ஜெயமோகனை ‘எதிர்கொள்வது’ எப்படி? -


எனக்குத் தமிழில் மூன்று எழுத்தாளர்களைப் பிடிக்காது. சுந்தரராமசாமி, ஜெயமோகன், சுஜாதா. இதில் சுஜாதாவை அரசியல் காரணங்களுக்காக எனக்குப் பிடிக்காவிட்டாலும் அவரது எழுத்தில் உள்ள வெகுஜனத்தன்மையுடன் கூடிய சுவாரசியமும் விறுவிறுப்பும் பிடிக்கும். எனது அம்மா சுஜாதாவின் ரசிகை. அதனால் என் தம்பிக்கு கணேஷ் என்று பெயர் வைத்தார்.

என்னை ஏனோ அரசியலைத் தாண்டியும்கூட ஈர்க்க சு.ராவால் முடியவில்லை. சுந்தரராமசாமியின் எழுத்துக்களைப் படிக்கும்போதும் அவரது புகைப்படங்களைப் பார்க்கும்போதும் எனக்கு சாருஹாசன் ஞாபகம் வரும். தமிழ்ச்சினிமாவில் அதிகம் நீதிபதி வேடங்களை ஏற்று நடித்தவர் சாருஹாசன் அல்லது சாருஹாசன் அதிகம் ஏற்று நடித்த வேடங்கள் நீதிபதி வேடங்கள். சு.ராவும் அப்படித்தான். வாழ்க்கை குறித்து, எழுத்து குறித்து, கல்வி குறித்து தீர்ப்புகள் சொல்லிக்கொண்டேயிருப்பார். அவர் இளைஞர்களுக்கான எழுத்தாளர் அல்ல,மனதளவில் செத்துப்போன பிணங்களுக்கான எழுத்தாளர். சு.ராவின் டைரிக்குறிப்புகள், எழுத்தாளர்களுக்கு எழுதிய கடிதங்கள், கோவில் கும்பாபிகேஷ நன்கொடைச்சீட்டுகள், சுதர்சன் ஜவுளிக்கடை வரவுசெலவுக்கணக்கு என அனைத்தையும் ஆவணப்படுத்தும் காலச்சுவட்டின் முயற்சி வேறு சு.ரா மீது ஈடுபாடின்மையை ஏற்படுத்துகிறது. இன்னும் சு.ரா பயன்படுத்திய உள்ளாடைகள், சேவிங் கிரீம் ஆகியவை ஏலத்திற்கு வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இப்போது சு.ராவைப் படிக்கும் அபாயத்திலிருந்து என்னை நான் விடுவித்துக்கொண்டாலும் சு.ராவைப் போலவே எழுதப் பழகி விட்ட நூறு பேராவது தமிழில் உருவாகிவிட்டார்கள். அந்த அபாயங்களைத்தான் அடிக்கடி எதிர்கொள்ள நேர்கிறது.

ஜெயமோகனின் எழுத்துக்கள் சு.ராவின் எழுத்துக்களுக்குச் சித்தப்பாமுறை. அலுப்பூட்டுகிற எழுத்துக்கள், போதனைகள், பிரகடனங்கள். விஷ்ணுபுரத்திற்குள் உள்நுழைய முடியாத நான் ’பின் தொடரும் நிழலின் குரல்’ முப்பது பக்கங்கள் படித்திருப்பேன். ஒரு லோக்கல் கம்யூனிஸ்ட் கட்சியின் நடைமுறை கூட அரியாது ஜெயமோகன் எழுதியிருந்தார். இதைத் தாண்டி சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி குறித்து விமர்சனம் வைக்கப் போகிறார் என்று சொன்னதும் புத்தகத்தை மூடி வைத்துவிட்டேன். ஒருவழியாக ‘ஏழாம் உலகம்’ நாவலை முடித்து தொலைத்தவுடன் அப்பாடா என்றிருந்தது. மண்ணுக்குச் சம்பந்தமில்லாத அந்நிய வாடை அடிக்கும் அரைகுறைப் பிரதி.

ஒரு மாதத்திற்கு முன்பு ரோசாவசந்திடம் பேசியபோது அவர் சொன்னார், ‘’போகிற போக்கில் ஜெமோவை இந்துத்துவவாதி என்று முத்திரை குத்திவிட்டுப் போவது சரியில்லை என்று (பின்னூட்டத்தில்) சிலர் சொல்கிறார்கள். உண்மையில் ஜெமோ நிறைய எழுதிக்கொண்டுதானிருக்கிறார். அதையெல்லாம் படிக்க வேண்டுமே சுகுணா” என்றார். நானும் அதிலிருந்து கிட்டத்தட்ட ஒருமாதம் ஜெயமோகனின் வலைப்பக்கத்தைத் தொடர்ச்சியாகப் படித்து வந்தேன்.

பிறகுதான் தெரிந்தது. ஜெயமோகனிடம் இருப்பது உழைப்பில்லை,வியாதி என்று. நீரழிவு வியாதி உடையவர்கள் அடிக்கடி சிறுநீர் கழிப்பதைப் போல் ஜெமோ எழுதிக்கொண்டேருக்கிறார். ஒன்றுக்கொன்று முரண்பட்ட அபிப்பிராயங்கள், மேலோட்டமான கருத்து உதிர்ப்புகள் என அத்தனையும் அபத்த உளறல்கள். ஜெமோ எழுதுவதை மறுக்கலாம் என்று தேடிப்பிடித்து வாசித்து வந்தால் அதற்குள் 35 கட்டுரைகள் (வாசகர் கடிதங்கள் மற்றும் பதில்கள் சேர்த்து) எழுதியிருப்பார் ஜெமோ.

எனக்கு விக்கிரமாதித்யனின் கருத்தியலில் கடுமையான விமர்சனங்கள் இருந்தாலும் கட்டுப்பாடுகளும் வரைவெல்லைகளும் அற்ற விக்கிரமாதித்யனின் வாழ்க்கை பிடிக்கும். அவர் அனாயசமாக கவிதைகள் எழுதிக்குவிப்பார். அவற்றில் ஒன்றிரண்டு தேறி விடும். ஆனால் தேறுவது மற்றும் தேறாமை குறித்து எந்த பதட்டமும் அவருக்கு இருக்காது. விக்கிரமாதித்யனின் கவிதைகள் ஆடு புழுக்கை போடுவதைப் போலிருக்கும். ஜெயமோகனோ யானை லத்தி போடுவதைப் போல் பாரம் பாரமாக இறக்குகிறார்.

