பதிவாளர் பட்டறை?

தொடர்ச்சியான அலுவல்கள் இருந்ததால் வலைப்பதிவாளர்பட்டறையில் தொடர்ந்து பங்குபற்றாத இயலாத நிலை. அதிகபட்சம் அரைமணிநேரம் மட்டுமே பட்டறையில் சுற்றிவரமுடிந்தது. அரங்கத்தில் ஒரே ஒரு அமர்வினை மட்டுமே கேட்டேன். அதுவும் தலைப்பு ஈர்த்ததால்.

'வலைப்பதிவாளர்களின் சமூக அக்கறை'. ராமகிருஷ்ணன் என்பவர் பேசினார். (அவர்தான் ரஜினிராம்கி என்று ஒரு நண்பர் சொன்னார். சரியா என்று தெரியவில்லை.) அவர் பேசியதன் சாராம்சம் இதுதான். 2004ல் ஏற்பட்ட சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வலைப்பதிவாளர்கள் நிதி திரட்டிக்கொடுத்தது, கல்வி மற்றும் மருத்துவச்செலவுகளுக்காக நிதி திரட்டிக்கொடுத்தது ஆகியவற்றைப் பட்டியலிட்ட ராமகிருஷ்ணன் இதைத்தான் சமூக அக்கறை என்றார்.

இதற்குப்பெயர் மிடில்கிளாஸ் மனிதாபிமானமே தவிர சமூக அக்கறையல்ல. இயற்கைப்பேரழிவுகளோ அல்லது வறுமையோ வெறுமனே இயறகை மாற்றங்களால் மட்டும் ஏற்படுவதில்லை, அதற்குப் பின்னால் அகோரமான மூலதனப் பசியும் வல்லரசுகளின் சுரண்டலும் முதலாளித்துவக் கொடூரமும் உறைந்திருக்கின்றன. இதுபற்றிப் பேசுவதும் பேசச்செய்வதுமே சமூக அக்கறை. நிதி திரட்டித் தருவது தவறு என்று சொல்லவில்லை. ஆனால் அதற்குப் பெயர் சமூக அக்கறையில்லை என்பதை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

மாலன் பேசியதில் உள்ள சர்ச்சைகளை தொடர்ச்சியாக ஈழத்தமிழ்த்தோழர்கள் எழுதிவருகிரார்கள். ராஜீவ் கொலைக்குற்றவாளிகளுக்கான தீர்ப்பின்போது மாலன் எப்படி நடந்துகொண்டார் என்பது அனைவருக்கும் தெரியும். மாலன் மற்றும் ஹிந்துராம் போன்ற பார்ப்பனர்களின் ஈழப்போராட்டத்திர்கு எதிரான மனோநிலையைக் கண்டறிந்துகொள்வது ஒன்றும் கடினமானதில்லை.

15 உரையாட வந்தவர்கள்:

 1. ROSAVASANTH said...

  பல காரணங்களால் என்னால் வரமுடியவில்லை.

  இந்த மிடில் க்ளாஸ் சமூக அக்கறையை எப்படி இருந்தது என்பதி ஒரு நிகழ்வின் மூலம் புரிந்து கொள்ளலாம். தங்கள் மன அரிப்பையும், குற்ற உணர்வையும் தணித்து கொள்ள, தாங்கள் மீனவர்களுக்கு கொடுத்த பழந்துணிகளையும் புளியோதரையையும் அவர்கள் வாங்க மறுத்த போது, இவர்களுக்கு வந்த கோபமும் ஆத்திரமும் இவர்களின் சமூக அக்கறையின் சாயத்தை காட்டகூடியது,

  மாலனின் பேச்சு (நான் கேள்விப்பட்டது அப்படியே உண்மையானால்) மிகுந்த கயமைத்தனமும், இனவாத தன்மையும் கொண்டது. வன்மையாக அந்த இடத்தில் கண்டிக்கப் படவைல்லை என்பது மிகவும் வருத்தத்திற்கு உரியது.

