கைவிடப்பட்ட முஸ்லீம்கள்...1998 நவம்பர் மாதம் செல்வராஜ் என்ற போலிஸ்காரர் முஸ்லீம் இயக்கமாகிய அல் உம்மா அமைப்பினரால் படுகொலை செய்யப்பட்டதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து போலீஸ்ரவுடிகளும் இந்துத்துவ வெறியர்களும் கோவை வீதிகளெங்கும் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறையை முன்னின்று ஏவினர். இக்கலவரத்தில் பத்தொன்பது முஸ்லீம்கள் கொல்லப்படுகின்றனர். முஸ்லீம்களின் உடைமைகள் சூறையாடப்படுகின்றன. ஷோபா என்னும் முஸ்லீம் ஒருவரால் நடத்தப்பட்ட ஜவுளிக்கடை அழிக்கப்படுகிறது.

'தான் தேர்தலில் ஜெயித்தால் முஸ்லீம்களைப் பயங்கரவாதிகளைப் போல கண்காணிக்கிற உக்கமேடு செக்போஸ்ட் உட்பட பல செக்போஸ்ட்களை நீக்குவேன்' என்று உறுதியளித்து அதை நிறைவேற்றவும் செய்த அப்போதைய கோவைச் சட்டமன்ற உறுப்பினர் சி.டி.தண்டபாணி என்னும் தலித் சமூகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ வேட்டி உரியப்பட்டு உள்ளாடையோடு இந்துத்துவ மற்றும் போலீசுக் குண்டர்களால் சாலையில் விரட்டப்படுகிறார்.

அதைத் தொடர்ந்து நிகழ்ந்த குண்டுவெடிப்புகளையட்டி அப்போதைய கருணாநிதி அரசு பொடா சட்டத்தைக் கொண்டுவந்து அல் உம்மாவைத் தடை செய்து நூற்றுக்கணக்கான முஸ்லீம் இளைஞர்களைச் சிறையிலடைத்தது. தன் கட்சியைச் சேர்ந்த தண்டபாணி எம்.எல்.ஏ இறந்தபோதுகூட அவரைப் போய்ப்பார்க்காத கருணாநிதி அப்போதைய பிஜேபி எம்.எல்.ஏ வேலாயுதம் உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது சென்று உடல்நலம் விசாரித்தார். இதில் கருணாநிதியின் துரோகம் இத்தன்மையெனில் தமிழ்த்தேசிய அமைப்புகளின் துரோகம் வேறுமாதிரியானது.

ராஜிவ் கொலையையட்டி 24 அப்பாவித்தமிழர்கள் சிறையிலடைக்கப்பட்டு அவர்களில் ஆறுபேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழர்தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் தமிழீழ ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு என்னும் அமைப்பு அவர்களின் விடுதலைக்கான இயக்கம் ஒன்றை அமைத்தது.

இது வெறுமனே அவர்களது வழக்கு நிதிக்கான நிதி சேகரிப்பு இயக்கமாக மட்டும் அமையவில்லை. மரணதண்டணை ஒழிப்பு இயக்கமாக மாறியது. முதன்முதலாக மரணதண்டனை ஒழிப்பு என்னும் கருத்தாக்கம் மக்கள் மத்தியில் வீச்சாக பிரச்சாரம் மூலம் முன்வைக்கப்பட்டது. இறுதியில் கருணாநிதியிலிருந்து சோனியா வரை அதை ஏற்குமளவிற்கு அவ்வியக்கம் வெற்றிகண்டது.

ஆனால் இந்த தமிழ்த்தேசியர்கள், முஸ்லீம் இளைஞர்கள் பொய்க்குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டபோது அவர்களுக்காய் இயக்கம் நடத்தவோ நிதி திரட்டித்தரவோ முன்வரவில்லை. பின்னால் கொண்டுவரப்பட்ட பொடாவை எதிர்த்த வீச்சும் வீரியமும் கருணாநிதியால் முஸ்லீம்களை ஒடுக்குவதற்காகவே கொண்டுவரப்பட்ட மூத்த பொடாவை எதிர்ப்பதில் இல்லை.

தமிழர்கள் என்பவர்கள் முஸ்லீம் அல்லாதவர்கள் என்பதாகவே இன்றுவரை தமிழ்த்தேசிய அமைப்புகளின் செயற்பாடுகள் தொடர்கின்றன. மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் என்பதற்காகக் குரல்கொடுத்தவர்கள் அப்சலின் மரணதண்டனைக்கு எதிராய்ப் பேரளவு எதிர்வினை எதுவும் நிகழ்த்தவில்லை. இப்போது கோவைகுண்டுவெடிப்பு தொடர்பான தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. பாட்சா, அன்சாரி உட்படப் பலரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றத்தால் உறுதிசெய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கும் இன்னும் சில நாட்களில் மரணதண்டனை விதிக்கப்படலாம். நாளை அவர்களுக்காக மரணதண்டணை ஒழிப்பு இயக்கத்தை நடத்த தமிழ்த்தேசிய அமைப்புகள் முன்வருமா?

கேரளாவில் இயங்கிவரும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மதானி. மக்கள் ஜனநாயகக் கட்சி தேர்தலில் நம்பிக்கையுள்ள ஒரு அரசியல்கட்சி. முஸ்லீம்கள் மட்டுமில்லாமல் கணிசமான தலித்துகளும் இவ்வமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர். இவ்வியக்கத்தின் தலைவர் மதானியைக் கோவை குண்டுவெடிப்பில் தொடர்புடையவர் என்று காவல்துறை கைதுசெய்து ஒன்பது ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டிருந்தார்.

சிறைக்குச் செல்லும்போது 90 கிலோ எடையிருந்த மதானியின் தற்போதைய எடை 48 கிலோ. அவருக்கு பொருத்தப்பட்டிருந்த செயற்கைக்கால்கள் உடல் எடைக்குறைவால் பிரச்சினையானபோது அவரை குறைந்தபட்சம் மருத்துவசிகிச்சைக்காகப் பிணையிலாவது விடுதலை செய்யவேண்டுமென்று பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் மனித உரிமை ஆர்வலர்களும் அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர்.

