கணவன் என்ற மிருகம்(2)ஒரு முத்தத்தைத் தந்துஎன்னை அபகரித்துப்போனாய்.
என் இறைச்சியின் கொதிப்படங்கும் முன்னரே
உன் வேட்டை முடிந்துவிடுகிறது.
கரையோரத்தில்
ஒற்றைத்தூண்டிலோடு

காத்திருக்கும் நீ ஆழங்களில் அமிழ்ந்திருக்கும்
ரகசியங்கள் பற்றிக் கவலையற்றிருக்கலாம்.
ஆனால் ஒருபோதும்
வெல்லமுடியாத என்னை
உன் மொழியால் ஆண்டதாய்ப்
பெருமிதம் கொள்ளும் உனக்கு
கனவுகளில் தீர்த்துக்கொள்ளும்
என் வஞ்சமே பதிலாயிருக்கும்.

dedicated to தோழர்.கவிதா. 'கணவன் என்ற மிருகம்' என்ற தலைப்பில் ஏற்கனவே ஒரு கவிதையைப் பதிவிட்டிருந்தேன். அதில் பலரும் பின்னூட்டம் இட்டிருந்தாலும் பெண் என்ற வகையில் பின்னூட்டமிட்டிருந்தது கவிதா மட்டுமே. என் போன்ற ஆம்பளை நாய்களுக்குக் கவிதை மட்டுமே எழுத முடியும். ஒரு பெண்ணால் மட்டும்தான் வலியை உணர்ந்துகொள்ளமுடியும். thank you kavitha.

5 உரையாட வந்தவர்கள்:

 1. bala said...

  //என் போன்ற ஆம்பளை நாய்//

  வெளியே மிதக்கும் அய்யா,

  நீங்க நாயா? ஓநாய் மதிரி பல் இருக்கிறதா முன்னாடி சொன்னீங்க..
  கட் அண்ட் ரைட்டா சொல்லிடுங்க அய்யா..நீங்க யார்?

  பாலா

 2. லக்கிலுக் said...

  நல்ல கவிதை

  - இப்படிக்கு
  ஒரு மிருகம்

 3. தமிழ்நதி said...

  ‘என் இறைச்சியின் கொதிப்படங்குமுன்னரே
  உன் வேட்டை முடிந்துவிடுகிறது’

  அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். முன்பு இதே தலைப்பின் கீழ்; எழுதிய கவிதையும் நன்றாக இருந்தது. உங்களை ஒரு பெண் என்றே நான் நினைத்திருந்தேன். ஆனால், ‘வலைப்பதிவர் சந்திப்பு’ பற்றி எழுதியது குழப்பிவிட்டது.(மது அருந்துவது மற்றும் அது தொடர்பாகப் பேசுவதையும் ஆண்களின் உரிமையெனக் கொள்வதனால்) குழப்பம் தீர்ந்தது பிற்குறிப்பின் மூலம்தான். ஒரு வேண்டுகோள் முன்வைக்கலாமா…? ஏற்றுக்கொள்ளவேண்டுமென்றில்லை. தீவிரமான மனம்கனக்க வைக்கும் ஒரு விடயத்தை எழுதியபின் ‘இதை இன்னாருக்கு அர்ப்பணிக்கிறேன்’என்பது, அந்தப் படைப்பு ஏற்படுத்திய பாதிப்பைச் சட்டெனக் கலைத்துப்போடுவது மாதிரியிருக்கிறது.

 4. மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

  //ஒரு வேண்டுகோள் முன்வைக்கலாமா…? ஏற்றுக்கொள்ளவேண்டுமென்றில்லை. தீவிரமான மனம்கனக்க வைக்கும் ஒரு விடயத்தை எழுதியபின் ‘இதை இன்னாருக்கு அர்ப்பணிக்கிறேன்’என்பது, அந்தப் படைப்பு ஏற்படுத்திய பாதிப்பைச் சட்டெனக் கலைத்துப்போடுவது மாதிரியிருக்கிறது.//

  சுகுணா திவாகர், இதை நானும் உணர்ந்தேன்.

 5. மிதக்கும்வெளி said...

  தமிழ்நதி, மதி ....ம்.. யோசிக்கிறேன். சும்மா ஒரு மாதிரியை முயற்சி செய்யலாம் என்ற எண்ணத்தில் தோன்றியதுதான் அது. மற்றபடி, யாருக்காவது சமர்ப்பிக்கத்தான் வேண்டும் என்ற நேர்த்திக்கடன் எதுவும் என்னிடம் இல்லை.