இந்துக்கோயில்களை இடித்தது சரியா?

சமீபத்தில் தோழர் மரைக்காயர் ஆனந்தவிகடனில் வெளிவந்த பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியனின் நேர்காணலைப் பதிவிட்டிருந்தார். அது ஏற்கனவே படித்ததுதான் என்றபோதிலும் அவர்து பதிவுக்குப் பின்னூட்டமிருந்த ஒரு இந்துத்துவவாதிக்குப் பொறுமையாக அவர் விளக்கம் அளித்திருந்தது என்னைக் கவர்ந்தது.

சமீபத்தில் 'புதியகாற்று - டிசம்பர் - இதழில் ஆ.சிவசுப்பிரமணியனின் கட்டுரை ஒன்று வெளியாகியிருக்கிறது. பொதுவாக முஸ்லீம் மன்னர்கள் இந்துக்கோயில்களை இடித்துவிட்டார்கள் என்பதுதான் இந்துத்துவவாதிகளின் வழக்கமான பல்லவி. ஆனால் கோயில் என்பது செல்வத்தைச் சேர்த்துவைக்கும் கிட்டங்கியாகவே இருந்தது. அதைக் கொள்ளையடிப்பதுதான் மன்னர்களின் நோக்கமாக இருந்ததே தவிர கோயில்களைச் சிதைக்க வேண்டுமென்பதில்லை. இதற்கு இந்து மன்னர்களும் விதிவிலக்கல்ல.எந்தெந்த இந்து மன்னர்கள் இந்துக்கோயில்களைச் சிதைத்தார்கள் என்பது குறித்து பேரா.ஆ.சி விரிவாக விளக்கியிருக்கிறார். மிக முக்கியமான கட்டுரை. அவசியம் படியுங்கள்.

ஆ.சிவசுப்பிரமணியனைப் போலவே இன்னொரு முக்கியமான ஆய்வாளர் தொ.பரமசிவன். இவர்கள் இருவரும் நாட்டார் தெய்வங்களையும் வழிபாட்டு முறைகளையும் இந்துமதம் எப்படித் தின்று செரித்தது, அவை எப்படி இந்துமதமாக்கப்பட்டன என்பது குறித்து விரிவான ஆய்வுகளைச் செய்திருக்கிறார்கள்.

இவ்விரு அறிஞர்களின் முன்னோடிகள் என்று மயிலை.சீனி.வேங்கடசாமிநாட்டாரையும் சாத்தான்குளம் ராகவனையும் சொல்லலாம். இவ்விருவரும் சுயமரியாதை இயக்கச் சார்பாளர்களாக விளங்கினார்கள். (அவர்கள் இருவரையும் பயன்படுத்திக்கொள்ள பெரியார் தவறிவிட்டார் என்பது வேறு விஷயம்). குறிப்பாக வேங்கடசாமி நாட்டாரின் 'பௌத்தமும் தமிழும்' மிக முக்கியமான நூல். அவரது பல ஆய்வுகள் சைவ, வைணவ வெறியர்களால் பௌத்த விகாரைகளும் சமணப் பள்ளிகளும் எவ்வாறு சிதைக்கப்பட்டன என்று விளக்குகின்றன.

இப்போது அய்யப்பன் சீசன். எங்குபார்த்தாலும் கருப்புச் சட்டை, கருப்பு வேட்டிகள் நடமாடிக்கொண்டிருக்கின்றன. உண்மையில் சபரிமலை அய்யப்பன் சிலை என்பது புத்தர் சிலையே. இந்து ஆண் கடவுள்கள் யாருக்கும் உட்கார்ந்த நிலையில் சிலை இல்லை. மேலும் சாத்தன் என்பது பவுத்தப்பெயர். உதாரணம் சீத்தலைச் சாத்தனார். (அவர் எழுதும்போது எழுதுகோலின் பின்பகுதியை அடிக்கடி தலையில் குத்திக்கொள்வாராம். அதனால் அவர் சீழ்+தலை+சாத்தனார் ஆனாராம். இப்படி வெறுப்பை உமிழும் எத்தனையோ கட்டுக்கதைகள் பிறகு இந்துவெறியர்களிடமிருந்து கிளம்பியது.அதேபோல பக்குடுக்கை நன்கணியார் என்னும் புலவர் ஆசிர்வகம் என்னும் மாற்று மதத்தை சேர்ந்தவர். அவரது இயற்பெயர் தெரியவில்லை. ஆனால் பகு+உடுக்கை+நன்கு அணியார்- நன்றாக உடை உடுத்தத் தெரியாதவர் என்ற பெயராலேயே அழைக்கப்பட்டார்.)