ஜெயமோகன் எழுதும் எழுத்துக்கள் குறித்து எந்த பொறுப்பும் அவருக்கு இல்லை. எந்த விஷயம் குறித்தும் அடிப்படை தரவுகளை உரசிப் பார்த்தல் குறித்த அடிப்படை அறம் குறித்து அவருக்கு நம்பிக்கையிருப்பதாகத் தெரியவில்லை. இரண்டு உதாரணங்களைப் பார்ப்போம்.

பெரியார் குறித்த ஜெயமோகனின் அபிப்பிராயங்கள் மற்றும் அதற்கு ஆதாரமான கருத்துகள் குறித்து ஒரு ஆதாரபூர்வமான மறுப்பு இது.

திராவிடர்கழகத்தில் சேர்ந்து ஒரு வருடமே ஆன, மிகச்சாதாரணமாக வீரமணி சொல்வதே வேதவாக்கு என்று நம்பிக்கொண்டிருக்கிற, ஒரு தி.க தொண்டனுக்குக் கூட தெரியும் குமரிமைந்தன் பெரியாரிஸ்ட் கிடையாது என்று. ஆனால் ஜெமோ எந்த வெட்கமும் இல்லாமல் இதைப் பதிந்து வைத்திருக்கிறார். இதற்கான மறுப்புகள் குறித்து அவர் எப்போதும் கவலைப்பட்டதில்லை. இதைப் பற்றி நாம் பேசினால் அதுகுறித்து எந்த கவலையுமற்று  ‘அட்டாக் பாண்டி ஒரு காந்தியவாதியும் கூட’ என்று அடுத்த விஷயங்களைப் பேசி நகர்ந்து விடுவார்.

தேவர்ஜெயந்தி குறித்த அவரது கட்டுரையில் ‘நீதிக்கட்சி குற்றப்பரம்பரைச் சட்டத்தைப் பரப்பியது’ என்று எழுதியிருப்பார். இந்த கீழ்க்கண்ட கட்டுரை, அவருக்கான மறுப்பு இல்லை என்றாலும் நான் சமீபத்தில் படித்த மிகச்சிறந்த கட்டுரை.

இதை எழுதிய அதி அசுரன் என்கின்ற தோழர்.தாமரைக்கண்ணன் ஒரு இலக்கியவாதி அல்ல. அவர் ஜெயமோகனின் ஒரு நாவலைக்கூட படித்திருக்கமாட்டார். பெரியார் திராவிடர்கழகத்தில் மாநில அளவில் பொறுப்பு வகிக்கும் அவர், தொடர்ச்சியாக களப்பணிகளில் ஈடுபட்டு வருபவர். தமிழகமெங்கும் இரட்டைக்குவளைகளைக் கணக்கெடுத்து அதற்கு எதிராக பெரியார் தி.க போராட்டம் நடத்தியது, குடியரசு தொகுப்பைக் கொண்டுவந்தது என பலவற்றில் அதி அசுரனின் பங்கு முக்கியமானது. சீமான், பசும்பொன் முத்துராமலிங்கம் சிலைக்கு மாலை போட்டது குறித்த சர்ச்சை எழுந்தபோது, கீற்றுக்கு அளித்த நேர்காணலில், “பெரியார் குற்றப்பரம்பரைச் சட்டத்திற்கு எதிராக எதுவும் செய்யவில்லை என்று முக்குலத்தோர் குற்றம்சாட்டுகிறார்கள்” என்று கூறியிருப்பார் சீமான். அதை மறுப்பதற்காக தனது களச்செயல்பாடுகளுக்கு மத்தியிலும் இவ்வளவு தரவுகளைத் திரட்டி தாமரைக்கண்ணனால் ஒரு கட்டுரை எழுதமுடிகிறது. ஆனால் ஜெயமோகன்....? அவருக்குத் தான் சொல்வது குறித்து ஆதாரபூர்வமாக நிரூபிக்க வேண்டிய எந்த அடிப்படை நேர்மையும் அறிவு நாணயமும் கிடையாது. கருத்துபொறுப்போ எழுத்துப்பொறுப்போ இல்லை.  இப்படி பல விஷயங்களைச் சுட்டிக்காட்ட முடியும். ஜெயமோகன் உதிர்ப்பவை எல்லாம் மேலோட்டமான அபிப்பிராயங்கள்தான் என்பதற்கான உதாரணங்கள் அவரது வார்த்தைகளிலேயே உள்ளன.

/
ஒரு நாகரீக மனிதனைப்பொறுத்தவரை தலித்துக்கள் மீதான காழ்ப்போ விலக்குதலோ ஏற்கத்தக்கவை அல்ல என்ற நிலை இன்று உருவாகியிருக்கிறது. ஒரு சமூகத்தின் தார்மீகமான மையத்தில் உள்ளவர்கள் ஒன்றை ஏற்றுக்கொண்டால் காலப்போக்கில் மொத்த சமூகமும் அங்கே வந்துதான் ஆகவேண்டும். தலித் வெறுப்பு பிற்போக்கானது அசிங்கமானது ஆபத்தானது என்பதில் இன்று எவருக்கும் ஐயமில்லை.

இன்னமும் நம் சமூகத்தின் பெரும்பகுதி அங்கே வந்துசேரவில்லை என்பது வேறு விஷயம். ஆனால் வந்துகொண்டிருக்கிறது. அதிகபட்சம் ஒரு தலைமுறை ஆகலாம். ஒருவன் படிக்கும்தோறும் சிந்திக்கும் தோறும் இந்த வகையான காழ்ப்பிலிருந்து மீள்வான். மீள்வதைக் காண்கிறோம்
ஆனால் முற்போக்கான, பண்பட்ட, சமநிலையான, படித்த, நிதானமான, மனிதர்கள்கூட இங்கே பிராமண வெறுப்பை கக்கலாம் என்றாகியிருக்கிறது. பிராமண வெறுப்பைக் கக்கினால் உங்களை யாரும் பிற்போக்கானவர் என்றோ சாதிவெறிகொண்டவர் என்றோ சொல்லப்போவதில்லை. அது ஒரு வகையான முற்போக்காகவே இங்கே — தமிழகத்தில் மட்டும் – கருதபப்டுகிறது/ (அழுத்தம் என்னுடையது)