 2. Anonymous said...

  சுகுனா, என்னாச்சு உங்களுக்கு? ஏன் இப்படி ஒரு மொக்கைப் பதிவு? இன்னும் விரிவாக, சுருக்கென்று எழுதுவீர்கள் என்று நினைத்தேன்..

 3. Anonymous said...

  Atleast a lone sane voice. Keep up your straighforwardness.

 4. Anonymous said...

  செருப்படி!?

 5. லக்கிலுக் said...

  ஆரம்பிச்சுட்டீங்களா?

 6. மிதக்கும்வெளி said...

  ரோசா,

  இன்னமும்கூட விரிவாக எழுதலாமென்றுதான் நினைத்தேன். ஒருசில காரணங்களால் இந்த பட்டறைக்காக எவ்வித ஆதாயமுமின்றி உழைத்த பிரியத்துக்குரிய நண்பர்களின் மனம் புண்படுமென்று தவிர்த்துவிட்டேன். அது ஒரு கும்பமேளா, அவ்வளவுதான்.

 7. வரவனையான் said...

  ம்ம் அதுதான் சுகுணா, எந்தவித ஆதாய நோக்கமின்றி உழைத்த சென்னைபட்டினத்தாரின் உழைப்பையும் விக்கிபசங்க உழைப்பையும் கண்ணில் பார்த்தபின் விமர்சிக்க மனமே வரவில்லை. அவர்களின் பணி தொடர வாழ்த்துக்கள்

 8. Kasi Arumugam said...

  //ஒருசில காரணங்களால் இந்த பட்டறைக்காக எவ்வித ஆதாயமுமின்றி உழைத்த பிரியத்துக்குரிய நண்பர்களின் மனம் புண்படுமென்று தவிர்த்துவிட்டேன். அது ஒரு கும்பமேளா, அவ்வளவுதான்.//

  :-))

 9. உண்மைத்தமிழன் said...

  //இதற்குப்பெயர் மிடில்கிளாஸ் மனிதாபிமானமே தவிர சமூக அக்கறையல்ல. இயற்கைப்பேரழிவுகளோ அல்லது வறுமையோ வெறுமனே இயறகை மாற்றங்களால் மட்டும் ஏற்படுவதில்லை, அதற்குப் பின்னால் அகோரமான மூலதனப் பசியும் வல்லரசுகளின் சுரண்டலும் முதலாளித்துவக் கொடூரமும் உறைந்திருக்கின்றன. இதுபற்றிப் பேசுவதும் பேசச்செய்வதுமே சமூக அக்கறை. நிதி திரட்டித் தருவது தவறு என்று சொல்லவில்லை. ஆனால் அதற்குப் பெயர் சமூக அக்கறையில்லை என்பதை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.//

  ஐயா,

  நீங்களே சொல்லிட்டீங்க மிடில்கிளாஸ்ன்னு.. மிடில் கிளாஸில் உழன்று கொண்டிருக்கும் பாட்டாளிகளும், உம்முடைய, என்னுடைய வர்க்கத்தினரும் ஒருவகையில் அன்றாடங் காய்ச்சிகள்தான்.. அவரவருக்கு நிறைய பொறுப்புகள் உண்டு. தினமும் உழைத்தே தீர வேண்டிய கட்டாயமும் உண்டு. இந்தக் கட்டாயத்திலிருந்து தப்பிக்க முடியாத ஜீவராசிகள் மிடில் கிளாஸ் மன்னர்கள்தான். உங்களுக்குத் தெரியாதது அல்ல.

