யார் யாரைத் தூக்கில் போடலாம்?

புகழ்பெற்ற மராத்திய எழுத்தாளர் விஜய் தெண்டுல்கரிடம் ஒருமுறை ஒரு கேள்வி கேட்கப்பட்டது, " யாரையாவது எண்கவுண்டர் செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டால் யாரை என்கவுண்டர் செய்வீர்கள்?" என்று. அதற்கு தெண்டுல்கர் உடனே சொன்ன பதில். "நரேந்திரமோடியை". இப்போது அப்சாலைத் தூக்கில் போட்டே ஆக வேண்டுமென்று சிலர் அடம்பிடிக்கும் போது எனக்குத்தோன்றியது இதுதான். 'பாராளுமன்றம் என்னும் பைசா பிரயோசனமில்லாத ஒரு கட்டிடத்தில் இருந்த மக்கள் பிரதிநிதிகள் என்னும் ஜந்துக்களைக் கொல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அப்சாலைத் தூக்கில் போடலாம் என்றால் 3000 முஸ்லீம்களின் படுகொலைகளுக்குக் காரணமான நரேந்திரமோடியை சுட்டுத்தள்ளுவதில் என்ன தவறிருக்கமுடியும்?

எனக்குத் தமிழ்நாட்டில் யாரையாவது என்கவுண்டர் செய்ய அதிகாரம் கொடுத்தால் நான் சுடப்போவது எழுத்துலகப் பாசிஸ்ட் 'துக்ளக்' சோ.
அப்சாலைத் தூக்கிலிடுவது சரியென்றால் வேறு யார் யாரையெல்லாம் தூக்கிலிடலாம் என்று யோசித்தபோது....

1. கார்கிலில் இறந்தவர்களை அடக்கம் செய்ய சவப்பெட்டி வாங்கியதிலிருந்து இஸ்ரேலிடம் ஏவுகணை வாங்கியது வரை ஊழல் செய்துவிட்டு தேசபக்தி பற்றி லெக்சர் அடிக்கும் ஜார்ஜ்பெர்ணாண்டஸ், அடல்பிகாரிவாஜ்பேயி.

2. பாபர்மஜ்ஸித் என்னும் வரலாற்றுச் சின்னம் இடிபடுவதற்குக் காரணமாயிருந்த கடப்பாறைக் காதலன் அத்வானி.

3. அரசியல் தரகன் சூனாசாமி (சுப்பிரமணியசாமி)

4. மனிதனுக்குப் பிறந்ததாக ஒத்துக்கொள்ளாமல் "கோமாதா எங்கள் குலமாதா" என்று அடம்பிடிக்கும், "இந்துக்களின் கடையிலேயே பொருட்களை வாங்குங்கள்" என்று உளறிக்கொட்டி (பன்னாட்டு நிறுவனங்கள் இங்கே கடை விரித்து எல்லாவற்றையும் கபளீகரம் செய்யும்போது இந்து என்னடா, பொந்து என்னடா) ஆனால், மறந்தும் கூட "(தலித்துகளாகிய) இந்துக்களின் வீட்டிலேயே பெண் எடுங்கள்" என்று தூக்கத்தில்கூட உளறிவிடாத 'வீரத்தைத் துறந்த'(வீரத்துறவி?) ராமகோபாலன்.

5. காம சூத்திர லிபிகளை தன் எழுத்துகளில் பயன் படுத்துவதாலேயே பெரிய எழுத்தாளராகி விசிறி சாமியார், ஃபேன் சாமியார் என்று காமெடி அடித்து பலரைக் கெடுத்து வைத்திருக்கும் பாலகுமாரன்

6. விஞ்ஞானத்தையே மதத்தைப்போல கற்பிக்கும் சுஜாதா

7. காஷ்மீர் பிரச்சினை பற்றிய குறைந்தபட்ச அறிவுகூட இல்லாமல் 'ரோஜா' என்று படம் எடுப்பது, 'பம்பாய்' என்னும் முஸ்லீம் விரோதக்குப்பையை எடுத்து அதில் தமிழனை(" தமிழா தமிழா! நாளை நம் நாடே!) தேவையில்லாமல் அழைப்பது, 'பம்பாய்' படத்தில் 'துலுக்கன்' என்று வசனம் வைத்து 'கேரக்டர் வாய்ஸ்' என்று சப்பைக்கட்டு கட்டுவது, ஆனால் திராவிட இயக்கம் பற்றி ஒரு படம் எடுத்து அதில் 'பார்ப்பான்' என்ற வார்த்தை ஒரு இடத்திலும் கூட வராமல் கவனமாக பார்த்துக்கொள்வது, திராவிட இயக்க வரலாறே ஏதோ கருணாநிதி படுக்கையறைக்கும் எம்.ஜி.ஆர் படுக்கையறைக்கும் உள்ள தூரம்தான் என்று எத்துவாளித்தனம் செய்வது ஆகியவற்றைச் செய்துவரும் மணிரத்னம்.