சாத்தன் என்னும் பவுத்தப் பெயரே 'சாஸ்தா'வாக மாறி அது அய்யப்பனாக்கப்பட்டது.'சாமியே சரணம் அய்யப்பா' என்பது கூட 'புத்தம் சரணம் கச்சாமி'யிலிருந்து திருடப்பட்டது. இப்படியாக புத்த விகாரைகளை அழித்தே பல இந்துக்கோயில்கள் கட்டப்பட்டன.

இந்தியா புத்தமும் சமணமும் கொழித்த பூமி. புத்த விகாரையே, விகார், பீகார் ஆயிற்று. சமணம் தந்த சொல்லே 'பள்ளி'. அதற்குமுன் "சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே" என்றதுதான் 'அன்பே சிவமான' இந்துமதம். 'பொது' என்னும் சொல்லே பாலி மொழி தமிழுக்கு வழங்கிய கொடை.

ஆனால் எல்லாவற்றையும் கபளீகரம் செய்த இந்துத்துவத்தின் கொடுங்கரங்கள் இந்தியாவின் அழகியலின், வரலாற்றின் சின்னமாகிய பாபர் மசூதி வரை நீண்டது.ஆனால் காலம் எப்போதும் ஒரு புள்ளியில் உறைந்து நிற்பதில்லை. காலச்சக்கரத்தைச் சுழற்றும் வாய்ப்பு எங்கள் வலிய கரங்களுக்கும் வரும். அப்போது, இந்துக்கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு புத்தவிகாரைகள் எழுப்பப்படும். இடிப்பதை மட்டுமே 'கடமை'யாகக் கொண்டு 'சிறீரங்கத்தில் பெரியார் சிலை வைக்கலாமா' என்று கேள்வி எழுப்புவர்களுக்கு 'எதிர்பாராத பலன்' கிடைக்கும்.

இந்துக்கோயில்களின் இடத்தில் பெரியார் சிலைகளும் புத்தர் சிலைகளும் நிறுவப்படும். பாபர் மஸ்ஜித் மீண்டும் கட்டப்படும். கோயில்தலமனைத்தும் பள்ளிகள் செய்வோம்.

16 உரையாட வந்தவர்கள்:

 1. மிதக்கும்வெளி said...

  தோடா நான் மட்டும் டெஸ்ட் மெசேஜ் போடக்கூடாதா? யார் படித்தாலும் படிக்காவிட்டாலும் அவசியம் படித்து பின்னூட்டமும் இடப்போகும் பாலாவின் (வரப்போகும்) வருகைக்கு நன்றி. அதேபோல ஒரு நண்பர் எந்த மதத்தையும் தாக்காதீர்கள் என்று மதங்கள் குறித்த சர்ச்சையில் ஈடுபடும் எல்லாப் பதிவுகளிலும் பின்னூட்டமிடுகிறார். அனேகமாக அவர் இந்த பதிவிற்கும் பின்னூட்டமிடுவார் என்று நினைக்கிறேன். அவரின் வருகைக்கும் நன்றி.

 2. rajavanaj said...

  நல்ல பதிவு திவாகர்,

  நீங்கள் குறிப்பிடும் புதிய காற்று இதழின் சுட்டி உள்ளதா.. பயனுள்ளதாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.


  //தோடா நான் மட்டும் டெஸ்ட் மெசேஜ் போடக்கூடாதா? யார் படித்தாலும் படிக்காவிட்டாலும் அவசியம் படித்து பின்னூட்டமும் இடப்போகும் பாலாவின் (வரப்போகும்) வருகைக்கு நன்றி. அதேபோல ஒரு நண்பர் எந்த மதத்தையும் தாக்காதீர்கள் என்று மதங்கள் குறித்த சர்ச்சையில் ஈடுபடும் எல்லாப் பதிவுகளிலும் பின்னூட்டமிடுகிறார். அனேகமாக அவர் இந்த பதிவிற்கும் பின்னூட்டமிடுவார் என்று நினைக்கிறேன். அவரின் வருகைக்கும் நன்றி//

  :)))))


  நன்றி

 3. அசுரன் said...