  சுனாமி என்பது சொல்லாமல் வந்த ஒரு பேரழிவு. இதற்குப் பின்னணியில் வல்லரசுகளின் சுரண்டலும், முதலாளித்துவ கொடூரமும் உறைந்திருக்கின்ற என்ற உங்களது வாதம் எங்களைப் போன்ற மிடில் கிளாஸ் மன்னர்களுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இப்போதும் யோசித்துப் பார்த்தும் அது எப்படி சுனாமிக்கும், வல்லரசுகளின் சுரண்டலுக்கும் சம்பந்தம் என்பது புரியவேயில்லை.

  பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் இயன்ற உதவியைச் செய்வதுதான் சமூக அக்கறை என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். இயன்ற உதவி என்ற வார்த்தையில் உட்புகுந்து பார்த்தால்தான் மிடில் கிளாஸ் மன்னர்களின் அவலம் உங்களுக்குப் புரியும்.

  தம்மைப் போன்ற தொலைதூரத்தில் முகம் தெரியாத மக்கள் பட்ட அவலங்களை தொலைக்காட்சிகளில் பார்த்து அதிகம் கலங்கியது மிடில் கிளாஸ் தரப்பினர்தான். காரணம் நம்மில் ஒருவர்தான் பாதிக்கப்பட்ட மக்கள் என்று அவர்கள் நினைத்ததுதான். தாங்கள் பார்த்து கண் கலங்கியச் சம்பவத்தால் உருக்குலைந்து போன குடும்பத்திற்கு தங்களால் யன்ற உதவியைச் செய்ய முன் வந்தனர். அப்படி முன் வந்தபோது அவர்களால் இயன்ற உதவி பண உதவி மட்டுமே. ஏனெனில் அவர்கள் மிடில் கிளாஸ். எங்கயோ, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தான் தினந்தோறும் உழைத்துச் சம்பாதிக்கின்ற பணத்தில் ஒரு பிடியை விட்டுக் கொடுத்து, ந்தச் சுகமாவது இந்த ஒரு நாளைக்குக் கிடைக்கட்டுமே என்றெண்ணி வாரித் தந்தது சமூக அக்கறை இல்லாமல் வேறென்ன..?

  அரசுகள் தருவார்கள். ஆட்சியாளர்கள் தருவார்கள் என்பது நம் மக்களுக்கும் தெரியும். இருந்தாலும் நாமும் தர வேண்டும். நம் உதவியும் அவர்களுக்குப் போய்ச் சேர வேண்டும் என்று ஒரு கம்பெனியின் பியூன் நினைத்ததில் என்ன சமூக அக்கறையில்லை? சுனாமியால் பாதிக்கப்பட்டது ஒரு சமூகம்தானே.. அதே சமூகத்தில் பாதிக்கப்படாத மனிதர்களும் ஒரு அங்கம்தான். அவர்கள் பாதிக்கப்பட்ட தங்களது சக தோழர்களுக்கு உதவ எண்ணுகிறார்கள். அந்த தோற்றுவிககப்பட்ட எண்ணம் சமூக அக்கறையில்லாமல் வேறென்ன? வெறும் உதவியா? நிச்சயமாக மிடில் கிளாஸ் மன்னர்கள் செய்தது உதவியல்ல. தங்கள் குடும்பத்தில் ஒருவருக்குத்தான் இரவு சாப்பாடு இருக்கிறது என்றால் பகிர்ந்து உண்பார்கள் பாருங்கள். அது போலத்தான் இதுவும்.

  ஒரு ஊரே பாதிக்கப்பட்டு இருக்கிறது. நாம் கொடுப்பது சிறிதுதான் என்றாலும் அது யாரோ ஒருவருக்கு நிச்சயம் பயனளிக்கும் என்று நம்புகிறார்கள் பாருங்கள். அந்த எண்ணம் சமூக அக்கறையில்லாமல் வேறென்ன? அவர்கள் யாரோ.. நாம் யாரோ என்று திரும்பிப் பார்க்காமல் இருப்பவர்கள் எத்தனை பேர்? இதில் எத்தனை சதவிகிதம் மிடில் கிளாஸ் மக்கள்.. சொல்லுங்கள்..