8. இதுவரை ஒரே ஒரே கதையை மட்டுமே கைவசம் வைத்துக்கொண்டு கருடபுராணம், புருடாபுராணம் என்று ரீல் விட்டு சகலமும் பார்ப்பனீயத்தின் பக்கம் சாயும் பார்ப்பன அடிவருடி ஷங்கர்

9. 97% பார்ப்பனரல்லாத மக்களின் வாக்குகளை வாங்கிக் கொண்டு சட்டசபையில் அமர்ந்து " நான் ஒரு பாப்பாத்திதான்" என்று வாய்க்கொழுப்பெடுத்துப் பேசிய பார்ப்பன பாசிஸ்ட் ஜெயலலிதா....
இன்னும் நீங்களும் எழுதலாம்

(பின்குறிப்பு : எனக்கு உண்மையில் இந்த பதிவில் விருப்பமில்லை. நான் மரணதண்டனையை முற்றிலுமாக எதிர்க்கிறேன். என்னைப் பொறுத்தவரை பகத்சிங்குக்கு மரணதண்டனை கூடாதென்றால் கோட்சேக்கும் மரணதண்டனை கூடாதென்பதுதான். ஆனால் அப்சலைத் தூக்கில் போட வேண்டுமென்ற பார்ப்பனர்கள் மற்றும் ஜெய்ஹிவ்ந்த் தாசர்களின் தொல்லை தாங்கமுடியவில்லை. என்ன செய்வது? தோழர் மாவோவின் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன, " மரங்கள் ஓய்வெடுக்க நினைத்தாலும் காற்று விடுவதில்லை")

14 உரையாட வந்தவர்கள்:

 1. kulakkodan said...

  X CM JJ

 2. வாசகன் said...

  இப்படியெல்லாம் எழுதுவது 'தேசத் துரோகம்'. தெரியுமா உங்களுக்கு?

  கன்னியாஸ்திரிகளை கற்பழித்தவர்களையும் 'தாரா சிங்குகளையும்' தேசபக்தனாகப் பார்த்தவர்கள் நாம்.

 3. ╬அதி. அழகு╬ said...

  உங்களுக்குப் பொதுப்புத்தி இல்லை என்பது சர்வ நிச்சயம்!

 4. வஜ்ரா said...

  //
  உங்களுக்குப் பொதுப்புத்தி இல்லை என்பது சர்வ நிச்சயம்!
  //

  பொதுவா புத்தியே இல்லை என்பதைச் சொல்கிறீர்கள் என்றால் சரி.

 5. அறிவுடைநம்பி said...

  உங்கள் பட்டியலில் உள்ளவர்களெல்லாம் பார்ப்பண (தேச)பக்தர்கள். பார்த்து எழுதுங்க சாமி உங்களையும் தூக்கில் போட யாராச்சும் தேசபக்தர் பட்வா கொடுத்திடப்போறார்.

 6. nagoreismail said...

  ஒரு கூட்டம் உள்ளது, அது தனது மதத்தை சார்ந்த சக நம்பிக்கையாளர்களையே மிருகத்தை விட கேவலமாக மதித்து விட்டு ஆட்டையும் மாட்டையும் வணங்க சொல்லி அடிமைப்படுத்தியது, எழவு வீட்டுலேயே பொண்ணு கையை புடித்து இழுத்தவன் கல்யாண வீட்டில் கண்டால் சும்மா இருப்பானா என்ற கதையாக தனது மதத்தை சார்ந்தவர்களையே மதிக்க தெரியாதவன் இன்னொரு மதத்தை சார்ந்தவனை சும்மா விட்டு வைப்பானா? இந்த கூட்டம் இருக்கே மகா தரம் கெட்ட கூட்டம், உணர்ச்சிகளை தூண்டி விட்டு அடுத்தவனை கொதிக்க வைத்து விட்டு அவன் ஆவேசப்படும் போது அவனை தீவிரவாதியாக்கி விடுவார்கள், தீவிரவாதிகளை உற்பத்தி செய்பவர்கள் இவர்கள் தான், இவர்கள் ஒழிந்தால் அல்லது திருந்தினால் நாடு சுகம் பெறும், இந்து முஸ்லீம் என்றெல்லாம் பாராமல் ஒரு தாய் பிள்ளையாக பழகியவர்களை மதங்களை நாட்டுப் பற்றுடன் இணைத்து பிரித்து நாசப்படுத்தும் இந்த கூட்டத்தில் உள்ளவர்களை தூக்கில் போட்டு விட்டு அஃப்ஸலை தூக்கிலிடலாம், அருமையான பதிவு, நல்வாழ்த்துக்கள்,
  நாகூர் இஸ்மாயில்

 7. bala said...