கடந்த ஆறுமாதங்களுக்கு முன் தமிழக எழுத்தாளர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஒரு அறிக்கையை அரசுக்கு அனுப்பினர். இவ்வறிக்கையில் அ.மார்க்ஸ், சாருநிவேதிதா, 'புதியகலாச்சாரம்' தோழர்.வீராசாமி, கவிஞர்.சுகிர்தராணி, வழக்கறிஞர்.ரத்தினம், கோ.சுகுமாரன், பேரா.திருமாவளவன் உட்படப் பலரும் பெரியார்தி.க, ஆதித்தமிழர்பேரவை போன்ற அமைப்புகளும் கையெழுத்திட்டிருந்தனர். ஆனாலும் மதானி பிணையில் விடுவிக்கப்படவில்லை.

ஆனால் இப்போது மதானி குற்றமற்றவர் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஆனாலும் அவரை விடுதலை செய்துவிடவில்லை. பெரியமனதோடு அவரைப் பிணையில் விடுவிக்க சம்மதித்திருக்கிறது. ஒன்பது ஆண்டுகாலம் எந்த குற்றமும் செய்யாமல் சிறையிலிருந்த மதானியின் மன உளைச்சல், உடல்நலக் குறைபாடு, பொருளியல் இழப்பு ஆகியவற்றை அரசு, நீதிமன்றம், சட்டம், போலீசு எப்படி ஈடுகட்டும்? இது மதானிக்கு மட்டுமல்ல, நிறுவனங்களால் குற்றவாளிகளாக்கப்பட்ட அனைவருக்குமான கேள்வியே.

20 உரையாட வந்தவர்கள்:

 1. We The People said...

  //1998 நவம்பர் மாதம் செல்வராஜ் என்ற போலிஸ்காரர் முஸ்லீம் இயக்கமாகிய அல் உம்மா அமைப்பினரால் படுகொலை செய்யப்பட்டதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து//

  செல்வராஜ் கொலை நடந்தது 1997 நவம்பரில்!

 2. Unknown said...

  //இக்கலவரத்தில் பத்தொன்பது முஸ்லீம்கள் கொல்லப்படுகின்றனர்.//
  துரத்தி துரத்தி மருத்துவமனையில் வைத்து கொல்லப் பட்டது முதல், சிறுவர்கள் குறியறுத்து கொல்லப்பட்டது வரை, இதை அரை வரியில் எத்தனையோ சோகங்கள் சுருங்கிக் கிடக்கின்றன சுகுணா திவாகர்.
  எனினும் சொன்னதற்காய் நன்றி.

 3. ╬அதி. அழகு╬ said...

  பதிவுக்கு மிக்க நன்றி!

  //அ.மார்க்ஸ், சாருநிவேதிதா, 'புதியகலாச்சாரம்' தோழர்.வீராசாமி, கவிஞர்.சுகிர்தராணி, வழக்கறிஞர்.ரத்தினம், கோ.சுகுமாரன், பேரா.திருமாவளவன் உட்படப் பலரும் பெரியார்தி.க, ஆதித்தமிழர்பேரவை போன்ற அமைப்புகளும் கையெழுத்திட்டிருந்தனர்.//

  இவர்களெல்லாம் தீவீர வாதிகளுக்குப் பால் வார்ப்பவர்களாம். திண்ணையில் ஒரு குஞ்சு புலம்பி இருந்தது. படித்தீர்களா?

 4. மிதக்கும்வெளி said...

  வீ த பீப்பிள்,

  சரிபார்க்கிறேன்.

  அழகு,

  தாங்கள் கொடுத்த லிங்க் வழி போகமுடியவில்லை.

 5. மிதக்கும்வெளி said...

  வீ த பீப்பிள்,

  சரிபார்க்கிறேன்.

  அழகு,

  தாங்கள் கொடுத்த லிங்க் வழி போகமுடியவில்லை.

 6. S.ஜகபர் சாதிக் said...

  எந்தக் குற்றமும் செய்யாத நிலையில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்தவர்களுக்கும் தண்டனைக் காலத்தை விட அதிகமான காலம் சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கும் உரிய இழப்பீடு தமிழக அரசு வழங்க வேண்டும். சிறு குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டு சிறை சென்றவர்களுக்குக் கூட வேலை வாய்ப்புகள் மறுக்கப்படும் நிலையில் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது நிரபராதிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டவர்களுக்கு, சுய தொழில் தொடங்கும் வகையில் கணிசமான நிதியுதவி தமிழக அரசு வழங்க வேண்டும்
  பதிவுக்கு மிக்க நன்றி

 7. S.ஜகபர் சாதிக் said...

  கோவை குண்டு வெடிப்பு வழக்கில் அப்துல் நாஸர் மஃதானி உள்ளிட்டவர்கள் மீது பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்த காவல்துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  பதிவுக்கு மிக்க நன்றி

 8. Anonymous said...

  /**சிறுவர்கள் குறியறுத்து கொல்லப்பட்டது வரை, இதை அரை வரியில் எத்தனையோ சோகங்கள் சுருங்கிக் கிடக்கின்றன சுகுணா திவாகர்.
  எனினும் சொன்னதற்காய் நன்றி.*/

  Mr.Sultan, Please provide any name who died like that in coimbatore incident. Please donot exacreate things and make muslims not to get any sympothy....

  Theeran

 9. மரைக்காயர் said...

  //ஒன்பது ஆண்டுகாலம் எந்த குற்றமும் செய்யாமல் சிறையிலிருந்த மதானியின் மன உளைச்சல், உடல்நலக் குறைபாடு, பொருளியல் இழப்பு ஆகியவற்றை அரசு, நீதிமன்றம், சட்டம், போலீசு எப்படி ஈடுகட்டும்? இது மதானிக்கு மட்டுமல்ல, நிறுவனங்களால் குற்றவாளிகளாக்கப்பட்ட அனைவருக்குமான கேள்வியே.//

  நியாயமான கேள்வி.. பதில் சொல்வாருண்டா?

 10. ╬அதி. அழகு╬ said...

  தொடுப்பைக் கொடுக்கும்போது தவறிழைத்து விட்டேன்; மன்னிக்கவும்.

