ஈழத்தமிழர்களுக்காகப் பெரியகுளத்தில் மூன்று பள்ளி மாணவர்கள் அரளி விதையை அரைத்துக்குடித்தனர்.

கடைசியாக வந்த தகவல் இது. அவர்களின் நிலை இப்போது என்னவென்று தெரியவில்லை. துரோகி கருணாநிதி அரசின் போலீசு மற்றும் சட்ட ஒடுக்குமுறை ஒருபுறம், தமிழகமெங்கும் தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்களை மூடி மறைப்பதில் சன் டிவி, கருணாநிதி டி.வி, ஜெயா டிவி என கைகோர்த்து நிற்கும் மீடியா துரோகம் மறுபுறம் என அத்தனையும் தாண்டி ஆங்காங்கு ஈழப்போருக்கு எதிரான போராட்டங்கள் தொடர்கின்றன. கருணாநிதியே இன்னும் எத்தனைத் தமிழர்களைப் பலி வாங்கக் காத்திருக்கிறாய்?

4 உரையாட வந்தவர்கள்:

 1. Pot"tea" kadai said...

  ஆம். இந்த கிழவனுக்கு தான் இன்னும் நாள் வரவில்லை. இளங்குருத்துக்கள் தம்மைத் தாமே மாய்த்துக் கொண்டிருக்கின்றன.

 2. Anonymous said...

  ///பேரினவாத அரசின் கைக்கூலிகளாகவும் மாறிப்போனது யாரால்///

  அதுக்கு முதல் அவங்க ஏதோ புனிதப் பசுக்களா இருந்தாங்களா?
  எல்லா இயக்கங்களும் இந்திய உளவு நிறுவங்களின் தொடர்பிலே இருந்தன.
  அவற்றில் சில விடுபட்டுக் கொண்டு தனித்தியங்கின, பல கைக்கூலிகள் ஆகிக் காட்டில் கொடுப்பில் ஈடுபட்டன, அவர் நூலிழுப்புக்கு ஆடின.

  /// அப்படியானால் தமிழீழத்தேசியத்தை முன்வைக்கும் புலிகள் தங்கள் அரசியல் வெற்றிக்காகத் தங்களை ஆதரித்து வரும் தமிழ்த்தேசியச் சக்திகளின் கருத்தியல் அடிப்படைகளைக்
  காட்டிக்கொடுக்க முனைகின்றனர் என்பதே எதார்த்தம்.

  துரோகங்களையும் பின்னடைகளையும் நிகழ்த்திக்காட்டியதில் பிரபாகரனும் சளைத்தவரில்லை ///

  தாங்கள் ஒரு தமிழீழ பொது அறிவுக் கலைக்களஞ்சியம். தங்களிடம் இருந்தே இனி ஈழ மக்கள் தம்
  போராட்டத்தைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். தேவரீர் எங்களுக்கு சொல்லித் தாருங்கள்
  பிரபாகரனின் இழைத்த துரோகங்கள் என்னென்ன, சமரசங்கள் என்னென்ன என்று. கேட்டால் மகிழ்வெய்துவோம்.

  //// கியூபா, நேபாளம் போலவோ அல்லது குறைந்தபட்சம் வெனிசுலா போலவோ குறைந்தபட்ச
  ஏகாதிபத்திய எதிர்ப்புத்தன்மை அற்ற நாடாகக் கூட இருக்காது என்பது வெளிப்படையான உண்மை.///

  இதில் பிரசந்தா அமெரிக்காவோடு அஜால் குஜால் பண்ணுவதும், பொதுவுடமை பின்னர் எனச்
  சமாதானம் ஆனதும், சமரசம் என்ற காட்டிகொரிக்குள் வராது போல.
  மாமியர் உடைத்தால் மண்சட்டி மருமகள் உடைத்தால் பொன்சட்டி.

  ///தா. பாவோ ஒரு ‘கம்யூனிஸ்ட்‘ ஆகக் காட்டிக்கொண்டாலும் அகமுடையார்
  சங்கவிழாவில் கலந்துகொண்டவர்.///

  இதில் முற்போக்கு, ஏகாதிபத்திய நாடாகத் தாங்கள் குறிக்கும் நேபாளத்து
  பிரசந்தா பார்ப்பனச் சங்கக் கூட்டத்தில் பங்கு கொண்டது கணக்கிலெடுக்கப் படாது போல. நமக்கு தா. பாண்டியன ஒரு வாங்கு வாங்குறது தானே முக்கியம்...

  /// கருணாநிதியே இன்னும் எத்தனைத் தமிழர்களைப் பலி வாங்கக் காத்திருக்கிறாய்? ////

  இது தாங்கள் 3.2.2009 அன்று எழுதிய பதிவிலுள்ள வரிகள்..
  அது சரி, இதத் தான், ஒரு வாரமா ஏனைய பதிவர்களும் சொல்லிட்டு இருக்காங்க! அவங்க சொல்றப்போ, நம்மள மாத்துசக்தியா காட்டிக்கணும்னு, தனியாத்
  தெரியணுமின்னு, கருணாநிதிய ஏன் திட்டுறீங்க, உங்க பிரபா கூட அப்டி தானேங்ரது...

 3. Anonymous said...

  தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட்

  தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம்.

  மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

  http://www.newspaanai.com/easylink.php

  நன்றி.

 4. Anonymous said...

  //e.Engelsu said...//

  evlo nakkal paaru ivannuku?