அப்சாலுக்கு நீங்கள் உதவ வேண்டுமா?

அப்சால் தூக்கிலிடப்படத்தான் வேண்டும் என்ற பொதுப்புத்தியின் இரைச்சல் எங்கும் கேட்டுக்கொண்டிருக்கும் சூழலில் அப்சால் விவகாரம் குறித்து தமிழில் ஒரு நல்ல புத்தகம் வெளியாகியிருக்கிறது.
நூலின் பெயர் : முகம்மத் அஃப்சால் தூக்கிலிடப்படத்தான் வேண்டுமா?
இந்நூலிலுள்ள மொழிபெயர்ப்புக்கட்டுரைகளை எழுதியவர் தமிழ்ச்சூழலில் பின்நவீனத்துவம் குறித்த உரையாடலைத் தொடங்கிவைத்தவரும் ,தலித்தியம், பெரியாரியம், மார்க்சியம், பெண்ணியம், சிறுபான்மையினர் பிரச்சினைகள், இந்துத்துவ எதிர்ப்பு ஆகியவற்றிற்காக தன் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்துள்ள என் நேசத்துக்கிரிய நண்பன் பேராசிரியர் அ.மார்க்ஸ்.
விலை : ரூ 25
புத்தகம் வேண்டுவோர் கவனத்திற்கு:
கருப்புப்பிரதிகள்,
45அ இஸ்மாயில் மைதானம்,லாயிட்ஸ் சாலை, சென்னை- 5
செல் : 944272500
நூலின் முக்கியப் பகுதிகள்...

. 'காவலில் வைக்கப்பட்டோர் மற்றும் சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான கழகம் (spdpr)என்னும் அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலே இந்நூல் அமைந்துள்ளது. நூலிலிருந்து சில பகுதிகள்..
"நான் மரணதண்டனையை ஏற்றுக்கொண்டதாகவும் ஆனால் விஷ ஊசி மூலம் மட்டுமே கொல்லப்பட வேன்டுமெனவும் என் வழக்கறிஞர் உயர்நீதி மன்றத்தில் கூறியதாக 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' மூலம் அறிந்தேன். என் வழக்கறிஞரின் இக்கூற்று என் மேல் முறையீட்டையே கேலிக்குரியதாக்கிவிட்டது."
- அப்சால் எஸ்.ஏ.ஆர்.கீலானிக்கு வழக்காடுவதற்கான அகில இந்திய குழுவிற்கு எழுதிய கடிதம்

"நீதிவிசாரணை தொடங்கும் முன்பே காவல்துறையினர் அவரைச் சித்திரவதை செய்தார்கள். வாயில் மூத்திரம் கூட அடித்தார்கள். இவற்றை நான் வெளிப்படையாக சொல்வதற்கு வெட்கப்படுகிறேன். ஆனால் சந்தர்ப்பச்சூழ்நிலை என்னை இதைச் சொல்ல வைத்துவிட்டது. என் ஆறுவயது மகனுக்காக இதைச் செய்கிறேன்"
- அப்சாலின் மனைவி தபஸ்ஸூம் குடியரசுத்தலைவருக்கு எழுதிய கடிதத்தில்..

"நீதிவிசாரணை முழுவதும் அப்சால் தனக்கு ஒரு வழக்கறிஞரை நியமிக்கக்கோரி நீதிபதியைக் கேட்டுக்கொண்டே இருந்தார். வழக்குரைஞர்கள் பலரின் பெயரையும் கூட அவர் சுட்டிக் காட்டியுள்ளார். ஆனால் அவர்களனைவரும் அவருக்காக வாதிட மறுத்துவிட்டர்கள். நேர்மையான நீதிவிசாரணையை உறுதி செய்வதைக் காட்டிலும் ஒரு காஷ்மீரியைச் சாகவிடுவதே பெரிய தேசபக்தி என இந்திய வழக்குரைஞர்கள் நினைத்ததற்காக அப்சாலையா குற்றம் சாட்ட இயலும்?
-காஷ்மீர் தலைவர்களின் கூட்டுத்தீர்மானத்தில்...

ஒருகாலத்தில் (1975) மகாவீர்ஜெயந்தியைக் காரணம் காட்டி மரணதண்டனையை ரத்து செய்யவேண்டும் என்று இயக்கம் நடத்திய பாரதிய ஜனசங் கட்சியின் மூத்த தலைவர் அத்வானி இன்று அப்சால் தூக்கிலிடபப்ட வேண்டுமென்பதற்காக குடியரசுத்தலைவரைச் சந்திக்கிறார். பாகிஸ்தானால் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள சரப்ஜித்சிங்கிற்கு ஆதரவாக வாதாடியவர்கள் இன்று மன்னிப்புக்கு எதிராக ஒரு இயக்கமே நடத்துகின்றனர்.
- அ.மார்க்ஸ்
அப்சாலுக்கும் மரணதண்டனைக்கு எதிரான செயல்பாடுகளுக்கும் நீங்கள் உதவ விரும்பினால் spdpr முகவரிக்குத் தொடர்புகொள்ளலாம்.
163, வசந்த் என்க்ளேவ், புதுடெல்லி 110057
மின்னஞ்சல் : rona358@gmail.com phone : 011 26152680

2 உரையாட வந்தவர்கள்:

  1. ROSAVASANTH said...

    http://rozavasanth.blogspot.com/2006/10/blog-post_24.html

  2. Anonymous said...

    ///"நீதிவிசாரணை முழுவதும் அப்சால் தனக்கு ஒரு வழக்கறிஞரை நியமிக்கக்கோரி நீதிபதியைக் கேட்டுக்கொண்டே இருந்தார். வழக்குரைஞர்கள் பலரின் பெயரையும் கூட அவர் சுட்டிக் காட்டியுள்ளார். ஆனால் அவர்களனைவரும் அவருக்காக வாதிட மறுத்துவிட்டர்கள். நேர்மையான நீதிவிசாரணையை உறுதி செய்வதைக் காட்டிலும் ஒரு காஷ்மீரியைச் சாகவிடுவதே பெரிய தேசபக்தி என இந்திய வழக்குரைஞர்கள் நினைத்ததற்காக அப்சாலையா குற்றம் சாட்ட இயலும்?
    -காஷ்மீர் தலைவர்களின் கூட்டுத்தீர்மானத்தில்...///

    இதே பொய்யை எத்தனை நாட்கள்தான் திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருப்பீர்கள். நீதிமன்றம் ஒருவருக்கு தனக்காக வழக்காட ஒரு வழக்கறிங்கரை நியமித்துக்கொள்ள அனுமதியுள்ளது. அது தார்மீக உரிமை. அதற்கா அவர் ராம்ஜெட்மாலானி தான் வேண்டும் என்று அடம்பிடித்தால் என்ன செய்வது. அடுத்தவரை கட்டாயப்படுத்தமுடியாது. அவருக்காக் வாதாடுபவரை அவர்தான் தேட வேண்டும். தற்போது நீதிதுறையில் அரசியலும் ,அரசியலில் நீதித்திறையும் தலையிடுகிறது. இது ஜனநாயகநாட்டின் ஆணிவேரை பிடுங்குவதற்கு சமம்.