ஞாநியின் வக்கிரம்

எழுத்தாளர் ஞாநி விகடன் இதழில் தமிழகமுதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் உடல்நிலை குறித்து எழுதிய கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. கருணாநிதி முதுமையின் இயலாமையாலும் தள்ளாமையாலும் அவதிப்படுகிறார் என்றும் அவர் முதல்வர் பொறுப்பை விட்டு விலகவேண்டுமென்னும் ரீதியிலும் எழுதியிருக்கிறார்.

நான்குபக்கங்களுக்கு நீளும் அக்கட்டுரை மேலோட்டமாக கரிசனமும் அக்கறையும் கொண்டதாகத் தோன்றினாலும் அதன் அடியாழத்தில் தன் வக்கிரத்தைக் காட்டிப் பல்லிளிக்கிறது. கருணாநிதியின் முதுமை குறித்து முழுநீளத்திற்கு விவரித்திருக்கிறார். கருணாநிதி 'ஒண்ணுக்குக்கு போக முடியாமல் வேட்டியை ஈரமாக்கிக்கொண்டார்' என்று ஞானி எழுதுகிறார். இது 'சமீபத்தில் கேட்ட வீடீயோகாட்சியில் பதிவான உரையாடல்' என்கிறார். அது என்ன வீடியோகாட்சி என்பதைக் குறிப்பிடவில்லை. எந்த ஆதாரமும் காட்டாமல் போகிற போக்கில் மனவிகாரத்தைக் கொட்டிவிட்டுப்போவதுதான் ஒரு எழுத்தாளருக்கு அழகா?

கருணாநிதியின் உடல்நிலை குறித்துக் கவலைப்படவேண்டியவர்கள் கருணாநிதியும் அவர் குடும்பத்தாரும் அவர் கட்சிக்காரர்களும்தானே தவிர ஞானியோ நாமோ அல்ல. இப்படித்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு எழுத்தாளர் ரவிக்குமார் 'கருணாநிதிக்குப் பிறகு திமுகவின் தலைமைப் பொறுப்பிற்கு யார் வரவேண்டும்' என்று எழுதியிருந்தார்.

இந்த அக்கறையெல்லாம் அறிவுஜீவிகளுக்கு எதற்கு? வயதானாலேயே ஒருவர் பொதுவாழ்க்கையில் ஈடுபடமுடியாதென்றால் காந்தி என்ன செய்தார்? பெரியார் மூத்திரப்பையைச் சுமந்துகொண்டு நாலுபேர் தூக்கிவந்து மேடையில் அமர்த்தித்தான் பேசினார். பெரியாரின் செயல்பாடுகளையும் கருணாநிதியின் செயல்பாடுகளையும் ஒப்பிடமுடியாதென்றாலும் வயதுமுதுமையைக் காரணம் காட்டியே ஒருவரது பொதுவாழ்க்கையை நிராகரித்துவிட முடியாது என்பதற்காகவே இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது.

ஞாநி ஒரு பார்ப்பனர் என்பதாலேயே அவரது கருத்துக்களைப் புறந்தள்ளவேண்டுமென்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. ஜெயேந்திரன் விவகாரத்திலும் குஷ்பு பிரச்சினையிலும் அவரது நிலைப்பாடுகள் நேர்மையானவையாகவும் உறுதிமிக்கவையாகவுமிருந்தன. ஆனால் அவர் சமீபகாலமாக ஜெயலலிதாவை விடவும் கருணாநிதியை மட்டுமே அதிகம் விமர்சிக்கிறார் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது.

கருணாநிதிக்குச் சொன்ன அறிவுரையை ஞாநி ஏன் அடேல்பிகாரி வாஜ்பேயிக்கும் சங்கர்தயாள்சர்மாவிற்கும் சொல்லவில்லை என்று கேள்வியெழுப்புவது தவிர்க்கவியலாதது.

22 உரையாட வந்தவர்கள்:

  1. Anonymous said...

    I did read that.but I dint see anything like what you have mentioned.how come we,ppl of tamilnadu should not bother about this issue.He is a CM and each and every activities of a CM will affect the induviduals in TN.
    He is a CM for the state.so each one of should think about it,not only his family members.
    He suggest,Stalin can takeover Harunanidhi's position so that,he will get time to take rest and concentrate on his party related activities,writings etc.
    am totally agree with that article.

  2. ரவி said...

    good shot !!!!!!!

  3. ஸ்ரீ சரவணகுமார் said...