இது அரவிந்தன் நீலகண்டனின் ஒரு கடிதத்திற்கு ஜெயமோகன் அளித்த பதிலையொட்டி எழுந்த விவாதத்திற்கு ஜெமோவின் பதில் பின்னூட்டம். இது ஒரு வலதுசாரித் தன்மை வாய்ந்த வார்த்தைகள் என்பதையும் தாண்டி ‘தலித்துகள் மீதான வெறுப்பு கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டிருக்கிறது’ என்னும் ஜெயமோகனின் வாதம் எவ்வளவு அரைவேக்காட்டுத்தனமானது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இந்தியா முழுக்க தலித் மக்களுக்கு எதிராக நிகழும் வன்முறைச் சம்பவங்கள் குறித்த புள்ளிவிவரங்களைக் காட்டியோ அல்லது ‘பிராமண வெறுப்பு’ குறித்த ஜெயமோகனின் கருத்துகளைச் சாதிவாரியாக அரசு மற்றும் தனியார்துறைகளில் அதிகமும் பங்குவகித்து வருபவர்கள் குறித்த சாதிவாரியான புள்ளிவிவரங்களைக் காட்டியோ இதனை மறுக்கலாம். ஆனால் பயன்...?

ஜெயமோகனுக்கு எப்போதும் உரையாடல்களை நிகழ்த்துவதிலோ அதனூடாக ஒரு சில நகர்த்தல்களை நிகழ்த்துவதிலோ நம்பிக்கையிருப்பதாக எனக்கு நம்பிக்கையில்லை. ரோசா வசந்த் ஜெயமோகன் குறித்த மேற்கண்ட உரையாடலின்போது சொன்ன வார்த்தைகள் இவை, ‘’நமக்கு குடிக்கணும், நண்பர்களோடு பேசணும், படிக்கணும். ஆனால் ஜெயமோகனுக்கு இதெல்லாம் கிடையாது போலிருக்கு. எழுதிக்கொண்டேயிருக்கிறார்”.

உண்மைதான் ரோசா. பிழைப்பிற்காய் வேலை செய்யலாம், குடிக்கலாம், வேட்டைக்காரன் படம் பார்க்கலாம், வெட்டுப்புலி நாவல் படிக்கலாம், ’அணுவளவும் பயமில்லை’யில் நீலிமாவைக் கண்டு ரசிக்கலாம். எழுதலாம், வாசிக்கலாம், சாத்தியப்பட்டவரையில் தனிப்பட்ட வாழ்க்கையில் பரிசோதனைகளை நிகழ்த்தலாம், எல்லோர் மீதும் அன்பைப் பொழியலாம்,. இந்த ஜெயமோகனோடு மல்லுக்காட்டும் கருமம் என்ன எழவிற்கு?


..

46 உரையாட வந்தவர்கள்:

  1. மிதக்கும்வெளி said...

    ஒரு வாரமாகவே டிராஃப்டில் இருக்கும் பதிவு. தோழர் பைத்தியக்காரனின் பதிவுக்கு எதிர்பதிவு அல்ல.. இது எதேயச்சயான நிகழ்வு.

  2. ஜோ/Joe said...

    //பெரியார் குறித்த ஜெயமோகனின் அபிப்பிராயங்கள் மற்றும் அதற்கு ஆதாரமான கருத்துகள் குறித்து ஒரு ஆதாரபூர்வமான மறுப்பு இது.//

    இணைப்பு சரியாக இல்லை ..கொஞ்சம் சரி பார்க்கவும் .நன்றி!

  3. கண்ணா.. said...

    //ஜெயமோகனின் எழுத்துக்கள் சு.ராவின் எழுத்துக்களுக்குச் சித்தப்பாமுறை. அலுப்பூட்டுகிற எழுத்துக்கள்//

    //பிறகுதான் தெரிந்தது. ஜெயமோகனிடம் இருப்பது உழைப்பில்லை,வியாதி என்று. நீரழிவு வியாதி உடையவர்கள் அடிக்கடி சிறுநீர் கழிப்பதைப் போல் ஜெமோ எழுதிக்கொண்டேருக்கிறார். ஒன்றுக்கொன்று முரண்பட்ட அபிப்பிராயங்கள், மேலோட்டமான கருத்து உதிர்ப்புகள் என அத்தனையும் அபத்த உளறல்கள்.//

    //ஜெயமோகன் எழுதும் எழுத்துக்கள் குறித்து எந்த பொறுப்பும் அவருக்கு இல்லை. எந்த விஷயம் குறித்தும் அடிப்படை தரவுகளை உரசிப் பார்த்தல் குறித்த அடிப்படை அறம் குறித்து அவருக்கு நம்பிக்கையிருப்பதாகத் தெரியவில்லை//

    இதில் ஜெயமோகனை நீக்கி விட்டு உங்களை பொருத்தி பார்த்தேன்.. அழகாக பொருந்துகிறதே.. அடடா..

    :)

  4. ROSAVASANTH said...

    இப்பதான் பைத்தியக்காரன் பதிவில் உங்கள் பின்னூட்டத்திற்கு பதில் சொல்லிவிட்டு வந்தேன். பார்த்தல் இந்த பதிவு. மதியம் வந்து படிக்கிறேன்.

  5. Anonymous said...

    டேய் நீ தெளியவே மாட்டியா டா ?

  6. ROSAVASANTH said...

    கிட்டதட்ட இதே தலைப்பில் ஒரு பதிவு எழுத திட்டம் தீட்டியிருந்தேன். உங்கள் கருத்துக்கள், ஆதாரங்கள் எனக்கும் மிகவும் ஏற்புடையவை.

    ஜெமோ ஒரு நவீன, பின்நவீன கருத்தாக்கங்களை உட்செரித்த ஒரு 'சோ' மாதிரி எனக்கு தெரிகிறார். நேரடியான ஒரு பார்பனிய, ஆணாதிக்க, பழைவாத கருத்தை ஜெமோவிடம் பார்க்க முடியாது. எதிரப்பதாகக் கூட தோற்றம் கொள்ளும். உள்ளே என்ன இருக்கிறது என்பது நீங்கள் இங்கே அளித்துள்ள சில மேற்கோள்களே விளக்கும்.

