்வாகம் இதே இந்திய மண்ணில் தோன்றிய இதே இந்தியக் கலாச்சாரத்தின் வேறு ஆரம்பகால வடிவமாயிருந்தது. சார்வாகத்தினை நிறுவியவர் ஒரு முனிவரே. அவர் வழிபட்டதும் இதே எங்கள் இந்துக்கடவுளரையே! வேத நெறி சார்வாகத் தத்துவச் சிந்தனையினும் மேலோங்கிய அடுத்த வடிவத்தினைத் தந்தது. விண்டோஸ் 3.1 வெர்ஷன் சார்வாகம் என்பதானால் விண்டோஸ் எக்ஸ்பி வேத நெறி என்கிற பரிணாம வளர்ச்சி என்பது மிகச்சரி.

  இசுலாமியமயம் என்பது இந்தியமண்ணின் கலாச்சாரமே அன்று என்கிற பகுத்தறிவு இல்லாமல் போனது ஏனோ? இன்றளவும் இசுலாமிய நெறிகளை விமர்சிக்கிற உரிமைகூட தங்களுக்கு இல்லை என்கிற அளவுக்கு அதன் அதிகாரமையம் சவூதி அரேபியாவில் இருக்கிற ஒரு மார்க்கம்.


  பரிணாம வளர்ச்சி என்பது அதே கலாச்சார, பண்பாட்டு அடையாளங்களுடன் அடுத்த கட்ட சிந்தனை, தத்துவங்கள் என மேம்படுகின்ற விதம்.

  பவுத்தமும் சமணமும் இந்து வேதசிந்தனைகளைத்தாண்டிச் சென்று யோசித்துச் சொன்ன தத்துவங்கள், சிந்தனைகள், பண்பாடு, கலாச்சாரம், கலைகள் என்ன என்று பட்டியலிட்டுச் சொல்லுங்கள் மிதக்கும் வெளி.

  வேதங்களை விமர்சிக்கும் சுதந்திரம், இந்து ராமரைச் செருப்பால் அடிக்க இருக்கும் உரிமை, சமணர்களுக்கு கோவணம் கட்டும் உரிமை முகம்மதுவை, குரானை விமர்சிக்க இருக்கிறதா தங்களுக்கு?

  அரசியல் கூட்டணி மாதிரியான விஷயமில்லை இது ஆன்மீகம், வாழ்வியல் தத்துவங்கள் என்பது முழுமையாக வேறு தளம்.


  பெண்கள் இந்துமதத்தில் ஏன் அர்ச்சகராக்கப்படவில்லை என்பது சமீபத்திய சில நூற்றாண்டுகளின் அந்நியர் படையெடுப்பு / அந்நியர் ஆதிக்கச் சூழலில் இந்துப் பெண்கள் வெளியே நடமாடுவதைக்குறைத்துக் கல்வி, சமவாய்ப்பு என்பதில் இருந்து விலகி,பொதுவான பின்வரிசையில் வைக்கப்பட்டதை, சில நூற்றாண்டுகளாக சமூகப்பழக்கத்தில் இருக்கும் சூழல் காரணிகளை வைத்துச் சொல்லப்பட்ட கருத்து.

  இன்றைக்குப் பெண்கள் வெளிச்சென்று உயர்கல்வி கடந்த 50 ஆண்டுகளில் எத்தனை மடங்கு கூடியிருக்கிறது என்று பாருங்கள்? மூல காரணம் அந்நியர் வெளியேற்றிச் சுதந்திரம் பெற்றதால் விலகிய மனத்தடை என்பது மறுக்கமுடியுமா?

  அந்நியர் படையெடுப்பு, ஆக்கிரமிப்புக்கு முன்பாக சனாதன தர்மமாகிய இந்து மதத்தில் வேத பண்டிதர்களாக ஆணுக்குச் சமமாகப் பெண்கள் இருந்திருக்கின்றார்கள் என்பதே உண்மை.


  //விவேக்கும் வடிவேலுவும் ஒரே பெண்ணைக் காதலிக்க முயற்சி செய்வார்கள். விவேக் கையில்லாதவரைப் போல நடித்துக்கொண்டிருப்பார். ஒருமுறை விவேக்கு அண்டர்வேர் மாட்டமுடியாது. அவரது காதலி மாட்டிவிட்டு விட்டு கைகளைத் தட்டிக்கொள்வார். விவேக் சொல்வார், "ஒரு லோடு மண்ணடிச்சமாதிரி கையைத் தட்டுறா பாரு"//

  //ஏதோ மணியாட்டுவதும், தீபாராதனையும் உலகமகா உழைப்புப்போலவும் அதற்கு மாதவிடாய்தான் தடையாக இருப்பதுபோலவும் ஹரி பேசும்போது சிரிக்காமல் இருக்க முடியவில்லை.//


  இது தங்களது சிந்தனை தளத்தினை வெளிச்சம் போடுகிறது!

  இத்தகைய சீரிய இறைச்சிந்தனை இருக்கும் தாங்கள் இறைச்சேவை என்பதான அர்ச்சகராகப் பெண்கள் வரவேண்டும் என்பது பற்றியெல்லாம் பேசுவது நகைப்பான நகைப்பாக இருக்கிறது!

 35. Anonymous said...

  www.ibnlive.com/news/a-woman-priest-for-lord-ayyappa/15749/comments.html
  Is any such things possible in
  christianity or islam.Dont you know that when muslim women wanted to build a mosque for themselves
  TMMK opposed it.The same TMMK is
  being supported by A.Marx,Supa.Veerapandian and K.Veeramani.These pseudo-leftists and pseudo-rationalists will keep
  mum about other religions and will shamelessly work with fundamentalists in other religions.
  Are you not ashamed of being one of them.

 36. Anonymous said...

  "புழுக்கம் நிறைந்த கருவறை வெளிகள்
  எம் பெண்கள்
  நாப்கின் உலர்த்தப் பயன்படட்டும்"

  காயாது பிரதர்.ஏன்னா பல பட்டர்கள்
  அவசரமா ஒன்னுக்கு போணும்னா
  கருவறைக்குள்ளே அடிச்சு விடுறாங்க.
  மீனாட்சிஅம்மன் கோயில்ல ரொம்ப
  காலமா இந்த கூத்து நடக்குது.