சாதிமறுப்புத்திருமணத்திற்கான ஒரு வலைப்பூ

இந்தியச் சாதியச் சமூகம் என்னும் பிரம்மாண்டமான சிறைச்சாலையின் மீது சிறு கல்லையேனும் விட்டுக் கலகலக்க வைக்கும் வல்லமை சாதிமறுப்புத்திருமணங்களுக்குண்டு. அத்தகைய திருமணங்களுக்கான இணையத்தளம் தமிழில் ஏதுமில்லை. ஆனால் இப்போது ஒரு வலைப்பூவை இதற்காகவே தோழர்.சோலை.மாரியப்பன் உருவாக்கியுள்ளார். கும்பகோணத்தில் பெரியார்திராவிடர்கழகத்தில் செயல்படும் அவர்தான் எனக்கும் சாதிமறுப்புத்திருமணத்திற்காகப் பெண்பார்த்தார். ஆனால் பதிவெழுதும் இந்த நிமிடம்வரை நான் தான் சுகுணாதிவாகர் என்று அவருக்குத் தெரியாது. சாதிமீறி மணம் செய்ய விரும்புவோர் தொடர்புகொள்க .

http://thamizharthirumanam.blogspot.com

7 உரையாட வந்தவர்கள்:

 1. முரளிகண்ணன் said...

  needful

 2. லக்கிலுக் said...

  தகவலுக்கு நன்றி சுகுணா!

 3. இளைய கவி said...

  அருமையான முயற்ச்சி... நான் செய்யலாம் என்று நினைத்திருந்த முயற்ச்சி.. ஆதாலால் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி..( ஆஹா ரைமிங்கா இருக்குல்ல).. நானும் கவுஜர் ஆகிட்டேன்..

  என்றும் அன்புடன்
  இளையகவி

 4. Anonymous said...

  இதில் மதமறுப்பு இருக்கிறதா, இல்லை சாதிமறுப்பு மட்டும் போதும்
  என்று முடிவு செய்துவிட்டார்களா.

  விரைவில் பாலினமறுப்பு திருமணத்திற்காக ஒரு வலைப்பூ
  துவங்குவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

 5. சோலை said...

  மத மறுப்பும் உள்ளடக்கியது தான்

  சோலைமாரியப்பன்

 6. சோலை said...

  மத மறுப்பும் உள்ளடக்கியது தான்

 7. சோலை said...

  மத மறுப்பும் உள்ளடக்கியது தான்