    படிக்க ஆரம்பித்தவுடன் அசந்து விட்டேன்
    என்னடா இவ்வளவு நாளாக கலைஞரை திட்டிக் கொண்டிருந்த ஞானிக்கு இப்போது கலைஞர் மீது அக்கறை வந்தது எப்படி என்று பிரமித்தேன்
    படித்து முடித்த பிறகு தான் தெரிந்தது ஞானியின் வக்கிரம்

  4. ROSAVASANTH said...

    ரவி ஸ்ரீனிவாஸ் விழுந்த அதே குழியில் விழ ஞாநியும் தயாரகிக் கொண்டிருக்கிறாரோ என்று எனக்கு வெகு நாட்களாகவே தோன்றிக் கொண்டிருக்கிறது. ஜெயா டீவியில் அவர் வெகு நாட்களுக்கு முன்பு அளித்த பேட்டியை கண்ட போதிலிருந்து எழுந்த சந்தேகம் இது.

    கண்ணகி விஷயத்தில் ஞாநியின் (நாமும் பாதுகாக்க வேண்டிய) கருத்துக்களுக்காக அவர் தாக்கப் பட்ட விதம் மோசமானது; குறிப்பாக அந்த விஷயத்தில் அவரது பார்பனியம் எதுவும் வெளிப்படவில்லை. ஆனால் தேவர்ஜாதி வெறியர்களால் (குறிப்பாக ஆனாரூனா போன்றவர்களால்) அவர் பாப்பான் என்று தாக்கப் பட்டார். இவை அவரை ஒரு வீம்பு கொண்ட எரிச்சலில், திமுக வெறுப்பு சார்ந்த இந்த நிலைபாட்டிற்கு தள்ளியிருக்கலாம். ஆனால் இப்படிப்ப்பட்ட குழியில் விழாதவனைத்தான் அறிவுஜீவி என்று சொல்ல முடியும். விழுந்தது மட்டுமில்லாமல், விழுந்த பின்பு அடிமனதில் மறந்து போன அல்லது தனக்குத்தானே மறைத்துக் கொண்டிருந்த கசடுகளை வக்கிரத்துடன் வெளியிடுவதுதான் இதன் மோசமான கட்டம். ரவிக்கு நேர்ந்தது அதுதான் (இன்றைக்கும் ரவி ஸ்ரீனிவாசின் நிலைபாடுகளை கண்டு ஆச்சரியப் படுபவர்களை கண்டுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.) ரவியின் நிலைக்கு ஞாநியும் விழுந்தால் எனக்கு ஆச்சரியப் பட பெரிதாய் இருக்காது; ஜாதியை மீறி செயல்பட முடியும் என்பதற்கு பார்பனர்களில் உதாரணங்கள் காட்டமுடியும் என்ற எண்ணத்திற்கான ஆதாரம் பலவீனமாவது மட்டும் கொஞ்சம் வருத்தமாக இருக்கும்.

  5. கோவி.கண்ணன் said...

    //கருணாநிதிக்குச் சொன்ன அறிவுரையை ஞாநி ஏன் அடேல்பிகாரி வாஜ்பேயிக்கும் சங்கர்தயாள்சர்மாவிற்கும் சொல்லவில்லை என்று கேள்வியெழுப்புவது தவிர்க்கவியலாதது.//

    சுகுணா பஞ்ச் !!!!!
    அது.......!

  6. முரளிகண்ணன் said...

    \\அவர் சமீபகாலமாக ஜெயலலிதாவை விடவும் கருணாநிதியை மட்டுமே அதிகம் விமர்சிக்கிறார் \\
    yes.

  7. உடன்பிறப்பு said...

    //கருணாநிதிக்குச் சொன்ன அறிவுரையை ஞாநி ஏன் அடேல்பிகாரி வாஜ்பேயிக்கும் சங்கர்தயாள்சர்மாவிற்கும் சொல்லவில்லை என்று கேள்வியெழுப்புவது தவிர்க்கவியலாதது//

    ஏன்னா அவா எல்லாம் ஒரே இனம் அதனால ஞானி அவாளை பார்த்து அப்படி எல்லாம் கேட்க முடியாது

  8. மணிமகன் said...

    suguna super comment.

  9. மிதக்கும்வெளி said...

    நண்பன் மோகன்,

    கருணாநிதி ஒரு முதல்வர் என்பதால் அவரது முதுமை குறித்தும் இயலாமை குறித்தும் விமர்சிக்க அனைவருக்கும் உரிமை இருக்கலாம். ஆனால் அந்த இயலாமையால் அவரது நிர்வாகத்தில் என்ன குறைபாடுகள் நேர்ந்தன என்பதைச் சுட்டிக்காட்டி விமர்சிக்கலாம். ஆனால் போகிற போக்கில் 'ஒத்திப்போ பெரிசு' என்று சொல்வது எவ்விதத்திலும் நியாயமாகாது. மேலும் கருணாநிதிக்கு மட்டும்தான் இந்த அளவுகோலா?

