ராமன் எதிர்ப்பும் 'போலி மதச்சார்பின்மை' குறித்த கேள்விகளும்

"திக காரர்கள், திமுககாரர்கள் ஏன் இந்துமதத்தை, இந்துக்கடவுள்களை மட்டும் தாக்குகிறார்கள்? மற்ற மதங்களை ஏன் கடுமையாக விமர்சிப்பதில்லை?" - இது அடிக்கடி இந்துத்துவச்சக்திகள் தங்கள் பிரச்சாரங்களிலும் வெளியீடுகளிலும் கேட்கும் கேள்விகள்தான்.

ஆனால் இந்தக்கேள்விகள் சமயங்களில் மற்ற முகாம்களிலிருந்தும் எழுப்பப்படுவதுண்டு. உதாரணங்களாக கருணாநிதி - ராமன் பிரச்சினையில் ஜெயலலிதா, விஜயகாந்த், சரத்குமார் நிலைப்பாடுகளைக் காணலாம். இதில் விஜயகாந்த், சரத்குமார் ஆகியோர் எந்தவிதக் கருத்தியல் அடிப்படையுமற்ற ஆதாயக்காரர்கள் மட்டுமே. ஜெயலலிதாவைப் பொறுத்தவரை அவர் திராவிடக்கட்சியொன்றிற்குத் தலைவியாகிற விபத்து நேர்ந்துவிட்டதே தவிர முற்றான பார்ப்பனீயக்கருத்தியல்வாதிதான்.

ஆனால் மாற்று அரசியலை முன்வைக்கக்கூடிய முகாம்களிலிருந்தும் இப்படியான குரல்கள் எழுவதுதான் வேடிக்கையானது. ஒரு உதாரணம் சிதம்பரம் கோயிலில் திருமாவளவனுக்கு பூரணகும்ப மரியாதை நடந்தது குறித்த விமர்சனத்திற்குப் பதிலளிக்கையில், "ஏன் நோன்புகஞ்சி குடிக்க மசூதிக்குச் செல்லும்போது கோயிலுக்கு ஏன் போகக்கூடாது?' என்று வினவினார். இதேமாதிரியான குரலை சமீபத்தில் கேட்கநேர்ந்தது.

பெரியாரின் 129ஆம் பிறந்தநாளையொட்டி திருப்பத்தூர் தூயநெஞ்சர்கல்லூரி திருப்பத்தூர் பகுத்தறிவாளர்கழகத்துடன் இணைந்து ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது. அக்கருத்தரங்கில் 'பகுத்தறிவும் பெரியாரும்' என்னும் தலைப்பில் பேசிய திராவிடர்கழகத்தோழர் துரைசந்திரசேகரன் இந்துப்புராணங்கள் குறித்து விமர்சித்தார்.

அதன்பிறகு 'பெரியாரும் பொதுவுடைமை அடையாளமும்' என்னும் தலைப்பில்பேசிய தோழர்.ராசேந்திரசோழன், தனது தலைப்பு குறித்தே பேசாததோடு, 'ஏன் பெரியார் ராமனை மட்டும் எரித்தார், மற்ற மதங்களை ஏன் விமர்சிக்கவில்லை' என்றும் கேள்வியெழுப்பினார்.

பிறகு 'பெரியாரின் போராட்டமுறைகள்' குறித்துப் பேசும்போது இதுகுறித்துக் குறிப்பிட்டநான், 'இந்துமதம் என்பது மற்ற மதங்களுடன் ஒப்பிடக்கூடிய தன்மைவாய்ந்ததல்ல. அதன் அடிப்படையே சாதியம்தான். சாதியத்தை உருவிவிட்டால் இந்துமதம் கலகலத்துவிடும். அதன் ஆன்மீக மற்றும் தத்துவ அடிப்படைகள் கூட மாற்றுமரபுகளிலிருந்து உட்செரித்துக்கொண்டவையே. இதைப் பலசந்தர்ப்பங்களில் அம்பேத்கரும் பெரியாரும் விளக்கி இந்துமத ஒழிப்பை முன்வைத்திருக்கிறார்கள். தன்னை ஒரு மார்க்சியவாதியாக அடையாளப்படுத்திக்கொள்கிற தமிழ்த்தேசியவாதி, மேலும் மண்மொழி என்னும் இதழையும் தமிழ்த்தேசிய மார்க்சியக்கட்சி என்னும் அமைப்பையும் நடத்திவரும் ராஜேந்திரசோழன் என்னும் அஷ்வகோஷ் இந்துத்துவவாதிகளின் குரலில் பேசுவது வருந்தத்தக்கது' என்று குறிப்பிட்டேன்.

