சீமான் தரப்பு ‘நியாயங்களும்’ ஜெயமோகனின் ‘சமூக ஆஆஆஆராய்ச்சியும்’

சீமானின் தமிழ்த்தேசிய அரசியல் எப்படி ஆதிக்கசாதிச் சார்புநிலை எடுக்கிறது என்பது குறித்து சென்ற பதிவு எழுதிய அன்று இரவு மணி 12ஐத் தாண்டியிருக்கும். ஒரு தொலைபேசி அழைப்பு. அழைத்தவர் மும்பையிலிருந்து மகிழ்நன். ‘விழித்தெழு இளைஞர் இயக்கம்’ என்னும் அமைப்பைச் சேர்ந்த தோழர். ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகளுக்கு எதிராக மும்பைத் தமிழர்கள் மத்தியில் பல போராட்டங்களை நடத்திய அமைப்பைச் சேர்ந்தவர். ‘‘சீமான் இப்படி போனாரே’’ என்கிற ரீதியில் தன் ஆதங்கத்தைப் பகிர்ந்துகொண்டவர், பல தமிழ்த்தேசியவாதிகள் ஆதிக்கசாதி உணர்வுள்ளவர்களாகவும் இருப்பது குறித்த கவலையைப் பகிர்ந்துகொண்டார். ஒரு தேவர்சாதியைச் சேர்ந்த நண்பர் பிரபாகரன் மீது மிகுந்த மரியாதை கொண்டிருப்பதையும் ஆனால் பெரியார் என்றாலே அவர் வெறுப்படைவது குறித்தும் ஆதங்கப்பட்டார். தனது உணர்வுகளை அவர் பதியவும் செய்திருக்கிறார்.

பெரியாரியச் சார்புநிலையில் ஈழ ஆதரவை முன்வைக்கும் தோழர்கள் மத்தியில் சீமானின் நிலைப்பாடு குறித்து அவநம்பிக்கையும் ஆத்திரமும் பரவுவதை உணர முடிகிறது. மற்றபடி, வெற்றுக்கோஷங்களையும் இனவாத உணர்ச்சிகளையும் மட்டுமே கொண்டுள்ள ‘சும்மா தமிழ்த்தேசியர்கள்’ மழை பெய்த எருமைமாடுகள் கணக்காய்த்தான் இருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை இனப்படுகொலையை எதிர்க்க வேண்டும், சாதி ஆதிக்கம் குறித்து எந்த அக்கறையோ எதிர்ப்போ தேவையில்லை. திமுக எம்.பிக்களும் திருமாவளவனும் ராஜபக்சேவைச் சந்தித்து அளவளாவியபோது வானத்துக்கும் பூமிக்குமாக குதித்தவர்களுக்கு சீமான் முத்துராமலிங்கத்தின் சிலைக்கு மாலை போட்டது குறித்து இம்மியளவும் கோபம் வரவில்லை. திருமாவளவன் தமிழகத்தில் ஒரு மக்கள்பிரதிநிதி. அவர் வேற்றுநாட்டு அதிபரைச் சந்திக்கப் போகும்போது அரசு ஒழுங்குகளுக்கு உட்பட்ட வழக்கங்களுடன்தான் நடக்க முடியும். ராஜபக்ஷேவின் மூக்கில் குத்து விட்டு பஞ்ச் டயலாக் பேசுவதோ, அல்லது ராஜபக்ஷேவின் நாற்காலிக்குக் கீழே டைம்பாம் வைப்பதோ, குண்டூசி செருகுவதோ ரஜினி படங்களில் மட்டும்தான் சாத்தியம். திருமா இலங்கைக்குத் திமுக எம்.பிக்களோடு சென்றுவிட்ட பிறகு இத்தகைய அரசு சம்பிரதாயங்கள் தவிர்க்க முடியாதவை. ஆனால் சீமானோ தானே விரும்பித்தான் குருபூஜைக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்கிறார். திருமாவளவன் செய்ததைவிட மோசமான துரோகம் சீமான் செய்ததுதான்.