  10. மிதக்கும்வெளி said...

    /ரவியின் நிலைக்கு ஞாநியும் விழுந்தால் எனக்கு ஆச்சரியப் பட பெரிதாய் இருக்காது; ஜாதியை மீறி செயல்பட முடியும் என்பதற்கு பார்பனர்களில் உதாரணங்கள் காட்டமுடியும் என்ற எண்ணத்திற்கான ஆதாரம் பலவீனமாவது மட்டும் கொஞ்சம் வருத்தமாக இருக்கும்.
    /

    ஞாநி தன்னைத்தானே சுயவிசாரணை செய்துகொள்ள இது உகந்தநேரமென்று கருதுகிறேன்.

  11. Anonymous said...

    ஞாநி கலைஞரை ஒய்வெடுத்துக் கொள்ளுங்கள், ஸ்டாலின் முதல்வராகட்டும் என்றுதானே சொல்கிறார். பெரியார் அரசுப் பொருப்பில் இல்லை, அதனால் பல நிர்ப்பந்தங்கள் அவருக்கு
    இல்லை.கலைஞருக்கு அப்படியல்ல.கட்சி, ஆட்சி என்று இரண்டையும் சுமக்கிறார்.ஞாநி சொல்லிய விதம் தவறாக இருக்கலாம், அவரது உணர்வுகள் உண்மையான அக்கறையினால் எழுபவை.
    வாஜ்பேயி அரசை ஞாநி எந்த அளவிற்கு விமர்சித்திருக்கிறார் என்பதையும் பாருங்கள். பெரியார் குறித்து தூர்தர்ஷனுக்கு தொடர் எடுத்து பணம் நட்டமடைந்தவர், வி.பி.சிங்,கலைஞர் கூட்டணியை 1989,1991ல் ஆதரித்தவர், தொடர்ந்து பாஜக, இந்த்துவ அமைப்புகளை எதிர்ப்பவர் என்று பலவகைகளில் அவர் தன்னை வெளிப்படுத்திக்
    கொண்டுள்ளார்.அண்ணவின் நாடகங்களை அரங்கேற்றியவர், பெரியார் குறித்து நேர்மரையான
    கருத்துக்களை சொல்பவர், இடதுசாரி கட்சிகள்,அமைப்புகளுக்கு ஆதரவு தருபவர், கலியபெருமாளை பேட்டி கண்டு எழுதியவர் என்பதையும் கருத்தில் கொண்டால் , நிதானமாக சிந்தித்தால் வேறு விதமான புரிதல் கிடைக்கும். இட ஒதுக்கீட்டில் அவர் திமுகவை ஆதரிக்கிறார். அவர் திராவிட இயக்கங்களின் விரோதி அல்ல, விமர்சகர் என்று சொல்லலாம். விமர்சகர்களை விரோதியாகப் பார்க்கும் உட்னபிறப்புகளுக்கு இது புரியுமா.

  12. Anonymous said...

    "ஜாதியை மீறி செயல்பட முடியும் என்பதற்கு பார்பனர்களில் உதாரணங்கள் காட்டமுடியும் என்ற எண்ணத்திற்கான ஆதாரம் பலவீனமாவது மட்டும் கொஞ்சம் வருத்தமாக இருக்கும்."

    ஜாதி புத்தி குறித்த சண்டைகள் இப்போதுதான் ஒய்ந்தன எனேஉ நினைத்தேன்.அப்படி இல்லை போலும்

  13. dondu(#11168674346665545885) said...

    எனது இப்பதிவில் உங்கள் பெயரில் ஒருவர் அனானியாகப் பின்னூட்டமிட்டார். பார்க்க: அவருக்கு நான் எனது அப்பதிவில் இட்ட பதில் இதோ:

    நண்பர் மிதக்கும் வெளியின் பெயரில் வந்திருக்கும் அனானி நண்பரே,

    வாஜ்பேயியோ அல்லது காலம் சென்ற சங்கர் தயாள் சர்மாவோ இங்கு எங்கே வருகின்றனர்? இப்போது பார்வையில் இருப்பவர் கருணாநிதி அவர்கள் மட்டுமே. மேலும் அவரைப் பற்றி ஞானி கூறியது ரசிக்க இயலாத அறிவுரை என்று நான் ஏற்கனவே கூறிவிட்டேன். வயது முடியாமல் இருப்பவரை பற்றி அவ்வாறு எழுதுவது எனக்கும் உடன்பாடில்லைதான்.