    சமீபத்தில் நடந்த உயிர்மை 10 நூல் வெளியீட்டு விழாவில் பெரியாரிஸ்ட் என்ற பெயரில் செல்வபுவியரசன் என்ற இளைஞர் ஒருவரை பேச பேச வைத்திருந்தார். அவர் நேர்மையான வகையில் தன் கருத்தை பதிவு செய்தார். ஆனால் அவை மிக பலவீனமாக இருந்தது. மற்ற திறமையான பேச்சாளர்களும், கூட்டத்தின் பொதுமனப்பான்மையும் அவரை ஒரு எதோ முதிர்ச்சியற்ற கருத்து கோமாளியாக மற்றிவிட்டது; இன்னொரு புறத்தில் ஜெமோவை எதிர்வினைகளுக்கு இடமளிக்கும் ஜனநாயகவாதி போலவும் சித்தரித்து கொண்டது. துக்ளக் வாசகர் கூட்டம் என்ற பெயரில் வருடாவருடம் நடத்தும் ஏமாற்று வேலை போலவே இருந்தது. நீங்கள் மேலேitalicஇல் குறிப்பிட்டுள்ள மேற்கோளும் (தலித் வெறுப்பு vs 'பிராமண வெறுப்பு') துக்ளக் பாணியில் வந்த டயலாக்கே.

    ஜெமோவின் பல கருத்துக்கள் மேலோட்டமாகவோ, பொத்தம் பொதுவாகவோ, பொய்யாகாவோ இருப்பதன் காரணம் அவர் நிறுவ முனையும் விஷயங்களுக்கு நிலவக்கூடிய தரவுகளூம் ஆதரங்களுமே காரணம். ஆழமான தர்க்கமும், ஆதரமும் இருந்தால் அதை அவர் முன்வைக்கும் அறிவும், திறமையும், உழைப்பும் அவரிடம் நிச்சயம் உண்டு. உதாரணமாக பெரியாரிஸ்டுகளுடன் தான் உரையாடுவதாக அவர் நிறுவ முயல்கிறார். ஆனால் யதார்த்தத்தில் அப்படி ஒன்றை அவரால் செய்ய முடியாது; முயற்சி கூட எடுக்கவில்லை. அதனால் வேறு வழியின்றி குமரி மைந்தனை பொய்யாக பெரியாரிஸ்டாக மாற்றுகிறார். பலவீனமான பெரியாரிஸ்டுகளிடன் தீவிர விவாதம் செய்கிறார். மூர்க்கமான சில உதாரணங்களை மட்டும் முன்வைத்து, ஒட்டுமொத்தமாக தூக்கி கடாச ஆதாரமாக கொள்கிறார்.

    ஆனால் ̀சோ'வும் சரி, ஜெமோ வும் சரி நம் சமூகத்தின் பொதுக்கருத்தில், அக உலகில் பரவலலான பாதிப்புகளை செய்பவர்களாகவே தோன்றுகிறது. இந்த பாதிப்புகளை பற்றி கவலைப்பட்டால் ஜெமோவை பற்றியும் கவலைப்படத்தான் வேண்டும். அதே நேரம் ஜெமோ ஒரு இலக்கியவாதி என்ற வகையில், இந்த செயல் இன்னும் சிக்கலாகிறது.

    'ஜெயமோகனோடு மல்லுக்கட்டும் கருமம் என்ன எழவிற்கு?' என்று கைவிடுவதில் பிரச்சனையில்லை. நமக்கு பல ஈடுபாடுகள் உள்ளன, மேலும் ஒரே ஒரு வாழ்க்கைதான் இருக்கிறது. ஆனால் யாராவது அந்த வேலையை எப்போதாவது செய்ய ஒரு சமூக தேவை இருப்பதாகத்தான் தோன்றுகிறது.

    உண்ட மயக்கம் அழுத்த, ஆஃபிஸ் வேலை விழிக்க சொல்கிறது. வேறு கருத்துக்கள் எழுத தோன்றினால் பிறகு வந்து தட்டுகிறேன்.

  7. Dr.Rudhran said...

    இன்னும் எழுதப்பட வேண்டியவை ஏராளம்..
    எழுதுவதற்கு வாழ்த்துகள்.

  8. Anonymous said...

    //ஜோ/Joe said...

    //பெரியார் குறித்த ஜெயமோகனின் அபிப்பிராயங்கள் மற்றும் அதற்கு ஆதாரமான கருத்துகள் குறித்து ஒரு ஆதாரபூர்வமான மறுப்பு இது.//

    இணைப்பு சரியாக இல்லை ..கொஞ்சம் சரி பார்க்கவும் .நன்றி!//

    The correct link is

    http://kavuchi.wordpress.com/2009/12/08/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4/

  9. Ashok D said...

    :)

  10. Anonymous said...

    சாருவுக்குச் சிங்கியடிப்பது எப்படி ? என்பதே சிறந்த தலைப்பாக இருக்கும்.

  11. ஜோ/Joe said...

    //The correct link is//

    நன்றி அனானி!

  12. மதி.இண்டியா said...

    இதுவரைக்கும் ரமணிச்சந்திரன் லெவலுக்கு கூட ஒரு எழுத்து எழுத முடியலை உங்களால் , ஜெமோவின் எழுத்துக்களால் காண்டாகி இப்படி பதறுகிறீர்கள் ,

    உங்கள் எழுத்தையோ ரோசாவசத்தின் எழுத்தையோ யாராவது மதிக்கிறார்களா?(மூக்குடைபடுமோ (நிஜமாவே)என பயத்தில் நாலுபேர் ஏதாவது பாராட்டலாம் , நம்பாதீர்கள்

  13. Anonymous said...

    நீங்கள் சாருவின் இன்னொரு அடியாளாமே , உங்க கவுச்சிதான் சொல்கிறார் ,http://kavuchi.wordpress.com/2009/12/04/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8/

  14. வளர்ந்தவன் said...
    This comment has been removed by a blog administrator.
  15. Anonymous said...

    இதுவரைக்கும் ரமணிச்சந்திரன் லெவலுக்கு கூட ஒரு எழுத்து எழுத முடியலை உங்களால் ,//

    உங்களுக்கு ஒப்பிட இவர்தான் கிடைத்தாரா? ரமணிச்சந்திரன் பெண்களிடையெ மிக புகழ் பெற்ற எழுத்தாளர். அவரை முகவரி அற்ற கண்டவர்களுடன் ஒப்பிட வேண்டாம்..

