புலி அரசியலிடமிருந்து விடுதலை அடைவோம்!


தற்போதுள்ள சூழ்நிலையில் புலிகள் மீது மாற்றுக்கருத்தாளர்கள் முன்வைக்கும் விமர்சனங்களையட்டி நண்பர்களுக்கிடையில் நடைபெற்ற விவாதங்கள், விவாதங்களின் இடையே இணைய வாசகர்கள் முன்வைத்த கருத்துக்கள், கண்டனங்கள், அணிச்சேர்க்கை என எல்லாவற்றையும் நண்பர்கள் கவனித்து வந்திருக்கலாம். இத்தகைய விவாதங்களைத் தொடங்கி வைத்தவர்களும் தொடர்ந்து சென்றவர்களும் இலக்கிய நண்பர்களே. இவர்கள் அனைவருக்குமே சமூகத்தில் சின்னஞ்சிறு பிரிவினரிடமாவது அசைவுகளை ஏற்படுத்திய பங்களிப்பு பெருமை உண்டு. ஆனால் அவையெல்லாம் ஒருகட்டத்தில் திசை மாறிப் போய் அரசியலற்ற பேச்சுக்கள் உற்பத்தியாகி, தனிநபர் தாக்குதலாய்க் குறுகிப்போனதையும் துயரத்துடன் அவதானிக்க வேண்டியிருந்தது.

வால்பாறையிலும் மதுரையிலும் என்ன நடந்ததென்று தெரிந்துகொண்டவர்கள், சென்னை தமிழ்க்கவிஞர்கள் இயக்கம் நடத்திய ‘பன்முக வாசிப்பில் ஈழக்கவிதைகள்’ அரங்கத்தில் என்ன நடந்ததென்று தெரிந்து கொள்வதிலும் தவறில்லை. பொதுவாக கவிதைத்தொகுப்பு குறித்த விமர்சன அரங்கம் என்பதால் கூட்டத்தின் முற்பகுதி முழுவதும் கவிதைத்தொகுப்பு பற்றியதாகவே இருந்தது. கவிஞர் லதாராமகிருஷ்ணனின் பேச்சுதான் கூட்டத்தின் போக்கை மாற்றிப் போட்டது. லதாராமகிருஷ்ணனின் கோபம் முழுக்க கவிஞர் தாமரை எழுதிய ‘கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம்’ என்ற கவிதையைப் பற்றியதாக இருந்தது.

முகாம்களில் லட்சக்கணக்கான தமிழர்கள் அடைக்கப்பட்டிருக்கும்போது இத்தகைய ‘பொறுப்பற்ற, உணர்ச்சிவசப்பட்ட’ கவிதைகளும் பேச்சுகளும் தமிழர் நலன்களுக்குத்தான் பாதகம் விளைவிக்கும் என்றும் மேலும் ஒரு கவிஞர் நம் நாட்டின் மீது சாபம் விடுவதை எப்படி பொறுத்துக்கொள்ள முடியும் என்றும் இந்த கவிதையை எழுதிய தாமரை, ஈழத்தமிழரா, இந்தியத்தமிழரா என்று தெரியவில்லை என்றும் பேசினார் லதா. லதாராமகிருஷ்ணனின் பேச்சைக் கைதட்டி வரவேற்ற சிலரில் ஒருவராக சுகன் இருந்தார் என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றுதான். பின்பு பேச வந்த சுகன் தானொரு பவுத்தமரபைச் சேர்ந்தவன் என்று இலங்கையின் அரசியல் வரலாற்றை முன்வைக்கும்போதுதான் இலங்கையின் தேசியகீதம் தமிழிலும் பாடப்பட்டது குறித்து பாடிக்காட்டினார். இளங்கோவனின் ‘நாடற்றவனின் குறிப்புகள்’ நூலை விமர்சிக்கும்போது சோமிதரன், ‘புலி இருக்கிறவரையிலும் எதிர்ப்பு அரசியல் பேசினீர்கள். செத்தபிறகும் அதே அரசியலைப் பேசுவதில் என்ன நியாயம்?’ என்று கேட்டார். எல்லோருடைய பேச்சையும் தூக்கிச் சாப்பிட்டது என்னவோ இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் சி.மகேந்திரனின் பேச்சுதான்.

ஈழத்தில் முஸ்லீம்களைப் புலிகள் வெளியேற்றியது குறித்து, தலித்துகள் ஒடுக்கப்பட்டது குறித்து, மலையகத்தமிழரின் பாடுகள் குறித்து, புலிகளால் கொலைசெய்யப்பட்ட மாற்றுக்கருத்தாளர்கள் குறித்து என எதைப் பற்றியுமே பேசக்கூடாது. அதற்கான தருணம் இது இல்லை என்றார். இடைமறித்த கருப்புப்பிரதிகள் தோழர் நீலகண்டன், ‘தோழர் உங்களது வாதங்களை ஏற்றுக்கொண்டாலும் கூட புலிகளைத் திருஉருக்களாகக் கட்டமைக்கிற உங்களைப் போன்ற இயக்கங்கள் முஸ்லீம்களை வெளியேற்றியபோது ஒரு சொல்லும் பேசியதில்லையே’ என்றொரு கேள்வியைப் போட்டார்.

கொதித்துப்போன மகேந்திரன், ‘நீங்கள் உணர்ச்சி வசப்படுகிறீர்கள்’ என்று நீலகண்டனைச் சொல்லி அவர் உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார். ‘சுகன் உங்கள் வயது என்ன?’ என்ற மகேந்திரன் கேள்விக்கு சுகன் பதிலளிக்க மறுத்துவிட்டார். (‘நீயெல்லாம் சின்னப்பையன், உனக்கு அனுபவம் பத்தாது’ என்பதைத் தவிர இந்த கேள்வியின் தொனிக்கு வேறு என்ன அர்த்தம்?) உடனே மகேந்திரன், ‘சுகன் உங்களுக்கு பௌத்தம்ன்னு என்னன்னு தெரியுமா, இந்திய தேசியக்கொடியில அசோகச்சக்கரம் ஏன் இருக்கு தெரியுமா, காக்கா ஏன் கறுப்பா இருக்குன்னு தெரியுமா?’ என்று கிளாஸ் எடுக்கத் தொடங்கினார். இருக்கட்டும். இப்போது மய்யமான கேள்விக்கு வருவோம். ‘புலிகளைப் பற்றி இப்போது விமர்சிப்பது காலப்பொருத்தமில்லாததா?’.

திறந்த மனதோடு உரையாடுவோம் நண்பர்களே. ஈழத்தமிழர்களுக்கான தமிழக ஆதரவிற்கும் ஈழப்போராட்டத்தின் வயது இருக்கும். என் அப்பா புலிகளை ஆதரித்தார். என் அண்ணன் பள்ளியில் படித்த திமுக மாணவனாக இருந்தபோது, ‘ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில்ஸ்டார், பிரபாகரன் சூப்பர்ஸ்டார்’ என்று மாணவர் ஊர்வலங்களிலும் திமுக நடத்திய டெசோ பேரணிகளிலும் கோசம் போட்டார். நான் கல்லூரி படிக்கும்போது பிரபாகரனின் படத்தைப் பாக்கெட்டில் வைத்துத் திரிந்தேன். திமுக ஈழ ஆதரவை அம்போவென்று போட்டு விட்டு ஓடியபோதும் அதிமுகவிற்கு அப்பட்டமான ஈழ எதிரி ஜெயலலிதா தலைமையேற்றபோதும் மாறி மாறி வந்த இரு கட்சி அரசாங்களாலும் புலிகளை ஆதரித்த குற்றத்திற்காக எத்தனையோ சின்னஞ்சிறு இயக்கத்தலைவர்கள் சிறைப்பட்டார்கள், பலரது கட்சியின் இயக்கமே பாதிக்கப்பட்டது. ஆனாலும் தலைவர்களே, ஈழம் என்றால் புலிகள், புலிகள் என்றால் ஈழம் என்று எமக்குக் கற்றுக்கொடுத்து உணர்வூட்டிய தலைவர்களே, ஈழத்தில் முஸ்லீம்கள் என்ற மக்களும் இருக்கிறார்கள், அவர்களுக்கும் ஒரு அரசியல் இருக்கிறது என்று நீங்கள் கற்றுக்கொடுக்கவேயில்லையே! தலித்துகள், மலையகத்தமிழர்களுக்கும் பிரச்சினைகள் இருக்கின்றன என்று ஈழத்தை ஆதரித்து தெருவில் இறங்கிப் போராடிய இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்தவேயில்லையே! தலித் அரசியல் மேலெழுந்து வந்த நாட்களில் ‘பிரபாகரன் ஒரு தலித்’ என்று கூசாமல் பொய்சொல்லி, ‘எல்லாம் நம்பாளுகதான்’ என்று ஊத்திமூடினாரே ‘மாவீரன்’ நெடுமாறன்.

திறந்த மனதோடு உரையாடுங்கள், இப்போது நடந்துள்ள வீழ்ச்சிக்கும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலைக்கும் வெறுமனே கருணாநிதியும் சோனியாவும் ராஜபக்சேவும் மட்டும்தான் காரணமா? பிரபாகரனின் அரசியல் காரணமேயில்லையா? 15 ஆண்டுகாலத்திற்கும் மேலாக முன்வைக்கப்பட்ட மாற்றுக்கருத்துகளைப் புலிகள் புறங்கையால் தள்ளியதில் இந்த வீழ்ச்சிக்குப் பங்கில்லையா? மனச்சாட்சி தொட்டுச் சொல்லுங்கள், தமிழகத்தில் நீங்கள் கருணாநிதியைத் திட்டுவதைப் போல ஈழத்தில் பிரபாகரன் மீது ஒரு சிறுசொல் விமர்சனமும் வைத்துவிட முடியுமா? இன்னும் எத்தனைகாலத்திற்குக் கருணாநிதியைத் திட்டி புலிகளின் அரசியல் வறுமையையும் முட்டாள்தனத்தையும் மறைக்கப்போகிறீர்கள்?

புலி ஆதரவாளர்கள் அனைவரையும் ஒருதட்டிலோ ஒருதராசிலோ நான் நிறுத்த விரும்பவில்லை. தேநீர்க்கடையில் தலித்துக்களுக்கு எதிரான இரட்டைக்குவளையை உடைத்தும் போட்டுத்தான் புலிகளை ஆதரித்து சிறைசென்றார் கொளத்தூர்மணி. ஆனால் திண்ணியத்தில் தலித்துகளின் வாயில் பீ திணித்தபோது மவுனம் சாதித்து, புலிகளுக்கு மட்டும் முகவர் வேலை பார்ப்பவர் நெடுமாறன். தலித்துகளின் பிரச்சினையைக்கூட விட்டுவிடுவோம், தமிழ்த்தேசியவாதி என்ற அடிப்படையிலே கூட காவிரிப்பிரச்சினைக்குக் கூட மக்கள் இயக்கம் கட்டாதவர் நெடுமாறன்.