    திமுக இப்போது இருக்கும் நிலையில் அவர்களுக்கு கருணாநிதியை விட்டால் வேறு வழியில்லை. தனது கடைசி மூச்சு வரை உழைக்கும் மனவுறுதி படைத்தவர் கருணாநிதி.

    ஆனால் அதே கருணாநிதி எம்ஜிஆர் பற்றி 1984-ல் கூறியதும் ரசனைக் குறைவான விஷயமே அதுதான் இப்பதிவின் முக்கிய இழை.

    மற்றப்படி இப்போதுதான் ஞானி பார்ப்பனராக இருப்பது எல்லோர் ஞாபகத்துக்கும் வந்துள்ளது என்பது ஒரு நகை முரணே. ஞானி போன்றவர்களுக்காக நான் இட்டதுதான் எல்லோரையும் கோபமூட்டிய அப்பதிவு சுயமரியாதையுடன் பார்ப்பனரை இருக்கச் சொல்வதற்காக போட்டதாகும். மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்பதற்காக தனது பார்ப்பன சாதியையே இழிவாகப் பேசினாலும் சம்பந்தப்பட்டவர் பார்ப்பனர் என்பதை மறக்க மற்றவர் விடுவதில்லை. சமயம் கிடைக்கும்போது இழிவுபடுத்துகின்றனர். ரோசா வசந்துக்கும் அவர் ஐயங்கார் என்பது தெரிய வந்தபோது விடாது கருப்புவால் இது செய்யப்பட்டது. அதற்கு முன்னால் தனது ஒரு பதிவில் ரோசா வசந்த் மற்ற சாதியினருக்கு பார்ப்பனர் மேல் பொறாமை என்று ஒரு குறிப்பிட்ட காண்டக்ஸ்டில் கோடி காட்டியதே இதற்கு காரணமாகும்.

    //ஜாதியை மீறி செயல்பட முடியும் என்பதற்கு பார்பனர்களில் உதாரணங்கள் காட்டமுடியும் என்ற எண்ணத்திற்கான ஆதாரம் பலவீனமாவது மட்டும் கொஞ்சம் வருத்தமாக இருக்கும்.//
    ஐயா ரோசா வசந்த் அவர்களே, அப்படியெல்லாம் பார்ப்பனர்களை தங்கள் சாதி மறந்து இருக்க இவர்கள் விட மாட்டார்கள் என்பதை இப்போதாவது உணர்ந்து கொள்ளுங்கள்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  14. சுகுணாதிவாகர் said...

    அனானி நண்பரே,

    ஞாநியின் கடந்தகாலச்செயல்பாடுகளை நான் மறுக்கவில்லை. ஆனால் குறிப்பாக விகடன் கட்டுரை குறித்துத்தான் நான் விமர்சித்துள்ளேன்.

  15. மிதக்கும்வெளி said...

    டோண்டு,

    எம்.ஜி.ஆர் குறித்த கருணாநிதியின் விமர்சனமும் தவறானதே. ஆனால் அதேநேரத்தில் எம்.ஜி.ஆர் உடல்நலங்குன்றியிருந்தபோது, ஜெயலலிதா அவரால் நிர்வாகத்தில் செயல்படமுடியாது என ராஜிவுக்குக் கடிதம் எழுதியதையும் இணைத்துப்பாருங்கள்.

    இப்படிச் சொல்வதன்மூலம் ஒட்டுமொத்தமாகப் பார்பப்ன எதிர்ப்பிலுள்ள நியாயத்தை மறுக்கிறார்கள். ஆனால் வறட்டுத்தனமான தீவிரப் பார்ப்பன எதிர்ப்பு வன்மத்திற்கும் மோசமான விளைவுகளுக்கும் இட்டுச்சென்றிருக்குன்றன என்பது உண்மைதான். ஆனால்பலசமயங்களில் அதைத் தவிர்க்கமுடியாது. மேலும் நான் வறட்டுத்தனமான பார்ப்பன எதிர்ப்பாளனுமல்ல. எனக்கு ஞாநியும் சோவும் ஒன்றல்ல, அதேநேரத்தில் ரோசாவும் டோண்டுவும்கூட ஒன்றல்ல என்பதைப் புரிந்துவைத்திருக்கிறேன்.

  16. dondu(#11168674346665545885) said...