‘சீமான் தேர்தல் அரசியலுக்குப் போகப் போகிறார். எனவே எல்லா சாதி ஓட்டுக்களும் அவருக்குத் தேவையாய்த்தானிருக்கும்’ என்பது சொல்லப்படும் சமாதானங்களில் முகாமையானது. அப்படியானால் கருணாநிதியையோ திருமாவளவனையோ விமர்சிப்பதற்கு சீமானுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்கிற கேள்வியை எழுப்பித்தானே ஆகவேண்டும். தேர்தல் அரசியலுக்கு வருவதற்கு முன்பிருந்து தமிழுணர்வு, பகுத்தறிவு, இன உணர்வு ஆகிய அரசியல் களங்களில் குறிப்பிட்ட காலம் வரையிலாவது அர்ப்பணிப்பு உணர்வோடும் லட்சிய வேட்கையோடும் தீவிரமாகப் பங்களித்த பெருமை கருணாநிதிக்கு உண்டு.

திமுகவை விட குறுகியகாலத்திலேயே தேர்தல் பாதையில் வேகமாக நீர்த்துப்போனவர் திருமாவளவன்.
ஆனால் இப்போது அவர் வன்கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்களைக் ‘கெட்ட சொப்பனமாக’ நினைத்து மறந்துவிட்டாலும், தேர்தல் அரசியலுக்கு வருவதற்கு முன்பு ஆதிக்கசாதித் திமிருக்கு எதிராக, திருப்பி அடிக்கும் எதிர்ப்பு அரசியலை வளர்த்தெடுத்து தலித் இளைஞர்கள் மத்தியில் சுயமரியாதையை ஊட்டியவர் என்பதை மறுக்க முடியாது. ஆனால் சீமான்.................? சில பல ஆவேச சவடால் பேச்சுகள், சில மொக்கையான திரைப்படங்கள், இரண்டு முறை சிறைவாசம், அப்புறம் ‘காதல்’ படத்தில் வாய்ப்பு தேடி வரும் புதுமுக இளைஞன் சொல்வதைப் போல் ‘ அமெரிக்க ரிட்டன் மாப்பிள்ளை வேஷம்ல்லாம் வேணாம், ஹீரோ அப்புறம் டைரக்டா சி.எம்’தான். இளைஞர்களைக் கவர பெரியாரும் பிரபாகரனும் விசா, தேர்தலில் ஆதாயம் ஈட்ட தேவர் திருமகனுக்கு மாலை. இதற்கு ‘சமத்துவ மக்கள்‘ நாயகன் சரத்குமார் பரவாயில்லையே அய்யா! அவர் ‘‘அய்ம்பதாயிரம் இளைஞர்களைத் திரட்டுவோம், கடல் தாண்டுவோம்’’ என்று சவடால் பேசியதில்லையே.

அதைவிட கேவலமாக முன்வைக்கப்படும் ‘நியாயம்’, ‘சீமான் முத்துராமலிங்கத்திற்கு மட்டுமில்லை, இமானுவேல்சேகரனின் நினைவிடத்திற்கும் சென்று மரியாதை செலுத்தினார்’ என்பது. முத்துராமலிங்கத்தின் ஆதிக்கசாதித் திமிருக்கு எதிராய்ப் போராடி, தலித் மக்களின் சுயமரியாதையை உறுதி செய்வதற்காய் உயிரை அர்ப்பணித்தவர் போராளி இமானுவேல்சேகரன். அவரைக் கொலை செய்ததான குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட சாதிவெறிக்கொலைகாரன் முத்துராமலிங்கம்.

‘கொலைசெய்யப்பட்ட போராளிக்கும் மரியாதை செய், கொலைகாரனுக்கும் மாலைபோடு’ - சூப்பர் தத்துவம் சார், மன்னிக்கவும் அய்யா! நல்லாத்தான் இருக்கான் சீமான், உங்கள் பேரன்பும் பெருங்கோபமும் கொண்ட பிஸ்கோத்துதமிழன். எனது சென்றபதிவிற்கு வந்த ஒரு பின்னூட்டமும் சீமானின் ‘நியாயத்தை’ வேறு வார்த்தைகளில் சொல்கிறது பாருங்கள்.