பிரபாகரனுக்கு எப்படி எந்த அரசியலும் கிடையாதோ, அதுபோல நெடுமாறனுக்கும் எந்த அரசியல் வஸ்துவும் கிடையாது. பிரபாகரனாவது இறுதிநாட்களுக்கு முன்பு வரை ராணுவரீதியில் தந்திரங்கள் வகுக்கும் புத்திசாலியாக இருந்தார். நெடுமாறனோ அதுகூடத் தெரியாத அப்பாவி. சிட்பண்ட் கம்பெனிகளைப் போல அவர் அவ்வப்போது நடத்திவரும் தமிழ்த்தேசிய இயக்கங்களுக்காவது ஏதாவது அரசியல், வேலைத்திட்டம் இருந்ததா, அவர் முன்வைப்பது தனித்தமிழ்நாடா, தமிழ்த்தேசியத்திற்குச் சுயநிர்ணய உரிமையா, வர்க்கம், சாதி பற்றி அவர் கருத்து என்ன? ஒரு மண்ணும் கிடையாது. பொத்தாம்பொதுவான தமிழ்த்தேசிய டம்மிபீஸ். இப்படிப்பட்ட ஒருவர்தான் ஈழத்தமிழர்களைப் பாதுகாப்பதற்கான ஒரு இயக்கத்தின் தலைவர். ஈழத்தில் பிரபாகரன் புலிகளின் தலைவர்.

நான் முன்பே சொன்னபடி புலி ஆதரவாளர்களை ஒருபடித்தானதாக கருதவில்லை. ஆனால் புலிகளின் மீது விமர்சனங்கள் வைப்பவர்களை மட்டும் அ.மார்க்ஸ், ஷோபாசக்தி, சுகன், ரயாகரன் என அனைவரையுமே ஒருதராசில் நிறுத்தி, ‘ராஜபக்சேவிடம் காசுவாங்கியவர்கள்’ அல்லது ‘இலங்கை அரசின் ஆதரவாளர்கள்’ என்று எப்படி முத்திரை குத்திவிட முடிகிறது? அப்படி குத்தி விடுவதற்கு முன்னால் உங்கள் அருகில்தான் மணியரசன் இருக்கிறாரே, அவரின் முகத்தையாவது கண்ணாடியில் பார்க்கலாமே.

மணியரசனின் ‘தமிழ்த்தேசப்பொதுவுடைமைக் கட்சி’யிலிருந்து ராசேந்திர சோழன் விலகி அமைப்பு தொடங்கினாரே. அப்போது ‘த.தே.பொ.கவிலிருந்து ஏன் விலகினோம்’ என்று சிறுவெளியீடு கொண்டுவந்தாரே. ‘புலம் பெயர்ந்த தமிழர்கள் அன்பளிப்பாய்த் தந்த பணத்தைக் கட்சி நிதியில் சேர்க்காமல் தனக்குக் கலர் டி.வி வாங்கிக்கொண்டார்’ என்று பகிரங்கமாகக் குற்றம் சுமத்தினாரே! புலிகளோடு கொடுக்கல் & வாங்கல் கணக்கு வைத்திருந்த தமிழகத்துத் தலைவர்கள், உலகம் முழுக்க உள்ள புலிப்பினாமிச் சொத்துக்களைப் பாதுகாத்து வருபவர்கள் குறித்து ஒரு சின்ன விமர்சனமாவது வைப்பீர்களா?

இன்னமும் ‘பிரபாகரன் உயிரோடு இருக்கிறார். வரலாற்றில் மீண்டும் இன்னொருவர் உயிர்த்தெழுவார்’ என்று பச்சைப்பொய்யைப் பரப்பி வருகிறாரே! இப்போதாவது ஈழமக்களுக்கான ஒரு வேலைத்திட்டம் இருக்கிறதா இவரைப் போன்றவர்களிடம்! இறுதிநாட்களில் புலிகள் நடந்துகொண்ட விதம் குறித்த தகவல்களைக் கேட்கும்போது மனசு பதறுகிறது.

இலங்கை ராணுவம் செல்லடிக்கும்போது மக்கள் மத்தியில் இருந்துகொண்டே புலிகளும் பதில் செல்லடித்து தமிழ்மக்களைக் கொன்றிருக்கிறார்கள். ‘தாங்கள் தோல்வி அடையப்போகிறோம், சாகப்போகிறோம்’ என்று தெரிந்தும் தமிழ்மக்களைத் துணைப்பிணங்களாக்கியிருக்கிறார்களே புலிகள். இறுதிப்போர் முடிந்தபிறகு மக்களோடு மக்களாக முகாமிற்கு வந்த புலிகளை ‘இவன்தான் புலி, எங்களைப் பிடித்து வைத்திருந்தவன்’ என்று மக்களே ராணுவத்திடம் பிடித்துக்கொடுத்ததாக மிகவும் நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். இது ஏதோ ஷோபாசக்தி போன்றவர்கள் பரப்பும் ‘பொய்கள்’ அல்ல. புலி ஆதரவாளர்களே பகிர்ந்துகொள்ளும் தகவல்கள்தான்.

கடைசிநாட்களில் வன்னிமக்களோடு தொடர்பில் இருந்த புலி ஆதரவாளர்கள் கொஞ்சம் நெருக்கிக் கேட்டால் ‘அவையெல்லாம் உண்மைதான்’ என்று ஒப்புக்கொள்கிறார்கள். மூன்று தசாப்தங்களாக ‘புலிகள்தான் மக்கள், மக்கள்தான் புலிகள்’ என்று சொல்லி வந்தீர்களே, எவ்வளவு விமர்சனங்கள் புலிகளின் மீது இருந்தபோதும் ராணுவப்பகுதியை விட புலிப்பகுதியில் மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்ததே, அவர்களையும் கொல்லக் கொடுத்தும் கொல்லவும் செய்தார்களே புலிகள். அவர்களைத்தானா விமர்சிக்கக்கூடாது என்கிறீர்கள்!

ஆனால் இத்தகைய பயங்கரவாத, வலதுசாரிய, மக்கள்விரோத, மனித உரிமைகளுக்கு எதிரான, சுதந்திரத்தையும் சமத்துவத்துவத்தையும் ஜனநாயக உணர்வையும் மயிரளவும் மதிக்காத அமைப்பு மீது விமர்சனம் வைப்பவர்கள் மீதுதான் நண்பர்களே, முடிந்தளவுக்குக் கல்லெறிகிறீர்கள். ஈழமக்களின் சாவுகளை வைத்து விளையாடும் ஒரு குரூர விளையாட்டில் கருணாநிதி கூட ஒருகட்டத்தில் நேர்மையாக விலகிவிட்டார். ஆனால், இன்னமும் நீங்கள் தொடரும் இந்த விளையாட்டின் அயோக்கியத்தனத்தை என்னவென்பது!

‘இப்போது புலிகளை விமர்சிக்கக் கூடாது, விமர்சிக்கக் கூடாது’ என்றால் எப்போதுதான் விமர்சிப்பது? சோவியத் யூனியன் உடைந்து சிதறியபிறகு மனநெருக்கடிக்கு ஆளான மார்க்சியர்கள்தானே கம்யூனிச அரசுகள் மீது விமர்சனமும் வைத்து செழுமைப்படுத்தவும் செய்தார்கள். தமிழ்நாட்டிலும் சோசலிசக்கட்டுமானம் குறித்த விவாதம் நடைபெற்றதே. விமர்சனங்களை முன்வைப்பதும், வரலாற்றிலிருந்து பாடங்கற்றுக்கொள்வதுமே புத்திசாலிகளின் வேலை. ஆனால் ‘நாங்கள் புத்திசாலிகள் இல்லை’ என்று நீங்களே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தால் என்ன செய்வது?

‘‘90களுக்குப் பிறகான உலகப் பொருளாதாரச் சூழல், செப்டம்பர் 11க்குப் பிறகான உலக அரசுகளின் ராணுவத்தன்மை இவற்றைப் புலிகள் கணக்கில் எடுக்கவில்லை’’ என்றுதானே அ.மார்க்ஸ் ‘புத்தகம் பேசுது’ பேட்டியிலே சொன்னார். அப்போது அவரை அரைலூஸ§ என்றீர்களே. இப்போது சொல்லுங்கள் குழலி, அரைலூஸ§ யார், அ.மார்க்சா, பிரபாகரனா?

சரி, எல்லாமே முடிந்தது , இனி வேறு அரசியல் பேசலாம் என்றாலும் மீண்டும் மீண்டும் பிரபாகரனின் அசரீரிதானே கேட்கிறது. ‘இந்தியாதான் தமிழீழம் அமைத்துத் தரும்’ என்றுதானே ருத்திரகுமாரன் பேசுகிறார். இந்திய அரசிற்குச் சாபம் கொடுத்து தாமரை கவிதை எழுதுவார். ஆனால் சாகும் வரை பிரபாகரனும் புலிகளும் இந்தியாவை எதிர்த்து ஒரு விமர்சனமும் வைக்க மாட்டார்கள். இன்னமும் இந்தியாவையும் ஒபாமாவையும்தான் நம்புவோம் என்றால் யாரைப் படுகொலைகளுக்குத் தின்னக் கொடுக்க இன்னமும் புலி அரசியல் பண்ணப் போகிறீர்கள்?

எந்த சுயவிமர்சனமும் செய்யாமல் புலிகளின் அதே அரசியலை அதே புலிகளின் குரலில் செய்வது தவறில்லை. ஆனால் புலிகளின் தவறுகளை விமர்சித்து மாற்று அரசியலைப் பேச முனைவது மட்டும் துரோகமா நண்பர்களே! நானும் புலிகளை விமர்சிக்கிற அனைவரது கருத்துக்களையும் கேள்விகள் எதுவுமற்றுக் கேட்டுக்கொள்ளச் சொல்லவில்லை! லதாராமகிருஷ்ணனின் அபத்தமான இந்தியச்சார்புப் பேச்சிற்குக் கைதட்டுகிற சுகனின் நிலைப்பாட்டை என்னால் ஆதரிக்க இயலாது. இலங்கை அரசை அவர் ஆதரிக்கிறார் என்று கருதவில்லை. ஆனால் இலங்கை அரசிற்கு எதிராக அவரிடமிருந்து விமர்சனங்கள் வருவதில்லை என்பதாலேயே சுகனின் அரசியலை மறுக்கிறேன். ஆனால் புலிகளை விமர்சிக்கிற அதே நேரத்தில் தனது பிரதிகள் அனைத்திலும் இலங்கை அரசையும் விமர்சிக்கிற ஷோபாசக்தியையும் விலக்கி வைப்பது எவ்வகை நீதி?

தோழர்களே! புலிகளாலும் இலங்கை ராணுவத்தாலும் இறுதிநாட்களில் கொல்லப்பட்ட வன்னி மக்களின் பிணங்களின் மீது சிந்தியுங்கள்! நண்பர்களே, நீதியின் பேராலும் அன்பின் பேராலும் ஜனநாயகத்தின் பேராலும் யோசியுங்கள்!