  திருப்பதி கோயிலை மலை வாழ் மக்களினுடைய காளி கோயிலை திருடி மாற்றியது. இன்னும் தமிழகத்தின் பல்வேறு சமன பௌத்த கோயிலை திருடி மாற்றியது என்று கோயில் இடிப்பின் முன்னோடிகள் இந்துத்துவ/பார்ப்பன வெறியர்கள்தான்.

  இன்றைக்கு இவர்கள் வரலாற்றை திரித்து ந்ம்மிடமே நூல் சுற்றுகிறார்கள்....

  கம்யுனிஸ்டு இயக்க தலைவர்கள் நா. வானமாமலை, ஆ. சிவசுப்பிரமனியன், தோ. பரமசிவன் இவர்களின் அயராத உழைப்பின் பலன் இன்று நமக்கு பல்வேறு தகவல்கள் செரிவாக கிடைக்கின்றன்.

  தேவ பேரின்பனின், 'தமிழகத்தின் வளங்கள் - ஒரு வரலாற்றுப் பார்வை' புத்தகத்தில் கோயில்கள் எப்படி அரசனுடைய நிர்வாக கேந்திரம் மற்றும் பாதுகாப்பு கோட்டையாக இருந்தது என்பதை விளக்கியிருப்பார்.

  ஆக, அதன் பிரமாணட் சுவர்களும், அகழிகளு, சுரங்களுக்ம். உள் சுற்று தாழ்வாரங்களும், பெரிய அரண்களும் பாதுகாப்பு, நெல் மணிகளை காயப் போட, அவற்றை பாதுகாக்கும் கௌடன்கள், மாடு கன்றுகளை கட்டும் இட்ங்களாக பயன்பட்டு வந்துள்ளன் என்பது தெளிவாகிறது. இவ்விடத்தில் இந்திய அமைப்பில்தான் அரசனுக்கே அனைத்தும் சொந்தம் என்ற நிலை உள்ளது. அதனால்தான் மராமத்து முதலான பொது பணித்துறை வேலைகளை அவன் செய்ய வேண்டியிருந்தது. இதனாலேயே அசோகர் மரம் நட்டார், ராணி மஙகம்மாள் சாலை சமைத்தால் என்று வரலாறு படிக்கிறோம்.

  நல்ல பதிவு அடிக்கடி வந்து பின்னூட்ட காவாளித்தன்ம் செய்வேன் என்றூ உறுதி கொடுகிகிறேன்.

  அசுரன்

 4. அசுரன் said...

  BNI யை சொல்கிறீர்களா? .....

  இந்த பின்னூட்டத்தை 30 நிமிடங்கள் கழித்து பிரசூரிக்கவும்...

  அசுரன்

 5. Anonymous said...

  Some people say that Saint Thiruvalluvar was a Buddhist.It is also said that he was Jain. Whatever religion he belonged to , I want to quote his Kural here."The best way to punish a person who has done you harm is to shame him by doing good!" Do you hear 'Midhakkum Veli'?

 6. மாசிலா said...

  அருமையான பதிவு. பதிவர் சுவனப்ரியனின் ( http://thamizmanam.com/forward_url.php?url=http://suvanappiriyan.blogspot.com/2006/11/blog-post_22.html ) "சமன - பௌத்த மதங்களை அழித்த இந்து மதம்" இல் மேலும் நிறைய ஆதாரங்களுடன் படித்ததை ஆமோதிக்கும் வகையில் உள்ள உங்கள் கருத்துக்களுடன் நான் ஒத்துபோகிறேன். நீங்களும் அதாரத்துடன் கூடிய செய்திகளை பதிப்பித்தால் நன்று.

  //இந்துக்கோயில்களின் இடத்தில் பெரியார் சிலைகளும் புத்தர் சிலைகளும் நிறுவப்படும். பாபர் மஸ்ஜித் மீண்டும் கட்டப்படும். கோயில்தலமனைத்தும் பள்ளிகள் செய்வோம்.// : மிகச்சரியான உறுதிமொழி.

  அன்புடன் மாசிலா!

 7. மாசிலா said...