  சரியான தொடுப்பு:http://www.thinnai.com/?module=displaystory&story_id=206100610&format=html

 11. Anonymous said...

  மூஸ்லிம் தீவிரவாதிகளை உங்களைப் போன்றவர்கள் தான் ஊரமிட்டு வாளர்க்கின்றனர்.

  தீவிரவாதிகளை ஒடுக்கும் மூன் தீவிரவாதத்திற்கு துணைபோகும் தேசவிரோதிகளை ஒழிக்க வேண்டும். என்றாலே முழுமையாக தீவிரவாதத்தை ஒழிக்க முடியும்.

  சாமீபத்தில் வீசுவாமித்திரர் எழுதிய சவுக்கடி கட்டுரையே இதற்கு தக்க பதிலாக அமையும்.
  *******************************

  தீவீரவாதிகளுக்குப் பால் வார்க்கும் தமிழ் எழுத்தாளர்கள்

  விஸ்வாமித்திரா

  பாரத தேசத்தில் ஓட்டுப் பொறுக்குவதற்காக எதையும் விற்கும், காசுக்காக நாட்டையே விலை பேசும் அரசியல்வாதிகளை நாம் அன்றாடம் சந்திக்கிறோம். அது போன்ற கேடு கெட்ட தேசத் துரோக அரசியல்வாதிகள் நமக்குப் புதிததல்ல. காஷ்மீரத்து குலாம் நபி ஆசாத்தில் இருந்து கேரள அச்சுதானந்தன் வரை அரசியல் பிழைப்பிற்காக தீவிரவாதிகளுக்குத் துணை போகும் கேடு கெட்ட மானம் கெட்ட அரசியல்வாதிகள் நமக்குப் புதிதல்ல. நாட்டின் பாராளுமன்றத்தைத்தையே தாக்கி 11 இந்திய வீரர்களைக் கொன்று குவித்த ஒரு கொடிய மிருகத்துக்கு வக்க்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிறது தேசத் துரோக காங்கிரஸ¤ம், கம்னியுஸ்டுகளும். சீனப் போரில் சீனாவை ஆதரித்த கம்னியுஸ்டுகளின் இன்றைய முதல்வர் அச்சுதானந்தன் 100 பேரைக் கொன்ற கொடிய மிருகத்துக்கு விடுதலை கோரி சென்னைக்கு காவடி எடுத்த அக்கிரமம் சமீபத்தில் நடந்தேறியது. ஒரு விஸ்கி பாட்டிலுக்காகவும், சிற்றினபங்களுக்காகவும் தேசத்தின் பாதுகாப்பு ரகசியங்களையே விலை பேசிய அதிகாரிகளை நாம் அறிவோம். சுவிஸ் வங்கிகளிலும், செயிண்ட் கிட்ஸ் தீவுகளிலும் குவியப் போகும் பணத்துக்காக சவப்பெட்டியில் கூட ஊழல் செய்த அதிகாரிகள் நமக்குப் புதிதல்ல. ஆனால் இந்தக் கேடுகெட்ட, நாசகார, சதிகார, காசுக்காக தன் வீட்டுப் பெண்களைக் கூட விற்கத் தயங்காத அரக்கக் கும்பலுடன் இன்று இன்னொரு நாசகாரக் கும்பலும் சேர்ந்திருக்கிறது, அந்தக் கும்பல் வேறு எதுவும் அல்ல, தங்கள் எழுத்துக்களால் மக்களை உய்விக்க அவதாரம் எடுத்த ந

  து மாண்புமிகு எழுத்தாளர்கள்தாம்.

  அருந்ததி ராய் போன்ற தேசத் துரோக எழுத்தாளர்கள் வடக்கில் ஏற்கனவே பிரபலம்தான். பாக்கிஸ்தானில் சென்று கூசாமல் இந்திய எதிர்ப்புப் பிரச்சாரம் செய்வதும், இந்திய நலன்களுக்கு எதிராகவே எழுதுவதும் பேசுவதுமே தனது தொழிலாகக் கொண்ட அருந்ததி ராய் போன்ற பிறவிகளுக்கு இப்பொழுது தென்னாட்டில் இருந்து ஒரு கும்பல் சேர்ந்து கும்மியடிக்கக் கிளம்பியிருக்கிறது.

  தமிழ் நாட்டை தங்கள் எழுத்துக்கள் மூலமாக உய்விக்க அவதாரம் எடுத்த எழுத்தாளர்கள் பலர் சேர்ந்து ஒரு போராட்டம் நடத்துகிறார்கள். கையெழுத்து வேட்டை நடத்துகிறார்கள், அந்த தார்மீக மனித உரிமைப் போராட்டத்தில் குதித்து தங்களது கோரிக்கைகளை வைத்திருக்கிறார்கள். கோரிக்கை என்ன தெரியுமா ?

  தமிழ் நாட்டில் வறுமையில் வாடும் எழுத்தாளர்களின் குடும்பங்களுக்கு உதவி கேட்டோ,

  தமிழ் நாட்டு வியாபார நிறுவனங்களில் கொத்தடிமையாக வேலை செய்யும் இளம் சிறார்களின் விடுதலை கோரியோ

  தமிழ் நாட்டில் இருந்து கேரளாவுக்கும் கர்நாடகாவுக்கும், பம்பாய்க்கும் கடத்தப் பட்டு விபச்சாரத்தில் சீரழியும் இளம் பெண்களின் நல்வாழ்வு குறித்தோ

  தமிழ் நாட்டுச் சிறைகளில் நீதி கிடைக்காமல் போராடும் அப்பாவி ஏழைகளுக்கு விடுதலை கோரியோ

  தமிழ் நாட்டில் தலை விரித்தாடும் லஞ்ச லாவண்யங்களுக்கு எதிரான கோரிக்கையோ

  தமிழ் நாட்டின் தலைமைக் குடும்பத்தால் நடத்தப்படும் தொலைக்காட்சி மா·பியாக் கும்பலை எதிர்த்தோ

  தமிழ் நாட்டில் மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடித்து தங்கள் குடும்ப டி வி கொழிக்க அளிக்கப் படும் இலவச டி வி கொடுமைகளை எதிர்த்தோ