புலி அரசியலிலிருந்து விடுதலை பெறாமல் தமிழர்களுக்கு விடுதலை இல்லை. இவ்வளவு சொல்லியும் ‘‘இருக்கிறவரும் இருப்பவரும் வருபவருமாகிய சர்வ வல்லமை பொருந்திய கர்த்தராகிய தேவனே! உன்னை ஸ்தோர்த்திக்கிறோம்!’’ (வெளி 11 -& 17) என்று தொடர்ந்தீர்களானால் என்ன செய்வது! இறுதிநாட்களில் பிரபாகரனின் அப்பத்தையும் ஒயினையும் பங்கிட்டுக் கொண்டவர்களாயிற்றே! பரிசுத்தமடைவீர்களாக!

57 உரையாட வந்தவர்கள்:

 1. Anonymous said...

  அ.மார்க்ஸ், ஷோபா சக்தி குழு ஆதரவு அரசியல் குரல் உங்களுடையது. இது எல்லோருக்கும் தெரியும். இதை திரும்பதிரும்ப மெய்ப்பிப்பது தேவையில்லை.

 2. superlinks said...

  வணக்கம் மிதக்கும் வெளி
  இதை ஆர்குட்டில் போட்டிருக்கிறேன் போய் பாருங்க உங்களை எப்படி பிரிச்சி மேயப்போறாங்கன்னு.

  சுட்டி
  http://www.orkut.co.in/Main#CommMsgs.aspx?cmm=37515815&tid=5358261839978453217&start=1

 3. sugan said...

  சிறப்பான தலைப்பொன்றை இட்டிருக்கிறீர்கள்!
  அன்று மிகவும் நுட்பமாகவும் விமர்சனபூர்வமாகவும் நீங்கள் மட்டுமே பேசினீர்கள்.
  இவ்விமர்சனத்திலும் பதிவிலும் அதன் தொடர்ச்சியைக்காண்கிறேன்!
  தனது நாட்டையே அறம்பாடி அழியச்சாபமிடுவதை யாரால் ஏற்றுக்கொள்ளமுடியும்.
  அந்த அழகிய பெண்ணின் மென்மை இதயத்தில் இத்தகைய வன்மத்தையும் வெறுப்பையும் துவேசத்கையும் கோபாக்கினியையும் அழிவுவிருப்பையும் ஏற்படுத்தியோர் யார்?
  அந்தக்கவிதையில் ஆறுதல் கொள்ள எதுவுமில்லை என்பது உங்களுக்குத்தெரியாதா?
  லதாவின் அதற்கான எதிர்வினை நியாயமாகத்தானே இருந்தது!

  தோழமையூடு
  சுகன்

 4. sugan said...

  சிறப்பான தலைப்பொன்றை இட்டிருக்கிறீர்கள்!
  அன்று மிகவும் நுட்பமாகவும் விமர்சனபூர்வமாகவும் நீங்கள் மட்டுமே பேசினீர்கள்.
  இவ்விமர்சனத்திலும் பதிவிலும் அதன் தொடர்ச்சியைக்காண்கிறேன்!
  தனது நாட்டையே அறம்பாடி அழியச்சாபமிடுவதை யாரால் ஏற்றுக்கொள்ளமுடியும்.
  அந்த அழகிய பெண்ணின் மென்மை இதயத்தில் இத்தகைய வன்மத்தையும் வெறுப்பையும் துவேசத்கையும் கோபாக்கினியையும் அழிவுவிருப்பையும் ஏற்படுத்தியோர் யார்?
  அந்தக்கவிதையில் ஆறுதல் கொள்ள எதுவுமில்லை என்பது உங்களுக்குத்தெரியாதா?
  லதாவின் அதற்கான எதிர்வினை நியாயமாகத்தானே இருந்தது!

  தோழமையூடு
  சுகன்

 5. மிதக்கும்வெளி said...

  நன்றி அனானி நண்பரே. முத்திரை குத்துவது வித்தியாசங்களை மறுத்து மொன்னையான அடையாளத்தைக் கட்டியமைப்பது எல்லாம் தமிழர்களுக்குப் புதிதில்லைதானே! தொடரட்டும் உங்கள் பணி!

  சுகன்

  அறம்பாடுவதே தவறென்றால் 'ஜெகத்தினை அழிக்கச் சொன்ன பாரதியையும் 'பரந்து கெடுக இவ்வுலகியற்றியான்" என்று சொன்ன வள்ளுவரையும் என்ன செய்யலாம்? மன்னிக்கவும் சுகன். இலங்கை அரசு, புலிகள், இந்திய அரசு எல்லோரையும் சமதூரத்தில் வைத்துத்தான் விமர்சிக்க வேண்டும் என்பதுதான் என் நிலைப்பாடு. மேலும் என்னால் எப்போதும் இந்தியத்தேசியத்தை ஆதரிக்க முடியாது. தமிழனாய் இருப்பதில் உள்ள சிக்கலை விட இந்தியனாய் இருப்பதில் எனக்கு பிரச்சினைகள் அதிகம்.

 6. மிதக்கும்வெளி said...

  நன்றி சூப்பர்லிங்க்ஸ்.

  தமிழர்கள் பொதுவாக உணர்ச்சிவசப்படுபவர்கள்தானே, பிரிச்சு மேயாமல் இருந்தால்தானே ஆச்சரியம்?

 7. osai Chella said...

  Suguna, i know your flow of writing is a great art to enjoy! It may cover up the other side! But i will come out with my own arguments to this article in a couple of days! ( enathu kanniniyil tamil adikka mudiyaamal avathi!) Irunthaalum sila visayangal inge munnottamaaka..

  1. First you must know the basics and nuances of what went wrong? Summa karuthu malai polivathil arthame illai. Pirabakaran jeyithaal pro LTTE makkal itta koochalukkum avar thorru vittal.. paathiyaa ippo enna nadanthathu endru vimarsippatharkum periya viththiyaasam illai! innum konjam aaraainthu ulaviyal paarvaiyodu eluthalaame!

  2. Por aarampathil Makkal pulikalodu thaan idam peyarnthaarkalaa.. illai pulikalin aayuthangalukku payanthu avarkolu senraarkaLaa? YES or NO sollunga.. mansaatchi irunthaal?

  3. Pulikal nichayam pulikalthaan. Avarkal hardcore fighhters. They silenced many opposition. True. Ithu nadakkatha puratchiyai engu nadanthathu endru sollamudiyumaa.. konjamaavathu varalaatru arivu irunthaal? Bolshivik party allowed opposition? China revolution? Vietnom? Cuba? puratchi enpathu ippadithaan vedikkum! maatru karuthukal pesinaal BAR l oru ilakkiya koottam nikalalaam. Purathchiyum nikalaathu .. oru mayirum nadakkathu? neengal lla maoisim eppadi pesureenga appo appo?

  4. Entha naatilaavathu thaam 25 aandukal udan vaalntha makkalai oru pechu vaarthaiyum illaamal tholvi endrathum ethiriyidam anuppi vaithaarkal endru oru aathaaram kodukka mudiyumaa.. sameepathil israel padayeduthapothu Hamas eppadi nadanthu kondaarkal? makkalai paathukaappaaka israel vasam anuppiyaa vittaarkal? Summa kandapadi tholikku pin araachi show kaatakkoodathu inge!

  .. innum thodarum...

  nanban
  Osai Chella

 8. Anonymous said...

  மூன்று தசாப்தங்களாக ‘புலிகள்தான் மக்கள், மக்கள்தான் புலிகள்’ என்று சொல்லி வந்தீர்களே, எவ்வளவு விமர்சனங்கள் புலிகளின் மீது இருந்தபோதும் ராணுவப்பகுதியை விட புலிப்பகுதியில் மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்ததே, அவர்களையும் கொல்லக் கொடுத்தும் கொல்லவும் செய்தார்களே புலிகள். அவர்களைத்தானா விமர்சிக்கக்கூடாது என்கிறீர்கள்!//

  just forward it into tamilnathy..

 9. மிதக்கும்வெளி said...

  செல்லா,

  நன்றி உங்கள் பாராட்டுகளுக்கும் வசவுகளுக்கும்.

  1. புலிகள் மீதான விமர்சனம் இப்போது அவர்கள் படுதோல்வி அடைந்துள்ளபோதுதான் முன்வைக்கப்பட்டது என்பது சரியல்ல. 15 ஆண்டுகளுக்கும் மேலாகவே மாற்றுக்கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அதை எப்போதும் புலிகளும் அவர்களது ஆதரவாளர்களும் கணக்கிலெடுத்ததில்லை. வெற்றிமுகத்தில் இருந்தபோது, 'அவர்கள்தான் களத்தில் இருக்கிறார்கள்" என்று விமர்சனங்களை மறுத்தார்கள். இப்போது விமர்சித்தால் நீங்கள் தோல்வியைப் பழிப்பு காட்டுவதாகச் சொல்கிறீர்கள்? இதற்காக நான் அடுத்த நூற்றாண்டு வரை காத்திருக்க வேண்டுமா?

  2. மனச்சாட்சி இருக்கிறதா என்று நீங்கள் கேட்க வேண்டியவர்கள் புலிகளும் அவர்களது கொலைகளை நியாயப்படுத்தியவர்களையும்தான். மக்கள்தான் புலிகளோடு இடம்பெயர்ந்தார்கள் என்றே வைத்துக்கொள்வோம். அவர்கள் பொட்டு அம்மான் அல்லவே, வழக்கம்போல் இதுவும் ஒரு யுத்தம் என்று நினைத்திருக்கலாம். ஆனால் புலிகளுக்குத் தெரியாதா, இது வழக்கமான யுத்தமில்லை, உக்கிர‌மான போர் என்று. ஆனாலும் 'புலி பின்வாங்கி அடிக்கும் தந்திர யுத்தி' என்றுதானே ஏமாற்றி வந்தீர்கள்? புலிகளின் குறியெல்லாம் செத்துப்போன தமிழ்மக்களைப் படம் பிடித்துக் காட்டி சர்வதேசத்தின் அனுதாபத்தைப் பெறுவதில்தானே இருந்தது? பிரபாகரன் அறிவும் நாணயமும் இருந்திருந்தால் கிளிநொச்சியும் முல்லைத்தீவும் வீழ்ந்தபோதே மக்களை வெளியேற்றி மூன்றாவது சக்தியிடம் சரணடைந்திருக்க வேண்டும். அப்படியும் 'மக்கள் வெளியேறாமல் புலிகளிடம்தான் இருப்போம்" என்று அடம்பிடித்தார்கள் என்று பொய்யைப் பரப்பாதீர்கள்.
  அப்படியே அடம்பித்தாலும் எண்பதினாயிரம் முஸ்லீம்களை அய்ந்நூறு ரூபாய் பணத்தோடு வெளியேற்றிய புலிகளுக்குத் தமிழ்மக்களை வெளியேற்றியிருக்க முடியாதா, என்ன?