  அசுரன் எழுதியது ! //திருப்பதி கோயிலை மலை வாழ் மக்களினுடைய காளி கோயிலை திருடி மாற்றியது.// படித்ததும் உன்மையில் கொலை நடுங்கியது. என் பெரிய வயதுகே இதெல்லாம் இதுநாள்வரை தெரியாத விடயமாகவே இருந்துவந்திருக்கிறது. இது போன்ற மறைக்கப்பட்ட செய்திகளை இப்போதைய இளைய தலைமுறைகள் அறிய என்னென்ன செய்யப்போகிறோம்?

  // இன்னும் தமிழகத்தின் பல்வேறு சமன பௌத்த கோயிலை திருடி மாற்றியது என்று கோயில் இடிப்பின் முன்னோடிகள் இந்துத்துவ/பார்ப்பன வெறியர்கள்தான்.// இந்த நபர்கள்தான் இன்று முதலைக்கண்ணீர் விடுகின்றன.

 8. கரு.மூர்த்தி said...

  இன்னொரு உண்மை தெரியுமா நண்பர்களே ? திருவரங்கத்தில் உள்ள அரங்கன் சிலை முகமது சிலைதான் , பெயர்மாற்றி நாமம் போட்டுவிட்டார்கள் பார்ப்பனர்கள் , ( ஆரம்பிச்சுடீங்கள்ள , இனி இப்படியே வரிசையா அடுச்சு தள்ளுங்க , யாரு இருக்கா கேக்க )

 9. மிதக்கும்வெளி said...

  ராஜ்வனஜ், அனேகமாக கீற்று.காமில் புதியகாற்றைப் படிக்கப்பெறலாம். அசுரன் அடிக்கடி வந்டு பின்னூட்ட காவாளித்தனம் செய்யுங்கள். நக்சல்பாரி அரசியலுக்கும் சி.பி.அய், சி.பி.எம்முக்கும் வித்தியாசம் தெரியாமல் மீண்டும் மீண்டும் உளறும் மதுசூதனன் போன்றவர்களை எப்படிச் சமாளிக்கிறீர்கள்? தொ.பரமசிவனின் 'அறியப்படாத தமிழகமும் முக்கியமான நூல். கருமூர்த்தி, முகமதுவுக்கு உருவவழிபாடும் கிடையாது, சிலையும் கிடையாது. இந்துத்துவத்தையும், பார்ப்பனீயத்தையும் ஆதரிப்பதற்கு முன்பு கொஞ்சம் மூளையைச் செலவழித்தால் என்ன?

 10. அசுரன் said...

  ///
  ராஜ்வனஜ், அனேகமாக கீற்று.காமில் புதியகாற்றைப் படிக்கப்பெறலாம். அசுரன் அடிக்கடி வந்டு பின்னூட்ட காவாளித்தனம் செய்யுங்கள். நக்சல்பாரி அரசியலுக்கும் சி.பி.அய், சி.பி.எம்முக்கும் வித்தியாசம் தெரியாமல் மீண்டும் மீண்டும் உளறும் மதுசூதனன் போன்றவர்களை எப்படிச் சமாளிக்கிறீர்கள்? தொ.பரமசிவனின் 'அறியப்படாத தமிழகமும் முக்கியமான நூல். கருமூர்த்தி, முகமதுவுக்கு உருவவழிபாடும் கிடையாது, சிலையும் கிடையாது. இந்துத்துவத்தையும், பார்ப்பனீயத்தையும் ஆதரிப்பதற்கு முன்பு கொஞ்சம் மூளையைச் செலவழித்தால் என்ன?
  ///


  தோ வந்துட்டேன்ன்....

  அதான் நேத்தே சொன்னேனே... தினமும் வந்து பின்னூட்ட காவாளித்தனம் செய்கிறேன் என்று....  வெறும் காவாளித்தனம் செய்யாமல் கொஞ்சம் விசயமும் சேர்த்து பேசினால் பிறரும் கருத்து சொல்லி காவாளித்தனத்தில் பங்கெடுக்க வசதியாக இருக்குமே என்று தோண்ரியது... அதனால் ஏதாவது பதிவுக்கு தொடர்பாக எடுத்து வருகிறேன்...