    //ஆனால் அதேநேரத்தில் எம்.ஜி.ஆர் உடல்நலங்குன்றியிருந்தபோது, ஜெயலலிதா அவரால் நிர்வாகத்தில் செயல்படமுடியாது என ராஜிவுக்குக் கடிதம் எழுதியதையும் இணைத்துப்பாருங்கள்.//
    ஜெயலலிதா எம்ஜிஆரின் பலவீனமே. அவர்களுக்கிடையிலான உறவு blow hot blow cold முறையில் இருந்தது. மற்றப்படி ஜெயலலிதா செய்ததும் தவறுதான். ஆனால் கருணாநிதி போல அவர் இதை பப்ளிக்காக செய்யவில்லை.

    இப்போது ஞாநி நிஜமாகவே அங்கலாய்ப்பில் கூறியிருக்கலாமல்லவா? ஆனால் கருணாநிதி அவ்வாறு கூறியிருக்கவே முடியாது. அதுவும் எலெக்சன் நேரத்தில்?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  17. Hariharan # 03985177737685368452 said...

    எம்ஜிஆர் சிறுநீரக பிரச்சினைக்காக சிகிச்சைக்கு அமெரிக்காவில் இருந்த போது கருணாநிதியின் ஒப்புதலுடன் திமுகவின் முன்ணணி பேச்சாளர்கள் ஊர் ஊராக தேர்தல் கூட்டங்களில் எம்ஜிஆருக்கு கிட்னி மாற்றத்தினால் விளக்குக் கம்பத்தில் கால் தூக்கியபடிக்குத்தான் சிறுநீர் கழிக்க முடிகிறது என்றெல்லாம் பண்பாக பேசவைத்தவர் தமிழக முதல்வர் கருணாநிதி!

    அதே தேர்தலில் கருணாநிதி பேசும் போது நண்பர் எம்ஜிஆர் திரும்பி வந்தவுடன் ஆட்சியைத் தந்துவிடுகிறேன் என்று கெஞ்சிப் பேசினார்.

    இந்திய அரசியலில் ஜோதிபாசு, கருணாநிதி, என்று பழுத்த வயதானவர்கள் பதவியில் தொங்கிக்கொண்டு இருக்கவேண்டியதில்லை.

    சங்கர்தயாள் சர்மா, ஆர்.வி போன்ரோர் ஜனாதிபதியாக இருந்தார்கள். இந்திய ஜனாதிபதியின் செயல்பாடு ரப்பர்ஸ்டாம்பாக இருப்பதுதான்! என்ற போதும் 70 வயதுக்கு மேல் இம்மாதிரி பதவிகள் வகிக்க தடை வேண்டும்.

    பிரதமர், ஜனாதிபதி, முதல்வர், கவர்னர் பதவிகளில் இரு முறைக்கு மேல் ஒருவர் பதவிவகிக்க தடைச்சட்டம் வரவேண்டும்.

    அம்மாதிரியே பிரதமர், ஜனாதிபதி, முதல்வர், கவர்னர் என்ற எந்த ஒரு பதவி வகித்திருந்தாலும் இதர பதவிகளுக்கு வரவும் தடை செய்யவேண்டும்.


    திமுகவின் ராமர் பால கருத்துக்கு பார்ப்பனரான அக்னிஹோத்ரம் தாத்தாச்சாரியார் சொல்வது திமுகவினர்க்கு ஏற்புடையதாகும். அப்போது பூணூல் நெளியுதான்னு ஆராய்ச்சி இருக்காது.

    மெய்யாகவே ஓய்வெடுக்கும் வயதை ஒரு 84 வயதாகி, மூப்பெய்தி கிழண்டுவிட்ட ஒரு அரசியல்வாதிக்கு ஞாநி கட்டுரையில் சுட்டிக்காட்டினால் சட்டைக்குள் பூணூல் நெளிவதைக் கண்டுபிடிப்பது பகுத்தறிவு!

    ஞாநியை பலவிதங்களில் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் தளர்ந்து கிழண்டுவிட்ட கருணாநிதி எனும் அரசியல் வாதி ஓய்வெடுத்துக் கொள்வதுதான் சரி எனும் சுட்டல் கருத்தை வழிமொழிகிறேன்.


    மூப்பு ஓய்வு குறித்த ஞாநியின் ஆ.வி எழுத்தை வக்கிரம் என்று சொல்லும் அருகதை திமுகவினர்க்கோ, கருணாநிதிக்கோ இல்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

  18. Anonymous said...

    There are so many
    irrational,unthinking Periyarists
    like you and Rozavazanth. 99.99999999% of brahmins
    dont ever bother about you or your views. They know what to do- ignore you folks and mind their own business. What Periyar wanted to do in his life time- eliminate
    brahmins could not be done by you.
    Today Tamil Brahmins are spread all
    over the world. Some Dondus only take you seriously and reply, perhaps to satisfy your petty egos.