  3. மாற்றுக்கருத்துக்களை ஒடுக்குவதைக் கம்யூனிஸ்ட்களும் செய்திருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.ஆனால் அதற்கான விமர்சனங்களையும் மார்க்சிஸ்ட்கள் வைத்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ளலாம். ஏன் இன்னமும் மாவோவையும் ஸ்டாலினையும் விமர்சிப்பவர்கள் இல்லையா? பிரபாகரனை மட்டும் விமர்சிக்கக் கூடாது என்பது என்ன வகையான நியாயம்? 'பாரில் குடிப்பவர்கள்' என்று கேலி பேசுவதற்குப் பெயர் ஒறுப்பான கருத்தில்லை. களத்திலே நின்று புலிகள் பிடுங்கிய மயிரைத்தான் பார்க்கிறொமே. பாரில் குடித்து இலக்கியம் பேசுபவர்கள் தங்கள் சொந்த மக்களைக் கொலைசெய்யும் கொலைகாரர்களை விட மேலானவர்கள்தான் செல்லா.

  4. நான் சொல்வதில் எல்லாம் உங்களுக்கு நம்பிக்கை இல்லைய்டென்றால் தனிமடல் அனுப்புங்கள். முகாமிருப்பவர்களின் எண்களைத் தருகிறேன், பேசுங்கள். அவர்களிடம் புலிகள்,தமிழீழம் என்று பேசினால் செருப்பால்தான் அடிப்பார்கள்.

 10. Osai Chella said...

  // புலிகள் மீதான விமர்சனம் இப்போது அவர்கள் படுதோல்வி அடைந்துள்ளபோதுதான் முன்வைக்கப்பட்டது என்பது சரியல்ல. 15 ஆண்டுகளுக்கும் மேலாகவே மாற்றுக்கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.//

  // Srilankan Government மீதான விமர்சனம் இப்போது அவர்கள் படுதோல்வி/vetri அடைந்துள்ளபோதுதான் முன்வைக்கப்பட்டது என்பது சரியல்ல. 50 ஆண்டுகளுக்கும் மேலாகவே மாற்றுக்கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.// ithu sarithaane! Maatru karuthukkal mattum vaipathaiye poluthupokkaaka vaithukkondirunthaal oru puratchiyum nadakkaathu. comment number vedumaanal koodalaam. sariyaa illai thavaraa? Karuthu vaipathu veru.. kalathil thuppaaki kuzalkaLil irunthu varum athikaarathai kaipatra nadappathu veru! Pulikal karuthu reethiyaaka oru mudivai eduthu pin ennithunika karumam endru oru karumaththai kaiyileduththaarkal. atharkkaaka iruthivarai poraadinaarkal. thangal makan makal kooda saakum varai poraadinaarkal.

  2.//மனச்சாட்சி இருக்கிறதா என்று நீங்கள் கேட்க வேண்டியவர்கள் புலிகளும் அவர்களது கொலைகளை நியாயப்படுத்தியவர்களையும்தான். மக்கள்தான் புலிகளோடு இடம்பெயர்ந்தார்கள் என்றே வைத்துக்கொள்வோம். அவர்கள் பொட்டு அம்மான் அல்லவே, வழக்கம்போல் இதுவும் ஒரு யுத்தம் என்று நினைத்திருக்கலாம். ஆனால் புலிகளுக்குத் தெரியாதா, இது வழக்கமான யுத்தமில்லை, உக்கிர‌மான போர் என்று. ஆனாலும் 'புலி பின்வாங்கி அடிக்கும் தந்திர யுத்தி' என்றுதானே ஏமாற்றி வந்தீர்கள்?//

  மக்கள்தான் புலிகளோடு இடம்பெயர்ந்தார்கள் என்றே வைத்துக்கொள்வோம் - enna vaithukkolvom... chumma elutha ithu onnum kummi pathivu illai Suguna.. ungalukkuthaan neraiyaa number theriyume.. keetupaarunga? ponaangalaa illaiyaannu?

  //வழக்கம்போல் இதுவும் ஒரு யுத்தம் என்று நினைத்திருக்கலாம். ஆனால் புலிகளுக்குத் தெரியாதா, இது வழக்கமான யுத்தமில்லை//
  Nalla solveenga.. rendu vallarasu naadukal kooda sernthu makkal partriya sindhanai oru kinjiththum illamal pulivettai endra peyaril hospital ai kooda vittuvaikkaamaal koththu kothaaka azhiththoliththathai oru nermaiyaana por endru vaikoosamal eluthavatharku pathil "vizhimpukaLin kaayanagalukku kalimpukal pottu aathiyirukkalaam neengal! Neengalum ungal PERUM POR patriya paarvaiyum! pulikalai vida thelivaana oru mudivodu kalam irangiyirukkireerkal pola irukku! ezhuthuppor pani sirakka vazhthukkal!

  .. thodarum

  natpudan
  Osai Chella

 11. மிதக்கும்வெளி said...

  முதலில் செல்லா, நீங்கள் புரிந்துதான் பேசுகிறீர்களா என்று எனக்குப் புரியவில்லை. உங்கள் மூளைக்குள் உறங்கும் மிருகத்தைக்(புலி) கழற்ரி விட்டு உரையாடுங்கள்.

  1. இலங்கை அரசு மீது நாம் விமர்சனம் வைக்க முடியாது. அதை எதிர்த்துப் போராடத்தான் வேண்டும். ஆனால் புலிகள் ஒரு விடுதலை இயக்கம் என்பதால்தான் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. நீங்கள் நெடுமாறனைப் போல 'அப்பாவி'யாகப் பேசினால் நான் என்ன செய்வது?
  /Maatru karuthukkal mattum vaipathaiye poluthupokkaaka vaithukkondirunthaal oru puratchiyum nadakkaaது./

  புலிகளின் துப்பாக்கிக்கிப் பயந்து வெளிநாடுகளுக்கு ஓடி, அங்கேயாவது விமர்சனத்தை வைப்பதற்குப் பெயர்தான் பொழுதுபோக்கா? இரண்டாவதாக இலங்கையில் எப்போதும் புரட்சியும் நடக்கவில்லை, புண்ணாக்கும் நடக்கவில்லை. புலிகள் நடத்தியது ஒரு ஆயுதப்போராட்டம். ஆயுதப் போராட்டம் எல்லாம் புரட்சியில்லை.

  /Pulikal karuthu reethiyaaka oru mudivai eduthu pin ennithunika karumam endru oru karumaththai kaiyileduththaarகல்./

  நல்ல நகைச்சுவை. நெக்ஸ்ட்?

  /atharkkaaka iruthivarai poraadinaarkal. thangal makan makal kooda saakum varai poraadinaarkஅல். ?

  போராடினார்கள், போராடினார்கள் என்றால் யார் போராடினார்கள்? புலிகளா, மக்களா? தாங்கள் போராடுவதற்காக மக்களைப் பலிகொடுப்பது என்ன நியாயம்? பிரபாகரன் மீது இப்போது எனக்கிருக்கும் பெரிய மரியாதையே அவர் இலங்கையில் செத்துப்போனதுதான். நிச்சயமாக அது வீரம்தான். ஆனால் அந்த மரியாதையைப் பிரபாகரனுக்கு வழங்கக்கூட நெடுமாறன் விடமாட்டேன் என்கிறாரே.
  இன்னமும் பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார் என்று அவர் சொல்ல என்ன காரணம்? பிரபாகரன் இல்லையென்றால் அவருக்கு அரசியலே கிடையாது.

  /மக்கள்தான் புலிகளோடு இடம்பெயர்ந்தார்கள் என்றே வைத்துக்கொள்வோம் - enna vaithukkolvom... chumma elutha ithu onnum kummi pathivu illai Suguna.. ungalukkuthaan neraiyaa number theriyume.. keetupaarunga? ponaangalaa illaiyaaந்னு?/

  மக்களைப் புலிகள்தான் பிடித்துக்கொண்டார்கள் என்பதுதான் உண்மை. ஆனால் அதை நீங்கள்தான் நம்பத் தயாராக இல்லையே!

  ///வழக்கம்போல் இதுவும் ஒரு யுத்தம் என்று நினைத்திருக்கலாம். ஆனால் புலிகளுக்குத் தெரியாதா, இது வழக்கமான யுத்தமில்லை//
  Nalla solveenga.. rendu vallarasu naadukal kooda sernthu makkal partriya sindhanai oru kinjiththum illamal pulivettai endra peyaril hospital ai kooda vittuvaikkaamaal koththu kothaaka azhiththoliththathai oru nermaiyaana por endru vaikoosamal eluthavatharku pathil "vizhimpukaLin kaayanagalukku kalimpukal pottu aathiyirukkalaam neengal! Neengalum ungal PERUM POR patriya paarvaiyum! pulikalai vida thelivaana oru mudivodu kalam irangiyirukkireerkal pola irukku! ezhuthuppor pani sirakka vazhthukகல்!/

  நான் என்ன சொல்கிறேன், நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? நான் ஒருபோதும் இலங்கை அரசின் இனப்படுகொலைகளை ஆதரித்ததும் இல்லை, போவதுமில்லை. அதேநேரத்தில் இத்தகைய வீழ்ச்சிக்குப் புலிகளும் அவர்களது அரசியலும் பிரதான பங்கு வகித்தன என்றுதான் சொல்கிறேன்.

 12. Osai Chella said...

  // நான் ஒருபோதும் இலங்கை அரசின் இனப்படுகொலைகளை ஆதரித்ததும் இல்லை, போவதுமில்லை. //

  indru camp'l irukkum makkalin kookural kaathukku vilunthu ezhukirathu intha veeramiku katturai... andru tham vaalvidangal meethu selladithu sethuvizhumpothu akkural ungalukku vizhaveyillai.. Rajabakse meethu kaarithuppa oru katturaiyum ungal penavukkul nulaiyavillai.eththanai katturaikal kadantha inapadukolai nadantha 5 maathangalil eluthiyulleerkal endru ennikai tharamudiyumaa suguna? neengal pesum arasiyalai vida pesamal vitta arasiyal thaan engalai nokadikkirathu! neengalellam vilimpukal patri pesa arukathai atravarkal, manasaatchi atravarkal.

  kanini othulaikkavillai.. ungalai tholurippatharku.. nichayam seiven paarungal ungal arasiyalin latchanathai/ottaikalai.

  anbudan
  Osai Chella

 13. Osai Chella said...

  // இத்தகைய வீழ்ச்சிக்குப் புலிகளும் அவர்களது அரசியலும் பிரதான பங்கு வகித்தன என்றுதான் சொல்கிறேன்.//
  ithakaiya veelchikku pulikalin samarasamatra nermaiyum kolkai uruthiyum, thamizhanin thurokangalum, vallarasukalin aathikka vilaiyaattum, inthiyaavin palivaangum kunamum thaan pirathaana pangu vakiththana endru thaan naan solkiren!

 14. கொழுவி said...

  நான் 100 வீதம் புலிகளை எதிர்க்கும் அதே வேளை 200 வீதம் அரசை எதிர்க்கிறேன் என சோபா சக்தி முன்பு கூறியிருந்தார். (அதே நிலையில் தற்போதும் உள்ளாரா என அறிய ஆவல்.)

  இதேமாதிரியான நிலைப்பாடு சுகனுக்கும் உள்ளதா தெரியவில்லை..
  அல்லது புலிகளை எதிர்த்து அரசை ஆதரிப்பதுதான் அவரது நிலைப்பாடென்றால்..