  அசுரன்

 11. Anonymous said...

  //
  ஆனால் கோயில் என்பது செல்வத்தைச் சேர்த்துவைக்கும் கிட்டங்கியாகவே இருந்தது. அதைக் கொள்ளையடிப்பதுதான் மன்னர்களின் நோக்கமாக இருந்ததே தவிர கோயில்களைச் சிதைக்க வேண்டுமென்பதில்லை
  //

  இந்த வழக்கம் இன்றும் இருக்கத் தானே செய்கிறது. சங்கர மடத்தில் ஜெயலலிதா அன் கோ பணம் முதலீடு செய்து இருந்ததாகவும். ஜெவுக்கும் சங்கரருக்கும் பிரச்சினை வந்த காரணமே பணம் தான் என்றும் சொல்லப்படுகிறதே

 12. அசுரன் said...

  பின்னூட்ட காவாளீத்தனம் + கொறிக்க கொஞ்சம் தகவல்... நண்பர் ராஜவனஜ்ஜுக்கு நன்றி....

  ரொம்ப தொந்தரவு செய்ற மாதிரி இருந்தா சொல்லுங்க மிதக்கும் வெளி...


  ///
  சாரவாகம் பற்றிய சில அடிப்படை உண்மைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்..

  சாரவாகம் கி.மு 700 ம் நூற்றாண்டு வாக்கில் இருந்து கி.பி 1400ம் நூற்றாண்டு வரையில் இந்திய தத்துவ ஞான மரபில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வந்த தத்துவ மரபு. உடலுக்கு வெளியேயும் உள்ளேயும் - பரமாத்மா - ஜீவாத்மா- என்கிற எந்த புண்ணாக்கும் கிடையாது என்று ஆணித்தரமாக மறுத்து நின்ற இயக்கம் சார்வாக தத்துவ இயக்கம்.

  மிக முக்கியமாக சார்வாகம் சாதி பிரிவை முற்றிலுமாக மறுத்ததோடல்லாமல் பார்ப்பனீயர்களையும் அவர்கள் தாங்கிப் பிடித்து வந்த வேதங்களையும் மிகக் கடுமையாக சாடி வந்தவர்கள்..

  ( இது ஒன்றே போதும் அவர்கள் எப்படி அழிக்கப் பட்டிருப்பார்கள் என்று நாம் யூகித்துக் கொள்ளலாம்)

  இப்போதும் பார்ப்பனர்கள் எவரையாவது திட்ட 'பிரகஸ்பதி' என்ற பதத்தை உபயோகிக்க காரணம் உள்ளது.. 'பிரகஸ்பதி' என்பவர் தான் இந்த தத்துவத்தை நிறுவியவர்.

  மரணத்துக்குப் பின் வாழ்வு இல்லை என்ற கருத்தை மக்களிடம் பரப்பி, சாமி/ பூச்சாண்டி அச்சத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்தனர் - இது யார் பிழைப்பில் மண் போடும் செயல் என்று படிக்கும் வாசகர் முடிவுக்கே விட்டு விடுகிறேன் ;)

  நீங்கள் சொல்வது போல் தத்துவஞான மரபில் நிகழ்ந்த 'பரினாம' வளர்ச்சியினால் சார்வாகம் ஒழியவில்லை. அற்புதமான விஞ்ஞான பார்வையை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் ஏற்பட்ட இந்த இயக்கம், ஆதிக்க சக்திகளுடன் பார்ப்பனீய மதமும் அதன் வேதக் கருத்துக்களும் கைகோர்த்ததன் காரணமாகவே ஒழிக்கப் பட்டது..

  இப்போதுள்ள சாதிமுறை முன்னேற்றமா? இதற்குக் காரணமான ஸ்மிருதிகள் முன்னேற்றமா? இல்லை இதெல்லாம் வேண்டாம் என்று சொன்ன சார்வாகம் முன்னேறிய கருத்தா?

  நன்றி: ராஜாவனஜ்
  ////

 13. அசுரன் said...

  வர்ணாஸ்ரம தர்மம்தான் இந்து தத்துவ மரபின் மிகப் பெரிய சாதனை என்று பல இந்துத்துவ பார்ப்ப்னிய வெறியர்களும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காகவும், அதை நம்பி அவர்கள் பின்னே அணி திரண்டு பிரியானிக்கு பலியாகவுள்ள
  அ(ட)ப்பாவிகளுக்காவும்.