  16. Anonymous said...

    மயில் சொன்னது தான் சரி இவனை போய் தோது வச்சிக்கிட்டு

    ராகு

  17. ROSAVASANTH said...

    ஃபோரம் ஹப், திண்ணை காலத்திலிருந்து ஜெமோ, ' பெரியாரிஸ்டுகள் தர்க்கத்தை மறுக்க மாட்டார்கள், வெறும் வசையை மட்டுமே முன் வைப்பார்கள்' என்று பிரச்சாரம் செய்து வருகிறார். ஜெமோ ரசிகர்கள் விமர்சனத்தை எப்படி எதிர்கொள்வார்கள் என்று இங்கே அவர்கள் எடுத்துக் காட்டுவது சுவாரசியமாக இருக்கிறது.

  18. NO said...

    அன்பான நண்பர் திரு சுகுணா திவாகர்,

    Politics is the last resort for a scoundrel என்று சொல்லுவார்கள்!
    சிறிது மாற்றிநோமானால்,
    " விற்பனையாகாத அரைகுறைகளின் கடைசி புகலிடம் இணையத்தளம்!"

    நீங்கள் கண்டதை எழுதுவீர்கள், இதை யாரப்பா காசுபோட்டு பிரசுரிப்பார்கள், யாரப்பா இதை வாங்கிப்படிப்பார்கள் என்று கத்திபோட ஆளில்லை! படித்துவிட்டு ஆய்வு என்ன செய்தீர்கள் என்று கேட்டு விடுவார்களோ என்ற பயமில்லை. என்ன தகுதி உண்டு என்று கேட்கப்படமாட்டாது! இந்த பயம் ஏதுமில்லாமல் வாய்க்குவந்ததை அள்ளித்தெளிக்கும் சந்தர்ப்பத்தை கொடுப்பது இந்த இணையதளங்கல்தானே? இருக்கவே இருக்காங்க ஒரு பத்திருபது
    முற்போக்கு முத்திரைக்குத்திகள், உங்களைப்போல! மைத்தட்டை இருக்கு, முத்திரை இருக்கு, கண்டபடி கைவலியிலாமல் குத்த கூட்டமும் இருக்கு, வயற்றேரிச்ச்சலை கிளப்பிய, அதாவது அறிவு மேன்மையினால் மேல்வந்த, உங்களால் எக்காலத்திலும் முடியாததை செய்த செய்கின்ற சான்றோர், அதாவது
    குத்தப்படவேண்டிய பலரும் கண் முன்னே இருக்க வேற என்ன அடுத்தது. Ready music start தானே!

    Once in a while the the bogus, pseudos, spurious and the other fakes in the society tries to take over the intelectual mantel and pretends to lord over it with outright rant, trumpery and twadle! The front benchers, that fall prey to such babble and bombastic bluster tries to align themselves to get a legitimacy which other wise would never come to such weeds. Hence the few that ring bells and throws hosanas at you and your clan.

    சுகுணா சார், வரவில்லை என்றால் விட்டு விடவேண்டும். முடியாதென்றால் மாற்றான் மேல் மண்ணடித்து (of course it doesnt matter in anyway as you are a non-entity when compared to any of the people that you ridicule), பாரீர் என் சட்டையே வெண்மை ஆதலால் நாயகன் நானே என்று சர்கஸ் காட்டக்கூடாது!

    நீ யாரடா? உனக்கேன் அக்கறை என்று கேட்பது புரிகிறது. நீங்கள் எழுதுவது யாரும் படிக்காத காமடியாக இருந்தாலும் அட்லீஸ்ட் உங்களிடமிருந்து உங்களை யாராவது காப்பற்றவேண்டுமில்லையா? அதான் நட்புடன்!

    சுகுணா திவாகர் ஒரு சும்மான்னா டுபாகூர் - நான் முன்னர் சொன்னது.
    மிதக்கும் வெளி வேண்டாத ஒரு மூக்கடைக்கும் சளி - இப்பொழுது சொல்வது!

    நன்றி

    இதுவும் போதவில்லை என்றால் இருக்கவே இருக்கிறது ஜெலுசில். பத்து ரூபாய்க்கு ஒரு ஸ்ட்ரிப். திரவமாகவும் கிடைக்கிறது. பிடிக்கவில்லை என்றால் சொல்லுங்கள் அடுத்தமுறை வரும்பொழுது டம்ஸ் வாங்கிவருகிறேன்! அது பல ப்லேவர்களில் கிடைக்கும்.

  19. Anonymous said...
    This comment has been removed by a blog administrator.
  20. குப்பன்.யாஹூ said...

    இதுதான் லேட்டஸ்ட் பாஷன் போல

    சுஜாதா புடிக்காது, சுந்தர ராமசாமி எழுத்து புடிக்காது, பால குமாரன் புடிக்காது, எஸ் ராமகிருஷ்ணன் புடிக்காது., சாறு, ஜெமோ எழுத்து , தாமரை முத்துகுமார் கவிதைகள் புடிக்காது என்று எழுதி விட்டால் தான் பெரிய எழுத்தாளன், வாசிப்பாளன் என்று பொருள் கொள்கிறார்கள் போல.

    சுஜாதா மறைவி (maraivu ottiya) யோட்ட்ய உயிர்மை இதழில் மனுஷ்ய புத்திரன் எழுதி இருப்பார், எனக்கு சரியான வரிகள் ஞாபகம் இல்லை.

    சுஜாதா என்ற மனிதரின் நிழல் படாதா (அல்லது அந்த படகை தாண்டாத) தமிழ் எழுத்தாளர்களே கிடையாது என்று.

    இன்று நாம் எல்லாம் எழுத வலையுலகமும், கணினி திரையும் கிடைத்து விட்டது என்பதற்காக , நமக்கு எழுத்து கற்று தந்த ஆசான்களான ஜெயகாந்தன், சுஜாதா, தி க சி, க ந சு, சாரு, எஸ் ரா போன்றோரை இன்று தூக்கி எறிய கூடாது.

    இலக்கியம் படிக்க படிக்க மனிதம் என்ற குணத்தை, பண்பை நீங்கள் இழக்கிறீர்கள் போல, என்பதே என் கவலை நண்பரே.

  21. KARMA said...

    சுகுணா,
    என்ன வேண்டும் உங்ககளுக்கெல்லாம்?
    எதற்கு இப்படி ஒரு பதிவு? சும்மா நட்சத்திரப்பதிவாளர் என்பதாலா?
    கொஞ்சம் matured-ஆ நடந்துக்கங்கப்பா......