  //திராவிட இயக்க வரலாறே ஏதோ கருணாநிதி படுக்கையறைக்கும் எம்.ஜி.ஆர் படுக்கையறைக்கும் உள்ள தூரம்தான் என்று எத்துவாளித்தனம் செய்வது ஆகியவற்றைச் செய்துவரும் மணிரத்னம்.//

  மிதக்கும் வெளி அய்யா,

  நல்லாவே யோசிச்சு ஒரு லிஸ்ட் தயார் செஞ்சுட்டீங்க..ஒரு சின்ன யோசன..கோபப்படாம கேட்டீங்கன்னா உங்களுக்கு நல்லது.

  சட்டீஸ்கர் பக்கம் போனீங்கன்னா உங்களை மாதிரி துடிப்புள்ளவர்களுக்கு,கையிலே துப்பாக்கியும் கொடுத்து வேலையும் போட்டு கொடுக்கறாங்களாம்..நீங்களும் விதம், விதமா லிஸ்ட் போட்டு தொழில் செய்யலாம்.

  கூடவே, ஒத்தாசைக்கு நாகூர் இஸ்மாயில் அய்யாவையும் கூட்டிகிட்டு போங்க..உங்களுக்கு நல்லாவே ஜால்ரா அடிக்கராரு..அவருக்கும் ஒரு எடுபிடி வேலை போட்டு தருவாங்க.

  பாலா

 8. - யெஸ்.பாலபாரதி said...

  //எனக்கு உண்மையில் இந்த பதிவில் விருப்பமில்லை.//
  அப்புறம் எதுக்கு சாமீ போட்டீங்க?

  // நான் மரணதண்டனையை முற்றிலுமாக எதிர்க்கிறேன். என்னைப் பொறுத்தவரை பகத்சிங்குக்கு மரணதண்டனை கூடாதென்றால் கோட்சேக்கும் மரணதண்டனை கூடாதென்பதுதான்.//

  அதைத்தான் நானும் சொல்லுதேன். ஆனா ஒரு பயலும் கேட்க மாட்டேங்கிறானே..
  அப்சல் மாட்டினா அது இஸ்சுலாமிய தீவிரவாதம்.
  ராக்கேட்"ரகு"வோ, தாராசிங்கோ சிக்குனா அவன் வெறும் தீவிரவாதி(இப்படி சொன்னக்கூட அடிக்க வருவானுங்க)!

 9. Anonymous said...

  இல்லை பாலா ஐயா அவர்களே நான் இப்பொழுது அல்லாஹ்வின் உதவியால் நல்ல வேலையில் இருக்கிறேன், உங்களுக்கு ஆசை இருந்தால் நீங்கள் போய் சேருங்களேன், அங்கே யாருக்கோ இடது கை இல்லையாம்
  nagoreismail

 10. Anonymous said...

  இல்லை பாலா ஐயா அவர்களே நான் இப்பொழுது அல்லாஹ்வின் உதவியால் நல்ல வேலையில் இருக்கிறேன், உங்களுக்கு ஆசை இருந்தால் நீங்கள் போய் சேருங்களேன், அங்கே யாருக்கோ இடது கை இல்லையாம்
  nagoreismail

 11. bala said...

  //உங்களுக்கு ஆசை இருந்தால் நீங்கள் போய் சேருங்களேன்//

  இல்லை நாகூர் அய்யா. காலியாக இருப்பது மிதக்கும் வெளி அவர்களுக்கு ஜால்ரா அடிக்கும் வேலை. அந்த skill set எனக்கு இல்லை..என்ன செய்வது..ஒட்டு மொத்தமாக உங்களுக்கு தான் வோட்டு.

  பாலா

 12. சரண் said...

  இன்னும் பலரை விட்டுவிட்டீர்களே நண்பரே...லிஸ்ட் பெருசு தெரியுமோ?

 13. BadNewsIndia said...

  என்னய்யா சுகுணாதிவாகர்,

  என்னத்துக்காக இப்படி எல்லாம் எழுதறீங்க?
  சும்மா விளையாட்டுக்காகவா?

  நல்ல விஷயங்கள் எழுதுங்கப்பா.

 14. Anonymous said...

  வாழிய பாரதம் வாழிய எழுத்து சுதந்திரம்...
  உங்களை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு..........................................