  ***********
  நண்பர் வினோத்துக்கு
  ஒரேயொரு பதில்தான்....
  நான்கு குணங்களையும்
  அவற்றின் கடமைகளையும்
  படைத்த பரமாத்மாவை
  அறிவியல்
  அங்கீகரிக்கவில்லை.....
  அவ்வளவுதான் விசயம்...
  அதனாலேயே இந்து மதத்தின்
  அடிப்படை தவறு என்பதுடன்
  மனித குல வீரொத
  தத்துவமாகவும் ஆகிறது...
  இத்துடன் இந்தியாவில் சாதி ..


  பொதுவாக மரபணு அதன் ஊடாக
  தகவல் அடுத்த கட்ட
  சந்ததிக்கு பரப்பபடுவது
  குறித்த உயிரியல்
  விசயங்களில் நம்மைப் போல
  சாரசரிகளின் புரிதல் அதல்
  பாதாளம். அதனாலேயே
  உங்களைப் போல வேதத்தில்
  உள்ள வர்ணாஸ்ரமம் சரிதான்
  என்ற மாயையை பொய்யை பலரும்
  சொல்லி வருகிறார்கள்
  உங்களுக்காக இந்த
  அம்சத்தில் தேடியதில்
  கிடைத்த தகவலை இங்கு
  பரிமாறிக் கொள்கிறேன்.


  பிறப்பின் அடிப்படையில்
  நான்கு குணங்க்ள் உள்ளன
  எனும் வர்ணாஸ்ரம் தத்துவம்
  கற்பனையானது. உண்மையில்
  ஒரு சமூக பொருளாதார
  சூழ்நிலையே ஒவ்வொரு மனிதனி
  குணத்தையும்
  தீர்மானிக்கிறது.


  சுட்டி:
  http://www.ornl.gov/sci/techresources/Human_Genome/elsi/behavior.shtml


  ///
  . The search for genes associated with characteristics such as sexual
  preference and basic personality traits has been even more frustrating.


  A growing scientific and popular focus on genes and behavior has
  contributed to a resurgence of behavioral genetic determinism஗the
  belief that genetics is the major factor in determining behavior.
  ////


  அதாவது,குணநலன் தொடர்புடைய
  மரபணுக்களை
  கண்டுபிடிக்கும்
  ஆராய்ச்சி மிக மிக
  சலிப்படையச் செய்வதாக
  உள்ளது என்று சொல்கிறது
  மேலேயுள்ள வரிகள். மேலும்,
  மரபணு ஆராய்ச்சியின்
  வளர்ச்சி 'பழக்க வழக்கத்தை
  மரபணுக்கும் பெருமளவு
  பாதிக்கிறது' என்ற
  நம்பிக்கையையுடைய பிடிவாத
  புரிதலை வளர்த்துள்ளது
  என்கிறது இந்த கட்டுரை.


  அப்ப்டியெனில் உண்மையில்
  பழக்க வழக்கத்துக்கும்
  மரபணுவுக்கும் தொடர்பு
  இல்லையா? இதை கீழே உள்ள
  வரிகள் ஓரள்வு
  தெளிவுபடுத்துகிறது.


  ///
  Are behaviors inbred, written indelibly in our genes as immutable
  biological imperatives, or is the environment more important in shaping
  our thoughts and actions? Such questions cycle through society
  repeatedly, forming the public nexus of the "nature vs. nurture
  controversy," a strange locution to biologists, who recognize that
  behaviors exist only in the context of environmental influence.
  Nonetheless, the debate flares anew every few years, reigniting in
  response to genetic analyses of traits such as intelligence,
  criminality, or homosexuality, characteristics freighted with social,
  political, and legal meaning.
  ///


  அதாவது சமூக பொருளாதாரம்
  வினையாற்றுகிறதா அல்லது
  மரபணு வினையாற்றுகிறதா
  என்ற போராட்டதில்,
  உயிரியலாளர்கள்
  நிலைப்பாடு பின்வருமாறு:
  'பழக்க வழக்கம் என்பது
  குறிப்பிட்ட
  சுற்றுச்சூழலின்
  பாதிப்பில் மட்டுமே
  நிலைபெறூகிறது'
  என்பதுதான். ஆக, வர்ணாஸ்ரம
  தர்மம் அறிவியலுடன்
  முரன்படும் இடம் இது.
  ஏனெனில் ஒவ்வொரு
  வர்ணத்திற்க்கும் ஒரு கடமை
  நிர்ணயித்த வேதம், அந்த
  வர்ணத்தை முடிவு செய்வது
  கடவுளாக இருப்பதாகத்தான்
  சொல்கிறதேயொழிய சுற்றுச்
  சூழலை சொல்லவில்லை.