  எங்கே, எப்போது துயரம் நிகழ்ந்தாலும் அதைப் பற்றி முதலில் துக்கம் கொண்டாடுவது மிடில் கிளாஸ் மக்கள்தான். ஏனெனில் அவர்களும் ஒரு காலத்தில் அதனை அனுபவித்தவர்களாகவே இருக்கக்கூடியவர்கள்தான். நம்மைப் போன்ற மக்கள்.. நம்மைப் போன்ற அப்பாவிகள்.. நம்மைப் போன்ற ஜீவராசிகள் என்று சக மனிதர்களைப் பற்றி அதிகம் சிந்திப்பதும், உணர்வுகளால் நெருங்குவதும் மிடில் கிளாஸ் மன்னர்களின் சமூக அக்கறையினால் எழும் எண்ணம்தான்.

  பாதிக்கப்பட்ட மக்களின் வர்க்கப் பின்னணியைப் பார்க்காமல் சோகத்தை மட்டுமே தனக்கு நேர்ந்ததாகவே நினைத்துப் பார்த்து வருத்தப்படுவதும் மிடில் கிளாஸ் மன்னர்களின் ஒருவகை சமூக அக்கறைதான் ஸார்..

  இதற்காக அவரவர் குடும்பத்தை அப்படியே விட்டுவிட்டு சுனாமி பாதித்த இடத்திற்கு ஓடியிருக்க வேண்டும். அங்கேயே தங்கியிருந்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளையெல்லாம் செய்திருக்க வேண்டும். அதுதான் நிஜமான சமூக அக்கறை என்றால் அதன்பின் அந்த மிடில் கிளாஸ் மன்னர்களின் வீடுகளில் நிகழ்வதும்,நிகழ்ந்திருப்பதும் சுனாமி பேரழிவுகளாகத்தான் இருந்திருக்கும். எல்லோரும் மனிதர்கள்தானே..

  முதலில் உதவுகின்ற எண்ணம் மனதில் வேரூன்ற வேண்டும். அந்த எண்ணம் மேம்பட வேண்டும். பின் அந்த எண்ணம் செயல்பட வேண்டும். இப்படி ஒருவர் நினைப்பதே சமூக அக்கறைதான். இதையெல்லாம் அறிவுப்பூர்வமாக, தர்க்கரீதியாக யோசிக்காமல் உணர்வுப்பூர்வமாக யோசித்துப் பாருங்கள். எது சமூக அக்கறை என்பது புரியும்..

 10. டி.அருள் எழிலன் said...

  ரோசா சொன்னது உண்மைதான் கும்பகோணம் தீ விபத்து சுனாமி பேரழிவு இன்னும் ஏற்படுகிற இம்மாதிரி நிகழ்வுகளில் மிடில் கிளாஸ் வர்க்கத்துக்கு ஏற்படுகிற அறிப்பை பார்க்க முடியும்..இவங்க வீட்டு பழந்துணிகளை கொண்டு போய் கொட்டுகிற குப்பைத் தொட்டியாக சுனாமியின் போது மீனவ குடியிருப்புகளை மாற்றினார்கள்.இன்னும் சில பேர் புளித்துப் போன தயிர் சாதத்தையும் சாம்பார் சாதத்தையும் கொண்டு போய் கொடுத்தார்கள்.குமரி மாவட்டத்தில் இபபடி கொடுத்த போது மீனவ பெண்கள் ''எங்களுக்கு மீன் குழம்பு வேணும் பக்கத்து கோட்டலிலாவது வாங்கி கொடுங்கள் என கேட்டார்களாம் அதை சே..என்ன இந்த சமூகம் என ஒருவர் எழுதுகிறார்...இந்த மிடில் கிளாஸ் அரிப்பில் ஒளிந்திருக்கும் போலிப் பெருமிதம் ஒரு விதமான தீண்டாமை தன்மை உடையது.