/தம்பி சுகுணா,
ஒரு விசயம் சொல்கிறேன் கேள். இவர்கள் யாரும் பெரிய சிந்தனைவாதிகளோ சீர்திருத்தவாதிகளோ கிடையாது. மைக் மோகன் போல மைக் பிடித்த வீரர்கள். அவ்வளவே. இதற்காகவெல்லாம் ஏதோ பெரிய எதிர்வினை செய்கிறோம் என்றெல்லாம் நினைத்து பார்த்தீரா சீமானின் வல்லமையை என்றெல்லாம் நக்கலடிப்பது தேவையற்றது. அவர் தேவர் சிலைக்கு மாலை போட்டார்... சரி.. அப்படியே இம்மானுவேல் சேகரனுக்கும் அஞ்சலி செலுத்தினார் என்றால் மகிழலாம்! /

இந்த ‘சற்றுநேரத்திற்கு முன்பு தொலைபேசிய’ நண்பர் எனது ‘புலி அரசியலிலிருந்து விடுதலை அடைவோம்’ கட்டுரைக்கு எதிராகத் தொடர்ச்சியாக பின்னூட்டங்களில் சண்டமாருதம் செய்தவர். ஆனால் தமிழ்த்தேசியவாதிகளின் தவறைச் சுட்டிக்காட்டினால் மட்டும், ‘விடுங்க பாஸ், இதெல்லாம் ஒரு மேட்டரா’ என்கிறவகையான பின்னூட்டம்,. அதுவும் அனானியாக.

ஈழமக்களால் எப்படி மன்னிக்கப்பட முடியாத கொலைகாரனாக ராஜபக்ஷே இருக்கிறாரோ, அதேபோல் தலித்துகளாலும் சாதி எதிர்ப்பாளர்களாலும் மன்னிக்க முடியாத கொலைகாரன்தான் முத்துராமலிங்கம். ‘தமிழின ஒற்றுமை‘, ‘நல்லிணக்கம்’ என்று எதன்பெயராலும் முத்துராமலிங்கத்தை மரியாதை செய்கிறவர்கள் எங்களிலிருந்து அன்னியப்பட்டவர்களே.

இப்போது சீமானும் ஜெயமோகனும் ஒன்றுபடக்கூடிய புள்ளிகளைக் கீழே பாருங்கள். ஜெயமோகன், பசும்பொன் குருபூஜை குறித்து தனது வலைத்தளத்தில் எழுதிய கட்டுரையிலிருந்து சில வரிகள் மட்டும். இதன் பின்னுள்ள அபாயத்தை விளக்குவதற்கு நான் தேவையில்லை, ஜெயமோகனின் வரிகளே அதை விளக்கும். அபாயத்தை மட்டுமல்ல, ஜெயமோகனுக்கு எவ்வளவு அறிவு இருக்கிறது என்பதற்கும் இந்த வரிகளே சாட்சியம். இதே ஜெயமோகன்தான் ‘‘பெரியாருக்கு தமிழ்க்கலாச்சாரம் குறித்து போதுமான புரிதல்/ அறிவு கிடையாது’’ என்னும் வகையாய் எழுதியவர் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

''எந்த ஒரு மக்கள்கூடுகையும் ஜனநாயகச் செயல்பாடுகளுக்குச் சாதகமானதே. தேவர்சாதியை அரசியல் பிரக்ஞைக்கு கொண்டுவந்தவர் என்ற முறையிலும் அவர்களின் ஒற்றுமைக்கும் உரிமைக்கும் சுயநலமில்லாது போராடியவர் என்ற முறையிலும் அம்மக்கள் முத்துராமலிங்கத்தேவர் மீது கொண்டிருக்கும் பெரும் பற்று மரியாதைக்குரியது

ஆனால் தேவர் அச்சாதிக்குள் தன்னை ஒடுக்கிக்கொண்ட ஒரு சாதித்தலைவராக இருக்கவில்லை. அவர் ஒரு தேசியத்தலைவர். ‘தேசியமும் தெய்வீகமும் என் இருகண்கள்’ என்று அறிவித்தவர். அந்தப்புரிதல் அங்கே வந்த மக்கள்திரளுக்கு இருக்கிறதா என்ற ஐயம் ஏற்பட்டது. அந்த திருவிழாவில் எங்குமே தேவர் அவர்களின் கருத்துக்களையும் அரசியல் பணியையும் வாழ்க்கை வரலாற்றையும் விளக்கும் ஒரு நிகழ்ச்சியோ , கண்காட்சியோ , ஏன் அறிவிப்புகளோகூட கண்ணில்படவில்லை. அவரைப்பற்றிய நூல்களோ அவர் ஆற்றிய உரைகளடங்கிய நூல்களோ விற்பனைக்கு வைத்திருக்கவில்லை. ஒரு தலைவரை அவரது கருத்துக்கள் வழியாக மக்கள் அறிவதே முறையானது. அதற்கான வசதிகள் அங்கே செய்யப்படவில்லை.