  ////
  There are several scientific obstacles to correlating genotype (an
  individual's genetic endowment) and behavior. One problem is in
  defining a specific endpoint that characterizes a condition, be it
  schizophrenia or intelligence. Another problem is in identifying and
  excluding other possible causes of the condition, thereby permitting a
  determination of the significance of a supposed correlation. Much
  current research on genes and behavior also engenders very strong
  feelings because of the potential social and political consequences of
  accepting these supposed truths. Thus, more than any other aspect of
  genetics, discoveries in behavioral genetics should not be viewed as
  irrefutable until there has been substantial scientific corroboration.
  ///


  மேலும், ஒரு மரபணு அதனுடன்
  அடையாளப்படுத்தப்படும்
  பழக்க வழக்கம் இவற்றை
  இணைத்துப் பார்ப்பதில் பல
  சிக்கல்கள் உள்ளன.
  அதற்க்கடுத்த உள்ள்வை
  அவரவர் மொழிபெயர்த்து
  கொள்ளவும்...


  ஆக, மரபணு என்பது தகவல்களை
  சேகரித்து அடுத்த
  சந்ததிக்கு
  ப்ரப்புவதுதான் ஆயினும்
  அது வர்ணாஸ்ரமம் சொல்லும்
  அம்சத்தில் வரவில்லை.


  அசுரன்

 14. அசுரன் said...

  வர்ணாஸ்ரம தர்மம்தான் இந்து தத்துவ மரபின் மிகப் பெரிய சாதனை என்று பல இந்துத்துவ பார்ப்ப்னிய வெறியர்களும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காகவும், அதை நம்பி அவர்கள் பின்னே அணி திரண்டு பிரியானிக்கு பலியாகவுள்ள
  அ(ட)ப்பாவிகளுக்காவும்.

  ***********
  நண்பர் வினோத்துக்கு
  ஒரேயொரு பதில்தான்....
  நான்கு குணங்களையும்
  அவற்றின் கடமைகளையும்
  படைத்த பரமாத்மாவை
  அறிவியல்
  அங்கீகரிக்கவில்லை.....
  அவ்வளவுதான் விசயம்...
  அதனாலேயே இந்து மதத்தின்
  அடிப்படை தவறு என்பதுடன்
  மனித குல வீரொத
  தத்துவமாகவும் ஆகிறது...
  இத்துடன் இந்தியாவில் சாதி ..


  பொதுவாக மரபணு அதன் ஊடாக
  தகவல் அடுத்த கட்ட
  சந்ததிக்கு பரப்பபடுவது
  குறித்த உயிரியல்
  விசயங்களில் நம்மைப் போல
  சாரசரிகளின் புரிதல் அதல்
  பாதாளம். அதனாலேயே
  உங்களைப் போல வேதத்தில்
  உள்ள வர்ணாஸ்ரமம் சரிதான்
  என்ற மாயையை பொய்யை பலரும்
  சொல்லி வருகிறார்கள்
  உங்களுக்காக இந்த
  அம்சத்தில் தேடியதில்
  கிடைத்த தகவலை இங்கு
  பரிமாறிக் கொள்கிறேன்.


  பிறப்பின் அடிப்படையில்
  நான்கு குணங்க்ள் உள்ளன
  எனும் வர்ணாஸ்ரம் தத்துவம்
  கற்பனையானது. உண்மையில்
  ஒரு சமூக பொருளாதார
  சூழ்நிலையே ஒவ்வொரு மனிதனி
  குணத்தையும்
  தீர்மானிக்கிறது.


  சுட்டி:
  http://www.ornl.gov/sci/techresources/Human_Genome/elsi/behavior.shtml


  ///
  . The search for genes associated with characteristics such as sexual
  preference and basic personality traits has been even more frustrating.