  அரசு இதுநாள்வரை செய்த கொடுமைகளையும் அட்டூழியங்களையும் அவர்.. இலகுவாகக்கடந்து போய் விடுகிறாரா..?

  அல்லது அரசு அவ்வாறு ஏதும் செய்யவில்லை என்கிறாரா..?

  அல்லது.. ஆம்.. அவ்வாறு அரசு செய்தது. அரசு கொன்றது.. அரசு சுட்டது.. ஆனால் யதார்த்தம்.. இப்போது அரசோடு இணைந்தே செயலாற்ற வேண்டியிருக்கிறது என்ற சுகன் கருதுகிறாரா..

  அவ்வாறெனில்..
  ஒருவேளை.. புலிகளால் அரசு தோற்கடிக்கப்பட்டு .. அரசின் நிலையில் புலிகள் இருந்தால்..

  யதார்த்தத்தை உணர்ந்து புலிகளின் அட்டூழியங்கள் கொடுமைகளைக் கடந்து அவர்களோடு இணங்கிப்போக இவர்கள் தயாராயிருந்தார்களா.. தற்போது அரசோடு இணங்குவது போல..

  அதெல்லாம் கிடையாது. நாங்கள் புலிக்கு எதிர்.. அரசுக்கு ஆதரவு .. அவ்வளவும்தான் என்றால்..

  இவர்களைப்போன்றவர்கள் புலிகள் ஆதரவாளர்களிலும் உண்டு என்பதுதான் பதில்..

 15. Osai Chella said...

  // இன்னும் எத்தனைகாலத்திற்குக் கருணாநிதியைத் திட்டி புலிகளின் அரசியல் வறுமையையும் முட்டாள்தனத்தையும் மறைக்கப்போகிறீர்கள்?//

  sirithu sirithu vayiru punnaaki vittathai.. karuthai ninaithu alla.. ungal vaarthakalin upayokaththai ninaithu... karunaanithu--- arasiyal ---- varumai ! pulikalai eduthuvittu yosithen! avar seivathu arasiyal-- avaridam varumaiyum illai! makkal ingu suthathiramaaka avarai thittikkollalaam! enna sinthanai yappa athu. neenga paatukku thitikkunga.. naan paattukku arasiyal (moolam) "varumai"yindri iruppen endru pilaippu nadathum avaraiyellaam uthaaranam kaampippathu romba romba kevalam suguna. uraikkirathaa ? illai a'naakareekam.. maathiri a'maaksiyam pesi karuthu kotta pokireerkalaa thodarnthu?

 16. sugan said...

  அறிவுஜீவி ஒருவர் இருந்தார்.
  அவர் எல்லாவற்றிற்கும் நோ! சொல்லியே பழக்கப்பட்டவர்.
  இன்றைக்கு மழை வருமா?
  நோ!
  இன்று சாப்பிடலாமா?
  நோ!
  இன்று தூங்கலாமா?
  நோ!
  இதில் எரிச்சலடந்த 'நோ' என்பவர் அவரைப்பயமுறுத்த பிசாசு ரூபத்தில் அவர்முன் வந்தார்.
  அப்போதும் அறிவுஜிவி சொன்னார்;
  நோ!!!!!!!!!நோ!!!!!நோ!!!!!

 17. சந்தர் said...

  நிஜத்தில் புலிகள் பொறுப்புதான். ஆனால் அதற்கும் மேல் இலங்கை அரசாங்கம் பொறுப்பு என்பது முக்கியம்.

  இப்படியொரு விவாதம் உண்மையில் அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த சுகனுக்கும் ஷோபா சக்திக்கும் இடையில் நடந்திருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவேயில்லை. சுகன் புலிகளை மாத்திரம் தாக்குவார். ஷோபா சக்தி சுகனைக் கண்டும் காணாமல் விட்டுவிடுவார். நீங்கள் ஏன் உங்களுக்கள் பேசவில்லை என்று மிதக்கும் வெளி கூடக் கேட்க மாட்டார்.. இதே நிலை தொடர்வதால்தான் இதை ஒரு நாடகம் என்று நினைக்கத்தோன்றுகிறது.

 18. மிதக்கும்வெளி said...

  கொழுவி,

  சுகன் மற்றும் ஷோபாசக்தி நிலைப்பாடுகளுக்கு இடையிலான வித்தியசங்களைப் பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.தனிப்பட்ட உரையாடல்களிலும் நீங்கள் குறிப்பிட்டுள்ள நிலைப்பாட்டில் ஷோபா உறுதியாக இருக்கிறார் என்பதை என்னால் சொல்ல முடியும். ஆனால் சுகன் புலிகளை விமர்சிக்கும் அளவுக்கு இலங்கை அரசை விமர்சிப்பதில்லை என்பது உண்மைதான். அதற்கான காரணத்தை அவர்தான் விளக்க வேண்டும்.

 19. மிதக்கும்வெளி said...

  சந்தர்,

  சுகன் கவிதைக் கூட்டத்தில் லதாராமகிருஷ்ணனை ஆதரித்ததை நான் மறுத்துப் பேசியிருக்கிறேன். மேலும் 'போர் முடிந்து விட்டது, போர் பற்றி எழுதும் ஈழத்துக்கவிதைகளிடமிருந்து விடுதலை கிடைத்து விட்டது' என்று சுகன் அந்த கூட்டத்தில் பேசியதையும், 'போர் நிம்மதியடையும்படி முடியவில்லையே, முகாம்களில் ஏராளமான தமிழர்களை அடைத்துப் போட்டுத்தானே முடிந்துள்ளது" என்றும் அதே கூட்டத்தில் எதிர்வினையாற்றியிருக்கிறேன். இதற்கு மேல் சுகனின் நிலைப்பாட்டைச் சுகனும் சுகன் குறித்த ஷோபாசக்தியின் நிலைப்பாட்டை ஷோபாவும்தான் விளக்க வேண்டும். இதில் எங்கிருந்து நாடகம் வருகிறது?

 20. மிதக்கும்வெளி said...

  சுகன்

  ((‍‍-

  'நோ நோ' சொல்லும் அறிவுஜீவி யாரென்று அனைவருக்குமே தெரியும். ஆனாலும் இப்படி நீங்கள் கிண்டலடிக்கக் கூடாது நோ! நோ!

 21. Anonymous said...

  //sugan said...
  அறிவுஜீவி ஒருவர் இருந்தார்.
  அவர் எல்லாவற்றிற்கும் நோ! சொல்லியே பழக்கப்பட்டவர்.
  இன்றைக்கு மழை வருமா?
  நோ!
  இன்று சாப்பிடலாமா?
  நோ!
  இன்று தூங்கலாமா?
  நோ!
  இதில் எரிச்சலடந்த 'நோ' என்பவர் அவரைப்பயமுறுத்த பிசாசு ரூபத்தில் அவர்முன் வந்தார்.
  அப்போதும் அறிவுஜிவி சொன்னார்;
  நோ!!!!!!!!!நோ!!!!!நோ!!!!!
  //

  //
  மிதக்கும்வெளி said... ஆனால் சுகன் புலிகளை விமர்சிக்கும் அளவுக்கு இலங்கை அரசை விமர்சிப்பதில்லை என்பது உண்மைதான். அதற்கான காரணத்தை அவர்தான் விளக்க வேண்டும்.
  //

  சுகுணா,
  சுகன் மேற்குறிப்பிட்ட பின்னூட்டத்தில் காரணத்தை விளக்கி இருக்கிறார். செத்து பிசாசாக மாறினாலும் புலி என்றாலே "நோ" சொல்லும் அறிவுஜீவி தான் சுகன்.

 22. மிதக்கும்வெளி said...

  /ndru camp'l irukkum makkalin kookural kaathukku vilunthu ezhukirathu intha veeramiku katturai... andru tham vaalvidangal meethu selladithu sethuvizhumpothu akkural ungalukku vizhaveyillai.. Rajabakse meethu kaarithuppa oru katturaiyum ungal penavukkul nulaiyavillai.eththanai katturaikal kadantha inapadukolai nadantha 5 maathangalil eluthiyulleerkal endru ennikai tharamudiyumaa sugஉன?/

  இப்படி அயோக்கியத்தனமாகப் பேசினால் இதற்கு மேல் பேச ஒன்றுமில்லை. முத்துக்குமார் தீக்குளித்து இறந்தபோது அதற்காக பதிவர்களின் கூட்டத்தை ஏற்பாடு செய்தது நான். பதிவர்களின் வழக்கமான சந்திப்பு அதில் வந்து விடக்கூடாது, முழுக்க அரசியல் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்று நானும் லக்கியும் மெனக்கெட்டோம். முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தின் போதும் அதற்குப் பின்னான போராட்டங்களின் போதும் நேரடியாகவும் மறைமுகமாகவும் நன் ஆற்றிய பங்களிப்பை எல்லாம் உங்களுக்கு லிஸ்ட் போட்டு விளக்க வேண்டிய அவசியமில்லை.பிளாக்கிலும் பேஸ்புக்கிலும் ராஜபக்ஷேவையும் கருணாநிதியையும் திட்டிவிட்டு புலிகள் புகழ் பாடுவதுதான் ஈழ ஆதரவு என்றால் அதை நான் செய்யவில்லைதான். 5 மாதங்களில் நான் என்ன எழுதினேன் என்பதற்கு எனது வலைப்பக்கங்களைப் படித்துவிட்டுச் சொல்லவும்.

  /neengal pesum arasiyalai vida pesamal vitta arasiyal thaan engalai nokadikkiratஹு! /

  இதை மறுதலையாகச் சொல்லவும் முடியும். தமிழகத்தில் உங்களுக்கும் எனக்கும் புலி ஆதரவாளர்கள் கற்றுக்கொடுத்த விஷயங்களையே பேசினோம். இதில் பேசப்படாமல் விடுபட்டவர்கள் யார் என்று மனச்சாட்சியின் முன் நின்று யோசியுங்கள்....

  /neengalellam vilimpukal patri pesa arukathai atravarkal, manasaatchi atravarkஅல். /

  நன்றி, உங்களுக்கு நிறைய அருகதை இருக்கிறது என்று நம்புகிறேன். புத்தளம் முகாம் குறித்து அடுத்து உங்கள் பதிவில் எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

  /kanini othulaikkavillai.. ungalai tholurippatharku.. nichayam seiven paarungal ungal arasiyalin latchanathai/ottaikaலை./

  வரவேற்கிறேன். உரையாடுவோம்!