மதுரை ஆலயத்தில் தலித்துக்களை அழைத்துக்கொண்டு ஆலயப்பிரவேசம் செய்தவர் தேவர் என்பது வரலாறு. அந்த வரலாறு அந்த இளைஞர்களுக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்டிருக்கும் என்றால் அவர்களில் ஒருசிலர் கிளப்பிய சில வெறிகொண்ட வெறுப்புக்கோஷங்களை எழுப்பியிருக்கமாட்டார்கள்.

க.சந்தானம், தி.செ.சௌ.ராஜன், சட்டநாதக் கரையாளர் போன்ற பலருடைய வாழ்க்கை வரலாறுகளில் தேவர் குறிப்பிடப்படுகிறார். உருக்கு போன்ற மன உறுதியும் கட்டுப்பாடும் கொண்ட மனிதராக அவரைச் சொல்கிறார்கள். அந்தக்கட்டுப்பாட்டை அவரது பிறந்தநாளில் கடைப்பிடித்தல்தான் அவருக்குப் பெருமை சேர்க்கும் என்று பட்டது. ஒரு தேசியத்தலைவரின் பிறந்தநாளன்று சாலைகள் தென்பட்ட பீதி ஒரு நல்ல விஷயம் அல்ல. தேவர் அவர் தேசத்துக்குச் செய்த தியாகங்களுக்காக அத்தனை சாதியினராலும் இந்தியாவில் உள்ள அத்தனை மக்களாலும் மதிப்புடனும், அவர் தங்களுக்கும் தலைவர் என்னும் பிரியத்துடனும் நினைவுகூரப்படுவதே அவருக்குச் செய்யும் நியாயம் ஆகும்.

தன்னிச்சையாக ஆரம்பித்த ஒரு விழா மெல்ல மெல்ல ஒரு திருவிழாவாக ஆகிவிட்டிருக்கிறது. உட்பிரிவுகள் ஊர்ப்பிரிவுகளை எல்லாம் மறந்து மக்கள் ஒருங்கிணைவது மிகச்சிறந்த ஒரு விஷயம்.சரியான வழிகாட்டல் இருந்தால் அம்மக்கள் தங்கள் ஜனநாயக உரிமைகளைப் பெறவும், கல்வி தொழில் போன்ற பல துறைகளில் ஒருங்கிணைந்து வெற்றி பெறவும் அந்த மனநிலை உதவக்கூடும். எந்த ஒரு மக்கள் எழுச்சியையும் சரியாக வழிநடத்தினால் ஆக்கபூர்வமான சக்தியாக ஆக்க முடியும். அதைச்செய்யும் தலைவர்கள் அவர்களில் இருந்து உருவாகி வரவேண்டும்.''

12 உரையாட வந்தவர்கள்:

 1. dondu(#11168674346665545885) said...

  //மதுரை ஆலயத்தில் தலித்துக்களை அழைத்துக்கொண்டு ஆலயப்பிரவேசம் செய்தவர் தேவர் என்பது வரலாறு.//
  இப்படி நடக்கவே இல்லை என்றா சொல்ல வருகிறீர்கள்?

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

 2. வால்பையன் said...

  ஜெமோ இப்படித்தான்னு தெரிஞ்ச விசயம் தான்!

  சீமான் தான் ஜீரணிக்க முடியல!

 3. ROSAVASANTH said...

  எனக்கு என்னவோ ஜேமோ அடுத்த சர்ச்சையை துவங்கி வைக்க, தற்கால மனசாட்சியின் குரலாக தன்னை கற்பிக்கும் அடுத்த முயற்சியாக இந்த தேவர் கட்டுரையை எழுதியிருக்கிறாரோ என்று சந்தேகம். இதை வைத்து இன்னும் சில மாதங்கள் ஓடுமோவென்று தோன்றுகிறது.