  தமிழ் நாட்டு அரசியல்வியாதிகளால் கண்டு கொள்ளாமல் மக்களைக் கொல்லும் சிக்குன் குனியா நோய் குறித்தோ

  தமிழ்நாட்டின் அன்றாடம் களவாடப் பட்டு அழிக்கப் படும் இயற்கை வனக்களைக் குறித்தோ, மண் கொள்ளை குறித்தோ, மரக் கொள்ளை குறித்தோ, இவை போக தமிழ் நாட்டு மக்கள அன்றாடம் அலைக்கழிக்கும் ஆயிரக்கணக்கான பிரச்சினைகளைக் குறித்தோ அல்ல இந்த கேடுகெட்ட எழுத்தாளர்களின் போராட்டம். இந்தக் கேவலமான பிறவிகள் போராடுவதோ ஒரு தீவிரவாதியின் விடுதலைக்காக. ஆம், அப்துல் நசார் மதானியென்ற மனித உருவில் திரிவும் ஒரு மிருகத்துக்கு ஜாமீன் விடுதலை கேட்டு. யார் இந்த மதானி ?

  1998 கேயம்புத்தூரில் குண்டு வைத்து 60 மேற்பட்ட ஏழை இந்துக்களை, நடைபாதைக் கடைக்காரர்களை, ஜவுளிக் கடையில் வேலை பார்க்கும் அப்பாவி ஏழை பெண்களை கோடூரமாகக் கொன்று தீர்த்தது ஒரு அரக்கக் கூட்டம். அந்த அரக்கக் கூட்டத்தை வேறு வழியில்லாததால் காவல் துறை கைது செய்து இன்று அந்த மிருகங்களுக்கு சிறைச்சாலைகளில் ராஜ உபசாரம் அளித்து வருகிறது தமிழ் நாடு அரசு. அந்தக் கொடூரமானக் கோரக் கொலையைத் திட்ட மிட்டு நடத்தியவன் அப்துல் நசார் மதானி என்ற தீவிர மத வெறியன். கேரளாவில் தனது ரவுடித்தனத்தாலும், மிரட்டல்களாலும் , வன்முறையாலும், பண பலத்தாலும், பாக்கிஸ்தான் உதவியினாலும் மதத்தீவீரவாதத்தைப் பரப்பி வந்தக் கயவன் மதானி. கோவை குண்டு வெடிப்பை திட்டமிட்டு அதற்கான வெடி பொருட்களைத் தருவித்துக் கொடுத்து கோடூரமான படுகொலைகளின் காரணக்ர்த்தா. தமிழகப் போலீசாரால் பல்வேறு கொடூரமான குற்றங்களுக்காக கோர்ட்டில் குற்றம் சாட்டப் பட்டவன். இவனது விடுதலை இந்தியாவின் அமைதியையும், மத நல்லிணக்கத்தையும் குலைத்து, ஆயிரக்கணக்கான இந்துக்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடியது. அசுர குணங்களின் மொத்த உருவம்.

  இது போன்ற ஒரு கொடிய விலங்குக்கு விடுதலை கேட்கிறார்கள் தமிழகத்தின் மேன்மை தங்கிய எழுத்தாள பெருமக்கள் சிலர். காறி உமிழ வேண்டாம் இந்தக் கயவர்களின் மூஞ்சியில் ? ஒரு தீவீரவாதிக்குக் வக்காலத்து வாங்கும் இந்தப் பிறவிகள் எல்லாம் எழுத்தாளர்கள்!! படித்தவன் சூது செய்தால் அய்யோ என்று போவான் என்று கூறினான் பாரதி. இங்கு ஒன்றல்ல இரண்டல்ல 42 படித்த எழுத்தாளர்கள், கவிஞர்கள் சூது செய்துள்ளார்கள். எதற்காக இந்த சூது என்பதை ஊகிப்பது ஒன்று சிரமமான காரியம் அல்ல. அரசியல்வாதிகள் ஓட்டுக்காக தீவிரவாதிகளை ஆதரிக்கின்றனர் என்றால் இந்த வெட்கம் கெட்ட ஜென்மங்கள் எதுக்காக ஆதரிக்கிறார்கள் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

  இந்த எழுத்தாளர்கள் என்றைக்காவது கோவை குண்டு வெடிப்பில் தன் குடும்பத்து ஒரே சம்பாதிக்கும் நபரை இழந்து அநாதை ஆன குடும்பத்தைப் பற்றி எண்ணியிருப்பார்களா, எழுதி இருப்பார்களா ?

  கோவை குண்டு வெடிப்பில் சுக்கல் சுக்கலாகச் சிதறிய ஏழை நடைபாதை வியாபாரியையும் அவனோடு சிதறிய அவனது குடும்பத்தையும் பற்றி ஒரு வரியாவது எங்காவது ஒரு கவிதை ஒரு வரிக் கதையையாவது இதில் ஒருவராவது எழுதியிருப்பார்களா ?

  கோவை குண்டு வெடிப்பினால் தன் தந்தையை, தாயை இழந்து அநாதையான குழ்ந்தைகளைப் பற்றி ஒரு நாளாவது இந்த கேடு கெட்ட ஜென்மங்கள் நினைத்தாவது பார்த்திருப்பார்களா ?

  ஒவ்வொரு சிறைச்சாலையிலும் ஆயிரக்கணக்கான அப்பாவிகளும் ஏழைகளும் உரிய மருத்துவ வசதி இன்றி செத்துக் கொண்டிருப்பார்களே அவர்களுக்கெல்லாம் ஜாமீன் வேண்டி இந்த எழுத்தாளப் பெருமக்கள் என்றைக்காவது கையெழுத்து வேட்டை நடத்தி இருபார்களா?