  22. மூக்கை காப்பாற்றிக் கொள்பவன் said...
    This comment has been removed by a blog administrator.
  23. போன கமண்டு போட்டவன் said...

    //ஆனால் ̀சோ'வும் சரி, ஜெமோ வும் சரி நம் சமூகத்தின் பொதுக்கருத்தில், அக உலகில் பரவலலான பாதிப்புகளை செய்பவர்களாகவே தோன்றுகிறது.//

    தலைகீழாக நின்றாலும் உங்களால் முடியாதது இது .

  24. Muthu said...

    பிழைப்பிற்காய் வேலை செயது, குடித்து, வேட்டைக்காரன் படம் பார்த்து, வெட்டுப்புலி நாவல் படித்து, ’அணுவளவும் பயமில்லை’யில் நீலிமாவைக் கண்டு ரசித்து, எழுதி, வாசித்து, சாத்தியப்பட்டவரையில் தனிப்பட்ட வாழ்க்கையில் பரிசோதனைகளை நிகழ்த்தி, எல்லோர் மீதும் அன்பைப் பொழிந்து .......

    அடேஏஏஏஏஏஏஏயப்ப்ப்ப்பாஆஆஆ !!!

    அன்பரே .....

    இவ்வளவும் செய்தபிறதும் உங்கள் பொன்னான நேரத்தை இந்த ஜெயமோகனோடு மல்லுக்காட்டும் கருமம் பிடித்த எழவிற்கு என் செலவழிக்கிறீர்கள் ?

  25. மிதக்கும்வெளி said...

    இணைப்பைச் சரிசெய்துவிட்டேன் ஜோ.

  26. மிதக்கும்வெளி said...

    என்ன செய்வது கண்ணா? உங்களைப் போல துபாயில் ஓட்டல் திறந்தது, கக்கூஸ் திறந்தது மாதிரியான எழுத்துக்களை எழுதும் அளவிற்கு எனக்கு அறிவில்லையே.

  27. மிதக்கும்வெளி said...

    ரோசா, உங்கள் பின்னூட்டத்தில் வார்த்தைக்கு வார்த்தை உடன்படுகிறேன்.

  28. Athisha said...

    //
    பிழைப்பிற்காய் வேலை செய்யலாம், குடிக்கலாம், வேட்டைக்காரன் படம் பார்க்கலாம், வெட்டுப்புலி நாவல் படிக்கலாம், ’அணுவளவும் பயமில்லை’யில் நீலிமாவைக் கண்டு ரசிக்கலாம். எழுதலாம், வாசிக்கலாம், சாத்தியப்பட்டவரையில் தனிப்பட்ட வாழ்க்கையில் பரிசோதனைகளை நிகழ்த்தலாம், எல்லோர் மீதும் அன்பைப் பொழியலாம்,. இந்த ஜெயமோகனோடு மல்லுக்காட்டும் கருமம் என்ன எழவிற்கு? //

    :-) உண்மைதான்!

  29. மிதக்கும்வெளி said...

    ரோசாவசந்தைத் தவிர வேறு எந்த பின்னூட்டமாவது பதிவில் உள்ள விஷயங்கள் குறித்து பேசுகிறதா? எந்தளவுக்கு முட்டாள்களும் மன ஆரோக்கியமற்றவர்களும் வலையுலகில் பெருகிவிட்டார்கள் என்பதற்கான சாட்சியங்கள் இவை.

  30. கண்ணா.. said...

    அன்பு சுகுணா,

    என்னுடையை பின்னூட்டத்திற்கு பதில் அளித்தற்கு நன்றி.

    நான் எப்போதும் நான் மட்டும்தான் அறிவாளி என்றும் மற்றவரெல்லாம் மடையர்கள் என்றும் சொல்பவன் அல்ல. நான் அறிவாளி என்ற தொனி தெறிக்க நான் எங்காவது எழுதியிருந்தாலோ அல்லது நீங்கள் அவ்வாறு புரிந்திருந்தாலோ மாற்றி கொள்ளுங்கள்.

    உங்களுக்கு பதிவுலகம் கருத்துக்களை தெரிவிக்கும் களமாக இருக்கலாம். ஆனால் என்னை பொறுத்தவரை இதனை ஓரு சுவாரஸ்யமான விஷயங்களை பகிர மட்டுமே உபயோக்கிறேன்.

    உங்களுக்கு உங்கள் கருத்துக்களை பதிய இருக்கும் அதே உரிமை என்க்கு தோன்றியதை பதியும் உரிமை எனக்கும் இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.

    நன்றி.

  31. மிதக்கும்வெளி said...

    கண்ணா,

    நீங்கள் எழுதியது கருத்து என்று நினைக்கும் அளவிற்கு நான் முட்டாள் ஆகவில்லை.

  32. கண்ணா.. said...

    //மிதக்கும்வெளி said...
    கண்ணா,

    நீங்கள் எழுதியது கருத்து என்று நினைக்கும் அளவிற்கு நான் முட்டாள் ஆகவில்லை.//

    இப்பிடி தெளிவா இருந்தீங்கன்னா...எங்களுக்கு கவலையே இல்லையே....

    :))

  33. மாடல மறையோன் said...

    Last sentence is unacceptable.

    We need to fight such forces like Jeyamohan non-stop.

    If not, an impression will be created by him and his fans that Jeyamohan's views are good for society as no one objects to them.

    Very good article. You have put in views freely, frankly and fearlessly.

    Well done!

  34. Unknown said...

    சுகுணா,

    யாருமே விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் இல்லை. இங்கே ஜெயமோகனை வாசிப்பவர்கள் கொடுத்த பின்னூட்டங்களின் தொணி சரியானதல்ல. கருணாநிதிக்கு எதிராக ஜெயமோகன் பேசிய போது கருணாநிதி பக்தர்கள் செய்தது இதை தான். அதை விட்டு விடலாம்.

    நீங்கள் களப்பணியாற்றி இருக்கிறீர்கள். ஒரு அரசியல்/சமூக பிண்ணனி உங்களுக்கு உள்ளது. சமூகம்/சமூக நீதி குறித்த திடமான பார்வை உங்களுக்கு உள்ளது. அவற்றின் துணையுடன் ஜெயமோகனை எதிர்கொள்ளுங்கள். இன்னமும் சுந்தர ராமசாமியின் மறைவின் போது எழுதிய அதே தொணியில் தான் ஜெயமோகனை எதிர்க்கின்றீர்கள். நீங்கள் எதிர்ப்பது எதை? எதை கொண்டு?

