பிளாக்கர்களுக்குப் பிடித்த திரைப்படங்கள்
வரவணையான் : ஆட்டோகிராப்
( இந்த படத்தின் கதாநாயகனின் பெயரும் செந்தில்தான். மேலும் அப்பாவின் கையெழுத்தை பிராக்ரஸ்ரிப்போர்ட்டில் போடுவது, சின்ன வயசிலேயே காதலித்து கெட்டுப்போவது, தண்ணியடிப்பது, தம்மடிப்பது என்று சகல கல்யாணகுணங்களும் நிரம்பியிருப்பது போன்றவை உபகாரணங்கள். மேலும் செந்திலுக்குப் பிடித்த தமிழ்சினிமா வசனங்களில் ஒன்று " எங்க தமிழ்ப்பெண்கள் மூக்கு குத்தும் அழகே தனி"( வசனத்தின் பின்பகுதி செந்திலுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்))
முத்துதமிழினி : நாட்டாமை (சிலபல பஞ்சாயத்துகளைச் செய்துவருவதால்..)
அசுரன் : நான் சிவப்பு மனிதன்
லிவிங்ஸ்மைல் : ஆறு (சமீபத்தில் வந்த தமிழ்ப்படங்களிலேயே இந்த படத்தில்தான் அதிகமான கெட்டவார்த்தைகள் இருந்ததாகச் சொல்கிறார்கள். (சும்மா ஒரு ஜாலிக்குத்தான், கோபப்பட்டு என்னை are you a .. என்றெல்லாம் கெட்டவார்த்தையில் திட்டிவிடாதீர்கள்)
we the people : பாரதவிலாஸ்
இட்லிவடை ; ஜெமினிகணேசன் படங்கள் அனைத்தும்
ஞானவெட்டியான் : பட்டினத்தார் ( படம் ஆரம்பிப்பதற்கு முன்பு அரைமணி நேரம் 'பிரபுலிங்கலீலை' பற்றி நியூஸ் ரீல் ஓட்டப்படும்)
ஈழபாரதி : தர்மயுத்தம்
வஜ்ரா, கால்கரிசிவா, சமுத்ரா : ராம், ஹேராம், இந்து, கோவில், சாமி, தூரத்து 'இடி'முழக்கம்
ஜெயராமன் : அய்யர் தி கிரேட்
டோண்டு ராகவன் : நான் அவனில்லை
விடாதுகருப்பு : திராவிடன், தமிழன்
குழலி ; அய்யா, மறுமலர்ச்சி
அன்பு திவாகர்,
//ஞானவெட்டியான் : பட்டினத்தார் ( படம் ஆரம்பிப்பதற்கு முன்பு அரைமணி நேரம் 'பிரபுலிங்கலீலை' பற்றி நியூஸ் ரீல் ஓட்டப்படும்)//
மிக்க நன்றி.
சிறுவயதில் நான் பட்டினத்தார்போல் இல்லை!!!
//we the people : பாரதவிலாஸ்//
என்னடா இது எல்லா பதிவர்களும் நம்மள ரவுண்டு கட்ட ஆரம்பிச்சுட்டாங்க??!!! ஏன்??
//குழலி ; அய்யா, மறுமலர்ச்சி//
அய்யா புரியுது :-) அது என்னங்க மறுமலர்ச்சி? வைகோவை இப்பவெல்லாம் ஆதரிப்பதில்லையே?
அடப்பாவி மக்கா நாசமாப்போக... மறுமலர்ச்சியில் உள்குத்தா சே... சே...
அது என்ன மறுமலர்ச்சி உள்குத்து?! சொல்லித் தொலையுமய்யா.
எனக்குப் போட்டியாக களம் இறங்கி இருக்கும் உங்களைத் தேடி ஆட்டோ வருகிறது.
:-)))))))
(நான் யோசிச்சு வச்சிருந்ததை போட்டு கிலி கொடுத்துட்டீரே, இனி புதுசா யோசிக்கனுமா?)
:-((((
அன்பு சுகுணா திவாகர்,
//மேலும் செந்திலுக்குப் பிடித்த தமிழ்சினிமா வசனங்களில் ஒன்று " எங்க தமிழ்ப்பெண்கள் மூக்கு குத்தும் அழகே தனி"( வசனத்தின் பின்பகுதி செந்திலுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்)//
அந்த ரகசியம்.,எனக்கும் கூடத்தெரியும்.
" கேரளா.........அழகே தனி"
செந்"தில்" என்னிடம் கூட கூறி விட்டார்.
செந்"தில்" ரசிகர் மன்ற ரசிகர்.
த.சேசுராஜா.தூத்துக்குடி.