 4. Anonymous said...

  therthal saakkadayil vizhundha pinn kuraikkaaamal irukka mudiyadhu.

  ippodhu ivar katchi vaithirupadhu suyanama, podhu nalama ?? poga poga puriyum.

 5. மகிழ்நன் said...

  கோயில் நுழைவுப் போராட்டங்களை நடத்தியவர்கள் யார்?

  http://www.keetru.com/dalithmurasu/aug07/valaja_vallavan.php

  முத்துராமலிங்கத்தின் கோயில் நுழைவு போராட்டத்தின் லட்சணத்தை படிக்க இந்த இணைப்புக்கு சென்று வாருங்கள்

 6. நந்தா said...

  இன்னொரு நியாயமான, மிக அருமையான கட்டுரை. மிக மிகத் தேவையானதும் கூட. சரியான சமயத்தில் இட்டுள்ளீர்கள்.

 7. Anonymous said...

  ஆண்டுதோறும் தேவர் குரு பூஜை நடப்பது போல் ஆறு அல்லது ஏழு பதிவர்கள் இப்படி எழுதுவது இனி தொடரும்.வினவு எங்கிருந்தாலும் வரவும்,பதிவிற்கு ஒரு மேட்டர் ரெடியாக உள்ளது :).

 8. யோகேஷ் said...

  விடுங்க சுகுணா அந்த ஆளு ஒரு லூசுன்னு ஏற்கனவே அம்பலப்பட்டுப்போனவர்.

 9. NO said...

  அன்பான நண்பர் திரு சுகுணா திவாகர்,

  ஆங்கிலத்தில் Pseudo-Intellectual என்ற ஒரு வார்த்தை உள்ளது. தமிழில் போலி-அறிவுஜீவி! A simple and straight definition will be " A Person exhibiting intellectual pretensions that have no basis in sound scholarship!"

  தமிழகத்தில் இவர்கள்தான் "politically correct" எனும் திண்ணையை பலகாலமாக பிடித்துக்கொண்டு, பிடித்து தள்ளினாலும் போகவே மாட்டேன் என்றும் பக்கம் பக்கமாக புரியாததை படைத்து அதற்க்கு பிரதிகளும் எடுத்து யாரும் பார்க்காவிட்டாலும் பரவாயில்லை, கேட்காவிட்டாலும் கவலை இல்லை, நாங்கள் மட்டுமே முற்போக்கு என்று மார்த்தட்டி கொண்டிருக்கிறார்கள்!

  கரவொலி எழுப்ப பெரும் கூட்டம் இல்லாவிட்டாலும், இந்த சிறிய கூட்டம் காழ்ப்புணர்ச்சிகளை கவர்ச்சியாக எழுதி, தங்கள் கூடாரத்திற்கு உள்ளேயே பரப்பவிட்டு, உன் எழுத்துகளுக்கும் எண்ணங்களுக்கும் ஆரத்தி எடுக்க நான், எனக்கு நீ என்ற தங்களுக்குள்ளேயே கும்மி அடித்து மகிழும் வித்தையில் தேர்ந்து, காலப்போக்கில் அதை ஒரு வாழும் கலையாக்கி; தங்களின் தாண்டவத்திற்கு மருப்பென்று வருவதை தரக்குறைவாக திட்டி, இது தகாது என்று முத்திரை குத்தி, அதுவும் பெரும் கலையாகி, முத்திரை குத்தும் மாவீரர்கள் என்று பெயரோடும் தொழிலோடும் இன்று நிற்கின்றனர்!

  இந்த முத்திரை மாவீரர்கள் வளர்ந்து இன்று politically correct என்ற பொய் வழியை மெய்வழியாக மாற்ற முயற்சி மேல் முயற்சி செய்து, திண்ணை மட்டுமே அல்ல , வீடும் எங்களுடையது என்று கூசாமல் கூறி நிற்கின்றார்!

  இந்த கூட்டத்திற்கு சிந்தனை தூண்டிகள் சில. அதில் முக்கியமான ஒன்று சினிமா!

  People with such low levels of intellect, yet who have the urge to pose as intellectuals, jump on to the most simple minded stuff and ordinary structures to stich their fanciful theories and arguements!