    ஜெயமோகனின் சமூகம் குறித்த சில சிறிய பதிவுகள், மற்றும் கடிதங்களுக்கான பதில்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். அவை நேர் பேச்சினை போல தான் செய்கிறார், பெரிதாக மெய்ப்பு பார்க்காமல். இன்னொருபுறம் உழைப்பை வேண்டி நிற்கும் படைப்புகளும் வருகின்றன. இதில் ஒன்றை கொண்டு மற்றொன்றை நிராகரிப்பது சரியாகாது என நினைக்கின்றேன். யாருக்கும் எதிர்முனை இருந்தே ஆக வேண்டும். நீங்கள் அதை இன்னமும் ஆக்கப்பூர்வமான முறையினில் செய்ய வேண்டும் என்றே கேட்டுக்கொள்கிறேன். கலகம் என்பது உழைப்பை வேண்டி நிற்கும் செயல். அனைத்தையுமே புறங்கையால் தட்டிவிடுவது அல்ல கலகம்.

    ரீடரில் உங்கள் பதிவை வாசிக்கும் போது பதிவின் முடிவின் ஒரு வாசகம் வரும்.

    //உரையாட மட்டுமே பேசுகிறோம். உறுதி செய்ய அல்ல.//

    எனக்கு மிகவும் பிடித்த வாசகம் இது. நீங்கள் எழுதியதை மீண்டும் ஒரு முறை வாசித்து பாருங்கள். நீங்கள் மிக உறுதியாகவே இருக்கின்றீர்கள். உரையாடலுக்கான எந்த இடைவெளியும் உங்களது பதிவினில் இல்லை.

  35. Ramesh said...
    This comment has been removed by a blog administrator.
  36. Anonymous said...

    'உரையாட மட்டுமே பேசுகிறோம். உறுதி செய்ய அல்ல'

    இதப்பார்ரா, இதையெல்லாம் நிசம்னு நம்பிக்கிட்டு சித்தார்த் பதில் சொல்ரார். உரையாடல் என்பதற்கு திருவாளர் சுகுணா திவாகரின் அகராதியில் பொருள் வேறு, அது ஜெயமோகனின் அகராதியில் உள்ள பொருளைப் ஒத்தது. ஐயா சித்தார்த் ஜெயமோகனும் உறுதியாக இருக்கிறார், சுகுணாவும் உறுதியாக இருக்கிறார்.குழப்பமெல்லாம் உங்களுக்குத்தான். ஒன்று ராம்கோ சிமெண்ட், ஒன்று சங்கர் சிமிண்ட் என்று வைத்துக் கொள்ளுங்கள் :).
    மெய்ய்பு பார்க்காமல் செய்வதற்கும்,
    எழுத்தில் புளுகுவதற்கும் வேறுபாடு உண்டு. .அதிஅசுரன் எழுதியதை ஜெமோவிற்க்கு அனுப்புங்கள், தான் எழுதியது தவறு என்று ஒப்புக்கொள்கிறாரா என்று பார்க்கலாம். ஜெயமோகன் சகட்டு மேனிக்கு எழுதித்தள்ளுகிறார்.அதில் என்ன பொறுப்புணர்வு இருக்கிறது.
    எத்தனை முறை வாசகர்கள் எழுதிய பின் அசடு வழிந்து ஆமாம் நான் எழுதியது ஹி ஹி ஹி என்று கையைத் தூக்கியிருக்கிறார்.

  37. Anonymous said...

    ’இங்கே ஜெயமோகனை வாசிப்பவர்கள் கொடுத்த பின்னூட்டங்களின் தொணி சரியானதல்ல. கருணாநிதிக்கு எதிராக ஜெயமோகன் பேசிய போது கருணாநிதி பக்தர்கள் செய்தது இதை தான்’
    ஜெமோ பக்தர்கள் குருவே என்று எழுதுவது,மனுஷ்யபுத்திரனைப் பற்றி எழுதுவதை அப்படியே பிரசுரிப்பது, இப்படி ரசிகர் மன்ற பண்பாட்டை ஊக்குவிக்கும் ஜெமோவிடம் அதையெல்லாம் கேள்வி கேட்டு எழுதுங்கள்.

  38. K.R.அதியமான் said...

    ///பிறகுதான் தெரிந்தது. ஜெயமோகனிடம் இருப்பது உழைப்பில்லை,வியாதி என்று. நீரழிவு வியாதி உடையவர்கள் அடிக்கடி சிறுநீர் கழிப்பதைப் போல் ஜெமோ எழுதிக்கொண்டேருக்கிறார். ஒன்றுக்கொன்று முரண்பட்ட அபிப்பிராயங்கள், மேலோட்டமான கருத்து உதிர்ப்புகள் என அத்தனையும் அபத்த உளறல்கள். ஜெமோ எழுதுவதை மறுக்கலாம் என்று தேடிப்பிடித்து வாசித்து வந்தால் அதற்குள் 35 கட்டுரைகள் (வாசகர் கடிதங்கள் மற்றும் பதில்கள் சேர்த்து) எழுதியிருப்பார் ஜெமோ.
    ////

    ////விக்கிரமாதித்யனின் கவிதைகள் ஆடு புழுக்கை போடுவதைப் போலிருக்கும். ஜெயமோகனோ யானை லத்தி போடுவதைப் போல் பாரம் பாரமாக இறக்குகிறார்.
    ////

    சுகுணா,

    இதுதான் விமர்சனம் செய்யும் முறையா ? சுமார் 45000 பக்கங்கள் இதுவரை, ஜெ எழுதியிருப்பார். அவரின் பல கருத்துக்களுடன் நானும் முரண்படுகிறேன். ஆனால் total rejection அல்லது total acceptance செய்வதை என்னவென்பது.

    சில இடங்களில் அவர் சறுக்கியிருக்கிறார். நீங்களும் தான். எல்லோரும் தான்.

    சரி, போகட்டும். காந்தி பற்றி ஜெ ஒரு பெரிய புத்தகம் எழுதி, இப்போது வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 500 பக்கங்கள் இருக்கும். அதை வாங்கி, நிதானமாக படித்து, உள்வாங்கி, சில மாதங்கள் அல்லது ஒரு வருடம் கழித்து, ஒரு விரிவான விமர்சனம் எழுதுங்களேன் பார்க்கலாம்.