  அதென்ன மதானிக்கு மட்டும் இவ்வளவு அக்கறை, ஒரு வேளை குறைந்த பட்சம் நூறு பேர்களையாவது கொன்ற மத வெறி பிடித்த மிருகங்களுக்கு மட்டும்தான் வக்காலத்து வாங்குவார்களா இந்த அறிவு ஜீவிகள் ? மதானி பெரிய தலைவராம், மதிப்புக்குரியவராம் வெட்கம் இன்றி சொல்லுகிறார்கள் இந்த மனித குல விரோதிகள். இவர்களது கோரமான நிஜ முகம் இன்று வெளீப்பட்டு விட்டது, இவர்கள் யார் பக்கம் என்பது இன்று தெளிவாகி விட்டது. மக்களை குண்டு வைத்துக் கொல்லும் கொடிய தீவீரவாதிகளை விட ஆபத்தானவர்கள் இந்த அறிவுத் தீவீரவாதிகள். மதானியை விடக் கொடுமையான தண்டனை அடைய வேண்டியவர்கள் மக்களுக்கு அன்பையும், மனித நேயத்தையும் போதிக்க வேண்டிய இந்த எழுத்தாளர்களும் கவிஞர்களும். தீவிரவாதிக்கு வக்காலத்து வாங்கும் இந்தப் பிறவிகளை எழுத்தாளர்கள் என்றும் கவிஞர்கள் என்று அழைப்பது உண்மையான எழுத்தாளர்களுக்கும் கவிஞர்களுக்கும் நாம் செய்யும் துரோகமாகும்.

  மனித உரிமை என்பது தீவீரவாதிகளுக்கு மட்டும் கிடையவே கிடையாது. அவர்கள் மனிதர்கள் அல்லர், அரக்கர்கள், மிருகங்கள் அந்த கொடூரமான மிருகங்களுக்கு வக்காலத்து வாங்கக் கிளம்பியிருக்கிறது தமிழ் நாட்டில் இருந்து எழுத்தாளர் என்ற போர்வையைப் போர்த்திக் கொண்ட ஓநாய்க் கூட்டம் ஒன்று.

  தேச நலனில் அக்கறை கொண்ட, தீவீரவாதிகளை அழிப்பதில் அக்கறை கொண்ட, இந்த தேசத்தின் பாதுகாப்பிலும் இறையாண்மையிலும் அக்கறை கொண்ட ஒவ்வொரு இந்தியனும் எதிர்க்க வேண்டும் இந்தக் கேடு கெட்டக் கும்பலை. இந்தக் கயவர்களை நாம் அடையாளம் கொள்வதுடன், தீவீரவாதிக்கு ஆதரவு காட்டும் இந்தக் சதிகாரக் கும்பல் அனைவரையும இந்தியாவில் நியாயமான ஒரு அரசாங்கம் நடக்குமானல் குண்டர் சட்டத்திலோ, போட்டா சட்டத்திலோ தேசத்துரோக சட்டத்திலோ உடனடியாக உள்ளே தள்ளி தக்க விசாரணை நடத்தி தயவு தாட்சண்யமின்றி தூக்கில் போட வேண்டும். ஆனால் கேடு கெட்ட இந்த பாரத தேசத்தில் மக்களைக் காக்க வேண்டிய அரசாங்கமே பாராளுமன்றத் தீவீரவாதி அப்சலுக்கு மன்னிப்பு வேண்டி மண்டி போட்டுக் கெஞ்சும் பொழுது, மக்களின் அறிவுக் கண்களைத் திறக்க வைக்க வேண்டிய எழுத்தாளர்கள் அதே தீவீரவாதிகளின் விடுதலைக்காக போராடுவதில் அதிசயம் ஒன்றும் இல்லைதான்.

  மதானியை விடுவிக்கக் கோரி எழுத்தாளர் என்ற போர்வையில் திரியும் குள்ள நரிக் கும்பல் ஒன்றின் கோரிக்கைகளையும் அந்தக் கோரிக்கையை வலியுறுத்திக் கையெழுத்திட்ட தேசத் துரோக, மக்கள் விரோத, தீவீரவாதக் கைக் கூலிகளையும் இங்கு இட்டுள்ளேன். நண்பர்களே நாம் கண்டு கொள்ளுங்கள் இந்தக் கயவர்களை, காறி உமிழுங்கள் இந்த தேசத்துரோகிகளை. மனித குலத்துக்கே எதிரிகளாக எழுத்தாளர்கள் என்ற போர்வையில் உலவும் ஓநாய் கும்பலின், கயவர்களின் அடையாளாங்கள் இதோ:

  இந்த எழுத்துத் தீவீரவாதிகளின் கோரிக்கைகளையும் அதுக்கு ஆதரவாகப் கையெழுத்திட்டவர்களின் பட்டியலையும் கீழே படியுங்கள்

  *****************************************************************************************************

  தமிழக சிறையிலிருக்கும் கேரளாவின் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானியை உடனடியாகப் பிணையில் விடுதலை செய்ய, தமிழக அரசு ஆவன செய்ய வேண்டுமென சமீபத்தில் வெளியிடப்பட்ட எழுத்தாளர்கள் - மனித உரிமை ஆர்வலர்கள் கூட்டறிக்கை கேட்டுக் கொண்டுள்ளது.

  கோவை குண்டுவெடிப்பு வழக்கில், கடந்த 1998 மே மாதம் கைது செய்யப்பட்டு, எட்டு ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும், மதானியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. கடுமையான நீரிழிவு நோய், மூட்டு வலி, முதுகுத் தண்டு பாதிப்பு எனப் பல்வேறு வகையில் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டபோது 108 கிலோவாக இருந்த அவரது உடல் எடை, தற்போது 54 கிலோவாக குறைந்துள்ளது. அவரது வலது காலுக்கு பொருத்தப்பட்டுள்ள செயற்கை கால் மாற்ற வேண்டி உள்ளதால், அவர் எழுந்து நடக்கக் கூட முடியாத நிலையில் உள்ளார்.

  மதானிக்கு சிகிச்சை அளிக்க சிறையில் போதிய வசதிகள் இல்லை. தற்போது சிகிச்சை அளித்து வரும் கோட்டக்கல் ஆயுர்வேத சிகிச்சை மையமும் கூட, சிறையில் சிகிச்சை அளிக்கப் போதிய வசதியில்லை என சான்று அளித்துள்ளது. இந்நிலையில், அவருக்கு நவீன வசதிகள் கொண்ட சிறைக்கு வெளியே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.