  ஏன் அவர்கள் அதை செய்கிறார்கள் என்ற கேள்விக்கு ஒரே பதில், மேன்மையானவைகள் அவர்களுக்கு புரியாது! புரிந்திருந்தால் அவர்கள் இப்படி போலி அறிவு ஜீவிகளாக இருந்திருக்க மாட்டார்கள், முத்திரை மட்டுமே குத்தும் மகான்களாகவும் இருந்திருக்கமாட்டார்கள்!

  இவர்களின் கண்ணோட்டங்கள், உலகைப்பற்றியானாலும் சரி, வாழ்க்கைப்பற்றியானாலும் சரி, எவையாக இருந்தாலும் சரி, சினிமா மற்றும் சில அற்பமான விடயங்களை மட்டும் கொண்டே, அவற்றை பொருத்திப்பார்த்து, தங்களின் சற்றும் சரியில்லாத சிந்தனைகளுக்கு சாட்சி கிடைத்தது அல்லது பருக சாறு கிடைத்தது என்று மாறிவிட்ட உலகில் மாறாமல் நிற்கின்றனர்!

  உலகில் எல்லா இடங்களிலும் இனம்கண்டு, வேண்டாத நாச சிந்தனைகள் என்று கைவிடப்பட்டு பின்பு துரத்தப்பட்ட கரை படிந்த ஆக்கங்கள், அவை சுரந்த குப்பையான எண்ணக் கலவைகள், வேறு எங்கும் இல்லாமல் தமிழகத்தில் மட்டுமே, Politically correct என்ற போர்வயை போர்த்திக்கொண்டு பாசாங்காக வளம் வந்து கொண்டிருக்கிறது!

 10. NO said...

  ஸ்டாலின், பிடெல் காஸ்ட்ரோ போன்ற கடைந்தெடுத்த சர்வாதிகாரிகள், அதுவும், அடையாளம் கண்டு களையப்பட்ட காட்டு தர்பார் நடத்திய ஏனையா so called "தலைவர்கள்தான்" இவர்களுக்கு "Hero க்கள்" !

  எழுத்துலகில், கேட்கவே வேண்டாம். பிரச்சார பிட் நோட்டிசில் காணப்படும் கருத்தாழத்தோடு கக்கப்பட்ட கசடுகள்தான் இவர்களுக்கு சித்தாந்த்த விளக்கங்கள்!

  நாஜிகள், தாங்கள் செய்வதை ஞாயப்படுத்த அல்லது செய்யப்போவதற்கு ஆதாரமாக reasoning கொடுக்க காழ்புணர்ச்சி மட்டுமே உள்ள ஆனால் கொஞ்சம் சுவையாக கக்க தெரிந்த சிலரை அறிவு ஜீவிகள் என்றும் உருகொடுத்த ஊட்டி வளர்த்தார்கள்!
  அவர்களும் வாங்கிய காசுக்கு வக்கணையாக, வளர்த்துக்கொண்ட காழ்ப்புணர்ச்சிக்கு வடிகாலாக கண்டபடி எழுதித்தள்ளினார்கள்!

  ஸ்டாலின்னிஸ்ட்டுகளும் மாவோஇஸட்களும் பின்பற்றியதும் ஏறக்குறையா இதே வழிமுறை. என்ன, மார்க்ஸ்இன் பெயரை முன்னால் வைத்து முக்கியதால், நாசிகளின் பிரச்சார பீரங்கிகள் வாங்கிய அடிகளை இவர்கள் வாங்காமல் தப்பினார்கள், ரொம்ப காலமாக! இவர்களின் வண்டவாளங்கள் வெளியே வந்து, நேபாளத்தை தவிர, வட கொரியாவைத்தவிர மற்ற எல்லா இடத்திலிருந்தும் விரட்டப்பட்டதால் வேரறுந்து போனார்கள், இந்திய போன்ற நாடுகளில் மட்டும், யாரும் தங்களை பார்க்கா விட்டாலும் கேட்காவிட்டாலும், முடிந்ததை கக்கி, குப்பை மேடுகள் பலவற்றை கோபுரங்களின் உயரத்திற்கு கட்டி, இதோ பார் புரட்ச்சி, நாங்கதான் அறிவு ஜீவி என்று கத்திக்கொண்டிருக்கிறார்கள்!