  19. Anonymous said...

    ஜாதியை மீறி செயல்பட முடியும் என்பதற்கு பார்பனர்களில் உதாரணங்கள் காட்டமுடியும் என்ற எண்ணத்திற்கான ஆதாரம் பலவீனமாவது மட்டும் கொஞ்சம் வருத்தமாக இருக்கும்.

    How does that matter.Anyway you
    hate brahmins. Continue that till
    you breath last. Who cares.

  20. SnackDragon said...

    My comment at Dharumi ayya's Blog.

    தருமி அய்யா,

    உங்களிடமிருந்து இப்படி ஒரு ஆழம் குறைந்த கட்டுரையை எதிர்ப்பார்த்திருக்கவில்லை. இனி பழகிக்கொள்கிறேன்.


    1. தடித்த எழுத்துக்களை புகுத்தினால் எந்த நயவஞ்சகத்தன்மையுடைய‌ வாசகங்களின் மேலும் தேன் தடவிய வார்த்தைக்களைச் சொருகி அர்த்தம் மழுங்கிப்போகச் செய்யமுடியும்.

    2. ஞானி அப்படி நயவஞ்சகமாகத்தான் எழுதினாரா இல்லையா என்பது இங்கே பதிவுலகிலே யாருக்கும் தெரியாது. இன்னும் கூட அவர் தமிழ்கமக்களுக்கும் + கலைஞருக்கும் நல்லதை மனதில் கொண்டுதான் எழுதினாரா என்றும் கூட தெரியாது. உங்கள் கட்டுரையிலும் அதற்கான வலிமையான வாதங்களோ / ஆதரங்களோ கிடைக்கவில்லை.

    3. சுகுனா, லக்கி,யெஸ்பா எல்லாம் தோரயமாக எழுதினாலும் சரி, குறித்து மேற்கோளிட்டு, அல்லது தடித்த எழுத்துக்களை இட்டு நிரப்பி எழுதினாலுமே அதன் அடிநாதமாக இருப்பது,
    சமூக அக்கறை என்ற பேரில் எழுதப்படும் சமூகத்தில் பெருமளவில் வாசிக்கப்படும் பத்த்ரிக்கையில் எழுதுபவர் இரட்டை நிலைப்பாட்டை எடுக்கிறாரா என்று சந்தேகங்களை கிளப்புவதற்குத்தான். உங்களுக்கு எப்படி தடித்டஹ் எழுத்தைச் செருகி மழுங்க வைக்கும் சுதந்திரம் உள்ளதோ அப்படியே அவர்களுக்கு ஞாநி மீதான சந்தேகத்தை எழுப்பும் சுதந்திரம் உள்ளது.

    4. நீங்கள் சிறையிலிருந்தால் கூட எம்ஜிஆர் ஏன் பதவியை "இன்னொருவருக்கு விட்டுத்தரவில்லை" என்று கேட்கவில்லை. அது நடக்கவும் இல்லை. நடந்திருக்கவும் நடந்திருக்காது.

    ஆனால் ஞானி , கலைஞர் வேட்டியை ஈரமாக்கிக்கொண்டவுடன் உங்களுக்கு ம‌க்களை ஆளும் முதல்வரின் உடல்நிலை பற்றி கவலை வந்து விடுகிறது.
    இப்படியே கேட்டுக்கொண்டே போகலாம்? இது வும் ஒரு வாதம். :‍))

    5. நாமெல்லாம் நல்லா அறுபது வரைக்கும் வேலை செய்துட்டுத்தானே பணி ஓய்வு அவனா வெளியே தள்ளுறான்னு வீட்டுக்குப் போறோம். வேட்டி ஈரமாயிடுச்சுன்னு சீக்கிரமா யாராவது வாலண்டரி ரிடையர்மண்டு வாங்குறமா? அட வீட்டில் இருக்குறவுங்க நம்ம குடும்பத்தை ஆளும் தலைவரோட உடல் நிலை கெட்டுபோகுதுன்னு சொன்னாக்கூட செய்யமாட்டோம் அதுதான் உண்மை! நமக்கு ஒரு நியாயம் கலைஞருக்கு ஒரு நியாயமா?