பெரியார் தொடர்ச்சியாக இந்துப்பெருங்கடவுள்களை பலரறிய அவமானப்படுத்தியிராவிட்டால், இந்துக்குறியீடுகளை இழிவுபடுத்தியிராவிட்டால் ராமன் விஷம் தமிழகத்தையும் விழுங்கியிருக்கும். எத்தனையோ கருத்தியல் சமரசங்களைச் செய்தபோதும் அவ்வப்போது இந்துமதத்தையும் இந்துக்கடவுள்களையும் கேள்விக்குள்ளாவதற்காக கருனாநிதியையும் இந்துவெறியர்களுக்கு உதைகொடுத்ததற்காக திமுகவினரையும் பாராட்டத்தான் வேண்டும்.

இந்த ராமன்பாலம் பிரச்சினையில்கூட ராமதாஸ், தேர்தல் கம்யூனிஸ்ட்கள் பிஜேபியை எதிர்க்கிறார்களே தவிர இந்துமதத்தையோ ராமனையோ அல்ல என்பதைக் கவனிக்கவேண்டும்.


சில குறிப்புகள் :

திருமாவளவன் சிதம்பரம் கோவில் பிரச்சினையில் சமரசம் செய்துகொண்டாலும் வேதாந்தி என்னும் இந்துவெறியனுக்கு எதிராகத் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுப்பது பாராட்டத்தக்கது.

ராமனை எரித்தார், அதனாலேயே இங்கு ராமன் அரசியல் பலிக்கவில்லை என்று சொல்லும் அதேநேரத்தில் பெரியாரால் நடுத்தெருவில் போட்டுடைக்கப்படட் பிள்ளாயாரைக்கொண்டு இந்துத்துவச்சக்திகள் இருபதாண்டுகளாக அரசியல் நடத்திவருவதையும் கணக்கிலெடுக்கவேண்டும். தொடர்ச்சியாக பெரியாரின் குறியீட்டழிப்புப்போராட்டங்களையும் இந்துமத எதிர்ப்பையும் அவரது வழித்தோன்றல்கள் முன்னெடுக்காதது மிகமுக்கிய காரணம்.

12 உரையாட வந்தவர்கள்:

 1. Anonymous said...

  Hinduism has survived so many attacks and onslaughts. It has
  survived the invasion from abroad
  and colonisation. So however much you try it will survive for ages after your death.Periyar tried his best to destroy it.Today Hinduism is as strong as ever. Its influence has increased. So even if DMK+PMK+DPI+all sundry parties try Hinduism will survive and emerge stronger. Your attempts to destroy India and Hinduism are exercises in vanity and wishful
  thinking. Tell this to Kolathur
  Mani and Co who are daydreaming about this.

 2. Anonymous said...

  //Hinduism has survived so many attacks and onslaughts. It has
  survived the invasion from abroad
  and colonisation. So however much you try it will survive for ages after your death.Periyar tried his best to destroy it.Today Hinduism is as strong as ever. Its influence has increased. So even if DMK+PMK+DPI+all sundry parties try Hinduism will survive and emerge stronger. Your attempts to destroy India and Hinduism are exercises in vanity and wishful
  thinking. Tell this to Kolathur
  Mani and Co who are daydreaming about this.//

  My dear day dreaming hindutva fascist anony...If you cant find a girl, fuck yourself. Oh my bad, I apologise..thats what you have done just now(read again whatever u had written)

 3. Arasu Balraj said...

  welcome back!

 4. Anonymous said...

  அது சரி மிதக்கும் முண்டம்,
  தாடிக்காரனோட சிஷ்யர்கள் என்றால் கண்டிப்பாக ஜாதி வெறி பிடித்து அலையணுமா?அரேபிய தாடிக்கார தீவிரவாதத்துக்கு அடியை வருடணுமா?உன்னை மாறி பொரிக்கியை பெத்ததுக்கு உங்கம்மா ஒரு தொடப்பக்கட்டையை பெத்து இருக்கலாம்.பொரிக்கி நாயே.