  39. K.R.அதியமான் said...

    //////விக்கிரமாதித்யனின் கவிதைகள் ஆடு புழுக்கை போடுவதைப் போலிருக்கும். ஜெயமோகனோ யானை லத்தி போடுவதைப் போல் பாரம் பாரமாக இறக்குகிறார்.
    ////
    //

    சுகுணா,

    உங்கள் மீது வன்மம் கொண்டு, கடுமையான வசைகளை, தனிமனித தாக்குதல்களை சிலர் தொடர்ந்து செய்கின்றனர். ஆனால் மேற்கொண்ட வசனங்களை பார்க்கும் போது, may be you deserve them sometimes !!!
    :)))

  40. Anonymous said...

    poda ung-goyala. peria pudunginu nenapaa.

  41. மிதக்கும்வெளி said...

    அன்பின் இனிய சித்தார்த்,

    உரையாடல் என்பது சுவரோடு பேசுவது அல்ல. யாரிடம் உரையாடல்? ஜெயமோகனோடா, அவர் தனது சக எழுத்தாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கே பதில் சொல்பவரில்லை, இந்த சாமானியனுடனா உரையாடல் நிகழ்த்தப் போகிறார்? உரையாடலை மேற்கொண்டு நகர்த்துவது வாசகர்களாகிய உங்களிடம்தானிருக்கிறது. ஜெயமோகன் குறித்த கருத்தை இரண்டு ஆதாரபூர்வமான மறுப்புகளுடன் முன்வைத்திருக்கிறேன். மேற்கொண்டு உரையாட வேண்டியதுதான். ஆனால் இங்கே என்ன உரையாடல் நடக்கிறது என்று பார்க்கிறீர்கள்தானே!

  42. Anonymous said...

    நீயும் ரோசாவசந்தும் தான் ஒலகத்துலயே பெரிய அறிவாளிங்க.

    மற்ற எல்லாரும் முட்டாளுங்கதான்டா...போதுமா ?

  43. சுகுணாதிவாகர் said...
    This comment has been removed by a blog administrator.
  44. Anonymous said...

    சுகுணா,
    ஜெயமோகன் மாய்ந்து மாய்ந்து எழுதியதற்கு நீங்கள் இப்படி இரண்டு பிசாத்து போயண்டுகளை சொல்லிவிட்டு மார் தட்டி கொள்வீர்கள் என்று நினைக்கவே இல்லை. தலித்துகள் மீதான வெறுப்பு எல்லா இடங்களிலும் குறைந்துள்ளது என்று ஜே மோ சொல்லவே இல்லை. அவர் சொல்வதெல்லாம் தலித்துகள் மீதான காழ்போ விலக்குதலோ ஏற்புடையது அல்ல என்ற கருத்து நாகரீக மனிதனை வந்தடைந்துள்ளது என்பதே. இது 100 சதவீதம் நடந்து விட்டது என்று யாரும் சொல்லவில்லை .அனால் மெல்ல மெல்ல சமூகத்தின் தார்மீக மையம் அந்த இடத்தை நெருங்கி கொண்டிருகிறது. உதாரணமாக IT துறையில் இருக்கும் என் நண்பர்கள் நடுவே இருக்கும் போது என்னால் எந்த சாதியையும் மட்டம் தட்டி பொதுவில் பேச முடியாது. மனதிற்குள் ஒருவன் என்ன வேண்டுமானாலும் நெனைக்கலாம். அனால் பொதுவில் வைக்க முடியாது. ஒரு 50 வருடம் முன்பு இந்த நிலைமை இருந்திருக்க முடியுமா? ஆனால் இன்று இந்த கருத்து ஒரு நாகரீக மனிதனை வந்து அடைந்துள்ளது. மெல்ல மெல்ல இது மற்றவரிடமும் பரவும் என்பதே ஜெயமோகன் சொல்வது. இதற்கு சமானமான ஒரு உதாரணம் என்றால் விதவை திருமணம் குறித்த கருத்துக்கள் சென்ற 50 வருடங்களில் மாறிவந்திருப்பதை சொல்லலாம். உங்களது அடுத்த விமர்சனம் குமரி மைந்தனை பெரியாரிஸ்ட் என்று அவர் சொன்னது. இது வெறும் ஒரு தகவல் பிழையாகவே எனக்கு தெரிகிறது,. இந்த ஒரு பிழை அவரது மற்ற கருத்துகளை negate செய்து விடாது.

    பெரியார் பற்றிய அவரது முக்கியமான விமர்சனம் என்ன? அவர் பேசிய பல விஷயங்கள் குறித்து அவருக்கு அடிப்படை புரிதலே இல்லை என்பதே. பெண்கள் கருப்பையை எடுத்து விட வேண்டும் போன்ற எடுத்தோம் கவிழ்த்தோம் கருத்துகளையே அவர் சமூக சீர்திருத்த கருத்துகளாக முன்வைத்தார் என்பது. மேலும் அவர் சமூகத்தின் ஒரு சாரார் மீது வெறுப்பை தூண்டினார் என்பது. இது குறித்து இன்னும் தெளிவான சொற்களில் ஜெயமோகன் இன்னும் விரிவாக எழுதி உள்ளார். அது எதையுமே எதிர்கொள்ளாமல் நீங்கள் வைக்கும் வாதங்கள் சிரிப்பாக தான் இருகின்றன. பைத்தியக்காரன் பதிவில் ரோசாவசந்த் பின்னூட்டம் நேர்மையான எதிர் வினையாக இருக்கிறது. 'இந்த ஜெயமோகனோடு மல்லுகட்டும் கருமம் என்ன எழவிற்கு' என்று நீங்கள் சொல்வது 'ச்சே ச்சே இந்த பழம் புளிக்கும்' கதையை நினைவு படுத்துகிறது.

  45. Anonymous said...

    டேய் ஓலக மகா அறிவாளி மிதக்கும் கக்கூஸ் சுகுணா திவாகர்,

    http://www.jeyamohan.in/?p=5789

    வைக்கம் வீரர் பெரியார் இல்லையாம். இதுக்கு என்ன சொல்லப்போற...?

  46. Anonymous said...

    Urteter nuytre: http://avtovinn.ok.pe