உலகின் புதிய கடவுளுக்கு ஒரு கடவுள்மறுப்பாளனின் கடிதம்

அன்பு நண்பர் செல்வனுக்கு

சமீபத்தில் சமணமுனிவர்களுக்கு எதிரான பெரியார் திராவிடர்கழகத்தினரின் போராட்டத்தைப் பற்றியும் பெரியார் ஜெர்மனியில் நிர்வாணமாக நின்றதைக்குறித்து எழுந்த சர்ச்சைகள் குறித்தும் வாசிக்க நேர்ந்தது. ரோசாவசந்த், திராவிடத்தமிழர்கள், செல்வன் ஆகியோரின் பதிவுகளில் என்னால் செல்வனின் பதிவை மட்டுமே படிக்கமுடிந்தது. அது குறித்து ஒரு சில பகிர்வுகள்...
சமணமுனிவர்கள் விவகாரத்தில் பெரியார் தி.க தோழர்கள் நடந்துகொண்டது முற்றிலும் தவறானதே. பெரியார் நிர்வாணமாக தெருவிலே நின்றாரா, அல்லது தெருவோரத்திலே நின்றாரா என்பது கேள்வியல்ல.பெரியார் ஜெர்மனியில் நிர்வாணச்சங்கத்தில் கையெழுத்திட்டு உறுப்பினரானார். அது மட்டுமல்ல, ஜெர்மனியிலும் சோவியத்ரஷ்யாவிலும் அவர் இருந்தகாலங்களில் பூர்ஷ்வாக்குழுக்கள், தாராளவாதக்குழுக்கள், அனார்கிஸ்ட்கள், டிராட்ஸ்கியக்குழுக்கள் எனப் பல குழுக்களையும் சந்தித்துப்பேசினார். டிராட்ஸ்கியக்குழுக்களோடு தொடர்பு இருந்தததாலேயே பெரியார் சோவியத்யூனியனை விட்டு வெளியேற்றப்படுகிறார். இது எதைக்காட்டுகிறதென்றால், புதிய சிந்தனைகளையும் போக்குகளையும் கற்றுக்கொள்கிற, வரவேற்கிற தன்மை பெரியாரிடம் இருந்தது என்பதையே. இத்தகைய போக்குகள் தமிழில் அருகி வருகின்றன என்பது வருந்தத்தகக்கது

தீவீரப்பெண்ணியம்(radical feminism) மேற்கில் எழுந்தபோது பெண்ணிய ஓவியர்கள் தங்கள் நிர்வாணத்தை வரைய ஆரம்பித்தார்கள். அவர்களை என்ன செய்யலாம்? வெளிப்படையாக பாலியல் குறித்து எழுதும் நம் பெண்கவிஞர்களை சினிமாக்கவிஞர் சினேகன் சொன்னதைப் போல "சென்னை அண்ணாசாலையில் வைத்துக்கொளுத்திவிடலாமா?"

மேலும் பெரியார் நிர்வாணமாக நின்றது ரமேஷ்-பிரேம் சொல்வதைப் போல வெறுமனே துறவுநிலை மட்டுமல்ல, அது உடலின் கொண்டாட்டத்தை வலியுறுத்துவது.

பொதுவாகவே மதம் உள்ளிட்ட ஆதிக்க நிறுவனங்கள் உடலை ஒடுக்கவே சொல்கின்றன. ஒருபுறம் பெண்களை போகப்பொருளாகக் கற்பிக்கும் இந்துமதம் மறுபுறம் பெண்ணுடலை விலக்கிவைக்க வேண்டியதாகவே கருதுகிறது. சுத்தம் x அசுத்தம் என்று கட்டமைக்கப்பட்ட எதிர்வுகளிலிருந்தே தீண்டாமை கற்பிக்கப்பட்டது. தீட்டு, அசுத்தம் என்று பெண்கள் விலக்கி வைக்கப்படுவது குறித்து கொஞ்சம் யோசியுங்கள். இழிவான தொழிலை செய்ய பணிக்கப்பட்டதாலேயே அசுத்தம், தீட்டு என்று தலித்துகள் கோயிலிலிருந்து விலக்கிவைக்கப்பட்டதைப்போலவே பெண்ணுடலும் மாதவிடாயைக் காரணம் காட்டி கருவறையிலிருந்து விலக்கப்பட்டது. இப்படியாக பெண்காமம் வெளியே சொல்லத்தகாதது என்று சொல்லப்படுவது வரை இதை நீட்டித்துக்கொள்ளலாம்.

இப்படியாக அதிகாரமும் ஒடுக்குமுறையும் உடலை ஒடுக்குதல், உடலை இழிவாகக் கருதுதல், உடல் பற்றிப் பேசாதிருத்தல் ஆகியவற்றை முன்வைத்தால் விடுதலையைப் பேசும் உடல் அரசியல் (body politics) நிர்வாணம், உடல் பற்றிப்பேசுதல், உடலைக்கொண்டாடுதல் ஆகியவற்றை முன்வைக்கிறது. இத்தகைய புரிதல்களின் அடிப்படையில் அணுகும்போதுதான் பெரியாரின் நிர்வாணத்தைப் புரிந்ந்துகொள்ளமுடியும். தீவிரப்பெண்ணிய ஓவியர்களின் ஓவியங்களும் அத்தகையதே.