  மக்கள் ஜனநாயக கட்சி கேரளாவில் மக்கள் செல்வாக்குடன் செயல்படும், தேர்தலில் பங்கேற்கும் கட்சியாகும். இது, வன்முறையை நோக்கமாகக் கொண்ட கட்சி அல்ல. மதானி இதுநாள் வரையிலும் எந்த வழக்கிலும் தண்டனை அடைந்தவர் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

  உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்கள், கடந்த ஆட்சியின் போது மதானியை பிணையில் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அண்மையில்கூட கேரள முதல்வர் அச்சுதானந்தன், தமிழக முதல்வரை நேரில் சந்தித்து மதானியை விடுதலை செய்யக் கோரியுள்ளார். கேரளாவிலுள்ள அரசியல் கட்சியில் எதுவும் மதானிக்கு பிணை வழங்க எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

  எனவே, கேரளாவின் மக்கள் செல்வாக்குடைய அரசியல் தலைவரான அப்துல் நாசர் மதானியை அவரது உடல்நிலையை கவனத்தில் கொண்டு, உடனடியாக பிணையில் விடுதலை செய்ய தமிழக அரசு ஆவன செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்

  பா. செயப்பிரகாசம், கவிஞர், சிறுகதை ஆசிரியர் -

  அ.மார்க்ஸ், எழுத்தாளர், விமர்சகர் -

  கோ.சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுவை -

  டாக்டர் ப.சிவக்குமார், கல்வியாளர், முன்னாள் அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத் தலைவர் -

  பொ. இரத்தினம், மூத்த வழக்கறிஞர், சமூக நீதி வழக்கறிஞர்கள் மையம்-

  சி.நீலகண்டன், ஆசிரியர், ‘அநிச்ச’- இருமாத இதழ் -

  சுகிர்தராணி, தலித் கவிஞர், பெண்ணுரிமையாளர் -

  வெளி.ரங்கராஜன், எழுத்தாளர், அரங்க விமர்சகர் -

  சாரு நிவேதிதா, நாவலாசிரியர், பத்தி எழுத்தாளர் -

  சுகுணா திவாகர், எழுத்தாளர், பத்திரிகையாளர் -

  ஆ.இரமேசு, தமிழ் ஆய்வு மாணவர் -

  வசுமித்ரா, கவிஞர் -

  புனிதபாண்டியன், எழுத்தாளர், ஆசிரியர் ‘தலித் முரசு’ -

  வீராச்சாமி, எழுத்தாளர் -

  கே.எம்.வேணுகோபால், எழுத்தாளர், பத்திரிகையாளர் -

  ஜெ. ?¡ஜ?¡ன் கனி, கவிஞர் -

  இன்குலாப், கவிஞர் -

  கவிக்கோ அப்துல் ரகுமான் -

  வ.கீதா, விமர்சகர், வரலாற்றாசிரியர், பெண்ணுரிமையாளர் -

  சே.கோச்சடை, தலைவர், தமிழ் மொழிபெயர்ப்பு எழுத்தாளர் சங்கம் -

  கோணங்கி, நாவலாசிரியர் -

  குட்டி ரேவதி, கவிஞர் -

  மதிவண்ணன், கவிஞர் -

  ச.பாலமுருகன், நாவலாசிரியர், பொதுச் செயலர், மக்கள் சிவில் உரிமைக் கழகம் (P.U.C.L) -

  கடற்கரய், கவிஞர், பத்திரிகையாளர் -

  இரத்தின கரிகாலன், கவிஞர் - சு.தமிழ்ச்செல்வி, நாவலாசிரியர் -

  அழகிய பெரியவன், தலித் நாவலாசிரியர் -

  விடியல் சிவா, பதிப்பாளர் -

  லட்சுமி மணிவண்ணன், கவிஞர், நாவலாசிரியர், ஆசிரியர் ‘சிலேட்’ -

  தளவாய் சுந்தரம், எழுத்தாளர், பத்திரிகையாளர் -

  கவிதா சரண், எழுத்தாளர், ஆசிரியர் ‘கவிதா சரண்’ -

  ஜெயந்தன், எழுத்தாளர் -

  யூமா வாசுகி, நாவலாசிரியர், ஓவியர் -

  சி.மோகன், எழுத்தாளர், விமர்சகர் -

  கண்மணி, எழுத்தாளர் -

  ஓடை துரை அரசன், விமர்சகர் -

  சுதாகர் கத்தக், தலித் எழுத்தாளர் -

  கண்ணன். எம், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் -

  சிவக்குமார், எழுத்தாளர், மொழிப்பெயர்ப்பாளர் -

  வெ.கோவிந்தசாமி, மொழிபெயர்ப்பாளர் -

  பெரம்பூர் கந்தன், எழுத்தாளர், ஆசிரியர் ‘அறிவுக் கொடி’

  **********************************************************************************************

  தமிழகச் சிறைகளில் இதை விடக் கடுமையான கொடிய நோய்களில் தவிக்கும் ஆயிரக்கணக்கான சிறைக் கைதிகள் இருப்பார்களே, அவர்களில் பலரும் சாதாரண குற்றவாளிகளாகக் கூட இருப்பார்களே, அவர்களுக்கெல்லாம் என்றைக்காவது வக்காலத்து வாங்கியுள்ளார்களா இந்த எழுத்தாளர்கள் ? ஒரு கைதிக்கு உரிய மருத்துவ உதவி அளிக்கப் படவில்லையென்றால் அரசாங்கம் தனது மருத்துவமனைகளில் மட்டுமே உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க இயலும். அதைத்தான் பிற சாதாரண கைதிகள் பெற்று வருகிறார்கள். இவருக்கு மட்டும் சிறப்புச் சலுகை கேட்க இந்த அறிவு ஜீவிகளுக்கு ஏன் தீடீர் அக்கறை ? ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகள் மதானியின் விடுதலையை கேட்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. எலி ஏன் எள்ளூருண்டைக்குக் காய்கிறது என்பது புரிகிறது. ஆனால் இந்த எலிப் புளுக்கைகள் எதற்காகக் காய்கின்றன ? யாருக்காகக் காய்கின்றன ? கிடப்பது கிடக்க கிழவியைத் தூக்கி மனையில் வை என்று தீடீரென்று ஏன் மதானியின் விடுதலைக்குக் கோரிக்கை. படிப்பவர்கள் இவர்களின் நோக்கத்தைப் புரிந்து கொள்வார்கள். எழுத்தாளன் என்பவன் ஒரு சமுதாயத்தின் அறிவீனத்தைக் களைந்து, மக்களின் அறியாமையைப் போக்கி அவர்களை சிந்திக்க வைக்க வேண்டும். ஆனால் இந்த எழுத்தாளர்களோ ஒரு கொடிய தீவீரவாதியை விடுதலை செய்ய பாடு படுகிறார்கள் என்றால் யார் இவர்கள்? இவர்களின் நோக்கம் என்ன ? கொள்கை என்ன ? எதற்காகச் செய்கிறார்கள் என்பதை நாம் அனைவரும் சிந்தித்து, இவர்களை அடையாளம் காண வேண்டியது