 11. Anonymous said...

  ராஜீவ் கொலை வழக்கில் 28 பேருக்கு பூந்தமல்லி தனி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய போது.உலகமே பேரதிற்ச்சிக்குள்ளானது.ஆனால் அப்போது குமுதல் இதழில் இருந்த மாலன் என்ன எழுதினார் தெரியுமா?''இந்த 28 பேரையும் தூக்குல் போடும் போது எழும் விசையின் ஓசை அங்கே கேட்க வேண்டும்.அதாவது வன்னிக்காடுகளுக்கு கேடக வேண்டும் எனறு எழுதினார்.இவரெல்லாம் ஒரு பத்திரிகையாளராம்...
  ஒரு பத்திரிகையாளன் தேச இன மொழி போன்ற எல்லைகளில் பொறுப்புள்ளவனாக நடந்து கொள்ள வேண்டும்.காரணம் பத்திரிகைப் பணி என்பது பொதுப் பணி...இனவாதம் பேசிய பார்ப்பன மாலன் இன்னும் அந்த தலையங்கத்திற்காக மன்னிப்பு கோர வில்லை.அதற்குள் ஈழத்தமிழர்கள் நேர்மையற்றவர்கள் என பேசுகிறார்.சென்னை பல்கழைக் கழக மண்டபத்துக்குள் ஒரு பதிவர் பட்டறையில் வைத்து மாலன் இவ்விதம் பேசுகிறார் என்றால் அது எந்த தைரியத்தில் ஈழத்தமிழர்கள் ஒரு தடை செய்யப்பட்ட வாழ்வை உலகம் முழுக்க வாழ்கிறார்கள்.அவர்கள் யூதர்களைப் போல ஒரு நாடில்லாமல் அலைகிறார்கள் எல்லா ஈழத்தமிழினதும் ஒரு வேட்கை இருக்கிறது..அதற்கு மாலன் பொன்ற பார்ப்பனர்கள் பதில் சொல்லொயே ஆகவேண்டும்.

 12. கையேடு said...

  neengal virivaaha ezhuthinaal pattarai arangeetriyavarhalai eppadi punpaduththum..??? ippadi virivaana karuththu maatrangalayum vivaathangalayum pirappikka seythathuthaaney oru kalanthurayaadal allathu pattaryin vetriyaaha irukka mudiyum. niyaayamaana kelvihalai munniruththum pothu eppadi akkelvikkaana thallaththai uruvaakiyavarhal punpada mudiyum, nyiyaamaaha perumaippadaththaaney vendum.
  ____________________
  neengal ezhuthuhindra ovvoru karuthukkum atharkku yethirkaruthudayavarhal punpattuk kondey irupparhal - atharkaaha mattrukk karuthuhalai vivaathikkaamal irukka mudiyumaa..

  neengal appadippatta oru pattarayilirunthu eduthukkonda oru karuthaakaththai allathu vehujana manobaavaththai murayaana pahuppaaivukkutpaduththi veru oru pathivu ezhuthinaal nichayam nanraaha irukkum.
  __________________

  sorry - thamizhai english il type seithaal its really difficult to read it even if i read it for myself again - but bear with me
  _________________
  the charity mentality will never give a permanent solution for a problem, rather it enhances the problem, which we have lot of evidences, in orphanages, thottil kuzhanthaihal, care centres etc. etc.... but i am not underestimating their work on giving support to the people who are in immediate need. that is a human concern but not a social concern.
  but there must be a simultaneous work going on complete eradication of charities such that we come to a situation where there is no need for charity business and mentality.

  the growth of a charity is the achievement of the founder and his humanity can be praised for that. but that is the indication of the declanation of a society as a whole.
  ____________________
  - ranjith

 13. மிதக்கும்வெளி said...