  இவர்களுடன் சேர்ந்து கொண்டோ, அல்லது பயந்தோ கொண்டோ பலர், இந்த பிட் நோடிசு பம்மாத்தை நவீன அறிவுக்களஞ்சியம் என்று நம்பி அல்லது விரும்பி தங்களால் முடிந்த குப்பைகளை இங்கே கொட்டிக்கொண்டிருக்கிறார்கள்!

  என்ன, முன்னர் சொன்னது போல, சாதாரண விடயங்களும், சினிமா சொல்லும் சப்பையான அடையாளங்களும்தான் இவர்களின் உலகை, அதாவது இவர்களின் பிட் நோடிசு சொல்லும் உலகை தீர்மானிக்கின்றன!

  இவர்கள் எழுதுவதில், சமகால அறிவியல் ஆராய்ந்து சொன்னது சுத்தமாக இல்லை, ஆதாரத்தோடு எழுட்டப்பட்ட சமகால வரலாறும் சத்தியமாக இல்லை. சத்தம் போட்டு இவர்கள் சொல்வதெல்லாம், சகிக்காத முடியாத சினிமா விமர்சனம், சத்திலா பல சங்கதிகள், அதும் அவர்களுக்கு தேர்ந்த pick and choose செய்து பொருக்கி எடுக்கப்பட்ட சான்றுகள், கூடவே வரும் உணர்ச்சி தூண்டல்கள் மற்றும் கவர்ச்சிகரமாக அலங்காரம் செய்யப்பட்ட சாக்கடை சங்கதிகள்!

  தமிழ் வலையுலகம் உயிர்பெற்றவுடன் இந்த பிட் நோடிசு மா வீரர்கள் செய்த முதல் வேலை, காலியாய் கிடந்த இடத்தை நிரப்புவது, அதுவும், அற்பமான ஏதோ ஒரு சினிமாவில் தங்களின் சித்தாந்தங்களை பொருத்தி பக்கம் பக்கமாக மொக்கை போடுவது மற்றும் பிடிக்காதவர்களை, பிடிக்காதவைகளை, பிடிக்காததால் இது நாசமாக போகவேண்டும் என்று காழ்புணர்ச்சியுடன் தரக்குறைவாக எழுதித்தள்ளுவது. மேலும் இதை செய்யாத ஏனையா மக்களை பிற்போக்கின் ப்ரதிநிதியே முற்போக்கா நீ என்று பயமுறுத்தி முத்திரை குத்துவது!!!!

  இதை எல்லாம் ஏன் உங்களுக்கு சொல்லுகின்றேன் என்றால், இந்த கூட்டத்தின் முக்கிய மனிதார் நீங்கள் இல்லாவிடினும், முகவரி தந்து சந்தா கட்டும் முத்திரை வீரராக இருப்பதால் இந்த காணிக்கை!

  மேலும், ஜெயமோகன் என்ன, உங்களின் பிட் நோடிசு உலகை உணர்ந்து, இது வெறும் போலி அறிவு ஜீவிகள் கூட்டமே என்று தெளிந்து, உங்களை போன்றவர்களை அடையாளம் காட்டும் அல்லது உண்மை பேசிகள் அல்ல இவர்கள் என்று ஒதிங்கிப்போகும் யாரையும் எவரையும் திட்டுவதும் ரொம்ப சாதாரணம்தனே, நம்ம தொழிலே அதுதானே!!!

  முத்திரை குத்த ஆளில்லை எனின்,
  புதுவித பொய்கள் பத்தை சொல்லி
  உண்மை சத்துடன் எழுதும் சான்றோரையும்
  சற்றும் சங்கடமில்லாமல் சதாய்ப்பதும்
  பித்தம் பிடித்தவர் போல பதம் பார்ப்பதும்
  சுகுணா போன்றோருக்கு சுகமன்றோ

  உண்மையை சொல்லவேண்டுமென்றால், சுகுணா திவாகர் ஒரு சும்மானா டுபாகூர்!!!!

  நன்றி

 11. Unknown said...

  poda thevidiya paiya..thevar theivam..

 12. Unknown said...

  yen dathevidiya paiya..ne ambedhkar padam vacha ne puratchiaalarr..nan thevar padam vacha saathi veriyana..enada niyayam..Thevar theivam..