 23. ROSAVASANTH said...

  சுகுணா, படித்துவிட்டு உடனே எழுதுகிறேன். மிக நிதானமாக எந்த அரசியல் முடிச்சுக்களின் நிர்பந்தங்களிலும் மாட்டிகொள்ளாமல் நீங்கள் எழுதிய முக்கியமான பதிவாக இதை நினைக்கிறேன். புலிகள் செய்ததை (இறுதி நாட்களின் மிகப்பெரிய தொரோகத்தை) விமரசிப்பதன் தேவையை நானும் ஒப்புகொள்கிறேன். அதனால் வதை முகாம்களில் தமிழர்ளுக்கு பிரச்சனை எதுவும் இபபோது வரப்போவதாக தெரியவில்லை. அதே நேரம் (நான் மிகவும் நேசிக்கும்)சுகன் போன்றவர்களின் அரசியலை நீங்கள் (நட்பாகவேனும்) விமர்சிப்பதை வரவேற்கிறேன்.அவர் முன்வைக்கும் அரசியலின் ஆபத்தை நீங்கள் முழுவதுமாக புரிந்து கொண்டுள்ளதாக எனக்கு தோன்றவில்லை; (அவரே புரிந்து கொண்டுள்ளதாக எனக்கு தோன்றவில்லை.) என் கருத்துக்களை பதிவுகளாக எழுத உத்தேசமுள்ளது. உங்களை மேலும் விமர்சனபூர்வமான அணுகுமுறையுடன் எழுத தூண்டுவதே இந்த பின்னூட்டத்தின் நோக்கம்.

 24. Anonymous said...

  Suguna kattu amaikkum veruppu unarvu :-)

  luckylook as anony!

 25. மிதக்கும்வெளி said...

  நன்றி சுகுணா.

  /புலிகள் செய்ததை (இறுதி நாட்களின் மிகப்பெரிய தொரோகத்தை) விமரசிப்பதன் தேவையை நானும் ஒப்புகொள்கிறேன். அதனால் வதை முகாம்களில் தமிழர்ளுக்கு பிரச்சனை எதுவும் இபபோது வரப்போவதாக தெரியவில்லை./

  இல்லை ரோசா. 5ம் கட்ட ஈழப்போர் நடக்கும், பிரபாகரன் உயிருடன் உயிருடன் இருக்கிறார் என்ற வீராவேசமான பேச்சுக்கள் எல்லாம் இலங்கை அரசு மீண்டும் முகாம்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கான காரணத்தை வலுப்படுத்தும். அதெல்லாம் நடக்காது என்று இலங்கை அரசுக்குத் தெரிந்தாலும் இதைத்தான் காரணமாக சர்வதேசச் சமூகத்தின் முன் சொல்லும்.
  நம்முடைய இப்போதைய உடனடிப் பணி முகாம்களைக் கலைக்கச்சொல்லியும் மக்களை சிவில் வாழ்க்கைக்குத் திரும்புவதற்கான சூழலை உருவாக்கச் சொல்லிக் குரல் கொடுப்பதும்தான்.ஆனாலும் ரோசா, மிக மனவேதனையுடன் இதனைச் சொல்கிறேன். நிச்சயமாக தற்கான எந்த சாத்தியங்களும் கிடையாது. 'நிர்ப்பந்தம் கொடுத்து அரசுகளைப் பணிய வைப்பது" என்கிற அணுகுமுறைகள் தோல்வி அடைந்துவிட்டன. நம் சகோதரர்களின் துயரங்களை வேடிக்கை பார்ப்பதுதான் இப்போது நம் விதி. குறைந்தபட்சம் அதர்கொரு தீர்வு வரையுமாவது புலிப்பேச்சுக்களைக் குறைக்க வேண்டும். ஆனால் அந்த பொறுப்புணர்வு நம் புலி ஆதரவாளர்களுக்கு இருப்பதாக நான் நம்பவில்லை.

 26. கொழுவி said...

  நல்லது சுகுணா..
  சுகனின் புலி எதிர்ப்பு அரசியலைப் நீங்கள் உணர்ந்து கொண்டிருக்கிறீர்கள். சந்தோசம்..

  ஆக
  உங்களிடமிருந்து
  புலி எதிர்ப்பு அரசியலிடமிருந்து விடுதலை அடைவோம் என்றொரு கட்டுரையும் வருமா..?

  அல்லது அதற்கும் - அப்பால் ஒருவர் - தொடக்கி வைத்தால்தான் எழுதுவீர்களா..

 27. மிதக்கும்வெளி said...

  நன்றி லக்கி,

  எதையாவது கட்டுவதும் அவிழ்ப்பதும்தானே வாழ்க்கை ((-

  கொழுவி.

  நீங்கள் பேசுவதை விதண்டாவாதம் என்று சொன்னால் கோபித்துக்கொள்வீர்களா? புலி அரசியலிலிருந்து விடுதலை பெறுவோம் என்றால் புலிப்பாணியில் அல்லாத மாற்று அரசியலைப் பேசுவதாகத்தானே அர்த்தம். அதற்கு புலிகளின் தவறுகளைப் பேசித்தானே ஆகவேண்டும்! அதையும் புலி எதிர்ப்பு அரசியல் என்பீர்களா? புலியல்லாத மாற்று அரசியல் பேசப்படும்போது புலி எதிர்ப்பு அரசியலுக்கு வேலை இருக்காதுதானே!

 28. ஓசை செல்லா said...

  நன்று சுகுணா! என்ன தான் இருந்தாலும் நம் மொழியில் எழுதி உறவாடுவது தான் சாலச்சிறப்பு! கணினி சரியாகிவிட்டது!நான் ஒவ்வொரு வாதமாக உங்களை அம்பலப்படுத்த தயாராகி வருகிறேன். நான் முதலில் அம்பலப்படுத்துவது உங்கள் உளவியல் பார்வையற்ற அணுகுமுறையை! நான் சரியாகத்தான் உங்கள் மென்னியை பிடித்திருக்கிறேன் இந்த முறை.. அதாவது போரின் ஆரம்பத்தில் புலிகளோடு மக்கள் இடம் பெயர்ந்தது புலிகள் மீதும் அவர்கள் பலம் மீதிம் அவர்கள் வைத்திருந்த நம்பிக்கையினாலன்றி அவர்கள் ஏதோ துப்பாக்கிமுனையில் கடத்தப்பட்டதாக சொல்கிறீர்களே.. அப்படியெனில் நான் கேட்கும் இரண்டு விசயங்களுக்கு மட்டும் பதில் சொல்லுங்கள். போர் பூநகரி வீழ்ந்ததும் சூடு பிடித்ததாக வைத்துக்கொள்வோம்..
  1. எத்தனை வட பகுதி மக்கள் அப்போது யாழ்நீங்களான வடபகுதியில் இருந்தார்கள்
  2. எத்தனை புலிகள் ( அவர்களை துப்பாக்கிமுனையில் கடத்த ) உயிருடன் இருந்தார்கள்.

  இந்த இரண்டு எண்ணிக்கையை மட்டும் வைத்து ஒரு புலிக்கு எத்தனை தலைகளை துப்பாக்கி முனையில் கடத்த முடிந்தது என்ற கணக்கை ஆரம்பிப்போம்! நீங்கள் வேறு புலிகளுக்கு தெரியாத போரியல் ஆராய்ச்சி வல்லமை படைத்தவர்! எனவே மெதுவாகவே நகர்வோம்!

  அன்புடன்..
  ஓசை செல்லா

 29. சந்தர் said...

  விளக்கத்துக்கு நன்றி.

  ஷோபா சக்தி-சுகன் போன்றவர்கள் தமக்குள் இருக்கும் முரண்பாடுகளை வைத்து ஏன் உரையாடுவதில்லை? அது புலம்பெயர் ஈழச் சமுதாயத்தின் அடிப்படைப்பிரச்னையாக இருக்கிறது - அதாவது புலிகளை எதிர்க்கும் பலர் அங்கே தம்முடைய அரசியல்-நோக்கங்களில் முரண்பட்டு நிற்கின்றனர். அவர்கள் தமக்குள் உரையாடாத வரை உங்களைப் போன்ற ஒருவர் அவர்களை இதற்குமேல் ஏன் பொருட்படுத்த வேண்டும்? ஏன், புலிகளை ஆதரிப்பவரும் எதிர்ப்பவரௌம் கூடத் தமக்குள் உரையாடாத வரை நீங்கள் அவர்களை ஏன் பொருட்படுத்த வேண்டும்?

  தவிர, புலிகளை உங்கள் போக்கில் நீங்கள் விமர்சிக்கலாம், அதற்கு அவர்களை மேற்கோள் வேண்டுமானால் காட்டலாமே ஒழிய,
  இந்தியா-தமிழகத்தைச் சேர்ந்த உங்களைப் போன்ற ஒருத்தர், அவர்களுக்குக் களம் அமைத்துத்தர அவசியமிருப்பதாகத் தெரியவில்லை. களம் அமைத்துத் தருவீர்கள் என்றால் உங்களுக்கும் தமிழ்நாட்டில் புலிகளை இவ்வளவு காலம் கண்மூடித்தனமாக ஆதரித்த பிறர்க்கும் வேறுபாடில்லாமல் போகும்.

  தவிர, அங்கு முகாம்களில் சிறைப்பட்ட மக்களைக் காப்பாற்ற புலிகள் அமைப்பை இன்னும் ஆதரிப்பவரிடமோ, அல்லது சுகன் போன்ற ஒருவரிடமோ, மற்றவர்களிடமோ ஏதாவது வேலைத்திட்டம் இருக்கிறதா என்ன? அப்படி இருந்தாலும் இந்தப் பல தரப்பாரும் ஏறத்தாழ ஒரே நிலையில்தான் - அதாவது நேரடியாக ராஜபட்சவை அல்லது இந்தியாவை அல்லது பன்னாட்டு சமுதாயத்தை அண்டவேண்டிய அவல நிலையில்தான் இருக்கிறார்கள்.

  நிலைமை இப்படியிருக்க முதலில் அந்த சமுதாயத்தில் பலதரப்பாரும் தமக்குள் பேச வேண்டும், சிங்களவருடனும் பேச வேண்டும், இஸ்லாமியருடன் பேச வேண்டும். தேவையிருக்குமிடத்தில் புலிகள் செய்த தவறுகளுக்காக மன்னிப்பும் கேட்க வேண்டும். அதெல்லாம் அங்கே நடக்க வேண்டியவை.

  முதலில் இந்த விஷயத்தைத் தாண்டி புலிகளை ஆதரிப்போரும் சுகன் போன்றவர்களும் எதற்காகத் தமிழகத்தில் இருப்போரிடம் பிரச்சாரம் செய்ய வர வேண்டும், உங்களைப் போன்றவர்களைத் தமக்குள் மோத விட வேண்டும்? யோசியுங்கள். பல தரப்பாரும் மன்ம் திறந்து பேசுவதென்றால் முதலில் தமக்குள் பேசட்டுமே, அது நடக்காத வரை, தமிழகத்தில் வந்து பேசுவதில் மாத்திரம் என்ன பொருள் இருக்க முடியும்? இன்றைய நிலையில் அவர்களுக்கு வேண்டியது ஓர் ஆடுகளம், அவ்வளவுதான், என்று தோன்றுகிறது.

 30. மிதக்கும்வெளி said...

  செல்லா

  நான் போரியல் வல்லுனர் அல்ல. ஈழப்பிரச்சினையைப் பொறுத்தவரை இனி நமது அரசியல் போக்கு எப்படி அமையவேண்டும் என்று ஒரு உரையாடலைத் தொடங்கிவைக்க விருப்பமுள்ளவனாக மட்டுமே இருக்கிறேன்.