    கடைசியா ஞானி, அபப‌டி வக்கிரத்தோட எழுதினாரா அல்லது அரசியல் இலாபத்துக்காக எழுதினாரா அவருக்குத்துத்தான் வெளிச்சம்.
    அப்படி கலைஞர் மேலெ அக்கறை இருந்தா விகடன் எழுத்ததேவை இல்லைங்க! சும்மா கலைஞர் வட்டாரத்துல கடிதாசியாக்கூட எழுதி இருக்கலாம்.

    இதுவும் ஒரு வாதம் பாருங்கோ



    விட்டுப்போனது.
    ஞானியின் சட்டைக்குள் நெளியுது பூனூல் என்பதெல்லாம் வெறும் க்ளீசே வுக்கு உதவும் .
    அதை நான் ஏற்கவும் இல்லை. பிரச்சினை இங்கு இரட்டை வேடம் போடுகிறாரா அதற்கான
    முகாந்திரம் இருக்க இல்லை என்றுதான் பார்க்கனும்.

  21. சீனு said...

    கடைசியா ஞானி, அபப‌டி வக்கிரத்தோட எழுதினாரா அல்லது அரசியல் இலாபத்துக்காக எழுதினாரா அவருக்குத்துத்தான் வெளிச்சம்.//

    ஞாநி சாதிச்சார்புடன் எழுதியிருப்பாரானால் ஆ.வி.யை கொளுத்தலாம் (புத்தகத்தை சொன்னேன்). ஆனால், அவரின் கட்டுரைகளை தொடர்ந்து படித்துவருவதனால் (அ.அ. இல்லை) அவர் சாதிசார்புடன் இல்லை என்றே நம்புகிறேன்.

    //வயதானாலேயே ஒருவர் பொதுவாழ்க்கையில் ஈடுபடமுடியாதென்றால் காந்தி என்ன செய்தார்? பெரியார் மூத்திரப்பையைச் சுமந்துகொண்டு நாலுபேர் தூக்கிவந்து மேடையில் அமர்த்தித்தான் பேசினார்.//

    பெரியாருக்கும் கலைஞருக்கும் இருக்கும் வித்தியாசம், கலைஞர் ஒரு அரசாங்க பதவியிலிருப்பவர்.

    கொஞ்ச காலம் முன்பு வாஜ்பேயி பிரதமராக இருந்த பொழுது ஜி8 மாநாட்டில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மற்ற தலைவர்கள் எல்லோரும் வாஜ்பேயிற்காக காத்திருக்கின்றனர். வாஜ்பேயியோ 30 அடி தூரம் நடக்க சில நிமிடங்கள் வரை எடுத்துக் கொண்டார். அனைவரும் இவருக்காக காத்திருக்கின்றனர். இது வயதானவர்கள் எல்லோருக்கும் பொருந்தும் தானே. ஞாநியும் கலைஞரை ஒதுங்கி போக ஒன்றும் சொல்லவில்லையே, மாறாக பதவியை ஸ்டாலினுக்காக கொடுத்து பின்னால் இருந்தும் கூட இயக்கலாம் அல்லவா என்றும் தானே சொல்லியிருக்கிறார்? மேலும் ஞாநியின் கருத்தை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் அவரவர் விருப்பம். இதில் சாதி சார்பு எங்கே வந்தது? குஷ்பூ விஷயத்திலும் இட ஒதிக்கீடு விஷயத்தில் ஞாநி ஆதரவளிக்கும் பொழுது மட்டும் அவர் ஜாதி தெரியவில்லையா? இப்பொழுது மட்டும் சாதி குறிப்பது அப்பட்டமான சந்தர்ப்பவாதம்.

    மேலும், கலைஞர் இருக்கும் பொழுதே ஸ்டாலினை முதல்வராக்குவது தான் தி.மு.க‍விற்கு சேஃப்.

    கலைஞர் இதையெல்லாம் விட கேவலமாக பேசியதே இல்லையா?

    "திராவிடம் எங்கே இருக்கிறது?" என்ற கேள்விக்கு சட்டசபையில் ஒரு பெண்ணிடன் சொன்ன விடை என்ன?

    "40 ஆண்டிற்கு முன் அழைத்திருந்தால் என்னால் ஒன்டிக்கு ஒன்டி வந்திருக்க முடியும்".

    //திமுகவின் ராமர் பால கருத்துக்கு பார்ப்பனரான அக்னிஹோத்ரம் தாத்தாச்சாரியார் சொல்வது திமுகவினர்க்கு ஏற்புடையதாகும்.//

    அதாங்க. இவங்களுக்கு சாதகமா சொன்னா அவன் நல்லவன், இல்லைன்னா அவன் சாதி இவங்களுக்கு பெரிசா தெரியும்...