 5. Anonymous said...

  சேது சமுத்திர திட்டத்தை நானும் எதிர்க்கிறேன்.முழுக்க சூழலியல் பார்வையிலேயே நான் சேது கால்வாயை எதிர்க்கிறேன்.மற்றபடி பார்ப்பன இந்து பாசிஸ்டுகள் அயோத்தியில் செய்த அக்கிரமத்தை இங்கேயும் செய்வதற்காக காத்திருக்கிறார்கள்.காலத்தில் தேவை உணர்ந்து நாம் பாசிஸ்டுகளை முறியடிக்க வேண்டும்..சூழலியல் தொடர்பான பிரச்சனையில் நாம் வேறு பட்டாலும் வேதாந்தி போன்ற பண்டாரம் பரதேசிகளின் கொலை வெறிக்கு தமிழகத்தையும் கலைஞரையும் இறையாக்கிவிடக்கூடாது......பார்ப்பன ஜெயலலிதாவின் பாசிச அரசியலுக்கு மற்றுமோர் எடுத்துக்காட்டாக ''ராமன் விவகாரம்"கிடைத்திருக்கிறது...திமுகவினர்.மதவாத பிஜேபி,இந்து, முன்னணி போன்ற அமைப்புகளுக்கு முன்னால் போய் போராடும் போது அதை ஆதரிக்க வேண்டியது நமது கடமை.....
  நினைவுக்கு வந்த ம.க.இ.க-வின் பாடல் வரிகள்..
  ''டேய் அவசரமா ராமனுக்கு ஆளனுப்புங்கடா...இரண்டு அம்பை விட்டு டீ.ஆர் பாலுவை நொம்பச்சொல்லுங்கடா?''
  ராமன்..
  ''பேயானான் பெண்ணுமானான் சிங்கம் புலி கரடியானான் ஆமையானான் மீனுமானான் "பீ"யைத்தின்னும் பண்ணியானான் ஒரு அரிசன அவாதாரம் எங்கடா நாயே"

 6. Anonymous said...

  ராமனை எரித்தார், அதனாலேயே இங்கு ராமன் அரசியல் பலிக்கவில்லை என்று சொல்லும் அதேநேரத்தில் பெரியாரால் நடுத்தெருவில் போட்டுடைக்கப்படட் பிள்ளாயாரைக்கொண்டு இந்துத்துவச்சக்திகள் இருபதாண்டுகளாக அரசியல் நடத்திவருவதையும் கணக்கிலெடுக்கவேண்டும்.

  Moral of the story: Any god
  'broken' by Peiyar becomes
  more popular than before.

 7. samurai said...

  it was a welcome surprise when i came across your blog.
  it is good to find some serious opinions.

 8. samurai said...

  it was a welcome surprise to come across your blog.
  it is really good to get to read some real opinions.

 9. Thamizhan said...

  பெரியார் என்றாலே மின்சாரத் தாக்குதலுக்கு ஆளாகும் அநாமதேயப் பார்ப்பனர்களும் அவர்களது அடிவருடிகளும் இன்னும் ராமரை வைத்துப் பிழைப்பு நடத்தப் பார்க்கிறார்கள்.
  பெரியார் அலசி ஆராய்ந்ததைப் போல் ராமாயணம் இனிமேல்தான் வடக்கில் ஆராய்ப்படும்.
  அப்போது தெரியும் ராமனின் பிறப்பும்,ஆட்சிக்கு வந்த சூதும் அனைத்துக் கற்பனைகளும்.வாழ்க வால்மீஹி.நன்றாகப் பிட்டு வைத்திருக்கிறார்.இன்றைய சீதைகள் ராமனை உச்ச நீதி மன்றத்திலேயே
  நாறடித்து விடுவார்கள்.

 10. Anonymous said...

  periyaarum avar pillaigalum thangalukku vendumendral bramananai payanpaduthikkolvargal.udharanam,periyaarukku rajaji,annadoraikku p.v.raman.melum romba thambikalukku chinnaveedu yaar theriuma?unmaiyileye tamilan munnera vendum endru uzhaithathu kamaraj than.evargaludaiya bramna ethirpu poliyanathu.

 11. Anonymous said...

  உங்கள் பதிவுகளைப் படிக்கப் படிக்கப் பரிதாபம் தான் மிஞ்சுகிறது. நீங்கள் எப்படித்தான் விழுந்து புரண்டு சப்பைக்கட்டு கட்டினாலும், உங்கள் தலைவர்களின் 'பகுத்தறிவு' நகைப்பிற்குரியதே! ஆனால் இதில் சந்தோஷம் என்னவென்றால் இதுபோன்ற உளரல்கள் அதிகமாக அதிகமாக கடவுள் பக்தி தமிழ்நாட்டில் geometric progression-ல் அதிகமாகிக்கொண்டே வருவதுதான்! அந்த வகையில் பெரியார் தொடங்கி இப்போது இருக்கும் 'பகுத்தறிவு பகலவன்கள்' வரை இறைவனுக்கு ஆற்றியிருக்கும் பணி மகத்தானது!!! அந்தவிதத்தில், பகுத்தறிவு நுணல்களை தொடர்ந்து சப்தம் எழுப்பும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறோம்! எங்கே ஆரம்பியுங்கள் பார்க்கலாம்: லைட், கேமரா, மீசிக் ஆக்ஸன்.. கொடகொடகொடகொடகொட...

 12. மிதக்கும்வெளி said...

  /Moral of the story: Any god
  'broken' by Peiyar becomes
  more popular than before/

  அப்படியென்றால் ராமன் பாச்சா இங்கு ஏன் பலிக்கவில்லை?