  /இந்த இரண்டு எண்ணிக்கையை மட்டும் வைத்து ஒரு புலிக்கு எத்தனை தலைகளை துப்பாக்கி முனையில் கடத்த முடிந்தது என்ற கணக்கை ஆரம்பிப்போம்!/

  இந்த எண்ணிக்கை விளையாட்டுகளுக்குள் நான் வரவிரும்பவில்லை. ஒரு ஈழத்துக்கவிஞரிடம், இப்படித்தான் கிளிநொச்சியும் முல்லைத்தீவும் வீழ்ந்த நேரத்தில் புலிகள் எப்படி மீண்டும் தாக்குவார்கள் என்பதற்கு எண்ணிக்கைக் கணக்கு சொன்னார். இங்கே 50,000 பேர் செத்தால் பத்தாயிரம் பேர் ஊனமுற்றவன் ஆவான். அங்கே 20,000 பேர் செத்தால்.... என்று கணக்கைத் தொடர்ந்தார். இப்படியெல்லாம் மனிதர்களையும் மரணங்களையும் எண்ணிக்கையாகப் பார்க்க முடிகிற மனநிலை குறித்து அப்போதே எனக்கு அயர்ச்சியும் துயரமும் மேலிட்டது. ஒருவேளை நான் முட்டாளாகக் கூட இருக்கலாம். மக்கள் புலிகளோடு விரும்பித்தான் போனார்கள் என்பதற்காக புலிகள் இறுதிநாளில் செய்தது எல்லாம் சரிதான் என்கிறீர்களா?

  சந்தர்,

  நீங்கள் சொல்வதும் சிந்திக்கத்தக்கதுதான். சிந்திப்போம்.

 31. Anonymous said...

  anbu udanpirappe,

  ippadi alaithaal thaan ungalukku pidikkum..
  neengal koorum karuthukkal puligalai patriya vimarsanangalai vida, karunanidhi engira kolaigaranukku jalra adikkum oru thuduppu...

 32. Anonymous said...

  நல்லவேளை
  மதிவதனியையும்
  துப்பாக்கி முனையில்தான்
  வைத்திருந்தார் பிரகாரன்
  எனச் சொல்லாமல் விட்டதற்கு நன்றி தலைவா.

 33. Anonymous said...

  தம்பி திண்டுக்கல் சிவா!
  எப்படி இருந்த நீ
  இப்படி ஆயிட்டியே?

 34. சந்தர் said...

  சிந்தியுங்கள். நிறைய சிந்தியுங்கள. ஈழத்தமிழர்கள் நம்முடன் தொடர்புகொண்ட, ஆனால் வேறொரு சமுதாயத்தினர், இன்று அழிவின் விளிம்பில் நிற்கிறார்கள். முதலில் அவர்கள் தமக்குள் பேசட்டும், அதற்குக் களம் அமைத்துக் கொடுக்கலாம், சரி. ஆனால் அவர்கள் சார்பிலேயே எப்படி நாம் பேச முடியும்... இந்த விஷயத்தில் தமிழ்நாடு-இந்தியா செய்த தவறுகள், கொடுமைகளென்று நமக்கென்று ஏகத்தலைவலி இருக்கிறது, அதைக் கவனிப்பதை விட்டுவிட்டு மற்றவர் பேச்சுரிமையைப் பறிக்க நாம் யார்..

 35. ஓசை செல்லா said...

  // இந்த எண்ணிக்கை விளையாட்டுகளுக்குள் நான் வரவிரும்பவில்லை //

  .. முகாம்களில் ***லட்சக்கணக்கான தமிழர்கள் அடைக்கப்பட்டிருக்கும்போது ..

  .. *15 ஆண்டுகாலத்திற்கும் மேலாக முன்வைக்கப்பட்ட மாற்றுக்கருத்துகளைப் ..

  என்று நீங்கள் சொல்லிய எல்லாமே எண்ணிக்கை தான் நண்பா! நான் கேட்டதற்கு கொஞ்சம் நேரடி பதில் ப்ளீஸ்! பதில் சொல்ல தயக்கமா? காரணம் உங்கள் கேள்விகளுக்கான எனது ஆய்வு அங்கிருந்து தொடங்குகிறது! முயற்சியுங்கள்..

 36. Anonymous said...

  திருவாளர் ஓசையார் அவர்களே,

  கிளிநொச்சி வீழ்ந்த சமயத்தில் போர் இவ்வளவு உக்கிரம் அடையாது என்று போராளிகளை போலவே மக்களும் வாளாயிருந்திருக்கலாம்.சில நாட்களில் திரும்பிவிடலாம் என்று புலிகள் கூறியிருக்கலாம்.


  மக்களை பிணையாக வைத்து போராடுவதை புலிகள் புதுக்குடியிருப்பில் இருந்துதான் அதிகமாக செய்தார்கள். அதன்பிறகு மக்கள் என்ன நினைத்தார்கள் என்பதே தேவை.

  நெக்ஸ்ட் பிளிஸ்

 37. Osai Chella said...

  :-)

 38. யுவகிருஷ்ணா said...

  //நான் சரியாகத்தான் உங்கள் மென்னியை பிடித்திருக்கிறேன் இந்த முறை..//

  கே.ஆர்.அதியமான் வாசனை அளவுக்கு அதிகமாக செல்லா அண்ணனிடமும் அடிக்கிறதே? :-)

 39. Anonymous said...

  //மக்களை பிணையாக வைத்து போராடுவதை புலிகள் புதுக்குடியிருப்பில் இருந்துதான் அதிகமாக செய்தார்கள். //

  லூசுத்தனமா எழுதினா என்ன செய்ய அனானி. புலிகளுக்கும் ராணுவத்துக்கும் போர். மக்கள் பலியாகிறார்கள் ராணுவத்தின் செல்களுக்கு.. இப்பொழுது அவர்கள் மீது உண்மையிலேயே யு.என் இந்தியா போன்றவர்களுக்கு அக்கறையிருந்திருக்குமானால் மக்களை ஒரு மூன்றாவது சக்தியுடன் பேச்சுவார்த்தியில் ஈடுபட்டு பாதுகாப்பாக அனுப்பியிருக்கலாம். புலிகள் தடுத்தார்களா? அதை விடுத்து புலிகள் உடன் வந்த மக்களை அம்மக்கள் மீதே தாக்குதல் நடத்திவிட்டு எதிரியிடம் தஞ்சம் புகுவது தான் ஒரே வழி என்று சொல்லி வேடிக்கை பார்த்த பச்சைத்துரோகத்தை செய்தவர்கள் ஆன இந்தியா, இலங்கை, உலக நாடுகள் எல்லாம் இன்று ஞாயம் பேசுவது நல்லாத்தான்யா இருக்கு! இந்த லச்சணத்துல நம்ம மிதக்கும் வெளி ஐயா பாசிச கொலைகார புலிகளை அபிமானத்தோடு ஆதரித்து உயிரைக்கொடுத்த முத்துக்குமார் பற்றியெல்லாம் முயற்சியெடுத்திருக்கிறார் என்றால்.. அன்று ஒருவேளை ஓவரா மிதந்து விட்டாரோ என்று எண்ணத்தோன்றுகிறது! தூங்கிறவனை எழுப்பிவிடலாம்.. தூங்குற மாதிரி நடிக்கிறவனை.. சூ.. த்துல உதைச்சாத்தான் எந்திருப்பான் னு சும்மாவா சொன்னாங்க பெரிசுக! நல்லா இருங்க மக்கா!

  ஒரு நாஞ்சில் தமிழன்

 40. K.R.அதியமான் said...

  நண்பர் சுகுணா,

  மிகச் சரியாகத்தான் எழுதியிருக்கீங்க.

  ஆனால் இது போன்ற பதிவை, பல மாதங்களுக்கு / வருடங்களுக்கு முன்பே, இதே அளவில் எழுதியிருக்க வேண்டும்.

  ஆர்குட்டில் இது போல எழுதி, கடுமையான வசைபாடலுக்கு உள்ளானேன். தமிழன துரோகி, "அம்ஸா அதியமான்" என்றெல்லாம் பட்டபெயர்கள்.

  நீங்க சாதுரியமாக இத்தனை காலம் இந்த அள்வு எழுதாம சமாளிச்சிட்டீக.
  அந்த பொறுமை அல்லது அமைதி எமக்கு வாய்க்கவில்லை.

 41. K.R.அதியமான் said...

  //யுவகிருஷ்ணா said...

  //நான் சரியாகத்தான் உங்கள் மென்னியை பிடித்திருக்கிறேன் இந்த முறை..//

  கே.ஆர்.அதியமான் வாசனை அளவுக்கு அதிகமாக செல்லா அண்ணனிடமும் அடிக்கிறதே? :-)

  ///


  லக்கி,

  ஆர்குட்டில், நீர் 'தளபதி' என்ற போலி அய்டியில் வந்து,
  தொடர்து எம்மை கீழ்த்தரமாக வசைபாடி, இறுதியில்
  யான் அதை கண்டுபிடித்து, உமது வக்கிரங்களை தோலுரித்தை,
  அதற்க்குள் மறக்க வேண்டாம். (உடனே, ஃபேஸ்புக்கில்
  எமது நண்பராக மாறி, சமாளித்தையும் பேசலாமே).

  மோதல்கள், வசவுகள் எல்லாம் பெரிய விசியமல்ல. ஆனால அவை நேரடியாக (போலி அய்டியில் இருந்து
  இல்லாமல்) எதிர்கொள்ளவே விரும்புகிறேன். ஆனால‌ அப்படி நேரடியாக மோத, வைய நேர்மையும், துணிவும் வேண்டும். அது உம்மிடம் கிடையாதுதான்.

  it is ok.

 42. K.R.அதியமான் said...

  ////இல்லை ரோசா. 5ம் கட்ட ஈழப்போர் நடக்கும், பிரபாகரன் உயிருடன் உயிருடன் இருக்கிறார் என்ற வீராவேசமான பேச்சுக்கள் எல்லாம் இலங்கை அரசு மீண்டும் முகாம்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கான காரணத்தை வலுப்படுத்தும். அதெல்லாம் நடக்காது என்று இலங்கை அரசுக்குத் தெரிந்தாலும் இதைத்தான் காரணமாக சர்வதேசச் சமூகத்தின் முன் சொல்லும்.////


  இல்லை சுகுணா,

  இது சாத்தியம் போல இன்று தோன்றினாலும், இன்னும் சில மாதங்களில், முகாம்களுல் இருந்து
  மக்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றே நம்புகிறேன். வரும் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் இலங்கை
  அதிபர் தேர்தலை பெரு வெற்றி பெற ராஜபக்ஷே பல தந்திரங்களை கையாள்கிறார். தேர்தல் முடிந்த பின பல பல மாற்றங்கள் வரும்.

  பார்க்கலாம்.

 43. Anonymous said...

  அய்யா நாஞ்சிலாரே,

  புலிகள் ஏன் மக்களை வெளியேற விட்டுவிட்டு தங்கள் சண்டையை நடத்தியிருக்கக்கூடாது? லூசு மாதிரி பேத்துவது நீங்கள்தான்.