  வசியமாகிறது.

  மத வெறி பிடித்த , ரத்த வெறி பிடித்த ஒரு மிருகத்துக்கு விடுதலை கோரும் இந்த மனித குல விரோதிகளையும் நாம் தீவீரவாதிகளாகவும், தீவீரவாதத்திற்கு தூபம் போடுபவர்களாகவும் தீவீரவாதிகளின் கைக்கூலிகளாகவும் அடையாளம் காண வேண்டும். நமது கடுமையான கண்டனங்களைத் தெரிவிப்பதுடன் இவர்களைப் புறக்கணிப்பது தேசப் பற்றுள்ள ஒவ்வொரு இந்தியரின் கடமையும் ஆகும்.

 12. மிதக்கும்வெளி said...

  நன்றி இந்தியன்.

  மதானியைப் பிணையில் விடக்கோரிய அறிக்கையில் கையெழுத்திட்ட எழுத்தாளர்களின் பெயர்களை என் நினைவிலிருந்துதான் எழுதமுடிந்தது. ஆனால் நீங்கள் முழுமையான பட்டியல் தந்திருக்கிறீர்கள், என் பெயர் உட்பட. இப்போது மதானி மிருகமில்லை என்று சொன்ன 'தேசத்துரோகி' நீதிபதியை என்ன செய்யலாம்? அந்த கோர்ட்டில்தான் தசரதன் ஒண்ணுக்கிருந்த பாத்ரூம் இருந்தது என்று கரசேவை தொடங்கலாமா? போடாங்க...... நீயும் உன் இந்தியன் மசிரும்

 13. Anonymous said...

  Iniya Suguna..antha 19 islaamiya thozharkal padukolai seYYa pattatharkkU enna seythathu intha Vazhakku Mandram/ARASU ??
  antha vazhakkual (podapattathaa?) enna nilayil irukku?ithai patri Yethaavathu theriyuma ungalukku...??

 14. டி.அருள் எழிலன் said...

  அன்புள்ள சுகுணா,
  நீண்ட நாட்கள் உங்களின் பிளாக்கை பார்க்க இயலவில்லை.பிரச்சனை தீர்ந்திருக்கும் என நினைக்கிறேன்.
  மும்பை குண்டு வெடிப்பு வழக்கின் தீர்ப்புகளை தொடர்ந்து இப்போது கோவை குண்டு வெடிப்பின் வழக்கின் தீர்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.
  குற்றம் நீரூபிக்க முடியாத ஒருவரை ஒன்பது ஆண்டுகள் ஜாமீன் கூட கொடுக்காமல் சிறையில் வைத்திருப்பது எவளவு கொடுமை.இஸ்லாமியர்களாக பிறந்ததை தவிர இவர்கள் என்ன தவறு செய்தார்கள்.
  கோவையிலும் மும்பை குண்டு வெடிப்புகளிலும் தீர்ப்புகள் சொல்லும் இந்தியாவின் கூட்டு மனச்சாட்சிக்கு ...பாபர் மசூதியை இடிதவர்களை ஏன் தண்டிக்க கோரவில்லை.முஸ்லீம்களுக்கு எதிரான குஜராத் கலவர வழக்குகள் என்னவானது.கோவையில் 19 பேரை கொலை செய்த இந்து பரிவாரக்கும்பலுக்கு என்ன தண்டனை...1992- 1993-ஆம் ஆண்டுகளில் மும்பையில் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான கலவரத்தில் ''சிரி கிருஷ்ணா கமிஷனால்"சுட்டப் பட்ட பரிவாரக்கும்பல்களுக்கும் அதன் தலைவர்களுக்கும் என்ன தண்டனை...இப்படி கேட்டுக்கொண்டே போகலாம்.அது போல ராஜீவ் கொலை வழக்கு தொடர்பாக சிறையில் இருக்கும் மரண தண்டனை கைதிகள் அதிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் நமக்கு மாற்றுக்கருத்து இல்லை.ஆனால் பெரியார் திராவிடர் கழகம் தவிர ஏனைய தமிழ் தேசிய மைப்புகளின் மௌனம் என்பது கள்ள மௌனம்தான்.
  இந்தியா முழுக்க தேசிய வெறியின் கொந்தளிப்பில் தூக்கு கயிற்றில் தொங்க காத்திருக்கும் இஸ்லாமிய தோழர்களுக்கு நாம் குரல் கொடுப்போம்.

 15. மிதக்கும்வெளி said...

  இனிய நண்பருக்கு

  கோவையில் கொலை செய்யப்பட்ட முஸ்லீம்களைப் பொறுத்தவரை அது தொடர்பாக ஒரு போலீஸ்காரன் மீது கூட வழக்குப் பதியப்படவில்லை. இந்துமக்கள் கட்சியைச் சேர்ந்த அர்ஜுன் சம்பத் உள்பட சிலர் மீது வழக்கு பதியப்பட்டது. அதற்கப்புறம் அது என்ன ஆனது என்று தெரியவில்லை. இதில் ஒரு காமெடி என்னவென்றால் எந்த செல்வராஜ் கொலையிலிருந்து கலவரமும் குண்டுவெடிப்பும் தொடர்ந்ததோ அந்த செல்வராஜ் வழக்கிலிருந்து பாட்சா விடுவிக்கப்பட்டுவிட்டார்.