மறுபுறம் சமணமுனிவர்களின் நிர்வாணத்தையும் நாம் பெரியளவில் கொண்டாட முடியாது. ஏனெனில் உடலை ஒடுக்குவதில் அவர்களை யாரும் மிஞ்சமுடியாது. சமணர்களின் இத்தகைய போக்குகளை விரிவாகக் கிண்டலடித்திருப்பார் ஓஷோ. (பிறப்பின் அடிபப்டையில் ஓஷோவும் ஒரு சமணர்தான்) " காந்திதான் உலகின் மிகப்பெரிய வன்முறையாளர். தன் உடலின் மீது அவரளவுக்கு யாரும் வன்முறை செலுத்தியதில்லை" என்பார் ஓஷோ. பெரியாரும் உடலை வருத்தும் போராட்ட வடிவங்களை நிராகரித்தார். "சத்தியாக்கிரகம் சவுண்டித்தனம், உண்ணாவிரதம் முட்டாள்தனம் " என்பது அவரது கருத்து. (ஓஷோவுக்கும் பெரியாருக்கும் உள்ள ஒப்புமைகளைப் பற்ரி விரிவாகவே ஆராயலாம். நான் ஒரே ஒரு கட்டுரை மட்டுமே எழுதியிருக்கிறேன்.) உடல் மீதான கடுமையான ஒடுக்குமுறையும் சமணம் அழிவதற்கான காரணங்களில் ஒன்று. மேலும் சமணம் பெண்களை முக்திக்குரியவர்களாக ஏற்றுக்கொள்ளவேயில்லை. முக்தி என்பது என்ன, நிர்வாணம்தானே. எனவே பெண்கள் நிர்வாணத்திற்கு அனுமதிக்கப் படவில்லை. எனவே நண்பர் ஒருவர் கேட்டதற்குப் பதில் கவுந்தி அடிகள் நிர்வாணமாய் இருந்திருக்க வாய்ப்பில்லை என்பதுதான்.

தேவையற்ற விவகாரங்களுக்குப் போய்விட்டேன் என்று கருதுகிறேன். பெரியார் தி.கவின் நிலைப்பாடு முற்றிலும் தவறானதுதான். பெரியாரின் நிர்வாணம் சரியெனில் சமண முனிவர்களின் நிர்வாணமும் சரிதான்.

ஆனால் இதைச் சாக்காக வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த பெரியாரிஸ்ட்களையும் பெரியார் இயக்கங்களையும் வசைபாடுவது கண்டிக்கத்தக்கது. (ஒருவர் தி.க முண்டங்கள் என்று உங்கள் பின்னூட்டத்தில் திட்டியிருந்தார்). அதிலும் பெரியார் தி.க விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் ஒரு சனநாயக ரீதியான அமைப்பு. குஷ்பு விவகாரத்தில் முழுக்க முழுக்க குஷ்புவுக்கு ஆதரவாக நின்ற ஒரு இயக்கம். இந்த மாதிரியான விவகாரங்களை பார்ப்பனர்கள் மிகச்சாமர்த்தியமாக தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளுகிறார்கள். உதாரணமாக இந்த சமண முனிவர்கள் விவகாரத்திலேயே பெரியார்தி.கவைக் கடுமையாக விமர்சித்து தனது தலையங்கத்திலே எழுதிய காலச்சுவடு என்னும் இதழின் ஆசிரியர் கண்ணன் ஒரு பார்ப்பனர், மட்டுமல்ல முன்னாள் ஏ.பி.வி.பி உறுப்பினரும் கூட.

இதே பெரியார் ஜெர்மனியில் நிர்வாணமாக நின்றதையும் அவர் மைனராக இருந்தபோது வேசி வீடுகளுகளுக்குச் சென்றதையும் இணைத்து "பெரியார் ஒரு பொம்பளைப்பொறுக்கி" என்று ரவிக்குமார் என்ற தலித் எழுத்தாளரை ஒரு கட்டுரை எழுதவைத்து வெளியிட்டு தன் பார்ப்பன மன வக்கிரங்களைத் தணித்துக்கொண்டார். எனவே இந்த மாதிரியான ஆசாமிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். பெரியார் பற்றி வலைத்தளங்களில் படித்தே தெரிந்து கொண்டதாக எழுதியிருந்தீர்கள். நேரடியாக பிரதியைத் தேடிப்பிடித்து வாசிப்பதே நல்லது. திரிபுகளே நிஜமென உலவும் காலமிது.

1 உரையாட வந்தவர்கள்:

  1. ச.சங்கர் said...

    """அப்புறம் அவர்களை விழுந்து விழுந்து ஆதரிக்கும் பார்ப்பனர்களின் வீட்டில் குழந்தைகள் பிறப்பதற்கு மட்டும் பாகிஸ்தானைக் காரணமாகச் சொல்லவில்லை.""""

    சரியாகச் சொன்னீர்கள் மிதக்கும் வெளி ...ஏனெனில் அவர்கள் வீட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு அவர்களே காரணம்..அதில் அவர்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை...அதனால்தான்....

    ஒருவேளை இதைப்பர்றி ரொம்ப வருத்தப்படும் ""உங்கள்"" வீட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு பாகிஸ்தான் காரணமா என்ற உங்களுடைய நிரந்தர சந்தேகத்தை இப்படி சொல்லி தீர்த்துக் கொள்கிறீர்களோ ?

    இது நல்லடியார் பதிவில் உங்களது பின்னூட்டத்துக்கு பதில்...படித்து மகிழ்ந்து கொள்ளவும்