    இதுல என்ன கொடுமைன்னா, இப்போ இருக்கிற அரசியல் யுகத்துல, எவன் என்ன திட்டினாலும் முடிந்த அளவு சகிப்புத்தன்மையோட இருக்கிறது கலைஞர் தான். ஆனா, அவரே இப்போ எல்லாம் கொஞ்சம் கோவம் கொள்ளுறது நல்லதுக்கு இல்ல...:(

  22. சீனு said...

    கடைசியா ஞானி, அபப‌டி வக்கிரத்தோட எழுதினாரா அல்லது அரசியல் இலாபத்துக்காக எழுதினாரா அவருக்குத்துத்தான் வெளிச்சம்.//

    ஞாநி சாதிச்சார்புடன் எழுதியிருப்பாரானால் ஆ.வி.யை கொளுத்தலாம் (புத்தகத்தை சொன்னேன்). ஆனால், அவரின் கட்டுரைகளை தொடர்ந்து படித்துவருவதனால் (அ.அ. இல்லை) அவர் சாதிசார்புடன் இல்லை என்றே நம்புகிறேன்.

    //வயதானாலேயே ஒருவர் பொதுவாழ்க்கையில் ஈடுபடமுடியாதென்றால் காந்தி என்ன செய்தார்? பெரியார் மூத்திரப்பையைச் சுமந்துகொண்டு நாலுபேர் தூக்கிவந்து மேடையில் அமர்த்தித்தான் பேசினார்.//

    பெரியாருக்கும் கலைஞருக்கும் இருக்கும் வித்தியாசம், கலைஞர் ஒரு அரசாங்க பதவியிலிருப்பவர்.

    கொஞ்ச காலம் முன்பு வாஜ்பேயி பிரதமராக இருந்த பொழுது ஜி8 மாநாட்டில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மற்ற தலைவர்கள் எல்லோரும் வாஜ்பேயிற்காக காத்திருக்கின்றனர். வாஜ்பேயியோ 30 அடி தூரம் நடக்க சில நிமிடங்கள் வரை எடுத்துக் கொண்டார். அனைவரும் இவருக்காக காத்திருக்கின்றனர். இது வயதானவர்கள் எல்லோருக்கும் பொருந்தும் தானே. ஞாநியும் கலைஞரை ஒதுங்கி போக ஒன்றும் சொல்லவில்லையே, மாறாக பதவியை ஸ்டாலினுக்காக கொடுத்து பின்னால் இருந்தும் கூட இயக்கலாம் அல்லவா என்றும் தானே சொல்லியிருக்கிறார்? மேலும் ஞாநியின் கருத்தை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் அவரவர் விருப்பம். இதில் சாதி சார்பு எங்கே வந்தது? குஷ்பூ விஷயத்திலும் இட ஒதிக்கீடு விஷயத்தில் ஞாநி ஆதரவளிக்கும் பொழுது மட்டும் அவர் ஜாதி தெரியவில்லையா? இப்பொழுது மட்டும் சாதி குறிப்பது அப்பட்டமான சந்தர்ப்பவாதம்.

    மேலும், கலைஞர் இருக்கும் பொழுதே ஸ்டாலினை முதல்வராக்குவது தான் தி.மு.க‍விற்கு சேஃப்.

    கலைஞர் இதையெல்லாம் விட கேவலமாக பேசியதே இல்லையா?

    "திராவிடம் எங்கே இருக்கிறது?" என்ற கேள்விக்கு சட்டசபையில் ஒரு பெண்ணிடன் சொன்ன விடை என்ன?

    "40 ஆண்டிற்கு முன் அழைத்திருந்தால் என்னால் ஒன்டிக்கு ஒன்டி வந்திருக்க முடியும்".

    //திமுகவின் ராமர் பால கருத்துக்கு பார்ப்பனரான அக்னிஹோத்ரம் தாத்தாச்சாரியார் சொல்வது திமுகவினர்க்கு ஏற்புடையதாகும்.//

    அதாங்க. இவங்களுக்கு சாதகமா சொன்னா அவன் நல்லவன், இல்லைன்னா அவன் சாதி இவங்களுக்கு பெரிசா தெரியும்...

    இதுல என்ன கொடுமைன்னா, இப்போ இருக்கிற அரசியல் யுகத்துல, எவன் என்ன திட்டினாலும் முடிந்த அளவு சகிப்புத்தன்மையோட இருக்கிறது கலைஞர் தான். ஆனா, அவரே இப்போ எல்லாம் கொஞ்சம் கோவம் கொள்ளுறது நல்லதுக்கு இல்ல...:(