 16. சுட்டிப் பையன் said...

  சுகுணா திவாகரின் கட்டுரை பாதிக்கப்பட்ட தமிழ் முஸ்லிம்களின் கண்ணீரைத் துடைப்பதாய் அமைந்துள்ளது. அ. மார்க்ஸின் எழுத்துக்களைப் போன்று சுகுணா திவாகரின் எழுத்துக்களும் பரவலான தமிழ் முஸ்லிம் இதழ்களிலும், வெகுஜன இதழ்களிலும் இடம்பிடிக்க வேண்டும். அவரது கட்டுரைத் தொகுப்பும் நூலுருவில் விரைவில் வரவேண்டும்.

 17. பிறைநதிபுரத்தான் said...

  பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கேட்கும் உங்கள் நியாயமான பதிவிற்கு மனமார்ந்த நன்றி.

  பார்த்து எழுதுங்கள் - வந்தேறிகளும்- அவர்களின் அடிவருடிகளும் தங்களை 'போலி'செக்யூலர் வாதி என்று முத்திரைக்குத்தி உங்களை புறக்கணிக்க எத்தனிப்பார்கள் .


  சங்பரிவார இந்தியன் - கை வலிக்க எழுதிய மத துவேஷ கட்டுரைக்கு தங்களின் பதிலில் முத்தாய்ப்பு 'போடாங்க...... நீயும் உன் இந்தியன் மசிரும்'..அபாரம்.

 18. Anonymous said...

  அடேடே....இப்படி வேலை மெனெக்கிட்டு மாங்கு...மங்குன்னு எழுதி அட்டைக் கத்தி சுழற்றிய இந்திய மாவீரனை...போடா மசிருன்னு...ஒரெ வார்த்தையிலெ போட்டுத் தள்ளீட்டியளே.....

  கதிரவன்

 19. ஜமாலன் said...

  அன்புள்ள சுகுணா..
  உங்களின் பதிலடி அருமை. மிதக்கும் வெளியுடன் என்னை இணைத்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

  நான் சமீபத்தில்தான் பதிவர்கள் வெளிக்குள் நுழைந்தேன். நான் பார்த்தவரை பிற்போக்கான மதவெறிக்கொண்டவர்களும் சாதீயப் பெருமிதங்களும் கொண்ட உயர்குடி மனப்பான்மைதான் இவற்றில் மலிந்து கிடக்கின்றது. குறிப்பாக மூவாயிரம் ஆண்டுகளாக உயர்தொழில்நுட்பம் கல்வி ஆகியவற்றைக் கைப்பற்றி இந்தியாவின் 99 சதவீத மக்களை அடிமைக் கொண்டிருக்கும் பார்ப்பண ஆதிக்கமே மிகுந்திருப்பதையும் காணமுடிகிறது. வலைப்பதிவிற்குள்ளும் நாம் இந்த 'எஜமானர்களை' எதிர்த்து கூட்டாக போரிடவேண்டும் போலிருக்கிறது.

  யார் இந்த விசுசுவாமித்திரன். எந்த கும்பத்திலிருந்து குதித்து வந்தான்.. தேசவெறி என்கிற பித்தம் தலைக்கேறிவிட்டது. இரண்டாயிரம் முஸ்லிம்களை கொன்று குவித்த நரேந்திர மோடியைவிட தீவரவாதி யாரேனும் உண்டா? நரமாமிச கோலை வெறியைவிட மோசமான மனித குலம் வெட்கித் தலைக்குனியும் படுபாதகச் செயலான.. ஒரு பெண்ணின் வயிற்றைக்கிழித்து பச்சிளம் சிசவை எடுத்து நேருப்பில்போட்டு ஆனந்தக் கூத்தாடிய கேடுகெட்ட மதவெறிக்கும்பலுக்கு இந்த தேசத்தையும் மனிதகுலத்தையும் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது.

  அறிவுஜீவிகளின் மனசாட்சிப்பற்றிப் பேசும் அருகதையற்ற இவர்கள் தூக்கலிடுப்படாலும் அதைக்கூடக் கண்டிக்கும் ஒரு ஜனநாயக மனசாட்சித்தான் கையெழுத்து இட்டு அறிவுஜீவிகள் மனசாட்சி. மதத்தின் பேரால் விசுசுவாமித்தரன்கள் பிணம் தின்னலாம்... அது தேசப்பற்று?..நீதித்துறை தீர்பளித்து விடுடுதலை செய்தால் தேசத்துரோகம்? அப்படித்தானே.

 20. Gnaniyar @ நிலவு நண்பன் said...

  //எந்த குற்றமும் செய்யாமல் சிறையிலிருந்த மதானியின் மன உளைச்சல், உடல்நலக் குறைபாடு, பொருளியல் இழப்பு ஆகியவற்றை அரசு, நீதிமன்றம், சட்டம், போலீசு எப்படி ஈடுகட்டும்? இது மதானிக்கு மட்டுமல்ல, நிறுவனங்களால் குற்றவாளிகளாக்கப்பட்ட அனைவருக்குமான கேள்வியே.//

  இதுபோன்று அப்பாவிகளை சிறையிலடைத்துவிட்ட பின்னர் குற்றமற்றவர் என்று விடுதலை செய்யப்படும்பொழுது அவருடைய வாழ்க்கை காலத்தை அரசாங்கத்தால் தந்து விட முடியுமா..?

  அதற்குப் பரிகாரமாக அந்த நபருக்கோ அல்லது அந்த நபரின் குடும்பத்திற்கோ அரசாங்க வேலை கொடுக்க வேண்டும்

  சிறையிலிருந்த காலங்களில் அவர் எவ்வளவு சம்பாதித்திருப்பாரோ அதனை அக்குடும்பத்திற்கு வழங்க வேண்டும்

  பின் குறிப்பு

  BACKGROUND உள்ள கை படம் நன்றாக இருக்கின்றது. அதனை எவ்வாறு இட்டீர்கள் என்று சொல்லுங்கறேளன்