  இந்தியா துரோகம் செய்தது என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதான்.அப்பாவி தமிழர்களுக்கும் புலிகளும் துரோகம் செய்ததைத்தான் மிதக்கும் வெளி எழுதியிருக்கிறார்.

  புலிகளுடன் விரும்பி(?) உடன் வந்த மக்களின் மொபைல் நம்பர் வேணுமா?

 44. Anonymous said...

  செல்லாவின் மென்னியை பிடிக்கும் அடுத்த புடி எங்கேப்பா?

 45. K.R.அதியமான் said...

  ஆர்குட்டில் யாம் சில காலம் முன்பு எழுதியது :

  ///விடுதலை புலிகளில் முக்கிய தலைவர் மற்றும் குரு போனறவர் ஆன்டன் பாலசிங்கம். ஆரம்ப நாட்களில் இருந்தே பிரபாகரனின் முக்கிய கூட்டாளியாக,
  ஆலோசகராக, வழிகாட்டியாக, இருந்தவர். அவரின் மனைவி அடேல் பாலசிங்கம் (ஆஸ்த்ரேலியா நாட்டை சேர்ந்தவர்) பெண் புலிகளுக்கு தலைவராக சிறுது காலம
  பணியாற்றியவர். புலிகளில் தலைமைக்கும் இவர்கள் இருவரும் மிக முக்கியமானவர்கள்.

  உலக அரங்குகளில், தமீழ மக்களின் துன்பங்களை, சிங்கள அரசின் இனவாதத்தை கொண்டு சென்றவர்கள். சிங்கள் அரசுகளுடன் புலிகள் நடத்திய அனைத்து
  பேச்சுவார்த்தைகளிலும் பங்கு கொண்டார்.

  பாலசிங்கம் பெரிய அறிவாளி ; உலக அறிவும், ஆழ்ந்த வாசிப்பனுபவும், தொலை நோக்கு பார்வையும் கொண்டவர்.

  http://en.wikipedia.org/wiki/Anton_Balasingham

  http://www.timesonline.co.uk/tol/comment/obituaries/article754765.ece

  யாதார்த்தை முற்றிலும் உணர்ந்தவர். 1994இல் சந்திரிக்கா அளித்த ஃபெடரல்
  தீர்வை ஏற்றிருக்கலாம் என்று 2003இல் கிளினோச்சியில் ஒரு கூட்டத்தில்
  வெளிப்படையாக‌ பேசினார். மாறும் உலகத்தையும், எதிரியின் பலத்தையிம், புலிகளின் பலத்தையும் அறிந்தவர்.

  அவரின் தீர்க்கதரிசனமான வாதங்களை புலிகளின் தலைமை கேட்டக்க‌வில்லை.
  ////

 46. யுவகிருஷ்ணா said...

  //ஆர்குட்டில், நீர் 'தளபதி' என்ற போலி அய்டியில் வந்து,
  தொடர்து எம்மை கீழ்த்தரமாக வசைபாடி, இறுதியில்
  யான் அதை கண்டுபிடித்து, உமது வக்கிரங்களை தோலுரித்தை,
  அதற்க்குள் மறக்க வேண்டாம். (உடனே, ஃபேஸ்புக்கில்
  எமது நண்பராக மாறி, சமாளித்தையும் பேசலாமே).
  //

  இதென்ன லூசுத்தனமான உளறலாக இருக்கிறது :-(

 47. K.R.அதியமான் said...

  ////ஆர்குட்டில், நீர் 'தளபதி' என்ற போலி அய்டியில் வந்து,
  தொடர்து எம்மை கீழ்த்தரமாக வசைபாடி, இறுதியில்
  யான் அதை கண்டுபிடித்து, உமது வக்கிரங்களை தோலுரித்தை,
  அதற்க்குள் மறக்க வேண்டாம். (உடனே, ஃபேஸ்புக்கில்
  எமது நண்பராக மாறி, சமாளித்தையும் பேசலாமே).
  //

  இதென்ன லூசுத்தனமான உளறலாக இருக்கிறது :-(

  ///

  appadithan irukkum. you are a good actor.

 48. K.R.அதியமான் said...

  //மேலும் என்னால் எப்போதும் இந்தியத்தேசியத்தை ஆதரிக்க முடியாது. தமிழனாய் இருப்பதில் உள்ள சிக்கலை விட இந்தியனாய் இருப்பதில் எனக்கு பிரச்சினைகள் அதிகம்////

  சுகுணா,

  எமக்கு நெடுநாளாக ஒரு சந்தேகம் :

  இந்திய தேசியம் பார்பன தேசியமே : அதனால் அது வெறுக்க பட வேண்டிய விசயம் என்று
  தோழர்கள் கூறுகிறார்கள். you too.

  ஆங்கிலேய காலனி ஆதிக்கத்தை எதிர்த்து, காங்கிரஸ் மற்றும் பல தரப்பினர் பல‌ பல ஆண்டுகள் போராடினர். அப்பொது, தேசிய உணர்வை வளர்க்க வேண்டிய
  அடிப்படை தேவை இருந்தது.
  1880கள் வரை இந்திய தேசியம் என்ற‌
  உணர்வோ, சொல்லாடலோ இல்லை.
  இந்திய தேசிய உணர்வை
  கட்டமைக்காமல், தேசிய விடுதலை போராட்டத்தை எப்படி கொண்டு செல்வதாம் ? பதில் சொல்லுங்கள்.

  ஆர்.எஸ்.எஸ் வகையராக்கலின் தேசிய‌ உணார்வு (அகண்ட பாராதம், இன்ன பிற) பார்பன தேசியம் தான். that is different.

  ஆனால். இந்திய தேசியத்தை கட்டமைத்தவர்களில்
  பெரும்பாலான தலைவர்கள் அத்தகையவர்கள் அல்லவே ? முக்கிய தலைவர்களான‌
  காந்தி, நேரு, பட்டேல், ஆசாத்,
  சந்திர போஸ், ராஜாஜி, வ.வு.சி,
  மற்றும் எண்ணற்ற தலைவர்கள்
  அனைவரும் பார்பனிய தேசியத்தை
  முன்மொழியவில்லையே.

  இன்றும் அப்படிதான். பெரும் பாலானோவர்களின் தேசிய உணர்வு, இந்துதவம் சார்ந்தது அல்லவே.

  அடுத்த சந்தேகம் : இந்திய தேசியம் பார்பனிய‌ தேசியம் என்றால், பின் தமிழ் தேசியம் என்னவாம் ?
  வன்னிய தேசியமா அல்லது...

 49. Anonymous said...

  அதியமான் பொறுப்பேற்று கொண்டார்...வுடு ஜுட்..

  ஆங்காங்கே இருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு எஸ் ஆகும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 50. Anonymous said...

  1994இல் சந்திரிக்கா அளித்த ஃபெடரல்
  தீர்வை ஏற்றிருக்கலாம் என்று 2003இல் கிளினோச்சியில் ஒரு கூட்டத்தில்
  வெளிப்படையாக‌ பேசினார்.---

  அதியமான் நல்லாத்தான் வுடுறாரு ரீலு.. 2005 இலும் ரணிலை வெளியேற்றியதை ஆதரித்து பேசியவர் ஆன்டன்..

  அப்புறம் சந்திரிகா - எப்போதும் பெடரலை முன்மொழியவில்லை.

  மண்ணாங்கட்டி.. பூநகரி ராணுவ முகாமிலிருந்து சில மீட்டர் தூரத்திற்கு ராணுவத்தை பின் நகர்த்தி மக்களுக்கு போக்குவரத்து பாதையை ஏற்படுத்தும்படி கேட்டதைக்கூட மறுத்த சந்திரிக்கா பெடரலுக்கு தயார் என்றாவாம்.

  கேட்பவன் கேனையன் என்றால்.... எருமை.. எருமைமாடு ஏரோப்பிளேன் ஓட்டுமாம்.

  --

  தமிழருக்கு ஏதாவது தீர்வு கொடுத்தால் அது தன் தேர்தல் வெற்றியை பாதிக்கலாம் என மகிந்த நினைக்கிறார்.

  அதாவது தமிழருக்கு தீர்வு கொடுப்பதை சிங்கள மக்கள் விரும்புவார்களோ மாட்டார்களோ என்ற பயம்..

  சிங்கள மக்களுக்கு விருப்பமில்லையெனில்.. பெரும்பான்மை சிங்களரை அனுசரிக்கவேண்டியிருக்கிற அரசியலில் தமிழருக்கு என்ன கிடைக்கும்...?

 51. K.R.அதியமான் said...

  annoy (i know ho you are :)) ),

  ok. i made an error ; chandrika did not offer fedaral solution but something almost near it. (what the hell now). but Balasingham did speak openly about it in his speech duing the opening cermony of Killinochi. If only LTTE leadership (read : Pirabakaran) had listened to Anton, then this kind of end would not have occured.
  read about it.

  ok. if you are happy with the course of events and decisions taken by LTTE, then fine with me.

  try this too :

  http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=39363

  Lost opportunities for the Tamils

 52. Anonymous said...

  அய்யோ..இந்த நெல்லிக்கனி பார்ட்டி தொல்லை தாங்கல்..

 53. ஆல் இன் ஆல் அழகுராஜா said...

  சுகுணா திவாகர்&கோவின் பூச்சாண்டி அரசியலிருந்து விடுதலை அடைவோம்
  4

  08

  2009
  புலி அரசியலிடமிருந்து விடுதலை அடைவோம்! முதல்ல ஒருபக்க விளம்பர அரசியல் பண்ணும் உங்களைப்போன்ற அதிபுத்திசாலி அரைவேக்காடு கும்பலிடம் இருந்துதான் விடுதலை வேணும்டா சாமி…
  http://allinall01.wordpress.com/2009/08/04/%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%a3%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82/

 54. மோசா said...

  நீங்களும் நடுநிலைமையோடு அணுகவில்லை ... புலிகளை எதிர்க்கனும்னே எழுதினாப்ல இருக்கே.....

 55. K.R.அதியமான் said...

  அனானி, (நிஜப்பெயரில் வர பயமா ?),

  என்ன தொல்ல ? உருப்படியா பதில் எழுத வக்கிலாத‌ கபோதிகங்கதான் இப்படி உளருவாங்க.

  கந்தக அமிலத்த குடிக்கவும். தொல்லை தீரும்.

  என்னமோ இவரு புலிகளுக்கு நேரடி உதவி செய்து, பொடாவில உள்ள போயிட்டு வந்த மாதுரி ஒரு பில்டப்.
  சும்மா பொட்டி த‌ட்டிகிட்டு இருக்க‌ர‌ அனானி தானே நீவீர் ? :)))

  கந்தக அமிலத்த குடிக்கவும். தொல்லை தீரும்.

  :)))

 56. Anonymous said...

  Just want to say what a great blog you got here!
  I've been around for quite a lot of time, but finally decided to show my appreciation of your work!

  Thumbs up, and keep it going!

  Cheers
  Christian, iwspo.net

 57. Anonymous said...

  United States Restaurant Guide - a guide to every restaurant, http://restaurants-us.com/in/Nora/MCL%20Cafeteria/46260/