  நண்பர் உண்மைத்தமிழன்,

  முழுவதுமாக உங்கள் பின்னூட்டத்தைப் படிக்க முடியவில்லை, சாரி, (பொறுமைஇல்லைப்பா). பாட்டாளிகளும் மிடில்கிளாசில்தான் இருக்கிறார்கள் என்ற 'அரிய உண்மையை' உங்கள் மூலம் அறிந்துகொண்டேன். நன்றி. குளோபல் வார்மிங்,ஓசோன் ஓட்டை, சுற்றுச்சூழல் சீர்கேடு இத்தோடு பெருகிவரும் அணுஆயுதச் சோதனை, தொழில்வளர்ச்சி என்ற பெயரில் இயறகைவளங்கள் சூறையாடப்படுவது, பன்னாட்டுக் கம்பெனிகள் உள்நாட்டு நீர்வளங்கள் உள்ளிட்ட வளங்களை மாசுபடுத்துவது ஆகியவற்றைத் தொடர்புபடுத்திப் பாருங்கள். தமிழனுக்கு உண்மை புரியும். மீண்டும் 'திண்டுக்கல்சர்தார்' என்ற பெயரில் புதுபிளாக் ஆரம்பித்துவிட்டீர்கள் போல, வாழ்த்துக்கள். தலைப்பு அதே பார்ப்பனப் பாசிஸ்ட் சோவின் வரிகள். யாருக்கும் வெட்கமில்லை தலைப்பின் கீழ் இருள்நீக்கி சுப்பிரமணியம், சுப்பிரமணியன்சுவாமி,ஜெயலலிதா, அத்வானி கடைசியா மொட்டைப் பார்ப்பான் சோ படமும் போட்டுட்டீங்கன்னா இன்னும் பொருத்தமா இருக்கும்.

 14. ஜடாயு said...

  // எழுத்தாளர் தஸ்லிமா இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் தாக்கப்பட்டதைக் கண்டிக்கிறேன் //

  மிதக்கும் வெளி அய்யா,இந்த மதவெறியர்களை உங்களுடன் இணைந்து நானும் கண்டிக்கிறேன். தங்கள் கண்டக் குரலை ஒரு தனி இடுகையாகவும் பதிவு செய்யுங்கள்.

  பங்களாதேசின் இஸ்லாமிய மதவெறி மிருகங்களால் விரட்டப் பட்டு பாரதத்தின் சுதந்திரக் காற்றை சுவாசிக்க இடம் தேடி வந்திருக்கும் தஸ்லீமா பெண்மையின், மனிதாபிமானத்தின் குரல்.

  இந்திய மண்ணில் இந்த எழுத்தாளர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்த முயல்கிறது, அவரது தலைக்கு விலை வைக்கிறது இஸ்லாமிய தீவிரவாதம். இந்த மிருகங்களை எதிர்த்து ஒரு கிறீச் குரல் கூட எழுப்பத் திராணியற்றுப் போய்விட்டனரா கருத்துச் சுதந்திரத்தின் காவலர்கள்? இஸ்லாமிய அடிவருடித் தனத்திற்கு எல்லையே கிடையாதா?

  இப்படிக்கு -

  சில பதிவுகள் முன்பு நீங்கள் எழுதிய "சீதா பாலம்" போன்ற அபத்தக் கவிதைகள் என் மனத்தைப் புண்படுத்தினாலும், அவற்றை எழுதுவதற்கு உங்களுக்கும், அதை விமர்சிப்பதற்கு எனக்கும் இருக்கும் சுதந்திரம் என்றென்றும் இந்த மண்ணில் பாதுகாக்கப் படவேண்டும் என்று விழையும் உண்மை இந்து - ஜடாயு.

 15. மிதக்கும்வெளி said...

  நன்றி ஜடாயு,

  கருத்துச் சுதந்திரம் காப்பது குறித்து நீங்கள் பல கதைகளைப் பொழிந்தாலும் எம்.எப். உசேனும் தீபாமேத்தாவும் அப்படிச் சொல்லமாட்டார்களே?