  A growing scientific and popular focus on genes and behavior has
  contributed to a resurgence of behavioral genetic determinism஗the
  belief that genetics is the major factor in determining behavior.
  ////


  அதாவது,குணநலன் தொடர்புடைய
  மரபணுக்களை
  கண்டுபிடிக்கும்
  ஆராய்ச்சி மிக மிக
  சலிப்படையச் செய்வதாக
  உள்ளது என்று சொல்கிறது
  மேலேயுள்ள வரிகள். மேலும்,
  மரபணு ஆராய்ச்சியின்
  வளர்ச்சி 'பழக்க வழக்கத்தை
  மரபணுக்கும் பெருமளவு
  பாதிக்கிறது' என்ற
  நம்பிக்கையையுடைய பிடிவாத
  புரிதலை வளர்த்துள்ளது
  என்கிறது இந்த கட்டுரை.


  அப்ப்டியெனில் உண்மையில்
  பழக்க வழக்கத்துக்கும்
  மரபணுவுக்கும் தொடர்பு
  இல்லையா? இதை கீழே உள்ள
  வரிகள் ஓரள்வு
  தெளிவுபடுத்துகிறது.


  ///
  Are behaviors inbred, written indelibly in our genes as immutable
  biological imperatives, or is the environment more important in shaping
  our thoughts and actions? Such questions cycle through society
  repeatedly, forming the public nexus of the "nature vs. nurture
  controversy," a strange locution to biologists, who recognize that
  behaviors exist only in the context of environmental influence.
  Nonetheless, the debate flares anew every few years, reigniting in
  response to genetic analyses of traits such as intelligence,
  criminality, or homosexuality, characteristics freighted with social,
  political, and legal meaning.
  ///


  அதாவது சமூக பொருளாதாரம்
  வினையாற்றுகிறதா அல்லது
  மரபணு வினையாற்றுகிறதா
  என்ற போராட்டதில்,
  உயிரியலாளர்கள்
  நிலைப்பாடு பின்வருமாறு:
  'பழக்க வழக்கம் என்பது
  குறிப்பிட்ட
  சுற்றுச்சூழலின்
  பாதிப்பில் மட்டுமே
  நிலைபெறூகிறது'
  என்பதுதான். ஆக, வர்ணாஸ்ரம
  தர்மம் அறிவியலுடன்
  முரன்படும் இடம் இது.
  ஏனெனில் ஒவ்வொரு
  வர்ணத்திற்க்கும் ஒரு கடமை
  நிர்ணயித்த வேதம், அந்த
  வர்ணத்தை முடிவு செய்வது
  கடவுளாக இருப்பதாகத்தான்
  சொல்கிறதேயொழிய சுற்றுச்
  சூழலை சொல்லவில்லை.


  ////
  There are several scientific obstacles to correlating genotype (an
  individual's genetic endowment) and behavior. One problem is in
  defining a specific endpoint that characterizes a condition, be it
  schizophrenia or intelligence. Another problem is in identifying and
  excluding other possible causes of the condition, thereby permitting a
  determination of the significance of a supposed correlation. Much
  current research on genes and behavior also engenders very strong
  feelings because of the potential social and political consequences of
  accepting these supposed truths. Thus, more than any other aspect of
  genetics, discoveries in behavioral genetics should not be viewed as
  irrefutable until there has been substantial scientific corroboration.
  ///


  மேலும், ஒரு மரபணு அதனுடன்
  அடையாளப்படுத்தப்படும்
  பழக்க வழக்கம் இவற்றை
  இணைத்துப் பார்ப்பதில் பல
  சிக்கல்கள் உள்ளன.
  அதற்க்கடுத்த உள்ள்வை
  அவரவர் மொழிபெயர்த்து
  கொள்ளவும்...


  ஆக, மரபணு என்பது தகவல்களை
  சேகரித்து அடுத்த
  சந்ததிக்கு
  ப்ரப்புவதுதான் ஆயினும்
  அது வர்ணாஸ்ரமம் சொல்லும்
  அம்சத்தில் வரவில்லை.


  அசுரன்

 15. bala said...

  //இந்துக்கோயில்களின் இடத்தில் பெரியார் சிலைகளும்//

  வெளியே மிதக்கும் அய்யா,

  அய்யய்யோ..வேண்டாங்கய்யா.அப்புறம்இங்கு ,எம் ஆண்கள் கோவணத்தையும், எம் பெண்கள் தூரத்துணியையும் உலர்த்த ஆரம்பிப்பாங்க.எதுக்கு இந்த விபரீத பின் நவீன யோசனை?

  பாலா

 16. அசுரன் said...

  பின்னூட்ட காவாளீத்தனம்